Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, வாலி said:

அப்ப என்ன ****கு நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எண்டு எமனேறும் சொல்லிக்கொண்டு வாகனம் திரியுது!

அதை நீங்கள் அப்போது கடற்புலி சூசையிடம் கேட்டிடுக்க வேண்டும்.

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்

என்தாய்மொழியைப் பழித்தவன் எனக்கு எதிரி.நீங்கள் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்..இவ்வளவுகாலமும் இது பெரியார் மண் என்று நம்பிய தமிழர்களை சீமான் எப்படி முட்டாள்கள் ஆக்க முடியும்?அப்படியே முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் உங்களுக்கு என்ன நட்டம்..உழுதவயலை உழுது ஒரேநாளில் நெருப்பில்லாமல் பொங்குபவர்களை நம்பும் நீங்கள் எங்களுக்குப் பாடம் டத்தத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு…

 மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣.

இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.

நான் இன்று வரைக்கும் உங்கள் பெயரை வைத்து தனிமனித தாக்குதலாக எழுதியுள்ளேனா? நான் இணைத்த பதிவிற்கோ படத்திற்கோ பதில் எழுத வேண்டியது உங்கள் உரிமை.
அதில் எனது பெயரை குறிப்பிட்டு கொச்சைப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அருகதையும் இல்லை.

அதில் உங்களுக்கு சந்தோசம் என்றால் தொடர்ந்து எழுதுங்கள். நான் பெட்டீசம் போடும் வர்க்கம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அந்தப் பெண் ஒன்றுக்கு செரீனா தானே பெயர்................ சசிகலாவின் வீட்டுக்காரருடன் இருந்தார் என்று கஞ்சா வைத்து அந்தப் பெண்ணை பிடித்து அடைத்து வைத்தனர்............. 

சசிகலா எப்பவும் போயஸ் கார்டனிலேயே இருந்தால் நடராஜனும் தான் என்ன செய்வார் என்று அப்ப யோசித்திருக்கின்றோம். ஆனால்  சீமானோ இப்படி கீழிறங்கி கீழிறங்கி யோசிக்கின்றாரே........... இதே பெரியார் சொன்னார் என்ற பிரச்சனையை துக்ளக் சோ 70ம் ஆண்டுகளில் கிளப்பி, பின்னர் சோ நீதிமன்றில் மன்னிப்பு கேட்டதாக செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தனர்.  

புத்தக விழாவிற்கு சீமான் போனது, அங்கு பேசியது, புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது,  பபாசி நிறுவனர்களுடன் முரண்டுபட்டது, பின்னர் பெரியாரை வம்புக்கு இழுப்பது இது எல்லாமே இருட்டு அறைக்குள் சீமான் எதையோ தேடுவது போல இருக்கின்றது.

இது எல்லாம் விஜய்யால் வந்த வினை.....................🤣.

இருக்கின்ற எட்டு வீதத்தில் ஆறு அல்லது ஏழு வீதம் அங்கே போய் விடும் போல இருக்குதே என்று சீமான் கலங்கிப் போயிருக்கின்றார் போல.............

தமிழ்நாட்டில் இது போராட்ட காலம். தினமும் ஒரு கட்சி ஏதோ ஒரு விடயத்திற்காகப் போராடுகின்றது. திமுக கூட ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றது. அன்புமணி, பிரேமலதா, வைகோ, புஸ்ஸி ஆனந்த், எடப்பாடி, தினகரன், சீமான், சாட்டையடி அண்ணாமலை இப்படி எல்லோரும் தெருவில் இறங்கி நிற்கின்றனர்...................... அதனால் சீமானை உடனடியாக குறையும் சொல்ல முடியவில்லை.............. லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்றால் அவரும் வேறு என்ன தான் செய்கின்றது......................🤣................. கொஞ்சம் காரசாரமாக எடுத்து விடுகின்றார்...............

🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்..

ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣.

பிகு

ஆம் அது செரினாவேதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

கீழே இதை தகவல் சரிபார்க்கும் ஒரு இணையத்தளம் சரி பார்த்த விபரம் இருக்கிறது!

