Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
19 DEC, 2024 | 01:50 PM
image
 
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள  நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தர். 

இன்றைய தினம் (19) ஊடகங்களுக்கு அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் ஜூலி சங் உடன் தாம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் அமெரிக்காவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்  என்றும் கூறினார்.

தேசிய விவசாய அமைப்புக்கள் தொடர்பான எண்ணக்கருக்களை முன்னெடுத்து தேசிய உற்பத்திக்கான சர்வதேச சந்தை வாய்ப்புக்கள் உருவாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தெங்கு தொடர்பான உற்பத்திகள் மற்றும் தேங்காய்ப்பால் போன்றவற்றை நவீன முறையில் பதப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதன் காரணமாக உள்ளூர் விவசாயிகளது எதிர்காலம் சிறப்பாக அமைய வழி பிறக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

6519e5e0-c3d2-4296-b04f-612cc1b941ce.jpg

https://www.virakesari.lk/article/201638

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:
 
தெங்கு தொடர்பான உற்பத்திகள் மற்றும் தேங்காய்ப்பால் போன்றவற்றை நவீன முறையில் பதப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். 

என்னது............... தென்னைக்கும் ஆலோசனை அமெரிக்காவிலிருந்தா............... நாங்களே இங்கே மெக்ஸிக்கோ தேங்காயா, கரிபியன் தேங்காயா என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

குருணாகாலில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு ஹைபிரிட் இனத்தை உண்டாக்கி இருக்கின்றார்கள். அது மூன்று வருடத்திலேயே ஒரு தடவையில் இவ்வளவு காய்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு காய்கள் என்ற விளக்கத்துடன் ஒரு கட்டுரை சில நாட்களின் முன் வந்திருந்தது. நல்ல நம்பிக்கையாகவும் இருந்தது. உடனடியாக மூன்று மில்லியன் கன்றுகள் தேவை, நாட்டின் தேங்காய் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்த்து விடலாம் என்றும் அதில் இருந்தது. இதற்கு ஏன் அமெரிக்கா............ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, ரசோதரன் said:

இதிலை விளங்குவது என்னவென்றால்...நீங்க கற்பனை பண்ணின அனுரா வேறை ...இப்ப உள்ள அனுர வேறை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, alvayan said:

இதிலை விளங்குவது என்னவென்றால்...நீங்க கற்பனை பண்ணின அனுரா வேறை ...இப்ப உள்ள அனுர வேறை

அப்ப லால்காந்த ஓனர் இல்லையா......................🤣

அல்வாய், திக்கம் முழுக்க தென்னை நிற்குது தானே என்ற பெருமையில், அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று நீங்கள் சொல்லவில்லை தானே...............😜.

எவ்வளவு ஆட்களையப்பா அநுரவும் சமாளிப்பது........... இந்தியா, சைனா, அமெரிக்கா, அல்வாயன்,............. ஜீலி வேற அடிக்கடி யாரையாவது சந்தித்தபடியே இருக்கின்றார்.............. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

இதற்கு ஏன் அமெரிக்கா............ 

முட்டை ,அரிசி, தென்னை இதற்கெல்லாம் அமெரிக்காவா ....அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலாகிய சிறிலங்காவை சுற்றி வளைத்து இந்தியா ,சீனா போன்ற நாடுகள் ராஜதந்திர தாக்குதலுக்கு தயாராகின்றது ...

26 minutes ago, alvayan said:

இதிலை விளங்குவது என்னவென்றால்...நீங்க கற்பனை பண்ணின அனுரா வேறை ...இப்ப உள்ள அனுர வேறை

அது நாற வாய் இது வேற வாய் ...என்று சொல்லுறீயல்😅

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
45 minutes ago, putthan said:

முட்டை ,அரிசி, தென்னை இதற்கெல்லாம் அமெரிக்காவா ....அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலாகிய சிறிலங்காவை சுற்றி வளைத்து இந்தியா ,சீனா போன்ற நாடுகள் ராஜதந்திர தாக்குதலுக்கு தயாராகின்றது ...

நேற்றோ அல்லது முந்தாநாளோ இங்கு யாழில் இணைக்கப்பட்டிருந்த ஒரு இணையக் கட்டுரை ஒன்றில் கடைசிப் பந்தியில் கிட்டத்தட்ட இப்படி எழுதப்பட்டிருந்தது: இப்படியான ஏகாதிபத்திய, எதேச்சதிகார அமெரிக்காவிற்கு எதிராகப் போராட உலகில் உள்ள எல்லா இளைஞர்களும் ஒன்றாக அணிதிரள வேண்டும்...........

இன்னமும் இப்படி எழுதுகின்றார்களா, அதை மக்களும் வாசிக்கின்றார்களா............ என்று நினைப்பு போனது. இந்த வசனம் அரதப்பழசு, எங்களை விடப் பழசு...............

அந்த பத்திரிகைக்காரர்களிடம் சொல்லவேண்டும்............. அமெரிக்கா இப்பொழுது உலகெங்கும் சில்லறை வர்த்தகத்திலும் கால் வைக்கத் தொடங்கியுள்ளது என்று..............🤣.

Edited by ரசோதரன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள  நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தர். 

இலங்கை ஒரு குட்டித் தாய்வான் ஆகிறது.

அதுவும் நல்லதுக்கே.

1 hour ago, ரசோதரன் said:

அப்ப லால்காந்த ஓனர் இல்லையா......................🤣

அல்வாய், திக்கம் முழுக்க தென்னை நிற்குது தானே என்ற பெருமையில், அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று நீங்கள் சொல்லவில்லை தானே...............😜.

