Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

வணக்கம் வயலார். உங்களின் கருத்துகளை தயக்கமின்றி முன்வையுங்கள். இணைக்கப்படும் காணொலிகளை பெரும்பாலும் பலரும் பார்ப்பதில்லை என்று தான் நினைக்கின்றேன். நானும் பார்ப்பதில்லை, ஒன்றோ இரண்டோ தவிர.

'இரும்புக் காலம்..............' இப்பொழுது ஏன் பொதுவெளியில் பேசப்படுகின்றது என்பது செய்திகளில் இருந்து தெரிந்தது.

அறிவியலோ, வரலாறோ ஒன்றை நிரூபிக்க புறவய நிரூபணம் என்பது முக்கியமானது. அது போலவே தான் அவற்றை கொண்டு வருபவர்களின் கல்வி, தகுதி மற்றும் அனுபவங்கள் என்பவையும் இன்றியமையாதவை. இவைக்கு மாற்று இல்லை.   

என்ன‌ குருநாதா இது

2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் எழுத்தை விரும்பி வாசிக்கின‌ம் இல்லை காணொளிக‌ளை தான் அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்

முத‌ல் இட‌த்தில்

1 ரிக்ரொக்

2 யூடுப்

3முக‌ நூல்

என‌க்கு பொது வெளிக‌ளில் என்ர‌ ப‌ட‌ம் போடுவ‌து அந்த‌க் கால‌ம் தொட்டு பிடிக்காது ஆன‌ ப‌டியால் எல்லா இட‌த்திலும்   த‌லைவ‌ரின் ப‌ட‌த்தையே போடுவேன்.............ரிக்ரொக்கில் த‌லைவ‌ர் ப‌ட‌ம் போட‌ முடியாது கைபேசியில் 2004க‌ளில் நான் ப‌ழ‌கின‌ Photoimpact ஆப் இருக்கு அத‌ன் மூல‌ம் சிறு மாற்ற‌த்தை செய்து விட்டு இணைப்பேன்................நிர்வாக‌த்தோடு ஆயிர‌ம் முர‌ன்க‌ள் இருந்தாலும் யாழ்க‌ள‌த்தை பார்க்க‌ம‌ இருக்க‌ முடியாது யாழும் என‌து உன‌ர்வும் ஒன்றாய் க‌ல‌ந்த‌ ஒன்று....................எங்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ள் பெரிய‌ ப‌ந்தி என்றாலும் ச‌லிக்காம‌ வாசிப்போம் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ச‌ரி வ‌ராது

இப்ப‌ ஏக‌ப்ப‌ட்ட‌ இணைய‌த்த‌ள‌ம் அதுக்கை பார்வையாள‌ர்க‌ள் போய் பாப்பின‌மான‌ ச‌ந்தேக‌ம் தான் குரு நாதா👍.................................

  • Replies 53
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம

  • ரசோதரன்
    ரசோதரன்

    தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிர

  • ரசோதரன்
    ரசோதரன்

    @வீரப் பையன்26 பையன் சார், முதலில், தமிழில் விடாமல் எழுதிக்  கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍. இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதே

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ குருநாதா இது

2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் எழுத்தை விரும்பி வாசிக்கின‌ம் இல்லை காணொளிக‌ளை தான் அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்

பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும்.

ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது.

இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது.

உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். 

காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும்.

வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம்.

இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். 

டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன்.

நான் யாழ்களத்திற்கு வர தொடங்கியதே இலங்கை தமிழ் செய்திகள் தமிழ் கட்டுரைகள் படிப்பதற்கு. காணொளிகள் வட்சப்பில் எனக்கு  குழுவினர் அனுப்பினால் அவர்கள் குறிப்பிடும் நிமிடங்களை மட்டும் பார்ப்பது அல்லது ஓடவிட்டு சில நிமிடங்கள் மட்டும் பார்ப்பது தான்.மற்றய காணொளிகளை நீக்கிவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் பற்றிய தமிழநாட்டுத் தமிழரின் பார்வையை சீமானுக்கு முன், பின் என்று பிரிக்கலாம்.

இலங்கைத் தமிழரின் படிப்பறிவு, தமிழ் உச்சரிப்பு, தமிழ் பண்பாட்டியலில் எங்களவரின் பங்களிப்பு, வயது குறைந்தவர்களையும் பண்புடன் அழைக்கும் பண்பு, போராட்டம், தியாகம், எமது உணவு முறை என்று தமிழ் நாட்டு மக்களின், அரசியல் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வர்கள் நாம். பிரபாகரனின் அரசியலை நிராகரித்தவர்கள் கூட அவரை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தனர்.

ஆனால் இன்று நிலைமை அதோகதி! 

கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி  வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது.

நாங்கள் சிங்கள அரசால் போரில் தோற்கடிக்கப்பட்டோம் தான், ஆனால் மானத்தை இழக்கவில்லை. அதை சொந்த தொப்புள்க் கொடி உறவுகளிடமே  இழக்கவைத்த பெருமை சீமானையும் அவரின் ஈழத்தமிழ் விசிறிகளையே சாரும்.

ஈழத்தமிழராக நாம் செய்த தவறு வீட்டில் பெற்ற தாயையே கெட்ட வார்த்தையில் ஏசும் கூட்டத்தை, நன்னெறி அற்ற கூட்டத்தை, ஊரில் சந்தியில் ரவுடித்தனம் செய்த கூட்டத்தை வெளிநாட்டுக்கு எடுத்து அனுப்பி அவர்களைப் பெரிய ஆள் ஆக்கி விட்டது தான்.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நெருப்பு துண்டு.

