Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198808

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணிகள்  பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகியா பாராளுமன்றம் வந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

சட்டத்தரணிகள்  பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகியா பாராளுமன்றம் வந்தார்கள்?

👆👇

50 minutes ago, ஏராளன் said:

அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே

அரசாங்க வேலையில் இருக்கும் வக்கீல் எனில் அவரும் அர்ஜுனா போலவே டீல் பண்ணபடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சுகாதாரத்திணைக்களம் அருச்சுனா அப்போது சேவையில் இருந்தார் என்று உறுதிப்படுத்தினால் பிறகு தங்கம்தான் பாராளமன்றம் போவா.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, RishiK said:

சுகாதாரத்திணைக்களம் அருச்சுனா அப்போது சேவையில் இருந்தார் என்று உறுதிப்படுத்தினால் பிறகு தங்கம்தான் பாராளமன்றம் போவா.

ஏற்கனவே அவ்ர் அப்படித்தான் கூறியுள்ளார் ..2 வருடங்களுக்கு பின்பு தன்கத்தை பாராளுமன்றம் அனுப்புவேன் எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் nomination form இல்

நீங்கள் இரட்டைக் குடியுரிமையாளரா, தற்போதும் அரசசேவையில் (தறகாலிக வேலை நிறுத்தம் அடங்கலாக) உள்ளீர்களா என்று இரண்டு கேள்வியைக் கேட்டாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

ஏன் nomination form இல்

நீங்கள் இரட்டைக் குடியுரிமையாளரா, தற்போதும் அரசசேவையில் (தறகாலிக வேலை நிறுத்தம் அடங்கலாக) உள்ளீர்களா என்று இரண்டு கேள்வியைக் கேட்டாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

சட்டம் தன் கடமையை செய்யும் (பக்க சார்பாக)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஏற்கனவே அவ்ர் அப்படித்தான் கூறியுள்ளார் ..2 வருடங்களுக்கு பின்பு தன்கத்தை பாராளுமன்றம் அனுப்புவேன் எண்டு

புத்தன் அண்ணா கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கோ 😂

தங்கம் என்று அர்சுனா மட்டும் தானாம் பொது வெளியிலும்  சொல்லுவாராம் ஒரு தமிழ் புலவர் தங்கம் என்று சொல்ல அர்சுனாவின் ஆதரவாளர்கள் அவரை தாக்கு தாக்கு தாக்கிவிட்டனராம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

👆👇

அரசாங்க வேலையில் இருக்கும் வக்கீல் எனில் அவரும் அர்ஜுனா போலவே டீல் பண்ணபடுவார்.

இது என்ன சட்டம்  ???   

அரசாங்க வேலை செய்வோர்   தேர்தலில் போட்டியிட கூடாது  

ஆனால்  தனியார் துறையில் வேலை செய்வோர்.   செந்தமாக  நிறுவனங்கள் வைத்திருப்போர்   பெரும் தோட்டங்களின். முதலாளிமார்.  தேர்தலில் போட்டியிட முடியுமா  ???   ஆம்,......சட்டத்தின் நோக்கம் என்ன  ??? 

பொதுவாக வருமானம்   எந்த வகையில் பெற்றாலும்.   தேர்தலில் போட்டியிட கூடாது   ....  அது தான் சரியாகும்   

இந்த சட்டம் இரத்து செய்யப்படவேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புத்தன் அண்ணா கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கோ 😂

தங்கம் என்று அர்சுனா மட்டும் தானாம் பொது வெளியிலும்  சொல்லுவாராம் ஒரு தமிழ் புலவர் தங்கம் என்று சொல்ல அர்சுனாவின் ஆதரவாளர்கள் அவரை தாக்கு தாக்கு தாக்கிவிட்டனராம்

அவ்வளவுக்கு தங்கம் தங்கமான செய்லில் ஈடுபட்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

சட்டத்தரணிகள்  பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகியா பாராளுமன்றம் வந்தார்கள்?