கண்டு களிப்படையுங்கள்!

https://tamil.factcrescendo.com/factcheck-periyar-not-commented-sexually-in-11th-may-1953-edition-of-viduthalai/

அதாவது இந்த ஊடகம் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறேதும் இல்லை.
இனியாவது ஆதாரம் என சொல்லி கண்ட கண்ட களிசறைகளை இணைத்து பம்மாத்து விடாதீர்கள்.

அந்த இணைய தளத்தினர் யாரென தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அதை நீங்கள் அப்போது கடற்புலி சூசையிடம் கேட்டிடுக்க வேண்டும்.

பெரியார் தாயை புணர சொன்னார் என செக்ஸ் சைக்கோ சீமான் கூறியதை விட ஆகாச புழுகு இந்த சூசை சீமானுக்கு கைமாத்தி விட்டார் எண்ட புழுகு.

தலைவர் இருக்கும் போதே ஆயுத மெளனிப்பு அறிவிப்பு வந்தது. அவர் இருக்கும் போதுதான் கேபியை நியமிக்கும் அறிவிப்பும் வந்தது.

இவை எவற்றிலும் மருந்துக்கும் சீமான் பெயர் இல்லை.

2008 மாவீரர் தின உரையிலும் இல்லை.

சாவின் விழிம்பில் ஒருவர் சொன்னதை, அதையும் முழு ஆடியோவும் இல்லாமல் தனக்கு தோதாக எடிட் பண்ணி சீமான் வெளியிட்டதை ஆதாரம் என காட்டுவதும்.

அது சூசையா இல்லை மிமிகிரியா என்பதே தெரியாத நிலையில் அதை வைத்து புலிகள் சீமானை நியமித்தனர் என்ற பொய்யை பரப்புவதும்….

இப்படி செய்பவர்கள், டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு நிகரான கயவர்கள்.

27 minutes ago, குமாரசாமி said:

நான் இன்று வரைக்கும் உங்கள் பெயரை வைத்து தனிமனித தாக்குதலாக எழுதியுள்ளேனா? நான் இணைத்த பதிவிற்கோ படத்திற்கோ பதில் எழுத வேண்டியது உங்கள் உரிமை.
அதில் எனது பெயரை குறிப்பிட்டு கொச்சைப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அருகதையும் இல்லை.

அதில் உங்களுக்கு சந்தோசம் என்றால் தொடர்ந்து எழுதுங்கள். நான் பெட்டீசம் போடும் வர்க்கம் அல்ல.

அண்ணை, என்னை மட்டும் அல்ல, யாழில் எவரையும் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்ததே இல்லை என்பதும், தனிமனித தாக்குதல் என்பதனை எழுத்து கூட்ட கூட தெரியாத அப்பாவி நீங்கள் என்பதையும் களம் அறியும்.

ஆனால் நான் எழுதியது ஒருவரை பற்றி கேவலமான பொய்யை, நீங்கள் எந்த ஆதாரமும் இன்றி ஒரு போட்டோஷொப்பின் மூலம் பரப்ப முடியும் என்றால்…

சம்பந்தமே இல்லாமல் மொந்தையையும் உங்களை தொடர்புபடுத்தி பொய் செய்தியை என்னாலும், எவராலும் பரப்ப முடியும் என்பதை உணர்த்தவே.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்..

ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣.

🤣...............

2026ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒரு முடிவுக்கு வரும் போல. தெரிந்து தான் சீமான் சிவப்பு என்றாலும் பரவாயில்லை என்று கையில் எடுத்திருக்கின்றார்..............🫣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

🤣...............

2026ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒரு முடிவுக்கு வரும் போல. தெரிந்து தான் சீமான் சிவப்பு என்றாலும் பரவாயில்லை என்று கையில் எடுத்திருக்கின்றார்..............🫣.

ஒரு முறை காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி, கருணாநிதி பற்றி விமர்சிக்க, அது பற்றி கருணாநிதியிடம் பத்திரிகையாளர் கேட்க…

அவர் பாவம் டெல்லி அம்மையார் சொல்லி கொடுத்ததை சொல்லுவதுதான் அவர் வாழ்க்கை, அவர் வாழப்பாடி, வாழப் பாடுகிறார் என்றார் கருணாநிதி🤣.