2 hours ago, பகிடி said:

கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி  வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது.

இந்த நிலை வரப்போகிறது என யாழில் எத்தனையோ முறை தொண்டைதண்ணி வத்த கத்தி இருக்கிறேன்.

கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின் மீதுள்ள நியாயமான கோவத்தால், நாதக ஆதரவு 8% தவிர மிகுதி அனைவர்ரையும் பகையாளிகள் ஆக்கி உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ம்ம்ம்…

சீமான் எதிர் அணியின் மூன்று பிரதான ஆயுதங்களானவ:

1. சீமான் (விளக்கம் தேவை இல்லை)

2. நீங்கள் (சப்போர்ட் பண்ணுவதாக நினைத்து கொண்டு சீமானுக்கு சாணி அடிப்பது)

3. நாதம் - @Nathamuni ஒரு கட்டத்துக்கு மேல் குறுக்கு விசாரணை தாங்க முடியாமல் “ஓம் நாம் பிஜேபிதான்” என ஒத்து கொள்வது 🤣.

இந்த மூன்று பீரங்கிகளும் இருக்கும் வரை வெற்றி நமதே🤣.

நாம் யோசிக்க வேண்டியது, @புலவர்@பாலபத்ர ஓணாண்டி @இசைக்கலைஞன் போன்ற ஆயுதங்களை பற்றியே.

உடான்சர்,

நம்ம குருஜி அட்வைசீல, ஐஸ் போட்டு டயற் கோக் அடிச்சிற்று மப்பீல சொல்லுறத எல்லாம் கணக்கில எடுப்பீயளே?? 😜🤪

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வீரப் பையன்26 said:

சீ 

செவ்விய‌ன் என்ர‌ ஒரு புது ந‌ப‌ர் போல் யாழில் வ‌ந்து சீமான் வாந்தி எடுக்கிறார் அவ‌ர் மீதும் இதே குற்ற‌ச் சாட்டை வைக்க‌லாமா

ஹாஹா மன்னித்துக்கொள்ளுங்கள் நானும் ஓர் காலத்தில் சங்கி சைமனை நம்பியவன் தான், வளர வளர நமக்கு அறிவு வளருது, சாத்தியமான உண்மைகள் தெரிய வருகிறது.

ஆயிரக்கணக்கான போராளிகள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருக்கும் போது தலைவர்  தம்பிக்கு என்ன பிடிக்கும், சம்பலை எத்தனை தடவை தொட்டான் என்பது போன்ற  பொய்களை தொடர்ந்து கூறி, இந்த போராட்டத்தையும்  அதற்கு உயிர் கொடுத்த மாவீரர்களையும் சிறுமைப்படுத்தும் இந்த சங்கி சைமன் என்கிற தமிழின துரோகியை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாந்தி எடுப்பேன். 

எனக்கு ஒவ்வாத ஒன்றை இது வரை உள்வாங்கியிருக்கிறேன் அது வாந்தியாகத்தான் வரும்

சங்கி சைமனால் ஈழத்துக்கு இது வரை என்ன பயன் கிட்டியிருக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பதிலையும் ஒருவராலும் கூற முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

ஈழத்தமிழர்கள் பற்றிய தமிழநாட்டுத் தமிழரின் பார்வையை சீமானுக்கு முன், பின் என்று பிரிக்கலாம்.

இலங்கைத் தமிழரின் படிப்பறிவு, தமிழ் உச்சரிப்பு, தமிழ் பண்பாட்டியலில் எங்களவரின் பங்களிப்பு, வயது குறைந்தவர்களையும் பண்புடன் அழைக்கும் பண்பு, போராட்டம், தியாகம், எமது உணவு முறை என்று தமிழ் நாட்டு மக்களின், அரசியல் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வர்கள் நாம். பிரபாகரனின் அரசியலை நிராகரித்தவர்கள் கூட அவரை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தனர்.

ஆனால் இன்று நிலைமை அதோகதி! 

கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி  வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது.

நாங்கள் சிங்கள அரசால் போரில் தோற்கடிக்கப்பட்டோம் தான், ஆனால் மானத்தை இழக்கவில்லை. அதை சொந்த தொப்புள்க் கொடி உறவுகளிடமே  இழக்கவைத்த பெருமை சீமானையும் அவரின் ஈழத்தமிழ் விசிறிகளையே சாரும்.

ஈழத்தமிழராக நாம் செய்த தவறு வீட்டில் பெற்ற தாயையே கெட்ட வார்த்தையில் ஏசும் கூட்டத்தை, நன்னெறி அற்ற கூட்டத்தை, ஊரில் சந்தியில் ரவுடித்தனம் செய்த கூட்டத்தை வெளிநாட்டுக்கு எடுத்து அனுப்பி அவர்களைப் பெரிய ஆள் ஆக்கி விட்டது தான்.

இங்கு அதிகம் பேசப்பட வேண்டியதாக கருதுவது போர் குற்றங்கள், அதற்கு முதன்மையாக இருந்த ராஜபக்சே சகாக்கள் மற்றும் ராணுவம் பற்றி, மற்றும் இன்றைய மக்கள் நிலை , எதிர்கால திட்டம் பற்றி. 

