Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர்.

எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரியை நியமிப்பதாக கனடா தெரிவித்திருந்தது. டிரம்ப் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் 10 ஆயிரம் துருப்புகளை நிறுத்துவதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை ஏன் நிறுத்தி வைத்தார்?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அது குறித்து சிஎன்என் ஊடக செய்தியாளர் கேட்டபோது, அந்த உரையாடல் " மிகவும் நன்றாக" இருந்தது என்று டிரம்ப் கூறினார்.

"நமது வட எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கனடா தெரிவித்துள்ளது" என்று தனது சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோசியலில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

எல்லைப் பாதுகாப்புக்காக 130 கோடி கனடிய டாலர்களை செலவிடவுள்ளதாக கூறிய கனட பிரதமரின் ட்வீட்டை குறிப்பிட்டு டிரம்ப் இதனை பதிவிட்டிருந்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை தடையை கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாகவும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை "பயங்கரவாதிகள்" என்று அங்கீகரிப்பதாகவும் ட்ரூடோ தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

"முதல்கட்ட முடிவுகள் திருப்திகரமாக உள்ளதால், வரி விதிப்பு நடவடிக்கை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது, இந்தக் காலக்கட்டத்தில் கனடாவுடன் ஒரு பொருளாதார ஒப்பந்தம் முடிவு செய்ய முயற்சி எடுக்கப்படும்" என்றும் டிரம்ப் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

"அனைவருக்கும் நீதி" என்று தனது பதிவின் இறுதியில் கூறியிருந்தார் டிரம்ப்.

கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அனைவருக்கும் நீதி என டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்

எல்லைப் பாதுகாப்புக்கு 1.3 பில்லியன் டாலர் செலவு செய்ய கனடா முடிவு

வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து வேலை செய்யும் என்பதை கனட பிரதமரும் முன்னதாக தெரிவித்திருந்தார். "எல்லைப் பாதுகாப்புக்காக செலவிடப்படும் 130 கோடி டாலர் பணம் புதிய ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கவும், துருப்புகளை எல்லையில் நிறுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் செலவிடப்படும். ஃபெண்டனில் (போதைப் பொருள்) கடத்தல் நிறுத்தப்படும். அதை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். கனடா-அமெரிக்கா கூட்டுப் படை, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், பண மோசடி, ஃபெண்டனில் கடத்தல் ஆகியவற்றை கண்காணிக்க உருவாக்கப்படும். அந்த படை 24 மணிநேரமும் நிலைமைகளை கண்காணிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வரி விதிப்பை நிறுத்தி வைத்த பிறகு, கனடா அரசியல்வாதிகளும் தொழிலபதிகர்களும் பெருமூச்சுவிடுகின்றனர்.

எல்லையை கண்காணிக்க ட்ரோன்களை கனடா செலுத்தப் போவதாக, டொராண்டாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்ஃபி கூறுகிறார். வரி விதிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது எப்போது வேண்டுமானாலும் விதிக்கப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

எனினும், இந்த நிறுத்தி வைப்பை ட்ரூடோ மற்றும் டிரம்ப் அரசியல் வெற்றியாக காண்பிக்கிறார்கள் என்று ஜெசிக்கா தெரிவிக்கிறார். எல்லையில் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக, டிரம்ப் கூறுவார், அதே நேரம் வரி விதிப்பை தடுத்து நிறுத்தியதாக ட்ரூடோ கூறுவார்.

கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த நிறுத்தி வைப்பை ட்ரூடோ மற்றும் டிரம்ப் அரசியல் வெற்றியாக காண்பிக்கிறார்கள் என்று ஜெசிக்கா தெரிவிக்கிறார்

கனடா அமெரிக்க உறவுகள் குறித்த கனட பிரதமரின் கவுன்சிலின் உறுப்பினரான லானா பெய்னே, "இது கனடாவுக்கு ஒரு திருப்புமுனை" என்று குறிப்பிடுகிறார். அவர் கனடாவின் பெரிய தனியார் துறை சங்கமான யுனிஃபோரின் தலைவராவார்.

"இப்போது திரும்பி செல்வது குறித்த கேள்விக்கு இடமே இல்லை. முப்பது நாள் வரி விதிப்பு நிறுத்தி வைப்புக்குப் பிறகு, ஒருவரும் நம் மீது கை வைக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

"இந்த 30 நாட்களை ஒரு வர்த்தகப் போருக்கு தயாராக கனடா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வலுவான, மீண்டெழும் சக்தி கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க இந்த காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

தொழில் துறையினருக்கு ஏற்படும் சிக்கல் என்ன?

