Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!(வெளிச்சம்:034)
 
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!

— அழகு குணசீலன் —

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக்கு தீர்வில்லாவிட்டாலும் சுமந்திரன் அணிக்கு தீர்வு.

தமிழரசுகட்சியில்/தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் வருகை பலர் நினைப்பது போன்று ஒரு அரசியல் விபத்தோ, அரசியல் தற்செயல் நிகழ்வோ அல்ல. நன்கு திட்டமிட்ட நகர்வு. விடுதலைப்புலிகள் செயலிழக்கும் வரையும் ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரையும் கொக்கு காத்திருந்த கதை. 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக இரா.சம்பந்தன் புலிகளால் நியமிக்கப்பட்ட போதும் மானசீகமாக சம்பந்தன் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை.

ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வு. இதுவே சம்பந்தனது மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் பின்கதவு அரசியலாக இருந்தது. இது “தமிழீழம் ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின்  உள்ளீட்டை தமிழ்மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தகாலம் என்பதால் இதற்கான நியாயப்பாடு தமிழர் அரசியல் தராசில் ஒரு பக்க தராசுத் தட்டை கதிக்கச்செய்தது.

மறு பக்கத்தில்  புலிகள் தவிர்ந்த ஆயுத போராட்ட  அமைப்புக்களின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் இதை மேலும் உறுதிப்படுத்தியது. இந்த அமைப்புக்களும்/கட்சிகளும் தமிழீழத்தை புலிகளின் துப்பாக்கி தங்களை குறி பார்த்ததால் ஆயுத போராட்டத்தில் தாங்களாகவே தோற்றும், தோற்கடிக்கப்பட்டும் இருந்த நிலையில் கொண்ட கொள்கையில் “அரசியல் கற்பு” இவர்களிடமும் இருக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு துடுப்பு  விடுதலைப்புலிகளின் கைகளில் இருந்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் செய்த பிராயச்சித்தம் இவர்களையும்  கூட்டமைப்பில் உள்வாங்கியது. உமா மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதால் சேர்க்கவில்லை போலும். (?). பின்னர் சேர்த்துக்கொண்ட போது விமர்சனங்கள் எழுந்தன.

அதுவரை தலையாட்டும் அரசியல் செய்த கூட்டமைப்பு 2009 மே மாதத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. ஒரு புறம் கிளிநொச்சி சந்திப்புக்களில் ஒன்றும், கொழும்பு சந்திப்புக்களில் இன்னொன்றும் பேசி வந்த இரா.சம்பந்தருக்கும், எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான  கொழும்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டது.  சம்பந்தரின் நம்பிக்கையை  திட்டமிட்ட படி சுமந்திரன் பெற்றார்.

சாத்தியமற்ற தமிழீழம், பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் சூழல்கள் பற்றிய கலந்துரையாடல்களில் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். விளைவு 2010 பாராளுமன்ற தேர்தலில்  முள்ளிவாய்க்கால் வலியோடு தமிழ்மக்கள் பெற்றெடுத்த தேசிய பட்டியல் குழந்தையை  தூக்கி  சாய்மனைக்கதிரை   கொழும்புவாசி சுமந்திரனுக்கு சம்பந்தர் கொடுத்தார்.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை தங்கள் திசைக்கு திருப்ப  புலிகளின் கையில் இருந்த துடுப்பு சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் கைமாறியது. சம்பந்தரின் வயோதிபம் அவருக்கு நம்பிக்கையான ஒரு கையாளைத்தேடியது.  அந்த இடத்தை சம்பந்தர் சுமந்திரனுக்கு கொடுத்தார். மறுபக்கத்தில் சம்பந்தரின் முதுமையை சுமந்திரன் பயன்படுத்தி, கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். 

சம காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு  உள்ளிட்ட பங்காளிகள் கட்சிகளின் பலவீனங்களை சுமந்திரனால் இலகுவாக அடையாளம் கண்டு அரசியல் செய்ய முடிந்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்று முழுதாக சுமந்திரனில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. சம்பந்தர் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களுடனும் கொழும்பு அரசாங்க மாளிகையில் முடங்கிப்போனார். இது ஒரு வகையில் எஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தின் முதுமையை அ.அமிர்தலிங்கம் பயன்படுத்தியதற்கு ஒப்பானது.

