Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 

16 Jan, 2025 | 04:02 PM
image
 
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. 

இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. 

பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை)  நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல்  சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது.

அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

011__4_.jpg

011__5_.jpg

011__6_.jpg

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவின் ஆன்மா வந்த இடம்….

அடுத்ததென்ன?

விகாரைதான்.

நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

பிக்குவின் ஆன்மா வந்த இடம்….

அடுத்ததென்ன?

விகாரைதான்.

நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏

நீங்கள் நல்லஎண்ணத்துடன் இப்படி எழுதுகின்றீர்கள் ..என்னுடைய குறுக்கால் போன புத்தி இப்படி எண்ண வைக்கின்றது..
இதில் பர்மா தேசத்து "ரொகின்கொஇஸ்லாமியர்கள்" வந்திருக்கலாம் எண்டு ..
இராணுவத்தின‌ரும் ஊர் மக்களும் புத்த மத வெறியர்களின் செயலைப்பற்றி விவாதிக்க, இஸ்லாமிய அகிம்சாவாதிகள் "ரொகின்கோ அகதிகளை" பொம்மைவெளியில் மறைத்து வைத்திருக்கலாம் ...எண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி பர்மாவிலிருந்து மூங்கில் வீடுகள் மட்டும் கடலில் மிதந்து வந்தது. இது வாடைக்காற்றுக் காலத்தில், அப்பதான் எங்களின் பட்டங்கள் கட்டி பறக்கவிடும் காலமும்.

இந்த புத்த பெருமான் வந்த வீட்டில் ஒரு மூங்கிலையும் காணவில்லை. கொஞ்ச மூங்கில்களையும் வீட்டுக்குள் வைத்து அனுப்பினால் என்ன குறைந்தா போய் விடுவார்கள் பர்மாவில் இருப்பவர்கள்..................

பல வருடங்களின் முன் ஒரு மாதா சொரூபம் எங்களூர் கடலுக்கு மிதந்து வந்தது. இன்று ஒரு மாதா கோவில் கடற்கரையில் இருக்கின்றது. புத்த பெருமானுக்கு எங்களூரில் அவ்வளவு வரவேற்பு இருக்காது...........  ஆனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் இப்பொழுது புத்தருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.........     

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் உடைச்சுக் கொட்டின வீட்டைப் பார்க்கவில்லைப் போல நிறைய மூங்கில் கிடக்குது....வல்வெட்டித்துறையார் பட்டம் கட்ட எடுக்கமுடியாது. அது கிடக்கிறது  நாகர்கோவில் பாருங்கோ..எத்தினை விதம்விதமா  யூடுயூப் காரர் போட்டிருக்கினம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

நீங்கள் உடச்சுக் கொட்டினன் வீட்டைப் பார்க்கவில்லைப் போல நிறைய மூங்கில் கிடக்குது...அது கிடக்கிற   நாகர்கோவில் பாருங்கோ..எத்தினை விதம்விதமா  யூடுயூப் காரர் போட்டிருக்கினம்

👍.....................

நான் யூடியூப் ஒன்றும் பார்க்கவில்லை, அல்வாயன்................. பர்மாக்காரர் பர்மாக்காரர் தான், எங்களுக்கு மூங்கில் கொடுக்கும் தெய்வங்கள் அவர்கள்.............

அந்த நாட்களிலும் அம்பன், குடத்தனை, நாகர்கோயில் பக்கங்களில் மூங்கில் வீடுகள் வந்து ஒதுங்கியிருக்கின்றன. நாங்கள் அதை விலை கொடுத்து வாங்கியும் இருக்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அப்ப சங்கமித்திரையும் உப்படித்தான் கடலில் மிதந்து வந்து மாதகலில் ஒதுங்கினவவோ?யஸ்ட் மிஸ்ட்😀😀 கொஞ்சம் விட்டா யாழ்கள உறவுகேளே வட மாகாணம் புத்தரின்ட கோவணம்  என கருத்து எழுதினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...அது சரி உந்த போர்காலத்தில் இப்படி ஏதாவது ஒதுங்கின சிலமன் ...அது என்ன இப்ப மாத்திரிம் வருது பர்மாவில் இருந்து..