இல்ல நுணா அப்படி இருக்க முடியாது என்று கடந்த காலங்களில் செய்திகளில் படித்திருக்கிறேன்.அர்ச்சனாவைப் போலவே இன்னும் ஒரு பெண்ணும் இதே பிழையை விட்டு இருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இது என்ன சட்டம்  ???   

அரசாங்க வேலை செய்வோர்   தேர்தலில் போட்டியிட கூடாது  

ஆனால்  தனியார் துறையில் வேலை செய்வோர்.   செந்தமாக  நிறுவனங்கள் வைத்திருப்போர்   பெரும் தோட்டங்களின். முதலாளிமார்.  தேர்தலில் போட்டியிட முடியுமா  ???   ஆம்,......சட்டத்தின் நோக்கம் என்ன  ??? 

அரச ஊழியர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் போட்டியிடும் போதே அரச ஊழியராக இருப்பதால் அதன் மூலம் ஊழல் செய்து வென்றார் என்ற தோற்றப்பாட்டை தவிர்க்க இந்த சட்டம் உருவானது என நினைக்கிறேன்.

பிரித்தானியாவில் சிவில் சேவையில் இருப்போர் எம்பி தேர்தலில் நிற்கமுடியாது. பதவி விலக வேண்டும். அதன் பின்பே தேர்தலில் நிற்கலாம்.

பிரித்தானியாவில் NHS இல் டாக்டராக இருந்தபடியே எம்பி தேர்தலில் நிற்கலாம். பலர் நின்று, வென்று, அதன் பின்னும் பகுதி நேரமாக டாக்டர் வேலை செய்துள்ளனர்.

ஆனால் NHS நேரடி அரச திணைக்களம் அல்ல. Arms length body என அழைக்கப்படும் அரச கட்டுப்பாட்டில் ஆனால் சுயாதீனமாக இயங்கும் அமைப்பு. ஆனால் இது போல அன்றி இலங்கையில் அரச வைத்திய துறையும் நேரடியாக சுகாதார அமைச்சின் கீழ் வரும் பிரிவு என்பதால் - அரசிடம் சம்பளம் வாங்கும் டாக்டர்களும், அரச ஊழியர் ஆகிறார்கள் என நினைக்கிறேன்.

1 hour ago, Kandiah57 said:

பொதுவாக வருமானம்   எந்த வகையில் பெற்றாலும்.   தேர்தலில் போட்டியிட கூடாது   ....  அது தான் சரியாகும்   

இப்படி என்றால் ஜனசக்தி கொடுப்பனவு எடுப்பவர்கள்+பிச்சைகாரர் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும்.

1 hour ago, Kandiah57 said:

இந்த சட்டம் இரத்து செய்யப்படவேண்டும்.   

சட்டம் பிரிட்டிஷ் காலம் தொட்டு இருக்கிறதென நினைக்கிறேன்.

தற்காலிகமாக வேலை விடுப்பு எடுத்து விட்டு தேர்தலில் நிற்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக சொல்கிறார்கள்.

இவற்றை செய்யாமல் இரெண்டு தோணியில் கால் வைத்தது அருச்சுனாவின் பிழை. சட்டத்தினது அல்ல.

அருச்சுனாவே தான் வெல்வார் என எதிர்பார்க்கவில்லை - ஆகவே ஏன் சும்மா வேலையை விடுவான் என நினைத்துள்ளார். இப்போ அதுவே ஆப்பாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஏற்கனவே அவ்ர் அப்படித்தான் கூறியுள்ளார் ..2 வருடங்களுக்கு பின்பு தன்கத்தை பாராளுமன்றம் அனுப்புவேன் எண்டு

இருவரையும் விலக்கி விட்டு மயூரன் வந்தால் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

சட்டம் பிரிட்டிஷ் காலம் தொட்டு இருக்கிறதென நினைக்கிறேன்.

தேர்தல் ஆணையம் அர்ச்சுனாவின். விண்ணப்பத்தை எப்படி எற்றுக்கொண்டது  ???   இப்படி சட்டம் இருக்கிறது தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத   ??   

