Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை

image_0326ca9533.jpg

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ளது தலிபான் அரசு. அதன்படி புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மேலும், தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இதுவரை இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு தலிபான் அரசு தரப்பில் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், “பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதைப் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும். அதனால் நாட்டில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக் கூடாது.

ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையில் தடை செய்யவோ வேண்டும். இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண் பிள்ளைகளுக்கான கல்வி, வேலை, பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பெண்கள்-புழங்கும்-இடங்களில்-ஜன்னல்-வைக்க-தலிபான்-தடை/50-349542

  • கருத்துக்கள உறவுகள்

7 Stylish Saree blouse designs of 2018 - TheBloggersPark

நாங்கள் "பிளவுசிலேயே"... "ஜன்னல்" வைக்கிற ஆட்கள் கண்டியளோ....  😂
தலிபானுக்கு  அந்த யன்னலை மூட... "தில்" இருக்கா? 😂

  • கருத்துக்கள உறவுகள்

சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல்  duel income no kids)  பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் )  கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........!  😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

தலிபான்களின் கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........!  😴

பெண்களின் கருப்பைகள் ஆண்களுக்கு சொந்தமில்லை! குழந்தை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களின் சுதந்திரமாக இருக்கவேண்டும்.

தலிபான்கள் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாகவே பார்க்கின்றார்கள். பெண்களின் கல்வியை, மருத்துவம் உட்பட, முற்றாக அழித்து ஒரு காட்டுமிராண்டி சமூகத்தைக் கட்டமைக்கின்றார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்


என்ன இது    தலிபான்கள் ரொயோட்ரா கார் மோட்டரை வைத்து படம் காட்டியதற்கு ஈழதமிழர்கள் சிலர் வியந்தார்கள் என்றால்..
2025 ம் ஆண்டும் வந்துவிட்டது  ஷாரியா சட்டத்தை கொண்டு தலிபான்கள் காட்டுமிராண்டி உலகை உருவாக்க இவர்களும் யோசிக்கின்றனரே🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல்  duel income no kids)  பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் )  கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........!  😴

நாங்கள் வாழும் சமூகத்தில் எது சரி தவறு என்பதனை ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம், இவை கேள்விக்கிடமின்றிய கோட்பாடாக பின்பற்றுகிறோம், எமது Perception இல் இவை ஆதிக்கம் செலுத்துகிறது, இதே மாதிரியான சமூக சூழலில் வாழ்ந்தமையால் சில விடயங்களை எங்கு வெளிநாடு சென்றாலும் எம்மால் மாற முடிவதில்லை.

நெருப்பு சுடும் என கூறினால் அதனை அனுபவத்தின் பின்னரே உணர்வோம் அல்லது அனுபவஸ்தர்களை பின்பற்றி அதனை தவிர்ப்போம் என இரண்டு தெரிவுகள் உண்டு, முடிவு எமது கையில்.

மற்ற சமூகங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்டும் எம்மால் எம்மிடையே உள்ள குறைபாடுகளை கூட இனங்காண முடியாமல் இருக்கின்றது, இது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒற்றுமை.

மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துபவை, ஆனால் அவை மிகவும் பழமையானவை, அதில் குறைபாடுகள் உள்ளன அதனை நிவர்த்தி செய்ய உள்ள ஒரு வழி! அனைவருக்கும் கல்வி.

எனது அம்மாவின் அம்மா தீவிர சாதி வெறியராக இருந்தார், அதற்கு நேரெதிராக எனது தாயார் இருந்தார், இருவருக்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது! கல்வி (ஆனால் படித்த பலரே எமது சமூகத்தில் சாதியத்தினை தூக்கி பிடிப்பவர்களாகவும், அவ்வாறானவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர், ).

பெண்களின் கல்வி மிக முக்கியமானது, ஒரு பெண்ணிற்கு கல்வியூட்டினால் அதனால் ஒரு முழுகுடும்பமும் பயனடையும், ஒரு சமூகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவுடன் இருந்தால் அந்த சமூகம் மிக சிறந்த சமூகமாகும்.

