Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sri-lankan-in-russian-army-issue-1736165388

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

80களில் ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் சேர்ந்ததாகவும் கதைகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மேலைநாட்டுகளில் ஈழதமிழர்கள் வேலை பார்ப்பது போன்று மேலைநாட்டு இராணுவம் பொலிஸ்சிலும்  வேலை பார்க்கின்றனர். தமது சகோதரர் உறவினர் அங்கே வேலை பார்பதை பெருமையாகவும் சொல்கின்றனர்.இலங்கையில் இருந்து மேற்குலக நாட்டுகளுக்கு செல்ல விரும்பிய ஈழதமிழர்களை ஏமாற்றி பிள்ளைபிடிகாரன் போன்று ஈழதமிழர்கள் தீண்டவே விரும்பாத ரஷ்யாவுக்கு கொண்டு சென்று புதினுடைய  இராணுவத்தில் யுத்தம் செய்ய விடப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.கம்யுனிச சோசலிச கோட்பாட்டை வரித்துக்கொண்ட இலங்கை அரசு புதின் என்ற பிள்ளைபிடிகாரனிடம் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களின் முன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை இனிமேல் வாங்க மாட்டோம் என்ற செய்தியும் பரப்பபட்டது. இலங்கைத் தேயிலையை அதிகமாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ரஷ்யர்களும், மத்திய கிழக்கு நாடுகளும் தான்.

அதற்கு முன்னர் இலங்கை அரசு அஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாக தடைசெய்திருந்தது. அஸ்பெஸ்டாஸ் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது.

வெள்ளை அஸ்பெஸ்டாஸிற்கு பதிலாக நீல அஸ்பெஸ்டாஸ் தகடுகளை இலங்கை அரசு மீண்டும் அனுமதித்தது. பின்னர் ரஷ்யா வழமை போல தேயிலையை இலங்கையிலிருந்து வாங்கிக் கொண்டது.

இன்னொரு பக்கமாக, பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது.

வண்டு மீண்டும் வரலாம்.................😜.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யாவில் ..... உண்மையான நிலை நேரடி பதிவு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யாவில் ..... உண்மையான நிலை நேரடி பதிவு..

இந்த உண்மை நிலைநேரடிப் பதிவினை இணைத்ததன் மூலம் மேலே பெருமாள் இணைத்த செய்தியில் அந்தத் தாயின் கதறல் பொய்யானது என நிரூபித்து இருக்கின்றீர்கள்! உண்மை நிலையினை எடுத்துச் சொன்னதற்காக வாழ்த்துக்கள்!

மக்களே கீழே உள்ள காணொளியில் கதறும் இந்தத் தாய் பொய்யுரைக்கின்றாள் நம்பாதீர்கள்👇

(இந்தக் காணொளி பெருமாள் இணைத்த செய்தியின் மூல இணைப்பில் உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது.

வண்டு மீண்டும் வரலாம்.................😜.

தேயிலைக்குள்ளே வண்டு 🤣  என்ற ரஷ்யா புலுடா கதை நடந்தது இப்போது தான் அறிந்து கொண்டேன். அஸ்பெஸ்டாஸ் என்பது கான்சரை கொண்டுவர கூடிய கூரைத்தகடு என்று அறிகிறேன். பூட்டின் ரஷ்யாவே உலகத்தின் கான்சர் தானே.
ரஷ்யாவின் உண்மையான நிலை நேரடி சாட்சியாக இருப்பவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழ் பூட்டின் காதலர்கள்👍

12 minutes ago, வாலி said:

மக்களே கீழே உள்ள காணொளியில் கதறும் இந்தத் தாய் பொய்யுரைக்கின்றாள் நம்பாதீர்கள்👇

அந்த தாய் சொல்வதும் உண்மை
ஈழதமிழ் பூட்டின் காதலர்கள் ரஷ்யாவில் வாழ பிடிக்காமல் மேற்குலகநாடுகளில் வசதியாக வாழ்வதும் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியில்னை முழுமையாக பார்க்கவும். உக்கிரேன் அவசரகாலநிலை அதிபர் செலன்ஸ்கியின் மனம் திறந்த பேட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

சில வருடங்களின் முன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை இனிமேல் வாங்க மாட்டோம் என்ற செய்தியும் பரப்பபட்டது. இலங்கைத் தேயிலையை அதிகமாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ரஷ்யர்களும், மத்திய கிழக்கு நாடுகளும் தான்.

