Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த வழக்கில் தற்போது சீமான் மீது எந்த காதலும் இல்லை குடும்ப பிரச்சனை திரைத்துறை பிரச்சனையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியது தெரிய வந்திருப்பதாக ஹைகோர்ட் கூறியிருக்கிறது….

நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்..

அந்த வழக்கைத்தான் ரத்து செய்ய முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மனுவை அண்மையிலே தள்ளுபடி செய்திருந்தது இந்த நிலையில்தான் அந்த வழக்கினுடைய விரிவான தீர்ப்பை நீதிபதி இளந்திரன் வழங்கி இருக்கிறார்..

அதுல வந்து மிரட்டலினுடைய அடிப்படையில சீமானுக்கு எதிரான புகாரை தான் நடிகை விஜலட்ச்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்று அவர் வந்து திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்..

குறிப்பாக இந்த பாலியல் வன்கொடைமை புகார் என்பது தீவிரமானது என்றும் அதை வந்து தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் மேலதி நீதி இளந்தரையன சுட்டிக்காட்டியிருக்கிறார்…

நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்..

சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரியவந்துள்ளதாகவும் அந்த தீர்ப்புல சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது..

வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனை காரணமாகத்தான் சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் என்றும் அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளதாகவும் அந்த நீதிபதி அந்த தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓணாண்டியாரின் புது அணுகுமுறை! எவனாவது வந்து எங்களை அடிக்க முதல் , நாமே ஒரு குச்சியை எடுத்து நமக்கு அடித்துக் கொண்டால்..!😂

  • கருத்துக்கள உறவுகள்

தாதாக்களின் அணுகுமுறை

ஒரு வலது குறைந்த மனிதனை பிடித்து அடிப்பது

எமக்கு ஏன் தேவையற்ற வேலை என்று ஒதுங்கிப்போகும் மக்கள் நிலையை சாதகமாக எடுத்து தனி தனியே மிரட்டுவது

சாதி ஏழை போன்ற காரணங்களை காட்டி அடுத்தவர்களை சுரண்டுவது

கருத்து பதியும் கருத்தை விட்டுவிட்டு

கருத்து பதிப்பவனை தாக்குவது மிரட்டுவது கேலிசெய்து மீண்டும் இங்கு அவர்கள் வராது கருத்து பகிராமல் பார்த்து கொள்வது

கல்வி அறிவு இருந்தால் ஒரு மருத்துவ ஆய்வு செய்து ஒரு மருந்தை கண்டுபிடிக்கலாம் வியாதியை குணமாக்கலாம் அதுக்கு வக்கு அற்றவர்கள் என்றால் என்ன செய்யலாம்? யாராவது இரண்டு மூடர்களை துணைக்கு வைத்துக்கொண்டு நான்தான் அறிவாளி என்று நாடகம் போடலாம்

இந்த யாழ்களத்தில் பல நூறு பேர்கள் விலகி போன பின்பும்

நிர்வாகம் இவ்வாறான தனிமனித தாக்குதலுக்கு உடன்பாடாகவே இருக்கிறது

இங்கு ஓணாண்டி என்பவர் எதோ ஒரு பதிவை பதிந்து இருக்கிறார்.

அது பற்றி எந்த கருத்தும் இல்லை அப்பட்டமாக அவர் மீது தனிமனித தாக்குதல் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த வழக்கில் தற்போது சீமான் மீது எந்த காதலும் இல்லை குடும்ப பிரச்சனை திரைத்துறை பிரச்சனையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியது தெரிய வந்திருப்பதாக ஹைகோர்ட் கூறியிருக்கிறது….

நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்..

அந்த வழக்கைத்தான் ரத்து செய்ய முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மனுவை அண்மையிலே தள்ளுபடி செய்திருந்தது இந்த நிலையில்தான் அந்த வழக்கினுடைய விரிவான தீர்ப்பை நீதிபதி இளந்திரன் வழங்கி இருக்கிறார்..

அதுல வந்து மிரட்டலினுடைய அடிப்படையில சீமானுக்கு எதிரான புகாரை தான் நடிகை விஜலட்ச்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்று அவர் வந்து திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்..

