Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌ வில்லை அண்ண‌ன் சீமான் இப்ப‌டியான‌ ந‌ப‌ர்க‌ள் கூட‌ விவாத‌த்துக்கு போவ‌து

விவாதத்துக்குப்போனா செந்தமிழன் அண்ணா அன்ட்றாயர் கிழியும்னு தம்பிகளுக்கு புரிஞ்சிடிச்சு!😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

ஏற்கனவே யூ ரியூப் குப்பைகள் கொட்டும் இடமாக யாழ் இருக்கிறது, இதில் இன்னொரு வீடியோ எதற்கு? என்ன அது "முழுமையான ஆதாரம்" என்று கொஞ்சம் எழுதி விட்டுத் தான் போங்களேன்?எதை நிரூபித்து விட்டார்கள்?

தன் உண்மையான பெயரையே வெளியே சொல்லத் தயங்கும் ஒருவரது ஏமாற்று விளையாட்டுகளை இப்படியான குப்பை வீடியோக்கள் தானே எங்கள் இளையோரிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

வன்னி நிதர்சனம் ரிவியில், இன்றும் வாழும் பத்திரிகையாளர், திருநாவுக்கரசு, பிரபாகரன் இருக்கும் போதே சொன்னார்: எமது போராட்டத்தின் சாவி தமிழகத்தில் உள்ளது என்று.

தமிழ் தேசியம் வென்றாலே, அந்த சாவியின் துரு நீங்கும்.

இது குறித்த உங்கள் பார்வையை தாருங்கள்!

முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன்.

மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன.

சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன்.

ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள்.

நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. 

இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே.

தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு.  அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே.

பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். 

6 minutes ago, ரசோதரன் said:

அருமை! சிறப்பு! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ ச‌ந்தோஷ் வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி போன‌வ‌ர்................

திருத்தம்

றோ சிலீப்பர் செல் சீமான் போட்டு கொடுத்ததால், க்யூ பிராஞ்சிடம் மாட்டி - நாதகவின் முதல் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் போல் தானும் கொல்லப்படலாம் என பயந்து இந்தியாவை விட்டு ஓடிப்போனார்.

வழக்கே இல்லாமல் டென்மார்க்குக்கு ஓடி வந்த நாம், புலிகளுக்கு உதவினார் என க்யூ பிராஞ் தேடும் ஒருவரை எள்ளி நகையாடலாமா பையா?

நீங்கள் போற்றும் கார்திக் மனோகரன் சொல்கிறார் புலிகளுக்கு கடைசிகாலத்தில் உயிராபத்தை பாராது உதவியவர் சந்தோஷ்.

இப்படி எமக்காக ரிஸ்க் எடுத்து, சினிமா வாழ்வை தொலைத்து, நாட்டை விட்டே ஓடிபோகும் படி ஆன ஒருவரை இப்படி திட்ட எப்படி உங்களால் முடிகிறது?

3 hours ago, Nathamuni said:

தலவரின் ஈழத்தமிழ்  தேசிய ஏற்பாடு தமிழ் கூட்டமைப்பு பிஞ்சு தொங்குது.

தலவரின் தமிழக தமிழ்  தேசிய ஏற்பாடும் பிஞ்சு தொங்குது.

தலவரே மலையாளீ எண்டு சில பேர் சொல்லிச்சினமே, உண்மையா?

நம்ம தலவர் முயற்சிகள் தோல்வி தானா என கவலைப் பட வேண்டுமா?? 🥹🤔

நாதம்,

கொண்டை அப்படியே தெரியுதப்பா 🤣.

வேதனம் வந்துட்டு போல.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்

அப்படி யாரும் இல்லை..சமூக அக்கறைகொண்ட சாதாரணமக்கள் சீமானை விமர்சிக்க எதுவும் இல்லை.. அப்படி யாரும் சொன்னால் உள்ள சீமான்போபியாவை வச்சுக்கொண்டு நம்புங்க நான் நடு சென்றர் எண்டு போடுற வேசமாத்தான் இருக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

திருத்தம்

றோ சிலீப்பர் செல் சீமான் போட்டு கொடுத்ததால், க்யூ பிராஞ்சிடம் மாட்டி - நாதகவின் முதல் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் போல் தானும் கொல்லப்படலாம் என பயந்து இந்தியாவை விட்டு ஓடிப்போனார்.

