Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-75.jpg?resize=750%2C375&ssl=

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு!

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-75.jpg?resize=750%2C375&ssl=

சிறியரின் முறைப்படி...பண்ணிட்டேன்......வீடியோவும் இதெ முறையா..பிளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, alvayan said:

New-Project-75.jpg?resize=750%2C375&ssl=

சிறியரின் முறைப்படி...பண்ணிட்டேன்......வீடியோவும் இதெ முறையா..பிளீஸ்

காணொளி (யூரியூப்) எனில் காணொளி முகவரியை பிரதி செய்து ஒட்டினால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

https://img1.hscicdn.com/image/upload/f_auto,t_ds_w_1280,q_70/lsci/db/PICTURES/CMS/72000/72095.3.gif

13 மார்ச் 1996 இல் ஈடன் காடன் மைதானத்தில் இந்திய இரசிகர்கள் இந்தியாவின் தோல்வியினை தாங்காது கலவரத்தில் ஈடுபட்டனர், 09 மார்ச் 2025 இல் இந்திய இரசிகர்கள் மீண்டும் ஒரு கலவரத்தில் இறங்கலாம்.

🤣

பின்னைய‌ கால‌ங்க‌ளில் இந்த‌ மைச் யூடுப்பில் பார்த்தேன்

இல‌ங்கை வெற்றிய‌ நோக்கி போய் விட்ட‌து அதை தாங்கி கொள்ள‌ முடியால‌ ர‌சிக‌ர்க‌ள் க‌ல‌வ‌ர‌ம் செய்த‌வை

பின‌லில் அவுஸ்ரேலியா எதிர் இல‌ங்கை

அர‌விந்த‌டி சில்வாவின் நிதான‌மான‌ ஆட்ட‌த்தால் இல‌ங்கை வெற்றி

இந்தியா நியுசிலாந்தை சிம்பிலா வென்று விடும்

அவ‌ங்க‌ட‌ விளையாட்டு ந‌ல்லா ஒருக்கு , கோலி ப‌ழைய‌ கோலியா மாறி ர‌ன்ஸ்ச‌ குவிக்கிறார்😁........................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

@செம்பாட்டான் நீங்கள் படத்தை நேரடியாக கொப்பி பண்ணினால்..

படம் அனுமதித்த அளவைவிட பெரிது என காட்டும்.

அதனால்... மவுசால் இணைக்கப் பட வேண்டிய படத்தை கிளிக் பண்ணும் போது,

படத்தின் அட்ரஸ் என்று ஒரு தெரிவு காட்டும்.

அதனை கொப்பி பண்ணி, பதியும் போது... படம் இணைக்கப் பட்டு விடும்.

இதே முறையில்தான் நான் செய்கின்றனான்.

முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰

ICC-Champions-Trophy.jpg?width=1200

4 hours ago, வீரப் பையன்26 said:

கூக்கில்ல‌ போய் இப்ப‌டி எழுதுங்கோ

postimaes என்று வ‌ரும் அத‌ற்க்குள் போனால்

நீங்க‌ள் யாழில் இணைக்க‌ விரும்பும் ப‌ட‌த்தை கேக்கும் அதை உப்பிலேட்செய்த‌ பின்

Screenshot-20250306-193406-Chrome.jpg

பிற‌க்கு

Screenshot-20250306-193446-Chrome.jpg

Direct link கொப்பி ப‌ண்ணி போட்டு

இதுக்கை அந்த‌ லிங்கை போட்டால் நீங்க‌ள் தெரிவு செய்த ப‌ட‌ம் வ‌ரும்...............................

செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.

images.jpg

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

New-Project-75.jpg?resize=750%2C375&ssl=

சிறியரின் முறைப்படி...பண்ணிட்டேன்......வீடியோவும் இதெ முறையா..பிளீஸ்

ஓ நீங்களும் இப்போதுதான் அறிகிறீர்களா. சேர்ந்தே அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இங்கே கனபேர் பழம் தின்று கொட்டை போட்ட ஆக்கள். என்ன கேட்டாலும் சுடச் சுட வரும்.

3 hours ago, வாத்தியார் said:

New-Project-75.jpg?resize=750%2C375&ssl=

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு!