இந்த அரசியல் சூழ்நிலையில், சரியாக காலக்கணக்கை பார்த்து வந்த எம்.ஏ. சுமந்திரன்  தருணம் பார்த்து இரா.சம்பந்தர் தலைமை பதவியில்  இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார். இது பல விமர்சனங்களுக்கு வழிவிட்டபோதும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துதல் என்பதில் சாதகமானதாக  நோக்கப்பட்டது. 

ஆனால் சுமந்திரனின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சங்களை நன்கு அறிந்திருந்தவர்கள், சம்பந்தரின் செயற்பாடற்ற பலவீனமான அரசியலை அறிந்திருந்தும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் சுமந்திரனின் அரசியல் தந்திரோபாய உட்கட்சி நகர்வுகளை அறியாதவர்களும், அவரது வாதத்திறமையையும், அரசியல் நியாயப்படுத்தல்களையும் , சர்வதேச உறவுகளையும், பாராளுமன்ற செயற்பாடுகளையும் மட்டும் அறிந்தவர்களும் சுமந்திரனுக்கு பின்னால் ஆதரவாக நின்றனர். 

2010 இல் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல்வேறு காரணங்களுக்காக உடைவுகள் ஏற்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரனின் பங்காளிகள் தனித்து போட்டியிடல் என்ற தொழில்நுட்பம்/பொறிமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை  தமிழரசுக்கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்தது. 

2015, 2020  தேர்தல்களில்  சுமந்திரன் மீதான மக்கள் நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து 2024 இல் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டார். இதற்கு என்னதான் காரணங்களை கூறினாலும் அந்த காரணங்களில்  சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்குண்டு. அதை அவர் சுயவிமர்சனம் செய்ததாக தெரியவில்லை. தனது நிலைப்பாடே சரியென தனித்து ஓடும் சுமந்திரன் இதை செய்வார் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை.

பாராளுமன்ற அரசியலில் சம்பந்தரினதும், பங்காளிக்கட்சிகளினதும் பலவீனங்களை பயன்படுத்தி பாராளுமன்ற குழுவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுமந்திரன் அடுத்த நகர்வாக தமிழரசுகட்சியை  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர களத்தில் இறங்கினார். மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவ பலவீனமும், வயோதிபமும் சம்பந்தர் காலம் போன்று மீண்டும் ஒரு வாய்ப்பை சுமந்திரனுக்கு வழங்கியது.

 கட்சிக்குள் தனக்கு சாதகமாக சி.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம், சாணக்கியன், துரைராசசிங்கம்  போன்றவர்களை  வளைத்துப் போட்ட சுமந்திரன் தலைமை பதவிக்கு போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. வெற்றி பெற்ற சி.சிறிதரன்  பதவியேற்க முடியாதவாறு  வழக்கு தாக்கலானது. இந்த இழுபறியில் மாவை சேனாதிராஜாவை பதவியில் இருந்து நீக்கி பதில் தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில் அதுவும்  தனது சார்பான சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது சுமந்திரனுக்கு வெற்றியே. தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவியும் சுமந்திரனுக்கு உறுதியானது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் -தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாக முடிவுகளாக எடுக்கப்படுகின்ற நிலை தொடர்கிறது. அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுமாயின், ஏதோவொரு வகையில் அதற்கான காலம் கனியும் வரை முடிவுகளை எடுப்பதை சுமந்திரன் தனது அணியின் மூலம் சாதித்து வருவது வழக்கம். 

இதற்கான வாய்ப்பை சுமந்திரன் தேடிச் செல்லவில்லை. மாறாக அது காலடிக்கு வரும் வரையும் காத்திருந்து காரியம் செய்கிறார். அந்த வாய்ப்புக்களை அவரின் காலடியில் கொண்டு குவிப்பவர்களாக இரா.சம்பந்தருடன் மாவை.சேனாதிராஜா, சி.சிறிதரன், பா. அரியநேத்திரன், சி.வி.தவராசா….போன்றவர்கள் இருக்கிறார்கள். அவற்றை சுமந்திரன் அணி பயன்படுத்துகிறது. இதனால் கட்சியில் சுமந்திரனின் அடைவுகள் காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையல்ல.

எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம்.  இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?  

ஒரு சந்தர்ப்பத்தில் “சுமந்திரனை திருத்த முடியாது” என்று சொன்ன கஜேந்திரகுமார், சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் வகிக்கப்  போகின்ற முக்கியத்துவம் என்ன? 

இது பொன்னருக்கு பொல்லு கொடுத்த கதையாக  அமையலாம்……(?).

https://arangamnews.com/?p=11603

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இருக்கும் காலத்தில், அவர் தவறு செய்தாலும் அவரின் மூப்பு காரணமாக அவரை எதிர்க்காமல் மதிப்பளித்தனர் மற்றைய உறுப்பினர். அதனை அவர் தனது திறமை, மற்றவர்களின் இயலாத்தன்மை என தவறாக விளங்கிக்கொண்டார். அதனாலேயே சுமந்திரனுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார் சம்பந்தன். சுமந்திரன் விடும் தவறுகளை மற்றையோர் சுட்டிக்காட்டியபோதும் அவர் தன் அதிகார தொனியை பயன்படுத்தி கடிவாளத்தை சுமந்திரனுக்கு கொடுத்தார். இதனால் இப்போதும் அவர்களால் சுமந்திரனை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. சம்பந்தர் காலத்திலும், அதிகாரம் அவர் கையை மீறிப்போயிருந்தது. வருந்துவதை விட அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பதவிகள் யாவருக்கும் வழங்கப்படவேண்டும், எல்லோரையும் சரிசமமாக மதிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் எப்படி ஒருவர் பேச்சாளர் பதவியை வகிக்க முடியும்? முன்னைய பேச்சாளர்  எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? கட்சி யாப்பின்படி ஒருவர் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம்? ஏன் அந்த கொள்கை பின்பற்றப்படவில்லை? இந்தப்பேச்சாளர் பதவியை தன்வசப்படுத்தி, கட்சிக்கு, இனத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது,  அதே மற்றவர்கள் கருத்து கூறினால், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நிஞாயமானது? இவரை இந்தபதவியிலிருந்து அகற்ற வேண்டும். குரங்கின் கைபூமாலை போன்றது இவர் கட்சியில் எந்தப்பேச்சாளர் பதவியையும் வகிப்பது. அவர் தனது பதவியை துஸ்ப்பிரயோகம், செய்து கட்சிக்கு அபகீர்த்தியை, முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார். கட்சியை தன் சொத்துபோல் ஆள்கிறார். கட்சி யாப்பின்படி அவரை விலத்த  வேண்டும். இதிலிருந்தே இவருக்கு சட்டம் தெரியாது என்பது புலனாகிறது. சட்டம் தெரிந்திருந்தால்; அதற்கு மதிப்பளிக்க தெரிந்திருக்கும். அவ்வாறான ஒருவர், கொள்கைகளை உதாசீனம் செய்து கொண்டு, நீதிமன்றத்திற்கு போவேன் என்று உறுப்பினரை மிரட்டுவதும் நீதிமன்றத்தை அவமதிப்பதுபோல் செயற்படமாட்டார். நீதிமன்றம் என்பது இவரது வீடா, தொட்டதற்கெல்லாம் நீதிமன்றம் இவர்களை விசாரிக்க?  அப்போ கட்சியின் யாப்பு என்பது எதற்காக? மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்க நேரம் காணாமல் நீதிமன்றம் திணறுகிறது. இதற்குள் இவர் சொறிச்சேடடை. இவர் ஒரு சட்டத்தரணி. நீதிமன்றத்தின் பழு, மாண்புதெரியாதா  இவருக்கு? இவர் எவ்வகையில் பார்த்தாலும் நீதிக்கோ, கட்சிக்கோ கட்டுப்படுபவரல்ல. கடிவாளம் இல்லாத குதிரை போல தான் நினைத்தபடி ஓடுபவர். தானே கட்சிக்குள் வலிய வந்து தன் பெயரை இழுக்குப்படுத்திவிட்டார். இனி இவரால் பழைய தொழிலையும் தொடர முடியாது. கட்சிக்கு பிடித்த ச***. இவரிடமிருந்து கட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும்.    

