Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

இலங்கை தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412820

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி...  
சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும்,  
தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்... 
வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல் 
படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்து தான் சிறீ வாத்தியார் கனடா சுற்றுலா சென்றாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட  விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க தமிழரசு கட்சி ...வெல்க உங்கள் கொள்கை ....நீங்கள் சகல கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து  உங்கள் இலட்சியத்துக்காக போராடினீர்கள் ..நன்றிகள்...தொடர்ந்து போராடுங்கள்...பல தடங்கள் வருகின்றது  சுழிச்சு முன்நோக்கி செல்கின்றீர்கள் வாழ்க ..வெல்க....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி...  
சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும்,  
தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்... 
வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல் 
படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.

 

2 hours ago, satan said:

சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட  விரும்புவதில்லை.

அந்தப் பயம் இருக்கட்டும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த தேர்தலின் போதாவது எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர் முன்னணியாக போட்டியிட்டு தமிழர் இருப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு கட்சி: பெயரிலேயே இனவாதம் உள்ளதே. இது இலங்கை நாட்டு மக்களுக்கான கட்சிதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கட்சி 75 வருச கொண்டாட்டத்தை கொண்டாடுது எண்டால் அந்த கட்சி சாதித்த சாதனைகளையும் பட்டியலிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

ஒரு கட்சி 75 வருச கொண்டாட்டத்தை கொண்டாடுது எண்டால் அந்த கட்சி சாதித்த சாதனைகளையும் பட்டியலிட வேண்டும்.

பின்னிருந்து அதனப் பட்டியலிட்டால்...அதிகநேரம் வாசிக்க எடுக்காது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள்  பூர்த்தி!

தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி...  
சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும்,  
தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்... 
வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல் 
படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.

அவர் ஒருவர் சல்லி சல்லி ஆக்கும்போது   இந்த படத்திலுள்ள. மற்றவர்கள் எல்லோரும் தமிழரசு கட்சியில். தானே இருந்தார்கள்    !     என்ன செய்து கொண்டு இருந்தார்கள்  ???  தட்டி கேட்டாகள???  இல்லை   .இப்பவும்  அவர் நினைத்தபடி தான் எல்லாம் நடக்கிறது  .. தட்டி கேட்பது கிடையாது   அவர் சொல்லு கேட்டு   செய்து  ஒரு தொழில்சாலை ஊழியர்கள் போல் நடத்து  வருகிறார்கள்    பயம். அங்கத்துவம் பறிபோகும் என்ற பயம்.  உந்த. கட்சியை  காட்சியை. விட்டு தள்ளுங்கள்.    எங்களுக்கு அர்ச்சுனா.   இருக்கிறார் 🤣😂.    இப்படிக்கு   .............வாலு.     

இடைவெளியை உங்கள் விருப்பம் போல. நிரப்பவும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரியுலும் சயந்தன் + சுமந்திரன் கம்பெனி கேக் வெட்டி கொண்டாட்டம் என்று ஒரு செய்தி. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரிதானே! கள்ளனுக்குக் கள்ளன் தானே மாற்றீடாக முடியும். கருணாநிதி இப்ப உயிரோடு இல்லை எனவே இருக்கும் அந்த வெற்றிடத்துக்கு (கள்ளருந்தும்) செந்தமிழன் சீமான் அண்ணாதான் சிறந்த மாற்றீடாக இருக்கமுடியும்.😂
    • எந்த பக்கம்  யாழ்ப்பாணம் அல்லது கண்டி பக்கமா  ??   அல்லது ஒருவர் யாழ்ப்பாணம் மற்றவர்.  கண்டி    🤣
    • அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது  தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து   அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு  மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.  அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது.  அன்று பிரபாவோ  உமாவோ தமிழ் நாட்டில்  எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ்  போராளிகள்  மட்டுமே.  அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில்  பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக   பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி  புலிகள் மறைவாக  பயிற்சி பெற  பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார்.  ராஜீவ் கொலைக்கு பின்  இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும்  மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர்.  அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர்.   ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள்  சீமானின்  சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.
    • நாலாவது வருடத்தில் நடந்த ஒரு விடயம். மூன்றாவது வருட பரீட்சைத் தாள்களை அந்த வாரம் தான் அந்தப் பேராசிரியர் திருத்திக் கொண்டிருந்தார் போல................... 'this is going from bad to worse..................' என்று ஆரம்பித்து மனிதன் அன்று முழு வகுப்பையுமே காறித் துப்பினார்............... பொதுவாக அவர் படிப்பிப்பது எதுவுமே எவருக்கும் விளங்காது, ஆனால் அன்றைய அவரின் பேச்சு நல்லாவே விளங்கியது...............  அவருக்கு இப்ப ஒரு மெயிலைப் போட்டு, 'சார், கல்லுக்கு கீழ காவோலை போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..............' என்று ஒருக்கால் கேட்டால், மனிதன் இதயத்தை பிடித்துக் கொண்டு விழுகுதோ தெரியவில்லை............... படிப்பில் இது அவரின் ஏரியா வேற.............🤣.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.