Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!

அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால், பணியில் இருந்த பொலிஸார் அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு பொலிஸார்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர்.

அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார்.

இன்று (21) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்.

இந்நிலையில் ,பொலிஸார் இது தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1417333

  • கருத்துக்கள உறவுகள்

“”அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார்“”

🤨

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி எல்லாத்தையும் நம்ப சொல்லுறீங்க?

நான் வாகனத்தில் கொழும்பு சென்றபோது அநுராதபுரத்தில் மறிக்கப்பட்டேன். மறித்தவர் கூறினார் வாகனம் எல்லாம் சரியாத்தான் ஓடினேனாம். ஆவணங்களும் சரியாத்தான் உள்ளதாம். 

மறித்ததன் காரணம் பின்னர் தான் புரிந்தது. நாட்டில் கஸ்டம் என மறைமுகமாக காசு கேட்டார். கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

இந்த போக்குவரத்து போலிசாருக்கு முண்டு கொடுத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் கட்டாயம் உண்மை செய்திகளை வெளியே கொண்டுவரும் எனத்தான் நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் பாருங்கோ இன்னொரு சக தமிழனுக்கு ஒரு பிரச்சனை கஸ்டம் வருகிது என்றால் எங்கடையளுக்கு குஸ்திதான். ஏன் என்றால் எங்கடையள் டிசைன் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

21 Jan, 2025 | 04:49 PM

யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

பின்னர், அர்ச்சுனா ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இந்த செய்தி எல்லாத்தையும் நம்ப சொல்லுறீங்க?

நான் வாகனத்தில் கொழும்பு சென்றபோது அநுராதபுரத்தில் மறிக்கப்பட்டேன். மறித்தவர் கூறினார் வாகனம் எல்லாம் சரியாத்தான் ஓடினேனாம். ஆவணங்களும் சரியாத்தான் உள்ளதாம். 

மறித்ததன் காரணம் பின்னர் தான் புரிந்தது. நாட்டில் கஸ்டம் என மறைமுகமாக காசு கேட்டார். கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

இந்த போக்குவரத்து போலிசாருக்கு முண்டு கொடுத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் கட்டாயம் உண்மை செய்திகளை வெளியே கொண்டுவரும் எனத்தான் நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் பாருங்கோ இன்னொரு சக தமிழனுக்கு ஒரு பிரச்சனை கஸ்டம் வருகிது என்றால் எங்கடையளுக்கு குஸ்திதான். ஏன் என்றால் எங்கடையள் டிசைன் அப்படி.

எனக்கும் இதுபற்றி நிறையவே பொலிசார் மீது வெறுப்பாக இருந்தது.

யாழுக்கும் வவுனியாவுக்குமிடையில் தேவையில்லாமல் மறித்து வைத்து பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலை என்று ஒன்றிருந்தால் விரைவாகவும் இப்படியான தொல்லைகள் இல்லாமலும் பயணிக்கலாம்

பாரஊர்திகளின் விபத்துக்களையும் தடுக்கலாம்.

யுத்தம் முடிந்து வடக்கு கிழக்கிற்கு என்று உலகம் கொடுத்த பணத்தில் சிங்கள பிரதேசங்களை செளுமையாக வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56m  · 
 