வழக்கே இல்லாமல் டென்மார்க்குக்கு ஓடி வந்த நாம், புலிகளுக்கு உதவினார் என க்யூ பிராஞ் தேடும் ஒருவரை எள்ளி நகையாடலாமா பையா?

நீங்கள் போற்றும் கார்திக் மனோகரன் சொல்கிறார் புலிகளுக்கு கடைசிகாலத்தில் உயிராபத்தை பாராது உதவியவர் சந்தோஷ்.

இப்படி எமக்காக ரிஸ்க் எடுத்து, சினிமா வாழ்வை தொலைத்து, நாட்டை விட்டே ஓடிபோகும் படி ஆன ஒருவரை இப்படி திட்ட எப்படி உங்களால் முடிகிறது?

2 hours ago, வீரப் பையன்26 said:

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் குருநாதா இனி நான் இத‌ற்க்குள் எழுத‌ மாட்டேன்🙏🥰👍......................

அவர் இனி இந்தத் திரியில் எழுதமாட்டார் என்று சபதம் எடுத்துவிட்டார் எனவே இனி எதுவும் எழுதமாட்டார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

.

பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

உங்களுக்கு எப்படி மலயாளியையும் தெலுங்கர்களையும் வடநாட்டவர்களையும் மதம் மொழிகடந்து பார்த்து பெருமைப்பட முடிகிறதோ அப்படியே ஒரு தமிழனால் இன்னொரு தமிழனை தமிழன் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்.. பிரெஞ்சுக்காரனுக்கு பிரெஞ்சுக்காரன் என்ற அடையாளத்தில் பிரிட்டிஸ்காறனுக்கு இங்கிலிஸ் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்..

உங்களுடையதைப்போலவே இதுவும் தவறல்ல.. தன் இன அடையாளங்களை துறப்பது எப்படி ஒரு பாவச்செயல் இல்லையோ அப்படியோ தன் இன அடையாளங்களை சுமப்பதும் ஒன்றும் பாவச்செயல் அல்லவே..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுடையதைப்போலவே இதுவும் தவறல்ல.. தன் இன அடையாளங்களை துறப்பது எப்படி ஒரு பாவச்செயல் இல்லையோ அப்படியோ தன் இன அடையாளங்களை சுமப்பதும் ஒன்றும் பாவச்செயல் அல்லவே..

தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு பிரிவு மக்களை ஒதுக்கி விடுதல் எந்த நாட்டிலும், எந்த அடையாளங்களை சுமந்தாலும் ஒரு பாவச் செயல் தானே.....................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரசோதரன் said:

முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன்.

மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன.

சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன்.

ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள்.

நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. 

இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே.

தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு.  அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே.

பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். 

அருமை அண்ணா, அருமை.

சில அவதானிப்புகள்.

1. சீமான் சாதி அரசியலை வெறுமனே கடந்து போவவர் மட்டும் அல்ல, அருந்ததியர் மீது நேரடியாக துவேசத்தை கக்கியவர், ஆணவகொலைகளை நியாப்படுத்தியவர், சாதி தலைவர்களான முத்துராமலிங்கம் போன்றோரை தேசிய தலைவர்கள் என போற்றுபவர், தான் உட்பட சாதி எண்ணிக்கை பார்த்துத்தான் தேர்தல் சீட் கொடுப்பவர் (ஏனைய கட்சிகளை போலவே). சாதிகளை குடிகள் என சொல்லி. குடிகள்தான் இனத்தேசியத்தின் அடிப்படை என உளறியவர். 

2. நீங்கள் கூறியமாதிரி தெரிந்த நீரோடை போல இல்லை, ஆனால் இந்த விடயம் பற்றி யாழில் முன்பே பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

3. தமிழ்நாட்டு அரசியலின் உண்மை முகம் தெரிந்த உங்களை போன்ற ஒருவர் யாழுக்கு வந்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. யார் எப்படி குடைந்தாலும், யாழை விட்டு போய்விடாதீர்கள் 🙏.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு பிரிவு மக்களை ஒதுக்கி விடுதல் எந்த நாட்டிலும், எந்த அடையாளங்களை சுமந்தாலும் ஒரு பாவச் செயல் தானே.....................

