Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தாம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். 

இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

https://www.hirunews.lk/tamil/392659/இளங்குமரன்-mpக்கு-எதிராக-யாழ்ப்பாணம்-காவல்நிலையத்தில்-முறைப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடு அருவாளை!!!

  • கருத்துக்கள உறவுகள்

தாதுப்பொருள் மற்றும் கனிமம் உள்ளடங்கலாக இயற்கை வளங்கள் எதுவானாலும் அவற்றை  அகழ்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் வேண்டிய அரசின் அனுமதி குறித்த உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கும்  ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு அனுப்புவதற்கும் தனித்தனியான அனுமதிகள் உண்டு. இவ்வாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் அது செல்லும் பாதையில் சோதனைக்கு ஆயத்தமாக உரிய அனுமதி பத்திரங்களின் பிரதிகள் வாகனத்தின் சாரதியின் பொறுப்பில் பாதுகாத்து வைக்கப்படவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
 
472359204_8504260859679553_4938467680667
 
472314014_8504261006346205_6781381926613
 
472671155_8504261123012860_8264305368348
 
 
 
04.01.2025
#சட்ட ரீதியாகவே நாங்கள் #சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறோம்!!
#இளங்குமரனுக்கு சட்டத்தை கையில் எடுக்க முடியாது - #தொழிலதிபர் பரபரப்பு #குற்றச்சாட்டு!!
சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் - சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர்(jaffna #city #hardware)தெரிவிப்பு!
சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் செயற்பாடாக இருப்பது போன்று உணர்வதாக வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -
தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சட்டரீதியான தரவுகளை அறியாது, உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுதும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இதனால் நேரடியாக பயன்பெறும் 180 தொழிலாளர்களுடன் 68 ஆண்டுகள் பாரம்பரியத்தை கெண்டுள்ள எமது வியாபார நிறுவனத்தின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் சேறுபூசப்பட்டுள்ளது.
இதையடுத்து நாம் நாளுடன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
கடந்த வியாழனன்று சாவகச்சேரி பொலிஸ் எல்லைக்குள் சுண்ணக்கல் சல்லியை திருமலைக்கு கொண்டுசென்ற தமது பார ஊர்தியை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குறுக்கான நிறுத்தி இடைமறித்திருந்தார்.
அத்துடன் எமது நிறுவனத்தின் வாகன சாரதியிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியதுடன் கொண்டு சென்ற பொருளை மூடியிருந்த போர்வையையையும் கிழித்து அடாவடித்தனம் செய்துள்ளார்.
ஆனால் சாரதி தம்மிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கறித்த சுண்ணக்கல் சட்டடரீதியாகவெ கொண்டு செல்லப்படுகின்றது என எடுத்துக் கூறியும் நாடாளுமன்ற உறுப்பினர் அது சட்டவிரோதம் என கூறி எமது பார ஊர்தி கொண்டுசென்ற சுண்ணக் கல்லுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேநேரம் குறித்த வியாபாரத்தை நாம் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் இந்த சுண்ணக்கல் சல்லிகளை கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக கறித்த சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்தும் வருகின்றோம்.
கடந்த காலங்களிலும் எமது நிறுவனத்தின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவாரால் சுமத்தப்பட்டது.
ஆனாலும் அன்றிருந்த ஒருங்கிணைப்பு குழு நிர்வாகம் எமது வியாபார நடவடிக்கைகள் சரியானதென்று ஏற்றுக்கொண்டு அதை சட்டரீதியாக முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்தது.
இதேநேரம் நாம் அகழப்படும் சுண்ணக்கல்லை நேரடியாக வியாபாரம் மேற்கொள்ளவில்லை.
வலிவடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியில் இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களை தற்போது மக்கள் மீளவும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிலங்களில் இந்த சுண்ணக்கல் பாறைகள் அகழப்பட வேண்டியதும் கட்டாயமாக இருக்கின்றது.
இதனால் குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் அனுமதியை பெற்று கனரக வாகனங்கள் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப சுண்ணக் கற்களை பெரும் செலவு கொடுத்து அகழ்ந்து வருகின்றனர்.
இதேநேரம் இந்த சுண்ணக்கல் அகழ்வை அப்பகுதிகளை சேர்ந்த பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாகவே காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறு அகழப்படும் சுண்ணக் கற்களை காணி உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றார்கள்.
அதை அப்பகுதியில் இருக்கும் 65 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் (“கிறெசர்”) தமது தொழில் நடவடிக்கைக்கான அனைத்து அனுமதிகளையும் துறைசார் தரப்பினரிடம் பெற்று தமது ஆலைகளுக்கு கொண்டு சென்று உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றார்கள்.
இவ்வாறு விற்பனை செய்யும் சுண்ணக்கல் சல்லிகளையே நாம் கொள்வனவு செய்து திருகோணமலையிலுள்ள சிமெந்து ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றோம்.
அத்துடன் குறித்த சுண்ணக்கல் சல்லியை வீதியால் கொண்டு செல்லவோ அல்லது வியாபாரம் செய்யவோ எதுவித அனுமதியும் பெற தேவையில்லை என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக எமது வாகனங்கள் இரு தடவை நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு அது சட்டரீதியானதென உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விடயம் தொடர்பில் ஆராயாமால் அல்லது ஏதொவொரு காரணத்தை முன்னிறுத்தி இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார் என உணர முடிகின்றது.
இவரது இந்த செயற்பாடானது யாழ் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களையும் முதலீட்டாளர்களையும் அச்சுறுத்துவது போன்றும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் தரப்பினர் கைவிட்டு முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் ஊக்குகவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
All reactio
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் சட்டப்பிரச்சனையைத் தீர்க்க சுமந்திரன் ஐயா தான் முன் வரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