5 hours ago, goshan_che said:

இப்படி என்றால் ஜனசக்தி கொடுப்பனவு எடுப்பவர்கள்+பிச்சைகாரர் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும்.

இல்லையே  அவர்களும்  தங்களுடைய தொழில்களை   நிறுத்தி விட்டு தேர்தலில் நிற்கலாம்  ....இல்லையா ??   இந்த சட்டம் பாரபட்சம் ஆனது    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

தேர்தல் ஆணையம் அர்ச்சுனாவின். விண்ணப்பத்தை எப்படி எற்றுக்கொண்டது  ???   இப்படி சட்டம் இருக்கிறது தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத   ??   

9 hours ago, goshan_che said:

இது தேர்தல் ஆணையாளரின் வேலை அல்ல. ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் துப்பு துலக்கி கொண்டிருக்க முடியாது.

வேட்புமனு கொடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம்.

கீழே உள்ள லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தை நிரப்பி அதோடு ஜேபி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும்.

தகவல்கள் சரியாயின் வேட்புமனு ஏற்கப்படும்.

ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை.

இந்த சின்ன விடயத்தை கூட கிரமமாக செய்யமுடியாதவர்கள் இப்படி வழக்குகளை சந்தித்து பதவி இழப்பார்கள். 

இதில் சட்டத்திலோ, நடைமுறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ எந்த தவறும் இல்லை. தவறு முழுக்க அருச்சுனாவில்தான்.

https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/862-parliamentary-elections-act.html

4 hours ago, Kandiah57 said:

இல்லையே  அவர்களும்  தங்களுடைய தொழில்களை   நிறுத்தி விட்டு தேர்தலில் நிற்கலாம்  ....இல்லையா ??   இந்த சட்டம் பாரபட்சம் ஆனது

தொழில் இருந்தால்தானே நிறுத்த🤣.

———

சட்டத்தில் ஒரு பாரபட்சமும் இல்லை.

மிக சுருக்கமாக—-

அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றால் தேர்தலில் நிற்க முடியாது. இடை விடுப்பு ஆவது எடுக்க வேண்டும்.

பல ரீச்சர்கள் இப்படி இடை-விடுப்பு எடுத்து விட்டு போட்டியிட்டனர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இது தேர்தல் ஆணையாளரின் வேலை அல்ல. ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் துப்பு துலக்கி கொண்டிருக்க முடியாது.

வேட்புமனு கொடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம்.

கீழே உள்ள லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தை நிரப்பி அதோடு ஜேபி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும்.

தகவல்கள் சரியாயின் வேட்புமனு ஏற்கப்படும்.

ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை.

இந்த சின்ன விடயத்தை கூட கிரமமாக செய்யமுடியாதவர்கள் இப்படி வழக்குகளை சந்தித்து பதவி இழப்பார்கள். 

இதில் சட்டத்திலோ, நடைமுறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ எந்த தவறும் இல்லை. தவறு முழுக்க அருச்சுனாவில்தான்.

https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/862-parliamentary-elections-act.html

மிகவும் தெளிவான விளக்கம். நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை.

இது தெரியும்,...கடந்த காலத்தில் பலருடைய. விண்ணப்பங்கள்  நிராகரித்து உள்ளார்கள்  .....ஒரு விண்ணப்பம்   எற்றுக்கொள்வது   அல்லது நிராகரிப்பது   யார்  ??   

இந்த விண்ணப்பம் ஏன் எற்றுகொள்ளப்படடது  ???   

ஒரு விண்ணப்பம்.  சரியாகவுமிருக்கலாம். அல்லது பிழையாகவுமிருக்கலாம்.   ....அர்ச்சுனா  தான் வேலை செய்யவில்லை எனறு விண்ணப்பித்தாரா.??   