திட்டமிட்ட ரீதியில் அனுராதபுரத்தில் வழி மறிக்கப்பட்டு வழக்கு போடப்பட்டிருக்கிறது!
முதலில் சொன்னார்கள் சீட் பெல் போடவில்லை என்று...
போட்டிருப்பதை காட்டினேன்..
அதன் பிறகு சொன்னார்கள் விஐபி லைட்டு எரிகிறது என்று..
நான் சொன்னேன் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று..
அதன் பின்பு வீடியோ எடுக்க தொடங்கினார்கள்.
சாதாரணமாக போலீசார் வீடியோ எடுப்பதில்லை..
திட்டமிட்டு வழிமறிக்கப்பட்டு தான்..
இந்த வழக்கும் போடப்பட்டிருக்கிறது..
அரசாங்கம் அவர்களுடையது..
போலீசாரும் அவர்களுடையவர்கள்..
காலம் காலமாக ஆட்சிக்கு வருபவர்கள் செய்யும் கூத்தே இது..
இங்கே தமிழர்களாக எமது வகிபாகம் என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..
அனுரவிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்தவன் என்ற அடிப்படையிலும்,
அதன் பின்பு DCC மீட்டிங்களிலும் அபிவிருத்தி தொடர்பாக என் பி பி யின் நடவடிக்கைகளுடன் முரண்பட்டுக்கொண்டபோது முதலாவதாக மெல்லியதாக இந்த தீப்பொறி ஆரம்பித்தது..
யாழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்ற அடிப்படையில் எதற்காக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு இனவாத அரசாங்கத்திற்கு தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம் என்ற கேள்விகளின் அடிப்படையிலும் கருத்துக்கள் பரப்பப்பட்டாலும் நம்பிக்கையின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று நானும் கருதியிருந்தேன்.
ஆனால், வல்வேட்டி துறையில் நடந்த வாழ்வெட்டுகளின் பின்பும், பருத்தித் துறையில் நடக்கும் தேசிய அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளின் பின்பும் சாவகச்சேரியில் கல்லுப்பிடித்து மூக்குடை பட்டுக்கொண்டதன் பின்பும், பனை டோலர் ஒருவரை நியமித்து பனை அபிவிருத்தி அதிகார சபையை தான்றோண்டித்தனமாக நிர்வகித்ததில் இருந்தும் இவர்களின் அரசியல் சில்லறைத்தனங்கள் என் மனதை வெகுவாக நெரடிக்கொண்டே இருந்தது..
ஆனால்,
உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் இவர்களின் வெற்றிக்காக போலீசாரின் துணையுடன் இவ்வாறு சில்லறைத்தனமான வழக்குகளை போட்டுக் கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..
ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர்களை இரும்புக்கரம் கொண்டு சிதைத்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்கு மிக நல்ல உதாரணம் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை நடந்த சுதந்திரத்திற்கான போராட்டம்!
நிற்க,
பழையவற்றை மறந்தவர்களாக ஒரு சமூக ஒற்றுமையுடன் ஒன்றாக வாழலாம் என்று நினைக்கும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் ஒரு வரலாற்றை சொல்லிக் கொண்டே செல்கிறது..
மைத்திரியில் இருந்து அனுரா வரைக்கும் வரலாறுகள் கறை படிந்த கருப்பு காகிதங்களாகவே இருக்கிறது..
வேலை கேட்டுப் போராடிய பட்டதாரிகளை போலீசாரின் அடாவடித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் மூலம் அனுர அரசாங்கம் அவர்களின் உண்மையான முகங்களை காட்டிக்கொண்டே இருக்கிறது..
மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட ரீதியில் மீண்டும் ஒரு குழப்பகரமான நிலைமை இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்கான அனுராவின் ஒரு நடவடிக்கையே ஆகும்..
மன்னார் போலீசாரின் ஒரு சிலர் அது தவிர விமானப்படை கடற்படை தரைப்படை உறுப்பினர்கள் மற்றும் சிஐடி உறுப்பினர்கள் ஒரு சிலர் கூலிப்படைகளாக இயங்கி வருவது தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தும் தெற்கில் ஒவ்வொரு கூலிப்படைகளையும் இரும்பு கரம் கொண்டு சுட்டு நொறுக்கும் அரசாங்கம் வடக்கில் மட்டும் என் பாராமுகமாக இருக்கிறது என்பதற்கான தெளிவான பதில் தமிழ் மக்களை ஒரு பீதியில் வைத்திருக்க வேண்டிய தேவை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்பதே ஆகும்..
இதன் ஒரு தெளிவான பதில் தான் தமிழ் மக்களின் அரசியல் குரல்களை வழக்குகளைக் கொண்டு நெரிப்பது..
மன்னாறில் இருந்து நான் பயணப்பட்டு கொண்டபோது தெளிவாக ரம்பா வில் மறித்து ஒரு லைற் இட் காக திட்டமிட்ட ரீதியில் வழக்கினை போட்டிருக்கிறார்கள்..
இங்கே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் லைட் பூட்டியபடி
வாகனம் செலுத்தியது தான் குற்றம் என்றால் அதை அவர்கள் தெளிவாக சொல்லி குற்றமாக எழுதி இருக்கலாம்..
ஆனால் மணித்தியால கணக்கில் எனது வாகனத்தை மறித்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவமதித்து அதனை வீடியோ எடுத்து வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்..
25ஆவது வழக்காக இதனை நான் கருதவில்லை..
2500 வழக்குகளை போட்டுக் கொண்டாலும்..
என் கல்லறைகளில் இருந்தும் என் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்..
ஆனாலும்,
அரசியல் பழிவாங்கல் என்பது சாதாரண விடயம் அல்ல..
ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கத்தில் கூட என்னை பல தடவை சிறையில் அடைத்து குடல் வளையை முடியும் வரை நெரித்துப் பார்த்தது அரசாங்கம்..
அங்கேதான் நான் ஒரு விடயத்தை சொல்கிறேன்..
நான் வென்று கனக காலம்..
இவற்றையும் கடந்து ஒரு சாதாரண நாளாக காலை வணக்கம் இந்த முகப்புத்தகத்திலிருந்து உங்களுக்கு வரும்..
இவற்றிற்கெல்லாம் பயந்து ஓடுவதற்கு நான் உயிருக்கு பயந்தவனோ அல்லது கோழையோ அல்ல..
அவனைத் திட்டமிட்ட ரீதியில் கொன்று இருக்கிறார்கள் என்று செய்திகளை சில வேளைகளில் நீங்கள் கேட்கலாம்..
ஆனால் அவன் தோற்று விட்டான்..
அடுத்த காலை பின் வைத்து விட்டு விட்டான் என்ற வரலாறு..
இராமநாதன் அர்ச்சுனாவின் அகராதியில் இருக்காது!
ஏனெனில் இந்த அகராதி மனதின் வலிமை கரங்களால் எப்பொழுது எழுதப்பட்டு விட்டது!
ஒன்றல்ல 25 அல்ல ஆயிரம் வழக்குகளை போட்டுக் கொண்டாலும் என்னோடு என் உறவுகள் நிற்கும் என்ற நம்பிக்கையில் என் பாதையில் நான் இருப்பேன்..
தோற்ற இனம் அல்ல என் இனம்..
வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட இனமே தமிழீழத் தமிழரின் இனம்!
என் தலைவன் தோற்கவில்லை..
உலக நாடுகளே அவனை வஞ்சித்து வஞ்சகத்தால் தோற்றுக் கொண்டது..
என் தலைவனை காற்று உட்கொண்டிருக்கலாம்..
ஆனால் தோற்ற உங்களின் எக்காளச் சிரிப்பு..
இடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு கருணாவின் பெயரோடு எழுதப்பட்டு கொண்டே இருக்கும்..
நீ எதிரியாக இருந்தாலும்..
என் தலைவனின் பெயரை சொல்லிப்பார்..
அப்போது தெரியும் தமிழன் யார் என்று..
நான் மீண்டும் வருவேன்..
அதுவரை காத்திருங்கள்!
❤️
May be an image of text that says '3. "The Clean Sri Lanka project had one big achievement: they cleaned out our hopes and dreams!"'
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதுபற்றி நிறையவே பொலிசார் மீது வெறுப்பாக இருந்தது.