ஸ்டீவன் ஸ்மித்தும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, செம்பாட்டான் said:

முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰

ICC-Champions-Trophy.jpg?width=1200

செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.

images.jpg

வாவ் கெட்டிக்காரன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, செம்பாட்டான் said:

ஓ நீங்களும் இப்போதுதான் அறிகிறீர்களா. சேர்ந்தே அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இங்கே கனபேர் பழம் தின்று கொட்டை போட்ட ஆக்கள். என்ன கேட்டாலும் சுடச் சுட வரும்.

ஸ்டீவன் ஸ்மித்தும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும் தானே ,

இவ‌ர் நினைத்தால் 2027உல‌க‌ கோப்பை வ‌ரை விளையாட‌லாம்

இப்ப‌ தான் 36வ‌ய‌து.....................

ச‌ச்சின் டென்டுக்க‌ர் 40வ‌ய‌தில் தான் ஓய்வை அறிவித்த‌வ‌ர்

இவ‌ர் நிதான‌மாய் நின்று விளையாட‌க் கூடிய‌வ‌ர்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

காணொளி (யூரியூப்) எனில் காணொளி முகவரியை பிரதி செய்து ஒட்டினால் சரி.

நன்றி நுணாவிலான்.. நன்றி சிறியர்....நன்றி வீரப்பையன்....நன்றி ஈழப்பிரியன்....முதல் நன்றி செம்பாட்டனுக்கே..

இலகு முறையில் இணைக்க..முடியாமல் இருந்தால் ..அதில் மினைக்கெடமாட்டென்...காரணம் நேரமின்மை...பஞ்சியும் கூட...இனி பார்ப்போம்..ஒரு கை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நன்றி நுணாவிலான்.. நன்றி சிறியர்....நன்றி வீரப்பையன்....நன்றி ஈழப்பிரியன்....முதல் நன்றி செம்பாட்டனுக்கே..

இலகு முறையில் இணைக்க..முடியாமல் இருந்தால் ..அதில் மினைக்கெடமாட்டென்...காரணம் நேரமின்மை...பஞ்சியும் கூட...இனி பார்ப்போம்..ஒரு கை..

வாருங்கள், சேர்ந்தே ஒரு கை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

சிறியரின் முறைப்படி...பண்ணிட்டேன்......வீடியோவும் இதெ முறையா..பிளீஸ்

6 hours ago, செம்பாட்டான் said:

முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰

நீங்கள் இருவரும்.. டக்கென்று புரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

காணொளி என்றால், யூ ரியூப் முகவரியை பதிய வேண்டும்.

முகநூல் காணொளிகளை யாழ். களத்தில் நேரடியாக இணைக்க முடியாது.

அதன் இணைப்பை பதிந்தால்... பார்வையாளர்கள் சுட்டியை அமத்தி காணொளிகளை பார்வையிட முடியும்.

உதாரணம்:

யூ ரியூப்: 👉 https://www.youtube.com/watch?v=52kDVborPj 👈

முகநூல்: 👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா நியுசிலாந்தை சிம்பிலா வென்று விடும்

அவ‌ங்க‌ட‌ விளையாட்டு ந‌ல்லா ஒருக்கு , கோலி ப‌ழைய‌ கோலியா மாறி ர‌ன்ஸ்ச‌ குவிக்கிறார்😁

படம்

இந்த தொடரில் அதிக தொலைவு பயணம் செய்த அணியாக நியுசிலாந்தும் அதன் பாதி அளவில் தூரம் பயணம் செய்த அணியாக தென்னாபிரிக்காவும் உள்ளது.

மற்ற அணிகளை விட (இந்தியா தவிர்த்து) நியுசிலாந்து அணி இந்த ஆடுகளத்தில் இரண்டாம் தடவையாக விளையாட உள்ளததால் முதல் முறை ஆடுகளத்தின் அனுபவம் இந்த இரண்டாம் முறை அவர்களுக்கு ஆடுகளம் பற்றிய புரிதலை கொடுக்கும்.

இரு அணிகளும் தமது அணியினை மாற்றாமல் இறுதிப்போட்டியில் ஈடுபடும்.

