Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை பாத்துது. தாங்கள் எப்பிடியும் வெளியில தானே. இப்பிடி ஏதேன் ஏடா கூடமா செய்து பார்ப்போம். வந்தா மலை வராட்டி.....

ஆனா, நம்மளப் பத்தி நினைச்சுப் பார்த்தாங்களா. அவங்களத் தெரிவு செய்து போட்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறம்.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

495540452_1000469368918364_1613095318470

சென்னைக்கு மூக்குக்கு மேலே வெள்ளம் போயிட்டுது இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன இரண்டும் ஒன்றுதான் . .......... இப்பதான் வந்து விளையாட்டைப் பார்க்கிறன் தலை சுத்திச்சுது ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

சென்னையை விட்டு பாய்ஞ்சிட்டனா?! நம்பமுடியவில்லை!

எல்லா சென்னை பக்தாலும் இன்று ஒரு மார்க்கத்தோடதான் இருக்கிறியல்

இதுக்காக என்டாலும் சென்னை வெல்லவேணும்😄

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லேல. சென்னை இன்றைக்கு ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கிறாங்கள். பிராவிஸ் போட்டுப் பிளந்துவிட்டுப் போயிருக்கான்

  • கருத்துக்கள உறவுகள்

Come on luckey 7

என்ன புலி பதுங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போம் இருவரும் என்ன செய்கினம் என்று. இப்போ வெல்ல வேண்டிய போட்டி இது. தேவையில்லாமல் பந்துகளைத் தின்று, அழுத்தத்தைக் கூட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கு சிங் மீண்டும் தனது களத்தடுப்பைக் காட்டுறான். இப்ப என்ன கதை

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல்.

1 hour ago, செம்பாட்டான் said:

எல்லா சென்னை பக்தாலும் இன்று ஒரு மார்க்கத்தோடதான் இருக்கிறியல்

இதுக்காக என்டாலும் சென்னை வெல்லவேணும்😄

சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல்.

சென்னையும் நாமும்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 57வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுனில் நாரைன், அங்கியா ரஹானே, மனிஷ் பாண்டே ஆகியோரின் 25 க்கு மேற்பட்ட ஓட்டங்களாலும் மற்றும் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்த அண்ட்ரே ரஸல்ஸினாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. நூர் அஹமெட் 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்திருந்தாலும், உர்வில் பட்டேலினதும், டெவால்ட் ப்ரெவிஸினதும் புயல்வேகத்தில் முறையே எடுத்த 31 ஓட்டங்களுடனும், 52 ஓட்டங்களுடனும், பின்னர் நிதானமாக விளையாடி 45 ஓட்டங்கள் எடுத்த ஷிவம் டுபேயின் ஆட்டத்தாலும் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0811.jpeg

@நந்தன் எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அரசாமல் நிற்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம்.

முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம்.

முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.

ஒதுங்கி இருந்த செம்பாட்டான்

இப்போ ஐபிஎல் க்குள்ளேயே கிடந்து பிரண்டு உருண்டு விளையாட்டுக் காட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒதுங்கி இருந்த செம்பாட்டான்

இப்போ ஐபிஎல் க்குள்ளேயே கிடந்து பிரண்டு உருண்டு விளையாட்டுக் காட்டுறார்.

எல்லாம் உங்களால தான். போதை ஏறினா என்ன நடக்கும் என்று நேர பார்க்கிறீர்கள். முடிவு பண்ணீட்டனென்றால் என் பேச்ச நானே கேக்கமாட்டன்.😆

இது எப்பிடியிருக்கு

meme1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வியாழன் 08 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

PBKS எதிர் DC

13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • வாதவூரான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? poodle_1f429.png

  • கருத்துக்கள உறவுகள்

தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய பாகிஸ்தான் பதற்றநிலையால் விமான போக்குவரத்துகளில் சில கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அது இந்த போட்டியினை பாதிக்கலாம் என கேள்விபட்டேன் உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ்

  • வாத்தியார்

நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும்

எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை

( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂

சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣

இப்படிக்கு உங்கள் தம்பி

இயங்காக் குமாரன் 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய பாகிஸ்தான் பதற்றநிலையால் விமான போக்குவரத்துகளில் சில கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அது இந்த போட்டியினை பாதிக்கலாம் என கேள்விபட்டேன் உண்மையா?

Cricinfo சொல்லுது நடக்கும் என்று. பார்ப்போம் என்ன என்று.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும்

எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை

( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂

சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣

இப்படிக்கு உங்கள் தம்பி

இயங்காக் குமாரன் 😜

வாத்தியாரின் வியாக்கியானங்கள் என்ற தலைப்பில நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போல. ஒரு திரிய திறந்து போட்டுத்தாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய பாகிஸ்தான் பதற்றநிலையால் விமான போக்குவரத்துகளில் சில கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அது இந்த போட்டியினை பாதிக்கலாம் என கேள்விபட்டேன் உண்மையா?

தரம்சலாவில் நடைபெற இருந்த 2 போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகளில் வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ipl2025.webp?resize=640%2C360&ssl=1

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில்,  ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது .

நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

எல்லையில் பதற்றம் - ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில்,  ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள...
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தரம்சலாவில் நடைபெற இருந்த 2 போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகளில் வாசித்த ஞாபகம்.

இன்றைய போட்டி தர்மசலாவில் திட்டமிட்டபடி நடைபெறும். எனினும் சிலவேளை மழை வந்து இப் போட்டியை குழப்பலாம் .

ஆனால் மும்பாய்க்கு எதிரான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

11 hours ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை வியாழன் 08 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

PBKS எதிர் DC

13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • வாதவூரான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? poodle_1f429.png

யாழ்கள ஐபிஎல் 2025 பதிவு 100 வது பக்கத்தினை தாண்டவுள்ளது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Pitch and conditions: Seam and swing on offer

It rained in Dharamsala on the eve of the game, delaying the teams' practice and there is a chance of rain on match day as well. With tensions escalating between India and Pakistan, the Dharamsala airport has been closed, but the match is set to be held as planned.

In the first game there this season, there was plenty of swing available, so new-ball bowlers are likely to play an important role, while spinners will have to deal with little assistance.

நாணய சுழற்சியில் வெல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் போல இருக்கிது!

  • கருத்துக்கள உறவுகள்

495159432_1252330952923529_5465572104457

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

496095313_1118591113394777_1816280578604

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஏன் அன்சுல் கம்போஜுக்கு முதல் நூர் அஹமட் வந்தவர் என்று யாருக்காவது தெரியுமோ??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.