இஸ்லாமிய அகதிகள் வ்ருயினம்,புத்தரின்ட சிலை வருது ...சூரிய புதல்வன் கர்ணன் வர்ல்லம் என்றால் ஏன் புத்தரின்ட வாரிசுகள்,இஸ்லாமிய் வாரிசுகள் வர  முடியாது

Just now, putthan said:

அப்ப சங்கமித்திரையும் உப்படித்தான் கடலில் மிதந்து வந்து மாதகலில் ஒதுங்கினவவோ?யஸ்ட் மிஸ்ட்😀😀 கொஞ்சம் விட்டா யாழ்கள உறவுகேளே வட மாகாணம் புத்தரின்ட கோவணம்  என கருத்து எழுதினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...அது சரி உந்த போர்காலத்தில் இப்படி ஏதாவது ஒதுங்கின சிலமன் ...அது என்ன இப்ப மாத்திரம் வருது பர்மாவில் இருந்து..

இஸ்லாமிய அகதிகள் வருயினம்,புத்தரின்ட சிலை வருது ...சூரிய புதல்வன் கர்ணன் வரல்லம் என்றால் ஏன் புத்தரின்ட வாரிசுகள்,இஸ்லாமிய வாரிசுகள் வர  முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அப்ப சங்கமித்திரையும் உப்படித்தான் கடலில் மிதந்து வந்து மாதகலில் ஒதுங்கினவவோ?யஸ்ட் மிஸ்ட்😀😀 கொஞ்சம் விட்டா யாழ்கள உறவுகேளே வட மாகாணம் புத்தரின்ட கோவணம்  என கருத்து எழுதினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...அது சரி உந்த போர்காலத்தில் இப்படி ஏதாவது ஒதுங்கின சிலமன் ...அது என்ன இப்ப மாத்திரிம் வருது பர்மாவில் இருந்து..

இஸ்லாமிய அகதிகள் வ்ருயினம்,புத்தரின்ட சிலை வருது ...சூரிய புதல்வன் கர்ணன் வர்ல்லம் என்றால் ஏன் புத்தரின்ட வாரிசுகள்,இஸ்லாமிய் வாரிசுகள் வர  முடியாது

உந்த சங்கமித்தை வந்திறங்கிய கோயிலடிக்கு போனனான்..வடிவன படங்கள்  சங்கமித்தையோடையும் எடுத்து...அவவந்த கப்பலோடையும் எடுத்தனான்...சும்மா சொல்லக்கூடாது புத்தர் ..வந்தாலும் வந்தா வடிவான கப்பலும் ..ஆளுந்த்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

உந்த சங்கமித்தை வந்திறங்கிய கோயிலடிக்கு போனனான்..வடிவன படங்கள்  சங்கமித்தையோடையும் எடுத்து...அவவந்த கப்பலோடையும் எடுத்தனான்...சும்மா சொல்லக்கூடாது புத்தர் ..வந்தாலும் வந்தா வடிவான கப்பலும் ..ஆளுந்த்தான்...

மொட்டை தலையா ? கூந்தல் அழகியா ....
"உன் மலர் கூந்தல் அலைபாய
அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது"...

இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற வாறு இருந்தாவா?

😀

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, putthan said:

மொட்டை தலையா ? கூந்தல் அழகியா ....
"உன் மலர் கூந்தல் அலைபாய
அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது"...

இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற வாறு இருந்தாவா?

😀

இதேதான்....உந்தப் பெரிய இடத்தை..ஆமிக்காவல்..போட்டு.ஒரு பிக்குவை விளக்குமாறும் கையுமாநிற்க கண்டனான்....

நல்லவேளை நாகர்கோவில் கப்பலை ஆமி உடைசது...அதிலை இருந்த 18 சிலையையும் அந்த இடத்தில் வைத்துவிகாரை கட்டியிருந்தால் நாகர்கோவில் நாகதீபதான்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

இதேதான்....உந்தப் பெரிய இடத்தை..ஆமிக்காவல்..போட்டு.ஒரு பிக்குவை விளக்குமாறும் கையுமாநிற்க கண்டனான்....