இந்த வரி விதிப்பு நிறுத்தி வைப்பு தொழிலதிபர்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கியிருப்பதாக, பிபிசி செய்தியாளர் ஜோனதன் ஜோசஃப் தெரிவிக்கிறார்.

தொழில் துறையினர் வெறுக்கும் ஒரு விஷயம் என்றால், அது "நிச்சயமற்ற தன்மை". இதன் சிறிய விளைவை உலக பங்குச் சந்தை திங்கட்கிழமை கண்டது.

டிரம்ப் தனது முடிவை இவ்வளவு உடனடியாக மாற்றிக்கொள்கிறார் என்றால், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் எந்த முடிவிலும் தெளிவான நிலைப்பாடு இருக்காது என்று குறிக்கிறது.

வரி விதிப்புகளை தவிர்ப்பதற்காக சமீபத்தில், நிறைய நிறுவனங்கள் தங்கள் தொழில்முறையை சற்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாக, நிறைய நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக சீனா, மெக்சிகோ மற்றும் இந்தியா நோக்கி நகர்ந்துள்ளன.

டிரம்பின் வரி விதிப்புப் பட்டியலில் அடுத்து எந்த நாடு உள்ளது என்பது தெரியாததால், முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்வது சிக்கலாக உள்ளது.

எனினும் அமெரிக்காவின் இந்த முடிவை பல அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இதனை நல்ல செய்தி என்று கூறுகின்றனர். ஆனால், இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருப்பது தற்காலிகமானது தான் என்பது அவர்களுக்கு தெரியும்.

அமெரிக்கா ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான சங்கத்தின் தலைவர் பில் ஹான்வே, ஆட்டோ மொபைல் துறை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும், எனினும் நிலைமைகள் நிச்சயமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ மொபைல் துறையை பன்னாட்டு துறை என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க விநியோகஸ்தர்கள், கார் தயாரிப்பு பாகங்களை அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்க தயாராக இல்லை என்று கூறினார்.

கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்ரின் பியட்டி, வரி விதிப்பை நிறுத்தி வைத்தது நல்ல விஷயம் என்றாலும், ஃபெண்டனில் டிரம்புக்கு உண்மையிலேயே ஒரு பிரச்னை தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கனட வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைவருமான பியட்டி, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கனடா பணியவில்லை என்று கூறுகிறார்.

டிரம்ப் மற்றும் ட்ரூடோவுக்கு இடையிலான ஒப்பந்தத்தை குறித்து, "இந்த ஒப்பந்தம் முடியப் போவதில்லை, இது இரு நாடுகளுக்கும் சரியானதே" என்று கூறியுள்ளார் .

சீனா மீதான வரி விதிப்பு என்னவாகும்?

கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது டிரம்பின் அரசு. இந்த முடிவில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த வார இறுதிவரை சீன அதிபரிடம் டிரம்ப் பேசப்போவதில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

சீனா மீதான வரிகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"சீனா ஃபெண்டினில் அனுப்பாது என்று நம்புகிறோம், அப்படி செய்தால் வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஃபெண்டனில் அமெரிக்காவின் பிரச்னை என்று சீனா கூறுகிறது. உலக வர்த்தக அமைப்பில், இந்த வரி விதிப்புகளை சீனா எதிர்க்கும் என்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவிக்கிறது. அதே நேரம் சீனா பேச்சுவார்த்தைகளுக்கு தனது கதவுகளை திறந்து வைத்திருப்பதாகவும் சொல்கிறது.

வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு அழைப்பு இருக்கலாம், என்று டிரம்ப் கூறியிருந்தார். சீனா மீதான 10% வரி விதிப்பை "ஆரம்பம்" மட்டுமே என்று கூறும் டிரம்ப், ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்றால், வரிகள் மேலும் உயர்த்தப்படும் என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, மெக்ஸிகோ மீதான கடுமையான வரி விதிப்பை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

கனடா, மெக்ஸிகோ மீதான கடுமையான வரி விதிப்பை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (03) மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது கடுமையான கட்டண அச்சுறுத்தலை இடைநிறுத்தினார்.

இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்திற்கான சலுகைகளுக்கு ஈடாக வரி விதிப்பினை 30 நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

எனினும், சீனா மீதான அமெரிக்க வரிகள் இன்னும் சில மணிநேரங்களில் அமலுக்கு வர உள்ளன.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இருவரும் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ட்ரம்பின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எல்லை அமுலாக்க முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.