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கட்டுரை என்பதைவிட அவதூறு  என்பதே பொருத்தம்.  ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட சமூக ஊடகங்கள் நிறமிழந்து, வலுவிழந்து  அவதூறுக் கட்டுரைகளில் வந்து நொந்து நிற்கின்றன. 

ஈனத் தமிழினம் எதற்கும் சோரம் போகும் என்பதற்கு இதுந்தக் கட்டுரையாளர் ஒரு உதாரணம். 

😏

39 minutes ago, satan said:

உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும், உந்தப் புதிய ஆண்டில். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

கட்டுரை என்பதைவிட அவதூறு  என்பதே பொருத்தம்.  ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட சமூக ஊடகங்கள் நிறமிழந்து, வலுவிழந்து  அவதூறுக் கட்டுரைகளில் வந்து நொந்து நிற்கின்றன. 

அப்போ சுமந்திரன் வலுவாக இருக்கிறாரோ? நீங்கள் நிதர்சனத்தை ஏற்றிக்கொள்ளும் ஆளல்ல என்பது எல்லோரும் தெரிந்த விடயம். தேர்தல் முடிவுகள் உங்கள் தலையில் குட்டிச்சொல்லியும் புரியவில்லை என்பதால், உங்கள் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

அப்போ சுமந்திரன் வலுவாக இருக்கிறாரோ? நீங்கள் நிதர்சனத்தை ஏற்றிக்கொள்ளும் ஆளல்ல என்பது எல்லோரும் தெரிந்த விடயம். தேர்தல் முடிவுகள் உங்கள் தலையில் குட்டிச்சொல்லியும் புரியவில்லை என்பதால், உங்கள் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை. 

விபு க்களை நெஞ்சங்களில் இருத்தி கொண்டாடிய அதே  டமிழினம்தான் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்தது,  JVP க்கும் வாக்களித்தது. 

இப்போது இந்தியாவிற்கு கால் கழுவுகிறது. 

அதனாலதான் ஈன டMழினம் என்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

விபு க்களை நெஞ்சங்களில் இருத்தி கொண்டாடிய அதே  டமிழினம்தான் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்தது,  JVP க்கும் வாக்களித்தது. 

இப்போது இந்தியாவிற்கு கால் கழுவுகிறது. 

அதனாலதான் ஈன டMழினம் என்கிறேன். 

சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க மக்களை தூண்டியது யார்? யாரால் மக்கள் ஜே .வி .பியை தெரிந்தெடுத்தனர் என்பதை எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியவில்லையென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவுக்கு தமிழினம் கால் கழுவுவதை இந்தியாவுடன் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ஒரு பகுதி ஈனத் டமிழினம் இந்தியக் கோ மூத்ரா குடிக்கிறது  என்றவுடன் சாத்தானுக்குச் சுட்டுவிட்டதோ ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

ஈனத் டமிழினம் இந்தியக் கோ மூத்ரா குடிக்கிறது  என்றவுடன் சாத்தானுக்குச் சுட்டுவிட்டதோ ? 

ஐயா! இந்தியாவை சொன்னவுடன் கோபமடைவது நீங்கள் தான். நான் உங்கள் கேள்விக்கான பதிலை மட்டுந்தான் கொடுத்தேன். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நான் ஒன்றும் இட்டுக்கட்டி சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாவிட்டால் அமைதியாக இருங்கள், இங்கு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதற்காக என்மீது வார்த்தை துஸ்பிரயோகம் வேண்டாம். இது உங்கள் பதிலளிக்கும் முறை, இங்கு யாரும் அதை ரசிப்பதில்லை என்பதை பண்புடன் எடுத்தியம்புகிறேன். கால் கழுவுகிறதென்கிறீர்கள், ஏதோ குடிப்பதென்கிறீர்கள். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்களோ? 