நல்லவேளை நாகர்கோவில் கப்பலை ஆமி உடைசது...அதிலை இருந்த 18 சிலையையும் அந்த இடத்தில் வைத்துவிகாரை கட்டியிருந்தால் நாகர்கோவில் நாகதீபதான்...

உங்களுடைய வயது என்ன என்று எனக்கு தெரியாது ...என்னுடைய வயது 60 வதை தாண்டி விட்டது ...நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது(ஆயுத போராட்டம் தொடங்க முதல்) நயினாதீவுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது அங்குபுத்த விகாரையில் இரண்டு பிக்குமார்தான் இருந்தனர் ...நயினாதீவில்( நானா என்ற சொல் நயினா என மாறிவிட்டது என இஸ்லாமிய சகோதரர்கள் சொல்வார்கள் அதையும் ஆமா போட்டு அகிம்சைவாதிகளாக எம்மவர்கள் இருக்க அந்த நயின நாக பூஷனி அருள் புரிவாராக)   உள்ள ஒர் பிராமண குடும்பத்தினரின் வீட்டில் மதிய உணவை பணம் கொடுத்து பெற்று கொண்டோம்..கடந்த வருடம் சென்றிந்தேன் புத்த விகாரை ஆயுதபலத்தினால் நன்றாகவே பலமடைந்துள்ளது ...பெளத்த வெறியர்கள் (அப்பதான் ஏனைய மத வெறியர்கள் கருத்து பகிர இலகுவாக இருக்கும்) எது எப்படியோ மறைந்த  எம்மவர்களுக்காக தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்போம் ... குரல் கொடுப்போம் ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 

16 Jan, 2025 | 04:02 PM
image
 
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. 

இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. 

பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை)  நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல்  சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது.

அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

011__4_.jpg

011__5_.jpg

011__6_.jpg

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!  | Virakesari.lk

அந்த ஊரில் செத்தவீட்டுக்கு வைச்ச படையல் போலிருக்குது. 

Edited by RishiK

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

நான் யூடியூப் ஒன்றும் பார்க்கவில்லை, அல்வாயன்................. பர்மாக்காரர் பர்மாக்காரர் தான், எங்களுக்கு மூங்கில் கொடுக்கும் தெய்வங்கள் அவர்கள்.............

அந்த நாட்களிலும் அம்பன், குடத்தனை, நாகர்கோயில் பக்கங்களில் மூங்கில் வீடுகள் வந்து ஒதுங்கியிருக்கின்றன. நாங்கள் அதை விலை கொடுத்து வாங்கியும் இருக்கின்றோம். 

விஜயன் இப்போதைய ஒரிசா பகுதியில் இருந்து வந்து இருந்தால், ஒரிசாவில் கப்பல் பயணத்தை தொடங்கி வரவில்லை (என்றே உறுதியாக நம்புகிறேன்).

விஜயன் மற்றும் கூட்டாளிகள் என்று அடையாளப்படுத்தப்படும் கூட்டம், தரைவழி பிரயாணித்து, இப்போதைய  ராமேஸ்வரம் பகுதியை அல்லது அதற்கு அண்மித்த பகுதியை அடைந்து   அங்கிருந்து  கடல் பயணம் செய்து இருக்க வேண்டும்.

fluid மற்றும் hydro mechanics அடிப்படையில், ஒரிசா வங்காளவிரிகுடாபகுதியில் இருந்து வரும் நீரோட்டம் இலங்கைத் தீவின் கடல்படுக்கை விளிம்பை தட்டும் போது திசை மாற தொடங்கி விடும்.

பருவக்காற்று ஓட்டத்துடன் ஒப்பிடலாம். பருவக்காற்று மலைநாட்டின் அடிவாரத்தை  தட்டும்போது , பக்கவாட்டாக விலத்தி,  உயர்ந்து அதன் ஓட்டம் மாறும் 

அதே போலவே, நீர்ச்சுழிக்கும், இலங்கைத்தீவின் கடல்படுக்கை அடிவாரத்தை தட்டும்போது உயர, மற்றும் பக்கவாட்டாக விலத்தும்.