அப்படித்தான் செக்ஸ் சைக்கோ சீமானும், வாழப்பாடுகிறார்🤣.

2% வாக்கு எண்டால் பஜரோவுக்கு பெற்றோல் அடிக்கவே காணாது, குஞ்சு மாவீரனை ஆங்கில தனியார் பள்ளியில் வேற சேர்த்தாச்சு…பதறும்தானே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, goshan_che said:

அண்ணை, என்னை மட்டும் அல்ல, யாழில் எவரையும் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்ததே இல்லை என்பதும், தனிமனித தாக்குதல் என்பதனை எழுத்து கூட்ட கூட தெரியாத அப்பாவி நீங்கள் என்பதையும் களம் அறியும்.

ஆனால் நான் எழுதியது ஒருவரை பற்றி கேவலமான பொய்யை, நீங்கள் எந்த ஆதாரமும் இன்றி ஒரு போட்டோஷொப்பின் மூலம் பரப்ப முடியும் என்றால்…

சம்பந்தமே இல்லாமல் மொந்தையையும் உங்களை தொடர்புபடுத்தி பொய் செய்தியை என்னாலும், எவராலும் பரப்ப முடியும் என்பதை உணர்த்தவே.

இதை ஒட்டு மொத்தமாக மறுதலிக்கின்றேன்.☝

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முன்பு தான் பெரியார் வழி வந்தவன் என்று தான் சொல்லுவாராம் இப்போது புதிய கண்டுபிடிப்பு

52 minutes ago, goshan_che said:

குஞ்சு மாவீரனை ஆங்கில தனியார் பள்ளியில் வேற சேர்த்தாச்சு…

அவரின் சுத்து மாத்துக்கு ஒரு  பாறை தமிழ் கல்வெட்டு

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும். 

ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில்  பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அவர் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவரும் அல்லர். அவராலும் சமூகத்துக்கு சில பல நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதால் அவரை சீண்டாமலும் அதே சமயம் அளவுக்கு மீறி துதி பாடாமலும் விடுவதே புத்திசாலித்தனம் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்....

அது உண்மை பொய் என்பதற்கப்பால்....

அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. 

மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த,  தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. 

விசுகர்! அந்த இக்கட்டான நேரத்தில் பலராலும் கைவிடப்பட்ட நிலையில் சூசை அவர்கள் சீமானை நினைத்திருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! அந்த இக்கட்டான நேரத்தில் பலராலும் கைவிடப்பட்ட நிலையில் சூசை அவர்கள் சீமானை நினைத்திருக்கலாம் அல்லவா?

அப்படியே இருந்தாலும்…

அது சூசை என்ற தனிமனிதன், என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெளிவற்ற, வாழ்வின் இறுதி கணங்களில், யார் எதிரி, யார் கூட இருந்தே குழிபறிக்கும் துரோகி என்பதை பிரித்தறிய முடியாத சூழலில்…நினைத்த நினைப்பு என்பதே உண்மை.

சூசை நல்ல தளபதி, மாவீரன். ஆனால் அன்ரன் பாலசிங்கமோ, தலைவரோ, பொட்டு அம்மானோ அல்ல. சீமான் போன்ற ஐந்தாம் படைகளை கையாள கூடிய ராஜதந்திரம் அவருக்கு இல்லை. அந்த வேலை அவருக்கு கொடுக்க்கப்பட்டதும் இல்லை.

அவர் புலிகளின் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்.

இது உங்களுக்கு அனைவரையும் விட தெளிவாக தெரியும்.

இதை எழுத வேண்டாம் என நினைத்தேன்…இதே காலலட்டத்தில்தான் சூசை குடும்பம் படகில் தப்பித்து நேவியிடம் சரணடைந்ததாகவும், அதில் சூசையின் பங்கும் உண்டு எனவும் சொல்லப்படுவதும் நீங்கள் அறியாததல்ல.

