Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, island said:

யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார். 

@shanthy அக்கா கண்டது சந்தோசம்.

ஆரம்பம் முதலே யாழில் பல அவதூறுகளை எதிர்கொண்டு ஆமைவதம் செய்தவர் நீங்கள்.

ஒரு பெரிய வேண்டுகோள்.

யாழில் எப்படி சீமான் கழுவி ஊத்தபடுகிறார் என்பதையும், ஈழத்தமிழர்கள் சீமான் பின்னால் இல்லை, அவர்களும் அவரின் பிராடுத்தனத்தை கண்டு கொண்டார்கள் என்பதையும் உங்கள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கிய வட்டங்களுக்கும் இந்த நெறியாளர் போன்றோருக்கும் யாழின் திரிகளை உதாரணமாக காட்டி பரப்பி விடுங்கள்.

ஈழத்தமிழரின் எதிர்காலத்துக்கு இது மிக முக்கியமான பணி.

@sathiri @வல்வை சகாறா போன்ற தமிழ்நாட்டில் பெயர் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் இதே கோரிக்கையை வைக்கிறேன்.

  • Replies 60
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??  

  • goshan_che
    goshan_che

    நியாயமான கேள்வி. இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.

  • நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che

நன்றி சபேசன்.

உங்களையும் மேலே உள்ள பதிவில் @ போடத்தேடினேன் எந்த சபேசன் என்ற குழப்பத்தால் விட்டு விட்டேன்.

————

நாங்க தனிமரம் இல்லை…

தோப்பு….

வைக்கப்போறோம் பாரு

ஆப்பு….

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che

சபேசனின் வரலாற்றுப் பார்வை அருமையாக இருக்கிறது.  சாதி ஒழிப்புப் போராட்டத்தின் தோற்றுவாயாக ஈழத்தில் இடது சாரிகள் தான் இருந்தார்கள் என நினைத்திருந்தேன். இன்று தான் திராவிடர் கழகம் இதைத் தொடங்கியிருக்கிறது என்ற வரலாறு தெரிந்தது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வரலாறு தெரியாமல் துணுக்குச் செய்திகளையும், யூ ரியூப் காணொளிகளையும் மட்டும் பார்த்ததால் தான் சில ஈழவர்கள் சீமானின் வலையில் விழுந்திருக்கிறார்கள் போல தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

நன்றி சபேசன்.

உங்களையும் மேலே உள்ள பதிவில் @ போடத்தேடினேன் எந்த சபேசன் என்ற குழப்பத்தால் விட்டு விட்டேன்.

————

நாங்க தனிமரம் இல்லை…

தோப்பு….

வைக்கப்போறோம் பாரு

ஆப்பு….

சீமான்  8 ஆம். நம்பர்  .....பார். சிறியும். [  தமிழ் சிறி இல்லை ]😂

8 ஆம். நம்பர் தான்   இவர்கள் அரசியலில்   கலக்க. கூடிய சந்தர்பங்களுண்டு  ...மற்றவர்களில். தங்கியிருக்கக்கூடாது    

8 ஆம் நம்பர்  உடையவர்கள் நிறையவே அரசியலில்  கலக்கி உள்ளார்கள்   இவர்கள் வளரும் வாய்ப்புகள் உண்டு”    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che

கட்டாயம் அனைவரும் பார்க்க மட்டும் அல்ல பகிரவும் வேண்டிய காணொளி.

1. பெரியார், பிரபாகரன் - ஒத்த கருத்து, வேறுபட்ட அணுகுமுறைகள் - அருமையான ஒப்பிலக்கணம்.

2. சீமான் தலைவரின் தத்துவத்தை கடத்தவில்லை. கவர்ச்சியையே கடத்தினார்.

3. தத்துவத்தை கடத்தினால் சீமானை வழிநடத்துபவர்கள் (நான் றோ என்கிறேன், விகடன் டிவியில் அப்படி சொல்ல முடியாது) சீமானை அரசியல் செய்ய விடமாட்டார்கள்.

4. தமிழக இளைஞர்கள் 2009 இல் இந்திய மத்திய அரசு மீது கொள்ள வேண்டிய கோவத்தை சீமான் மடைமாறினார்.

5. இன்னும் பல அருமையான கருத்துக்கள். 