ஆனால் மற்றவற்றை பேசி இவைகள் மறைக்கப்படுகிறது இல்லை மறக்கடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை மற்ற தலைவர்களை கொச்சையாக பேசும் போது எதிர் தரப்பில் தலைவர்களை கொச்சையாக பேசுகிறார்கள். இது எல்லா பக்கத்திலும் நடக்கிறு ஆனால் இது சிறு கூட்டம் தான். ஆனால் இது தொடர்ந்து கொண்டேயிருந்தால் இரு தரப்புக்கும் நன்மை பயக்காது.

இன்றைய மக்களின் தேவைகளை பேசாவிட்டால் வடகிழக்கில் சமீபத்திய தேர்தல் முடிவுகளே தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். 

சிறப்பு.👌👌👌

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, செவ்வியன் said:

இங்கு அதிகம் பேசப்பட வேண்டியதாக கருதுவது போர் குற்றங்கள், அதற்கு முதன்மையாக இருந்த ராஜபக்சே சகாக்கள் மற்றும் ராணுவம் பற்றி, மற்றும் இன்றைய மக்கள் நிலை , எதிர்கால திட்டம் பற்றி. 

ஆனால் மற்றவற்றை பேசி இவைகள் மறைக்கப்படுகிறது இல்லை மறக்கடிக்கப்படுகிறது.

மிகவும் சரியாகச் சுட்டியுள்ளமைக்கு நன்றி.

இதுகூட ஒருவகைக் கருத்தியல் மடைமாற்றமாகவே நோக்க வேண்டியுள்ளது. நீங்கள் சுட்டியுள்ள விடயங்களை விட கடந்த காலத்தில் சீமான் மற்றும் ரஸ்யா - உக்ரேன் விடயஙகள் யாழ்க்களத்திலே முதன்மை விடயங்களாகி தமிழீழத்தவரது விடயங்கள் விவாதங்களில் இருந்து மறைந்துவிட்டநிலை தெரிகிறது. நாமே நகர முடியாது நிற்கையில் தமிழக அரசியல் எம்மை நோக்கி வரரதென்பதைப் பட்டுறிவாகக்கொண்ட தமிழீழத்தவர்கள் தமது பொன்னான நேரத்தை செலவழித்துப் பயனேதும் வருமா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

உடான்சர்,

நம்ம குருஜி அட்வைசீல, ஐஸ் போட்டு டயற் கோக் அடிச்சிற்று மப்பீல சொல்லுறத எல்லாம் கணக்கில எடுப்பீயளே?? 😜🤪

செல்லாது…செல்லாது…

ஸ்கிரீன் ஷொட் எல்லாம் எடுத்து வச்சிருக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும்.

ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது.

இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது.

உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். 

காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும்.

வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம்.

இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். 

டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.

ச‌ரி குருநாதா யாழ்க‌ள‌த்தின் பார்வையாள‌ர்க‌ள் இப்போது உள்ள‌ சூழ‌லில் எத்த‌னை பேர்

ஒரு செய்தியை ஏராள‌ன் அண்ணாவோ அல்ல‌து ம‌ற்ற‌ உற‌வுக‌ளோ இணைத்தால் வியூஸ் அதிக‌ம் வ‌ருதில்லையே குறைந்த‌து 200 வியூஸ் கூட‌ தாண்ட மாட்டுது....................இதை நிர்வாக‌மெ சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒத்து கொண்டார்க‌ள் பார்வையாள‌ர்க‌ள் யாழில் குறைந்து விட்டின‌ம் என‌ எழுதி இருந்த‌வை

யாழில் எழுதும் ப‌ல‌ர் 50 வ‌ய‌தில் இருந்து 75வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வை தான் அதிக‌ம்...............இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் யாழில் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் எழுதுவின‌மா என‌ என‌க்கு தெரியாது..............நான் 2008க‌ளில் யாழில் இணைந்த‌ போது என‌து அண்ணாக்கு என‌து ந‌ண்ப‌னுக்கு யாழை அறிமுக‌ம் செய்து வைச்சுஇருந்தேன் அவ‌ர்க‌ள் வ‌ந்தார்க‌ள் ஒன்று இர‌ண்டு க‌ருத்தை எழுதி போட்டு அப்ப‌டியே விட்டு விட்டார்க‌ள்

எங்க‌ட‌ மொழி அழியாம‌ இருந்தால் ம‌கிழ்ச்சி ஊரில் பிற‌ந்து வெளி நாட்டில் வாழும் ப‌ல‌ருக்கு த‌மிழில் எழுத‌த் தெரியாது................கூட‌ டெனிஸ் மொழியில் தான் எழுதுவின‌ம்.................

நான் எழுதும் தமிழை பார்த்து ப‌ல‌ர் என்னை கேலியும் கிண்ட‌லும் செய்தார்க‌ள் யாழில் ப‌ல‌ அவ‌மான‌ங்ள் ப‌ட்டு எப்வும் ச‌ரியோ பிழையோ த‌மிழில் தான் எழுத‌னும் என‌ என‌க்கு நான் எடுத்த‌ முடிவு.................நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இங்க‌த்தை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளுட‌ன் இருந்து தான் வ‌ள‌ந்தேன் 

த‌மிழே இல்லாத‌ உல‌கில் வாழ்ந்து கொண்டு யாழில் வ‌ந்து தான் த‌மிழே எழுத‌ ப‌ழ‌கினேன்........ந‌ன்றி யாழ்🙏👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌ரி குருநாதா யாழ்க‌ள‌த்தின் பார்வையாள‌ர்க‌ள் இப்போது உள்ள‌ சூழ‌லில் எத்த‌னை பேர்