இப்படி பலவிதமான அளுத்தங்களுக்கு ஆட்பட்டு, செய்வதறியாது நின்ற ஒரு மனிதனின் இறுதிக்கண கூக்குரலை (அது மிமிகிரி இல்லை எனில்), வெட்டி ஒட்டி, அதன் மூலம் சீமானுக்கு பரிசம் கட்டி விட துடிப்பவர்கள், புலிகளின் முதுகில் அல்ல நெஞ்சிலேயே குத்துபவர்கள். சூசையின் ஆன்மா கூட இவர்களை மன்னியாது.

4 hours ago, goshan_che said:

இப்படி பலவிதமான அளுத்தங்களுக்கு ஆட்பட்டு, செய்வதறியாது நின்ற ஒரு மனிதனின் இறுதிக்கண கூக்குரலை (அது மிமிகிரி இல்லை எனில்), வெட்டி ஒட்டி, அதன் மூலம் சீமானுக்கு பரிசம் கட்டி விட துடிப்பவர்கள், புலிகளின் முதுகில் அல்ல நெஞ்சிலேயே குத்துபவர்கள். சூசையின் ஆன்மா கூட இவர்களை மன்னியாது.

அது மிமிக்ரி இல்லை. ஆனால் எடிட் பண்ணப்பட்ட ஒன்று. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சுயநலக் கூட்டம், சீமானுடன் இணைந்து செய்த தில்லாலங்கடி வேலை அது. 

அண்மையில் முன்னைய செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைக்கும் போது, அவர் நடேசன் அண்ணாவின் நெருங்கிய உறவுகளுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் ஆனால் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியாது என்றும் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சூசை அவர்கள் மட்டுமல்ல, ஏனைய தளபதிகளும், சில வன்னி அரசியல் தலைமைகளும் கூட இறுதி யுத்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த பிரமுகர்கள், செயற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் அறிந்தேன்.

ஆனால், சீமான் குழுவுக்கு மட்டும் தான் இந்த ரணகளத்திலும் சூசை அவர்களின் உரையாடலை ஒலிப்பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்திருக்கிறது என்றால், அவர்களின் உள்ளே இருந்தது உணர்வா அல்லது இலாப நட்டக் கணக்குப் போடும் மூளையா என்பதை சொந்தமாக மூளை இருக்கும் ஒருவர் யோசிப்பார்.

சீமான் அடிப்பொடிகள் யோசிக்க மாட்டார்கள் என்பது அதிசயமல்ல😂!  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புலவர் said:

என்தாய்மொழியைப் பழித்தவன் எனக்கு எதிரி.நீங்கள் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்..இவ்வளவுகாலமும் இது பெரியார் மண் என்று நம்பிய தமிழர்களை சீமான் எப்படி முட்டாள்கள் ஆக்க முடியும்?அப்படியே முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் உங்களுக்கு என்ன நட்டம்..உழுதவயலை உழுது ஒரேநாளில் நெருப்பில்லாமல் பொங்குபவர்களை நம்பும் நீங்கள் எங்களுக்குப் பாடம் டத்தத் தேவையில்லை.

எனக்கு தனிப்பட நட்டம் கிடையாது (ஏனெனில் நான் எதிலும் முதல் போட்டு விட்டுக் காக்திருக்கும் ஆளல்ல😂).

ஆனால், எங்கள் இனத்தின் மைய அடையாளமான தமிழ் மொழியின் எதிரிகளைக் கொஞ்சம் பார்ப்போமா?

'பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது' என்று கைதட்டலுக்காக சீமான் லூசுத் தனமாக பேசியதால் தமிழ் பெருமை பெற்று விட்டது என்கிறீர்களா? உண்மையான மொழி ஆய்வாளர்கள் தமிழுக்கு வழங்காத பெருமையை சீமான் வளர்த்து வரும் போலி மொழி ஆர்வலர்கள் வழங்கிய ஒரு உதாரணமாவது இருக்கா உங்களிடம்?