அதற்கு முன்னர் இலங்கை அரசு அஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாக தடைசெய்திருந்தது. அஸ்பெஸ்டாஸ் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது.

வெள்ளை அஸ்பெஸ்டாஸிற்கு பதிலாக நீல அஸ்பெஸ்டாஸ் தகடுகளை இலங்கை அரசு மீண்டும் அனுமதித்தது. பின்னர் ரஷ்யா வழமை போல தேயிலையை இலங்கையிலிருந்து வாங்கிக் கொண்டது.

இன்னொரு பக்கமாக, பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது.

வண்டு மீண்டும் வரலாம்.................😜.

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் ஏதும் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

இந்த காணொளியில்னை முழுமையாக பார்க்கவும். உக்கிரேன் அவசரகாலநிலை அதிபர் செலன்ஸ்கியின் மனம் திறந்த பேட்டி.

இந்த  யுத்தம் ஆரம்பமானபோது இது மேற்குலகின் யுத்தம்,  உக்ரேனைக் கொண்டு யுத்தத்தை  நடாத்துகிறார்கள் என்று கூறியபோது அவர்களை  புட்டின் காதலர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். 

தற்போது மேற்குலகால் செலன்ஸ்கியும் உக்ரேனியர்களும் கைகழுவப்படுகிறார்கள் என்பதை கோமாளி செலன்ஸ்கி 1.28:13ல் மிகத் தெளிவாகச் சொல்கிறார். 

Dollar loving அகதிகள் என்ன சொல்லப்போகிறார்கள்? 

மண்ணுக்குள் தலையைப் புதைக்க வேண்டியதுதான்,...😏

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தேயிலைக்குள்ளே வண்டு 🤣  என்ற ரஷ்யா புலுடா கதை நடந்தது இப்போது தான் அறிந்து கொண்டேன். அஸ்பெஸ்டாஸ் என்பது கான்சரை கொண்டுவர கூடிய கூரைத்தகடு என்று அறிகிறேன். பூட்டின் ரஷ்யாவே உலகத்தின் கான்சர் தானே.
ரஷ்யாவின் உண்மையான நிலை நேரடி சாட்சியாக இருப்பவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழ் பூட்டின் காதலர்கள்👍

அந்த தாய் சொல்வதும் உண்மை
ஈழதமிழ் பூட்டின் காதலர்கள் ரஷ்யாவில் வாழ பிடிக்காமல் மேற்குலகநாடுகளில் வசதியாக வாழ்வதும் உண்மை

Dollar மீதான காதல் விளங்க நினைப்பவருக்கு மட்டும் உரித்தானது இல்லையே,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

உங்கள் கூற்றிற்கு ஆதாரம் ஏதும் உண்டா? 

https://www.sundaytimes.lk/171217/business-times/russian-asbestos-bugs-ceylon-tea-273526.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கபித்தான் ஒவ்வொரு முறையும் வாங்கி கட்டி கொள்வதே வழமையானதே .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

80களில் ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் சேர்ந்ததாகவும் கதைகள் உண்டு.

தாமாக சொந்த விருப்பத்தின்படி போவது வேறு. நமது மக்கள் போருக்கு பயந்து வெளியேறியவர்கள், இருப்பவர்கள் போரினால் பல பாதிப்பை சந்தித்து தொடர்ந்து வாழமுடியாமல் வெளியேறுகிறார்கள். அவர்களை ஏமாற்றி இப்படி பலவந்தமாக சேர்ப்பதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அந்தத் தாயின் உறவினர் எப்படி இதை செய்தார்? எப்படி இந்த தொடர்பு அவருக்கு ஏற்பட்டது? இதே போன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பெற்றாரா? ரஷ்ய இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் தரகரா அவர்?  

  • கருத்துக்கள உறவுகள்

எமது அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தாருங்கள் ரஷ்ய படையில் இணைக்கப்பட்டுள்ள இளையவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி அநுர, அமைச்சர் விஜிதவுக்கு கடிதம்

Published By: DIGITAL DESK 2   07 JAN, 2025 | 12:26 PM

image

ஆர்.ராம்-

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக எம்மிடத்தில் மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுங்கள் என்றுகோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.  அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்ய படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார். அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

எனினும் பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை. எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை.

இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இற்றையக்கு ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில் எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடடிவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.

ஆகவே அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீர் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்படைந்து வருகின்றோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம் என்றுள்ளது.  

https://www.virakesari.lk/article/203199

  • கருத்துக்கள உறவுகள்

[ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் ]

🤣

salary  என்பதின் தமிழ் கூலி   ஊதியம் சம்பளம் என்று அழைக்கபடும்.
ரஷ்ய பூட்டின் காதலர் யேர்மனியில் கூலி பெற்று கொள்ளாமலா இலவசமாக வேலை செய்கின்றார் `?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இந்த  யுத்தம் ஆரம்பமானபோது இது மேற்குலகின் யுத்தம்,  உக்ரேனைக் கொண்டு யுத்தத்தை  நடாத்துகிறார்கள் என்று கூறியபோது அவர்களை  புட்டின் காதலர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். 

தற்போது மேற்குலகால் செலன்ஸ்கியும் உக்ரேனியர்களும் கைகழுவப்படுகிறார்கள் என்பதை கோமாளி செலன்ஸ்கி 1.28:13ல் மிகத் தெளிவாகச் சொல்கிறார். 

உக்கிரேனின் ஊழல் பற்றி குறிப்பிடும்போது (30 - 40 நிமிடங்கள் என நினைக்கிறேன்) தமது தரப்பில் அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்பதாக கூறியுள்ளார், ஆனால் அதே வேளை வழங்கல் பாதையில் உள்ள ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதன் மூலம் அவர் மறைமுகமாக ஒரு விடயத்தினை தெளிவுபடுத்துகிறார். 

இந்த போரில் அவர்கள்தான் இரத்தம் சிந்துகிறார்கள், அப்படியாயின் தமக்கெதிராக தாமே ஏன் செயற்படவேண்டும் என கேட்டு சில விடயங்களை புரிந்து கொள்ளுமாறு பார்வையாளரிடமே விட்டு விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

[ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் ]

🤣

salary  என்பதின் தமிழ் கூலி   ஊதியம் சம்பளம் என்று அழைக்கபடும்.
ரஷ்ய பூட்டின் காதலர் யேர்மனியில் கூலி பெற்று கொள்ளாமலா இலவசமாக வேலை செய்கின்றார் `?

பிரான்ஸில் கூலி இராணுவம் என்று குசா குறிப்பிட்டது French Foreign Legion ஆக இருக்கும் என்று யூகிக்கிறேன். 
 
http://foreignlegion.info

French Foreign Legion Traditions

Camerone Day and the hand of Captain Danjou

Fête de Camerone et la main du capitaine Danjou. Camerone Day marks the most significant event in the French Foreign Legion’s history, the Battle of Camerone. It became a symbol of bravery and the determination to fight to the finish. The battle occurred in Mexico on April 30, 1863. A Legion company, consisting of 3 officers and 62 legionnaires led by Captain Jean Danjou, faced almost 2,000 Mexicans. Captain Danjou and his men refused to surrender and continued to fight until their ammunition ran out. At the end of the battle, only three combat-ready legionnaires were…..

https://en.m.wikipedia.org/wiki/French_Foreign_Legion

The Foreign Legion was created by 
Louis Philippe,[12] the King of the French, on 10 March 1831 to allow the incorporation of foreign nationals into the French Army from the foreign regiments of the Kingdom of France.[13] Recruits included soldiers from the recently disbanded Swiss and German foreign regiments of the Bourbon monarchy.[14] The Royal Ordinance for the establishment of the new regiment specified that the foreigners recruited could only serve outside France.[15] The French expeditionary force that had occupied Algiers in 1830 was in need of reinforcements, and the Legion was accordingly transferred by sea in detachments from Toulon to Algeria.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2025 at 22:23, பெருமாள் said:

கபித்தான் ஒவ்வொரு முறையும் வாங்கி கட்டி கொள்வதே வழமையானதே .

பெருசு, 

ரசோதரன் ஒரு  விடயத்தைக் கூறுயிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கேள்விக்கு தகுந்த ஆதாரத்தை இணைத்திருக்கிறார். அதற்கு நான்  நன்றியும் கூறியிருக்கிறேன். 

 சரியான,  நாகரீகமான கருத்தாடலுக்கு இது ஒரு நல்ல உதாரணம். 

இதெல்லாம் உங்களுக்குப்  புரிய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.