இதனால், செவ்வாய்கிழமை (பெப்ரவரி 04) முதல் நடைமுறைக்கு வரவிருந்த 25% வரி விதிப்பானது அடுத்த 30 நாட்களுக்கு ட்ரம்பின் உத்தரவுக்கு அமைவாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான அதன் எல்லையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களை நிலைநிறுத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி ஆகியவற்றை எதிர்த்து கூட்டு முயற்சிகளைத் தொடங்கவும் கனடா ஒப்புக்கொண்டது.

மெக்ஸிகோ தனது வடக்கு எல்லையை 10,000 தேசிய காவலர் உறுப்பினர்களுடன் வலுப்படுத்த ஒப்புக்கொண்டது, இது சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் ஓட்டத்தைத் தடுக்கிறது.

எவ்வாறெனினும் செவ்வாய்க் கிழமை (04) அந் நாட்டு நேரப்படி 12:01 அதிகாலை ((0501 GMT) ) இல் தொடங்குவதற்கு தயாராக இருக்கும் 10% முழுவதுமான கட்டணங்களை எதிர்கொள்ளும் சீனாவிற்கு அத்தகைய சலுகைகள் எதனையும் அமெரிக்க அரசாங்கம் அறிவிக்கவில்லை.

இந்த வாரம் வரை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் பேசமாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பீஜிங் மீதான வரியை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், வரி விதிப்பில் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் தனது அடுத்த இலக்காக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (02) கூறினார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் மீதான வரி விதிப்பு எப்போது என்று அவர் கூறவில்லை.

2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிரிட்டன், கட்டணங்களைத் தவிர்க்கலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

திங்களன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், அமெரிக்கா கட்டணங்களை விதித்தால், ஐரோப்பா எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும் என்று கூறினர்.

எனினும், அவர்கள் ட்ரம்புடனான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளியாக அமெரிக்கா உள்ளது.

இதனிடையே ட்ரம்ப் வார இறுதியில் வெள்ளை மாளிகையில் ஆற்றி உரையில், தனது கட்டணங்கள் அமெரிக்க நுகர்வோருக்கு சில குறுகிய கால வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்றும் வலியுறுத்தினார்.

ஏனைய ஆய்வாளர்கள் இந்த கட்டணங்கள் கனடா மற்றும் மெக்சிகோவை மந்தநிலையில் தள்ளலாம் மற்றும் “தேக்கநிலையை” தூண்டலாம் – அதிக பணவீக்கம், தேக்கமான வளர்ச்சி மற்றும் உயர்ந்த வேலையின்மையை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்தும் உள்ளனர்.

https://athavannews.com/2025/1419623

கனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. 

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன்.

நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன்.

கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். 

வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு இவை போன்றன என்றோ நடக்கும். அமெரிக்கா போலவே தான் சைனாவும், ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளும். இலங்கைக்கு இந்தியா கூட அமெரிக்கா போலவே.

பன்முகப்படுத்தப்பட்ட வணிக தொடர்புகள் இல்லாமல், இன்னொரு நாட்டின் மீது மிக அதிகமாக தங்கி இருந்தால், இப்படியான இக்கட்டான நிலை என்றோ வரும்.

அமெரிக்கா கனடாவிற்கு இப்படிச் செய்வது இது முதல் தடவையல்ல. ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்திலும், அவர் இப்படியே செய்தார். ஒரு வருடத்திற்கு அதிக வரி விதிப்பை அவர் நடைமுறைப்படுத்தினார். அந்த நிலையிலும் கூட கனடா அமெரிக்காவிற்கு வழங்கிக் கொண்டிருந்த எரிபொருட்களின் வரியைக் கூட்டவில்லை. அமெரிக்காவிற்கு 60 வீதமான கச்சாய் எண்ணெய் இறக்குமதி கனடாவிலிருந்து வருகின்றது. இந்த தடவையும் கனடா கச்சாய் எண்ணெயின் வரியைக் கூட்ட தயாராகவில்லை.

இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை வீதம் என்பதே இரண்டு பக்கங்களினதும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க உதவும் பிரதான காரணம். ஒரு நாட்டிற்கு அது 5 வீதமாக இருக்கும் போது, இன்னொரு நாட்டிற்கு அதே வர்த்தகம் 20 வீதமாக இருக்கும் என்றால், அதிகமாக பாதிக்கப்படப் போகின்றவர் நிதானமாகவே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு! டிரம்பின் திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு இவை போன்றன என்றோ நடக்கும். அமெரிக்கா போலவே தான் சைனாவும், ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளும். இலங்கைக்கு இந்தியா கூட அமெரிக்கா போலவே.

