Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்

18 Jan, 2025 | 12:44 PM

image

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என இன்று  சனிக்கிழமை (18)  பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. 

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

e74d41e9-a992-459c-a1fa-2f672aa745b1.jpe

d2d5b350-b2ae-422a-9b15-3ef3b080abe2.jpe

2ea8511e-4e71-47eb-bf60-6394eed7949d.jpe
https://www.virakesari.lk/article/204144

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவளித்த தமிழ் மக்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டோம்; அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிப்பு

1759776575.jpg

தமிழ் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக விடமாட்டோம். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி.

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயரை, திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என்று பெயர்மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வடக்கில் நாம் எதிர்பாராத ஆதரவைப் பெற்றிருக்கின்றோம். மூன்று எம்.பி.க்களை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நாம் பெற்றிருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

எமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதற்கான முதல் அறிகுறியாகவே வடக்கில் தேசிய பொங்கல் விழா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. எம் மீது நம்பிக்கை கொண்டு எமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டார்கள் - என்றார்.

 

https://newuthayan.com/article/ஆதரவளித்த_தமிழ்_மக்களை_நிச்சயம்_ஏமாற்ற_மாட்டோம்;_அமைச்சர்_ஹினிதும_சுனில்_செனவி_தெரிவிப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

தமிழ் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக விடமாட்டோம்

அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் ....

வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா  பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?

  • கருத்துக்கள உறவுகள்

“யாழ்பாணம் பண்பாட்டு மையம்” என்பதே உண்மையில் சிறந்த பெயர். இதற்கு பெயரில் மாற்றம் கொண்டுவரும் உரிமை சட்டப்படி யாழ் மாநகரசபைக்கே உள்ளது. நிர்வகிக்கும் உரிமையும் மாநகர சபையுடையதே. ஆனால் இவ்வாறாற பாரிய  கட்டங்களை உயர் தரத்தில் பராமரிக்கும் திறன் யாழ் மாநகரசபைக்கு  இப்போது இல்லையெனினும் இதன் பராமரிப்பு பயிற்சிகளை தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து  இதனை நடைமுறைப்படுத்தி,  இந்த கட்டடத்தை முழுமையாக பொறுப்பெடுப்பதற்கான வேலைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.  தேர்தலின் பின்னர் யாழ் மாநகரசபையை கைப்பற்றுபவர்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா

9 hours ago, island said:

யாழ்பாணம் பண்பாட்டு மையம்” என்பதே உண்மையில் சிறந்த பெயர்.

யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம்

அது தான் சிறப்பும் நியாயமும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கலாசார நிலையம் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதற்கு மோடி வரவேற்பு

 

nyEYDEiA-Narendra-Modi-1200x900.jpg

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதை  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

 

 

இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு நேற்று(18) 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டது.

 

 

இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின்  பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 

இந்திய - இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின்   பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

 

இது இந்தியா - இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

“”இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக””

இந்தியப் பாதிப்பு எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். 

 

அடுத்தது காவி நிறம் திருவள்ளுவருக்குப் பூசப்படும்.  எங்கள் அடிமைகளும் அதற்குத் தலையாட்டுவர். 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா

20 Jan, 2025 | 03:01 PM
image
 

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள  கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட வேளையில், அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், தலைமையிலான அரசாங்கத்திடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த கலாசார மையத்தினை இந்தியா எமக்கு அளித்திருக்கின்றது.

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அனைத்தும் எம்மாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததன. இவ்வாறான பின்னணியிலேயே குறித்த  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. 

கடந்த காலங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடன் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர்.

எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான சந்தேகங்கள், இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில், இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும்  கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 00:36, putthan said:

வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா  பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?

இது இந்தியா மாத்திப் போட்டுதையா.

நாம என்ன பண்ண முடியும்?

On 19/1/2025 at 00:36, putthan said:

அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் ..

அதுக்கு தான் அமைச்சர் தனது கவலையை வெளியிட்டுள்ளாரே?