இரவல் புத்தியில் யோசிக்காதீர்கள் சாத். 

சுமந்திரனை வெளியேற்றிவிட்டால் தமிழீழம் கிடைக்கும்  என்பது கோ மூத்ராக்களின் வாதம். சுமந்திரனை கட்சியை விட்டு வெளியேற்றினால் இனப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்கிற தங்கள் வாதம் கோமூத்ரா குடித்தால் புற்றுநோய் வராது என்பது போல. .......🤣

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அவதூறுக் கட்டுரையில் சுமந்திரனை வாருகிற சாட்டில் தந்தை செல்வாவையும் தலைவரையும்  ஒருமையில் விளித்து மெல்லியதாக  சொறிந்திருப்பதை அவதானிக்கவும். 

"ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் ...."

""தமிழீழம்ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின்,..."

""சாத்தியமற்ற தமிழீழம்,..   ""

""சும் கடுக்காய்"" குடித்த நம்மாட்களினால்  கட்டுரையாளரின் நோக்கம் என்னவென்று   கவனிக்க முடியாது. 

😏

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கப்பித்தான்,

அழகு குணசீலன் புள்ளையானின் அபிமானி! அவர் அப்படி இப்படி எழுதினாலும், சுமந்திரன் விசயத்தில தெளிவாத்தானே இருக்கார்.

நீங்கள் சுமந்திரன் அபிமானி என்பதால் பொங்குகின்றதாக்கும்!😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் தமிழ் அரசியலுக்கு வராவிட்டிருந்தால்.....!

இலங்கை அரசியல் இன்று வேறு விதமாக இருந்திருக்கும். அனுரவும் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கப்பித்தான்,

அழகு குணசீலன் புள்ளையானின் அபிமானி! அவர் அப்படி இப்படி எழுதினாலும், சுமந்திரன் விசயத்தில தெளிவாத்தானே இருக்கார்.

நீங்கள் சுமந்திரன் அபிமானி என்பதால் பொங்குகின்றதாக்கும்!😁

கிருபன், 

சுமந்திரனை தேர்தலில் தோல்வியுற வைத்தாயிற்று. அடுத்தது அவரை TNA யை விட்டு வெளியேற்றுவது......அதன் பின்னர்,...? 

உந்த மிச்சம் மீதியிருக்கும்  TNA யினர் எதனை எடுத்துத் தருவீனம்,.... டமிழீழமா? 

சுமந்திரனை வெளியேற்ற இத்தனை குத்துக்கரணங்களைப் போடுபவர்கள் ஏன் போடுகிறார்கள் என்பதை  சொந்தப் புத்தியுள்ள எவரும் ஊகித்தறிவது கடினம் அல்ல. 

@கிருபன்

குறிப்பு: கப்பித்தான் ஒருபோதும் சுமந்திரனோ அல்லது வேறு எந்த ஒரு   தனி மனிதனையும்  துதிபாடும் ஒருவன் அல்ல. விபு க்களைக் கனம் செய்வதற்கு உள்ள ஒரே காரணம் அவர்களின் தூய நோக்கமும் அர்ப்பணிப்பும்தான். மற்றும்படி எத்தனை துரோகங்களை டக்கியர்  செய்தாலும்  உங்களைப்போன்று டக்கியரைத்  துதிபாடுபவன் அல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சுமந்திரனை தேர்தலில் தோல்வியுற வைத்தாயிற்று. அடுத்தது அவரை TNA யை விட்டு வெளியேற்றுவது......அதன் பின்னர்,...? 

சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும், தமிழரசின் மத்திய செயற்குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொதுக்குழுவால் தலைவராகத் தெரிவுசெய்ய்பட்ட சிறிதரனை ஓரங்கட்டி தனிமைப்படுத்துகின்றார். சுமந்திரனின் இந்த சுத்துமாத்து வேலைகள் தமிழர்களுக்கு ஓர் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவா அல்லது அவரது சுயநல தேவைகளுக்கா என்பதில் எனக்கு தெளிவு நன்றாக இருக்கின்றது😎

தமிழர்களுக்கு நடந்தது இனவழிப்பு என்று வாதிட விரும்பாத சுமந்திரன் ஒரு போதும் தமிழர் நலனை முன்னெடுக்கப்போவதில்லை. தமிழரசுக் கட்சியை ஒட்டுமொத்தமாக தமிழர் புறக்கணிக்கவேண்டும், ஆனால் பிற தேசியக் கட்சிகள், சைக்கிள் கட்சி உட்பட, இன்னும் மோசமானவை! இதனால் மக்கள் இன்னும் பல “அர்ச்சுனா”க்களை தெரிவு செய்தாலும் பரவாயில்லைப் போலுள்ளது!

9 hours ago, Kapithan said:

மற்றும்படி எத்தனை துரோகங்களை டக்கியர்  செய்தாலும்  உங்களைப்போன்று டக்கியரைத்  துதிபாடுபவன் அல்ல. 

டக்ளஸுக்கு துதிபாடுவன் என்று கண்டுபிடித்த உங்கள் கெட்டித்தனத்தைப் பார்த்து உருண்டு பிரண்டு சிரிக்கின்றேன்😂🤣

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1) சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும், தமிழரசின் மத்திய செயற்குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொதுக்குழுவால் தலைவராகத் தெரிவுசெய்ய்பட்ட சிறிதரனை ஓரங்கட்டி தனிமைப்படுத்துகின்றார். சுமந்திரனின் இந்த சுத்துமாத்து வேலைகள் தமிழர்களுக்கு ஓர் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவா அல்லது அவரது சுயநல தேவைகளுக்கா என்பதில் எனக்கு தெளிவு நன்றாக இருக்கின்றது😎

2) தமிழர்களுக்கு நடந்தது இனவழிப்பு என்று வாதிட விரும்பாத சுமந்திரன் ஒரு போதும் தமிழர் நலனை முன்னெடுக்கப்போவதில்லை. தமிழரசுக் கட்சியை ஒட்டுமொத்தமாக தமிழர் புறக்கணிக்கவேண்டும், ஆனால் பிற தேசியக் கட்சிகள், சைக்கிள் கட்சி உட்பட, இன்னும் மோசமானவை! இதனால் மக்கள் இன்னும் பல “அர்ச்சுனா”க்களை தெரிவு செய்தாலும் பரவாயில்லைப் போலுள்ளது!

3) டக்ளஸுக்கு துதிபாடுவன் என்று கண்டுபிடித்த உங்கள் கெட்டித்தனத்தைப் பார்த்து உருண்டு பிரண்டு சிரிக்கின்றேன்😂🤣

spacer.png

1) சுமந்திரன் ஒரு  சாராசரி அரசியல்வாதி என்பதில் தெளிவுடன் இருக்கும் தாங்கள் மற்றைய அரசியல்வாதிகள் தொடர்பிலும் தெளிவு இருந்திருக்க வேண்டுமே? 

2) தமிழருக்கு நடந்தது இனவழிப்புத்தான் என்பதை செயல்முறைப்படி நிரூபிப்பது கடினம் என்பது சுமந்திரனது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டோடு ஒத்துவராத மற்றவர்கள், குறிப்பாகப் புலன்பெயர் அதி தீவிர தமில் தேசிய வியாபாரிகள் இனவழிப்புத்தான் நடந்தது என்று நிரூபிப்பதற்கு என்ன செய்தார்கள்? பாடகர் சிறீநிவாசிற்கு முட்டையடித்தோம் என்பீர்களா?  போங்கையா போங்கோ,.....போய் வேற வேலையிருந்தால் பாருங்கள். சுமந்திரனது நிலைப்பாட்டுடன் ஒத்துவராத TNA  யினர் அவரை வெளியேற்றிவிட்டு இனவழிப்பு என்பதை நிரூபிக்க வேண்டியதுதானே? ஏன்  செய்யவில்லை? சாராய BAR license எடுப்பதில் பிசியோ?  😏

TNA யிலிருந்து சுமந்திரனையே வெளியேற்ற முடியாத ஆட்கள்தான் இனவழிப்பு என்பதை நிரூபிக்கப் போகிறார்கள் ? 

எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே மட்டை ஒரே குட்டை என்று அறிந்திருக்கும் தாங்கள் சுமந்திரனை மட்டும் ஏன்  குறிவைக்கிறார்கள் என்பதை அறியாதது வியப்பு  😁

3) மண்டையை மறைத்த தாங்கள், கொண்டையிருப்பதை மறந்துவிட்டீர்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

தமிழருக்கு நடந்தது இனவழிப்புத்தான் என்பதை செயல்முறைப்படி நிரூபிப்பது கடினம் என்பது சுமந்திரனது நிலைப்பாடு.

அப்ப கனடா அரசுக்கு புரிந்தது சுத்து மாத்து சுமத்திரனுக்கு விளங்கவில்லை சிலவேளை சாணியில் முக்கி எடுத்த செருப்பால் சுமத்திரனுக்கு  தமிழ் மக்கள் திரத்தி திரத்தி அடி போட்டு இருந்தால் விளங்கி இருக்கும் .

@Kapithan கடந்த தேர்தலில் தமிழ் சனம் நல்லதொரு முடிவை கொடுத்துள்ளார்கள் .இனி சுத்து மாத்து வெல்வது என்றால் கள்ள வோட்டுக்கள் மூலமே இல்லை பின் கதவு தான் அப்படி வந்தாலும் முன்பு போல் சுத்து மாத்து பண்ணினால் தமிழ் சனம் பொறுமையின் எல்லைக்கு சென்று விடுவார்கள் .6௦ வயதாகி விட்டது ஓய்வுக்கு போக சொல்லுங்க .  

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் ஜீ நீங்க டக்கியரின் ஆளென்டு தெரியாமல் போச்சே!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

கனேடிய அரசுக்கு புரிந்தது  என்னவென்று கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா பெருஸ்? 

அல்லது சுமந்திரன் தவிர்ந்த பிற அரசியல்வாதிகள் எல்லோரும் கையாலாகாதவர்களா? அவர்களாவது தமிழின அழிப்பு என்பதை நிறுவலாமே? மற்றைய அரசியல்வாதிகள் Bar License எடுத்து விற்பார்கள், சுமந்திரன் மட்டும் தமிழின அழிப்பு என்பதை நிறுவ வேண்டும் என்கிறீர்களா? 

😁

Bar License என்றவுடன் இங்கே கூட்டம் கூடப்போகிறது,..🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அல்லது சுமந்திரன் தவிர்ந்த பிற அரசியல்வாதிகள் எல்லோரும் கையாலாகாதவர்களா? அவர்களாவது தமிழின அழிப்பு என்பதை நிறுவலாமே? மற்றைய அரசியல்வாதிகள் Bar License எடுத்து விற்பார்கள், சுமந்திரன் மட்டும் தமிழின அழிப்பு என்பதை நிறுவ வேண்டும் என்கிறீர்களா

சுமந்திரன் 2010 இல் எம்பியாக வந்த புதிதிலேயே தனது திறமைையை தமிழர்களுக்காக நிரூபிக்க ஐ.நா.சபையூடாக நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இதைத் தவறவிட்டதுமின்றி அந்த சந்தர்ப்பத்தை சிங்களத்துக்கு சார்பாக காயை நகர்த்தியதிலிருந்தே அவர் மீதான சந்தேகங்களும் குற்றச் சாட்டுக்களும் எழத் தொடங்கி விட்டன.

அடுத்தடுத்து அவர் செய்த வேலைகளும் தமிழர்களின் நலன்களை விட சிங்களத்துக்கே சார்பானதாக இருந்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

கனேடிய அரசுக்கு புரிந்தது  என்னவென்று கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா பெருஸ்? 

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day:

“Fifteen years ago, the quarter-century-long armed conflict in Sri Lanka came to an end. Tens of thousands of Tamils tragically lost their lives, including at the massacre in Mullivaikal. To this day, many more remain missing, injured, or displaced. Today, we honour the victims, survivors, and their loved ones, who live with the lasting pain caused by this senseless violence.