பன்முகப்படுத்தப்பட்ட வணிக தொடர்புகள் இல்லாமல், இன்னொரு நாட்டின் மீது மிக அதிகமாக தங்கி இருந்தால், இப்படியான இக்கட்டான நிலை என்றோ வரும்.

அமெரிக்கா கனடாவிற்கு இப்படிச் செய்வது இது முதல் தடவையல்ல. ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்திலும், அவர் இப்படியே செய்தார். ஒரு வருடத்திற்கு அதிக வரி விதிப்பை அவர் நடைமுறைப்படுத்தினார். அந்த நிலையிலும் கூட கனடா அமெரிக்காவிற்கு வழங்கிக் கொண்டிருந்த எரிபொருட்களின் வரியைக் கூட்டவில்லை. அமெரிக்காவிற்கு 60 வீதமான கச்சாய் எண்ணெய் இறக்குமதி கனடாவிலிருந்து வருகின்றது. இந்த தடவையும் கனடா கச்சாய் எண்ணெயின் வரியைக் கூட்ட தயாராகவில்லை.

இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை வீதம் என்பதே இரண்டு பக்கங்களினதும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க உதவும் பிரதான காரணம். ஒரு நாட்டிற்கு அது 5 வீதமாக இருக்கும் போது, இன்னொரு நாட்டிற்கு அதே வர்த்தகம் 20 வீதமாக இருக்கும் என்றால், அதிகமாக பாதிக்கப்படப் போகின்றவர் நிதானமாகவே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ட்ரம்ப் செய்வது மறைமுகமாக அமேரிக்க டொலரையும் அமெரிக்க பணமுறியினையும் பலப்படுத்தும் நடவடிக்கை.

ஏற்கனவே டொலருக்கு மாற்றீடாக ஒரு நாணயத்தினை உருவாக்க முற்பட்டால் அவர்கள் மேல் 100% வரி விதிப்பேன் என வெளிப்படையாக கூறியுள்ளார் (மறைமுக இராணுவ அழுத்தமும் கொடுப்பார்கள் அதற்கு வரலாறே சான்றாக உள்ளது) இந்த நிலையில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட டொலர் தேவையாக இருக்கும், ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சி அவர்களது டொலர் இருப்பில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஏற்கனவே பல நாடுகள் பயன்படுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை மூலம் தமது பணத்தினை திட்டமிட்டே பலமிழக்க செய்து அமெரிக்க வாடிக்கையாளருக்கு மலிவாக பொருளை சென்றடைய செய்வார்கள் அதற்காக அதிகளவில் அமெரிக்க டொலரினை சந்தையில் வாங்குதல், அமெரிக்க பணமுறிகளை வாங்குதல் என்பதன் மூலம், தற்போது ஏற்பட்டிருகும் 25% அதிகரிப்பினை ஈடுகட்ட அதிகளவில் அமெரிக்க பணச்சந்தையில் அவர்களை வலிந்து முதலிட செய்வதுதான் ட்ரம்பின் திட்டமாக இருக்கும்.

ஏன் ட்ரம்ப் இந்த வரிவிதிப்பு யுத்தத்தினை செய்யவேண்டும்?

1930 இல் 20000 வரி விதிப்புக்க்களை அமெரிக்க மேற்கொண்டு உலகில் முத்லும் கடைசியாக ஒரு பொருளாதார பேரிடரினை உருவாக்கி தனக்கும் சேர்த்து சூனியம் வைத்திருந்தது ஆனாலும் இப்போது எதற்காக அமெரிக்கா இப்படியான ஒரு சூதாட்டத்தில் இறங்குகிறது?

அமெரிக்க பொதுக்கடன் எல்லை மீறி போகிறது அதனால் ஏற்பட போதும் அமெரிக்க ஏகாதிபத்திய சரிவினை தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாகும், அதாவது மீண்டும் அமெரிக்காவினை சிறப்பாக மாற்றுவது.

இது சரி வருமா?

வேறு தெரிவுகள் இல்லை என அமெரிக்க தரபு கருதுகிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

அமெரிக்க பொதுக்கடன் எல்லை மீறி போகிறது அதனால் ஏற்பட போதும் அமெரிக்க ஏகாதிபத்திய சரிவினை தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாகும், அதாவது மீண்டும் அமெரிக்காவினை சிறப்பாக மாற்றுவது.

