Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2024 at 07:56, Paanch said:

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்🤔

இப்பவெல்லாம் தலையங்கத்தை வைத்து செய்தி வாசிக்கக்கூடாது. தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பே இருக்காது. முதலில் செய்தியை வாசியுங்கள், தலையங்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதனாற்தான் சிலர் தடுமாறுகிறார்கள் செய்தியை விளங்கிக்கொள்வதில்.

On 26/12/2024 at 17:09, தமிழ் சிறி said:

ஏற்கனவே பலரை மிரட்டி…. பாலியல் வன்கொடுமை செய்த திருட்டுப் பூனை தான் சிக்கியுள்ளது.

தவறு செய்து பழக்கப்பட்ட ருசிப்பட்டவனே திரும்ப திரும்ப செய்வான். மாட்டினாலும் பயமோ, வெட்கமோ கிடையாது. காரணம்; அரசியலே அங்குதான், அதிற்த்தான் தங்கியுள்ளது.

On 27/12/2024 at 05:18, ரசோதரன் said:

இதுவரை இருந்த முதல்வர்களிலேயே ஸ்டாலின் தான் மிகவும் கையாலாகாதவர் என்ற பட்டத்துடன் இவரின் பெயர் நிலைக்கப் போகின்றது.

அப்பன் காலத்தில், ஸ்ராலின் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தியதாக செய்தியுண்டு. "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி." ஒருவரின் பின்புலம் தெரியாமல், நெருக்கத்தில் வைத்திருப்பார்களா? தங்களுக்கு வேண்டிய போது, தமது எதிரிகளை தாக்க, மிரட்ட இவர்கள் வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் பிடிபட்டால் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை,  எதிர்க்கட்சிகள் தங்கள் மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இணைத்துப்பேசுகிறார்கள் என்று கைகழுவி விடுவார்கள். எங்கள் நாட்டில் நடக்காத விஷயமா?

15 hours ago, கிருபன் said:

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

இவர் தன்னைத்தானே அடிக்க விட்டிருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களால் அடிவாங்கியிருக்க வேண்டும். அவரது முதுகை யாராவது பார்த்து, ஒத்தடம் கொடுத்திருந்தால் அடி முதுகை எவ்வளவு தாக்கியிருக்கிறதென தெரிந்திருக்கும்.

 

3 hours ago, nunavilan said:

சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. கையைப் பிடித்து கண்ணீர் மல்கிய தொண்டர்கள்.! 

மக்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அரசியலுக்காக பாவிக்கிறார்கள். இவரைப்பார்க்கும்போது,  எமது அரசியற்தலைவர் எனகூறிக்கொள்ளும்சாணக்கியனின் நினைவுதான்  எனக்கு வருகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .

அர்ச்சுனாவையும், அண்ணாமலையையும் ஒப்பிடுவது… பெருமாளையும், பெருச்சாளியையும் ஒன்றாக ஒப்பிடுவதற்குச் சமனானது போல் தோன்றுகிறது.🤪

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன.

இந்த வழக்கில் இதுவரை தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? இதையொட்டி கடந்த சில தினங்களில் தமிழக அரசியலில் நடந்த சம்பவங்கள் யாவை?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ன நடந்தது?

 

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார்.

டிசம்பர் 25-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் 37 வயதான ஞானசேகரன் என்றும், அவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார்.

 

 

எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

பின்னர் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.

மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின.

ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது," என்றார்.

''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

இதற்கிடையே, காவல்துறையின் அலட்சியம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

மாணவர்கள் போராட்டம் நடத்தியது ஏன்?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்ட விளக்கத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

அதோடு, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

 

 

குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவரா?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது.

அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும், ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது எனக் கூறிய அவர், "பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்," என்று விளக்கமளித்தார்.

அதோடு, "தமிழ்நாடு முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்," என்றும் கூறினார்.

இந்நிலையில் டிசம்பர் 28 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "மாணவியை பாலியல் தாக்குதல் செய்த திமுக நிர்வாகி ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபர் "திமுகவை சேர்ந்தவர் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது?" என்றும் விமர்சித்துள்ளார்.

 

சென்னை காவல்துறை அளித்த விளக்கம் என்ன?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26-ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "ஒரு குற்றவாளி எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தார்.