"கிளீன் சிறிலங்கா " என்று அவரின்ட தோழர் அனுரா சொன்னதை தம்பி தப்பா புரிந்து விட்டாரோ? 

8 minutes ago, RishiK said:

இவர்களின் சட்டப்பிரச்சனையைத் தீர்க்க சுமந்திரன் ஐயா தான் முன் வரவேண்டும். 

அவர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதில் அறிக்கை போர் நடத்துவதால் இப்படியான் சில்லறை விடய்ங்களுக்கு அஜாராக மாட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

"கிளீன் சிறிலங்கா " என்று அவரின்ட தோழர் அனுரா சொன்னதை தம்பி தப்பா புரிந்து விட்டாரோ? 

அவர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதில் அறிக்கை போர் நடத்துவதால் இப்படியான் சில்லறை விடய்ங்களுக்கு அஜாராக மாட்டார்..

அப்படி என்றால் சயந்தனையாவது அனுப்பி வைக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏதாவது செய்தால் தான் தன்னை அநுரகுமார திசாநாயக்கவின் தமிழ் தளபதியின் அதிரடி நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்கள் செய்தி போடுவார்கள் என்று நினைத்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஏதாவது செய்தால் தான் தன்னை அநுரகுமார திசாநாயக்கவின் தமிழ் தளபதியின் அதிரடி நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்கள் செய்தி போடுவார்கள் என்று நினைத்திருப்பார்

"கொமாண்டோ பாணியில் மறைந்திருந்து கரந்தடி தாக்குதல்.".. 

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமண் ஏத்துறவங்களுக்கு ஒரு முடிவுகட்டவேணும்.. அதவிட்டிட்டு அனுமதிபெற்று ஏத்துற சுண்ணக்கல் காறங்களோட மல்லுக்கட்டிக்கொண்டிக்கொண்டு.. 

கள்ளமண் ஏத்துறவங்களாலை அக்சிடெண்ட் பட்டு கால்முறிஞ்சு 2 மாதமா அப்பா படுத்தபடுக்கை.. எத்தினை சின்னப்பிள்ளைகளை குடும்பஸ்த்தர்களை கொண்டு குவிக்கிறாங்கள் அக்சிடெண்ட்பண்ணி கள்ளமண் ஏத்துறவங்கள்.. முதல்ல அதை தடுக்க நடவடிக்கை எடுக்கட்டும்..

முதல்ல உள்ளூர் கள்ளனை புடிக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முறையிடாமல் இளங்குமரன் அங்கு வந்திருக்க நிஞாயமில்லை. அதோடு குறிப்பட்ட அளவிற்கு அனுமதி பெற்று, அதற்கு மேலும் சுரண்டுபவர்களும் உண்டு. அதற்கு முறையான விசாரணை வேண்டும். கள்ளன் யார், நிஜமானவன் யார் என்று எவருக்கும் தெரியாது. சரியாக ஆராய்ந்து உண்மையை கண்டறிவது சம்பந்தப்பட்டவரின் கடமை. இதை பெரிய விடயமாக்கி பிரபல்யம் தேடுவதால் களவாக செயற்படுவோர்க்கு தைரியம் அளிக்கப்படுகிறது. அதோடு இளங்குமரன் போன்றோர் இனிமேல் சமூக விரோத செயலை கண்டிக்க தயங்குவர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, RishiK said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்ற தோழர் அணுராவின் சிந்தனையினால்  இந்த சின்ன தோழர் இதை செய்கின்றார் போல ..