இது சரி வருமா?

வேறு தெரிவுகள் இல்லை என அமெரிக்க தரபு கருதுகிறதோ தெரியவில்லை.

அமெரிக்காவினை மீண்டும் சிறப்பாக மாற்றுகின்றோம் என்ற சுலோகத்தின் வழியே தான் போகின்றார்கள். ஆனால் எடுக்கப்படும் பல முடிவுகளும் இவர்கள் நினைப்பது போலவே தான் நடக்க வேண்டும் என்றில்லையே. பலமான அமெரிக்க டாலர், அதிகரித்த அமெரிக்க உள்நாட்டு உற்பத்திகள், பலமான பேரம்பேசும் வல்லமை என்பன என்று மூன்று பிரதான பயன்களாக அமையும் என்று சொல்லப்படுகின்றது.

பலமான அமெரிக்க டாலர் என்று வரும் போது இறக்கும் பொருட்களுக்கு அது சாதகமாக அமைந்தாலும், ஏற்றும் பொருட்களுக்கு அதுவே பாதகமாக அமையும். அமெரிக்காவின் ஒரு பெரிய குற்றச்சாட்டு எல்லா நாடுகளுடனும் அது செய்யும் வர்த்தகத்தில் இருக்கும் குறைநிரப்பின் அளவு. அமெரிக்காவே அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கின்றது, இவர்களே அதிகமாக பொருட்களை இறக்குவதால்.

இதையே காரணமாக வைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் சொல்கின்றனர்.  அப்படியே அதிகரித்தாலும், உபரியை என்ன செய்வது. பலமான அமெரிக்க டாலரின் நிலையில் உபரி உற்பத்திகளை எங்கே விற்பது என்ற சிக்கல்கள் வரும். அப்பொழுது குறைநிரப்பின் அளவு மீண்டும் அமெரிக்காவிற்கு பாதகமாகவே முடியும்.

குறுகியகாலப் பேரம் பேசும் வல்லமை ஒன்று தான் உள்ளே இருக்கும் உண்மையான நோக்கம் போலவும் தெரிகின்றது. கனடாவோ அல்லது மெக்சிக்கோவோ அமெரிக்காவில் அதிகமாகவே தங்கியிருக்கின்றது. இங்கே பேரம் பேசலாம். ஆனால் சீனாவுடன் பேரம் பேசுவது அவ்வளவு இலகுவில்லை, அதனால் தான் சீனாவிற்கு 10 வீதம் மட்டுமே போலும். அதிபர் ட்ரம்ப் அவருடைய கோரிக்கைகளை தெளிவான சில அளவுகளுடனோ, அல்லது முடிவுகளுடனோ அறிவிக்கவில்லை. ஆதலால், நான் வெற்றியடைந்து விட்டேன் என்று எந்த நேரத்திலும் அறிவித்து விட்டு, இந்த வரிவிதிப்புகளிலிருந்து அவர் வெளியே வந்து விடவும் கூடும்.

பலமான டாலர் என்பதை பலமான அமெரிக்கா என்று அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல இது மிகப்பெரிய உலகளாவிய ஒரு பொருளாதார வீழ்ச்சியாகக் கூட மாறிப் போகலாம். அப்போது மிகப்பெரிய அடி மிகப்பெரிய நாடான அமெரிக்காவையே தாக்கும். என் அமெரிக்க வாழ்நாளில் இரண்டு தடவைகள் இங்கே அப்படி நடந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

the great depression காலகட்டத்தில்தான் ரோஸ்வெல்ட் அமெரிக்க அதிபரானார், அவரை போல ட்ரம்ப் தனது பெயரையும் வரலாற்றில் விட்டு செல்ல விரும்புகிறாரோ தெரியவில்லை, 1930 வந்த பொருளாதார பேரழிவு அதற்கு பின்னர் இதுவரை நிகழவில்லை ஆனால் தற்போது நிகழ் வாய்ப்புக்கள் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு வெற்றி என்றே எண்ணுகிறேன்.

இவ்வளவு மில்லியன் டாலரை செலவு செய்து எல்லையை கண்காணிக்கிறேன் என்றது

ஏற்கனவே எல்லைகளில் ஓட்டை இருக்கிறதென்பதை ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதத்தால் ரம் ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி குறைந்த வரியை விதிக்க முனைவார் என்றே எண்ணுகிறேன்.

இதிலே சீனாக்காரனை போற்ற வேண்டும்.