2010 இல் இருந்து சீமான் தம்பிகளின் யூ ரியூப், சமூக வலைப் பதிவுகளில் தமிழ் மொழிப் பாவனை எப்படி இருக்கிறதென அவதானித்தீர்களா? சிறு குழந்தைகளைக் கூட மரியாதையோடு அழைக்கும் பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழர்களிடையே இருந்து வந்து சீமான் தம்பிகளாக மாறி நிற்கும் நபர்களிடம் இன்று என்ன மாதிரியான உரையாடல் பண்பு இருக்கிறது? "செருப்பால் அடித்தார்", "ஓட விட்டு அடித்தார்", "இருக்க வைத்து அடித்தார்" போன்ற சாக்கடை மட்டத்திற்கு தமிழைக் கொண்டு சென்ற போது உங்கள் தமிழுக்கு சீமான் "சேவையா" ஐயா செய்தார்😎?

இதையெல்லாம் தமிழுணர்வு என்று நீங்கள் போற்றுவது, நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பது போல "முட்டாளாக" இருப்பதால் செய்யவில்லை - மாறாக உள் நோக்கோடு தான் செய்கிறீர்கள். 2026 வருகிறது, தேர்தல் வருகிறது. வழக்கம் போல "சல்லிக் காசு இல்லாமல் பிரச்சாரம் செய்து ஓட்டுக் கேட்க வேண்டிய" தேவை வந்திருக்கிறது சீமான் ரீமுக்கு. எனவே, உங்கள் போன்றோரை இப்படி உசுப்பேத்தி அவர் இலவச பிரச்சாரம் செய்வார்.

யாழில் இந்த இலவச சீமான் பிரச்சாரம் தொடர்ந்தால், என் எதிர்ப்பும் தொடர்ந்து இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அது மிமிக்ரி இல்லை. ஆனால் எடிட் பண்ணப்பட்ட ஒன்று. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சுயநலக் கூட்டம், சீமானுடன் இணைந்து செய்த தில்லாலங்கடி வேலை அது. 

அண்மையில் முன்னைய செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைக்கும் போது, அவர் நடேசன் அண்ணாவின் நெருங்கிய உறவுகளுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் ஆனால் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியாது என்றும் கூறினார்.
 
தகவலுக்கும் உறுதிபடுத்தலுக்கும் நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்வதுல. தொலை நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டார்.  தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் மொழியின் வளர்சிக்கு மிக முக்ககியம் என்பதை  வலியுறுத்தியதுடன் அதனை 1934 ம் ஆண்டிலேயேதனது பத்திரிகைகளான “விடுதலை” , “குடியரசு” பத்திரிகைகளில்  பயன்படுத்த தொடங்கிவிட்டார். 

புதுமையான எழுத்து முறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்திதன  மூலம் எழுத்து சீர்திருத்தத்தின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்க முயன்றார். இது தமிழ் எழுத்து சீர்திருத்த புரட்சிக்கு வழிவகுத்த முக்கியமுயற்சிகளில் ஒன்றாகும். 

பெரியாரின் சீர்திருத்த யோசனைகள் தமிழ் எழுத்துக்களை சர்வதேச அளவில் பயன்படுத்த முன்னோடியாக அமைந்தது. எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டது தமிழின் பாவனையை உலக அளவில  மேற்கொள்ள முக்கியமான  படியாக கருதப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

பெரியாரின் சீர்திருத்த யோசனைகள் தமிழ் எழுத்துக்களை சர்வதேச அளவில் பயன்படுத்த முன்னோடியாக அமைந்தது. எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டது தமிழின் பாவனையை உலக அளவில  மேற்கொள்ள முக்கியமான  படியாக கருதப்படுகிறது. 

பெரியாரின் வழி நின்று, தமிழுக்கு இன்னும் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று நானும் என் பங்கிற்கு சொல்கின்றேன். 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னால் இங்கு கடுங்கோபம் வந்துவிடும் பலருக்கு, அதனால் மிகப்பழைய மொழி, ஆனால் அங்கேயே தங்கி நின்று விட்டது என்று சொல்கின்றேன்.

முதலாவதாக குற்றெழுத்து விதிகள் இலகுவாகப்படவேண்டும் அல்லது இல்லாமல் ஆக்கப்படவேண்டும்.  ஒரு மொழியில் அதன் சொற்கள் இணைவதும், பிரிவதும் இவ்வளவு சிரமமானதாக இருக்கக்கூடாது.