37 minutes ago, Kandiah57 said:

சீமான்  8 ஆம். நம்பர்  .....பார். சிறியும். [  தமிழ் சிறி இல்லை ]😂

8 ஆம். நம்பர் தான்   இவர்கள் அரசியலில்   கலக்க. கூடிய சந்தர்பங்களுண்டு  ...மற்றவர்களில். தங்கியிருக்கக்கூடாது    

8 ஆம் நம்பர்  உடையவர்கள் நிறையவே அரசியலில்  கலக்கி உள்ளார்கள்   இவர்கள் வளரும் வாய்ப்புகள் உண்டு”    

8ம் நம்பருக்கு அகாலமரணமாமே?

காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

சீமான்  8 ஆம். நம்பர்  .....பார். சிறியும். [  தமிழ் சிறி இல்லை ]😂

8 ஆம். நம்பர் தான்   இவர்கள் அரசியலில்   கலக்க. கூடிய சந்தர்பங்களுண்டு  ...மற்றவர்களில். தங்கியிருக்கக்கூடாது    

8 ஆம் நம்பர்  உடையவர்கள் நிறையவே அரசியலில்  கலக்கி உள்ளார்கள்   இவர்கள் வளரும் வாய்ப்புகள் உண்டு”    

அண்ணா,  இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா.............. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

அண்ணா,  இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா.............. 

இதன் அர்த்தம்
நமக்கு பெரியாரையும்  தெரியல
பிரபாகரனையும் தெரியல (அவரும் 8 தான்)☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாங்க தனிமரம் இல்லை…

தோப்பு….

இந்தப் பாடல் சில நாட்களாகவே பின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.......... ஏன் என்று இப்பொழுது காரணம் புரிகின்றது...................🤣

இங்கே களத்தில் இருந்த/இருக்கும் நட்புகள் சிலர், அதிலும் அவர்கள் செயற்பாட்டாளர்கள், இன்று நாங்கள் சொல்ல வருவதை களத்திலும், பொதுவெளியிலும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் என்பது ஆறுதல் தரும் ஒரு விடயம்..................👍.

அறிந்ததும், தெரிந்ததும், அனுமானித்ததும், அனுபவமும் என்பவற்றைக் கொண்டு, இருக்கும் சிறிய நுண்ணுணர்வையும் உபயோகித்து, பொய்யை பொய்யென்று என்று கருத்துகளை எழுதினால், கடைசி ஆயுதமாக 'நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள்.................' என்று கேட்கப்படுகின்றது. சரி, என் போன்றோரின் கருத்துகளை விட்டு விடலாம்............. செயற்பாட்டாளர்களின் கருத்துகளையாவது கேட்டுப் பார்க்கலாம் தானே...............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதன் அர்த்தம்
நமக்கு பெரியாரையும்  தெரியல
பிரபாகரனையும் தெரியல (அவரும் 8 தான்)☹️

சில வேளை பெரியார், தலைவர் இருவர் சொன்ன தத்துவங்களயும் உள்வாங்கியதால் - இந்த சில்லறை நியூமராலஜி தகவலை மிஸ் பண்ணி இருக்கலாம் 🤣.

நியுமராலாஜியை பார்த்தவர்கள் தத்துவத்தை மிஸ் பண்ணி இருக்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

🤣 அழுக்கை (சீமான்) கழுவிவிட்டால், பாத்திரம் (தமிழ் தேசியம்) துலங்கும், அழுக்கு மக்கள் நலனுக்கு உரமாகும் என்கிறீர்கள்.

ஏற்கிறேன்🤣

இணைந்ததை அல்ல.

அண்மையில் நீங்கள் என்னை பிந்தொடர்வதாக (follow) யாழில் எனக்கு ஒரு அறிவிப்பு (notification) வந்தது. அதைத்தான் சொன்னேன்.

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள என் உள்ளமும் மறுக்கிறது. ஏனென்றால் நான் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த திமிர்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள என் உள்ளமும் மறுக்கிறது. ஏனென்றால் நான் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த திமிர்.🤪

ஐ…சீண்டிப்பாக்கிறியள் போல🤣.

எனக்கென்னமோ இந்த திமிர் வீரம் விளைந்த மண் வாழைச்சேனையில் புடம்போட பட்டதாகவே படுகிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அண்ணா,  இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா.............. 

