Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Feb 08, 2025, 10:53 Am IST

தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி

தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன; நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.
Feb 08, 2025, 10:42 Am IST

18,712 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 22,682 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 3970 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 18,712 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
Feb 08, 2025, 10:27 Am IST

19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திமுக சந்திரகுமார் 21,481; நாதக சீதாலட்சுமி 2,278 வாக்குகளைப் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 19,203
Feb 08, 2025, 10:15 Am IST

நோட்டாவுடன் நாம் தமிழர் கட்சி போட்டி

ஈரோட்டில் 2,278 வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு போட்டியாக நோட்டாவுக்கு 578 வாக்குகள் கிடைத்துள்ளன.
Feb 08, 2025, 9:58 Am IST

நோட்டாவுக்கு 517

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 517 வாக்குகள் கிடைத்துள்ளன
Feb 08, 2025, 9:39 Am IST

13,694 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15,972; நாதக சீதாலட்சுமி 2,278 வாக்குகளைப் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 13,694 வாக்குகள் வித்தியாசததில் முன்னிலை வகிக்கிறார்
Feb 08, 2025, 9:35 Am IST

அதிமுக, பாஜக வாக்குகள்

ஈரோடு இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்தி வருகிறது.
Feb 08, 2025, 9:16 Am IST

திமுக அமோக முன்னிலை

திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை விட 10,050 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்
Feb 08, 2025, 9:02 Am IST

7100 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 7,100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்
Feb 08, 2025, 9:00 Am IST

முதல் சுற்று முடிவுகள்

முதல் சுற்று முடிவு: திமுக விசி சந்திரகுமார் 8113 வாக்குகள்; நாதக சீதாலட்சுமி 1,013 வாக்குகள்
Feb 08, 2025, 8:53 Am IST

திமுக 5567 வாக்குகள்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5568 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 489 வாக்குகளையும் பெற்றுள்ளார்
Feb 08, 2025, 8:48 Am IST

தபால் வாக்குகளில் திமுக 935

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் விவரம்: திமுக- 935; நாம் தமிழர் கட்சி 137
Feb 08, 2025, 8:37 Am IST

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி

தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது
Feb 08, 2025, 8:36 Am IST

திமுக 50; நாதக-1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகளில் தற்போது வரை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 50 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 1 வாக்கையும் பெற்றுள்ளார்.
Feb 08, 2025, 8:26 Am IST

திமுக முன்னிலை

தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார்
Feb 08, 2025, 8:02 Am IST

வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Feb 08, 2025, 7:48 Am IST

பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
Feb 08, 2025, 7:34 Am IST

2011-ல் தேமுதிக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வென்றது. தற்போது திமுக வேட்பாளராகப் போட்டியிடும் விசி சந்திரகுமார், 2011-ல் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு திமுகவை தோற்கடித்தார்.
Feb 08, 2025, 7:11 Am IST

பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது.
Feb 08, 2025, 7:09 Am IST

தேமுதிக,, அதிமுக, காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2011-ம் ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தேமுதிக வென்றது. 2016-ல் அதிமுக, 2021-ல் காங்கிரஸ், 2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது.
Feb 08, 2025, 6:46 Am IST

56 பேர் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
Feb 08, 2025, 6:13 Am IST

600 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிகை மையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Feb 08, 2025, 6:02 Am IST

டெண்டர் ஓட்டுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணங்கள் இருந்தும் தம்மால் வாக்கு செலுத்த முடியவில்லை என சில இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் 'டெண்டர்' ஓட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த டெண்டர் ஓட்டுகளும் எண்ணப்படும்.
Feb 08, 2025, 6:01 Am IST

காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு அறை திறப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் இருப்பு அறை காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். இதன் பின்னர் 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Feb 08, 2025, 5:44 Am IST

14 மேஜைகள் 17 சுற்றுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 51 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.
Feb 08, 2025, 5:44 Am IST

வாக்கு எண்ணிக்கை எங்கு?

ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் 246 தபால் வாக்குகளும் முதலில் எண்ணப்படும். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Feb 08, 2025, 5:44 Am IST

72,889 பேர் வாக்களிக்கவில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1,54,657 வாக்களித்தனர்; 72,889 பேர் வாக்களிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 67.97% வாக்குகள் பதிவாகி இருந்தன.
7 Hours Ago

 

4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்

2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். அவர் காலமானதைத் தொடர்ந்து 2023-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்ததால் 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு எதிர்கொண்டது

அதிமுக புறக்கணிப்பு 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது. இதேபோல அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக, பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

 

 

https://tamil.oneindia.com/news/tamilnadu/erode-east-by-election-2025-vote-counting-results-live-news-in-tamil-dmk-vs-ntk-who-will-win-678143.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

 

  • Replies 113
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை.  இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின்

  • Sasi_varnam
    Sasi_varnam

    சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?

திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
8 பிப்ரவரி 2025, 01:54 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது.

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நிலவரம் என்ன?

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக - 7,961 வாக்குகள்

நாதக - 1081 வாக்குகள்

வித்தியாசம் - 6,880 வாக்குகள்

இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg5yp3pr9n6o

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்… திமுக வேட்பாளர் காட்டம்!

8 Feb 2025, 3:00 PM
ntk gets accidental votes dmk attack

நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 08) காலை முதல் நடைபெற்று வருகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஒன்பது சுற்றுகள் முடிவில் திமுகவின் சந்திரகுமார் 61,880 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13,456 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 48,424 வாக்குகளாக உள்ளது.

சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் ’பெரியார் வாழ்க’ என கோஷமிட்டு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

திமுக முதலிடத்தில் உள்ளது!

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேசுகையில், “இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னதையே சொல்கிறேன். ‘உதிரிகளை களத்தில் இறக்கியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். அதுதான் நடந்துள்ளது. 

எங்களுக்கு எதிரியே இல்லை என்று நான் நினைக்கவில்லை. தேர்தலில் 46 பேர் போட்டியிட்டோம். அதில் முதல் கட்சியாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக முதலிடத்தில் உள்ளது. 

பிரதான எதிர்க்கட்சி ஒன்று தங்களது கட்சியில் உள்ளவர்களுக்கு சில கட்டளைகள் விதித்ததாக கருதுகிறோம். அதேநேரத்தில் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்ததால் தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத போது, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்; திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை. அஞ்சப்போவதும் இல்லை” என்று சந்திரகுமார் தெரிவித்தார்.

 

https://minnambalam.com/political-news/ntk-gets-accidental-votes-dmk-attack/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு தேர்தலில் நாதக  டெபாஸிடை இழந்த போதும்  தனக்குரிய தனிப்பட்ட  payment  போதியளவு  கிடைத்த மகிழ்சசியில் சீமான்.  

large.IMG_9068.jpeg.1a7f8778df600aa98e9ca0b9898b304d.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

■23810 வாக்குகள் 15.4% 
~கடந்த இடை தேர்தலை விட இரட்டிப்பு வளர்ச்சி.

■இது பெரியார் மண்ணு இல்ல
~பெரியாரே ஒரு மண்ணுன்னு நிறுவியாச்சி.!
 

2000ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளினால் கட்டுப்பணத்தை இழந்திருக்கிறது.(அதற்கும் எத்தனை தில்லைமுல்லுகளைச் செய்தார்களோ தெரியவில்லை)

பெரியாரை எதிர்த்து பெரியாரின் தொகுதியில் அதுவும் பெரியாரின் பூட்டனும்,பெரியாரின் மகனும் எம்எல்ஏ ஆக இருந்த தொகுதியில் ஆளும்கட்சிக்குச் சார்பான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளைப் பெற்றது அதற்கு வளர்ச்சிதான்.தேசிக்காயோடு கட்டுப்பணம் செலுத்திய திமுக வேட்பாளரை தேசிக்காயும் பணமும் காப்பாற்றியிருக்கிறது.நாம் தமிழர் பெற்ற வாக்குகள் விபத்துக்கு சம ம் என்று திமுக வேட்பாளர் கூறியிருப்பது அவரது பதட்டத்தைக் காட்டுகிறது.விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

■23810 வாக்குகள் 15.4% 
~கடந்த இடை தேர்தலை விட இரட்டிப்பு வளர்ச்சி.

■இது பெரியார் மண்ணு இல்ல
~பெரியாரே ஒரு மண்ணுன்னு நிறுவியாச்சி.!
 