மிகச்சரியான கேள்வி..👍 இதில் 100 வீதம் நான் உடன்படுகிறேன்.. ஆனால் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களை எப்படி அழைக்க முடியும்..? அப்பொழுது அங்கே ஒரு அடையாளம் வந்துவிடுகிறது அல்லவா.. அது இன்னொருவரை தாழ்த்துவதில்லைதானே.. என்னை யார் என்று பிரகடனப்படுத்ததானே பயன்படுகிறது..? திராவிடர்கள் என்பது ஒரு அடையாளம்தானே..? அதை சமூகநீதி பேசிய பெரியார் பெருமையாக சூடிக்கொள்ளவில்லையா..?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

😂 ஓணாண்டியார், என்ன முதல் சதுரத்திலேயே வந்து நிண்டு அக்ரிங் குடுக்கிறீங்கள்?

பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். சீமான் வளர்க்கும் தமிழ் தேசியம் திராவிட அடையாளத்தினுள் மலையாளி, தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றையும் திட்டி, "வாழ வரலாம் ஆள வரக் கூடாது" என்றெல்லாம் துவேஷம் பேசுவது தெரியாத மாதிரி என்ன நடிப்பையா இது? உங்களுக்கு "பச்சைத் தமிழன்" அடையாளம் வேணுமெண்டால் அணிந்து கொள்ளலாம், அதை விட்டு விட்டு வேறு மொழிவழி மூதாதையர் கொண்ட தமிழக மக்களை மஞ்சள் தமிழன் என்று முட்டாள் தனமாக வகைப் படுத்தல் யார் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

யார் எப்படி குடைந்தாலும், யாழை விட்டு போய்விடாதீர்கள் 🙏.

நன்றி கோஷான். நீங்களும், இன்னும் சிலரும் இது சம்பந்தமாக முன்னரும் எழுதியிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன். 

முன்னரே நான் சொன்னது போல, யாழை விட்டுப் போகமாட்டேன், ஆனால் இக்கட்டான சமயங்களில் தேவை என்றால் நாளுக்கு நான்கு கவிதைகள் என்ற கணக்கில் எழுதிப் போடுவதாக உள்ளேன்............🤣.

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிகச்சரியான கேள்வி..👍 இதில் 100 வீதம் நான் உடன்படுகிறேன்.. ஆனால் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களை எப்படி அழைக்க முடியும்..? அப்பொழுது அங்கே ஒரு அடையாளம் வந்துவிடுகிறது அல்லவா.. அது இன்னொருவரை தாழ்த்துவதில்லைதானே.. என்னை யார் என்று பிரகடனப்படுத்ததானே பயன்படுகிறது..? திராவிடர்கள் என்பது ஒரு அடையாளம்தானே..? அதை சமூகநீதி பேசிய பெரியார் பெருமையாக சூடிக்கொள்ளவில்லையா..?

முன்னோர்களும் தமிழர்களாகவே இருந்து, இன்றும் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் இருக்கும் எம் மக்களில் ஒரு பிரிவினரையே தள்ளி வைப்பதை பற்றித் தான் நான் குறிப்பிட்டிருந்தேன், ஓணாண்டியார். கோஷான் மேலே எழுதியிருப்பதும் இதையொட்டியே.

தாய்மொழியை வைத்து ஒரு அடையாளம் கொள்வதில் உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. பிறப்பால் வரும் எந்த அடையாளத்தாலும் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2025 at 21:41, goshan_che said:

கடைசியா காலி அம்மாள் எப்ப சந்திச்சவா?

வாய்ச்சொல்லு சூனியம் என்பார்கள்.

நேற்று @வீரப் பையன்26 டம் கேள்வி கேட்டபோது நகைசுவையாக காளி அம்மாளை, காலிஅம்மாள் என எழுதினேன். 

இன்று இந்த வீடியோ கண்ணில் படுகிறது.

@பாலபத்ர ஓணாண்டி @வீரப் பையன்26 அண்ணன் இப்படி காளியாத்தாவை சில்லு சில்லாக உடைத்தது அண்மைய நிகழ்வா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

வாய்ச்சொல்லு சூனியம் என்பார்கள்.

நேற்று @வீரப் பையன்26 டம் கேள்வி கேட்டபோது நகைசுவையாக காளி அம்மாளை, காலிஅம்மாள் என எழுதினேன். 

இன்று இந்த வீடியோ கண்ணில் படுகிறது.

@பாலபத்ர ஓணாண்டி @வீரப் பையன்26 அண்ணன் இப்படி காளியாத்தாவை சில்லு சில்லாக உடைத்தது அண்மைய நிகழ்வா?

