Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி

January 11, 2025  11:34 am

கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன்  மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர்  கனிமொழியை  சந்தித்துள்ளனர்.

இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்..
 
https://tamil.adaderana.lk/news.php?nid=198615

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு பயணம்

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு பயணம்.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

சென்னை சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய நாடாளுமன்றில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் உரையாடினர்.

தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1416051

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.

Pawan Khera 🇮🇳 on X: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar" / X

3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

என்ன குத்து கரணம் அடித்தாலும் இனி தேர்தலில் அங்குள்ள சனம் காறிதுப்பி அனுப்பும் பதவிக்காக அலையுதுகள் ஒனாணன் சுமத்திரன் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people smiling and dais

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு, இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
குடியுரிமை இன்மையால் உயர் கல்வி கற்க முடியவில்லை. அரச வேலை வாய்ப்பு பெற முடியவில்லை.
வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டும் பெற முடியவில்லை.
வாழ முடியவில்லை என்று.. தாயகம் திரும்ப விரும்பினாலும் அதற்கும் அனுமதி இல்லை.
இது குறித்து,  எமது தலைவர்களுக்கு அக்கறையும் இல்லை.

கடந்த வருடமும் தமிழக அரசின் புலம் பெயர் விழாவில் சுமந்திரன் கலந்துகொண்டார்.
இந்த வருடமும் கலந்துகொள்கிறார். இவர் எதற்கு அங்கு செல்கிறார்? 
புலம்பெயர் தமிழர் விழாவில் கலந்துகொண்ட இவர்கள் கனிமொழியுடன் என்னதான் உரையாடியிருப்பர்?

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

எப்படி சோடிப் பொருத்தம்    ?? 🤣😂

குறிப்பு,......கேள்விகளை தவிர்க்கவும்.   🙏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

எப்படி சோடிப் பொருத்தம்    ?? 🤣😂

குறிப்பு,......கேள்விகளை தவிர்க்கவும்.   🙏

சிங்களவர், தெலுங்கர், கிறிஸ்தவர் என்று... 
ஒரே கலவையாக உள்ளதால், சோடிப் பொருத்தம் இல்லை.  
😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.

அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ?

1736575464-sumanthiran-2.jpg

ஏன் சிறிதரனின் படத்தைப் போடவில்லை?

இந்த நிகழ்வில் சிறிதரனை போகவிடாமல் செய்ய விமானநிலையத்தில் குடைச்சல் கொடுத்ததாக அறிந்தேன்.

இதுவும் உள்வீட்டு வேலை என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்

சென்னையில் இடம்பெறவுள்ள  தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

திடீர் நடவடிக்கை 

தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும்  சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் | Travel Ban On Mp Sridharan

இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை  ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு  தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

உள்ளக பிரச்சினைகள்

இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் | Travel Ban On Mp Sridharan  

அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

25-67814d8eb2452.webp

https://tamilwin.com/article/travel-ban-on-mp-sridharan-1736525782

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ?

சுமந்திரனும், சாணக்கியனும்.... கனிமொழிக்கு எங்கள் பிரச்சினையை 
விளங்கப் படுத்தி சொன்னதால், திராவிடர் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
சுமந்திரனின் சாக்கியத்துக்கு... கிடைத்த வெற்றி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுமந்திரனும், சாணக்கியனும்.... கனிமொழிக்கு எங்கள் பிரச்சினையை 
விளங்கப் படுத்தி சொன்னதால், திராவிடர் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
சுமந்திரனின் சாக்கியத்துக்கு... கிடைத்த வெற்றி. 🤣

சிறி மேலே உள்ள பந்தியை வாசித்துப் பார்க்கவும்.

உள்வீட்டு சண்டை எவ்வளவு அநாகரீகமாக போகுது.

சிஐடி யில் இப்போதும் தனிநபர் செல்வாக்கு செலுத்தக் கூடியளவு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி மேலே உள்ள பந்தியை வாசித்துப் பார்க்கவும்.

உள்வீட்டு சண்டை எவ்வளவு அநாகரீகமாக போகுது.

சிஐடி யில் இப்போதும் தனிநபர் செல்வாக்கு செலுத்தக் கூடியளவு இருக்கிறது.