எவ்வளவு ஆட்களையப்பா அநுரவும் சமாளிப்பது........... இந்தியா, சைனா, அமெரிக்கா, அல்வாயன்,............. ஜீலி வேற அடிக்கடி யாரையாவது சந்தித்தபடியே இருக்கின்றார்.............. 

அமெரிக்க கடற்படையை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்பது தான் பிரச்சனை?

திருகோணமலையா?காலியா?காங்கேசன்துறையா?பருத்தித்துறையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க கடற்படையை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்பது தான் பிரச்சனை?

திருகோணமலையா?காலியா?காங்கேசன்துறையா?பருத்தித்துறையா?

காங்கேசந்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஒரு இடம் இருக்கின்றதே.......... அங்கு ஒரு துறைமுகத்தை அமைத்து, அங்கே கொண்டு போய் நிற்பாட்டுவம்.......................😜.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

காங்கேசந்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஒரு இடம் இருக்கின்றதே.......... அங்கு ஒரு துறைமுகத்தை அமைத்து, அங்கே கொண்டு போய் நிற்பாட்டுவம்.......................😜.

ஜுலி சங்குடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த இடையில் இருக்கும் இடத்தை ..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

....... என்று நினைப்பு போனது. இந்த வசனம் அரதப்பழசு, எங்களை விடப் பழசு...............

அந்த பத்திரிகைக்காரர்களிடம் சொல்லவேண்டும்............. அமெரிக்கா இப்பொழுது உலகெங்கும் சில்லறை வர்த்தகத்திலும் கால் வைக்கத் தொடங்கியுள்ளது என்று..............🤣.

சீனாக்காரன் இரண்டாம் உலக போர் காலத்தில் நாடுகளில் "சைனா டவுன்" போட்டு உலகில் உள்ள இடங்களை ஆக்கிரமித்த மாதிரி , .திருகோணமலையில் சீனன்குடா இருப்பது போலஅமேரிக்கா இப்பொழுது செய்கின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரசோதரன் said:

என்னது............... தென்னைக்கும் ஆலோசனை அமெரிக்காவிலிருந்தா............... நாங்களே இங்கே மெக்ஸிக்கோ தேங்காயா, கரிபியன் தேங்காயா என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

தேங்காய் உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என அமெரிக்க வைத்தியர்கள் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லையா?
அன்பர்  @Justin  அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, குமாரசாமி said:

தேங்காய் உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என அமெரிக்க வைத்தியர்கள் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லையா?
அன்பர்  @Justin  அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன். 

அவைகளை வாசித்திருக்கின்றேன், குமாரசாமி அண்ணா...............

saturated vs. unsaturated and  mono vs. poly....... என்று விளக்கங்கள் சொல்வார்கள். 

தேங்காயால் போனோம் என்று இருக்கட்டும்...............🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

என்னது............... தென்னைக்கும் ஆலோசனை அமெரிக்காவிலிருந்தா............... நாங்களே இங்கே மெக்ஸிக்கோ தேங்காயா, கரிபியன் தேங்காயா என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பத்தில் நட்பு அடிப்படையில் ஒருவர் கை குலுக்கினார், கை குலுக்கும் போது உள்ளங்கையினை சுரண்டினார், அப்போது எனக்கு அதன் சூட்சுமம் தெரியவில்லை, அவர் விளையாட்டாகத்தான் செய்கிறார் என நினைத்து பதிலுக்கு நானும் உள்ளங்கையினை சுரண்டி விட்டேன்😁. அதன் பின்னர் வேறு ஒருவருக்கு அதே போல் உள்ளங்கையினை சுரண்டின போது, அவர் நான் புரியாமல்தான் இதனை செய்வதனை உணர்ந்தவறாக காரணத்தினை விளக்கினார், இந்த சம்பவத்திற்கிடையே பலருடைய கையினை குலுக்கியிருந்தேன்.

இங்கு இலங்கை கோருவது வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான நன் கொடை என நினைக்கிறேன், அத்துடன் எதிர்காலத்தில் வரவுள்ள நட்டத்திற்குமான நட்ட ஈடு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 hours ago, குமாரசாமி said:

தேங்காய் உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என அமெரிக்க வைத்தியர்கள் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லையா?
அன்பர்  @Justin  அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன். 

உள்ளேன் ஐயா😂!

ஓம், தேங்காய்ப் பாலை (அதுவும் அடர்த்தியான முதல் பாலை😎) எல்லாக் கறிக்குள்ளும் போட்டு அவித்ததால் இலங்கையில் மாரடைப்பும், மூளை இரத்த அடைப்பும் தான் முதல் இரு  மரணக் காரணங்களாக வந்திருக்கின்றன👇.

https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka

ஆனால், தேங்காயை வேறெதற்கும் பாவிக்கலாமா? ஆம். தேங்காயில் இருக்கும்  நிரம்பிய கொழுப்பு பாண்டலடையாது. எனவே, மருந்துகள் தயாரிக்க எண்ணை தேவையானால் தேங்காய்க் கொழுப்பு திறமான கரைப்பான். அழகுசாதனப் பொருட்கள் இதனால் தான் தேங்காய் எண்ணையில் தயாரிக்கப் படுகின்றன. 

Edited by Justin
பிழை திருத்தம் - நிரம்பிய கொழுப்பு என வந்திருக்க வேண்டும்
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.