Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை  வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

அந்தவகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்துக்குரிய விடயமாகும்.

புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா?, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செயற்படுகின்றாரா? என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

எது எவ்வாறாயினும் வட கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாகக்  கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் ” இவ்வாறு  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1412216

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?

சாணக்கியனின் காதலி... சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்.
இப்ப.. புத்த சிலையை பற்றி கதைத்தால், "காதலில்... விரிசல்" ஏற்படுமே. 💔 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சாணக்கியனின் காதலி... சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்.
இப்ப.. புத்த சிலையை பற்றி கதைத்தால், "காதலில்... விரிசல்" ஏற்படுமே. 💔 🤣 

சிங்களமும் பெளத்தமும் ஒன்றா,....? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சிங்களமும் பெளத்தமும் ஒன்றா,....? 

இலங்கையை பொறுத்தவரை அப்படித்தான் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் மாற்றி வைத்துள்ளார்கள்.
பிரச்சினைகளின் தீவிரத்தை உணராதவர்கள்தான் ... அது வேறு, இது வேறு என்று "பொய்ச் சமாதானம்" சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
காகம் எல்லாம்... கறுப்பு என்ற மாதிரித்தான், இலங்கையின் புத்தர் சிலையும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சாணக்கியனின் காதலி... சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்.
இப்ப.. புத்த சிலையை பற்றி கதைத்தால், "காதலில்... விரிசல்" ஏற்படுமே. 💔 🤣 

காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?

கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும். 
 புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும். 
 புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.

இப்ப இது ஒரு சின்ன ஆரம்பம்...தொடர்ந்து பெரிய சாமானெல்லாம் முளைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?

அனுர அல்லவோ ஜனாதிபதி.

இனவாதம் களைய பிறந்த மீட்பர்.

அவரைத்தான் கேட்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா?

தமிழ் பிரதேசத்தில்(பெளத்த சிலைகள் ,விகாரைகள்,சிங்கள குடியேற்றங்களை) இவற்றை செய்தால் தான் ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க முடியும் என 75 வருடங்களாக சிங்கள புத்திஜீவீகள் போராடுகிரார்கள் ...நாங்கள் அதை புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றோம்...

1 hour ago, goshan_che said:

அனுர அல்லவோ ஜனாதிபதி.

இனவாதம் களைய பிறந்த மீட்பர்.

அவரைத்தான் கேட்கவேண்டும்.

அவர் இப்ப அரிசியில் வண்டுகளை மீட்கின்றார் ..எல்லாத்தையும் அவரின்ட தலையில் கட்டி விடவேண்டாம் வடமாகாண தோழர்களே உங்களது தலமைக்கு கை கொடுங்கள் ...

அபிவிருத்தி கூட்டத்தில் முப்படையினருக்கு என்ன வேலை ...வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட  ஜெ.வி.பி தோழர்கள் அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி காலில் விழாத குறையாக தங்கள் அடிமை விசுவாசத்தை செய்கின்றனர் ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ….

அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்….

வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Kapithan said:

சிங்களமும் பெளத்தமும் ஒன்றா,....? 

சிங்களவர்களுக்கு இரண்டும் ஒன்றிணைந்தவை. பிரித்து பார்க்க முடியாது. சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தும் பௌத்த முகமூடியுடனேயே கோடூர ஆட்சி செய்துள்ளனர்.

 இலங்கையில் சிங்களத்தையும் புத்தமதத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அனுர அல்லவோ ஜனாதிபதி.

இனவாதம் களைய பிறந்த மீட்பர்.

அவரைத்தான் கேட்கவேண்டும்.

ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன?
சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அனுர அல்லவோ ஜனாதிபதி.

இனவாதம் களைய பிறந்த மீட்பர்.

அவரைத்தான் கேட்கவேண்டும்.

கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்!

6 hours ago, goshan_che said:

சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣

அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன?
சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 

ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣

என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள்.

அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage.

5 hours ago, satan said:

கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்!

12 hours ago, goshan_che said:

அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!  

ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா?

யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது.

தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு.

அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும்.

செய்தார்களா? இல்லை.

ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது.

இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள்.

அப்போ யாரைத்தான் தூக்கிப்பிடிப்பது என்று சொல்லித்தான் தொலைக்கிறது. மஹிந்தா? ரணில்? மைத்திரி? கோத்தா? சந்திரிகா?

On 14/12/2024 at 20:17, satan said:

சாணக்கியன் எங்கே போய்விட்டார் இதுகளை கவனிக்காமல்?

15 hours ago, goshan_che said:

அனுர அல்லவோ ஜனாதிபதி.

இனவாதம் களைய பிறந்த மீட்பர்.

அவரைத்தான் கேட்கவேண்டும்.

அந்தப்பிரதேச மக்களின் பிரதிநிதி சாணக்கியன் .

2 hours ago, goshan_che said:

அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.

சாணக்கியனை கேளுங்கள் என்றால்; அனுராவை கேட்கவேணுமென்கிறீர்கள். சரி... அனுராவை கேட்ப்போமென்றால் அதற்கும் வலிக்கிறது. இந்த வியாதிக்கு களத்தில் மருந்தில்லை சாமி ஆளை விடுங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்போ யாரைத்தான் தூக்கிப்பிடிப்பது என்று சொல்லித்தான் தொலைக்கிறது. மஹிந்தா? ரணில்? மைத்திரி? கோத்தா? சந்திரிகா?

ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா?

எவரையும் இல்லை.

1 hour ago, satan said:

அந்தப்பிரதேச மக்களின் பிரதிநிதி சாணக்கியன் .

ஓம். ஆனால் அவர் அதிகாரத்தில் இல்லை.

சாணாக்ஸ் குரல் கொடுக்கத்தான் வேண்டும். முன்பு பலதுக்கு போராடியும் உள்ளார்.

ஆனால் அவர் போராடமட்டுமே முடியும்.

அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம்.

1 hour ago, satan said:

அனுராவை கேட்ப்போமென்றால் அதற்கும் வலிக்கிறது.

நான் எங்கே இதை வேண்டாம் என்றேன்?

அனுரவை கேள்வி கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாழ் போன்ற இடங்களில் அவரை தூக்கி தலையில் வைத்து ஏன் ஆடுகிறீர்கள் எண்டுதான் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள்.

அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன்.

என்ன குதி குதித்தீர்கள்…

வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்….

அனுர இப்போதான் வந்துள்ளார்…

நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என…..

இதுதான் அவர்கள் எப்போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா?

பொது வேட்பாளர் தேர்தலில் நின்றார் அதுவும் பிழை என்றார்கள், சரி..... ஒருவரும் வேண்டாம். ஆனால் நாட்டுக்கு ஒரு தலைவர் வேண்டும், நீங்கள் நிற்கிறீர்களா? அல்லது ட்ரம்மை அழைப்போமா?

13 hours ago, goshan_che said:

அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம்.

