Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இணைப்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். 

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர | President Anura Kumara Visits China

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று அதிகாலை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையம் வழியாக ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியுடன் தூதுக்குழு

இந்தப் பயணத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர | President Anura Kumara Visits China

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/president-anura-kumara-visits-china-1736821457

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கனுக்கு போற இடமெல்லாம் ராஜ மரியாதைதான்.....😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்கனுக்கு போற இடமெல்லாம் ராஜ மரியாதைதான்.....😂 

ஆமாம்,...ஆனால் இந்த தமிழர்கள்,..புலம்பெயர் தமிழர்கள் மட்டும் திட்டி கொட்டுகிறீர்கள்,...  ஏதாவது நல்ல விடயங்களை செய்தால் கூட   பாராட்டினால்  உடனே    வால்.   என்பார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்கனுக்கு போற இடமெல்லாம் ராஜ மரியாதைதான்.....😂 

வேள்விக்கு விடுகிற ஆட்டுக்குக் கூட..மாலை மரியாதை மஞ்சள் தண்ணியெல்லாம் தெளிக்கிறது வழமைதானே...இந்தியாவில் என்ன நடந்தது தெரியும்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

வேள்விக்கு விடுகிற ஆட்டுக்குக் கூட..மாலை மரியாதை மஞ்சள் தண்ணியெல்லாம் தெளிக்கிறது வழமைதானே...இந்தியாவில் என்ன நடந்தது தெரியும்தானே..

இனி அமெரிக்காவில் ராஜ மரியாதை 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

இனி அமெரிக்காவில் ராஜ மரியாதை 

நான் நினைக்க‌ வில்லை புத்த‌ன் மாமா அனுராவை ர‌ம் அழைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ர‌ம்புக்கு இல்லை என‌ நினைக்கிறேன்

கொழும்பில் பாதி நில‌ப‌ர‌ப்பு சீனாவின்ட‌ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் போட்டி மோத‌ல்க‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்

இல‌ங்கை எப்ப‌வும் சீனா ப‌க்க‌ம் தான்.....................ம‌கிந்தாவையே உபாமா சும்மா பார்த்து விட்டு அனுப்பி வைச்ச‌வ‌ர் அங்கு இல‌ங்கை அர‌சுக்கு ராஜ‌ ம‌ரியாதை கிடைப்ப‌தில்லை😁.................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

வேள்விக்கு விடுகிற ஆட்டுக்குக் கூட..மாலை மரியாதை மஞ்சள் தண்ணியெல்லாம் தெளிக்கிறது வழமைதானே...இந்தியாவில் என்ன நடந்தது தெரியும்தானே..

எதுவாக இருந்தாலும் வேள்விகள்/பலியெடுப்புகள் சிங்கள தரப்பிற்கு நடக்க சந்தர்ப்பம் இல்லை.
சீன/ஹிந்திய எந்த அரசியலானாலும் பலிக்கடாக்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே.அதுதான் சென்ற தினங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் செம்மறியாட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்தோமே...😡

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எதுவாக இருந்தாலும் வேள்விகள்/பலியெடுப்புகள் சிங்கள தரப்பிற்கு நடக்க சந்தர்ப்பம் இல்லை.
சீன/ஹிந்திய எந்த அரசியலானாலும் பலிக்கடாக்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே.அதுதான் சென்ற தினங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் செம்மறியாட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்தோமே...😡

அப்படிச் சொல்ல இயலாது சாமியர்...உந்த அடையாள அட்டை விடையத்திலும் ..அதானி விடையம்...பாலம் அமைப்பு விடையம் போன்றவற்றில் எமக்குத்தெரிந்தவற்றில் தோல்வி அடந்துதான் இருக்கினம்...ஆக 13 பற்றி கதைப்பதில் ...வெற்றி என்கினம் ..உண்மை பொய்  காலப்போக்கில் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்!

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்!

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2025/1416335

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

May be a black-and-white image

May be a doodle

May be pop art of aircraft and text

May be an image of text

473270383_1015434837288155_6480476774270

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

Published By: DIGITAL DESK 3   15 JAN, 2025 | 04:51 PM

image
 
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு சீன நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.

https://www.virakesari.lk/article/203871

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

எதுவாக இருந்தாலும் வேள்விகள்/பலியெடுப்புகள் சிங்கள தரப்பிற்கு நடக்க சந்தர்ப்பம் இல்லை.
சீன/ஹிந்திய எந்த அரசியலானாலும் பலிக்கடாக்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே.அதுதான் சென்ற தினங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் செம்மறியாட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்தோமே...😡

விரும்பியோ விரும்பாமலோ எங்களை த்தான் பலிக்கிடா ஆக்குவார்கள் ..76 வருடங்களுக்கு முதலே தீர்மானிக்கப்பட்ட விட்யம் ...சிறில்ன்கா என்ற நாட்டை சிங்களவர்களில் அதிக பாசத்தால் பிரித்தனியா உருவாக்கி கொடுத்ததா ...நிச்சயமாக இல்லை...தங்களது உலக ஒழுங்கில் த்ங்களுக்கு வச்தியாக இந்த நாட்டை உருவாக்கி சென்று விட்டனர் அதன் பலன்களை இந்த வல்லர்சுகள் தான் அனுபவிக்கின்றது ..

6 hours ago, ஏராளன் said:

மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.

ஐயோ கொல்றாங்களே ...மக்கள் மண்டப்பத்தில் மக்கள் கட்சியின் நாயகனும் நாடு பிடிக்கும் மன்னனும்

  • கருத்துக்கள உறவுகள்

சக செந்தோழருக்கான மரியாதை அப்பு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வீரப் பையன்26 said:

நான் நினைக்க‌ வில்லை புத்த‌ன் மாமா அனுராவை ர‌ம் அழைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ர‌ம்புக்கு இல்லை என‌ நினைக்கிறேன்

கொழும்பில் பாதி நில‌ப‌ர‌ப்பு சீனாவின்ட‌ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் போட்டி மோத‌ல்க‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்

இல‌ங்கை எப்ப‌வும் சீனா ப‌க்க‌ம் தான்.....................ம‌கிந்தாவையே உபாமா சும்மா பார்த்து விட்டு அனுப்பி வைச்ச‌வ‌ர் அங்கு இல‌ங்கை அர‌சுக்கு ராஜ‌ ம‌ரியாதை கிடைப்ப‌தில்லை😁.................................

அனுரா நினைத்தபடி ஆட முடியாது ...எல்லாம் கொடுப்பார்கள் ...கொடுப்பவர்களின் சமநிலையை மீறினால் சகலதையும் சுப‌மாக முடித்து வைப்பார்கள்...
மக்கள்  மக்கள் என சகலரும் குரல் கொடுப்பார்கள் ஆனால் அதே மக்களின் வயிற்றில் அடித்துதான்  .வல்லரசு நாடுகள் முதல் ,லொக்கல் அரசியல்வாதி வரை செயல்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.

வெளிப்படையாகவே கிந்தியனுக்கு போட்டியாக அனுரவுக்கு சீனா ராஜ மரியாதை குடுக்குது எண்டால்...... 
சிலோன் நாட்டுக்குள்ள எத்தினை போட்டியளை நடத்துவானுகள்?

இப்பிடி நிலவரம் இருக்க  இனவாத சிங்களம் வெள்ளைகுதிரையில தான் பவனி போகும்... ஈழத்தமிழர் உரிமைகளாவது மண்ணாங்கட்டிகளாவது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.