அப்போது சமூக ஊடகங்களில் எஃப்.ஐ.ஆர் வெளியானது பற்றி பதிலளித்த அவர், இத்தகைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாகக்கூடாது என்றும் அது தவறும் என்றும் தெரிவித்தார்.

அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேவேளையில், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல்கள் லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார்.

குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்துப் பேசிய ஆணையர், "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதுபோல வேறு யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றார்.

 

 

தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட அதிர்வலைகள் யாவை?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரின் முக்கிய இடங்களில் ஒன்று. அங்கு இத்தகைய சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதை வன்மையாகக் கண்டித்ததோடு சாட்டையடி போராட்டத்தையும் மேற்கொண்டார்.

டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.

மேலும், டிசம்பர் 27 அன்று காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் தனது வீட்டின் முன்பாக, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் சில முறை அடித்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தனது சாட்டையடி போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தான் கையில் எடுத்துள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும் என்றார்.

"அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தப் போராட்டத்தைத் வேள்வியாகக் கையில் எடுத்துள்ளோம்" என்றார்.

அதோடு 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளதாகக் கூறியதோடு, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.

 

 

நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

Getty Images

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 27ஆம் தேதி மாலை நடந்த விசாரணையின்போது, "வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதோடு பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்," எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

சர்ச்சையான காவல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.

 

அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன?

 

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்" என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு நிகழ்வில் நம்முடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது. இது பொருந்தாத வாதம்" எனக் கண்டித்து, குற்றச் சம்பவம் குறித்து மட்டும் பேசுமாறு கூறினர்.

இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் எவ்வளவு முக்கியமானது?

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது? முழு விவரம்

கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

உயர்தர தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வடிவமைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கடந்த 1978இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அடித்தளத்துடன், பரந்த அளவிலான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

https://www.bbc.com/tamil/articles/clyvjw17px0o

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தமிழகத்தில் பரபரப்பு

சென்னையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 23 ஆம் திகதியன்று இரவு உணவுக்குப் பிறகு மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த மாணவியை அச்சுறுத்தி பிறகு மாணவியின் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

அத்தோடு, இந்த விடயத்தை வெளியில் கூறினால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவி பயத்தில் இருந்துள்ளார்.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தமிழகத்தில் பரபரப்பு | Anna University Abuse Tvk Pussy Anand Arrested

இதையடுத்து, உடன் இருக்கும் மாணவிகள் கேட்கவும் நடந்ததை தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவி இதையடுத்து, அவரின் பெற்றோருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

காவல்துறை விசாரணை

அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுளள்ளார்.

இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் திகதியன்று 37 வயதான ஞானசேகரன் என்ற நபர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தமிழகத்தில் பரபரப்பு | Anna University Abuse Tvk Pussy Anand Arrested

இது தொடர்பில் தெரிவித்த மாணவி, குறித்த நபர் சம்பவத்தன்று பல்கழைக்கழகத்தில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாக தெரிவித்து தொலைபேசியில் ஒருவருடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த நேரத்தில் சந்தேக நபரின் தொலைபேசி இயங்கவில்லை என காவல்துறை விசாரணையில் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் உண்மைகளை மறைப்பதாக கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது.

தொடர் சர்ச்சை

இவ்வாறு குறித்த விடயம் தொடர் சர்ச்சைக்குள்ளாக்கபட்டு வந்த நிலையில், இது போல சம்பவம் இனி நடக்க கூடாது என தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை மேற்கொண்ட விடயமும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

இவ்வாறான பிண்ணனியில், குறித்த சம்பவம் தொடர்பில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடித நகலை இன்று (30) காலை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், தவெக நிர்வாக தலைமை கட்சி உறுப்பினர்களுக்கு குறித்த கடித நகலை அனைத்து பெண்களுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தமிழகத்தில் பரபரப்பு | Anna University Abuse Tvk Pussy Anand Arrested

இதையடுத்து, சென்னையின் பல்வேறு பல்கழைக்கழக நுழைவாயில், பேருந்து நிலையம் மற்றும் பல இடங்களில் பெண்களுக்கு குறித்த கடித நகல் வழங்கப்பட்டு விளிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில், டீநகரில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்த கடித நகலை வழங்கிக்கொண்டிருந்த போது அங்கு அவர் உட்பட கட்சி நிருவாகிகள் அணைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னனுமதி இன்றி குறித்த கடித நகல் வழங்கப்பட்டதால் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கும் தவெக கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளதுடன் இது குறித்து இந்திய ஊடகங்கள் அடுத்தடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/anna-university-abuse-tvk-pussy-anand-arrested-1735557097#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: போராடும் அதிமுக, பாராட்டும் பாஜக - திமுகவுக்கு நெருக்கடியா?