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் கோட்டம் என்றே வைத்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

தலிவா உன்ட சந்தேகமும் என்ட சந்தேகமும் ஒரே மாதிரி இருக்கு ...நானும் நீங்களும் நண்பேன்டா...
ஒர் பெயர் மாற்றத்தை மாநகர சபைக்கு தெரியாமல் இந்தியா மாற்றுகிறது என்றால் சிறிலங்காவின் இறையாண்மை எங்கே போகின்றது ...யாழ்ப்பாணம் இந்தியாவின் யூனியன் டெரிட்டரியா...
 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 23:23, island said:

“யாழ்பாணம் பண்பாட்டு மையம்” என்பதே உண்மையில் சிறந்த பெயர். இதற்கு பெயரில் மாற்றம் கொண்டுவரும் உரிமை சட்டப்படி யாழ் மாநகரசபைக்கே உள்ளது. நிர்வகிக்கும் உரிமையும் மாநகர சபையுடையதே. ஆனால் இவ்வாறாற பாரிய  கட்டங்களை உயர் தரத்தில் பராமரிக்கும் திறன் யாழ் மாநகரசபைக்கு  இப்போது இல்லையெனினும் இதன் பராமரிப்பு பயிற்சிகளை தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து  இதனை நடைமுறைப்படுத்தி,  இந்த கட்டடத்தை முழுமையாக பொறுப்பெடுப்பதற்கான வேலைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.  தேர்தலின் பின்னர் யாழ் மாநகரசபையை கைப்பற்றுபவர்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது. 

உண்மை சரியான கருத்து ,ஒர் மாநகர சபையினை நடத்துவதற்கு கூட அந்த மக்களுக்கு அதிகாரமில்லை என்றால்  ?...இப்படியான சிறு சிறு பிரச்சனைகள் தான் இறுதியில் வளர்ந்து இன நல்லிணக்கத்துக்கு கெடு விளைவிப்பவை..வரலாறு தந்த பாடத்தை சிங்கள ஆதிக்க சக்திகள் இன்னும் கற்றுக்கொள்ளவிலை என்பது மிகவும் கவலையளிக்கும் விடயம்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 09:36, putthan said:

அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் ....

வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா  பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?

அனுர விசிறிகள் எதிர்பார்த்த மாற்றங்கள் இவைபோலும்... இன்னும் வரும். தமிழ்மொழிப் பிராந்தியங்களில் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுப்பதையே விரும்பாதவர்கள்தான் தமிழருக்குத் தீர்வுதரப்போகிறார்களாம். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 23:10, விளங்க நினைப்பவன் said:
On 19/1/2025 at 09:36, putthan said:

யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா

On 19/1/2025 at 13:23, island said:

யாழ்பாணம் பண்பாட்டு மையம்” என்பதே உண்மையில் சிறந்த பெயர்.

யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம்

அது தான் சிறப்பும் நியாயமும்.

நான் எழுத நினைத்தது

யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம்

அல்லது

யாழ்பாணம் பண்பாட்டு மையம்

அது தான் சிறப்பும் நியாயமும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல்; பொ.ஐங்கரநேசன் ஆதங்கம்

21 JAN, 2025 | 03:19 PM
image
 

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.  திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. 

ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள்கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. 

இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் அழுத்தங்களைப் பிரயோகித்தபோது மாநகரசபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. 

இப்போது, இரு சபைகளுக்குமான தேர்தல்கள்  நடைபெறவுள்ள நிலையில் திடுதிப்பென்று நிகழ்ந்த இப்பெயர் மாற்றம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா நாசுக்காக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது என்றே எண்ண வைத்துள்ளது.

சமயச்சாயத்தை தன் மீது ஒருபோதும் பூசிக்கொள்ளாத திருவள்ளுவரின் பெருமையை ஈழத்தமிழ் மக்கள் எப்போதும் போற்றுபவர்களாகவே உள்ளார்கள். 

அவர் தமிழுக்குத்தந்த பெரும் கொடையாம் திருக்குறளின் மகிமையை ஈழத்தமிழ் மக்கள் ஒரு போதும் மறவார்கள். இதனாலேயே,  தமிழகத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப்போன்று அத்தனை குறள்களையும் காலத்தால் அழியாதவாறு கருங்கல்லில் பொறித்து திருக்குறள் வளாகம் ஒன்றைச் சிவபூமி தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன் யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார்.