2000ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளினால் கட்டுப்பணத்தை இழந்திருக்கிறது.(அதற்கும் எத்தனை தில்லைமுல்லுகளைச் செய்தார்களோ தெரியவில்லை)

பெரியாரை எதிர்த்து பெரியாரின் தொகுதியில் அதுவும் பெரியாரின் பூட்டனும்,பெரியாரின் மகனும் எம்எல்ஏ ஆக இருந்த தொகுதியில் ஆளும்கட்சிக்குச் சார்பான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளைப் பெற்றது அதற்கு வளர்ச்சிதான்.தேசிக்காயோடு கட்டுப்பணம் செலுத்திய திமுக வேட்பாளரை தேசிக்காயும் பணமும் காப்பாற்றியிருக்கிறது.நாம் தமிழர் பெற்ற வாக்குகள் விபத்துக்கு சம ம் என்று திமுக வேட்பாளர் கூறியிருப்பது அவரது பதட்டத்தைக் காட்டுகிறது.விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம்.

 விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை!!

அதிமுக, பாஜக போட்டியிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

 

ஈரோடு கிழக்கு : டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி

8 Feb 2025, 5:22 PM
ntk seetha failed to get deposit

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்துள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று (பிப்ரவரி 😎 எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதுமுதலே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். 

தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

குறிப்பாக 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சந்திர குமார் 55,849 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 12,028 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருந்தார்.

அதேபோன்று 15வது சுற்றில் சந்திரகுமார், 1,02,480 வாக்குகளை பெற்ற நிலையில், சீதாலட்சுமி 21,802 வாக்குகளை பெற்றார். 

மோசமான சாதனை!

அவர் டெபாசிட் பெற மொத்தம் 25,673 வாக்குகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 17 வாக்கு சுற்றுகள் முடிவில் சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார். அவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட 44 பேரும் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.

இதன்மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூரில் தோல்வியடைந்த சீமானை தவிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரை தேர்தலில் டெபாசிட் பெற்றதில்லை என்ற பரிதாப சாதனை தொடர்கிறது.

அதே வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், 90,629 வாக்குகள் வித்தியாசத்துடன் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

 

https://minnambalam.com/political-news/ntk-seetha-failed-to-get-deposit/

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக வாக்குகளை பெற்றுமே சீமான் கட்சிக்கு கட்டு பணம் கிடைக்கவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப விலை ரூ.50,000... அ.தி.மு.க புள்ளிகளுக்கு வலை..!

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி ஆகியோர் புறநகர்ப் பகுதியிலுள்ள பவானி, பெருந்துறையில் தங்கியிருந்து ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். எ.வ.வேலுவின் மகன் கம்பன், தன் தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்துவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வாகனத்தைத் தவிர்த்துவிட்டு, வேறொரு காரில் தினமும் கோவையிலிருந்து வந்து செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான பத்மநாபன் மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்து வருகிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் முதலியார் சமூக வாக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வளைத்துவருகிறார். எங்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே, சுமார் 60 `பூத்’களில் கணிசமாக இருக்கும் அ.தி.மு.க வாக்குகள்தான்.

2023 இடைத்தேர்தலின்போது, தி.மு.க-வின் பலமான கவனிப்புக்கு மத்தியிலும், அ.தி.மு.க வேட்பாளரான தென்னரசுக்கு 43,923 வாக்குகள் கிடைத்தன. அதாவது, பதிவான வாக்குகளில் சுமார் 25 சதவிகிதம் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழுந்தன. அந்த வாக்குகளைக் குறிவைத்துத்தான் அமைச்சர் முத்துசாமி காய்நகர்த்திவருகிறார். அமைச்சர் முத்துசாமி, அ.தி.மு.க-வில் பல ஆண்டுகள் பயணித்தவர் என்பதால் அந்தக் கட்சியில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவர்களிடம் இன்றைக்கும் நெருக்கமாக இருக்கிறார். அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என அனைவரிடமும் தி.மு.க-வை ஆதரிக்குமாறு தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார் முத்துசாமி.

 

இதற்கிடையே, அ.தி.மு.க நிர்வாகிகளின் பொறுப்புக்கேற்றதுபோல, 50,000 ரூபாயில் தொடங்கி, சில லட்சங்கள் வரையில் வலுவான கவனிப்பும் தனித்தனியே நடைபெற்றிருக்கிறது. இந்த வார இறுதிக்குள், சிக்கல் நிறைந்த அந்த 60 பூத் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கவனிப்புகள் பலமாகவே சென்று சேர்ந்துவிடும். பிரசாரத்தின்போது, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. ‘அ.தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் ஆரத்தி எடுக்க வந்தாலும், அவர்களைத் தடுக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டார் முத்துசாமி. காலை, மாலை எனப் பிரசாரத்துக்கு வரும் ஆண்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிலும், அ.தி.மு.க தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்கிறார்கள். தி.மு.க-வுக்கென்று ஓட்டுப் போடாவிட்டாலும், அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார் என்பதற்காக, தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாருக்கு அ.தி.மு.க வாக்குகள் விழுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது” என்றனர் விரிவாக.