யார் அந்த சார்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அ.தி.மு.க. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக 'யார் அந்த சார்?' என்ற போராட்டத்தை நடத்திவருகிறது அ.தி.மு.க.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.

இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

 

இந்தக் குற்றம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்த விவரங்கள் சில ஊடகங்களில் வெளியாகின. அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், "சார்" ஒருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த நபர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படும் 'சார்' என்பவர் யார் என கேள்விகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், "சார் என யாரும் கிடையாது. அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காகவே அந்த நபர் அவ்வாறு பேசினார்" என்று தெரிவித்தார்.

இருந்தபோதும், 'சார்' எனக் குறிப்பிடப்பட்ட நபர் யார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பிவந்தன. குறிப்பாக அ.தி.மு.க. இந்த விவகாரத்தை முன்வைத்து போராட ஆரம்பித்தது.

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம்,@PAKUMARTRICHY

படக்குறிப்பு, தமிழகத்தின் பல இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து அதிமுக போராட்டம் நடத்தியிருக்கிறது

சென்னையில் வணிக வளாகத்திற்குள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்குள் திடீரென நுழைந்த அ.தி.மு.கவினர் 'யார் அந்த சார்?' என்று எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர்.

மாலுக்கு வந்த பொதுமக்களிடமும் இது தொடர்பாக பேசினர். இது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளான நிலையில், சென்னையின் பல இடங்களிலும் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடனான போஸ்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அ.தி.மு.கவின் சார்பில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

மற்றொரு பக்கம், திங்கட்கிழமை காலையில் மாநிலத்தின் பல இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தியிருக்கிறது.

அதிமுக

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். திங்கட்கிழமை காலை முதல் யார் அந்த சார் என்ற ஹாஷ்டாகுடன் எக்ஸ் தளத்தில் அ.தி.மு.கவினர் பதிவுகளை இட்டுவருகின்றனர்.

"ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள், தகவல்களால் தி.மு.க. அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்" என்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
படக்குறிப்பு, அதிமுக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அ.தி.மு.க. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

'சார்' என ஒருவர் இருந்ததாக பாதிக்கப்பட்டவரே குறிப்பிடும் நிலையில், அந்த நபரைக் கண்டுபிடிக்கும் திசையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகச் சொல்கிறார் அ.தி.மு.கவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் அக்கட்சி ஐ.டி. விங்கின் தலைவருமான கோவை சத்யன்.

"குற்றம்சாட்டப்பட்ட நபர் சார் என ஒருவரைக் குறிப்பிடுவதாக செய்திகள் வெளிவந்தன. யார் அந்த இன்னொரு நபர் என நீதிமன்றமும் கேள்வியெழுப்பியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நபர், இன்னொரு நபரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு நபர்தான் அந்த இடத்தில் இருந்தார் என்பதைப் போல இந்த விவகாரத்தை மூடிமறைக்க தி.மு.க. நினைக்கிறது. அந்த இன்னொரு நபர் அதிகாரம்மிக்கவராகக்கூட இருக்கலாம்.

ஆகவே, அந்தத் திசையில் விசாரணை நடந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஹாஷ்டாகுடன் போராட்டத்தைத் துவங்கினோம். இந்த விவகாரத்தை பெண்களிடமும் எடுத்துச் செல்வதற்காகத்தான் சென்னையில் உள்ள ஒரு மாலிலும் இந்தப் போராட்டத்தை நடத்தினோம்" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கோவை சத்யன்.

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

திமுக விமர்சனம்

ஆனால், இந்தப் போராட்டங்களைத் தி.மு.க. கடுமையாக விமர்சித்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க முன்வரும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக இந்தப் போராட்டங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"இந்த ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.கவின் இந்தப் போராட்டம் தி.மு.கவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

"இந்த விவகாரத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கையை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்போது, 'யார் அந்த சார்' என அ.தி.மு.க. கேள்வியெழுப்பிவரும் நிலையில், இன்னொருவர் கைதானால், அது அ.தி.மு.கவுக்கான வெற்றியாகவே பார்க்கப்படும். அப்படி நடக்காவிட்டாலும், அந்த இன்னொருவர் யார் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொடர்ந்து எழுப்பிவரும். இந்தப் போராட்டம் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமையாவிட்டாலும்கூட, நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு நெருக்கடியாகவே அமையும்" என்கிறார் அவர்.