 அண்ணை ரசோ,......சோதிடம்.  100 %.  பொய் என்று செல்ல முடியாது    எண் சோதிடம்.     என்பது உதாரணமாக   ஒவ்வொரு நம்பருக்கும்.  அந்தந்த நம்பரில்.  உள்ள பல ஆயிரம் பேரில்   இயல்புகளை   ஆரய்ந்து   எழுதப்பட்டது ஆகும்.      100 %சரி வராது” தான்     இதை நன்கு படிந்தவன்.  எவருமில்லை    நான் அறிந்த வரையில் 

வேலனையில்.   சிவராசா     

நல்லூர்  நவாலர்  றோட்டில்.  கனகரத்தினம்.  என்று ஒருவர் இருந்தார்.   

ராசி   நட்சத்திரம் கூட.  சனி வியாழன்  புதன்,.........கோள்கள் உடன் ஒத்து. வருகிறது   ......சாதகம்.  எழுதுவது    கிரிஸ்லாந்து  ஊடக போகும்   ஒரு கோட்டை வைத்து தான்     கோட்டின் பெயர் மறந்து விட்டேன். 

கைரேகை வைத்து தான்   பொலிஸார் ஒவ்வொரு மனிதனையும் பிரிந்து அறிகிறார்கள்.    

சாத்திரம்.  உண்மை   இது தெரிந்தவர்கள் உலகில் இல்லை  

எல்லாரும் அரைகுறை தான்  🙏

நான் ஓரளவு நம்புகிறேன்   நீங்கள் நம்பாமல் விடலாம்  நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கட்டாயம் அனைவரும் பார்க்க மட்டும் அல்ல பகிரவும் வேண்டிய காணொளி.

1. பெரியார், பிரபாகரன் - ஒத்த கருத்து, வேறுபட்ட அணுகுமுறைகள் - அருமையான ஒப்பிலக்கணம்.

2. சீமான் தலைவரின் தத்துவத்தை கடத்தவில்லை. கவர்ச்சியையே கடத்தினார்.

3. தத்துவத்தை கடத்தினால் சீமானை வழிநடத்துபவர்கள் (நான் றோ என்கிறேன், விகடன் டிவியில் அப்படி சொல்ல முடியாது) சீமானை அரசியல் செய்ய விடமாட்டார்கள்.

4. தமிழக இளைஞர்கள் 2009 இல் இந்திய மத்திய அரசு மீது கொள்ள வேண்டிய கோவத்தை சீமான் மடைமாறினார்.

5. இன்னும் பல அருமையான கருத்துக்கள். 

8ம் நம்பருக்கு அகாலமரணமாமே?

காத்திருக்கிறேன்.

அப்படியென்றால்  நீங்கள்  எண் சோதிடர் தான்    ஏனென்றால்  8 ஆவது நம்பர்காரன்.  மரணம்  திடீர் மரணம் என்று எண் சோதிடம். சொல்லுகிறது,.....இது உங்களுக்கு எப்படி தெரியும் ???  

நீங்கள் எண் சோதிடம் படித்து இருந்தால் மட்டுமே தெரியும்  😂🤣

எனக்கு பலன்  சொல்ல முடியுமா???😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஜேர்மன் பத்திரிக்கைகளிலும்.   கிழமைக்கு கிழமை    பலன் போடுவார்கள்,......பார்த்தால் 12.   தான் இருக்கும்    அதன் குறியீடுகள்    ....தமிழ் ராசி பலன். குறியீடுகள் போலத்தான் இருக்கும்     நீங்கள் ஒருவரும்  பார்த்தது இல்லையா   ??? எனவே… எல்லா மொழி மதங்களிலும். சாத்திரம். பார்ப்பது உண்டு,.. ....கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…,.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் ஓரளவு நம்புகிறேன்   நீங்கள் நம்பாமல் விடலாம்  நன்றி வணக்கம் 

அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், அண்ணா.......................👍.

என்ன, ஒரு பெரிய அரசியல்வாதியாகி, புகழ்பெற்று, திடீரென்று ஒரு நாள் அகாலமாகப் போய்விடுவனோ என்ற புதுக்கவலை ஒன்று மனதில் துளிர் விடாமல் இருந்தால் சரி................அமெரிக்காவில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்குது என்றும் சொல்கின்றார்கள்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள்

ஒரு விழா ஒன்றில் சாத்திரங்கள் பற்றி பேச்சு வந்த போது எண் சாத்திரமும் வந்தது நான் அதுவும் ஒரு பொய் தானே எனறேன்.அதற்கு பெரியவர் ஒருவர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது சாத்திரத்தோடு அதை கொண்டுவராதீர்கள்  அது ஒரு விஞ்ஞானம் என்றார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, island said:

யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன்

இப்படி ஒரு  யாழ்கள உறவு இருந்தது மகிழ்ச்சி

22 hours ago, island said:

யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார்.