ஒரு செய்தியை ஏராள‌ன் அண்ணாவோ அல்ல‌து ம‌ற்ற‌ உற‌வுக‌ளோ இணைத்தால் வியூஸ் அதிக‌ம் வ‌ருதில்லையே குறைந்த‌து 200 வியூஸ் கூட‌ தாண்ட மாட்டுது....................இதை நிர்வாக‌மெ சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒத்து கொண்டார்க‌ள் பார்வையாள‌ர்க‌ள் யாழில் குறைந்து விட்டின‌ம் என‌ எழுதி இருந்த‌வை

எல்லாரும் டிக்கொக்கில் மினெக்கெடுகின்றார்கள்! @Danklas வன்னிமைந்தன் என்ற ஒரு டிக்டொக் பிரகிரதியின் லைவ் சனலில் போய் விடுப்புப் பார்ப்பதாகச் சொன்னார்😜

இன்னும் பலர் பல விடுப்புராணிகள் தூஷணத்தில் அரசியல் தொடக்கம், தொடைகளின் தடிப்பும், மாரின் அளவும், தமிழ் ஆண்களின் ஆண்மையின்  எழுச்சியும் பற்றி அலம்புவதை, அவர்களைத் திட்டித் திட்டியே, பொழுதுபோக்காகக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 😜இப்படி அழுகல் மூளையோடு🧠 பலர் இருப்பதால்தான் யாழுக்கு வியூஸ் குறைவு. அவர்களை உள்ளே இழுப்பதற்கு விடுப்புராணிகளையும், இரவுராணிகளையும் கொண்டுவரவேண்டும்!  அப்படி ஒரு நிலை தேவையா!🤮

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நிர்வாக‌மும் ந‌டுநிலையா செய‌ல் ப‌ட்டால் தான் யாழ்க‌ள‌மும் செல்ல‌ செழிப்பாக‌ இருக்கும்🙏👍.............எடுத்த‌துக்கு எல்லாம் எச்ச‌ரிக்கை புள்ளி............ந‌டுநிலையா செய‌ல் ப‌டாம‌ க‌ருத்தை நீக்குவ‌து இத‌னால் தான்   யாழை விட்டு கோவித்து கொண்டு போன‌வ‌ர்க‌ள் அதிக‌ம்

யாழ் நிர்வாக‌த்துக்கு வேண்ட‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ளை ம‌ட்டும் வைத்து கொண்டு இது உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் க‌ருத்துக் க‌ள‌ம் என்றால் யார் இதை ந‌ம்புவின‌ம்

முத‌ல் ச‌ரி செய்ய‌ வேண்டிய‌து இங்கை பெரிய‌ப்பு அத‌ற்க்கு பிற‌க்கு தான் ரிக்ரொக் பார்வையாள‌ர்க‌ளை கூட்டி வ‌ருவ‌தை ப‌ற்றி விவாதிக்க‌லாம்.........................

  • கருத்துக்கள உறவுகள்

1. எப்போதும் ரெக்கோர்ட் டான்சிற்கு சேரும் கூட்டம், திருக்குறள் பேச்சு போட்டிக்கு கூடுவதில்லை.

இது வழமையான ஒன்றே

2. தேவைக்கு அதிகமாக காணொளிகளை இணைப்பது - வாசிக்க வருவோரையும் வராது பண்ணி விடும்.

3. எனக்கு 50 க்கு கீழேதான் (அதிக வருடங்கள் இல்லை) - ஆனால் 30 வயது ஆட்களும் யாழில் இருக்கிறார்கள்.

ஆனால் யாழ் அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்களுக்கானது, 30 க்கு கீழ் பட்ட புலம்பெயர் பிள்ளைகள், 2ம் தலைமுறை. அவர்கள் டிக்டொக், இன்ஸ்டாவில் கூட தமிழ் சம்பந்தமாக, ஈழம் சம்பந்தமாக மினெகெடுவதில்லை. அவர்கள் வாழ்க்கை, போக்கு, சூழல் வேறு.

யாழில் தமன்னாவை கொண்டு வந்து நடனம் ஆடவிட்டாலும் இது மாறப்போவதில்லை.

4. சும்மா, சும்மா நிர்வாகத்தை குறை சொல்லி பயன் இல்லை. மிக தெளிவான விதிகள் உள்ளன. அவற்றை மீறி விட்டு அல்லது நாம் கொட்டும் குப்பைகளை நிர்வாகம் தூக்கினால் - ஓடுவது, பின்னர் நிர்வாகத்தை குறை சொல்லும் ஒரே நோக்கத்துக்கு மட்டும் லாக்-இன் ஆவது.

நிர்வாகம் ஆரம்பத்தில் தூக்கிய என் கருத்துகளை சேர்த்தால் ஒரு சின்ன புத்தகமே அடிக்கலாம். அந்தளவுக்கு என் உழைப்பு மண்ணாகியுள்ளது.

பலத்த உழைப்பின் பின் முறிந்த பனை தரவேறிய போது சில நொடிகளில் அழிக்கப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு எப்போதும் சகல தரப்பையும் திருப்தி படுத்த முடியாது.

அப்படித்தான் இதையும் எடுக்க வேண்டும்.

குறித்த நிர்வாகி பாரபட்சமாக நடந்தால் - அதை உள்ளே இருந்தபடியே கேள்வி கேட்கலாம். நான் கேட்டிருக்கிறேன். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 00:57, goshan_che said:

ஆரோ ஒரு பழைய சீமான் பிரச்சார பீரங்கி மீண்டும் களம் இறங்கி இருக்காப்பல🤣.