அ.தி.மு.கவின் இந்தப் போராட்டத்தை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருப்பதும் அரசியல் நோக்கர்களைக் கவனிக்க வைத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2024 at 19:29, விசுகு said:

படித்தவன் எல்லாம் ஏன் இப்படி லூசுகளாக? கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது 🤣

அண்ணாமலையை கொஞ்சம் நம்பினேன் என்றதன் மூலம் உங்கள் மேலானா என் நம்பிக்கை டெமேஜ் ஆகிவிட்டது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணாமலையை கொஞ்சம் நம்பினேன் என்றதன் மூலம் உங்கள் மேலானா என் நம்பிக்கை டெமேஜ் ஆகிவிட்டது🤣

அண்ணாமலையை அல்ல ராசா அந்த ஐபிஎஸ் ஐ. 

நமக்கு ஒரு முறை தான் சூடு வைக்கமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அண்ணாமலையை அல்ல ராசா அந்த ஐபிஎஸ் ஐ. 

நமக்கு ஒரு முறை தான் சூடு வைக்கமுடியும். 

இருப்பதில் பெரிய கள்ளந்தான் ஐ பி எஸ் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இருப்பதில் பெரிய கள்ளந்தான் ஐ பி எஸ் 🤣

என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை? ஆனால் எனக்கு இந்தவிமான பகுத்தறிவு கொஞ்சம் இல்லை கனக்க குறைவு என்பதை தாழ்மையுடன் ஒத்துக் கொள்கிறேன் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

அண்ணாமலையை கொஞ்சம் நம்பினேன் என்றதன் மூலம் உங்கள் மேலானா என் நம்பிக்கை டெமேஜ் ஆகிவிட்டது🤣

ஓ.....அப்ப நீங்கள் பாஜக ஆள்.....நான் நினைச்சன் நீங்கள் ஆதி திராவிட சப்போர்ட்டர் எண்டு...😀

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கைது!

சீமான் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார்.

இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்தனர்.

முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1414658

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஓ.....அப்ப நீங்கள் பாஜக ஆள்.....நான் நினைச்சன் நீங்கள் ஆதி திராவிட சப்போர்ட்டர் எண்டு...😀

நான் எழுதியதை மீள வாசிக்கவும்😎. அண்ணாமலை என்ற பிராடை (பிஜேபி) நம்பிய விசுகு அண்ணைமேல் நம்பிக்கை போய்விட்டது என எழுதியுள்ளேன்.

பிகு 

ஆதி திராவிடர் என்பது ஒரு குறித்த தாழ்த்தப்பட்ட சாதியி குழுவின் பெயர்.

நீங்கள் திராவிட கட்சிகள் என்பதை இதனோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நான் எந்த திராவிட கட்சியின் ஆதரவாளனும் இல்லை.

ஆனால் பெரியார் முன்வைத்த கொள்கைகள் மீது ஆர்வம் உண்டு. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீமான் கைது!

சீமான் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார்.

இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்தனர்.

முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1414658

ஒரு வழியா நாலு நாள் கழிச்சு அண்ணனும் போராட வந்திருக்கார்…

வந்த கையோட பொலிஸ் வானில் ஏறி போய் விட்டார்🤣.

நேற்றே ஆனந்து உட்பட விஜை கட்சியினர் பலர் போராடி கைதாகினர், இதை பார்த்து விட்டு எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என போராட வந்துள்ளார் அண்ணன்🤣.

இந்த விடயத்தில் விஜை கூட சுணக்கம்தான். 

அண்ணாமலை கோமாளித்தனம்.

எடப்பாடி தெளிவாக போராடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

 

அண்ணாமலை கோமாளித்தனம்.

அண்ணாமலையாருக்காக நாங்கள் எல்லோரும் பரிதாபப்படவேண்டும். தமிழ்நாட்டில் தான் பாஜகவிற்கு ஆகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமித்ஷா கூப்பிட்டுவைத்து குட்டி இருக்கின்றார். மலையார் நான் இங்கேயே இல்லையே, லண்டனில் இருந்தேனே என்று தப்பப் பார்த்திருக்கின்றார். ஆனால் அது அமித்ஷாவிடம் எடுபடவில்லை. இப்ப சாட்டையால் அடிப்பது, செருப்பு இல்லாமல் நடப்பது என்று ஒரே நேர்த்திக்கடன்களாக அண்ணாமலையார் செய்து கொண்டிருக்கின்றார்............