சாந்தி அக்காவுக்கு பாராட்டுக்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்காவும் நல்ல ஒரு  பேட்டி சீமன் பற்றி கொடுத்திருக்கிறாவாம் நான் இன்னும் பார்க்கவில்லை
ஆனாலும்   பொய்புரட்டு சீமானின் வார்த்தைகளே தேவனின்வாக்காக இருக்கும் வெளிநாட்டு ஈழ தமிழ் அவர் தம்பிகளுக்கு 😟

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் மயூரன் என்பவரின் செவ்வி 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, island said:

ஈழத்தமிழர் மயூரன் என்பவரின் செவ்வி 

இது எங்கு போய் நிற்கும் என்று தெரியவில்லை இதில் எது உண்மை என்று விளங்கவில்லை ஆனால் ஒன்றும் மட்டும் நிச்சயம் இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வீழ்ச்சியே. இதை இந்தியமும் சிங்களுமும் ரசிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

எனக்கு பலன்  சொல்ல முடியுமா???😀

ஜென்மத்தில் அதிஸ்ட்டத்தை கொண்டுள்ள ஜேர்மன் வாசிக்காரருக்கு, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகிறது.

இதுவரை கவனமாக செலவு செய்த நீங்கள், இனி கணக்கின்றி வரப்போகும் இலாபத்தால், செலவு செய்ய நேரம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள்.

ஆனால் கணக்கு வழக்கில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுக்கவும். குறிப்பாக 12, 24 எண்கள் வரும் விடயங்களிம் மிக அவதானமாக இருக்கவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு விழா ஒன்றில் சாத்திரங்கள் பற்றி பேச்சு வந்த போது எண் சாத்திரமும் வந்தது நான் அதுவும் ஒரு பொய் தானே எனறேன்.அதற்கு பெரியவர் ஒருவர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது சாத்திரத்தோடு அதை கொண்டுவராதீர்கள்  அது ஒரு விஞ்ஞானம் என்றார்🤣

ஆமாம் உண்மை .....ஆனால் இது எவருக்கும் தெரியாத கலை    சாத்திரிமார். சொல்வது பொய்     ஆனால்  சாத்திரம். உண்மை  

8 hours ago, goshan_che said:

ஜென்மத்தில் அதிஸ்ட்டத்தை கொண்டுள்ள ஜேர்மன் வாசிக்காரருக்கு, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகிறது.

இதுவரை கவனமாக செலவு செய்த நீங்கள், இனி கணக்கின்றி வரப்போகும் இலாபத்தால், செலவு செய்ய நேரம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள்.

ஆனால் கணக்கு வழக்கில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுக்கவும். குறிப்பாக 12, 24 எண்கள் வரும் விடயங்களிம் மிக அவதானமாக இருக்கவும்🤣.

நன்றி      உண்மை போல் தெரிகிறது   🤣.  ஊதியத்தை    தமிழ் சிறி. 

இடம  கொடுத்து விடுகிறான்   வேண்டி கொள்ளுங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை .....ஆனால் இது எவருக்கும் தெரியாத கலை    சாத்திரிமார். சொல்வது பொய்     ஆனால்  சாத்திரம். உண்மை  

நன்றி      உண்மை போல் தெரிகிறது   🤣.  ஊதியத்தை    தமிழ் சிறி. 

இடம  கொடுத்து விடுகிறான்   வேண்டி கொள்ளுங்கள் 🤣

15 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை .....ஆனால் இது எவருக்கும் தெரியாத கலை    சாத்திரிமார். சொல்வது பொய்     ஆனால்  சாத்திரம். உண்மை  

நன்றி      உண்மை போல் தெரிகிறது   🤣.  ஊதியத்தை    தமிழ் சிறி. 

இடம  கொடுத்து விடுகிறான்   வேண்டி கொள்ளுங்கள் 🤣

நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த  படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன்.

சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார்.

நான்….??😳

Edited by Paanch
சில எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த  படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன்.

சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார்.

நான்….??😳

அட ஒரு கொட்டகை போட்டு குந்தியிருந்து வரியில்லாமல் உழைத்திருக்கலாம் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.