ஆனால்,  இத்தகைய பெரும் பற்றைத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடையே யாழ் கலாச்சார மையத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளமை பெரும் அதிருப்தியையே தோற்றுவித்துள்ளது.

யாழ். கலாசார மையம் தனித்துவமானதெனத் திறப்புவிழாக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று அது இந்தியா எமக்கு உவந்தளித்த தனித்துவமான பெரும் கொடையே ஆகும். 

ஆனால், அதன் தனித்துவம் நெடிதுயர்ந்த அழகான அதன் கட்டுமானங்களால் மாத்திரம் உருவானதன்று. பண்பாட்டுச் செழுமையும் பாரம்பரியமும் மிக்க யாழ்ப்பாணம் என்ற பெயரைச் சூடியிருப்பதும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அளப்பரிய ஓர் சிறப்பாகும்.

இப்போது, பெயர் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அதன் தனித்துவம் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்பதே நிதர்சனம். அது மட்டுமல்ல, இப்பெயர் மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையிலும் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்றார். 

https://www.virakesari.lk/article/204443

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nochchi said:

அனுர விசிறிகள் எதிர்பார்த்த மாற்றங்கள் இவைபோலும்... இன்னும் வரும். தமிழ்மொழிப் பிராந்தியங்களில் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுப்பதையே விரும்பாதவர்கள்தான் தமிழருக்குத் தீர்வுதரப்போகிறார்களாம். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

யாழ் நூலகத்தை எரித்த கொடுமையை சொல்லி சொல்லி வாக்கு கேட்ட அணுராவும்,அவர்களும் விசிறிகளும் இதற்கு என்ன பதில் சொல்லபோயினம்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

யாழ் நூலகத்தை எரித்த கொடுமையை சொல்லி சொல்லி வாக்கு கேட்ட அணுராவும்,அவர்களும் விசிறிகளும் இதற்கு என்ன பதில் சொல்லபோயினம்...

அவர்கள் இதைக் கடந்துபோய்த் தத்தமது கணக்குகளை நிரப்பிக்கொள்வார்கள். ஏமாற்றிவிட்டு மக்களிடம் போவது குறித்து எந்த வெட்கமோ சூடுசுரணையோ அற்றவர்களான அரசியல்வா(வியா)திகளுக்கு இதெல்லாம் தூசு. ஆனால் மக்களின் நிலை எப்போதும் மண்குதிரையில் ஏறிய நிலையே. மாற்றங்கள் வாக்குறுதிகளில் அல்ல மனங்களில் வரவேண்டும். இந்தியா போய் வந்தபின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிப்பது குறித்துத் தொடர்ந்து பேசுகிறது, விளக்குகிறது அனுர அரசு. தமிழினம் கொஞ்சம் சுதந்திரமாக ஒன்றுகூடுவதும், நினைவேந்துவதும் இந்தியாவுக்கு எரிச்சலாக இருக்கிறது. எங்கே முழுமையாக வடக்குப் பறிபோய்விடுமோ என்று தமிழீழத்தவரைவிட இந்தியாவே அதிகம் அஞ்சுகிறதுபோல் இருக்கிறது. சிங்கள அரசும், தமிழரும் சுமுகமாகி ஒரு அச்சில் ஓடத்தொடங்கினால் இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையே. அதனால், சிங்களமே முன்வந்தாலும் இந்தியா தமிழருக்கு எந்த நல்லதையும் செய்யவிடாது. தமிழ்ச் சிங்கள முரணே தனக்கான சுரண்டலுக்கு வாய்ப்பான வழி. எனவே வழியை மூடக்கூடிய எந்தச் சூழலையும் தடுக்கும். சிங்களத் தலைமைகள் தமிழர் தரப்பைச் சமதரப்பாக ஏற்று ஒரு புதிய அரசியல் பண்பினை துணிவோடு முன்னெடுக்க வேண்டும். அப்போது எல்லாவற்றிற்கும் உலகிடம் கையேந்தும் நிலை மாறும். வளமான நாடு என்பது அர்த்தமுள்ளதாகும்.  அடுத்த நினைவேந்தல் நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் என்றே நினைக்கின்றேன்.  
தமிழர் தரப்பின் பிரிவுநிலையும், பணத்திற்காக விலைபோகும் தன்மையும், நாம் இனவழிப்புக்குள்ளாகிறோம் என்ற சிந்தனையற்ற போக்கும், எமது 100 ஆண்டுகாலத் துயரத்துக்கான கரணியத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமையின் விளைவுகளே இன்றைய மேலதிக அரசியல் துயரங்களை பிரசவித்து வருகின்றன. இந்த மெய்நிலையை சரியாக மதிப்பீடு செய்யவோ அவை குறித்து ஆரோக்கியமான விவாதங்களை நடாத்தித் தன்முனைப்புநிலைப் போக்கைக் கைவிட்டு ஒன்றுதிரளும் தன்மையது இல்லாத சூழல் தொடருமானால் அநுர மட்டுமல்ல, அனுர தோற்று நாமல் வந்தால்கூட அதனை வரவேற்றுக் காணொளி போட ஒரு கூட்டமும், கைதட்ட ஒரு கூட்டமும் எம்மிடையே தோன்றிக்கொண்டே இருக்கும். 
அரசியலரங்கில் தமிழினம் தன்னைப் பலப்படுத்தி ஒருநிலை எடுக்கும்வரை இந்த மாயமான்கள் ஊடறுத்து ஓடி விளையாடும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