இந்திய அவுஸ்ரேலிய போட்டியில் வருணை எதிர்கொள்ள அவுஸ்ரேலியா ஒரு திட்டத்துடன் களமிறங்கியதாக கருதுகிறேன், அவரது அளவினை குறைக்கும் முயற்சியில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டார்கள், கெட் பந்தை தவறாக கணித்து கூக்ளியில் ஆட்டமிழந்தாலும் அவுஸ்ரேலியர்கள் வருணின் அளவினை குறைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றார்கள் என கருதுகிறேன்.

அதன் மூலம் பின் காலில் சென்று பந்தை கணித்து விளையாட வழியினை உருவாக்கினார்கள், அதன் மூலம் வருணின் ஆதிக்கத்தினை குறைத்தார்கள்.

நியுசிலாந்தும் மிக சிறப்பாக முந்தயாரிப்பில் ஈடுபடும் அணி.

முதல் 10 ஓவருக்குள் 3 விக்கெட்டுக்களை எடுத்து இந்தியணியினை நெருக்கடிக்குள்ளாக்கும் திட்டத்துடன் வருவார்கள், முதல் போட்டியில் செய்தது போல பந்து வீச்சினை தெரிவு செய்யாமல் துட்ப்பாட்டத்தினை நாணய சுழற்சியில் வென்று தேர்வு செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தியணியின் கான்ட் பிரேக் ரையோவிற்கு புதிய பந்தில் பந்து உயிர்ப்புடனிருந்தால் அவர்களை வெளியேற்றுவதுதான் நியுசிலாந்தின் திட்டமாக இருக்கும்.

நியுசிலாந்தின் துடுப்பாட்டத்திற்கு வில்லியம்சனே முக்கியமான நபராக இருப்பார், அவரை மையமாக வைத்தே நியுசிலாந்து அணி விளையாடுவதால் இந்தியணி வில்லியம்சனை அவுட்டாக்கினால் நியுசிலாந்து மாற்று தெரிவாக லதம் இருக்க வேண்டும்.

வெல்லப்போகும் அணியான நியுசிலாந்து அணிக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா நியுசிலாந்தை சிம்பிலா வென்று விடும்.....

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!! 😜

Will Young இற்கு பதிலாக Devon Conway ஆடினால் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது இலகுவாக இருக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

Will Young இற்கு பதிலாக Devon Conway ஆடினால் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது இலகுவாக இருக்கும்!!

Devon Conway இவ‌ரின் விளையாட்டு போன‌ வ‌ருட‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ரை பாராட்டும் ப‌டியாய் இல்லை

ஜ‌பிஎல்ல‌ சென்னை இவ‌ரை தொட‌ர்ந்து த‌க்க‌ வைச்சு இருக்கு

ச‌ரியாக‌ விளையாடாத‌ நேர‌ம் எல்லாம் காய‌ம் என்று வில‌கி விடுகிறார் அல்ல‌து அணியில் இருந்து நீக்க‌ப் ப‌டுவார்.........................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

Will Young இற்கு பதிலாக Devon Conway ஆடினால் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது இலகுவாக இருக்கும்!!

Will Young ம‌லை போல் நின்று விளையாட‌க் கூடிய‌ ர‌ல‌ன்ட் அவ‌ரிட‌ம் இருக்கு

இப்போது தொட‌க்க‌ வீர‌ர்ராக‌

எங்க‌ட‌ ( அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணாவுக்கு பிடிச்ச‌ வீர‌ர் Rachin Ravindra இவ‌ரும் இட‌துகை வீர‌ர் )

நியுசிலாந் அணியில் மூன்று இட‌து கை வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவை சிமி பின‌லில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரா விளையாடின‌வை🙏👍..................................

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இறுதிப்போட்டியாக இருக்கப் போகிறது. ஒரு பக்கச் சார்பாக இல்லாம இருந்தால், நமக்குக் கொண்டாட்டம்தான்.

images?q=tbn:ANd9GcTgJ_5E5uynvOKbtP89GNZ

  • கருத்துக்கள உறவுகள்

சாம்ப்பியன் கிண்ண போட்டியில் இதுவரை அதிக விக்கெட்டுக்கள் எடுத்த மட் கென்ரி இறுதிப்போட்டியில் ஆடுவது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என நியுசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார், தென்னாபிரிக்காவுடன் நடந்த போட்டியில் காயம் காரணமாக வெளியேறியவர் மீண்டும் வந்து இரண்டு ஓவர்கள் பந்து வீசியுள்ளார்.

