Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

May be an image of ticket stub and text

வலம்புரி ஹோட்டேலில்... டாக்டர்  சாப்பிட்ட காசை விட, 
உடைந்த பொருட்களுக்கு பில் அதிகமாக வந்திருக்கு. 

Butter Naan - 320 x 2 = 640 ரூபாய் 
மாட்டு இறைச்சி கறி - 850 ரூபாய் 
எலுமிச்சை  சாறு - 320 ரூபாய் 

வைத்தியர் சாப்பிட்ட காசு, மொத்தம் 1810 ரூபாய்.

உடைந்த பொருட்கள்.... 30 பீங்கான் கோப்பை. 
ஒன்றின் விலை 100 ரூபா x  30 = 3000ரூபாய். 

உள்ளூர் வரியுடன்  மொத்தம்.... 5291 ரூபாய்.

அண்மையில் இந்த உணவகத்திற்கு சென்று கையோடு கொண்டு செல்ல உணவு வாங்கிய போது,.. ஒன்றிற்கு சம்பல் வைத்து இன்னொன்றிற்கு வைக்காமல் அனுப்பினவை. வீட்ட போய் பார்த்த போது தான் விளங்கியது இவர்களின் தில்லாலங்கடி.

இங்க வாற கூட்டம் எல்லாமே ஒரு மாதிரியாத்தான் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2025 at 20:56, RishiK said:

சரியோ பிழையோ எந்தவொரு தமிழ் ஊடகமும் அர்ச்சுனாவின் பக்க நியாயத்தை சொல்வதில்லை

இந்த யாழ் கள உறுப்பினர்கள் சொல்லி உள்ளார்களா,..???   

அர்ச்சுனா    அடிபட. போகவில்லை   ...சாப்பிடத் தான் போனார்   

உணவகங்களில் சாப்பிட போகலாம்   ....அவர் ஒரு சாதாரண மனிதனாக சாப்பிட போனார்  ..

விருந்தினர்களை  .....வாடிக்கையாளர்களை    உணவகங்களில் நிற்பவர்கள்.   முதலாளியின். நண்பர்கள்   நக்கல் அடிக்கலாமா???  

இங்கே கருத்துகள் எழுதியவர்கள். உங்கள் துணையுடன் அல்லது தனியாக   உணவு உள்கொள்ள. அதாவது சாப்பிட உணவகங்களுக்கு   செல்கிறார்கள் என வைப்போம்    

அங்கே நிற்கும் ரவுடிகள்   I Love You       என்று சொன்னால்  உங்கள் வாழ்க்கை துணை அல்லது நீங்கள்   என்ன செய்வீங்கள் ???  

அடிப்பீர்கள்.   ....அர்ச்சுனா போல் தாக்குவீர்கள்.  

இல்லை எதுவும் செய்ய மாட்டீர்கள்   ....உங்கள் வாழ்க்கை துணைக்கு பாதுகாப்பு கொடுக்க. முடியாது   இல்லையா??  கண்டவன் நின்றவன். எல்லாம்   

I Love  You     சொல்லலாமா. ???. 

இங்கே அர்ச்சுனா    செய்தது  மிக மிக. சரியான    வேலை    

இதற்க்கும்.  பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை   

அர்ச்சுனா    நீங்கள்   தான்   உண்மையான தமிழன்   

உண்மையான மனிதன்.  வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

ம்    

அங்கே நிற்கும் ரவுடிகள்   I Love You       என்று சொன்னால்  உங்கள் வாழ்க்கை துணை அல்லது நீங்கள்   என்ன செய்வீங்கள் ???  

இவருக்கு எத்தனை வாழ்க்கை துணை...?...இவர் வாழ்வது கற்காலம் அல்ல முன்னேறிய காலம் ஆகவே ஒரளவு மனித நேயத்துடன் இருக்க வேணும் ...இவர் பொது வாழ்க்கைக்கு வந்தௌ விட்டார் என்றால் அதற்கு ஏற்ப சமுகத்தில் பெரும் பான்மை என்ன செய்கின்றனரோ அது போல செயல் பட வேணும் அதை விடுத்து காவாலி போல நட்ப்பது ஏற்று கொள்ள முஇயாது ...பொது வாழக்கைக்கு வராத நபர் எதுவும் செய்யலாம் ..ஆனால் மக்களின் வாக்கு பெற்று வந்த நபர் மக்களின் விருப்பப்படி நட்க்க வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

நான் இங்கே கதைப்பது  உணவகத்தில்.  நடந்தது சரியா ???அல்லது பிழையா   ??? என்பதை   மட்டும் தான்    

அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே 

வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல 

ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும்.  