அதுதானே திராவிட நிலப்பரப்பில் இரும்புக்காலம் என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.பொய்கள் வேடங்கள் எல்லாம் நீண்டகாலம் நிலைத்திருக்காது. உண்மைகளை நீண்டகாலம் மூடிமறைக்க முடியாது. அது வெளிப்பட வேண்டிய நேரத்தில் வெளிப்படும். இது திராவிடத்தின் பொய்கள் அம்பலப்பட்டு திராவிடத்தின் அழிவுக்காலம்..

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

பலர் இருப்பதால்தான் யாழுக்கு வியூஸ் குறைவு. அவர்களை உள்ளே இழுப்பதற்கு விடுப்புராணிகளையும், இரவுராணிகளையும் கொண்டுவரவேண்டும்!  அப்படி ஒரு நிலை தேவையா!🤮

திராவிடக்கட்சிகளள குறிப்பாக திமுக தேர்தல் மேடைகளில் நடிகைககைளை அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் பாட்டுப்போட்டு ஆட்டம் போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி யாழுக்கும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்..
அந்தக்காலத்தில் nhபன்னியின் செல்வன்> கடல்புறா Nhன்ற பலபாகங்களைக் கொண்ட புத்தகங்களை வாசித்த பழையவர்களுக்கே இந்த நவீன தொலைபேசிகளின் வரவால் வாசிப்பு பழக்கததைத் தொடர முடியாமல் இருக்கிறது.மாற்றத்திற்கேற்ப நாங்களும் புதியவற்றை முற்றாக ஒதுக்கிவிடாமல் அதற்கேற்ப எம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். என்ன இப்பொழுது கட்டற்ற செய்திப்பரவல் நடைபெறுவதால் உண்மை எது பொய் எது என்பதை பகுத்துப் பார்ப்பதற்குள் பொய் உலகத்தைச் சுற்றி வந்து விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 பையன் சார்,

முதலில், தமிழில் விடாமல் எழுதிக்  கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍.

இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதேயில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இப்படியான களங்கள் அப்படித்தான் இருக்கும். இங்கு வந்து சில பந்திகளை தொடர்ச்சியாக எழுதுவது அல்லது வாசிப்பது ஒரு இலகுவான செயல் அல்ல. பரவலான வாசிப்பும், பல்வேறு அனுபவங்களும், கிரகிக்கும் தன்மையும், முயற்சியும் இருந்தால் மட்டுமே அது முடியும். இன்று உலகில் தமிழ் சமூகம் வாசிப்பதில் மிகவும் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். தமிழில் வரும் உலகத்தரமான புத்தகங்கள், கட்டுரைகளைக் கூட ஒரு 200 பேர்கள் வாசித்தாலே, இருக்கும் ஒன்பது கோடித் தமிழர்களில், அது ஒரு பெரிய விடயம். இங்கு களத்தில் 200 பேர்கள் ஒன்றைப் பார்வையிடுகின்றார்கள் என்றால் அதையிட்டு அதிகம் கவலையில்லாமல் நாங்கள் முன்னே சென்று கொண்டிருக்கலாம்.

எங்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் ஒரு விதிவிலக்கு. பொதுவான சமூக விதிகள் அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது.  

கேளிக்கைகள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவில் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவற்றின் இறுதி முடிவு பெரும் சலிப்பாகவே முடியும். இந்தப் பொருளற்ற கேளிக்கைகளால்  வாழ்வே ஒரு நாள் சலிப்பாக மாறும். ஒவ்வொரு தனிமனிதனும் இதிலிருந்து வெளியே வருவது அவரவர் பொறுப்பே. புதைமணலில் சிக்கி போய்க் கொண்டிருப்பது போல போய்க் கொண்டிருக்கும் சமூகம். இப்படியான களங்கள், உரையாடல்கள் சில மனிதர்களையாவது மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ஒருவர் தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சி இது என்றும் சொல்லலாம்.

அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று சொல்லப்படுவதில் வீடு என்பது விடுதலை. அறிவதால் வரும் விடுதலை அது. ஒன்றை தெளிவாக அறிந்தவுடன் அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடுகின்றது. கேளிக்கைகளால் விடுதலை வருவதில்லை. வாசிப்பதாலும், உரையாடல்களாலும் அது கிடைக்கக்கூடும். 

அடுத்த தலைமுறையின் இன்றைய உலகம் வேறு. எனக்கு இரு பிள்ளைகள் - மகன் 28 வயது, மகள் 25 வயது (எனது வயது 56). அவர்களின் உலகமும், என்னுடைய உலகமும் வேறுவேறானவை. ஆனால், 'எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்......................' என்பது போல, பின்னொரு காலத்தில் என் பிள்ளைகளின் தேடுதல்களும், உங்கள் பிள்ளைகளின் தேடுதல்களும் எங்களுடயது போன்றே வரப் போகின்றது. இவர்கள் இன்று யாழ் களங்கள் போன்றவற்றுக்கு வரமாட்டார்கள். ஆனால், பின்னர் ஒன்றைத் தேடுவார்கள். நானே அப்படித் தானே யாழ் களத்திற்கு வந்தேன்..............🤣.

நிர்வாகம் அதன் பொறுப்பில் இருக்கட்டும், நாங்கள் எங்களின் பொறுப்பில் இருப்போம். சில சொற்கள், தனிமனித தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து விட்டால், இங்கே நிர்வாகம் ஒருவரையும் ஒன்றும் சொல்வதில்லையே. போராளிகளையும், போரட்டத்தையும் இழிவு செய்யும் கருத்துகளை தவிர்த்து, வேறு எந்தக் கருத்தையும் நாங்கள் முன்வைக்க இங்கு தடை ஏதும் இல்லையே. எதையும் இழிவு செய்யாமல், நாகரிகமாக உரையாடுவதும் ஒரு விடுதலையே.........................🙏.      