1980/81 களில் எங்கன்ட ஆயுத தூக்கிய இடதுசாரிகள் ஒரு கேள்வி கேட்டார்கள் யார் முதலாளிகள் /முதலாளித்துவம் என்றால் என்ன?முதலாளித்துவத்தை ஒழிக்க வேணும் ,அப்ப தான் புரட்சிகர சமதர்ம சமுதாயம் உருவாகும்  எண்டு? 
நான் முந்திரிகை கொட்டை மாதிரி ஊரில் உள்ள கடைக்காரரின் பெயரை சொன்னேன்...அவர் போன்றவர்கள் சின்ன முதலாளிகள் இவரை விட பெரிய முதலாளி அமெரிக்கா என்றார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை ... தலையை ஆட்டிவிட்டேன் ..இரண்டு மூன்று நாட்களின் பின் அந்த ஊர் முதலாளியின் கடையை ஒரு குழு கொள்ளையடித்தது ..அதற்கு அந்த குழு விளக்கம் கொடுத்திருந்தது... தொழிலாளர் புரட்சி ஆரம்பம் எண்டு ....

அன்று முதலாளித்துவ பாடம் எடுத்த நண்பர்  அமெரிக்காவில் பெரிய முதலாளி...உஷ் ..உஷ் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, பல அசல், நசல் உண்டு. மக்கள் அது சார்ந்த திணைக்களங்களில் முறையிடுகிறார்கள். ஆனால் பலன் பூச்சியம். பனை, இன்னும் மரங்கள் தறிப்பதற்கு அனுமதி பெற்றே செய்யவேண்டும். சிலர் அனுமதி பெற்று செய்கிறார்கள். சிலர் அப்படியல்ல. பெற்றவர்களும் பத்து மரங்களுக்கு அனுமதி பெற்றிருப்பார்கள், ஆனால் தறிப்பது இருபது மரங்கள். பத்து மரம் எங்கே தறிக்கப்போகிறோமென குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அடுத்த பத்து மரங்கள் வெளிநாடுகளில் வசிப்பவரின் காணிகளில், அல்லது காணியிலிருந்து  தூரத்தில் வசிப்பவர்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே கள்ள மரம் தறித்து ஏற்றிக்கொண்டு போகிறார்கள். கேட்டால்; அவர்களிடம் அனுமதியிருக்கும். அங்கே நடந்த மோசடிகளை ஆராய முற்படுவதில்லை. இந்த போலீஸ்காரர் பிடித்தால்; அவர்கள் கைலஞ்சம் கொடுப்பார்கள், சரி மாத்தையா, மேலும் உதவி வேணுமெண்டால் சொல்லுங்க என்று மரியாதையாக அனுப்பி வைப்பார்கள். அது ஏன், போத்தல் நீர் அடைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அடி ஆழத்திற்கு மேல் நீர் எடுக்க முடியாதென அனுமதியிருக்கும். ஆனால் அதற்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். எங்கும் எதிலும் ஊழல், ஏமாற்று. அதிகாரிகளுக்கு தெரியும், தாங்கள் கொடுக்கும் அனுமதியை வைத்து மோசடி செய்கிறார்கள் என்று. ஆனால்  அதை சரி பார்ப்பதில்லை. இப்படி ஏதும் பிரச்சினை வந்தால் மட்டும் உசாராவார்கள். தாங்கள் கொடுத்த அனுமதிப்பத்திரம், சரியாக கையாளப்படவில்லை அல்லது தான் சரியாக அதனை பரிசோதிக்கவில்லை என்பதை எந்த அதிகாரியாவது ஏற்று உண்மையை பேசுவாரா? பேசினால் அவர் உத்தியோகம் என்னாவது? நீதிமன்றங்களிலேயே பல பிழையான தகவல்களை சட்டத்தரணியின் விவாதத்தின் மூலம் வெற்றியடைந்து விடுகிறார்கள். இது எல்லோருக்குமான நடைமுறை. இதை இளங்குமரன் தனக்கு வந்த முறைப்பாட்டின் படி தடுத்திருக்கிறார். அதற்கு காட்டப்படும் முக்கியத்துவம், கொடுக்கப்படும் காரணங்கள் தங்களை பிரபல்யப்படுத்துவதும், அரசியல் சாயம் பூசுவதும் நல்லதல்ல. இன்றைய நடைமுறைகள், அதிகாரங்கள், அறிந்தவர்; தன்பக்க நிஞாயத்தை நிரூபித்து விட்டு தன் வேலையில் இறங்கிவிடுவார். நாளாந்தம் எத்தனையோ இணைய வழி சேறடிப்புகள், நடந்துதான் கொண்டிருக்கிறது. இதனால் சிங்களவர் வந்துவிடுவார்களாம். அவர் வைத்திருப்பதே சிங்கள சாரதி. தொழிலாளர் பிற இனத்தை சார்ந்தவர்கள். இப்போ, இது ஒரு நாகரிகம். கட்சி தொடங்குவது,  நீதிமன்றம் போவது, தங்களின் செல்வாக்கை காட்டுவது. இப்படி இதை பெரிது படுத்தினால்; தாக்கப்படுவது ஏழை எளிய மக்கள். யாரும் அநீதியை தட்டிக்கேட்க முன்வரார்.      