“Two years ago, Canada’s Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day. We will always advocate for justice and accountability for the crimes committed during the conflict, as well as for the hardships faced by all in Sri Lanka. In 2023, we imposed sanctions against four former Sri Lankan government officials in response to their violations of human rights in the country during the armed conflict.

“Canada is a strong defender of human rights in Sri Lanka. We are advancing our work with international partners to fully implement the United Nations Human Rights Council resolution adopted in October 2022, which calls for greater reconciliation, justice, accountability, and human rights in Sri Lanka. And we continue to urge the Government of Sri Lanka to respect freedom of religion, belief, and pluralism – essential values to build lasting peace.

“Today reminds us of our shared responsibility to stand up for human rights, justice, and accountability – values that cannot be taken for granted. Canada will never stop its work to protect human rights across the world. On behalf of the Government of Canada, I invite Canadians to join in honouring the victims of the armed conflict in Sri Lanka. Together, let us reflect on how we can foster a better, more inclusive, and more peaceful world for everyone.”

https://www.pm.gc.ca/en/news/statements/2024/05/18/statement-prime-minister-trudeau-on-tamil-genocide-remembrance-day

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

இதில் உங்களுக்குப் புரிந்தது என்ன? 

37 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் 2010 இல் எம்பியாக வந்த புதிதிலேயே தனது திறமைையை தமிழர்களுக்காக நிரூபிக்க ஐ.நா.சபையூடாக நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இதைத் தவறவிட்டதுமின்றி அந்த சந்தர்ப்பத்தை சிங்களத்துக்கு சார்பாக காயை நகர்த்தியதிலிருந்தே அவர் மீதான சந்தேகங்களும் குற்றச் சாட்டுக்களும் எழத் தொடங்கி விட்டன.

அடுத்தடுத்து அவர் செய்த வேலைகளும் தமிழர்களின் நலன்களை விட சிங்களத்துக்கே சார்பானதாக இருந்தது.
 
UN என்பது நட்டுக்களன்ற தமிழீழ அரசாங்கம் அல்ல  எதனையும் எப்படியும் கதைப்பதற்கு. அங்கே ஆதாரங்கள் மட்டும்தான் வேலை செய்யும். அதற்கடுத்தது இராசதந்திரம். 

உலகத்தில் எத்தனை இலட்சம் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் தவிர்ந்த மற்றயவர்கள் எல்லோரும் எங்கே? 

சுமந்திரன் மட்டும்தானா தமிழர் மத்தியிலுள்ள ஒரே ஒரு அரசியல்வாதி? 

மற்றவர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? 

(இதுவரை சுமந்திரனை TNA யை விட்டே வெளியேற்ற முடியவில்லை. இவர்கள் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று நம்பவா சொல்கிறீர்கள்? )

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

இதில் உங்களுக்குப் புரிந்தது என்ன? 

உங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்க என்னால் முடியாது .

கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.

இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது.

கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை நேரில் அழைத்து, கனடா அரசின் அறிவிப்பை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.

இலங்கை எம்.பி உதய கம்மன்பில இந்த விஷயத்தில் கனடாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/ck7k07g900ro

பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் எல்லோருடனும் பேசுவதில்லை.அந்ததந்த நாட்டு பெரும்பான்மையாக இரக்கும் எம்பிக்களிடமே பேசுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

2010இல் என்ன நடந்தது என்று உலகறிந்த விடயமே?

பொறுப்புக் கூறலை இலங்கை அரசின் கைகளிலேயே தள்ளிவிட்டதில் கூட்டணியின் பங்கு என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@கிருபன் ஜீ நீங்க டக்கியரின் ஆளென்டு தெரியாமல் போச்சே!

பேசாமல் ஊருக்குப் போய் மணல் வியாபாரம் செய்திருக்கலாம் என்று இப்ப நினைக்கின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்க என்னால் முடியாது .

கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.

இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது.

கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை நேரில் அழைத்து, கனடா அரசின் அறிவிப்பை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.

இலங்கை எம்.பி உதய கம்மன்பில இந்த விஷயத்தில் கனடாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/ck7k07g900ro

பயன் என்ன? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.