இந்த் தொடரில் கென்ரி ஆரம்ப ஓவர்களில் மட்டுமன்றி (புதிய பந்தில்) இறுதி ஓவர்களில் கூட சிறப்பாக பந்து வீசுகிறார் இவரது சராசரி ஏறத்தாள 16 உள்ளது அதாவது 16 பந்துகளுக்கு ஒரு விக்கெட், அத்துடன் இறுதி ஓவர்களில் ஓவருக்கான ஒட்ட விகிதம் 6.81 (நினைவில் உள்ள வகையில்) உள்லது.

இந்தியணியின் சுழல் பந்து வீச்சு மொத்த பந்து வீச்சில் 65% ஆதிக்கத்தினை பெறுகிறது 4 முழுநேர சுழல் பந்து வீச்சாளர்களை வைத்து வீசும் இந்தியணியின் சுழல் பந்து வீச்சி 80% விகிதத்திற்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது, குறித்த ஒரு பந்து வீச்சாளர் சரியாக பந்து வீசாமல் போனால் அதனை ஈடுசெய்யும் வைகையில் இந்த நெகிழ்வுத்தன்மை இந்தியணிக்கு காணப்படுகிறது.

இந்தியா / நியுசிலாந்து சுழல் பந்து வீச்சு ஒவருக்கான ஓட்ட விகிதம் 4.7 / 5.1 என உள்ளது.

நியுசிலாந்து அணி ஒரு முழுநேர பந்து வீச்சாளருடன் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகிறது ஆனால் 3 வேக பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகின்ற நிலையில் கென்ரி காயம் காரணமாக விளையாடாவிட்டால் அவரது இடத்திற்கு நியுசிலாந்து மார்க் சப்மனை களமிறக்கலாம், இவர் சகல துறை ஆட்டக்காரர் நியுசிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையினை பலப்படுத்துவதுடன் பகுதி நேர இடது கை சுழல் பந்து விச்சாளராகவும் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் போட்டிக்கான கேள்விக் கொத்தையும் கிருபன் பதிந்துள்ளார்.

எனவே விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இப்போதிருந்தே கவனம் செலுத்துங்கள்.

தவறாமல் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐபிஎல் போட்டிக்கான கேள்விக் கொத்தையும் கிருபன் பதிந்துள்ளார்.

எனவே விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இப்போதிருந்தே வகனம் செலுத்துங்கள்.

தவறாமல் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்.

முதலாவதாக கலந்து கொன்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஐபிஎல் போட்டிக்கான கேள்விக் கொத்தையும் கிருபன் பதிந்துள்ளார்.

எனவே விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இப்போதிருந்தே வகனம் செலுத்துங்கள்.

தவறாமல் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்.

சார் வகனம் செலுத்துங்கள். ......எப்புடிச் சார் செலுத்துவது

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுழல் பந்து வீச்சாளர்களான ஜடேஜா, பட்டேல், வருண் அதிக திருப்பத்தினை ஏற்படுத்தாத பந்து வீச்சாளர்கள், இவர்கள் பெரும்பாலும் 4 ஆவது விக்கெட்டுக்கு பந்து வீசுவோர், இதில் ஜடேஜா மற்றும் பட்டேலின் பந்து இலேசாக திரும்பும் பந்து ஆனால் வேகமாகவும் வெவ்வேறு பட்ட உயரத்திலும் வரும் வருனின் பந்து மற்ற இருவரது பந்து வீச்சு அடிப்படைகளை கொண்டிருந்தாலும் உள்ளே வரும் பந்து என மேலதிகமாக ஒரு அம்சமும் உள்ளது, கடந்த போட்டியில் நியுசிலாந்து செய்த்தது போல் சுவீப் ஆடாமல் இந்த 3 பந்து வீச்சாளர்களையும் நேரான மட்டையுடன் நியுசிலாந்து எதிர்கொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால் இவர்களது பந்து வீச்சினை எதிர் கொள்ளலாம், அளவு குறைந்த பந்துகளை வெட்டி ஆடமுடியும்.