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

திராவிடக்கட்சிகளள குறிப்பாக திமுக தேர்தல் மேடைகளில் நடிகைககைளை அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் பாட்டுப்போட்டு ஆட்டம் போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி யாழுக்கும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்..

அது தேவையா! என்று ஒரு போட்டதன் அர்த்தம் புரியவில்லையா @புலவர் ஐயா!😆

யாழுக்கு 40 பேர் வந்தாலும் வியூஸ் குறைந்தாலும் தரம் குறையாமல் இருக்கவேண்டும். விடுப்பு ராணிகளும், இரவு ராணிகளும் வந்தால் நாம் இங்கிருக்கமுடியாது. நடையைக் கட்டவேண்டியதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புலவர் said:

அதுதானே திராவிட நிலப்பரப்பில் இரும்புக்காலம் என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.பொய்கள் வேடங்கள் எல்லாம் நீண்டகாலம் நிலைத்திருக்காது. உண்மைகளை நீண்டகாலம் மூடிமறைக்க முடியாது. அது வெளிப்பட வேண்டிய நேரத்தில் வெளிப்படும். இது திராவிடத்தின் பொய்கள் அம்பலப்பட்டு திராவிடத்தின் அழிவுக்காலம்..

வழமையா கருத்து எழுதுவியள்…

இப்ப குடுகுடுப்பைகாரன் மாரி சாத்திரம், சாபம் எண்டு இறங்கியாச்சோ🤣

32 minutes ago, புலவர் said:

திராவிடக்கட்சிகளள குறிப்பாக திமுக தேர்தல் மேடைகளில் நடிகைககைளை அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் பாட்டுப்போட்டு ஆட்டம் போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி யாழுக்கும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்..
அந்தக்காலத்தில் nhபன்னியின் செல்வன்> கடல்புறா Nhன்ற பலபாகங்களைக் கொண்ட புத்தகங்களை வாசித்த பழையவர்களுக்கே இந்த நவீன தொலைபேசிகளின் வரவால் வாசிப்பு பழக்கததைத் தொடர முடியாமல் இருக்கிறது.மாற்றத்திற்கேற்ப நாங்களும் புதியவற்றை முற்றாக ஒதுக்கிவிடாமல் அதற்கேற்ப எம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். என்ன இப்பொழுது கட்டற்ற செய்திப்பரவல் நடைபெறுவதால் உண்மை எது பொய் எது என்பதை பகுத்துப் பார்ப்பதற்குள் பொய் உலகத்தைச் சுற்றி வந்து விடுகிறது.

🤣 பன்னியின் செல்வன்🤣, ரசிக்க கூடிய எழுத்து பிழை.

குஞ்சு மாவீரனை சொல்லவில்லைதானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இப்ப குடுகுடுப்பைகாரன் மாரி சாத்திரம், சாபம் எண்டு இறங்கியாச்சோ🤣

அதில்லை ராஜா!இப்ப சீமான் தொடக்கி வைத்த திராவிட எதிர்ப்பு இப்பொழுது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. சீமானை ஊடகங்களில் காட்ட மறுத்த ஊடகங்கள் குறிப்பாகத் திராவிடியா ஊடகங்கள் இப்பொழுது சீமானைத் தலைப்புச் செய்தியாக்கி வைத்துள்ளன.

14 minutes ago, goshan_che said:

பன்னியின் செல்வன்🤣, ரசிக்க கூடிய எழுத்து பிழை

என்ன செங்வது யாழில் உள்ள எழுத்துச் செயலியில் எழுத்துப் பிழை திருத்துவது கடினமாக இருக்கிறது.இடையில் ஒரு திருத்தம் செய்வதற்காக முயன்றால் ஒரு எழுத்தை எழுதியவுடன்  அடுத்த எழுத்து கடைசி இடத்துக்குப் போய் விடுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் யாழில் இருந்த செயலி எழுத்துப்பிழை திருத்துவதற்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்தக் குறைபாடடை பலமுறை எழுதியும் நிர்வாகம் கருத்திற்கெடுக்க வில்லை.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

அதில்லை ராஜா!இப்ப சீமான் தொடக்கி வைத்த திராவிட எதிர்ப்பு இப்பொழுது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. சீமானை ஊடகங்களில் காட்ட மறுத்த ஊடகங்கள் குறிப்பாகத் திராவிடியா ஊடகங்கள் இப்பொழுது சீமானைத் தலைப்புச் செய்தியாக்கி வைத்துள்ளன.

இது சீமான் குரங்கு பிடிக்க, இயற்கை பிள்ளையாராக்கிய நிலை.

ஆனால் இதில் எனக்கு பூரண விருப்பே.

இந்த மாற்றம் விஜை அல்லது அவர் போன்ற ஒரு சக்தியை முந்தள்ள வேண்டும் என்பதே என் அவா.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

@வீரப் பையன்26 பையன் சார்,

முதலில், தமிழில் விடாமல் எழுதிக்  கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍.

இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதேயில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இப்படியான களங்கள் அப்படித்தான் இருக்கும். இங்கு வந்து சில பந்திகளை தொடர்ச்சியாக எழுதுவது அல்லது வாசிப்பது ஒரு இலகுவான செயல் அல்ல. பரவலான வாசிப்பும், பல்வேறு அனுபவங்களும், கிரகிக்கும் தன்மையும், முயற்சியும் இருந்தால் மட்டுமே அது முடியும். இன்று உலகில் தமிழ் சமூகம் வாசிப்பதில் மிகவும் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். தமிழில் வரும் உலகத்தரமான புத்தகங்கள், கட்டுரைகளைக் கூட ஒரு 200 பேர்கள் வாசித்தாலே, இருக்கும் ஒன்பது கோடித் தமிழர்களில், அது ஒரு பெரிய விடயம். இங்கு களத்தில் 200 பேர்கள் ஒன்றைப் பார்வையிடுகின்றார்கள் என்றால் அதையிட்டு அதிகம் கவலையில்லாமல் நாங்கள் முன்னே சென்று கொண்டிருக்கலாம்.

எங்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் ஒரு விதிவிலக்கு. பொதுவான சமூக விதிகள் அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது.  

கேளிக்கைகள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவில் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவற்றின் இறுதி முடிவு பெரும் சலிப்பாகவே முடியும். இந்தப் பொருளற்ற கேளிக்கைகளால்  வாழ்வே ஒரு நாள் சலிப்பாக மாறும். ஒவ்வொரு தனிமனிதனும் இதிலிருந்து வெளியே வருவது அவரவர் பொறுப்பே. புதைமணலில் சிக்கி போய்க் கொண்டிருப்பது போல போய்க் கொண்டிருக்கும் சமூகம். இப்படியான களங்கள், உரையாடல்கள் சில மனிதர்களையாவது மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ஒருவர் தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சி இது என்றும் சொல்லலாம்.

அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று சொல்லப்படுவதில் வீடு என்பது விடுதலை. அறிவதால் வரும் விடுதலை அது. ஒன்றை தெளிவாக அறிந்தவுடன் அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடுகின்றது. கேளிக்கைகளால் விடுதலை வருவதில்லை. வாசிப்பதாலும், உரையாடல்களாலும் அது கிடைக்கக்கூடும். 

அடுத்த தலைமுறையின் இன்றைய உலகம் வேறு. எனக்கு இரு பிள்ளைகள் - மகன் 28 வயது, மகள் 25 வயது (எனது வயது 56). அவர்களின் உலகமும், என்னுடைய உலகமும் வேறுவேறானவை. ஆனால், 'எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்......................' என்பது போல, பின்னொரு காலத்தில் என் பிள்ளைகளின் தேடுதல்களும், உங்கள் பிள்ளைகளின் தேடுதல்களும் எங்களுடயது போன்றே வரப் போகின்றது. இவர்கள் இன்று யாழ் களங்கள் போன்றவற்றுக்கு வரமாட்டார்கள். ஆனால், பின்னர் ஒன்றைத் தேடுவார்கள். நானே அப்படித் தானே யாழ் களத்திற்கு வந்தேன்..............🤣.

நிர்வாகம் அதன் பொறுப்பில் இருக்கட்டும், நாங்கள் எங்களின் பொறுப்பில் இருப்போம். சில சொற்கள், தனிமனித தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து விட்டால், இங்கே நிர்வாகம் ஒருவரையும் ஒன்றும் சொல்வதில்லையே. போராளிகளையும், போரட்டத்தையும் இழிவு செய்யும் கருத்துகளை தவிர்த்து, வேறு எந்தக் கருத்தையும் நாங்கள் முன்வைக்க இங்கு தடை ஏதும் இல்லையே. எதையும் இழிவு செய்யாமல், நாகரிகமாக உரையாடுவதும் ஒரு விடுதலையே.........................🙏.      

உங்க‌ளின் அருமையான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி குருநாதா🙏👍.............

யாழில் எங்க‌ளை எல்லாம் இணைத்த‌து எங்க‌ட‌ போராட்ட‌ம் அத‌ற்க்கு அடுத்து எங்க‌ட‌ மொழி ப‌ற்றின் மூல‌ம் யாழில் இணைந்தோம் எம்ம‌வ‌ர்க‌ள் வெற்றிக்கு மேல் அடையும் போது ச‌ந்தோஷ‌த்தில் துள்ளி குதிச்சோம் 2009ம் ஆண்டு எங்க‌ளை க‌ண்ணீரின் ஆழ்த்தி விட்டு அவ‌ர்க‌ள் இறைவ‌ன் அடி சென்று விட்டின‌ம்..............

போர் சூழ‌ல் கார‌ன‌மாக‌ த‌மிழீழ‌த்தில் ப‌டிச்ச‌ நாட்க‌ள் மிக‌ மிக‌ குறைவு...............2008க‌ளில் நான் யாழில் இணைந்த‌ போது அப்ப‌ இருந்த‌ உற‌வுக‌ளோடு என்னால் சிறு விவாத‌ம் கூட‌ செய்ய‌ முடியாது கார‌ன‌ம் எழுத்து பிழை விடுவேன் என்ப‌தால்..............ச‌கோத‌ர‌ர் நெடுங்கால‌போவான் , புத்த‌ன் மாமா , இவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளை விரும்பி வாசிப்பேன்...............இப்ப‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து ஆனால் நான் கூக்கில் மொழி பெய‌ர்ப்பை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து கிடையாது என்ர‌ மூளைய‌ க‌ச‌க்கி தான் தமிழில் எழுதுவ‌து...............நான் இருக்கும் இட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் யாரும் இல்லை 24ம‌ணித்தியால‌மும் டெனிஸ் மொழி தான்...................

