Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவோம். நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போதும் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகள் வெறுமனே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான புள்ளடி மாத்திரம் அல்ல. மாறாக அவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வழங்கிய வாக்குகளாகும். 

475743437_1170342004798144_8601494970366

இலங்கையில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, மலையகம் என பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என பிளவுபடுத்தியே ஆட்சி செய்தார்கள். ஆனால், நாம் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு முன்னர் நாட்டில் மேல் மட்டத்தில் இருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்தில் இருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தை கைம்மாற்றினார்கள். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக இந்த நாட்டை நாம் மீட்டெடுப்போம். 

அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கியுள்ளோம். 

475132093_951995219910606_24268256084148

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்துக்குள் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.

வடக்கின் காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். தொழில்வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொலிஸ் திணைக்களங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். தமிழ் பேசும் இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். இந்த பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

அதேபோன்று காணி பிரச்சினை உள்ளது. மக்களின் காணிகள் மக்களிடத்திலேயே வழங்கப்பட வேண்டும். எனவே, காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்போம். கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குவோம். குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்போம்.

எமது மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடினோம். இலங்கை கடற்படைக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளோம். கட்டம் கட்டமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். 

எனவே, எமக்கு சிறிது காலம் தாருங்கள். நிச்சயம் தீர்வு காண்போம். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்போம். வடக்கில் தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தோற்றம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாத்தை கையில் எடுக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்.

இனிமேலும் முரண்பட்டுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது.

மக்களிடத்தில் இனவாதம் மதவாதம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளிடம் இந்த பண்புகள் உள்ளன. தற்போது தெற்கில் இனவாத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டை புதிய யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வோம். இந்த மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம். தண்டனை பெற்றுக் கொடுப்போம். 

கடந்த தேர்தலின்போது பிரிந்து செயற்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு ஒன்றாக கூடியுள்ளனர். ஒருபக்கம் மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர். மற்றைய பக்கம் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை ஏமாற்றியவர். திருடர்கள் ஒன்றிணைந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. நாம் முன்னெடுத்துள்ள விசாரணைகளை அவர்களால் நிறுத்த முடியாது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இணைந்தாலும் மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.

நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸார் மக்களின் மனதை வெல்ல வேண்டும் இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது - யாழில் ஜனாதிபதி அனுர தெரிவிப்பு!

 

பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

இன்று  யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிலையில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

.சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிஸார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்கிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிஸாரை மக்கள் திட்டி தீர்த்தார்கள்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் பொலிஸார் தொடர்பில் மாற்றுக் கருத்து பரவலாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட பிராந்திய பொலிஸ்மா அதிபர்தனபால சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அடிப்படையில் பல கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. 

கீழ்நிலை அதிகாரிகள் தவறவிட்டால் உயர் அதிகாரிகளிடம் முறையிடங்கள் அல்லது பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியே தகவல்களை கூற முடியும் முறைப்பாட்டாளர் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை தகவல்களை துல்லியமாக வழங்கினால் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். (ப)

பொலிஸார் மக்களின் மனதை வெல்ல வேண்டும் இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது - யாழில் ஜனாதிபதி அனுர தெரிவிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். தொழில்வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

எங்களைஅழைக்கின்றார் வெளிக்கிட்டா சிறிலங்காவுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்களைஅழைக்கின்றார் வெளிக்கிட்டா சிறிலங்காவுக்கு..

2 மாதம் முன்னர் ..போட்டுவந்த பெடிய்யோ...பாசுப்போட்டொ எடுத்துவைக்கவில்லை....தூக்கடா  பெட்டியை...புத்தர் கோபியாதையுங்கோ...எனக்குள் எழுந்த கற்பனை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மேலே உள்ள படங்களை பார்க்கும் போது ரசோதரன் அண்ணா வேறு ஒரு திரியில் சொன்ன காட்சி தான் தோன்றுகின்றது  எம்ஜிஆர் ஒரு குடிசைக்குள் புகுந்து அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தாய்க்குலமே ரத்தத்தின் ரத்தங்களே என்று அவரே அவருக்கென்று எழுதிய வசனங்களை சொல்லி...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்களைஅழைக்கின்றார் வெளிக்கிட்டா சிறிலங்காவுக்கு..

கல்லோ புத்தா

முதலீடு முதலீடு முதலீடு.

  • கருத்துக்கள உறவுகள்

dc920389-a05f-4ca5-99f5-59decd19b841.jpg
a26b024a-fb9e-4d36-8f37-1a951c31b658.jpgda46fd59-69ce-4a50-aa61-e1c8a668e5d0.jpg

படங்கள் உபயம் தமிழ் சிறி.

நன்றி @தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

dc920389-a05f-4ca5-99f5-59decd19b841.jpg
a26b024a-fb9e-4d36-8f37-1a951c31b658.jpgda46fd59-69ce-4a50-aa61-e1c8a668e5d0.jpg

படங்கள் உபயம் தமிழ் சிறி.

