Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை வெள்ளி 11 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

CSK எதிர் KKR

18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • பிரபா

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • கிருபன்

  • அகஸ்தியன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? flamingo_1f9a9.webp

6 minutes ago, goshan_che said:

எனக்கு அப்பவே தெரியும் உவர் என்னை போல் “down to earth” ஆன ஆள் இல்லை என்பது🤣.

கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.

  • Replies 3.3k
  • Views 98.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

RCBயின் பந்து வீச்சுதான் எப்போதுமே அவர்களின் பிரச்சனை. Hazlewood அதனை நிவர்த்தி செய்கிறார் என்று பார்த்தால், இன்று எல்லாமே தலைகீழ். அவர்கள் கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுவே.

5 minutes ago, vasee said:

கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.

அவருக்குத் தெரியும். எப்போ புள்ளிவைக்க வேணும் என்று. புள்ளி கூடக் கூட அவரின் தலை இங்கே அடிக்கடி தென்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.

இல்லை என நினைக்கிறேன்.

அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்?

அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்….

கோஷானின் நிலை👇🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • பிரபா

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • கிருபன்

  • அகஸ்தியன்

நாளைக்கு பாண்டவர்களுக்கே வெற்றி 😂

நான் இருக்கும் அணி கடந்த ஒன்பது விளையாட்டுக்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கந்தப்பு said:

இந்த போட்டியில் பங்களூர் அணி வென்றால் எனக்கும் கோஷான் சேக்கும் ஒரே புள்ளிகள் 😳. மிச்சல் சார்க், கே எல் ராகுல் - நீங்கள் தான் என்னைகாப்பாற்றவேண்டும். இன்று 100% வீதம் காயத்தில் இருந்து குணமடைந்தால் நடராஜனும் டெல்கிக்கு சிலவேளை விளையாடலாம் என நினைக்கிறேன்.

கே எல் ராகுல் என்னைக்காப்பாற்றி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சென்னை அணியினை புறந்தள்ள முடியாது அவர்கள் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.

அப்படி போடுங்க அரிவாளை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கந்தப்பு said:

பெங்களூர் அணி சென்ற ஐபிஎல்லில் (2024) சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் பெரிதாக வெல்லவில்லை.

இம்முறை பெங்களூர் அணி சொந்த மண்ணில் விளையாடிய 2 போட்டிகளும் தோல்வி. இரண்டு போட்டிகளிலும் பங்களூர் அணி முதலில்தான் துடுப்பாடியது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள்.

சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)

அப்பவே இந்த கூட்டம் சரியில்லை என்றேன்.

ஒருவரும் கவனிக்கவில்லை.

3 hours ago, ரசோதரன் said:

🤣...................

சுவி ஐயா - நந்தன் இந்தக் கூட்டணி நிலையானது போல........... புலவர்/செம்பாட்டான்/ரசோதரன் என்று மூன்றாவதாக ஒருவர் முறை வைத்து சேர்ந்து கொள்கின்றார்.....................😜.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இது பழைய செய்தி, ஆனால் அந்த ஊகங்கள் வந்த பின்னர் ருத்துராஜ் விளையாடியிருந்தார், அல்லது இது பரீட்சைக்கு முதலே பேப்பரை லீக்காக்கி விட்டார்களோ?🤣

மார்ச் 30 இல் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் Tushar Deshpand வீசிய பந்து முழங்கையில்( unprotected elbow) பட்டதால் வலியுடன் ருத்துராஜ் விளையாடி 63 ஓட்டங்கள் பெற்றார். இதனால் பிறகு வந்த போட்டி ஒன்றில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என செய்திகள் வந்தது. பிறகு டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக வலியுடன் விளையாடினார். பிறகு எக்ஸ்ரே(X ray), எம் ஆர் ஐ ( MRI scan) எடுத்து பார்க்கும் போது முழங்கை எழுப்பில் சிறிய முறிவு (fracture in his elbow in the radial neck) ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவ்வருடம் ஐபிஎல்லில் ருத்துராஜ் அவர்கள் தொடர்ந்து விளையாடமாட்டார். இதனால் தோனி அணித்தலைவர் ஆகிறார். ( 2022 இல் சிலபோட்டிகளில் ஜடேஜா தலைமை வகித்தார். பெரும்பாலான போட்டிகள் தோல்வியில் முடிவடைந்தன.)

ருத்துராஜின் இடத்தில் இன்று யார் விளையாடபோகிறார்? மறுபடியும் ராகுல் திருப்பதியா? ராகுல் திருப்பதி 2024 ஐபிஎல்லில் SRH அணியில் 3 வது இடத்தில் துடுப்பாடினார் . அதில் சிறப்பாக விளையாடினார். ஆனால் சென்னை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடினார். அதில் பெரிதாக அடிக்கவில்லை.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்படி போடுங்க அரிவாளை.

இப்பவும் லோகம் நம்பிக் கொண்டிருக்கோ.

1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்பவே இந்த கூட்டம் சரியில்லை என்றேன்.