குறிப்பாக இந்த பாலியல் வன்கொடைமை புகார் என்பது தீவிரமானது என்றும் அதை வந்து தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் மேலதி நீதி இளந்தரையன சுட்டிக்காட்டியிருக்கிறார்…

நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்..

சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரியவந்துள்ளதாகவும் அந்த தீர்ப்புல சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது..

வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனை காரணமாகத்தான் சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் என்றும் அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளதாகவும் அந்த நீதிபதி அந்த தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்..

ஓணாண்டி சார் நீங்க எப்ப சார் நிருபர் ஆகினீங்க 🤣.

தமிழக செய்தி பகுதியில் என்ன இணைக்க வேண்டும் என்ற நிர்வாக அறிவிப்பை மீளத்தருகிறேன்.


தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.


இப்படியான யூடியூப் வியாக்கியாங்களை அதற்குரிய இடத்தில் இணைத்து விடுங்கள்.

3 hours ago, Maruthankerny said:

தாதாக்களின் அணுகுமுறை

ஒரு வலது குறைந்த மனிதனை பிடித்து அடிப்பது

எமக்கு ஏன் தேவையற்ற வேலை என்று ஒதுங்கிப்போகும் மக்கள் நிலையை சாதகமாக எடுத்து தனி தனியே மிரட்டுவது

சாதி ஏழை போன்ற காரணங்களை காட்டி அடுத்தவர்களை சுரண்டுவது

கருத்து பதியும் கருத்தை விட்டுவிட்டு

கருத்து பதிப்பவனை தாக்குவது மிரட்டுவது கேலிசெய்து மீண்டும் இங்கு அவர்கள் வராது கருத்து பகிராமல் பார்த்து கொள்வது

கல்வி அறிவு இருந்தால் ஒரு மருத்துவ ஆய்வு செய்து ஒரு மருந்தை கண்டுபிடிக்கலாம் வியாதியை குணமாக்கலாம் அதுக்கு வக்கு அற்றவர்கள் என்றால் என்ன செய்யலாம்? யாராவது இரண்டு மூடர்களை துணைக்கு வைத்துக்கொண்டு நான்தான் அறிவாளி என்று நாடகம் போடலாம்

இந்த யாழ்களத்தில் பல நூறு பேர்கள் விலகி போன பின்பும்

நிர்வாகம் இவ்வாறான தனிமனித தாக்குதலுக்கு உடன்பாடாகவே இருக்கிறது

இங்கு ஓணாண்டி என்பவர் எதோ ஒரு பதிவை பதிந்து இருக்கிறார்.

அது பற்றி எந்த கருத்தும் இல்லை அப்பட்டமாக அவர் மீது தனிமனித தாக்குதல் நடக்கிறது

🤣🤣🤣🤣

ஓணாண்டிக்கும், ஜஸ்டினுக்கும் இருக்கும் உறவு நிலை புரியாமல்…

குறுக்கமறுக்கா ஓடி கொண்டு…

நிர்வாகம் மீது புகார் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டலால் சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி : உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

22 Feb 2025, 10:15 AM

seeman vijayalakshmi case judgement

மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு புகார் அளித்தார். சீமான் மீது கடந்த ஆண்டும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

ஆனால், வழக்கை திடீரென வாபஸ் பெற்றுக் கொண்ட விஜயலட்சுமி, இனி தான் சென்னைக்கே வர மாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்தார்.

தனது மனுவில், “2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதன் பேரில் வழக்கு விசாரணையை காவல் துறையினர் முடித்து வைத்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சீமானின் மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், “மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் என்பது தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத் துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர்.

சீமான் வற்புறுத்தியதால் தான் ஆறு முறை கருக்கலைப்பு செய்தேன் எனவும், தன்னிடம் இருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/political-news/seeman-vijayalakshmi-case-judgement/

  • கருத்துக்கள உறவுகள்

12 வாரம், 15 சாட்சிகள்: சீமான் கைது செய்யப்படுவாரா? நடிகை வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன?

சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 23 பிப்ரவரி 2025, 03:20 GMT

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 17) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 12 வாரங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"சீமான் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை விசாரணை அதிகாரியே முடிவு செய்வார்," என்று கூறுகிறார் அரசு வழக்கறிஞர்.