மாவோவின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறை என்ற மாதிரி

வீணே அலட்டாமல் நீ கூட்டினால் நானும் கூட்டுகிறேன்.

கனடாகாரருக்கு இது ஒரு Wake up call.     .

எப்போதோ விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எண்ணையை எடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி 

திரும்ப அமெரிக்காவிடம் கூடுதல் விலைக்கு வாங்குவார்களா?

பவ்வலோ பக்கம் வந்த கனேடியர்கள் காரை ஆட்டி ஆட்டி பெற்றோல்  அடிப்பார்கள்.

நாங்கள் மன்னர் நியூஜேர்சி பக்கம் போனால் இதே மாதிரி அடிப்போம்.

30-50 சதம் வித்தியாசம்.

28 minutes ago, ரசோதரன் said:

இதையே காரணமாக வைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் சொல்கின்றனர்.  அப்படியே அதிகரித்தாலும், உபரியை என்ன செய்வது. பலமான அமெரிக்க டாலரின் நிலையில் உபரி உற்பத்திகளை எங்கே விற்பது என்ற சிக்கல்கள் வரும். அப்பொழுது குறைநிரப்பின் அளவு மீண்டும் அமெரிக்காவிற்கு பாதகமாகவே முடியும்.

அமெரிக்க உற்பத்தியை மட்டுமே நம்பினால் 

நாங்க உடுப்பும் போட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க உற்பத்தியை மட்டுமே நம்பினால் 

நாங்க உடுப்பும் போட முடியாது.

இலங்கை, இந்தியா போய் வரும் போது தேவையானவற்றை எடுத்து வந்துவிடலாம், அண்ணா..................🤣. நாலு கிப்ஸ் வாங்கி வந்தால், அது தாரளமாக இரண்டு வருடங்களுக்கு மேல் போகும்..............

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் எல்லாமுமே smokescreen.

அவர் அதிரடி காட்டப்போவது ரஸ்யா-ஐரோப்பா விடயத்தில்தான். அதற்கான முனோட்டமே கிரீன்லாந்து, கனடா, மெக்சிகோ மிரட்டல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பவ்வலோ பக்கம் வந்த கனேடியர்கள் காரை ஆட்டி ஆட்டி பெற்றோல்  அடிப்பார்கள்.

இது உண்மையில் வேலை செய்யுமா?

சிலர் சொல்லிறார்கள் - பெற்றோல் மீளவும் நிரப்பிக்கு போய்விடுமாம், காரின் பெற்றோல் டாங்கில் நிரம்பாதாம். வீண் செலவு மட்டுமே என்று.

அதனால் முன்பு குறைந்த விலை எண்டால் நானும் உப்பிடி ஆட்டுவதுண்டு, இப்போ நிறுத்தி விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது உண்மையில் வேலை செய்யுமா?

சிலர் சொல்லிறார்கள் - பெற்றோல் மீளவும் நிரப்பிக்கு போய்விடுமாம், காரின் பெற்றோல் டாங்கில் நிரம்பாதாம். வீண் செலவு மட்டுமே என்று.

அதனால் முன்பு குறைந்த விலை எண்டால் நானும் உப்பிடி ஆட்டுவதுண்டு, இப்போ நிறுத்தி விட்டேன். 

ஆசை யாரைத் தான் விட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு வெற்றி என்றே எண்ணுகிறேன்.

இவ்வளவு மில்லியன் டாலரை செலவு செய்து எல்லையை கண்காணிக்கிறேன் என்றது

ஏற்கனவே எல்லைகளில் ஓட்டை இருக்கிறதென்பதை ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதத்தால் ரம் ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி குறைந்த வரியை விதிக்க முனைவார் என்றே எண்ணுகிறேன்.

இதிலே சீனாக்காரனை போற்ற வேண்டும்.

மாவோவின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறை என்ற மாதிரி

வீணே அலட்டாமல் நீ கூட்டினால் நானும் கூட்டுகிறேன்.

கனடாகாரருக்கு இது ஒரு Wake up call.     .

எப்போதோ விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எண்ணையை எடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி 

திரும்ப அமெரிக்காவிடம் கூடுதல் விலைக்கு வாங்குவார்களா?

பவ்வலோ பக்கம் வந்த கனேடியர்கள் காரை ஆட்டி ஆட்டி பெற்றோல்  அடிப்பார்கள்.

நாங்கள் மன்னர் நியூஜேர்சி பக்கம் போனால் இதே மாதிரி அடிப்போம்.