வாசித்தேன் ஈழப்பிரியன்.
இதனை பின் நின்று செயற்படுத்தியவர் சுமந்திரன் என்றும் சொல்கின்றார்கள்.
ஊத்தைவாளி வேலை செய்வதில், இவர் ஒரு கேவலமான மனிதன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

வாசித்தேன் ஈழப்பிரியன்.
இதனை பின் நின்று செயற்படுத்தியவர் சுமந்திரன் என்றும் சொல்கின்றார்கள்.
ஊத்தைவாளி வேலை செய்வதில், இவர் ஒரு கேவலமான மனிதன். 

சிறிதரன் ..கக்கீமின் உதவியுடன்...தமிழ்நாடு சென்றதாக செய்திகள்  வருகின்றது உண்மையா..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1416051

திரும்பி வரும்போது சிறிதரன் ..சுமந்திரனுக்கு பிளைட்டில்...சாத்தினாலும் அதிசயமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

பார் போற்றும் பாராளுமன்ற (பார் + ஆள் + உம் + மன்ற) உறுபினர் கவுரவ சிறிதரன் அய்யா அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்வு கண்டிகப்பட வேண்டியது. அவருக்கும் தமிழக முதல்வர் மான்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிந்த மொழியில் நிகழ்த்தப்படும் நிகழ்வு என்பதால் அய்யா கட்டாயம் சென்றிருக்கவேண்டும். உடனடியாக அய்யா தமிழகம் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

சிறிதரன் ..கக்கீமின் உதவியுடன்...தமிழ்நாடு சென்றதாக செய்திகள்  வருகின்றது உண்மையா..

சிறிதரனுக்கு அழைப்பு கிடைத்து விருந்தாளியாக போகும்போது

ஏன் கக்கீமின் உதவி தேவைப்படுகிறது?

ஒருவேளை சேர்ந்தே போயிருக்கலாம்.

2 minutes ago, வாலி said:

பார் போற்றும் பாராளுமன்ற (பார் + ஆள் + உம் + மன்ற) உறுபினர் கவுரவ சிறிதரன் அய்யா அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்வு கண்டிகப்பட வேண்டியது. அவருக்கும் தமிழக முதல்வர் மான்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிந்த மொழியில் நிகழ்த்தப்படும் நிகழ்வு என்பதால் அய்யா கட்டாயம் சென்றிருக்கவேண்டும். உடனடியாக அய்யா தமிழகம் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்!

இந்தப் பிரச்சனையை பார் ஆளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விமானநிலைய அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ?

1736575464-sumanthiran-2.jpg

ஏன் சிறிதரனின் படத்தைப் போடவில்லை?

இந்த நிகழ்வில் சிறிதரனை போகவிடாமல் செய்ய விமானநிலையத்தில் குடைச்சல் கொடுத்ததாக அறிந்தேன்.

இதுவும் உள்வீட்டு வேலை என்றார்கள்.

சுமந்திரனும், சாணக்கியனும்.... ஸ்ரீதரனுக்குத் தெரியாமல், 
கனிமொழியை போய் சந்தித்து இருக்கலாம்.

சம்பந்தர் காலத்தில் இருந்து... ஒரு கட்சியில் உள்ளவர்கள்   ஒன்றாக தமிநாட்டிற்குச் சென்று அங்கு தமது உட்கட்சிப்  பூசலை வெளி உலகத்திற்கு காட்டி சந்தி சிரிக்க வைக்கும் கேவலமான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனை ஒரு முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்  என்னிடம் தெரிவித்த தகவலே இவை.  தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னார். 

சுமந்திரன்... உள்ளூரிலேயே, தன்னந்தனியாக  பின்கதவால் சென்று, 
சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்து விட்டு வரும் 
ஊத்தைவாளி பழக்க வழக்கம் உடைய நபர்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிதரனுக்கு அழைப்பு கிடைத்து விருந்தாளியாக போகும்போது

ஏன் கக்கீமின் உதவி தேவைப்படுகிறது?

ஒருவேளை சேர்ந்தே போயிருக்கலாம்.

ஹக்கீமுக்கும் தமிழ்  நாட்டில் இருந்து அழைப்பு வந்திருந்ததால்... இருவரும் சேர்ந்தே போனார்கள்.

சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் ஒரு குழுவாகவும்,
ஸ்ரீதரனும், ஹக்கீமும் ஒன்றாகவும் விமான நிலையத்திற்கு சென்று இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஹக்கீமுக்கும் தமிழ்  நாட்டில் இருந்து அழைப்பு வந்திருந்ததால்... இருவரும் சேர்ந்தே போனார்கள்.

சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் ஒரு குழுவாகவும்,
ஸ்ரீதரனும், ஹக்கீமும் ஒன்றாகவும் விமான நிலையத்திற்கு சென்று இருக்கலாம்.