அவுஸ்ரேலியாவுடன் விளையாடிய அதே ஆடுகளத்திலேயே இந்த போட்டி நிகழ உள்ளது அதனால் கடந்த போட்டியில் 280 ஆடுகளம் போல காணப்படது, இந்த போட்டியில் 270 ஆடுகளம் ஆக காணப்படும் என கருதுகிறேன்.

கென்றி விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

நியுசிலாந்து பாண்டியா, ஜடேயா, பட்டேல் இலக்கு வைக்க கூடும்.

வருணை தேவை ஏற்படின் அடித்தாட கூடும்.

மார்க் சப்மனை அணியில் எடுத்தால் நல்ல ஒரு தொடக்கத்தினை கொடுப்பார், புதிய பந்தில் ஓட்டங்களை பெறுவது இலகு.

8 minutes ago, alvayan said:

சார் வகனம் செலுத்துங்கள். ......எப்புடிச் சார் செலுத்துவது

நல்ல அவதானிப்பு, நான் கவனிக்கவில்லை.

என்ன வசி, நீங்கள் நியூசிலாந்துக்கு ஆதரவாக மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடுகிறீர்கள். நீங்கள் சுழட்டுற சுழட்டில் நியூசிலாந்து வென்றாலும் வென்றுவிடும் போல கிடக்கிறது. உங்கள் அலசல் நன்றாக இருக்கின்றது. ஆனால் என்ன, மற்றப் பக்கம் இந்திய அணி விளையாடுகிறது என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆடுகளம் மிகவும் மெதுவானது. பந்து விழுந்து நின்று மெதுவாகத்தான் மட்டையை நோக்கி வரும். முன்னங்காலில் ஆடினாலோ அல்லது மட்டையினால் கூட்டினாலோ, ஆட்டமிழப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். மிகவும் நிதானமாக, பின்னங்காலில் ஆடவேண்டும் அல்லது ரோகித் மாதிரி விரைவாக அடித்து ஆடவேணும்.

வில்லியம்சன் ஒருவர்தான் இக்களத்தில் நின்று பின்னங்காலில் இலாவகமாக ஆடக்கூடியவர். மற்றவர் எல்லோருக்கும் அது சரியாக வராது. பார்ப்போம் எப்படி இந்திய சுழலர்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று.

ரோகித் ஒரு பெரிய ஆட்டம் இதுவரை ஆடவில்லை. இறுதிப் போட்டியில் அதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் களத்தில் அவரால் மிக இலகுவாக ஆடமுடியும். ஒரு 30 ஓட்டங்கள் எடுத்துவிட்டார் என்டால், அவரிடமிருந்து ஒரு பெரிய ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

என்ன வசி, நீங்கள் நியூசிலாந்துக்கு ஆதரவாக மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடுகிறீர்கள். நீங்கள் சுழட்டுற சுழட்டில் நியூசிலாந்து வென்றாலும் வென்றுவிடும் போல கிடக்கிறது. உங்கள் அலசல் நன்றாக இருக்கின்றது. ஆனால் என்ன, மற்றப் பக்கம் இந்திய அணி விளையாடுகிறது என்பதை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம்.

எதிர்பாராத நிகழ்வு (நியுசிலாந்து வென்றவுடன்) நடக்கும் போது அதனை தாங்க முடியாமல் சிலருக்கு கார்ட் அட்டாக் வராமலிருக்க செய்யும் முதலுதவி.

1 hour ago, செம்பாட்டான் said:

ரோகித் ஒரு பெரிய ஆட்டம் இதுவரை ஆடவில்லை. இறுதிப் போட்டியில் அதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் களத்தில் அவரால் மிக இலகுவாக ஆடமுடியும். ஒரு 30 ஓட்டங்கள் எடுத்துவிட்டார் என்டால், அவரிடமிருந்து ஒரு பெரிய ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

புதிய பந்து உயிர்ப்புடன் இருந்தால் மூவரணி உடனடியாக மைதானத்திற்கு வெளியே சென்று போட்டியினை வேடிக்கை பார்ப்பது வழமை, நியுசிலாந்தின் வேக பந்து வீச்சு சிறப்பாக உள்ளது அதனால் தேவையில்லாமல் மைதானத்தில் நின்று களைத்து போகாமல் விரைவாக வெளியே போய் போட்டியினை வேடிக்கை பார்ப்பார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

482319474_608728012136902_12227030748093

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.