வார்டுவாரியாக அ.தி.மு.க-வினருக்குக் கொடுக்கப்படும் பணக் கணக்கு, தனியாக நோட்டு போட்டுப் பராமரிக்கப்படுகிறதாம். ஈரோட்டிலுள்ள தி.மு.க கவுன்சிலர்களையும் தாண்டி, மற்ற கட்சி நிர்வாகிகளையும் தனித் தனியே கவனிக்க ஆயத்தமாகிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிவரும் நாம் தமிழர் கட்சி, சமூகரீதியிலான வியூகத்தைக் கையில் எடுத்திருக்கிறது. வெற்றி பெறாவிட்டாலும், எப்படியாவது டெபாசிட் வாங்கிவிட முனைப்பு காட்டுகிறார்கள் அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

உங்கட கணிப்பு நிச்சயம் பொய்க்கும், 10% வந்தேறிகளின் வாக்குகளை தவிர மீதமுள்ள 90% உயர்தர சுத்தமான தமிழர்களின் வாக்குகளை பெற்று, அனைத்து தொகுதிகளையும் வென்று தமிழ்நாட்டின் அதிபராக முடிசூடுவார்.

21 minutes ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

வேறு எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல், வெறுமனே இரண்டு கட்சிகள் மட்டும் போட்டியிட்ட ஒரு இடைத்தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாமல் போனது உங்களுக்கு வியப்பைத் தருகிறதா இசை?

இதில் அதிமுக, பா.ஜ.க போட்டியிட்டு இருந்தால் நாதக எத்தனை சதவீதம் எடுத்து இருக்கும்?

திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலை உள்ளவர்களில் கணிசமானோர் கூட சீமானுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரில்லை என்பது தான் யதார்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

23810 வாக்குகள் 15.4% 
~கடந்த இடை தேர்தலை விட இரட்டிப்பு வளர்ச்சி.

■இது பெரியார் மண்ணு இல்ல
~பெரியாரே ஒரு மண்ணுன்னு நிறுவியாச்சி.!
 

அமித் ஷா அத்தனை கட்சிகளை விலக செய்தும்….

திமுக மீது கடும் அதிருப்தி இருந்தும்….

டெபாசிட் கூட தேறவில்லை….

ஏன்?

50 வருசத்துக்கு முன் செத்து போன ஒரு கிழவன்…..🤣🤣🤣

பெரியாரை தூற்றி விட்டு ஒரு ஹை கோர்ட்டையும் பிடுங்க முடியாது என்பது இப்போ அமித் ஷாவுக்கு விளங்கி இருக்கும்.

48 minutes ago, கிருபன் said:

ஈரோடு கிழக்கு : டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி

 

32 minutes ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

வாங்க…வந்து…

வண்டில ஏறுங்க…

பேசிகிட்டே போகலாம்🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

எனக்கும் இந்த தேர்தல் முடிவு வியப்பைத் தந்தது! ஒரு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோற்பது அல்லது மிகக் குறைந்த பெரும்பான்மையில் வெல்லுவதுதான் வழமையாக நடப்பது. ஆனால் பிற எதிர்க்கட்சிகள் போட்டியிடாத தேர்தலில் பல உதிரிகளோடு உதிரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் கட்டுப்பணத்தை இழந்தது பெரிய வியப்புத்தான்😜

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பல கூட்டணிகள் மோதும்போது தனியே தேர்தலில் நிற்கும் நாம் தமிழர் கட்சி 8% வீதத்தைக் கூட எடுக்கமுடியாமல் மீண்டும் உதிரியாகத்தானே போகப்போகின்றது..