யாழுக்கும் வவுனியாவுக்குமிடையில் தேவையில்லாமல் மறித்து வைத்து பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலை என்று ஒன்றிருந்தால் விரைவாகவும் இப்படியான தொல்லைகள் இல்லாமலும் பயணிக்கலாம்

பாரஊர்திகளின் விபத்துக்களையும் தடுக்கலாம்.

யுத்தம் முடிந்து வடக்கு கிழக்கிற்கு என்று உலகம் கொடுத்த பணத்தில் சிங்கள பிரதேசங்களை செளுமையாக வைத்திருக்கிறார்கள்.

 

நாம் தமிழர் என்பதை தமக்கு சாதகமாக அவர்கள் பாவிக்கின்றார்கள். போர்க்காலத்தில் தெருவில் நிற்கும் களுசடைகள் எல்லாம் வழியில் செல்லும் தமிழரை ஐசி கேட்டு மிரட்டுவதும், வீட்டினுள் நுழைந்து சோதனை இடுவதும் என பல அடாவடிகளில் ஈடுபட்டார்கள். இப்போதும் பொலிஸ் கிளியரண்ஸ் என்றால் தமிழருக்கு வரக்கூடிய இயல்பான பயத்தை பயன்படுத்தி போலிசார் காசு அடிக்கின்றார்கள். என்னதான் நடந்தாலும் சிங்களம் சிங்களம் தான். அது தமிழரிடம் இறங்கி வராது. அவரவர் உங்கள் திறமையை பாவித்து உடுத்த கோவணத்தை உருவாமல் பார்த்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

சாதாரணமாக போலீசார் வீடியோ எடுப்பதில்லை..

பொலிசார் வீடியோ எடுப்பது சர்வசாதரணம் .சிறிலங்காவில்.எங்கு வாக்கு வாதம் தொடங்குதோ அங்கு பொலிசார் தூக்கும் முதல் ஆயுதம் மொபைல் தான் ...அதுவும் வடபகுதியில் இன்னும் அதிகம்

 

3 hours ago, யாயினி said:

பாராளுமன்ற உறுப்பினரை அவமதித்து அதனை வீடியோ எடுத்து வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்

யாழ் மாவட்ட தமிழ் தேசிய ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் (சிறியர்,அர்ஜுனா)இருவரையும் அனுரா அரசு திட்டமிட்ட வகையில் சிறையில் அடைக்கின்றதா🤣

இயற்கை உபாதைக்கு ஒதுங்கினாலே வீடியோ போடும் மருத்துவர் ...யாழ்பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு ஏதாவ்து வீடியோ போட்டாரா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஈழதமிழர் என்பதால் அர்ச்சுனாவின் பந்தா கூத்துக்களை நியாயபடுத்த வேண்டியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாம் ஈழதமிழர் என்பதால் அர்ச்சுனாவின் பந்தா கூத்துக்களை நியாயபடுத்த வேண்டியது இல்லை.

இதுவரை அவர் செய்த நன்மைகள் என்ன?.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி.யை கைதுசெய்ய உத்தரவு!

2087751813.JPG

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் நேற்றுச்  செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் நேற்றையதினம்  போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச்செய்து தனது வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.

இதன்போது, போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். ஆனால், ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

https://newuthayan.com/article/அர்ச்சுனா_எம்.பி.யை_கைதுசெய்ய_உத்தரவு!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அர்ச்சுனாவுக்கெதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களை பொலிஸார் பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா எம்.பி. மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

இந்த தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. (R)

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனாவுக்கு-எதிரான-குற்றப்பத்திரம்-தாக்கல்-செய்ய-உத்தரவு/175-351431

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.