ஆனால், சீமானுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் திட்டத்துடன் மாநில அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்துகிறது.

சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் என்ன ஆகும்? உத்தரவில் நீதிபதி சொன்னது என்ன?

சீமான் மீதான வழக்கின் பின்னணி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு நடிகை ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு சீமான் ஏமாற்றி விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417, 420, 354, 376, 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக வீடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து, வழக்கின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், கணவன்-மனைவியாக தானும் சீமானும் வாழ்ந்ததாகவும் இதனால் தான் ஏழு முறை கர்ப்பமானதாகவும் அதை மாத்திரை மூலம் சீமான் கலைக்கச் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

திரைத்துறை மூலம் சம்பாதித்துச் சேமித்து வைத்திருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை சீமான் எடுத்துக் கொண்டதாகவும் புகார் மனுவில் நடிகை கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த சீமான், அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தல் பணியில் இருந்து தன்னை திசை திருப்புவதற்காகவும் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த புகார் மீது அண்ணா நகர் காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். புகார் அளித்த நடிகையின் வாக்குமூலம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

தனக்கு கருக்கலைப்பு நடந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 17) வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் சீமான் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இளந்திரையன் விரிவான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதில், "தங்கையின் குடும்ப விவகாரம் மற்றும் திரைத்துறை பிரச்னைகள் தொடர்பாக சீமானை நடிகை சந்தித்துள்ளார். அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதால் இருவருக்கும் இடையில் உறவு ஏற்பட்டுள்ளது. ஆனால், திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிய போது பல்வேறு மிரட்டல்களை அவர் எதிர்கொண்டுள்ளார்" என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

'ஒருமித்த உறவு தவறல்ல'

சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த வழக்கில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சித் தலைவராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் உள்ள சீமான் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய நடிகை, 2023ஆம் ஆண்டில் மீண்டும் தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் ஒன்றை கொடுத்ததாக குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வருமாறு சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அவரும் விசாரணைக்கு ஆஜராகி புகார் மனு வாபஸ் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியதாக சீமானின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த எஃப்.ஐ.ஆர், 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட சீமானின் வழக்கறிஞர், "இருவருக்கும் இடையே பரஸ்பர சம்மதத்தின் பேரில்தான் உறவு (consensual sex) இருந்துள்ளது. இது தவறல்ல என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது" என்றார்.

15 சாட்சிகள் வாக்குமூலம்

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அளித்த கடிதம் விசாரணை அதிகாரிக்குச் சென்று சேரவில்லை எனக் கூறினார்.

வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளதாகவும் இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீஸ் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீமான் மீதான புகாரை வாபஸ் பெற விரும்பவில்லை என விசாரணை அதிகாரிக்கு வாட்ஸ் ஆப் மூலமாக நடிகை தகவல் அனுப்பியுள்ளதாகவும் முகிலன் தெரிவித்தார்.

நீதிபதி உத்தரவில் என்ன உள்ளது?

சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது சீமான் மீது நடிகைக்கு எந்தக் காதலும் இல்லை. குடும்பப் பிரச்னை மற்றும் திரைத்துறை பிரச்னை தொடர்பாகவே அணுகியதாகக் குறிப்பிட்டார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு அதன்படி நடந்து கொள்ளாததால் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் ஆறு முதல் ஏழு முறை வரை கருக்கலைப்பு செய்துள்ளார். அவரிடம் இருந்து அதிக தொகையை சீமான் வாங்கியுள்ளதாக கூறுகிறார்," என்று தெரிவித்தார்.

"அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் கூறிய நீதிபதி, "மன ரீதியாக கடும் பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகார் மனுவை அவர் வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" என்றார்.

அந்த வகையில், "சீமான் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறிய நீதிபதி, " 12 வாரங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

"வழக்கின் அடுத்தகட்டம் என்ன?" என குற்றவியல் வழக்குகளுக்கான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் முகிலனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"நீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்து இறுதி அறிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முகிலன், "அவர் வழக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம். அதை நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்" என்றார்.