 

On 21/1/2025 at 08:28, nochchi said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அங்கால போங்கப்பா…

வள்ளுவன் தன்னை உலகுக்கு தந்து வான்புகழ் கொண்ட யாழ்பாணம் எண்டு பாரதியாரே பாடி இருக்கார்🤣

சும்மா நோண்டி கொண்டு.

சவர்கார் பண்பாட்டு மையம் எண்டு வைக்கலியே எண்டு சந்தோசபடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2025 at 10:49, putthan said:

யாழ் நூலகத்தை எரித்த கொடுமையை சொல்லி சொல்லி வாக்கு கேட்ட அணுராவும்,அவர்களும் விசிறிகளும் இதற்கு என்ன பதில் சொல்லபோயினம்...

இப்ப பார்த்தா எல்லோருமே இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

அப்போ யார் தான் இதற்கு அனுமதி கொடுத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப பார்த்தா எல்லோருமே இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

அப்போ யார் தான் இதற்கு அனுமதி கொடுத்தது?

சிறிலங்கனின் இறையாண்மையை மீறியது யார்? அனுராவின் இந்தியா சார்பு கொள்கைக்காக யாழ்ப்பாண மாநகர சபையின் உரிமையை விலைபேசியுள்ளாரா?அனுரா...
இந்தியத துணை தூதர் இந்தியாவின் ஆளுனராக வடமாகாணத்தில்.. செயல் படுகிறார் போல தெரிகின்றது .

கல்லு கும்பியில் ஏறி நிற்கும் இடசாரி தும்பி என்ன செய்கின்றார் ? வீடியோ போடும் மருத்துவர் என்ன செய்கிறார் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் மாற்றம்

January 24, 2025  11:38 am

'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் மாற்றம்

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 

கடந்த 18 ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர். 

'யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்' என்ற பெயர் மாற்றப்பட்டு, 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று (24) குறித்த கட்டடத்தில், 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் பலகை  பொருத்தப்பட்டுள்ளது. 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199225

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

யாழ்கள அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்த்வையல் அல்லோ🤣அனுராவின் யாழ்கள தோழ்ர் தொலைபேசியில் பேசியவுடனே மாற்றப்பட்டதாக கதை அடிபடுது..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

யாழ்கள அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்த்வையல் அல்லோ🤣அனுராவின் யாழ்கள தோழ்ர் தொலைபேசியில் பேசியவுடனே மாற்றப்பட்டதாக கதை அடிபடுது..

முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கத்தின் செயற்பாடுகள் சரியா இல்லை. அவர்கள் நல்ல நோக்கம் கொண்டவர்களாக இருந்தால் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை அப்படியே இருக்க விட்டுட்டு இந்தியா திருவள்ளுவர் பெயரை யாழ்பாணத்தில் பதிக்க விரும்பினால் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்று  புதிதாக மண்டபம் ஒன்று கட்டும் படி போராடி இருக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.