விஜய் காரில் வந்து ஆளுனரிடம் மனு கொடுத்து, அப்படியே காரிலேயே கிளம்பி, தன் போராட்டத்தை அவர் வழியிலேயே செய்துவிட்டார். அவர் ஆளுனரை பனையூருக்கு வரச் சொல்லாமல் இருந்ததே விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் தான்.............. மாநிலங்களுக்கு ஆளுனரே தேவை இல்லை என்று விஜய் முன்னர் சொல்லியும் இருந்தார்..............       

சீமான் கட்சிக்காரர் ஒருவரும் சில மாதங்களின் முன் இப்படியான ஒரு விவகாரத்தில் மாட்டுப்பட்டு போக்சோ சட்டத்தில் உள்ளே இருக்கின்றார்............. ஆதலால் மெதுவாகத்தான் வருவார், அப்படியே பட்டும்படாமலும் போயும் விடுவார்............ 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்லைகக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். மாணவி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, "கடந்த ஆட்சியில் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன? கைதான நபர் குறித்தும், 'யார் அந்த சார்?' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கூறியது என்ன? இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசியது என்ன?

 

அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர்.

இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரத்திற்கு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

 

புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பூவை ஜெகன்மூர்த்தி, பல்கலைக்கழக பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் பேசும் போது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.

தமிழக கல்விக் கட்டமைப்பின் மீது ஆளுநரால் மோசமான தாக்குதல் நடைபெற்று வருவதாக வி.சி.கவின் சிந்தனைச் செல்வன் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்த சில கருத்துகளுக்கு அ.தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், "மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லாதது ஏன்" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த நபர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழக சட்டப்பேரவை, மு.க.ஸ்டாலின் விளக்கம்

பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். "குற்றம் நடந்த பிறகு குற்றவாளியைக் கைதுசெய்யாமல் விட்டிருந்தாலோ, காப்பாற்ற முடிவுசெய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறை செல்வது அரசியல் ஆதாயத்திற்கானது. டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் மாணவி கோட்டூர்புரம் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நாள் காலை குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்துக் கேட்கிறார்கள். அதற்கு காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.ஐ.சி.தான். காவல்துறை சுட்டிக்காட்டியவுடன் அது சரிசெய்யப்பட்டது.

சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லையென பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல. குற்றவாளி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கையின்படி, 'யார் அந்த சார்?' எனக் கேட்கிறீர்கள். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட புலனாய்வுக்குழுதான் இதனை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்", என்று பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழக சட்டப்பேரவை, மு.க.ஸ்டாலின் விளக்கம்

பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

தொடர்ந்து பேசிய அவர், "இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும். எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் 'யார் அந்த சார்?' என குற்றம்சாட்டுகிறார்கள். உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சொல்லுங்கள். அதை விட்டுட்டு ஒரு மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில் மலினமான அரசியலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இது மக்கள் மத்தியில் எடுபடாது.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் பத்து மாநகரங்களில் கோவையும் சென்னையும் இருக்கின்றன. பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான். மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர் மாதிரி பேசுபவர்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். பொள்ளாச்சியில் நடந்தது, ஒரே ஒரு பெண்ணுக்கு நடக்கவில்லை. பல பெண்களுக்கு நடந்தது. ஒரு கும்பலே இதைச் செய்தது. அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ.க்கு போன பிறகுதான் வழக்கில் முன்னேற்றம் இருந்தது.

பாதிக்கப்பட்ட பெண் தன் அண்ணனிடம் இதைப் பற்றிச் சொன்னவுடன் அவர் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேரை பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், காவல்துறை வழக்குப் பதிவுசெய்யவில்லை. எல்லோரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய 'சார்' ஆட்சியில் சட்டம் - ஒழுங்கின் லட்சணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை, குற்றம்சாட்டியவரிடமே கொடுத்தார்கள். அ.தி.மு.க பிரமுகர் நாகராஜ், பெண்ணின் சகோதரரை தாக்கினார். பிரச்னை பெரிதானதும் முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், மூன்று பேரை கைது செய்து விவகாரத்தை முடிக்கப்பார்த்தார்கள். ஆனால், சிபிஐ விசாரணையில் அ.தி.மு.கவினர்தான் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்து" என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழக சட்டப்பேரவை, மு.க.ஸ்டாலின் விளக்கம்
படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்தத் தருணத்தில் அ.தி.மு.கவினர் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பிறகு வெளிநடப்புச் செய்தனர். இதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார் .

"இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.கவைப் பார்த்து என்னால் கேட்க முடியும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அ.தி.மு.க. ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழக சட்டப்பேரவை, மு.க.ஸ்டாலின் விளக்கம்
படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழக வளாகம்

தொடர்ந்து, அண்ணா நகர் பாலியல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தி.மு.க. அனுதாபி என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது அந்தச் சிறுமியின் உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பிறகு, இந்த வழக்கை சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் மாற்றியது. இதனை எதிர்த்து காவல்துறை மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை எனக் கூறிய நீதிமன்றம் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது அ.தி.மு.கவைத் சேர்ந்த சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அண்ணா நகர் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனைப் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் அந்த நபர் தி.மு.க. அனுதாபி எனக் குறிப்பிட்டார்.

"சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.கவில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.கவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை" என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்தால் த‌மிழ் நாட்டில் என்ன‌ கூத்தும் போட‌லாம் 

வெளிச்ச‌த்துக்கு வ‌ந்தால் சோடிக்க‌ப் ப‌ட்ட‌ அறிக்கையை விட்டு த‌ப்பிப்ப‌து..................இது தான் பெரியாரின் பெண்ணிய‌ ம‌ண்ணில் ந‌ட‌க்கும் கொடுமை.....................................

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 பிப்ரவரி 2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறு பகுதியில் சாலையோர உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர்.

கசிந்த எஃப்.ஐ.ஆர்

காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில விவரங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின.

புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்த நிலையில், சமூக ஊடகங்களிலும், வாட்ஸாப்பிலும் இந்த எஃப்.ஐ.ஆர் பகிரப்பட்டது.

இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழுவிடம் வழக்கின் ஆவணங்களை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் ஒப்படைத்தனர்.

எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

தற்போது இந்த இரண்டு வழக்குகளையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்

பட மூலாதாரம்,WWW.ANNAUNIV.EDU

படக்குறிப்பு, புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்தன

செல்போன்கள் பறிமுதல்

எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் நான்கு செய்தியாளர்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் சாட்சி (Witness) என்ற அடிப்படையில் செய்தியாளர்கள் ஆஜராகியுள்ளனர்.

அப்போது, அவர்களில் மூன்று பேரின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

"செல்போனை பறிமுதல் செய்ததற்கான சீசர் மகஜர் ரசீது (seizure mahazar) உள்பட எந்த ஆவணத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தரவில்லை. பின்னர் நாங்கள் அதுகுறித்து கேட்டபிறகுதான் தந்தார்கள்" என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அசீஃப் பிபிசி தமிழிடம் கூறினார்.

"எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் சாட்சியாக விசாரிப்பதற்காக சம்மனை அனுப்பினர். ஆனால் அதை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினர். சென்னை பத்திரிகையாளர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்ததும் தபால் மூலமாக அனுப்பினர்" எனக் கூறுகிறார் அசீஃப்.

தொடர்ந்து பேசிய அவர், "முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் (CCTNS) தளத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்புடைய எஃப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அதைச் சிலர் பார்த்துள்ளனர். அதில் பத்திரிகையாளர்களும் உள்ளனர். 'இது தேசிய தகவல் மையத்தின் தவறு' என்று காவல்துறை விளக்கம் கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்படுகிறது," என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

விசாரணையில் என்ன நடந்தது?

கடந்த 28-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜரான செய்தியாளர்களிடம் வழக்குக்குத் தொடர்பில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறும் அசீஃப், "சொத்து மதிப்பு எவ்வளவு, இந்த  எஃப்.ஐ.ஆரை எங்காவது விற்பனை செய்தீர்களா, எஃப்.ஐ.ஆரை பதிவேற்றும் சிசிடிஎன்எஸ் தளத்தில் நுழைந்தது ஏன் என்றெல்லாம் கேட்டுள்ளனர்" எனக் கூறுகிறார்.