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அந்த ஊர் முதலாளியின் கடையை ஒரு குழு கொள்ளையடித்தது ..அதற்கு அந்த குழு விளக்கம் கொடுத்திருந்தது... தொழிலாளர் புரட்சி ஆரம்பம் எண்டு ....

அன்று முதலாளித்துவ பாடம் எடுத்த நண்பர்  அமெரிக்காவில் பெரிய முதலாளி...உஷ் ..உஷ் 

உண்மையை அழகாக சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text

 

யாழ்ப்பாணத்தின் அனுமதியுடன் சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம் என்று சொன்னால்.. நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் வரவேற்று நாசம் செய்கிறோம் என்று அர்த்தம். 

அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். 

யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விஷேச புவியியல் அமைப்புக் காரணமாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும்.

நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.

முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். 

இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளுக்குள் வந்தால் பிறகு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி கதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! 

ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு.

Sivakumar Subramaniam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்ணக்கல் விவகாரம் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை!

adminJanuary 5, 2025
Police-Jaffna-1170x658.jpg

யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறை  மா அதிபர் காளிங்க ஜயசிங்க தெரிவித்தார்.

சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு காவற்துறையினரால்  கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதிப் காவற்துறை  மா அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுண்ணக்கல் அகழ்வு என்பது காவற்துறையினருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அது கனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பில் கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன் வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2025/209946/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-3039.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

IMG-3039.jpg

சுண்ணக்கல்லை தூளாக்கி சல்லி என்று  சட்டத்தை  ஏமாற்றும் செயலுக்கு எதிராக ஏற்கனவே சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. சுண்ணக்கல்லை கொன்கிறீட் கல்லு போன்ற முடிவுப்பொருட்களாக மாத்திரமே அனுமதியிலாமல் கொண்டு செல்லப்பட முடியும் என்று இந்த சுற்று நிருபம் சொல்கின்றது. 

தமிழாக்கம்
சுண்ணாம்புக் கல்லின் நொறுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான பிரச்சினை 
இது மேலே குறிப்பிட்ட விஷயத்தைக் குறிக்கிறது. 

06.05.2024 தேதியிட்ட எங்கள் கடிதத்தின் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபடி, நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான போக்குவரத்து உரிமம் பெறுவது அவசியம். (குறிப்பிட்ட கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது) 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் எண் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் எண் 33 1992 இன் பிரிவு 28 (1) இன் படி, எந்த நபரும் ஆய்வு, சுரங்கம், போக்குவரத்து, செயல்முறை, வர்த்தகம் அல்லது இந்தச் சட்டத்தின் விதிகள் மற்றும் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் அல்லது வேறுவிதமாக அல்லாமல் எந்தவொரு பொருளையும் ஏற்றுமதி செய்யலாம் மேலும் பிரிவு 28 (ii) இன் கீழ், அரை-உருவாக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு போக்குவரத்து உரிமம் தேவையில்லை. ஆனால் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு அரை முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாக அடையாளம் காண முடியாது.

