Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்

பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி  – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார்.

இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார். உடனே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார்.

உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://oruvan.com/police-officer-invited-for-sexual-intercourse-tension-in-kankesanthurai-area/

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டது பிழை அதுக்கு அடிச்சு துவைத்து விட்டார்கள், இதற்கு மேல் public nuisance வழக்கை தவிர வேறென்ன நடவடிக்கை எடுக்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, RishiK said:

அவர் கேட்டது பிழை அதுக்கு அடிச்சு துவைத்து விட்டார்கள், இதற்கு மேல் public nuisance வழக்கை தவிர வேறென்ன நடவடிக்கை எடுக்க முடியும்? 

Bringing the police service in to disrepute.

உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Bringing the police service in to disrepute.

உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

அனுரா தானே பாதுகாப்பு அமைச்சர்?

நல்ல தொரு சந்தர்ப்பம் மக்கள் மனங்களை வெல்ல. பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

Bringing the police service in to disrepute.

உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க  உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க  உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும் 

அப்படியானால் அனுரா வந்த பின்னரும் நீங்கள் வித்தியாசத்தை உணர வில்லையா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

மதுபோதையில் கலகம் செய்தவர் எண்டபடியால கேஸ் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலையின் வீரநாயகன் சுனில் ரத்நாயக்க - 19.12.2000
பிலியந்தலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், உறுதிப்படுத்தப்படாத சந்தேக நபராக ஆனந்தசுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் தந்தையின் அன்பைத்தேடும் அநாதையானாள். மறுபுறத்தே மிருசுவிலில் எட்டுப்பொதுமக்களைக் சித்திரவதை மூலம் கொலைசெய்து, ஒரு தமிழ்ப் பாலகனின் தோலை உரித்துக் கொலைசெய்து சேலையொன்றில் சுற்றிப் புதைத்தது உறுதியாகி, வழக்காடுமன்றில் மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டபோதும்; நாட்டின் போர் நாயகனாகக் மதிப்பளிக்கப்பட்டு, கோத்தபாயவினால் விடுதலைசெய்யப்பட்ட சிறிலங்காவின் "மதிப்புக்குரிய" இராணுவத் தந்தை சுனில் ரத்நாயக்கவின் மகள் பெருமைக்குரியவளாக வாழ்கிறாள்.
சிறிலங்காவின் சிறந்த நீதிக்கு இவ்வாறு ஆயிரம் நிகழ்வுகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்றாகும்.
முழுச் செய்தியின் இணைப்பு:
படம்: Oorukaai
May be an image of 3 people and text
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அனுரா தானே பாதுகாப்பு அமைச்சர்?

நல்ல தொரு சந்தர்ப்பம் மக்கள் மனங்களை வெல்ல. பார்க்கலாம். 

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க  உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும் 

4 hours ago, விசுகு said:

அப்படியானால் அனுரா வந்த பின்னரும் நீங்கள் வித்தியாசத்தை உணர வில்லையா???

மாற்றமின்மை ஒன்றே மாறாதது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மதுபோதையில் கலகம் செய்தவர் எண்டபடியால கேஸ் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கு...

நாளைக்கே, மது போதையில் வந்து செய்வதெல்லாம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்கிறீர்கள். மது போதை, அதில் எங்கே, என்ன வேண்டுமென தெரிந்திருகிறது அவருக்கு. அவர் நல்லவர், அவர் அருந்திய மதுதான் குற்றவாளி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, satan said:

நாளைக்கே, மது போதையில் வந்து செய்வதெல்லாம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்கிறீர்கள். மது போதை, அதில் எங்கே, என்ன வேண்டுமென தெரிந்திருகிறது அவருக்கு. அவர் நல்லவர், அவர் அருந்திய மதுதான் குற்றவாளி.

ஊர் உலகத்திலை நடக்கிறதை சொன்னேன் ஐயா 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள பகுதிகளில் சகஜம்.

நான் அறிந்த வரையில், வேண்டாம் என்றால் பெண் வேண்டாம் என்று விட்டு அகன்றுவிடுவது.

ஆங்கிலத்தில் சிங்களவர்  சொல்வது like our grandma buggered with the lion.

(நான் நினைக்கிறன் பெண்களும், ஆண்களை அழைப்பார்கள் என்று).

கேள்வி, போலீஸ் (அதனால் உடன்படவேண்டும்) என்றா, அல்லது சாதாரண மக்கள் போல அழைத்தாரா?

(இதை சொல்வதால், நான் இதை சகஜம் ஆக்குகிறேன் என்பதல்ல. சிங்களவரின் வெளிதெரியாத கலாசாரம் என்று அறிந்ததை சொல்கிறேன்)

(முன்பு இதை சிங்களவர் உள்ளுக்குள் பெருமையாக எடுத்து கொண்டனர். அனால் இப்போது, வெளிநாட்டவர்கள் அறிந்து, வரலாறும் இருப்பதால், பரிகசிப்பை (தாங்காது) சிங்கள புத்திசீவிகள் எப்படியாவது விஜயனை வரலாற்றில் இரண்டு அகற்றி விட வேண்டும் எனும் முனைப்பு; புத்தர் தென்பகுதி காட்டில் பிறந்து கபிலவஸ்து   சென்றது எனும் கதை, இந்த நீக்கத்துக்கு போடப்படும் முதல் அடி)

Edited by Kadancha

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.