Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம் ; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு

08 FEB, 2025 | 03:49 PM
image

மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு க.ஜெயகுமார்,பா.பாஷ்கரன், சுகுமாரி சாருஜன் ஆகியோர் மேலும் கூறுகையில்,

மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிட்டி விவகாரம் இருக்கின்றது.

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடையம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடையம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர். 

ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாதுள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம். 

ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடையத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன்  ஜனாதிபதிக்கு கூறியிருந்தார்.

ஆனாலும் அன்று கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை  நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில்   அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206150

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

விகாரை ஒன்றும் சும்மா கட்டவில்லை. அதை சுற்றி, சிங்கள குடியேற்றம் நிகழும். சிங்களவர் இல்லாத இடத்தில, விகாரை, தியான மண்டபம், விடுதி எல்லாம் யாருக்கு? இதற்கு மாற்றீடு கேட்டுப்பெற்றால், அதை தொடர்ந்து இந்த இடத்தில சிங்கள குடியேற்றம் உடனடியாக நிகழும். அடுத்து இதேபோல் தமிழரின் ஏனைய காணிகளுக்கு நிகழும். அப்போ நம்ம தலைவர்கள்,  ஆளுநர் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதேகாரணத்தை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டு தமது பதவிகளை காத்துக்கொள்வர். அவர்கள், முதலில் தமது காணிகளை பகிர்ந்து கொடுக்கட்டும் பாதிக்கப்பட்ட, காணியற்ற மக்களுக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்  

11 FEB, 2025 | 05:04 PM
image

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. 

இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை  புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது.  

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில்,

இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். 

எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை  இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

d75890b6-39e8-4093-a992-52c99d287142.jpg

https://www.virakesari.lk/article/206434

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் இரண்டாவது நாளாகவும தொடரும் போராட்டம்!!

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணிகளைப் பூர்வீக உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தையிட்டியில் நேற்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த போராட்டம் இன்று மாலை 6 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறுகின்ற போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

https://www.samakalam.com/தையிட்டியில்-இரண்டாவது-ந/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்! 

12 FEB, 2025 | 02:19 PM
image

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது.

காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு”, “சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று”, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

01__1_.jpg

01__2_.jpg

01__4_.jpg

01__5_.jpg

01__8_.jpg

01__7_.jpg

01__13_.jpg

01__10_.jpg

01__9_.jpg

https://www.virakesari.lk/article/206496

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய போராட்டத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்துள்ளது.(சிறிதரன் தரப்பு)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போராட்டத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்துள்ளது.(சிறிதரன் தரப்பு)

சின்னக் கதிர்காமர் என்று அழைக்கப்படும் சுமந்திரன் தரப்புக்கு,
விகாரை இருப்பதில் நல்ல விருப்பம் போல் தெரிகின்றது.
இப்படியான போராட்டங்களில்... ஆளை காணக்  கிடைக்குதில்லை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்

Published By: VISHNU   12 FEB, 2025 | 09:11 PM

image

யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டமொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.

IMG-20250212-WA0071.jpg

இந்த விகாரைக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

விகாரைக்கு முன்பாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல நூற்றுக் கணக்கானோர் இன்று காலை முதல் திரண்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது.

பல்வேறு அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கறுப்பு கொடிகளுடன் பெருமளவில் திரண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இனப்படுகொலை இராணுவமே வெளியேறு”, “இந்த மண் எங்களின் சொந்தமண்”, “கண் திறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா?”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற பல கோசங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன.

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான நிலைமையும் தோன்றியது.

எனினும், அச்சுறுத்தல்கள், எதிர்ப்புக்குகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் விகாரகைக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகிறது.

https://www.virakesari.lk/article/206534

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென தையிட்டி விகாரைக்குள் புகுந்த வாகனம்; மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி! | UshanthanView

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சின்னக் கதிர்காமர் என்று அழைக்கப்படும் சுமந்திரன் தரப்புக்கு,
விகாரை இருப்பதில் நல்ல விருப்பம் போல் தெரிகின்றது.
இப்படியான போராட்டங்களில்... ஆளை காணக்  கிடைக்குதில்லை.

புதுசாக வீதி திறந்தால் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு கணக்காளர்ர நியமிக்க சொன்ன மாதிரி போகும் போல போராட்டம் அதுக்கு சுமந்து வந்து வாங்கி  கட்டிக்கொண்டு போனவர்

கட்டும் வரைக்கும் கோமாவில் இருந்திருக்கு சனம்  கட்டி முடிஞ்ச பிறகு சிங்களவன் அகற்றுனா அது தெற்கில சூடு கிளம்பும் இதுல கஜா கும்பல் வேற இந்த வருடம் முளுக்க தைட்டி இழுக்கும் என்றால் பாருங்கோவன் 

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்காணி பெற்றுக்கொள்ள சம்மதம் என்று தையிட்டிக் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லையா? அமைச்சர் வேதனாயகம் அவர்களும் குட்டையில் ஊறிய ஒரு மட்டையா?.=

  • கருத்துக்கள உறவுகள்

இதை இடிப்பது என்று வாய்ச்சவடல் செய்யாமல், மெதுவாக மூட  வேண்டும்.

எனவே விகாரை, மாதத்தில் ஒரு முறை ஆராதனை  செய்யலாம், காணி சொந்தக்காரரும் விகாரைக்கு  பங்கம் இல்லாமல் குடி இருக்கலாம் என்பது போன்ற ஓர் ஏற்பாடு.


இப்படி, காணி சொந்தக்காரர் அதில் இருப்பதே 99% (சட்டப்படி கூட) விடயம் முடிந்த்து விட்டது.


இப்படி, மூடி, ஆறப்போட, காணி சொந்த காரர் விகாரைக்கு தம் பராமரிப்பை செய்ய முடியும்.

முதல் விகாரை இல்லாத பகுதி  காணிக்குள்  எப்படி குடியேறுவது என்பத்தே இபோது முனைப்பாக இருக்க வேண்டும்

கதிர்காமம் போல இருக்கலாம் என்று  . வெளியில் அறிவிக்கலாம் (பின் அத்துக்குள் எதாவது இறைச்சி கடை போன்றவற்றை துறந்து பௌத்த பக்கதர்களை அருவருப்பு அடையச் செய்வது போன்றவற்றை செய்வது)
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

கட்டும் வரைக்கும் கோமாவில் இருந்திருக்கு சனம்  கட்டி முடிஞ்ச பிறகு சிங்களவன் அகற்றுனா அது தெற்கில சூடு கிளம்பும் இதுல கஜா கும்பல் வேற இந்த வருடம் முளுக்க தைட்டி இழுக்கும் என்றால் பாருங்கோவன் 

தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.