இல்லையென்றால் எப்படி எற்றுக்கொண்டார்கள் அவரது விண்ணப்பத்தை  ??  அது  மாவட்ட தெரிவு அதிகாரிகள் அல்லது தேர்தல் ஆணையத்தில் வேலை செய்யும் அதிகாரிகள்  யாராக இருந்தாலும்  ......எப்படி எற்றுக்கொண்டிருந்தார்கள். ?? 

அர்ச்சுனா   தோல்வி அடைந்து இருந்தால்  இந்த வழக்கு தாக்கல்  செய்யப்பட்டிருக்காது ........அவர் வென்றது,.ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது  ....ஊழல்வாதிகளுக்கும்.   அவர்களின் ஆதரவாளர்களுகும். 

பிடிக்கவில்லை .பெரிய பிரச்சனை ஆகிவிட்டது  

யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால்  

காலியிலுள்ள  ஊழல்வாதிகள். கவலைப்படுகிறார்கள்.  அவர்களையும் பாதிக்கின்றது   ஆகவே அர்ச்சுனாவை  இலங்கையிலுள்ள ஊழல்வாதிகள். அனைவரும் எதிர்க்கிறார்கள்  

விரும்பவில்லை    அவர் பாராளுமன்றத்தில் இருப்பதை விரும்பவில்லை   விண்ணப்பம்  சரி  பிழைக்கு அப்பால்.   இது தான் உண்மை நிலை    ஒரு ஊழல்வாதி   பிழையான. விண்ணப்பத்துடன் பாராளுமன்றம் போகலாம்” இருக்கலாம்        🙏

வழக்கின் முடிவையும் பார்ப்போம்   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது தெரியும்,...கடந்த காலத்தில் பலருடைய. விண்ணப்பங்கள்  நிராகரித்து உள்ளார்கள்  .....ஒரு விண்ணப்பம்   எற்றுக்கொள்வது   அல்லது நிராகரிப்பது   யார்  ??   

இந்த விண்ணப்பம் ஏன் எற்றுகொள்ளப்படடது  ???   

ஒரு விண்ணப்பம்.  சரியாகவுமிருக்கலாம். அல்லது பிழையாகவுமிருக்கலாம்.   ....அர்ச்சுனா  தான் வேலை செய்யவில்லை எனறு விண்ணப்பித்தாரா.??   

இல்லையென்றால் எப்படி எற்றுக்கொண்டார்கள் அவரது விண்ணப்பத்தை  ??  அது  மாவட்ட தெரிவு அதிகாரிகள் அல்லது தேர்தல் ஆணையத்தில் வேலை செய்யும் அதிகாரிகள்  யாராக இருந்தாலும்  ......எப்படி எற்றுக்கொண்டிருந்தார்கள். ?? 

நான் தந்த லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடையை மட்டுமே அதிகாரி சரி பார்ப்பார்.

இந்த தகவல்கள் சரியில்லை எண்டால் மட்டுமே அவரால் நிராகரிக்க முடியும்.

4 hours ago, Kandiah57 said:

அர்ச்சுனா   தோல்வி அடைந்து இருந்தால்  இந்த வழக்கு தாக்கல்  செய்யப்பட்டிருக்காது .......

சிலவேளை அவரின் அரச தொழிலுக்கு ஆப்பு வைக்க ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்க கூடும்.

4 hours ago, Kandiah57 said:

அவர் வென்றது,.ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது  ....ஊழல்வாதிகளுக்கும்.   அவர்களின் ஆதரவாளர்களுகும். 

பிடிக்கவில்லை .பெரிய பிரச்சனை ஆகிவிட்டது  

யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால்  

காலியிலுள்ள  ஊழல்வாதிகள். கவலைப்படுகிறார்கள்.  அவர்களையும் பாதிக்கின்றது   ஆகவே அர்ச்சுனாவை  இலங்கையிலுள்ள ஊழல்வாதிகள். அனைவரும் எதிர்க்கிறார்கள்  

விரும்பவில்லை    அவர் பாராளுமன்றத்தில் இருப்பதை விரும்பவில்லை   விண்ணப்பம்  சரி  பிழைக்கு அப்பால்.   இது தான் உண்மை நிலை    ஒரு ஊழல்வாதி   பிழையான. விண்ணப்பத்துடன் பாராளுமன்றம் போகலாம்” இருக்கலாம்        🙏

இது உங்கள் நிலைப்பாடு.