இப்போ கக்கீம் ஒரு நேரடி சாட்சியாகிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இப்போ கக்கீம் ஒரு நேரடி சாட்சியாகிவிட்டார்.

ஆம். இதனை வைத்து சபாநாயகர் மூலம்..  
பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை பாவித்து,

பெட்டிசம் போட்ட சுத்துமாத்து களவாணிப் பயலை, இலகுவில் கண்டறியலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி மேலே உள்ள பந்தியை வாசித்துப் பார்க்கவும்.

உள்வீட்டு சண்டை எவ்வளவு அநாகரீகமாக போகுது.

சிஐடி யில் இப்போதும் தனிநபர் செல்வாக்கு செலுத்தக் கூடியளவு இருக்கிறது.

Tamilwin ஐ நம்பிக் கருத்திச் சொல்வதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. 😁

12 minutes ago, தமிழ் சிறி said:

ஆம். இதனை வைத்து சபாநாயகர் மூலம்..  
பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை பாவித்து,

பெட்டிசம் போட்ட சுத்துமாத்து களவாணிப் பயலை, இலகுவில் கண்டறியலாம். 😂

சிறியருக்கு தான் எடுத்த Bar License விடயம் வெளிவரப்போகின்ற கவலை. 

🤣

29 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனும், சாணக்கியனும்.... ஸ்ரீதரனுக்குத் தெரியாமல், 
கனிமொழியை போய் சந்தித்து இருக்கலாம்.

சம்பந்தர் காலத்தில் இருந்து... ஒரு கட்சியில் உள்ளவர்கள்   ஒன்றாக தமிநாட்டிற்குச் சென்று அங்கு தமது உட்கட்சிப்  பூசலை வெளி உலகத்திற்கு காட்டி சந்தி சிரிக்க வைக்கும் கேவலமான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனை ஒரு முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்  என்னிடம் தெரிவித்த தகவலே இவை.  தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னார். 

சுமந்திரன்... உள்ளூரிலேயே, தன்னந்தனியாக  பின்கதவால் சென்று, 
சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்து விட்டு வரும் 
ஊத்தைவாளி பழக்க வழக்கம் உடைய நபர்.

Bar License வெளிப்பட்டதிலிருந்து சிறியருக்கு செம கடுப்பு. 🤣

43 minutes ago, alvayan said:

திரும்பி வரும்போது சிறிதரன் ..சுமந்திரனுக்கு பிளைட்டில்...சாத்தினாலும் அதிசயமில்லை

சிறியர் அரசியல்வாதி. விமானத்தில் வரும்போது சும்முடன் தாராளமாகிவிடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

Tamilwin ஐ நம்பிக் கருத்திச் சொல்வதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை.

விமானநிலைய சம்பவம் பொய்யா கப்பி?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானநிலைய சம்பவம் பொய்யா கப்பி?

சம்பவம் நிகழ்ந்திருக்கலாம், ஆனால் கொடுத்திருக்கும் வியாக்கியானங்கள் எல்லாம் யூகங்களும் வதந்திகளுமே. வெளிநாடுகளுக்குப் அடிக்கடி பயணம் செய்திருக்கும் தங்களுக்கு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு Idea  இருக்கும்  என்று யூகிக்கிறேன். MP ஒருவருக்கு நடைபெறக்கூடிய ஒரு இடையூறு நாடாளுமன்றம் வரைச் செல்லும் என்று அதிகாரிகளுக்கும்  தெரிந்திருக்கும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

சம்பவம் நிகழ்ந்திருக்கலாம், ஆனால் கொடுத்திருக்கும் வியாக்கியானங்கள் எல்லாம் யூகங்களும் வதந்திகளுமே. வெளிநாடுகளுக்குப் அடிக்கடி பயணம் செய்திருக்கும் தங்களுக்கு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு Idea  இருக்கும்  என்று யூகிக்கிறேன். 

உண்மை தான் ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு நொண்டிச் சாட்டாகத் தெரியலையா?

இது யாருடையதோ தூண்டுதலின் பேரில் சிஐடி இயங்கியதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு நொண்டிச் சாட்டாகத் தெரியலையா?

இது யாருடையதோ தூண்டுதலின் பேரில் சிஐடி இயங்கியதாகவே தெரிகிறது.

அதைத்தான் கூறுகிறேன். தமிழ்வின் செய்திகளை நம்பிக் கருத்துக் கூறும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.