உதாரணமாக, வெற்றிக் கழகமும் சரி, வெற்றி கழகமும் சரி என்ற விவாதங்களில் விஜய் மீது வந்த எரிச்சலை விட, தமிழ் மீது வந்த திணறல்கள் தான் அதிகம். இதை மிக இலகுவாக்கலாம்.

திசைச்சொற்களுக்காக சில புதிய எழுத்துகளும் தேவை. பல திசைச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சமனான கலைச்சொற்களை உருவாக்கத் தேவையில்லை.  உலகில் முன்னோக்கி செல்லும் மொழிகள் அதையே தான் செய்கின்றன.....................    

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

🤣...............

2026ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒரு முடிவுக்கு வரும் போல. தெரிந்து தான் சீமான் சிவப்பு என்றாலும் பரவாயில்லை என்று கையில் எடுத்திருக்கின்றார்..............🫣.

இதற்கான வாய்ப்புகள் குறைவு, இந்தியாவை ஆளும் வர்க்கத்தினருக்கு இவரது வாய் வாடகைக்கு தேவைப்படுகிறது, அதுவரை இவரது வாய்ச்சவடால் நீடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, செவ்வியன் said:

இதற்கான வாய்ப்புகள் குறைவு, இந்தியாவை ஆளும் வர்க்கத்தினருக்கு இவரது வாய் வாடகைக்கு தேவைப்படுகிறது, அதுவரை இவரது வாய்ச்சவடால் நீடிக்கும்.

நீங்கள் சொல்வதும் சரிதான், செவ்வியன்................ இவருக்கு வாக்குகளை போட்டுக் கொண்டிருக்கும் மக்களில் ஒரு தொகுதியினராவது இவரை இனிவரும் காலங்களில் தவிர்த்தால் அது நன்மையே...........👍.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில்  பிரச்சனைகள் இருக்கிறது,

ஆனால் சீமானாலும் சீமான் ஆதரவாளர்களினாலும் பெரியார் சொன்னதாக பிரசாரபடுத்தபடும்  👇

காமத்தை அடக்க முடியவில்லை
என்றால் உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ அதை தீர்த்து கொள்
அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம்
விடுதலை ஏடு 11.5.1953 - தந்தை பெரியார்]

அவர் சொல்லாத எழுதாத ஒன்று பெண்கள் உரிமைகள் சாதி ஒழிப்புக்காக  மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் போராடியதால் அவரை மோசமாக இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  செய்கின்ற பிரசாரம் தான் இது  என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

தகவலுக்கும் உறுதிபடுத்தலுக்கும் நன்றி🙏.

ஒரு விடுகதை?

இங்கே எனக்கு எதிராகவும்,சீமானுக்கு எதிராகவும் எழுதியவர்களுக்கு முள்ளிவாய்கால் இறுதி நிகழ்வுகளும் சீமானைப்பற்றிய உள் விபரங்களும் தெரிந்திருக்கு! 🤣 ஈழத்தமிழர் போராட்ட வரலாறுகளும்/மாவீரர் வரலாறுகளும் தெரிந்திருக்கு..

ஆனால்  முக்கியமான ஒரு விடயம் மட்டும் தெரியவில்லை அது என்ன விடயம்? :cool:

Edited by குமாரசாமி
கீழ் கோடிட்ட வசனம் சேர்க்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/1/2025 at 23:38, goshan_che said:

அண்ணை, என்னை மட்டும் அல்ல, யாழில் எவரையும் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்ததே இல்லை என்பதும், தனிமனித தாக்குதல் என்பதனை எழுத்து கூட்ட கூட தெரியாத அப்பாவி நீங்கள் என்பதையும் களம் அறியும்.

எனது ஒரு சில அல்லது பல கலாய்ப்புகளை தனிமனித தாக்குதல்களாகவும்,சீண்டல்களாகவும் உருவமைத்துள்ளீர்கள். 👈

இதை ஊரில் விளங்காத்தனம் என்று கூறுவர். இப்படியான பிரச்சனைதான் வல்வை சகாறாவிற்கும் ஏற்பட்டது.அவர் சக தோழர்களை கலாய்ப்பதிலும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர்.
கலாய்ப்புகளினால் வந்த  சீண்டல்களினால் தான் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.