Kumaravelu Ganesan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இவர் அதிகப்பிரசங்கித்தனம் செய்ய வெளிக்கிட்டு ஆழமாக பரிசோதிக்கப்படப்போகிறார் என்றே தோன்றுகிறது. அவர் செய்த வியாக்கியானம் தேவையற்றது. போதைப்பொருள் வியாபாரிகளை கூட, சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதாடி விடுவிக்கிறார்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தன்னோடு இணைத்து பேசுகிறார். அரசியல் தொடங்கப்போகிறாராம். இன்றைய நமது அரசியல் நிலை எங்கே போகிறது? தட்டிக்கேட்டால்; ஊடகவியலாளர் சந்திப்பு, அரசிய கட்சி ஆரம்பிப்பு. மக்களை பற்றி சிந்திப்பதில்லை, தமக்கு பிடிக்காதவரை பழிவாங்க, தாம் நேர்மையானவர் எனக்காட்ட இவைகள் தேவைப்படுகிறது. இப்போ, எத்தனை வருடங்களாக இந்தக்குறிப்பிட்ட  பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள்? யார்  கண்டுகொண்டார்கள்? ஒருத்தன் கேட்டவுடன் வந்துவிடுவார்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு. சாதாரண ஏழைகள், சட்டப்படி செய்திருந்தால்; இது வழமைதானே என்று போயிருப்பார்கள். இவர், நீதிமன்றம் ஏதோ ஒரு வழக்கில் நூறுபேரின் சாட்சி பத்தாது என்று தள்ளிவிட்டதாம் என விவரிக்கிறார். அதே பிழையான உதாரணம். அந்த தீர்ப்பு பெற்ற வழக்கும், இவரின் வழக்கும் ஒன்றா? முன்பெல்லாம் நான் படிக்கும் காலத்தில் எனக்கு தெரிந்த சிலர் கரைவலை வேலை என்று சொந்த ஊரை விட்டு வேறு ஒரு பகுதிக்கு சென்று வருவார்கள். அங்கே, அவர்களது வேலையாட்கள் சிங்களவர். இப்போ, இவர்களில் சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள், சிலர் மூப்பின் காரணமாக அந்த வேலையை செய்வதில்லை. இப்போ அந்த இடத்தில சிங்களவர் தொழில் செய்கிறார்கள். காரணம் யார்? நாமேதான். சிலர் சிங்களவரை தொழிலாளிகளாக வைத்திருப்பது; போலீசில் மாட்டும்போது இலகுவாக தப்பித்துவிடலாம் என்பதற்காக. சாதாரண ஏழை மக்கள் போராடுகிறார்கள், பெரும் பணக்காரர் கொஞ்சுகிறார்கள். மாட்டுப்பட்டவுடன் கோஷங்களுடன் வருவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் தமிழ் தேசிய சட்டவாளர் லொறியை வெளியே எடுத்துத்தல்லாம் என்று சொல்லி இருக்கிறாராம். 

  • கருத்துக்கள உறவுகள்

City hadware நிறுவனம் சுண்ணக்கல் அகழ்வு செய்து விற்பனை செய்யும் தொழிலை நீண்ட காலமாக ஒரு இரகசிய பக்க வியாபாரமாக(side business) செய்து வந்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேற்படி நிறுவனத்தின் இணயத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ள வர்த்தக பொருட்களில் சுண்ணக்கல் ஒரு வியாபர பொருளாக எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பெருஞ்சுரங்கத் தொழில் மற்றும் பாரிய கனிம அகழ்வுகளுக்காக வழங்கப்படும் அரச அனுமதி மட்டும் தான் கம்பனிகள் அகழ்வு செய்த தாதுப்பொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கான அனுமதியையும் உள்ளடக்கியிருக்கிறது. மற்ற வகையான கனிம அகழ்வுகள் செய்பவர்கள் கனிமங்களை பார ஊர்திகளில் ஏற்றிச்செல்ல தனிப்பட்ட அனுமதி பெறவேண்டும்.

எனவே மேற்குறித்த சம்பவத்தினூடாக இஸ்தாபனத்தின்  தாதுபொருட்கள் ஏற்றிசெல்வதற்கான அனுமதி பற்றிய புரிதல் உட்பட அவர்களின் கனிம அகழ்வுக்கான தற்போதுள்ள அனுமதி அனைத்தும் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. இஸ்தாபனத்தின் உரிமையாளர் சோ. பிரகதீஸ்வரன் இந்த தொழிலை 14 வருடங்களாக செய்துவருவதாக கூறியிருக்கிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட கனிம அகழ்வுக்கானஅனுமதி சரியான முறையில் புதுப்பிக்கப்படுள்ளதா என்பதும் இங்கு ஆராயப்படவேண்டிய ஒன்று.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்

அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்

January 6, 2025  11:11 am

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டார்.

தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.

அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் , அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் போது அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்👇🏿
 

https://tamil.adaderana.lk/news.php?nid=198347

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் பிறந்தால்தான் உண்மை தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இயற்கை வளங்களை நீங்களே அழித்துவிட்டு, உவர் நீரை உள்ளே வர விட்டுவிட்டு, 
பிறகு கிளிநொச்சியில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து... 
நீரை கொண்டு போகப் போறம் என்றால், யாரில் பிழை இருக்கிறது? 

இயற்கையை பாதுகாத்தாலே வாழ்வும் வளமும் சிறப்பாய் இருக்கும்!

Kilinochchi Podiyan

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.