நீங்கள் ஜனாதிபதியானால் கூட ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவரமாட்டீர்கள், கொண்டுவரவும் முடியாது. எழுபத்தாறு ஆண்டுகளாய் இனவாதத்தாலும் ஊழலாலும் கைலஞ்சத்தாலும் நிறைந்து ஊதிப்பெருத்து வெளியேற முடியாமல் நாடு தள்ளாடுது. கீழ்மட்ட ஊழியன் முதல் முதல்கட்ட அதிகாரி வரை ஊழல், அதில் அரசியல்வாதிகளே பெருத்த ஊழல் பெருச்சாளிகள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை மக்களின்  இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கவே வந்தவர்கள். அண்மையில் வெளிவந்த படம் உங்கள் கண்ணுக்குபடாமல் போயிருக்காது. அந்தப்படம், மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு ஊழியர்களுக்கு  பிரியாவிடை அளித்தார் மாத்தையா. அப்போது எடுத்துக்கொண்ட படம் வெளிவந்தது. ஒரு கிராமமே அங்கு நின்றது, அவ்வளவும் அவரது ஊழியராம்.  மஹிந்த ஒருவரே அரசியல் செய்தார், அவர் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்கு ஒரு கிராமம் பணிபுரியுது. கொழுத்த சம்பளம், ஓசி ஊழியர்கள், வசதி, அதைவிட ஊழல். நாடு எங்கே போகும், ஒருவருக்கே எல்லாவசதியும். இதென்ன அநிஞாயம்? யார் பணம்? அவர்கள் என்ன சும்மாவா, அல்லது சாதாரண தொழிலாளியின் சம்பளமா பெற்றிருப்பார்கள்? இவ்வாறே ஒவ்வொரு அரசியல்வாதி, அரச உத்தியோகத்தர்கள், அரச இலாக்காக்கள், சும்மாஇருந்து மக்களுக்கு அதிகாரம் செலுத்தி லஞ்சம் பெற்று ஊதிப்பெருத்தவர்கள். அண்மையில் அர்ச்சுனா கலகம் விளைவித்தார் என்றொரு செய்தி வந்தது. அவர் அப்படி  என்ன தவறாக கேட்டுவிட்டார்? யாரும் இதுவரை கேக்காத, கேட்கக்கூடாது என்று நினைக்கிற  கேள்விகளை கேட்டார்.  அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விசரனை கலையுங்கோ என்று கோஷமிட்டார்கள். சிறிதரன் ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது அரச உத்தியோகத்தர் எங்களைவிட கல்வி அறிவில் கூடியவர்கள், அவர்களோடு நல்லதொரு இணக்கப்பாட்டுடன் நாம் நடந்தோம். ம்...... கல்வியறிவில் கூடியவர்கள் செயலில் காட்டவேண்டும் தங்கள் திறமையை. இவர் கேள்விகேட்க்காமல் இருந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குத்தெரியும்? மக்கள் என்ன முட்டாள்களா? அரசியல் வாதிகளும் கவனிப்பதில்லை, மக்களும் கேட்கக்கூடாது என்றால்; இவர்கள் என்னத்துக்கு அரச பணத்தை, இல்லை மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்? ஆகவே இந்த தவறுகளை குறைகளை மாற்ற நினைக்கும் அனுராவை இந்த பெருச்சாளிகள் சும்மா விடுமா? சாதாரண ஏழை மக்களை தவிர யாரும் இவர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்ப மாட்டார்கள். எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத எச்சரிக்கை, சவால் இவருக்கு மட்டும் எதற்கு? அவரின் இந்த ஊழலற்ற அரசியலை அவர் கட்சியை சார்ந்தவர்களே விரும்ப மாட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யாத, மக்களை சந்திக்காத அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு சலுகைகள் எதற்கு? அனுராவின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால்; யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள், உண்மையான சேவைசெய்பவர்கள் இனங்காணப்படுவார்கள். யாரும் அரச உத்தியோகத்தில் இணையமுன் யோசிப்பார்கள். பாருங்கள்... அனுராவை கலைக்க எங்கும் வேலைநிறுத்தம், அடாவடி, குழப்பம், புத்த சிலை என்று கிளம்பி அவருக்கு குடைச்சல் கொடுத்து அவரை ஓட ஓட விரட்டவே முனைவார்கள். ஏனென்றால் உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர் யாருமில்லை. இப்போ, நான் விக்கியரை நினைத்துப்பார்க்கிறேன். இதுவே அவருக்கும் நடந்தது. உண்மையான எவருக்கும் இதுதான் நடக்கும். ஒரு கட்சியில்; அதிகாரப்போட்டி, யாரும் தனக்குமேல் வரக்கூடாது என்று திட்டம் போட்டு, ஆசை காட்டி, கூட்டம் சேர்த்து குழப்புகிறார்கள் கட்சிக்குள் இடையில் வந்தவர்கள். அனுராவை சும்மாவா விடுவார்கள் சந்ததி சந்ததியாய் சுரண்டியவர்கள்? அதைவிட அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை வேறு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு, லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்துற வரை நாட்டில் சட்டங்கள் இறுக்கப்படவேண்டும், சாதாரண மக்களும் சில கஸ்ரங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நாடுகள் இவைகளை கடந்தே மீண்டு வந்திருக்கின்றன. கோசானுக்கே, அனுரா மீது இவ்வளவு கடுப்பேறி சன்னதம் ஆடுறாரென்றால்; இதுவரை இனவாதத்தை தூண்டி கொள்ளையடித்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? மாண்புமிகு ஜனாதிபதி, ஆணைக்குள்ழுக்களை அமைத்து கோழி அமத்தினமாதிரி ஊழல் பெருச்சாளிகளை அமுக்க வேண்டும்!       

