Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் இரண்டாம் இடத்தை. நிறத் தொப்பிகள் வெகு தூரத்தில் இல்லை. RCB பராக்

1.jpg

  • Replies 3.3k
  • Views 98.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செம்பாட்டான் said:

பாருங்கள் இரண்டாம் இடத்தை. நிறத் தொப்பிகள் வெகு தூரத்தில் இல்லை. RCB பராக்

1.jpg

சென்ற வருடம் முதலிடத்தில் விராட் கோலி. இம்முறையும் முதலிடம் பிடிப்பாரா? பிடித்தால் சிலருக்கு புள்ளிகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செம்பாட்டான் said:

பாருங்கள் இரண்டாம் இடத்தை. நிறத் தொப்பிகள் வெகு தூரத்தில் இல்லை. RCB பராக்

1.jpg

இன்றைக்கு ராஜஸ்தான் வென்றிருந்தால் அவருக்குத்தான் இங்கு சாத்துப்படி நடந்திருக்கும்.😂

விராட் கோலிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இன்றைக்கு ராஜஸ்தான் வென்றிருந்தால் அவருக்குத்தான் இங்கு சாத்துப்படி நடந்திருக்கும்.😂

விராட் கோலிக்கு.

இன்றைக்கு நின்று 100 அடிச்சிருக்க வேணும் என்று போட்டு உருட்டியிருக்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............

உங்களது வெற்றிக்கூட்டணிக்குள் புகுந்த கறுப்பு ஆடு நான் என நினைத்தேன்.🤣

1 minute ago, செம்பாட்டான் said:

இன்றைக்கு நின்று 100 அடிச்சிருக்க வேணும் என்று போட்டு உருட்டியிருக்க மாட்டோம்.

இல்லை மெதுவாக விளையாடினார் என (அப்படி ஒன்றும் இல்லை ஆனால் தோல்விக்கு யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்).🤣

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இன்று இரு அணிகளிலும் ஒருவரையும் குறை சொல்ல முடியாது. சின்னச் சின்ன கணங்கள் போட்டியின் போக்கை மாற்றிவிட்டது. இரு அணிகளிலும் நன்றாக முயற்சித்தார்கள். RCB ஒரு அடி முன்னுக்குப் போய்விட்டது. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லரின் அருமை புரியும்! அவரை தக்க வைக்காமல் ஹெட்மேயரையும் ஜூரோலையும் 11 கோடிக்கும் 14 கோடிக்கும் தக்க வச்சவை! அதை ராகுல் டிராவிட் சரியென்று வேற சொன்னவர்! டிராவிட் டெஸ்ட் டீமை கோச் பண்ணிறமாதிரி T20 டீமை கோச் பண்ணலாமென்று நினைக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

இப்போதுதான் ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லரின் அருமை புரியும்! அவரை தக்க வைக்காமல் ஹெட்மேயரையும் ஜூரோலையும் 11 கோடிக்கும் 14 கோடிக்கும் தக்க வச்சவை! அதை ராகுல் டிராவிட் சரியென்று வேற சொன்னவர்! டிராவிட் டெஸ்ட் டீமை கோச் பண்ணிறமாதிரி T20 டீமை கோச் பண்ணலாமென்று நினைக்கிறார்!

அந்த முடிவு சரியென்றே நினைக்கிறேன். பட்லர் இந்த வருசம் புதுசா விளையாடுறார். போன வருசம் முழுக்க அவற்ற சுதப்பல் பார்க்கேலையோ. இங்கிலாந்து அணி வாங்காத அடியா. அவர் தலைமைப் பொறுப்பிலும் இருந்து விலகிவிட்டார்.

அது எல்லாவற்றையும் வைத்துத்தான் ராஜஸ்தான் அந்த முடிவை எடுத்திருப்பினம் இல்லையா.

ஜுரல் நல்ல தெரிவுதான். இளம்பெடியன் வேற. 24 வயதுதான். இன்றைக்கு அவன் காட்டின காட்டு பார்த்தனீங்கள்தானே.

நம்ம சிம்ரன என்ன என்று சொல்லத் தெரியேல. மேற்கிந்தியதீவு வீரர்கள் இந்தமுறை நன்றாகவே இல்லை. அவர்கள் உலகம் முழுக்க விளையாடுற T20 போட்டிகளினால் இருக்கலாம். அங்கிருந்து வரும் வீரர்கள் அடித்துத் துவைக்கும் காலம் மலையேறிவிட்டது. கனகாலத்துக்கு காட்டடி அடிக்க முடியாது. உடல் பலம் மட்டும் போதாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இப்பிடிப் போடு எப்பிடிப் போறார் என்று பார்.