அனால் இலைகத்தீவின்புவிஅமைப்பு, தென்பகுதியில் பரந்த திறந்த வெளி கடல் மற்றும் ஒப்பீட்டளவில் ஆழமும்  கூடியதால், சுழியின் ஓட்டம்  அதை நோக்கியே செல்லும்   (least resistance அடிப்படையில்)

யாழ்குடாநாடு - மன்னார் கடல் வெளியும் கடல் படுக்கையும்  ஒடுக்கமும், ஒப்பீட்டளவில்  வெகுவாக உயர்வதும் (செய்மதி படங்களில் மன்னார் - இராமேஸ்வரம் இடையே உள்ள கடல் படுக்கை தெரிகிறது) நீர்ச்சுழியிற்கு ஒப்பீட்டளவில் மிகக் கூடிய தடை.    

அதாவது, அந்த  பகுதி வங்காளவிரிகுடாவில் இருந்து வரும்   நீர்ச்சுழி யாழ்குடாநாடு - மன்னார் கடலை தாண்ட வேண்டுமாயின் ஒடுங்கும் இடைவெளியையும், யாழ் குடாவின் மேற்கு பக்கத்தில் இருந்து மன்னார்  நோக்கி  உயரும் கடல் படுக்கையயும் கடக்க வேண்டும் (காற்று கூட முதலில் பக்வடாகவே விலத்தும், அப்படி விலத்துவத்து கடினம் என்றால் தான் உயர்வது வரும் வேகத்துக்கு அழுத்தம் அதிகரிக்க.)  

இதனாலேயே, இலங்கைத் தீவின் கிழக்கு பக்கமாக அந்த பகுத்தியில் ஒன்றில் விடப்பட்ட, அல்லது தொலைந்த  கடல்கலங்கள், மிதக்க கூடிய பொருட்கள் நீங்கள் சொல்லும் பகுதி கடலில் அவ்வப்போது கண்டறியப்படுகிறது.

நான் நினைக்கிறன் நீங்கள் சொல்லும் பகுதி கடல் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஆழம் கூடியவையாக இருக்க வேண்டும் (உ.ம். காங்கேசன்துறை ,  வல்வெட்டித்துறை, பருத்தி துறையுடன், அதாவது குடாநாட்டின் மேல்விளிம்பு கடல் ஆழத்துடன்  ஒப்பிடும் போது) 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

கடந்த வருடம் சென்றிந்தேன் புத்த விகாரை ஆயுதபலத்தினால் நன்றாகவே பலமடைந்துள்ளது ...பெளத்த வெறியர்கள் (அப்பதான் ஏனைய மத வெறியர்கள் கருத்து பகிர இலகுவாக இருக்கும்) எது எப்படியோ மறைந்த  எம்மவர்களுக்காக தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்போம் ... குரல் கொடுப்போம் ...

சங்கமித்திரை மாதகல்லுக்கு வந்தார் என்ற தகவலை விட போன வருடம் நீங்கள் நயினாதீவிற்கு போனது முக்கியமானது............ஏனென்றால் நானும் போன வருடம் நயினாதீவிற்கு போயிருந்தேன்.......... பாதை ஒன்றாகத் தெரிகின்றது...................🤣.

என்னால் மறக்க முடியாத விடயம்: கோவிலுக்கு அருகில் இருக்கும் குளிர்பானக் கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த மின்விசிறியைப் போட, அந்தக் கடைக்காரார் சொன்னார், "மின்விசிறி வேலை செய்யாது. வேலை செய்யும் என்றால் நானே போட்டிருப்பேனே..................".

அப்படியே அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது. அவரவர்களுக்கு அவரவர்கள் பிரச்சனை. அம்மனும், புத்தரும் பாம்புக்கு மேல இருந்து சும்மா பர்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இதனாலேயே, இலங்கைத் தீவின் கிழக்கு பக்கமாக அந்த பகுத்தியில் ஒன்றில் விடப்பட்ட, அல்லது தொலைந்த  கடல்கலங்கள், மிதக்க கூடிய பொருட்கள் நீங்கள் சொல்லும் பகுதி கடலில் அவ்வப்போது கண்டறியப்படுகிறது.