அர்ச்சுனா   இந்த ரவுடிகளுடன்.  கதைக்கவில்லை   இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் 

அதற்கு அர்ச்சுனா   நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும்    

குறிப்பு,...ஜேர்மனியில்   சாப்பிட உணவகளுக்கு போனால்   நல்ல முறையில் வரவேற்று   மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள்    எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

பீங்கான் கோப்பைகள் அநியாயம். பேஸ்புக்கில் ஒரு மொமன்ற் பார்த்தேன். முள்ளு கரண்டியால் ஜேர்மன் மொட்டை பாஸ் கு**யில் நல்ல குத்து கொடுத்து இருக்கலாம். 

சிறியருக்கு இந்த தாடியை தெரியுமோ?

நியாயம்… எனக்கு இந்தத் தாடியை தெரியாது.
இப்படிப் பட்ட கீழ்த்தரமான  குணநலன் உள்ளவர்கள் எனது நண்பர் வட்டத்தில் இல்லை.
ஜேர்மனியில் வசித்தும்…. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மற்றவனின் மேசையில் போய் காவாலித்தனம் செய்யும் தாடிக்கும், நான்கு போட்டு அனுப்பியிருக்கலாம். 
தாடியருக்கு விழ வேண்டிய அடி, மாறி அவரின் சாரதிக்கு விழுந்திட்டுது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் இந்த உணவகத்திற்கு சென்று கையோடு கொண்டு செல்ல உணவு வாங்கிய போது,.. ஒன்றிற்கு சம்பல் வைத்து இன்னொன்றிற்கு வைக்காமல் அனுப்பினவை. வீட்ட போய் பார்த்த போது தான் விளங்கியது இவர்களின் தில்லாலங்கடி.

இங்க வாற கூட்டம் எல்லாமே ஒரு மாதிரியாத்தான் இருக்குது.

வலம்புரி….  தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.
தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

வலம்புரி….  தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.
தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள்.

இரண்டும் ஒன்று தான் அதாவது ஒரே முகாமைத்துவத்தின் கீழ் வருகின்றது ...உணவகம் நல்லது நானும்... இரண்டு மூன்று தடவை நண்பர்களுடன் சென்று உணவு மற்றும் உற்சாக பாணம் அருந்தியுள்ளேன்.. .

முன்னாள் போராட்ட அமைப்புக்களில் இருந்தவர்களின் ஹொட்டல் என  ஆரம்ப காலத்தில் பேசப்பட்டது உண்மை பொய் தெரியவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

தகவலுக்கு நன்றி புத்தன். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

நியாயம்… எனக்கு இந்தத் தாடியை தெரியாது.
இப்படிப் பட்ட கீழ்த்தரமான  குணநலன் உள்ளவர்கள் எனது நண்பர் வட்டத்தில் இல்லை.
ஜேர்மனியில் வசித்தும்…. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மற்றவனின் மேசையில் போய் காவாலித்தனம் செய்யும் தாடிக்கும், நான்கு போட்டு அனுப்பியிருக்கலாம். 
தாடியருக்கு விழ வேண்டிய அடி, மாறி அவரின் சாரதிக்கு விழுந்திட்டுது போலுள்ளது.

34 minutes ago, Kandiah57 said:

நான் இங்கே கதைப்பது  உணவகத்தில்.  நடந்தது சரியா ???அல்லது பிழையா   ??? என்பதை   மட்டும் தான்    

அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே 

வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல 

ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும்.  

அர்ச்சுனா   இந்த ரவுடிகளுடன்.  கதைக்கவில்லை   இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் 

அதற்கு அர்ச்சுனா   நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும்    

குறிப்பு,...ஜேர்மனியில்   சாப்பிட உணவகளுக்கு போனால்   நல்ல முறையில் வரவேற்று   மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள்    எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை    

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு ...ஆனாலும் அதிகாரத்தை கையில் எடுத்து சண்டியன் போல நடந்து கொண்டது மிகவும் தப்பு ....சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கு தோழர்களின் பொலிஸ் படை 24 மணித்தியாலமும் தீயாக வேலை செய்கின்றனர் ...இவர் அந்த இடத்தை விட்டு அகன்று சென்று பொலிசை வரவழைத்து இருக்க வேணும்...
மற்றவனின் மூக்கு மட்டும் தான் கையை நீட்ட முடியும் ..இது தான் உலக சட்டம் ...சிறிலங்கன்ஸுக்கும் இது பொருந்தும் ...யாழ் மாவட்ட ஜெ.வி.பி ,எம்.பி இளங்குமரன் சுதந்திர கட்சியின் முன்னாள் எம்.பி யின் அப்பாவுக்கு சொன்ன வசனம்...... மருத்துவர்,எம்.பி இப்படி செய்தால் எப்படி சாமனியன் நடந்து கொள்வான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா தாக்குதல் சம்பவத்தில் புதிய திருப்பம் 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. 

கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cm75plsli003ddvw9cz288uwg

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பொலிஸ்காரனின்ட நேரம் வீணாக போனது தான் மிச்சம் ....அத்துடன் நாங்கள் உணர்ச்சி வசப்பட்டு கருத்து சொன்னதும் வேஸ்ட் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

நான் இங்கே கதைப்பது  உணவகத்தில்.  நடந்தது சரியா ???அல்லது பிழையா   ??? என்பதை   மட்டும் தான்    

அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே 

வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல 

ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும்.  

அர்ச்சுனா   இந்த ரவுடிகளுடன்.  கதைக்கவில்லை   இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் 

அதற்கு அர்ச்சுனா   நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும்    

குறிப்பு,...ஜேர்மனியில்   சாப்பிட உணவகளுக்கு போனால்   நல்ல முறையில் வரவேற்று   மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள்    எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை    

இதுவே வெளிநாடென்றால் அந்தக் கும்பலை சண்டை தொடங்க முதலே வெளியே தூக்கிப் போட்டிருப்பார்கள்.

சரி சண்டைக்குப் போனவர்கள் டாக்ரரை மடக்கியிருக்கலாமே?

தண்ணி ரேஸ்ருக்கு டாக்ரரும் தங்கமுமா கிடைத்தார்கள்.

கடைசியில் வாங்கிக்கட்டிக் கொண்டு ஜேர்மன் புறப்படுகிறார்கள்.

இந்தக் காவாலிகள் தான் ஊரில் உள்ளவர்களையும் பழுதாக்குகிறார்கள்.

அதைப்பற்றி யாரும் மூச்சுவிடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:
13 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் இந்த உணவகத்திற்கு சென்று கையோடு கொண்டு செல்ல உணவு வாங்கிய போது,.. ஒன்றிற்கு சம்பல் வைத்து இன்னொன்றிற்கு வைக்காமல் அனுப்பினவை. வீட்ட போய் பார்த்த போது தான் விளங்கியது இவர்களின் தில்லாலங்கடி.

இங்க வாற கூட்டம் எல்லாமே ஒரு மாதிரியாத்தான் இருக்குது.

வலம்புரி….  தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.
தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள்.

நானும் பிள்ளைகள் குடும்பமாக இந்த உணவகத்திற்கு போயிருந்தேன்.நல்ல சாப்பாடு நன்றாக கவனித்தார்கள்.நிறைய பேர் நிறைய சாப்பாடு எடுத்தபடியால் ஏதாவது சுத்துமாத்து விட்டிருப்பார்களோ என்று மருமகனிடம் பில்லைக் கொடுத்தேன்.எதிலும் தவறு இல்லை என்றார்.

வான் சாரதி தான் அமைதியாக குடும்பமாக இருந்து சாப்பிடக் கூடிய இடம் என்றார்.

பாவம் அவர் பக்கத்து மேசையில் போய் உட்காந்தார்.

தம்பி அமெரிக்காவில நானும் ரைவர் தான் என்று கட்டாயப்படுத்தி கூட்டியாந்தேன்.

9 hours ago, putthan said:

பொலிஸ்காரனின்ட நேரம் வீணாக போனது தான் மிச்சம் ....அத்துடன் நாங்கள் உணர்ச்சி வசப்பட்டு கருத்து சொன்னதும் வேஸ்ட் 

ஆரம்பத்தில் சமூகவலைத் தளங்கள் இவர் பின்னால் திரிந்து நன்றாக பணம் பண்ணினார்கள்.

இப்போ டாக்ரர் தனியே யுரியூப் தொடங்கியபடியால் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ் நிலையத்தில் அர்ச்சுனா எம்.பி. யும் மற்றைய தரப்பினரும் சமரசம்

15 FEB, 2025 | 09:59 AM
image

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. 

கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால் , அவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் போது , இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும் முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி இரு தரப்பினரும் சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து , இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்க்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/206723

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

ஆனால் மக்களின் வாக்கு பெற்று வந்த நபர் மக்களின் விருப்பப்படி நட்க்க வேண்டும்.

என் விருப்பப்படி நீ நடக்கவேண்டும் என வேண்டி வாக்குப் போடுவதிலும், ஒரு லஞ்ச ஊழல் தலைகாட்டுவதுபோல் தெரிகிறது. 🤔😝

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.