ஒருவரும் கவனிக்கவில்லை.

நீங்கள் என்னைக் கரைசேக்கிறதில் மும்முரமா இருந்ததால, இதைக் கோட்டை விட்டிட்டியல் போல. இப்ப பாருங்கோ அவர்களின் பாய்ச்சலை. படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. கேட்டியலா கேட்டியலா கேட்டியலா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

நாளைக்கு பாண்டவர்களுக்கே வெற்றி 😂

நான் இருக்கும் அணி கடந்த ஒன்பது விளையாட்டுக்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது🤣😂

வாத்தியார் கவலைப்படவேண்டாம். நானும் 14 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றேன். ஆனால் கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் வென்றிருக்கிறேன். நல்ல சுண்டலும் இரசித்து சாப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

நீங்கள் என்னைக் கரைசேக்கிறதில் மும்முரமா இருந்ததால, இதைக் கோட்டை விட்டிட்டியல் போல. இப்ப பாருங்கோ அவர்களின் பாய்ச்சலை. படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. கேட்டியலா கேட்டியலா கேட்டியலா

கொஞ்சம் பொறுங்கோ.

சினைப்பர் தாக்குதல் என்றால் ஒண்ணொண்ணாத்தான் விழுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.

நானும் சென்னையை தெரிவு செய்துள்ளேன். ஆனால் சென்னை அணியில் அதிக ஓட்டங்கள் பெற்ற ருத்துராஜ் இனி விளையாடமாட்டார். மீண்டும் எனக்கு சோதனை. ஆனால் தோனி இனி அணித்தலைவர் . சென்னை தொடர் வெற்றிகளை குவிக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கோ.

சினைப்பர் தாக்குதல் என்றால் ஒண்ணொண்ணாத்தான் விழுத்தலாம்.

உங்கட குறி தப்பாது என்று...... அந்த வடையைச் சுட்டது யார் என்று ஆராய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

நானும் சென்னையை தெரிவு செய்துள்ளேன். ஆனால் சென்னை அணியில் அதிக ஓட்டங்கள் பெற்ற ருத்துராஜ் இனி விளையாடமாட்டார். மீண்டும் எனக்கு சோதனை. ஆனால் தோனி இனி அணித்தலைவர் . சென்னை தொடர் வெற்றிகளை குவிக்குமா?

இதற்காகத்தான் ..மவுன விரதம் இருக்கின்றேன்😅

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

நானும் சென்னையை தெரிவு செய்துள்ளேன். ஆனால் சென்னை அணியில் அதிக ஓட்டங்கள் பெற்ற ருத்துராஜ் இனி விளையாடமாட்டார். மீண்டும் எனக்கு சோதனை. ஆனால் தோனி இனி அணித்தலைவர் . சென்னை தொடர் வெற்றிகளை குவிக்குமா?

Pitch and conditions

The Chepauk surface continues to be a mystery, with CSK coach Stephen Fleming saying that they haven't been able to come to grips with it in recent years. The weather is expected to be clear.

இறுதியாக நடைபெற்ற போட்டியில் சென்னை சிகப்பு ஆடுகளத்தினை பயன்படுத்தியிருந்ததாக நினைவுள்ளது அதில் 180 -190 ஓட்டங்களுக்குரியதாக காணப்பட்டது.

அதே ஆடுகளத்தினை பயன்படுத்தினால் ஆடுகளம் 175 -185 ஓட்டத்திற்குரியதாக இருக்கும் அல்லது வேறு சிகப்பு மண் ஆடுகளத்தினை பயன் படுத்திகிறார்களோ தெரியவில்லை.

ஆனால் சிகப்பு ஆடுகளம் சென்னை காலநிலையின் படி மைதான ஈரலிப்பு காணப்படாது என கருதுகிறேன், மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் இரண்டாவதாக ஓட்டத்தினை துரத்துவது கடினமாகும் (ஆடுகளம் விரவாக உடையும் more gripp and slow), அதனால் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடுவார்கள்.

இரண்டு அணிகளிலும் சுழல்பந்து வீச்சாளர்களின் தாக்கம் இருக்கும், வேகப்பந்து வீச்சிற்கு புதிய பந்து சாதகமாகவும் சிகப்பு ஆடுகளத்திற்குரிய பந்து உயர்ந்து வரும் நிலை காணப்படலாம், சென்னை எந்த ஆடுகளத்தினை பயன்படுத்த போகிறது என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

2 மாதகால போட்டியில் ஆடுகளம் மெதுவாகிவிடும் அது இயல்பாக சென்னை அணிக்கு சாதகம், மெதுவான ஆடுகளத்திற்கு ஏற்ப அணியினை சென்னை கொண்டுள்ளதால் சென்னை அணியினை புறந்தள்ள முடியாது அவர்கள் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.