Edited by செம்பாட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 42வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராட் கோலியும் டேவ்தட் படிக்கலும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புயல்வேகத்தில் 49 ஓட்டங்களை எடுத்து சவாலான வெற்றி இலக்கை அடையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 18 ஓவர்கள் முடிவில் வெற்றிபெற 18 ஓட்டங்களே தேவைப்பட்டிருந்தது. எனினும் 19வது ஓவரில் ஜொஷ் ஹேஸல்வூட் இரு விக்கெட்டுகளையும், 20 ஓவரில் யஷ் தயால் ஒரு விக்கெட்டையும், இன்னொரு விக்கெட்டை ரண் அவுட் மூலமாகவும் அதிக ஓட்டங்களைக் கொடுக்காது எடுத்ததனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0719.jpeg

8 minutes ago, செம்பாட்டான் said:

அந்த முடிவு சரிமென்றே நினைக்கிறேன். பட்லர் இந்த வருசம் புதுசா விளையாடுறார். போன வருசம் முழுக்க அவற்ற சுதப்பல் பார்க்கேலையோ. இங்கிலாந்து அணி வாங்காத அடியா. அவர் தலைமைப் பொறுப்பிலும் இருந்து விலகிவிட்டார்.

அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪

  • கருத்துக்கள உறவுகள்

அட ..அல்வாயான் 5 ம் இடத்துக்கு வந்துவிட்டார்...மாந்திரீகம்...ஊரில் இருந்தே வேலை செய்யுது...

செம்பாட்டான் என்னை நம்பி ...இந்த மாந்திரிகரை பிடியுங்கோ...இன்னுமொரு 5 படிதான் உங்களுக்கு இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வெள்ளி 25 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

CSK எதிர் SRH

19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • வாதவூரான்

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • நந்தன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? black-bird_1f426-200d-2b1b.png

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, கிருபன் said:

அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪

அந்தக் கருமத்த மட்டும்தான் பாக்கேல. ஆனால் மற்ற எல்லா கிரிக்கட் போட்டியும் பார்ப்பேன். இந்தவாரம நடந்த பங்களேதேஷ் சிம்பாப்வே போட்டி கூட ஒவ்வொருநாளும் தொடரந்தனான். சிம்பாப்வே வென்றதில் மிக்க மகழ்ச்சி.

அனேகமா, ஜபில் இல் உள்ள எல்லா வீரர்களைப் பற்றியும் தெரியும்.

இந்த வருசம், அந்தக் கருமத்தையும் பார்க்க வைத்த சாபம் உங்களைத்தான் சாரும். போதையேறிக் கிடக்கு. விட முடியேல. இங்கே எழுதுவதற்காகவே பார்க்கிறன். வாசிக்கிறன். தேடுறேன். எனக்கு என்னதான் ஆச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

14 minutes ago, செம்பாட்டான் said:

ஜுரல் நல்ல தெரிவுதான். இளம்பெடியன் வேற. 24 வயதுதான். இன்றைக்கு அவன் காட்டின காட்டு பார்த்தனீங்கள்தானே.

நம்ம சிம்ரன என்ன என்று சொல்லத் தெரியேல. மேற்கிந்தியதீவு வீரர்கள் இந்தமுறை நன்றாகவே இல்லை. அவர்கள் உலகம் முழுக்க விளையாடுற T20 போட்டிகளினால் இருக்கலாம். அங்கிருந்து வரும் வீரர்கள் அடித்துத் துவைக்கும் காலம் மலையேறிவிட்டது. கனகாலத்துக்கு காட்டடி அடிக்க முடியாது. உடல் பலம் மட்டும் போதாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இப்பிடிப் போடு எப்பிடிப் போறார் என்று பார்.

ராஜஸ்தான் மிக இலகுவாக வெல்லவேண்டிய மூன்று போட்டிகளை தோற்றதற்கு காரணம் நல்ல பினிஷெர்ஸ் இல்லாததே! பராக், ஜுரேல்,ஹெட்மேயருக்கும், பட்லருக்கும் அதுதான் வித்தியாசம்! கோலிக்கு அடுத்தபடியாக பெஸ்ட் சேசர் படலர்தான்!!

ஜுரேலை ஏலத்தில் குறைந்த விலைக்கே எடுத்திருக்கலாம்!

ஜுரேல் ஆரம்பத்தில் மெதுவாக ஆடியதும் தோல்விக்கு ஒரு காரணம்! 34 பந்துகளில் 13 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை!

KKR வெங்கடேஷை 23 கோடிக்கு எடுத்து பில் சோல்ட்ட கோட்டை விட்ட மாதிரி!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • நந்தன்

black-bird_1f426-200d-2b1b.png

இந்தப் பறவை கிளியா அல்லது காகமா...........

இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

24 minutes ago, கிருபன் said:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • நந்தன்

இது யார் செய்த சதியோ😂

காத்து எங்கள் பக்கம் வீசுமா 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

இந்தப் பறவை கிளியா அல்லது காகமா...........

இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................

நாளைக்கு ஒரு முசுப்பாத்திப் போட்டி. கடைசி இரண்டு பேரும் கடைசியா வாறதுக்குப் போடும் போட்டி.

வழமை போல், நாம் தெரிவு செய்த அணியே வெல்லும். அதுவும் உங்கட கிளி இருக்கும் போது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரசோதரன் said:

இந்தப் பறவை கிளியா அல்லது காகமா...........

இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................

இது ஒரு கரும்பறவை! Game of Thrones இல் சித்துவேலைகள் செய்தமாதிரி நாளைக்கு CSK வெல்ல வாலாயம் செய்து விட்டுள்ளேன்🤪

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

அட ..அல்வாயான் 5 ம் இடத்துக்கு வந்துவிட்டார்...மாந்திரீகம்...ஊரில் இருந்தே வேலை செய்யுது...

செம்பாட்டான் என்னை நம்பி ...இந்த மாந்திரிகரை பிடியுங்கோ...இன்னுமொரு 5 படிதான் உங்களுக்கு இருக்கு

ஒண்ணு ஓண்ணாத் தூக்கிறம். ஒருக்கா ஓதிவிடச் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

எனது மகள் ஒரு சி ஸ் கே பைத்தியம் அது கானுமே நான் மிதிபட☹️

அடுத்த போட்டியில் உதவிக்கு வேறு யாரையாவது பிடியுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

இந்தப் பறவை கிளியா அல்லது காகமா...........

இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................

கிளிக்கு அலுவல் பார்த்தாச்சு.

இனி உங்க பாடு திண்டாட்டம் தான்.

3 hours ago, ரசோதரன் said:

விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

இது ஒரு கரும்பறவை! Game of Thrones இல் சித்துவேலைகள் செய்தமாதிரி நாளைக்கு CSK வெல்ல வாலாயம் செய்து விட்டுள்ளேன்🤪

உங்கள் வாலாயம் நாளை வேலை செய்யுதோ இல்லையோ நாங்கள் ஏவி விட்டது கடந்த இரு நாட்களாக கடுமையாக வேலை செய்தது

நாளையும் வேலை செய்யும் 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Eppothum Thamizhan said:

ராஜஸ்தான் மிக இலகுவாக வெல்லவேண்டிய மூன்று போட்டிகளை தோற்றதற்கு காரணம் நல்ல பினிஷெர்ஸ் இல்லாததே! பராக், ஜுரேல்,ஹெட்மேயருக்கும், பட்லருக்கும் அதுதான் வித்தியாசம்! கோலிக்கு அடுத்தபடியாக பெஸ்ட் சேசர் படலர்தான்!!

ஜுரேலை ஏலத்தில் குறைந்த விலைக்கே எடுத்திருக்கலாம்!

ஜுரேல் ஆரம்பத்தில் மெதுவாக ஆடியதும் தோல்விக்கு ஒரு காரணம்! 34 பந்துகளில் 13 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை!

KKR வெங்கடேஷை 23 கோடிக்கு எடுத்து பில் சோல்ட்ட கோட்டை விட்ட மாதிரி!

அந்த "பினிஷர்" பட்லரத்தான் இங்கிலாந்து அணியும் தேடிக்கொண்டிருக்கினம். கண்டா போகச்சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வாத்தியார் said:

இது யார் செய்த சதியோ😂

காத்து எங்கள் பக்கம் வீசுமா 😂

இது ஒரு இராஜதந்திர நகர்வு,நெடுக நந்தனோடு கூட்டுச்சேர்ந்து ஆரம்பத்தில் புள்ளிகளை எடுத்தாலும் இப்ப 3,4 போட்டிகள் தொடரச்சியாகத் தோல்வி.அதுதான் நந்தனைக் கழட்டி விட்டு அணிமாறியிருக்கிறன்.போனாப்போகுது வந்தால் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இது ஒரு கரும்பறவை! Game of Thrones இல் சித்துவேலைகள் செய்தமாதிரி நாளைக்கு CSK வெல்ல வாலாயம் செய்து விட்டுள்ளேன்🤪

CSK க்காக GoT எல்லாம் கூப்பிட்டுக் கொண்டு. அப்பிடி என்டாலும் ட்ராகன் ஒண்ட விட்டாலும் பரவாயில்லை.

இன்னுமா லோகம் CSK வை நம்பிக் கொண்டிருக்கு. உபிசி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.