"வழக்கின் முடிவில் சீமான் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முடியும்" எனக் கூறும் முகிலன், "என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் புலனாய்வு அதிகாரியே முடிவு செய்வார்" எனக் கூறினார்.

'கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பேசப்பட்டு வருகிறதே?' என்ற போது, "இதுவே தாமதம்தான். அதை நீதிபதியும் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்" என்றார் முகிலன்.

"சீமான் மீது என்ன நடவடிக்கை என்பது விசாரணை அதிகாரியின் எல்லைக்கு உட்பட்டது" எனக் கூறுகிறார், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கின் புலனாய்வை குறித்த நேரத்தில் முடிக்க முடியாவிட்டால் நீதிமன்றத்துக்கு காரணங்களைச் சொல்ல வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீமானைக் கைது செய்யலாம்" என்றார்.

"ஒருவர் புகாரை வாபஸ் வாங்கிவிட்டாலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் புலனாய்வை தொடர்ந்து நடத்தலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சி சொல்வது என்ன?

சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம்,EDUMBAVANAM KARTHIK/FB

ஆனால், இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் பார்வை வேறாக இருக்கிறது. சீமானை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் அவரது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் தி.மு.க ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்.

"தன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு கூறி நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெற முடியாது எனவும் முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார். இது இறுதி முடிவு அல்ல" எனக் கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கை வாபஸ் பெறுவதாக நடிகை பேசிய காணொளி தற்போதும் உள்ளது. ஆனால், அதற்கு மாறாக மக்கள் மத்தியில் சீமானுக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது" எனக் கூறினார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் தமிழர் கட்சி, சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டார்.

தி.மு.க-வுக்கு தொடர்பு உள்ளதா?

ஆனால், "இது இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான வழக்கு. இதற்கும் தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அந்த நடிகை மிரட்டப்பட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சீமான் மீதான புகாரை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது என நீதிபதி கூறுகிறார். இதில் தி.மு.க எங்கே வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்துக்கு சீமான்தான் சென்றார். தி.மு.க ஆட்சிக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93k7xgd2kyo

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

'ஒருமித்த உறவு தவறல்ல'

பக

இந்த எஃப்.ஐ.ஆர், 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட சீமானின் வழக்கறிஞர், "இருவருக்கும் இடையே பரஸ்பர சம்மதத்தின் பேரில்தான் உறவு (consensual sex) இருந்துள்ளது. இது தவறல்ல என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது" என்றார்.

ஆக சீமான் இப் பெண்ணுடன் வெறும் நட்புதான்

என்று சொன்னது எல்லாம்

பொய்யா கோபாலு?

வழக்கறிஞரே ஒப்புக் கொண்டு

விட்டார் சீமான்

இவ் நடிகையுடன் உடலுறவு

கொண்டவர் என.

இனி கருக்கலைப்பு செய்யச்

சொல்லியது உண்மை என்பார்.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்

சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கிஉள்ளனர். முதல்கட்டமாக வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.

விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் | Police summon Seeman in vijayalakshmi - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றே விளக்கம் கொடுத்த சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அன்றே விளக்கம் கொடுத்த சீமான்.

இது 2011ம் ஆண்டு காணொளி தாத்தா...............

நீங்க‌ள் முத‌லே சொன்ன‌து போல‌ விவாத‌த்தில் தேற்ற‌வ‌ன் அவ‌தூற‌ கையில் எடுப்பான் என்று..............திமுக்காவின் க‌ட‌சி ஆயுத‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமி................

அந்த‌ விஜ‌ய‌ல‌ச்சுமி க‌ட‌ந்த‌ 15 ஆண்டுக‌ளில் ப‌ட‌த்தாரிபாள‌ர் உட‌ன் தொட‌ர்பில் இருந்து இருக்கிறா

இன்னொரு ந‌டிக‌ர் காத‌லிச்சு ஏமாத்தி விட்டார் என‌ 2016க‌ளில் கொடுத்த‌ வாக்கு மூல‌ம் இருக்கு

ஒரு வ‌ரியில் விஜ‌யல‌ச்சுமிய‌ சொல்ல‌னும் என்றால் விப‌******

அது முன்னுக்கு பின் முர‌னா பேசும் ம‌ன‌ நோயாளி............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.