வடிவேலு சொன்னமாதிரி "இந்தக்கூட்டம் இன்னுமா எங்களை நம்பிக்கொண்டிருக்கிறது"! ருட்ராஜ் இல்லாவிட்டால் சென்னைக்கு ஒழுங்கான பட்ஷ்மனே இல்லை! போதாக்குறைக்கு திரிப்பார்த்தியை மீண்டும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ இளம்வீரர்கள் சும்மா கதிரையை சூடேற்றிக்கொண்டிருக்கிறார்கள்! எல்லாம் சென்னை மோட்டு ரசிகர்கூட்டத்தை சொல்லவேண்டும்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எல்லாம் சென்னை மோட்டு ரசிகர்கூட்டத்தை சொல்லவேண்டும்!!

நாங்கள் இப்பவும் ரஜினி படம் என்னா “தலீவா” என்று தியேட்டர்வரை போய்க் கொண்டாடுகிறோம்! சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தோனி “தல”. அந்தக் கொண்டாட்டம் வற்றும் மட்டும் வயசாளி விளையாடுவார்😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

வடிவேலு சொன்னமாதிரி "இந்தக்கூட்டம் இன்னுமா எங்களை நம்பிக்கொண்டிருக்கிறது"! ருட்ராஜ் இல்லாவிட்டால் சென்னைக்கு ஒழுங்கான பட்ஷ்மனே இல்லை! போதாக்குறைக்கு திரிப்பார்த்தியை மீண்டும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ இளம்வீரர்கள் சும்மா கதிரையை சூடேற்றிக்கொண்டிருக்கிறார்கள்! எல்லாம் சென்னை மோட்டு ரசிகர்கூட்டத்தை சொல்லவேண்டும்!!

ருத்துராஜ் தொடக்க நிலை ஆட்டக்காரர் அவரது இடத்திற்கு ஒரு தொடக்க நிலை ஆட்டக்காரரான திருப்பாதிரியினைத்தான் மாற்றீடு செய்யமுடியும், அந்த இடத்தில் இடைநிலை ஆட்டக்காரரையோ அல்லது சகலதுறை ஆட்டக்காரரை இறக்க முடியாது.

பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்,அணிக்கூட்டணியினை (Team compination)விரும்பியவாறு மாற்றமுடியாது.

ஒவ்வொரு நில்லைக்கும் ஒரு மாற்றுவீரர் எனும் நிலையில், ஏதாவது காயம் ஏற்பட்டாலோ வீரர் சுயவீருப்பில் விலகினாலோ பயன்படுத்துவதற்காக உள்ள மாற்று வீரர்களை அந்த இடத்திற்கு மாற்ற முடியும்.

முதல்தர திட்டமிட்ட அணியில் பெரிதாக மாற்றம் செய்யமாட்டார்கள், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதை வாங்கத்தான் வேண்டும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

489845101_17917944162081165_903979573109

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ருத்துராஜ் தொடக்க நிலை ஆட்டக்காரர் அவரது இடத்திற்கு ஒரு தொடக்க நிலை ஆட்டக்காரரான திருப்பாதிரியினைத்தான் மாற்றீடு செய்யமுடியும், அந்த இடத்தில் இடைநிலை ஆட்டக்காரரையோ அல்லது சகலதுறை ஆட்டக்காரரை இறக்க முடியாது.

பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்,அணிக்கூட்டணியினை (Team compination)விரும்பியவாறு மாற்றமுடியாது.

ஒவ்வொரு நில்லைக்கும் ஒரு மாற்றுவீரர் எனும் நிலையில், ஏதாவது காயம் ஏற்பட்டாலோ வீரர் சுயவீருப்பில் விலகினாலோ பயன்படுத்துவதற்காக உள்ள மாற்று வீரர்களை அந்த இடத்திற்கு மாற்ற முடியும்.

முதல்தர திட்டமிட்ட அணியில் பெரிதாக மாற்றம் செய்யமாட்டார்கள், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதை வாங்கத்தான் வேண்டும்.🤣

உந்த வியாக்கியானம் எல்லாம் எனக்கும் தெரியும். நான் சொல்லவந்தது கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை எல்லாம் சொதப்பிய திருப்பார்த்தியைவிட இளம்வீரர் ஷைக் ரஷீத் ஐ விளையாடலாம் என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

KKR நாணயச் சுழற்சியில் வென்று கலைப்பதற்கு முடிவு செய்திருக்கினம்.

திரிப்பாதி விளையாடுகிறார்.

யாழ்களத்தின் விருப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்குது. ஆதலினால், சென்னை வெல்வது உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இரண்டு விக்கெட் போட்டுது. அடுத்த முட்டை ரெடி!

இதுக்கு சென்னை முதியோர் அணி என்றுதான் பெயர் வைக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுப்பர் சிங்கர் சீ சுப்பர கிங்ஸ் அதிரடி ஆட்டம் ஆடுதே.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஹா இரண்டு விக்கெட் போட்டுது. அடுத்த முட்டை ரெடி!

இதுக்கு சென்னை முதியோர் அணி என்றுதான் பெயர் வைக்கவேண்டும்!

மனத்த விட்டுடாதீங்க. சம்பவம் இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.