முன்னர் எமது சமூகத்தில் கூட பெண்கள் கல்வியினை மறுக்கின்ற நிலை காணப்பட்டது (மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அனுக்கூலம் பெறும் தரப்பு பெண்கள் கல்வியினை விரும்புவதில்லை)

ஆனால் பெண்களின் கல்வியினை மறுக்கின்ற சமூகமாக இருக்கும் நிலை மோசமானது, இதனை அவர்கள் சமூக எதிர்காலம் கருதியாவது மாற்ற முன்வரவேண்டும்.

அனைத்திலும் நல்லது கெட்டது உண்டு, அதனை உய்த்தறிந்து தெரிவு செய்ய சிந்திக்க கூடிய கல்வி வேண்டும்.

இந்த வேகமான உலகில் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து சமூக பொருளாத முன்னேற்றத்தினை பெற்ற சமூகமாக  மாற முக்கியமாக கல்வியில் முதலீடு செய்யவேண்டும் என கருதுகிறேன், அந்த கல்வி அனைவருக்கும் கிடைப்பதனை சட்டம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல்  duel income no kids)  பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் )  கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........!  😴

ஒடுக்குமுறையாலும், கட்டுப்பாடுகளாலும் காட்டுச்சட்டங்களாலும் ஒருவரின் சுதந்திரத்திற்கு  அணை போட  முடியாது. மாறாக, சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்ய வேண்டும். தமக்கு எது வேண்டும், எது சரியென. அதற்கு கல்வியும் முழுச்சுதந்திரமும் அளிக்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மண்ணில் பிறந்த பெண்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று மனது கவலைப்பட்டாலும்,  தலீபான்கள் இப்படியே இருப்பது நல்லது என்றும் மனசு சொல்கிறது.

காட்டான்களிடம் கல்வியும் பொருளாதாரமும்  சேர்ந்துவிட்டால் அது இப்போ உலகுக்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைவிட மோசமானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

1970 களில் ஆப்கானிஸ்தான் பெண்களும்,  அவர்களின்  இன்றைய நிலையும் ஒரு ஒப்பீடு. 
 

large.IMG_8417.jpeg.1970e53d3878cdac1ac25f45a80aec15.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் என்பது இவ்வாறாக சுதந்திரமான மனித வாழ்வுக்கு  எதிராக சிந்திக்கும் மனநிலையின் உக்கிரமான வடிவம்( intensiv form) ஆகும்.   ஆனால் தலிபானை எதிர்ககும்  பலரிடம் கூட  அவர்களின் soft version இருப்பதை காணமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

1970 களில் ஆப்கானிஸ்தான் பெண்களும்,  அவர்களின்  இன்றைய நிலையும் ஒரு ஒப்பீடு. 

மதம் செய்த கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

தலிபான்கள் என்பது இவ்வாறாக சுதந்திரமான மனித வாழ்வுக்கு  எதிராக சிந்திக்கும் மனநிலையின் உக்கிரமான வடிவம்( intensiv form) ஆகும்.   ஆனால் தலிபானை எதிர்ககும்  பலரிடம் கூட  அவர்களின் soft version இருப்பதை காணமுடியும். 

இங்கு பிரச்சினை தலிபான் அல்ல, சித்தாந்தம் (மதம்) அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது, அது தன்னை தக்கவைக்க பெண்கல்வி, சுதந்திரம் என்பவற்றை அழிக்க நினைக்கிறது அதன் மூலம் காலதால் உக்கி போன கோட்பாடுகளுக்கு ஏற்படும் சவால்களை தவிர்க்க விரும்புகின்றது, மக்கள் சிந்திக்க கூடாது என்பதே அதன் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு புழுங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க கூடாது என்றால் என்ன அர்த்தம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

1970 களில் ஆப்கானிஸ்தான் பெண்களும்,  அவர்களின்  இன்றைய நிலையும் ஒரு ஒப்பீடு. 

இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.