30-50 சதம் வித்தியாசம்.

அமெரிக்க உற்பத்தியை மட்டுமே நம்பினால் 

நாங்க உடுப்பும் போட முடியாது.

இதில் இவர்களுக்கு அப்பிடி என்ன வெற்றி கிட்டியது? இவ்வளவு பணத்தை செலவிட வைத்து, அமெரிக்க எல்லையை கண்காணித்து அப்பிடி என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இந்த எல்லையால் அமெரிக்காவுக்கு வரும் fentanyl இல் அளவு மொத்தத்தில் வெறும் 0.2%. கிட்டதட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். சட்டவிரோத குடியேறிகளும் அங்கிருந்து வருவது குறைவு. Trump இற்கு கை சுட்டு விட்டது, தான் வெற்றி பெற்றேன் என்று அவரது மறைகழண்ட ஆதரவாளர்களுக்கு காட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. மேலே நிழலி எழுதியது போல, இதன் விளைவு கனடா மக்களை இன மதம் பார்க்காமல் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவைத்தது. இதன் பொருளாதார அடி கொஞ்ச நாட்களில் இங்கு எதிரொலிக்கும். தற்போது இவருக்கு வாக்கு போடாத blue states எனப்படும் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கை வைக்கத்தொடங்கியுள்ளார்.  

9 hours ago, நீர்வேலியான் said:

நீர்வேலியான் சொல்வது போன்று, கனடிய -அமெரிக்க எல்லைகளினூடாக கடத்தல் என்பது 0.99 வீதம் கூட இல்லை. சட்ட விரோத குடியேற்றவாசிகளின் குடியேற்றமும் மெக்சிகோ, மற்றும் தென்னாபிரிக்கா எல்லைகளினூடாக குடியேறும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவு.
ஆனால் கனடாவுக்குள் வரும் சட்ட விரோத துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 90 வீதம் அமெரிக்கவில் இருந்து வருபவை. 

இன்னொரு விடயம்,

கனடா பாதுகாப்பு பிரிவாலோ அல்லது பொலிசாரால் கண்ணுக்கு முன் நிகழும் வாகனத் திருட்டையோ, அல்லது எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, பெரும் பல்பொருள் அங்காடிகளில் உள்ள நகைக்கடைகளை பட்டப்பகலில் கொள்ளை அடிக்கும் கொள்ளைகளையோ தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றனர். நிலமை இவ்வாறு இருக்க, பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் நீண்டும், வளைந்தும், அடர் வனங்களும், ஆறுகளும் இருக்கும் எல்லையை கடந்து நிகழும் குற்றங்களை தடுக்கவே முடியாது. 

எனவே பெரியளவில் மாற்றங்கள் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person
 
*மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம் ட்ரம்ப்புக்கு இப்படி ஒரு பதிலைக் கூறியது கேட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள்.*
"சுவர் கட்ட நினைத்தீர்கள், ஆனால் அந்த சுவரின் மறுபுறம் 7 பில்லியன் மக்கள் நிற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர்கள் iPhone ஐ விட்டுவிட்டு Samsung அல்லது Huaweiக்கு செல்வார்கள். Ford, Chevrolet ஐ விட Toyota, Kia, Honda ஐ ஓட்டுவார்கள். Disneyக்குப் பதிலாக லத்தீன் அமெரிக்க திரைப்படங்களைப் பார்ப்பார்கள், Nikeக்குப் பதிலாக Mexican Panam ஐ அணிவார்கள்.
இந்த 7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், உங்கள் பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும். பிறகு நீங்களே வந்து - 'தயவுசெய்து, இந்தச் சுவரை அகற்றுங்கள்' என்று சொல்வீர்கள். இது எங்களுக்கு வேண்டாம், ஆனால் நீங்கள் சுவர் கேட்டால் இப்போது உங்களுக்கு சுவர் கிடைக்கும். *நினைவில் கொள்ளுங்கள், உலகம் பெரியது, அமெரிக்கா எல்லாம் இல்லை.*
🤔🤔
  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 19:57, ரசோதரன் said:

இலங்கை, இந்தியா போய் வரும் போது தேவையானவற்றை எடுத்து வந்துவிடலாம், அண்ணா..................🤣. நாலு கிப்ஸ் வாங்கி வந்தால், அது தாரளமாக இரண்டு வருடங்களுக்கு மேல் போகும்..............

அப்ப நைக்கி,போலோ போன்ற பெயர்பெற்ற உடுப்புகள் போட முடியாதா?