என்னுடன் பல தமிழக என்ஞினியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுடன் அரசியல் பேசுவது குறைவு என்றாலும் அண்மைய பெரியார்-பிரபாகரன் பிரச்சினையை எப்படி தமிழகத்தில் பார்க்கின்றார்கள் என்று கேட்டேன். ஈரோடு தேர்தலுக்குத்தான் சீமான் பெரியாரை அவதூறு செய்வதைக் கையில் எடுத்தார் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளார்கள். மற்றும்படி யாரிடம் அதிக பணமும், கோர்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவும், மீடியாவில் ஆதிக்கமும் உள்ளதோ அவர்கள்தான் தேர்தலில் வெல்லுவார்கள் என்று சொன்னார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வர அதிக வாய்ப்பு உள்ளது.

நாம் தமிழருக்கு “வாய்ப்பில்லை ராஜா”

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போகிற போக்கைப் பார்த்தால் பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வர அதிக வாய்ப்பு உள்ளது.

இதுதான் சுப முத்துகுமார் கொல்லப்பட்டபின் நா த க வின் ஒரே இலக்கு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

நானும் பெரியார் மண்ணில் அதிகம் உரசிப்பார்க்கிறார். வாங்கி கட்ட போகிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் பெரியாரை (அத்தனை திராவிட கட்சிகளையும்) எதிர்த்து இத்தனை இளைஞர்களை சேர்த்திருப்பது சாதனை தான். இனி பெரியாரும் நாம் தமிழர்களுக்கு வாக்கு சேர்ப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

நானும் பெரியார் மண்ணில் அதிகம் உரசிப்பார்க்கிறார். வாங்கி கட்ட போகிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் பெரியாரை (அத்தனை திராவிட கட்சிகளையும்) எதிர்த்து இத்தனை இளைஞர்களை சேர்த்திருப்பது சாதனை தான். இனி பெரியாரும் நாம் தமிழர்களுக்கு வாக்கு சேர்ப்பார்.

உங்களுக்கும் வண்டியில் இடமுண்டு அண்ணை, வாங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Erode East: விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? நாதக சீமானுக்கு பாடம் கற்றுதந்த பெரியார் மண்!

Vishnupriya RUpdated: Saturday, February 8, 2025, 19:08 [IST]
 

erode east by election 2025 erode east election result 2025 2025 2025

பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சூழலே நிலவும் என்றாலும் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிக வாக்குகளை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் 24 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாதகவுக்கு தோல்வியிலும் வெற்றி என்ற நிலைப்பாடுதான் ஏற்பட்டுள்ளது.

பகுத்தறிவு பகலவன் பெரியாரை எந்த அளவுக்கு அவதூறாக பேச முடியுமோ அந்த அளவுக்கு சீமான் கடுமையாக விமர்சித்துவிட்டார். இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அப்போது முதலே முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாக திராவிட கட்சிகள் விமர்சித்து வந்தன.

மேலும் தமிழகமே பெரியார் மண் என்றாலும் அதில் உள்ள ஈரோடு தொகுதி என்பது பெரியார் பிறந்த ஊர் ஆகும். தமிழகத்திலேயே பெரியாருக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது அவருடைய சொந்த ஊரில் கேட்கவே வேண்டாம்.

அந்தளவுக்கு பெரியாரின் சீர்திருத்தங்களால் பெரும்பாலானோர் பயனடைந்து வருகிறார்கள். ஏற்கெனவே சீமான் பெரியாரை பேசிவிட்டார் என தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமானுக்கு எதிராக பலர் கொந்தளித்தனர். மேலும் வேட்பாளர் சீதாலட்சுமியிடமும் பலர் "பெரியாரை உங்கள் தலைவர் (சீமான்) இழிவாக பேசிவிட்டு இங்கேயே வந்து வாக்கு கேட்பாரா என கோபப்பட்டனர்.

அவர்களை வேட்பாளர் சமாதானப்படுத்தினார். இந்த நிலையில் இந்த முறை நடக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே போட்டியிடுவதால், நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கடந்த தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்கலாம். அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகளை பெற்றார். அவருடைய வாக்கு சதவீதம் 6.98 ஆகும்.

2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் போட்டியிட்டார். அவர் 10,827 வாக்குகளை பெற்று, 6.35 வாக்கு சதவீதத்தை பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 2023 இல் நாதகவுக்கு வாக்கு சதவீதமும் வாக்குகளும் குறைவுதான். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளும் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு 24 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் டெபாசிட் இழந்தாலும் நாதகவின் வாக்கு சதவீதம் இந்த முறை அதிகரித்திருக்கும்.