நான் நினைக்கிறன் நீங்கள் சொல்லும் பகுதி கடல் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஆழம் கூடியவையாக இருக்க வேண்டும் (உ.ம். காங்கேசன்துறை ,  வல்வெட்டித்துறை, பருத்தி துறையுடன், அதாவது குடாநாட்டின் மேல்விளிம்பு கடல் ஆழத்துடன்  ஒப்பிடும் போது) 

👍....................

வடமராட்சி கிழக்கு பக்கம் இருக்கும் அந்தக் கடல், நீங்கள் சொல்வது போலவே, மிக ஆழமானவை மற்றும் கட்டுப்பாடற்றவை. கற்கோவளத்தில் இருந்து கடலின் வடக்கு பக்கமும், கிழக்கு பக்கமும் வேறு வேறாகின்றன.

வடக்கு பக்கம் இருக்கும் கடலை பெண் கடல் என்றும், கிழக்கு பக்கம் இருக்கும் கடலை ஆண் கடல் என்றும் சொல்வார்கள். பெண் கடல் சாந்தமாகவும், ஆண் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொல்வார்கள் போல. 

கடல்கள் பெயருக்கு ஏற்றது போல என்றும் சரியாகத்தான் இருக்கின்றன, ஆனால்...............🤣.

வடக்கு கடலில் நிலத்தில் உருண்டு பிரண்டு விளையாடுவது போல கடலை மதிக்காமல் வாழ்ந்து விட்டு, முதன்முதலில் கிழக்கு கடலில் சுருட்டி இழுத்த அலையும், காலுக்கு கீழே சரிந்து கொண்டே போகும் கடலின் அடியும் கொடுத்த திகைப்பு நல்ல ஒரு பாடம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

உங்களுடைய வயது என்ன என்று எனக்கு தெரியாது ...என்னுடைய வயது 60 வதை தாண்டி விட்டது ...நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது(ஆயுத போராட்டம் தொடங்க முதல்) நயினாதீவுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது அங்குபுத்த விகாரையில் இரண்டு பிக்குமார்தான் இருந்தனர் ...நயினாதீவில்( நானா என்ற சொல் நயினா என மாறிவிட்டது என இஸ்லாமிய சகோதரர்கள் சொல்வார்கள் அதையும் ஆமா போட்டு அகிம்சைவாதிகளாக எம்மவர்கள் இருக்க அந்த நயின நாக பூஷனி அருள் புரிவாராக)   உள்ள ஒர் பிராமண குடும்பத்தினரின் வீட்டில் மதிய உணவை பணம் கொடுத்து பெற்று கொண்டோம்..கடந்த வருடம் சென்றிந்தேன் புத்த விகாரை ஆயுதபலத்தினால் நன்றாகவே பலமடைந்துள்ளது ...பெளத்த வெறியர்கள் (அப்பதான் ஏனைய மத வெறியர்கள் கருத்து பகிர இலகுவாக இருக்கும்) எது எப்படியோ மறைந்த  எம்மவர்களுக்காக தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்போம் ... குரல் கொடுப்போம் ...

நானும் அம்மாவின் சீலைதலப்பை பிடித்தபடி ஒருதடவை போயிருகின்றேன்..இப்ப கடைசியாய்.கடந்த ஒக்டோபர் முதல் வாரத்தில் போயிருகின்றேன்..முதலில் ஏமிலாந்தியாயும் ..இப்ப பொறுப்புகூடிய அப்பனாகவும் போனேன்..வ்சயம் என்னவென்றால் அதே நீலநிற மாற்றமில்லாத கடற்கலங்கள்  என்பதே..பக்தி நாகபூசனிக்கு மட்டும்தான்....நாகவிகாரைகு அல்ல..அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை..தேசியம் இரத்ததில் ஓடுவது மட்டுமில்லை என்  கிளைகளுக்கும் பரப்பியுள்ளேன்...