குற்றம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்கள், சிசிடிஎன்எஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கைககளைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாக உள்ளதாகவும் ஆனால் அதைக்கூட சிறப்பு புலனாய்வுக் குழு கேள்விக்கு உள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியானது ஏன் என்று கேட்டபோது, "எஃப்.ஐ.ஆரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் எதையும் காட்டாமல், குற்றம் குறித்த விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் பகுதியை மட்டுமே காட்டப்பட்டது." என்று அசீஃப் பதிலளித்தார்.

எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக கடந்த செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 29) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையிட்டார்.

"ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுத் துன்புறுத்துவதால் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்" எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், "பொதுத்தளத்துக்கு எஃப்.ஐ.ஆர் வந்துவிட்டால் அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை எல்லை மீறிச் செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்" எனக் கூறினர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அசீஃப்

டிஜிபி சொன்னது என்ன?

இதன்பிறகு தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவாலை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் குழு நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது அவர், நீதிமன்றமே அமைத்த குழு என்பதால் தன்னால் தலையிட முடியாது எனவும் பொருளைக் கைப்பற்றினால் உரிய ரசீதைக் கொடுக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் நேரில் வலியுறுத்துமாறும் கூறியுள்ளார்.

"டிஜிபி கூறியதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐமான் ஜமால், சினேக பிரியா, பிருந்தா ஆகியோரை எழும்பூரில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் சந்தித்தோம். செல்போன்களை பறிமுதல் செய்துவிட்டு அதற்கான ரசீதைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கேட்டோம். அதற்கு ஒரு சட்டப் பிரிவைக் கூறினர். மீண்டும் கேட்டபோது, மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கு ஆதாரமாக ஆவணத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தனர்" எனக் கூறுகிறார் அசீஃப்.

கடந்த 31ஆம் தேதியன்றும் வேறு ஆறு செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறிய அவர், "அவர்களில் நான்கு பேரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்துவிட்டதால் திங்கள்கிழமையன்று ஆஜராகுமாறு கூறியுள்ளனர்" என்றார்.

இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற முடியவில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, சங்கர் ஜிவால்

"சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. வழக்குக்கு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்பதில் தவறு எதுவும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவை இருக்கலாம்" என்றார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

இந்தக் குழுவின் விசாரணை தொடர்பாக சந்தேகத்தை எழுப்புவது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்கிறார் அவர்.

அதோடு, "சில நேரங்களில் சம்மனுக்கு ஆஜரான நபரிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டு திசை திருப்புவது வழக்கம். இவ்வாறு மடைமாற்றுவதன் மூலம் வழக்குக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். இது விசாரணை நடைமுறை. அதைத் தவறு என்று கூற முடியாது" என்றார்.

''பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 72ன்படி பாலியல்ரீதியான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தக் கூடாது. அதையும் மீறி அடையாளப்படுத்தும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். இது தண்டனைக்குரிய குற்றம். இது சட்டம் என்பதால் செய்தியாளர்களையும் இது கட்டுப்படுத்தும்'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.

''பெயரை வெளியில் கசியவிட்டால் தண்டனை வழங்குவதை புதிய சட்டம் உறுதிப்படுத்துகிறது. பழைய சட்டங்களில் இதுபோன்ற தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை" எனக் கூறுகிறார் அவர்.

'எட்டு பேர் மீது சந்தேகம்'

"அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை சிசிடிஎன்எஸ் தளத்தில் 11 பேர் திறந்து பார்த்துள்ளனர். அதில் மூன்று பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று பார்த்தால் எட்டு பேர் வருகின்றனர்" எனக் கூறுகிறார் பெயர் கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.

"யாருடைய செல்போன் மூலம் எஃப்.ஐ.ஆர் பரவியது என்பது தொடர்பாகவே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

யார்… அந்த சார்…?
இன்னும் அந்த சாரை, தி.மு.க. அரசு கண்டு பிடிக்காததால்…
அவங்க கட்சி ஆள்தான் என்று உறுதியாகி விட்டது.

இடுப்பை கிள்ளுறது, பிரியாணி களவெடுக்கிறது,  பாலியல் சில்மிஷம் செய்யுறவன் எல்லாம்…. தீம்கா கட்சியில்தான் இருக்கிறாங்கள்.

தலைவன் எவ்வழியோ… தொண்டனும் அவ்வழிதான். (200 றுப்பீஸ்) 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.