இதற்கு காரணம் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் அதிமுக, தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளும் திமுக எதிர்ப்பாளர்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திரு்கக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதாவது வழக்கமாக கடந்த தேர்தல்களை போல் இந்த முறையும் நாதகவுக்கு எப்போதும் வரவேண்டிய 10 ஆயிரம் ஓட்டுக்களுடன் அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் 10 ஆயிரமும் கிடைத்துவிட்டது என்றே கருதப்படுகிறது.

 

https://tamil.oneindia.com/news/chennai/will-naam-tamilar-ntk-perform-more-than-last-elections-in-erode-east-678239.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உங்களுக்கும் வண்டியில் இடமுண்டு அண்ணை, வாங்கோ.

வாறன் தம்பி 

ஆனால் வண்டி எங்கே போகுது என்று உங்களுக்கே தெரியாமல்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

இதுதான் சுப உதயகுமார் கொல்லப்பட்டபின் நா த க வின் ஒரே இலக்கு.

உயிரோடு இருப்பவரை போட்டுத் தள்ளலாமா?! நீங்கள் சொல்பவர் சுப முத்துக்குமார் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

வாறன் தம்பி 

ஆனால் வண்டி எங்கே போகுது என்று உங்களுக்கே தெரியாமல்???🤣

போகும் போதே அது விளங்கும் 🤣

9 minutes ago, ஏராளன் said:

உயிரோடு இருப்பவரை போட்டுத் தள்ளலாமா?! நீங்கள் சொல்பவர் சுப முத்துக்குமார் அண்ணை.

🤣 அட ஆமாம் தம்பி. மாத்தி விடுகிறேன். நன்றி🙏

10 minutes ago, goshan_che said:

வழக்கமாக கடந்த தேர்தல்களை போல் இந்த முறையும் நாதகவுக்கு எப்போதும் வரவேண்டிய 10 ஆயிரம் ஓட்டுக்களுடன் அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் 10 ஆயிரமும் கிடைத்துவிட்டது என்றே கருதப்படுகிறது.

அதாவது….

பாஜக….

அதிமுக…..

மிகுதி இருக்கும் அத்தனை திமுக கூட்டணி எதிர் வாக்கு வங்கியில் இருந்தும் …..

நா த க வால் வெறும் 10,000 வாக்கை மட்டுமே திரட்ட முடிந்துள்ளது.

இந்த 10,000 மேலதிக வாக்கில் அநேகம் பிஜேபி வாக்காளராகத்தான் இருக்கும்.

தமது பரம வைரியான திமுக வென்றாலும் பரவாயில்லை….சீமானுக்கு வாக்கு போடக்கூடாது என்று பெரும்பான்மை அதிமுக வாக்காளரும்….

திமுகவுக்கு போடாமல் விட்டாலும் நா த க வுக்கு போடுவதில்லை என பெரும்பான்மையான நடுநிலை வாக்காளரும் முடிவு செய்துள்ளனர்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது.

2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

திமுக வேட்பாளர் சந்திரகுமார் - 1,14,439 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி - 23,810 வாக்குகள்

நோட்டா - 6,040 வாக்குகள்.

அண்ணன் நோட்டாவுடன் கூட்டணி வைத்தால் மத்திய அரசை கூட அமைக்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்:

  • நாதக  14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை.

இது மொத்தமாக 41000 என்று வருகின்றது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000.

அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

 இனி தமிழகத்தின் இரெண்டாம் பெரிய கட்சி  நா. த. க

மூன்றாம் பெரிய கட்சி நோட்டா

இதை கேள்வி கேட்பவன் தெலுங்கு வந்தேறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

இதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்:

  • நாதக  14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை.

இது மொத்தமாக 41000 என்று வருகின்றது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000.

அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

 

 

எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாயின் எல்லோருடனும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக புறகணித்திருக்க வேண்டும். 

அமித் ஷா அழுத்தத்துக்கு பயந்து அதிமுக, நாதக வுக்கு விட்டு கொடுத்ததின் பலன் - சில ஆயிரம் அதிமுக/ நடுநிலை வாக்காளர் நாதகவுக்கு போட்டுள்ளனர்.

ரெய்டுக்கு பயந்து கட்சி நடத்தாமல் ஜெ போல் லேடியா, மோடியா என மோதினால்தான் கட்சியை காப்பாற்றலாம்.

பிஜேபி கூட்டணியை முறித்தமை போல் இதிலும் எடப்பாடி கடும் நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.