சில இடங்களில் பவத்த அடையாளங்களை பார்த்தது..கனடாவில் பிறந்த பெறாமக்களுக்காக.அன்றி விருபத்துடன் அல்ல..என் பிள்ளைகளை அழைத்துச் செல்வேன்...அப்போது இம்மாதிரி நடக்காது..பிள்ளைகளும் அதனை விரும்பமாட்டர்கள்.. நிச்சயம் என் வேண்டுதல் நிறைவு செய்த அன்னையை தரிசிக்க பிள்ளைகள்  போவேன்...விகாரைக்கு அல்ல...ஒருநாளை கோவிலில் செலவு செய்தேன்...கடும் வெய்யில்..அந்த அன்னதானச் சாப்பாடு வாழ்நாளில் கிடைக்கும் வரம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

அன்னதான சாப்பாடு உண்மையிலயே வரம் தான்...கிளீன் சிறிலங்காவில் ...ந‌யினா தீவுக்கு செல்லும் படகுகளுக்கும் சில கடடுப்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்..மரத்தடியினால் கொன்றோல் (ஸ்ரெயரின்) பண்ணும் படகுகளும் பயணிகளை ஏற்றி செல்கின்றது 

10 hours ago, RishiK said:

அந்த ஊரில் செத்தவீட்டுக்கு வைச்ச படையல் போலிருக்குது. 

பர்மா கஞ்சா எத்தனை கிலோ வந்திச்சோ? போஸ்டர்கள் எல்லாம் புதுசா இருக்கிறது ...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பிக்குவின் ஆன்மா வந்த இடம்….

அடுத்ததென்ன?

விகாரைதான்.

நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏

ஒரு சிறிய திருத்தம் 

ஒன்றல்ல பதினெட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

அந்த அன்னதானச் சாப்பாடு வாழ்நாளில் கிடைக்கும் வரம்..

அந்த தாமரை(?) இலை சாப்பாடு அமிர்தம்❤️.

20 minutes ago, putthan said:

டகுகளுக்கும் சில கடடுப்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்..மரத்தடியினால் கொன்றோல் (ஸ்ரெயரின்) பண்ணும் படகுகளும் பயணிகளை ஏற்றி செல்கின்றது 

படகில் ஆளுக்கு ஒரு மிதவை கவசம் தந்தார்கள்.

இன்ப அதிர்சியாக இருந்தது.

இதை விட மோசமான நெடுந்தீவு, மூதூர் பயணங்களில் முன்பு எதுவும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

...........".

அப்படியே அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது. அவரவர்களுக்கு அவரவர்கள் பிரச்சனை. அம்மனும், புத்தரும் பாம்புக்கு மேல இருந்து சும்மா பர்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.

உண்மை தான்...கோவிலின் சுவரில் பல சரித்திரங்களை கீறியும் எழுதியும் வைத்துள்ளனர் ...அன்னிய படையினர் இடித்து கடலில் போட்ட விடயங்கள் எழுதி வைக்கப்பட்டுளது....எது நடந்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என புத்தரும் ,அம்மனும் நினைக்கின்றனர் போலும் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 15:24, பிழம்பு said:

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 

16 Jan, 2025 | 04:02 PM
image
 
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. 

இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. 

பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை)  நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல்  சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது.

அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

011__4_.jpg

011__5_.jpg

011__6_.jpg

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!  | Virakesari.lk

பெளத்த துறவிகளுக்கு மட்டும்தான் இப்படி கிரியை/நினைவுகூறல் செய்யப்படுகின்றதோ? இது ஒரு அழகிய கலாச்சார உருவமாக, உயர்ந்த பண்பாடாக தென்படுகின்றது. 

அதுசரி நம்மட ஆட்கள் நமக்கு ஏதும் நடந்தால் ஒரு கடதாசி ஓடமாவது ஆற்றிலோ கடலிலோ நமது பெயரில் விடுவார்களா? சா.. சா. நடக்கிற விசயத்தை பற்றி யோசிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நியாயம் said:

பெளத்த துறவிகளுக்கு மட்டும்தான் இப்படி கிரியை/நினைவுகூறல் செய்யப்படுகின்றதோ? இது ஒரு அழகிய கலாச்சார உருவமாக, உயர்ந்த பண்பாடாக தென்படுகின்றது. 

அதுசரி நம்மட ஆட்கள் நமக்கு ஏதும் நடந்தால் ஒரு கடதாசி ஓடமாவது ஆற்றிலோ கடலிலோ நமது பெயரில் விடுவார்களா? சா.. சா. நடக்கிற விசயத்தை பற்றி யோசிப்போம். 