மீண்டும் மீண்டும் பொய் பரப்பாதீர்கள், எங்கள் அண்ணன் வாயை குவிக்கையிலே யாரோ டப்பிங் கொடுக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

😂 ஓணாண்டியார், என்ன முதல் சதுரத்திலேயே வந்து நிண்டு அக்ரிங் குடுக்கிறீங்கள்?

பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். சீமான் வளர்க்கும் தமிழ் தேசியம் திராவிட அடையாளத்தினுள் மலையாளி, தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றையும் திட்டி, "வாழ வரலாம் ஆள வரக் கூடாது" என்றெல்லாம் துவேஷம் பேசுவது தெரியாத மாதிரி என்ன நடிப்பையா இது? உங்களுக்கு "பச்சைத் தமிழன்" அடையாளம் வேணுமெண்டால் அணிந்து கொள்ளலாம், அதை விட்டு விட்டு வேறு மொழிவழி மூதாதையர் கொண்ட தமிழக மக்களை மஞ்சள் தமிழன் என்று முட்டாள் தனமாக வகைப் படுத்தல் யார் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

ஒரு சிறு திருத்தம் அவர் மலையாளிகளை திட்டியது கிடையாது, அவர் தன் இனத்தை காட்டி கொடுக்கும் கோடாரி காம்பு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

பெரியார் பிராமணரை மட்டும் தான் தீவிரமாக திட்டினார். 

என்னது பெரியார் பிராமணர்களை மாத்திரம்தான் திட்டினாரா? பார்ப்பனர்கள், துலுக்கர்கள், கிறீஸ்தவர்கள், எம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே ஆபத்து. இவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை. இவர்களை துரத்தவேண்டும் என்று பேசிய ஈவேராவிற்கு இப்படி முட்டுக்கொடுக்கிறீர்கள்.

ஈவேராவின் பகுத்தறிவு, பெண்ணிய மேம்பாடு, பெண்ணடிமைத்தனத்திற்கெதிரான குரல், தமிழ் மொழியின் தந்தை என்று திராவிட கட்சிகள் கட்டியமைத்த பிம்பமெல்லாம் இப்போ கிழிந்து தொங்கத்தொடங்கியுள்ளது. ஈவேராவின் எல்லா சொத்துக்களையும் தனதாக்கிக்கொண்ட வீரமணி ஐயா மனம்வைத்தால் இன்னும் வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

@Justin ஒரு சின்ன அல்ல பெரிய உதவி🙏.

நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைபெரியாரை எதிர்க்கும்/சீமானை ஆதரிக்கும் படி மாற்றிகொள்ள முடியுமா?

பணய கைதிகள் பரிமாற்றம் போல - உங்களை கொடுத்து, யாழில் ஒரு 3/4 பேரை ஒவர் நைட் எனது நிலைப்பாட்டுக்கு மாற்றிகொள்ள விரும்புகிறேன் 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

என்னது பெரியார் பிராமணர்களை மாத்திரம்தான் திட்டினாரா? பார்ப்பனர்கள், துலுக்கர்கள், கிறீஸ்தவர்கள், எம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே ஆபத்து. இவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை. இவர்களை துரத்தவேண்டும் என்று பேசிய ஈவேராவிற்கு இப்படி  முட்டுக்கொடுக்கிறீர்கள்.

தமிழனத்திற்கு எதிராக செயல்பட்ட ஈவேராவை எதிர்த்து எழுதிய புலிகளின் கட்டுரைகளின் தொகுப்புகளின் தொடர்பான மின்பிரதிகளையோ அல்லது சுட்டிகளையோ தந்து உதவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

தமிழனத்திற்கு எதிராக செயல்பட்ட ஈவேராவை எதிர்த்து எழுதிய புலிகளின் கட்டுரைகளின் தொகுப்புகளின் தொடர்பான மின்பிரதிகளையோ அல்லது சுட்டிகளையோ தந்து உதவ முடியுமா?

இது ஒன்றும் விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் வந்தவையல்ல. ஈவேராவின் சொந்த பத்திரிகையான விடுதலையில் வந்தவையே!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Eppothum Thamizhan said:

இது ஒன்றும் விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் வந்தவையல்ல. ஈவேராவின் சொந்த பத்திரிகையான விடுதலையில் வந்தவையே!

விடுதலையில் ஈவேரா தமிழர்களை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது, அப்படியிருக்கையில் அதை எதிர்த்து புலிகள் கண்டிப்பாக எழுதியிருக்கக்கூடும், அந்த கட்டுரைகளை பற்றி கேட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.