ஆனால் சட்டதின் படி பிழை அருச்சுனாவில்தான் என்பதை மட்டுமே நான் எழுதுகிறேன்.

வழக்கு போட்டது ஊழல்வாதிகள் என்பதால், சட்டமோ, தேர்தல் அதிகாரியோ பிழை என கூற முடியாது.

4 hours ago, Kandiah57 said:

வழக்கின் முடிவையும் பார்ப்போம்   

ஓம் நானும் கூட தெளிவில்லாத தகவல்களை வைத்தே எழுதுகிறேன்.

சட்டம் தன் கடமையை செய்யும் போது யார் சரி, பிழை என தெரியவரும்.

ஆனால் ஒன்று - இந்த வழக்குக்கு ஒரு முகாந்திரமும் இல்லை எனில், உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு அருச்சுனா கோரி இருக்கலாம். அப்படி கோராதது…யோசிக்க வேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் சட்டதின் படி பிழை அருச்சுனாவில்தான் என்பதை

மன்னிக்கவும் உங்கள் இந்த பதில் மிகவும் தவறானது.காரணம்  ஒவ்வொரு இலங்கை குடிமகனும்.  தகுதி உள்ளவர்கள் இல்லாதவர்கள்  அனைவரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க முடியும்    

தகுதி இல்லாதவர் விண்ணப்பித்து விட்டார்  எனவே… அவர் குற்றவாளி என்று கூற முடியுமா ??  இல்லை கண்டிப்பாக ஒருபோதும் கூற முடியாது  

இந்த விண்ணப்பங்களை  பரிசீலனை செய்பவர்கள்  சட்டப்படி ஒரு பிழையான.  விண்ணப்பத்தை எற்றுக்கொண்டு அனுமதி வழங்குகிறது குற்றம் இல்லையா ??  

ஆகவே  அர்ச்சுனாவின். விணணப்பம். பிழை என்றால்   அவர் குற்றவாளி இல்லை   அந்த விண்ணப்பம். யாரால் பரிசீலித்து எற்றுக்கொள்ளப்பட்டதோ    அந்த எற்றுகொண்ட. நபர்  

குற்றவாளி  இது தான் என்னுடைய வாதம்   ஆகவே  அந்த நபர் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் ...லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தாரா.???  

மட்டக்களப்பில் வியாழேந்திரனை   நிராகரித்தது போல்  ஏன் செய்யவில்லை  ???   

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுக்கும் ஒரு தேர்தலில், "ஒவ்வொருவரும்  சொல்வது உண்மையா?" என்று விண்ணப்பம் வாங்குபவர் வெளியே சென்று விசாரிக்க ஆரம்பித்தால் தேர்தல் நடத்த ஒரு வருடம் தான்டி விடும்😂

இது போன்ற விண்ணப்பங்களை நிரப்பும் போது "என் அறிவுக்கெட்டியவரையில் நான் சொல்வது உண்மை. அப்படி உண்மைக்கு மாறாக இருந்தால் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வேன்" என்று இருக்கும் பந்தியின் கீழ் தான் விண்ணப்ப தாரி கையெழுத்து வைப்பார். இதை "under penalty of perjury" என்பார்கள். எனவே, விண்ணப்பத்தில் அர்ச்சுனா தவறான தகவலைக் கொடுத்திருந்தால், தான் தவறுக்கு பொறுப்பு என்றும் அன்றே கையெழுத்து வைத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

என்ன தவற???????????