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

பொது வேட்பாளர் தேர்தலில் நின்றார் அதுவும் பிழை என்றார்கள், சரி..... ஒருவரும் வேண்டாம். ஆனால் நாட்டுக்கு ஒரு தலைவர் வேண்டும், நீங்கள் நிற்கிறீர்களா? அல்லது ட்ரம்மை அழைப்போமா?

நாட்டின் தலைவரை எல்லாம் நீங்களோ நானோ தேர முடியாது. அது சிங்கள வாக்குகள் தீர்மானிக்கும் விடயம்.

நாம் எந்த தேர்தலிலும் எமது நலனுக்கு ஏற்றதை மட்டுமே செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, satan said:

அப்ப அனுர இனவாதிகளை சாந்த படுத்த மட்டும் நாம் பெளத்த கோவில் விடயத்தை சும்மா எதிர்த்து விட்டு அடங்கி விட வேண்டும்?

இவை எல்லாம் அனுர இனவாதி இல்லை என்ற உங்கள் கற்பனை நிலைப்பாட்டில் எழுத படுபவை.

அனுரவும் ஜேவிபியும் பச்சை இனவாதிகள்.

அவர்கள் இதை ஒருப்போதும் தடுக்கப்போவதில்லை.

மேலும் அனுர இனவாதத்தை எதிர்க்க வந்தாரா அல்லது சாந்தபடுத்த வந்தாரா ?

2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை.

இனி போக போக இறங்குமுகம்தான்.

எந்த அரசுக்கும் honeymoon period என தொடக்க காலத்தில் எதிர்ப்பு குறைந்த்ஹ் இருக்கும். கடினமான வேலைகளை அப்போதான் செய்வார்கள்.

இவர்களால் இப்பவே இனவாதிகளை ஒண்டும் செய்ய முடியவில்லை, இன்னும் சில வருடத்தில் இதை விட வெறுப்பை சம்பாதித்த நிலையில் என்னத்தை செய்ய முடியும்.

நீங்களும் அப்போ வந்து அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள்.

இனவாதி, இனவாத கட்சியிடமே இனவாதத்தை கட்டுபடுத்த கோரும் மடமை போல் வேறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள்.

அதற்காகத்தான் சொல்கிறேன், பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு இருக்கட்டுமென்று. அப்போ அனுரா அதை சாட்டாக சொல்லி தப்பிக்க முடியாது.

21 minutes ago, goshan_che said:

நாட்டின் தலைவரை எல்லாம் நீங்களோ நானோ தேர முடியாது. அது சிங்கள வாக்குகள் தீர்மானிக்கும் விடயம்.

இதைத்தானே நானும் சொன்னேன். அவர் மூன்றில் இரண்டை விட அதிகமாக வென்றிருக்கிறார், நாம் அவரை  விமர்ச்சிப்பதால் எதுவும் மாறாது. நல்லதை எதிர்பார்ப்போம் என்று. அதற்குத்தானே வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள் என்னோடு.