நன்றி @தமிழ் சிறி

எந்த அரவணைப்பில் ஆறுதல் கிடைக்கிறது....தீர்மானியுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எந்த அரவணைப்பில் ஆறுதல் கிடைக்கிறது....தீர்மானியுங்கள்...

கடைசியாக உள்ளது நிஜம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

எந்த அரவணைப்பில் ஆறுதல் கிடைக்கிறது....தீர்மானியுங்கள்...

எல்லாம் இந்த சிங்கள சுமத்திறனால்  வந்த வினை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

dc920389-a05f-4ca5-99f5-59decd19b841.jpg
a26b024a-fb9e-4d36-8f37-1a951c31b658.jpgda46fd59-69ce-4a50-aa61-e1c8a668e5d0.jpg

படங்கள் உபயம் தமிழ் சிறி.

நன்றி @தமிழ் சிறி

ஈழப்பிரியன்…. இந்தப் படங்களை, வேறு ஒரு யாழ். கள உறவு அனுப்பியிருந்தார். ஆகவே… நன்றி அவருக்குத்தான் சேர வேண்டும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா!

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா?

இந்த அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

“வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம்.”
 

http://www.samakalam.com/மூவினத்தவர்களும்-கொண்டா/

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கேட்காமல், அவரின் பெயரை இங்கு சொல்வது சரியல்ல என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா!

நல்லது வரவேற்க்கப்பட வேண்டியது ...இது உங்கள் இனத்துக்கு  இன்னும் நல்லது ..ஏனைய இனங்கள் உங்கள் இனத்தினுள் கரைந்து மறைந்து போக இது சிறந்தது ...விழாக்கள் இல்லாமல் கரைந்து போன தமிழ் இனம் சிறிலங்காவில் உண்டு ..அது நீர்கொழும்பு,மற்றும் புத்தளம் ,மாத்தறை...போன்ற இடங்கள்
பெர்னான்டோ புள்ளே...

சாவித்திரி பொல்ராஜ்...

அம்பிகா சாமுவேல்

இன்னும் பல ...
சிறிலங்கா தேசிய கொடியில் கிறிஸ்தவர்களுக்கு ஒர் அடையாளம் இல்லை....மத நல்லிணக்கம் பேசும் நீங்கள் புதிய தேசிய கொடியை உருவாக்கி கிறிஸ்தவ மதத்தினருக்கும் ஒர் அடையாளத்தை கொடுக்கலாமே... முடியாது அது தேவையுமற்றது உங்கள் இனத்தை காப்பாற்ற...நல்லிணக்கம் பேசி விழாக்கள் உருவாக்கி மெளனமாக ஏனைய இனங்களை இல்லாமல் பண்ணுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் இடதுசாரிகள்...

சந்திர சேகரமும் எப்படி என தெரியவில்லை ...அவர் சிங்கள மொழியில் கல்வி கற்றவராக இருப்பார் என நினைக்கிறேன்...இன்று ஜெ,வி.பி யின் ஆளுனர்(உத்தியோகபற்றட்ட) ...வடமாகாணத்துக்கு ....அவர் பகுதி நேர தமிழராக இருப்பார்...மதங்களை பின்பற்றாத இடதுசாரி....

 

 

ஒக்டோபர் அவரின்ட தோழர் சிறிலங்கா இராணுவத்தினால் சித்திரை செய்து கொல்லபட்ட மாதமோ? இந்த மாதத்தில் என்ன சிறப்பு இருக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நல்லது வரவேற்க்கப்பட வேண்டியது ...இது உங்கள் இனத்துக்கு  இன்னும் நல்லது ..ஏனைய இனங்கள் உங்கள் இனத்தினுள் கரைந்து மறைந்து போக இது சிறந்தது ...விழாக்கள் இல்லாமல் கரைந்து போன தமிழ் இனம் சிறிலங்காவில் உண்டு ..அது நீர்கொழும்பு,மற்றும் புத்தளம் ,மாத்தறை...போன்ற இடங்கள்
பெர்னான்டோ புள்ளே...

சாவித்திரி பொல்ராஜ்...

அம்பிகா சாமுவேல்

 

 

 

 

இந்த வரிசையில்...தவகர முனசிங்கே...சங்கவி பொடி மெனிக்கே...தனுச அப்புகாமி... இப்படி பல் நீண்டு வரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பயங்கரவாத தடை சட்டத்தை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு புனுகு பூசுவதில் ஒன்றும் நடக்காது  புலம்பெயர் தமிழர்கள் நம்ப போவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2025 at 03:45, பிழம்பு said:

அதேபோன்று காணி பிரச்சினை உள்ளது. மக்களின் காணிகள் மக்களிடத்திலேயே வழங்கப்பட வேண்டும். எனவே, காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்போம்.

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி உட்ப்பட அந்த மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people smiling

இப்ப ஆச்சி அரசியல் செய்தால்தான்... ஆட்சியில் இருக்கலாம் போலுள்ளது. 😂
முதலாவது சிங்கள ஆச்சி, மற்றது தமிழ் ஆச்சி. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.