நான் நினைத்தேன் உங்க‌ளுக்கு 52வ‌ய‌து என்று...............இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சில‌ர் ந‌ல்லா த‌மிழில் எழுதுகின‌ம் என்ர‌ ஒன்ட‌ விட்ட‌ அக்காட‌ ம‌க‌ன்க‌ள் ம‌க‌ள் , த‌லைவ‌ரின் அண்ணாவின் ம‌க‌ன் கார்த்திக்கிட்ட‌ தான் த‌மிழ் ப‌டிச்ச‌வை ம‌ருமோள் என்னை விட‌ ந‌ல்லா த‌மிழில் எழுதுவா , ஆனால் ஊரில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ எனது ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சுத்த‌மாய் த‌மிழ் எழுத‌த் தெரியாது👎😞

நானும் யாழ்க‌ள‌ம் வ‌ராட்டி என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் லிஸ்ரில் நானும் இருந்து இருப்பேன்😁...................நிர்வாக‌த்தை குறை சொல்லுவ‌து என‌து நோக்க‌ம் கிடையாது நான் மோக‌ன் அண்ணாவுக்கு வெளிப்ப‌டையாய் எழுதி நான் மோக‌ன் அண்ணா நான் தொட்டு ம‌ற்ற‌ உற‌வுக‌ள் யாழில் இணைந்த‌ போது உந்த‌ எச்ச‌ரிக்கை புள்ளி இல்லை அப்ப‌ எல்லாம் சிரிச்ச‌ ப‌டி எழுதினவ‌ர்க‌ள் இப்போது உந்த‌ எச்ச‌ரிக்கை புள்ளி சில‌ உற‌வுக‌ளுக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்கும் நீக்கி விட‌ச் சொல்லி.............

இப்ப‌ யாழில் எழுதும் உற‌வுக‌ளில் ஆக‌ வ‌ய‌து குறைந்த‌ உற‌வுக‌ள் யார் என்று பார்த்தால்

ஏராள‌ன் அண்ணா 

வாதவூர‌ன் அண்ணா 

எரிம‌லை கோஷான் 

ம‌ற்றும் நான்

எங்க‌ளை விட வ‌ய‌து குறைந்த‌ உற‌வுக‌ளும் இருக்க‌ கூடும்...............ஆனால் யாழில் அதிக‌ம் 50வ‌ய‌தில் இருந்து 75வ‌ய‌துக்குள் எழுதும் உற‌வுக‌ள் தான் அதிக‌ம்....................

நேர‌ங்க‌ள் இருக்கும் போது ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதின‌ ந‌ல்ல‌ ஆக்க‌ங்க‌ளை தேடி வாசிப்பேன்

2009க்கு முத‌ல் ந‌ல்ல‌ ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ள் இருந்த‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளை காண‌ வில்லை.............இப்ப‌ தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து தானே சில‌து அவ‌ர்க‌ளுக்கு பிடிச்ச‌துக்கை எழுவின‌ம் என‌ நினைக்கிறேன்👍..................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இது சீமான் குரங்கு பிடிக்க, இயற்கை பிள்ளையாராக்கிய நிலை.

ஆனால் இதில் எனக்கு பூரண விருப்பே.

இந்த மாற்றம் விஜை அல்லது அவர் போன்ற ஒரு சக்தியை முந்தள்ள வேண்டும் என்பதே என் அவா.

திராவிட எதிர்ப்பு இவ்வளவு கூர்மையடைத் தொடங்கியதற்கும் வேகமெடுத்ததற்கும் பற்றி எரிவதற்கும் விஜையும் ஒரு காரணமாகி விட்டார். அவரது கொள்கைகளில் சீமான் முரண்படுவது தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும் இன் இரு கண்கள் என்று சொனதுதான். விஜையக்கு அதுதேவை அவரது பட வியாபாரம் தமிழ்நாட்டைத்தாண்டி வெளியிலும் இருக்கிறது.ஆகவே தமிழ்த்தேசியம்>திராவிடத்தேசியம் என்ற இருதோணிகளில் கால்வைக்கிறார். சினிமாவுக்கு அது அவருக்குக் கை கெகொடுக்கும.ஆனால் அரசியலுக்கு இது தேவையில்லாத ஆணி. திராவிடத்தைச்சுமந்து கொண்டு பல கட்சிகள் இருக்கின்றன. இவர் புதிதாக எதையும் கொண்டுவரவில்லை. எதிரெதிரில் இருக்கும் தமிழ்தேசியத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பியடிக்கிறார். அவருடைய கட்சிப் பொயரில் ஏன் திராவிடம் இல்லை. சீமானுக்குப் பிறகு துவங்கிய கட்சிகளில் திராவிடம் இல்லை. அதே நேரம் தமிழ் சேர்க்கப்பட்டிருக்கிறது.வியைpடம் கொள்கைத் தெளிவு இல்லை. தெளிவான அரசியல் சித்தாந்தம் இல்லை.பெரியாரை வழிகாட்டித்தலைவராக ஏற்கிறார். நெற்றியில் குங்குமத்துடன்  மதவழிபாட்டை ஆதரிக்கிறார். அவரது வழிகாட்டியின் கூற்றுப் படி ஒன்றுக்கும் உதவத காட்டுமிராண்டிச் தமிழ்சனிளனைத் தூக்கிச் சுமக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார். இருந்தாலும் விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. விஜை அரசியிலில் வெற்றி பெற்றால் திராவிடத்தை தூக்கி எறிந்து விடலாம் தோற்று விட்டால் திராவிடம் அவரது சினிமா வியாபாரத்துக்கு தேவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.