12 minutes ago, goshan_che said:

2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை.

ஏற்கெனவே மாண்புமிகு ஜனாதிபதி கூறிவிட்டார், தற்போது நாட்டிலுள்ள பெரும்பிரச்சனை பொருளாதாரம். அதற்கு முதல் முக்கியத்துவம், இவற்றையும் செய்வேன் ஆனால் உடனடியாக செய்ய நான் ஒன்றும் மந்திரவாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதற்கு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி நிரூபிக்கப்பட்டாலே தண்டனை வழங்கப்படும். நீதிசெயற்பாடுகளில் தான் தலையிடப்போவதில்லை என்கிறார். இதெல்லாம் ஒரே இரவில் நடக்கக்கூடியதல்ல, அவர் செய்ய முடியாததை வெறும் வாக்குக்காக அன்கொன்றும் இங்கு வேறொன்றும் சொல்லவில்லை. மக்கள் தாமே முன்வந்து அவரை தெரித்தெடுத்துள்ளார்கள். நான் மக்களின் முடிவை மதிக்கிறேன். பல வாசகர்கள் சொல்லிக்காட்டி விட்டார்கள். அவர்களுக்கு சலிப்பேற்படுத்த வேண்டாம்.  ஐந்துவருடத்தின் பின் கதைக்கிறேன் இதுபற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அதற்காகத்தான் சொல்கிறேன், பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு இருக்கட்டுமென்று. அப்போ அனுரா அதை சாட்டாக சொல்லி தப்பிக்க முடியாது.

இருந்தாலும் அனுர ஒண்டும் கிழிக்க மாட்டார்.

ஏன் என்றால் அவரும் ஒரு இனவாதிதான்.

நீங்கள் இன்னும் கொஞ்சகாலம் கழிய “சிங்களவன் ஏமாத்தி போட்டான்” எண்டு கையை பிசையத்தான் போறியள்.

உங்களுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர் ரணில் காவடி. நீங்கள் அனுர காவடி.

5 hours ago, satan said:

நாம் அவரை  விமர்ச்சிப்பதால் எதுவும் மாறாது.

விமர்சிக்காவிட்டாலும் மாறாது.

5 hours ago, satan said:

ஏற்கெனவே மாண்புமிகு ஜனாதிபதி கூறிவிட்டார், தற்போது நாட்டிலுள்ள பெரும்பிரச்சனை பொருளாதாரம். அதற்கு முதல் முக்கியத்துவம், இவற்றையும் செய்வேன் ஆனால் உடனடியாக செய்ய நான் ஒன்றும் மந்திரவாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதற்கு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி நிரூபிக்கப்பட்டாலே தண்டனை வழங்கப்படும். நீதிசெயற்பாடுகளில் தான் தலையிடப்போவதில்லை என்கிறார். இதெல்லாம் ஒரே இரவில் நடக்கக்கூடியதல்ல, அவர் செய்ய முடியாததை வெறும் வாக்குக்காக அன்கொன்றும் இங்கு வேறொன்றும் சொல்லவில்லை. மக்கள் தாமே முன்வந்து அவரை தெரித்தெடுத்துள்ளார்கள். நான் மக்களின் முடிவை மதிக்கிறேன். பல வாசகர்கள் சொல்லிக்காட்டி விட்டார்கள். அவர்களுக்கு சலிப்பேற்படுத்த வேண்டாம்.  ஐந்துவருடத்தின் பின் கதைக்கிறேன் இதுபற்றி.

முன்பே சொன்னதுதான் இதெல்லாம் இலங்கை தேசியம் சார்ந்த விடயங்கள்.

எமது அடிப்படை  பிரச்சனை இவை இல்லை.

அதற்கு அனுரவிடம் இருப்பது ஒரே தீர்வுதான் - இனவாத அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தர் சிலை வைச்சு கிட்டதட்ட 2 வருசமாம் இப்ப வந்து கூப்பாடு போடினம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.