ஜல சமாதி என கேள்விப்பட்டதாக நினைவுள்ளது, இது ஆரம்ப கால நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம், ஆனால் நீரில் உடல்களை விடுவது சுகாதார கேடு என்பதால் இப்படி மாறியிருக்கலாம்.

ஆனால் தீபெத்தில் பெளத்த துற்விகளை ஆகாயத்தில் அடக்கம் செய்வது என உடல்களக் கூறாக்கி கழுகிற்கு போடுவார்களாம் என கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரசோதரன் said:

வடக்கு கடலில் நிலத்தில் உருண்டு பிரண்டு விளையாடுவது போல கடலை மதிக்காமல் வாழ்ந்து விட்டு, முதன்முதலில் கிழக்கு கடலில் சுருட்டி இழுத்த அலையும், காலுக்கு கீழே சரிந்து கொண்டே போகும் கடலின் அடியும் கொடுத்த திகைப்பு நல்ல ஒரு பாடம். 

ஆம்,சுனாமி வந்த போது. அன்று பலரிடம் இந்த கேள்வியை எழுப்பி இருந்தேன் 

சோமாலியாவுக்கு, காலிப் பக்கமாக இருக்கும் இலைங்கைத்தீவு பகுதிகளுக்கு பிடரியால் சுற்றி வளைத்து அடித்தது போல தாக்கிய சுனாமி, ஏன்  யாழ் குடாநாடு மேல்புறம், தீவு பகுதிகள், மற்றும் மன்னாரை கண்ணால் பார்க்ககூடிய அளவு ஒன்றும் செய்யவில்லை.

ஆயினும்,இந்த பகுதிகள் சுனாமி மையத்துக்கு  நேரடியாக, எந்த தடைகளும் இல்லாமல் (கடல்படுக்கை உயர்வதை தவிர, வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் பகுதிகள் 

அலைகள் (shock waves ) வந்து இருக்கலாம், ஆனால், அந்த மலைபோல உயரும் கடல்படுக்கை அமைப்பால் கொந்தளிப்புடன் அடங்கிவிட்டது போலும்.  

(மற்றது, shock waves கடற்படுக்கை அமைப்பை சிதைக்க கூடிய அளவு இல்லை என்றே ஊகிக்க வேண்டி இருக்கிறது)

இதை பற்றி அன்று நான் யோசிக்கவில்லை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சுனாமியால் களுத்தறை முதல் - கற்கோவளம் வரை பாதிக்கப்படவில்லை. ஆனால் கற்கோவளம் முதல் காலி வரை பாதிப்பு இருந்தது இதற்கு நீங்கள் சொல்லும் கண்டமேடை தான் காரணம்.

சமூககல்வியில் இதை பற்றி படித்துள்ளோம்.

இந்த பகுதியில் சீற்றம் குறைவு, சூரிய ஒளி ஊடுவல் அதிகம் என்பதால் கடல்வாழ் உயிரி வளமும் அதிகம்.

ஆனால் இது தனியே அலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

காற்று அடிக்கும் போது கடல்சீற்றம் இந்த பகுதியையும் தாக்கும்.

தனுஸ்கோடி அழிவு இப்படித்தான் ஏற்பட்டது.

விஜயன் நீரோட்டத்தின் வழியே அன்றி, காற்றின் தாக்கத்தினால்தான் இலங்கையின் வடமேற்கில் இறங்கியதாக நம்பபடுகிறது.

ஒரிசாவில் இருந்து புறப்பட்ட ஒரு இயந்திரமற்ற படகு கூட்டத்துக்கு இப்படி நடக்க வாய்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு பெரிய பரல் மாதிரி யாழ்ப்பாணம் கட்டைகாடு கடற் பிரதேசத்தில் கரை ஒதுங்கியுள்ளதாக லிங் ஒன்றில் பார்த்தேன்.இப்படியானவற்றை உடனயே அவ்விடத்தை விட்டு பொலிசார் அகற்றி விடுகிறார்களாம் காரணம்..வைரஸ் பரப்படுதலாகவும் இருக்கலாம் என்ற பயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.