அரசாங்க வேலை செய்வோர்   கையெழுத்திட்டுத் தான்  வேலை செய்கிறார்கள் ....அதாவது பிழை விடமாட்டேன்” என்று   விட்டால் பதவி இழப்பேன்.  என்பதை எற்றுக்கொண்டு கையெழுத்திட்டு தான்     

8 minutes ago, Justin said:

விண்ணப்பம் வாங்குபவர் வெளியே சென்று விசாரிக்க ஆரம்பித்தால் தேர்தல் நடத்த ஒரு வருடம் தான்டி விடும்

அப்படியென்றால் இன்னும் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் 🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kandiah57 said:

மன்னிக்கவும் உங்கள் இந்த பதில் மிகவும் தவறானது.

56 minutes ago, Kandiah57 said:

தகுதி இல்லாதவர் விண்ணப்பித்து விட்டார்  எனவே… அவர் குற்றவாளி என்று கூற முடியுமா ??  இல்லை கண்டிப்பாக ஒருபோதும் கூற முடியாது  

மன்னிக்கவும். இங்கே என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்ற உங்கள் புரிதல்தான் மிக தவறானது.

இங்கே அருச்சுனா சட்டத்தை மீறி குற்றம் இழைத்தார் - “குற்றவாளி” - என எந்த வழக்கும் பதிவாகவில்லை.

அருச்சுனா தெரிவான முறை தேர்தல் சட்டங்களை மீறியதாக உள்ளது என்பது மட்டுமே வழக்கு.

முடிவு? 

மீறி இருப்பின் - அவர் பதவி இழப்பார். இல்லை எனில் தொடர்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்த விண்ணப்பங்களை  பரிசீலனை செய்பவர்கள்  சட்டப்படி ஒரு பிழையான.  விண்ணப்பத்தை எற்றுக்கொண்டு அனுமதி வழங்குகிறது குற்றம் இல்லையா ??

3ம் தடவையாக சொல்கிறேன்.

இப்படி தேர்வத்தாட்சி அதிகாரி செய்ய அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. படிவம் சொல்லப்பட்ட முறையில் பூர்த்தியாக்கபட்டிருப்பின் ஏற்பார். இல்லை என்றார் மறுப்பார்.

ஒவ்வொரு வேட்பாளரின் பின்புலத்தை, தகுதியை, தகுதியின்மையை சோதிப்பது அவர் வேலை அல்ல. அப்படி சோதித்தால் அவர் தன் அதிகார வரம்பை மீறியவராவார். 

டயனா கமகே, கீதா குமாரசிங்க இவ்வாறு  இரெட்டை குடியுரிமை இருக்கும் போது போட்டியிட்டார்கள். ஆனால் பின்னர் நீதிமன்று அவர்களை பதவி நீக்கியது.

1 hour ago, Kandiah57 said:

ஆகவே  அர்ச்சுனாவின். விணணப்பம். பிழை என்றால்   அவர் குற்றவாளி இல்லை   அந்த விண்ணப்பம். யாரால் பரிசீலித்து எற்றுக்கொள்ளப்பட்டதோ    அந்த எற்றுகொண்ட. நபர்  

குற்றவாளி  இது தான் என்னுடைய வாதம்

எவரும் குற்றவாளி இல்லை. அருச்சுனாவின் தெரிவு முறையானதா இல்லையா என்பதே கேள்வி.

1 hour ago, Kandiah57 said:

மட்டக்களப்பில் வியாழேந்திரனை   நிராகரித்தது போல்  ஏன் செய்யவில்லை  ???  

அவர் விண்ணப்பத்தில் பிழை விட்டார்.

அருச்சுனா விண்ணப்பத்தில் பிழை விடவில்லை.

ஆனால் போட்டியிட தகுதியில்லாத போது போட்டியிட்டு வென்றுள்ளார் (என்பதே வழக்கு). 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2025 at 13:38, ஏராளன் said:

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3ம் தடவையாக சொல்கிறேன்.

நாலாம் தடவை சூடு தான், கதை பேச்சு இல்லை ..........................🤣.

புதுமணத் தம்பதிகள் Grand Canyonக்கு போன அந்தக் கதையில் வந்தது போல............😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.