தனியே கிப்ஸ்சோடு நிற்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப நைக்கி,போலோ போன்ற பெயர்பெற்ற உடுப்புகள் போட முடியாதா?

தனியே கிப்ஸ்சோடு நிற்க வேண்டியது தான்.

சென்னை பஜாரிலும், கொழும்பிலும் கிடைக்காத பிராண்டுகளா, அண்ணா........... ஒரு எழுத்தை மாற்றி விட்டிருப்பார்கள்................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 10:11, நிழலி said:

கனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. 

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன்.

நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன்.

கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். 

வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!

இது சொந்த செலவில் வைக்கும் சூனியம் என்று தலீவருக்கு யாரோ வடிவாக எடுத்து கூறி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ட்ரம்பை பொறுத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று ஒரு மாய தோற்றத்தை பொய்யை கூறி வந்தாலே போதும் அதைத்தான் அவர் செய்து வருகிறார் 

Lumber  பலகை  70-75 வீதம் கனடாவில் இருந்தே வருகிறது ஏற்கனவே வீட்டு விலை ம்உச்சியில் இருக்கிறது எண்ணையும் அதே போலவே  எண்ணெய் விலை ஏறினால் தலைவர் முக்காடு போட்டு கொண்டுதான் திரிய வேண்டு 

25 வீதம் பலகைக்கு எண்ணெய்க்கும் வரி விதித்தால் அதன் தாக்கம் எல்லா பொருடங்களிலும் இருக்கும் (Transport + storage ) 

மெக்ஸிகோ நிலைமை அதைவிட மோசம் அடிப்படை உணவு அங்கிருந்துதான் வருகிறது அதைவிட பல தொழில்நுட்ப பொருட்கள் ( Technology Hardwares + Cars Parts) வாகன உரிதிகள்  இரண்டு மூன்று முறை எல்லையால் வந்து வந்து போகிறது. காருக்கான என்ஜின் இங்கே செய்யப்படுகிறது இறுதி அசெம்ப்ளி மெக்சிகோவில் நடக்கிறது மெக்சிகோவும் 25 வீதம் வரி விதித்தால் அண்ணளவாக 50 வீதம் வரி ஏறும். இப்போது 50 ஆயிரத்துக்கு வாங்க கூடிய காரின் விலை 75 ஆயிரம் ஆகும் 

நடைமுறை சாத்தியமில்லாத விடயம் இதுவும் இன்னொரு Mexico pay for the Wall  தான் 

ஆனால் மற்ற நாடுகள் நேரடியாக முகம் முறித்து சீன போல மாறினால் அன்று அமெரிக்க உற்பத்தியை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் 65-70 வீதமான அமெரிக்க ஏற்றுமதி என்பது பொருட்களே அல்ல தொழிநுட்பம்  வங்கி வர்த்தகம் சோஃவார் ( Tecnology, Finacial;  trading, software) ஆகும். நீங்கள் விசா மாஸ்டர் கார்ட் பவித்தாலே ஒரு குறிப்பிடட வீதம் இங்கே வருகிறது 

Medicine 

+ Pharma products 

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் வாரத்தில் இருந்து கனடாவோ, மெக்சிக்கோவோ அல்லது உலகில் எந்த நாடுமோ அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் அவசரப் பிரச்சனை இனி உள்நாட்டில் தான். எட்டு மாத சம்பளம் கொடுக்கின்றோம், வேலையை விட்டுப் போங்கள் என்று சொன்ன பின்னும், 40000 பேரே மத்திய அரசின் வேலையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்கனவே இந்த வருடம் ஓய்வடையும் நிலையில் இருந்தவர்கள் தான் என்கின்றனர். அவர்கள் போகும் போது போனஸுடன் போகின்றார்கள். ட்ரம்பும் எலானும் கொடுத்த கெடு முடிந்துவிட்டது.

ஆனால், ட்ரம்பும் எலானும் எதிர்பார்த்த 200000 பேர்கள் வேலையை விட்டுப் போகவில்லை. வழக்குகள் தான் போட்டிருக்கின்றார்கள். நீதிபதிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவுகளை போட ஆரம்பித்திருக்கின்றார்கள். வேறு சில விடயங்களிலும் இப்படி நீதித்துறையும், அரசும் முரண்டுபட்டுக்கொண்டு நிற்கின்றது.

நான் என்ன வழக்கு போடலாம் என்று எனக்கே ஒரு யோசனை வருகுது என்றால் பாருங்களேன்................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.