Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Published By: Digital Desk 2

09 Mar, 2025 | 03:42 PM

image

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.

குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. 

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த யூடியூப்பருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த யூடியூப்பர் வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/208709

இவ‌ர் பெரிய‌ ர‌வுடி அண்ணா

ரிக்ரொக்கில் இவ‌ரை க‌ழுவி ஊத்தாத‌ ஆட்க‌ளே இல்லை

எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ளுக்கு இப்ப‌ த‌ன்னும் ந‌ல்ல‌ புத்தி வ‌ந்து இருக்கே என்று பெருமை ப‌ட‌னும்

இவ‌ர் ப‌ய‌ங்க‌ர‌ மோச‌டி வேலைக‌ள் செய்யும் ந‌ப‌ர்

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கைய‌ நாச‌ம் ஆக்கின‌ த‌றுத‌லை , இத‌ற்கான‌ ஆதார‌ம் என்னிட‌ம் இருக்கு👍

ஆர‌ம்ப‌த்தில் இவ‌ரின் காணொளிக‌ள் பார்ப்பேன் , இப்ப‌ பார்க்காம‌ விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது

இவ‌ன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் ஆளுக்கு ஒரு யூடுப் வைச்சு புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌த்தில் சொகுசு வாழ்க்கை வாழுகின‌ம் , இவேன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்குள் பிடிக்கும் ச‌ண்டைக‌ளை பொது வெளியில் கொண்டு வ‌ந்து போடுங்க‌ள்.........................

கிருஷ்னா ச‌ம்முக‌ சேவை செய்யும் நோக்கில் தொட‌ங்க‌ வில்லை த‌ன‌து ந‌ண்ப‌னை பார்த்து தானும் காசு உழைக்க‌லாம் என்று தொட‌ங்கின‌வ‌ன் , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் 1ல‌ச்ச‌ம் ரூபாய் கூட‌ இல்லாம‌ இருந்த‌வ‌னுக்கு , 2அர‌ வ‌ருட‌த்தில் இல‌ங்கை காசுக்கு 6 கோடி எப்ப‌டி வ‌ந்த‌து , ப‌ருத்திதுறையில் இவ‌ன் வேண்டின‌ கானி க‌ட்டின‌ வீட்டின் பொரும‌தி 6 கோடிக்கு மேலாம்...............இதை என‌க்கு சொன்ன‌து இவ‌னின் ஒன்ட‌ விட்ட‌ த‌ம்பி................இந்த‌ 6 , 7 கோடி வீட்டு க‌தை ரிக்ரோக்கிலும் ப‌ல‌ர் க‌தைச்சும் இருக்கின‌ம்

இவ‌னின் குள‌று ப‌டிக‌ளை சொன்னால் யாழ்ப்பாண‌த்தில் ர‌வுடிக‌ளை வைச்சு ஆட்க‌ளை மிர‌ட்டுவாராம்

இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு

பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைக்கும் வித‌ம் ச‌ரியே இல்லை அதுக‌ள் வ‌ள‌ந்து ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் வாழ‌ப் போர‌ பிள்ளைக‌ளை உத‌வி என்ர‌ பெய‌ரில் அதுக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தான் இந்த‌ பொம்பிளை பொருக்கியின் வேலை

பிடிச்ச‌ ம‌க்க‌ள் ஊமை குத்து குத்தி விட்டு காவ‌ல்துறையிட‌ம் பிடித்து கொடுத்து இருக்க‌னும்.................

ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இவ‌ன் ஒரு பிராடு😁................................

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

482239217_1052969656866408_2512067650909

பண்டத்தரிப்பில் வைத்து Youtuber கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்!!!

கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும்

ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்கும் காசை ம‌க்க‌ளிட‌த்தில் சென்று கொடுத்தார் ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல மாதிரி செய்து விட்டு இடையில் த‌ன‌து இன்னொரு முக‌த்தை காட்ட‌ அதோட‌ இவ‌ரை பல‌ர் வெறுக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்...............இப்ப‌ த‌ன‌து பாதுகாப்புக்காக‌ மூன்று பேருட‌ன் போய் தான் உத‌வி வீடியோ போடுறார் முந்தி த‌னி ஆளாய் சென்று கூட‌ உத‌வி வீடியோ போட்ட‌வ‌ர்....................வெளி நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌ங்க‌ளை இவ‌ர் சுருட்டி விட்டார் என்று ப‌ல‌ர் குற்ற‌ச் சாட்டு வைக்கின‌ம்.................

1000ரூபாய்க்கு வ‌ழி இல்லாம‌ இருந்த‌ இன்னொரு யூடுப்ப‌ர் இப்ப‌ 1கோடி 30 ல‌ச்ச‌த்துக்கு கானி வேண்ட‌ வெளிக்கிட்டு பிடி ப‌ட்டு போனார் , ஆட்க‌ளை வீடியோ பிடிச்சு போடுவ‌து பிற‌க்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அந்த‌ உத‌வி போய் சேருவ‌தில்லை ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்து ப‌ல‌ரை ஏமாற்றி விட்டார் அவ‌ர் வ‌சிப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் சிறி அண்ணா

விழிப்புன‌ர்வு தேவை புல‌ம் பெய‌ர் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு

இன்னொரு சின்ன‌ யூடுப்ப‌ர் வ‌ய‌தான‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ மூதாட்டிய‌ வீடியோ பிடிச்சு போட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் அந்த‌ யூடுப்ப‌ரை தொட‌ர்வு கொண்டு காசை கொடுத்த‌வை அந்த‌ மூதாட்டிக்கும் அவான்ட‌ ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளுக்கும் கொடுக்க‌ சொல்லி , வீடியோவில் காசை கொடுப்ப‌தை காட்டி விட்டு கொடுத்த‌ காசை திருப்ப வேண்டி விட்டு அந்த‌ இடத்தை விட்டு ஓடி விட்டார் ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் என்ற‌து போல் க‌ட‌சியில் பிடி ப‌ட்டு விட்டார்

அதே யூடுப்ப‌ர் மூல‌ம் க‌ன‌டாவில் வ‌சிக்கும் அண்ணா க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பெண் பிள்ளைக்கு 3ல‌ச்ச‌ம் அனுப்ப‌ , 3ல‌ச்ச‌த்தை அந்த‌ பிள்ளையிட‌ம் கொடுக்கிற‌ மாதிரி கொடுத்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌ம் காசை வேண்டி விட்டார்

காசு அனுப்பின‌ க‌ன‌டா அண்ணா ம‌ட்ட‌க்க‌ள‌ப்புக்கு வ‌ந்த‌ பிற‌க்கு அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா த‌ம்பி வெளியில் போயிட்டு வ‌ருவோம் என்று , இந்த‌ யூடுப்ப‌ர் உட‌ன‌ போக‌ அந்த‌ அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த‌ 3ல‌ச்ச‌ம் காசு கொடுத்த‌ பிள்ளையின் வீட்டை த‌ன்னை கூட்டிட்டு போக‌ சொல்லி , இந்த‌ யூடுப்ப‌வ‌ரும் கூட்டிட்டு போக‌ , க‌ன‌டா அண்ணா அந்த‌ பிள்ளையிட‌ம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் த‌ந்த‌வ‌ரா என்று அந்த‌ பிள்ளை உண்மைய‌ சொல்லிச்சு மூன்று ல‌ச்ச‌ம் த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கன‌டா அண்ணா அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலையே ந‌ல்ல‌ அடி கொடுத்தார்💪......................

இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌க்குது த‌மிழ் சிறி அண்ணா

இப்ப‌ ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் காசு பார்க்க‌ ப‌ல‌ர் கில‌ம்பிட்டின‌ம் , புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் வ‌லு க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும்

க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர் மார் மூல‌ம் உத‌வாம‌ல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கிய‌ வேண்டி விட்டு நேர‌டியா அவையின் வ‌ங்கிக்கு காசு அனுப்ப‌லாம் , அல்ல‌து தெரிந்த‌ ஊர் அல்ல‌து சொந்த‌ ஊர் என்றால் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்..........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ வ‌ய‌தான‌ அம்மாவை எவ‌ள‌வு கேவ‌ல‌ப் ப‌டுத்தி இருக்கிறார் இந்த‌ப் பிராடு

த‌ன‌க்கு த‌மிழ் வாசிக்க‌த் தெரியாதாம் அந்த‌ அம்மாவை வாசிக்க‌ட்டாம்

அந்த‌ அம்மா சொல்லுகிறா த‌ன‌க்கு க‌ண்பார்வை பெரிசா தெரியாது என‌.................

எப்ப‌டி எல்லாம் உத‌வி என்ர‌ பெய‌ரில் எங்க‌ட‌ ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துகிறான் இவ‌ன்.......................அந்த‌ லெட்ட‌ர‌ இவ‌னே வாசித்து இருக்க‌லாம் த‌ன‌க்கு த‌மிழ் தெரியாது என்று சொல்லுது....................இவனை என்ன‌ என்று சொல்வ‌து..........................அது ஒழுக்க‌மான‌ பிள்ளை போல் தெரியுது அல்ல‌து இந்த‌ கிருஷ்னாவின் பொருக்கித் த‌ன‌த்தை கேள்வி ப‌ட்ட‌ பிள்ளையா கூட‌ இருக்க‌லாம் அது தான் ப‌ய‌ந்து வீடியோவுக்கு வ‌ருதில்லை....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🔥தவறை உணர்ந்தாரா அவர்? 😳 இன்னொரு வீடியோ உள்ளே | TAMIL ADIYAN">யூ டியூப்பரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்🔥உள்ளே

|https://youtu.be/DOInoUr5JkE

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

🔥தவறை உணர்ந்தாரா அவர்? 😳 இன்னொரு வீடியோ உள்ளே | TAMIL ADIYAN">யூ டியூப்பரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்🔥உள்ளே

|https://youtu.be/DOInoUr5JkE

இவ‌ரை ப‌ற்றி நீங்க‌ள் போன‌ வ‌ருட‌மே யாழில் என்னை எழுத‌ சொன்னீங்க‌ள்

என்னால் யாழில் தேவை இல்லாம‌ பிர‌ச்ச‌னை வ‌ந்து விட‌க் கூடாது என்று நினைத்து

இந்த‌ கிருஷ்னா ப‌ற்றி எழுத‌ வில்லை....................எங்க‌ட‌ க‌ண்ணால் க‌ண்ட‌தை அடுத்த‌வ‌ர்க‌ள் ஆதார‌த்தோடு சொன்ன‌தை பார்க்க‌ எல்லாம் ச‌ரி என்று ப‌டுது............................

இவ‌ரின் கேலி கூத்துக‌ள் உருட்டு பிர‌ட்டுக‌ளை எழுதினால் எங்க‌ளை பொறாமையில் எழுதுது என்று சில‌ கூட்ட‌ம் வ‌ருங்க‌ள் , என‌து உட‌ம்பில் பொறாமை குன‌ம் சிறு துளி அள‌வு கூட‌ இல்லை , கிருஷான‌ ப‌ற்றி ரிக்ரொக்கில் இவ‌ரின் குள‌று ப‌டிக‌ள் வ‌ந்தால் அடுத்த‌வ‌ர்க‌ள் அதை பார்த்து திருந்த‌ட்டும் என்று ( ஒரு வ‌ரி இவ‌ன் க‌ள்ள‌ன் பிராடு ) இதோட‌ ச‌ரி இதுக்கு மிஞ்சி நான் ஏதும் எழுதின‌து கிடையாது ,

ப‌ல‌ர் இப்ப‌ விழிப்புன‌ர்வு அடைந்து விட்டின‌ம்....................................

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,…

காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட

இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்

வீர பையன் தொவித்த கருத்து பயன் உள்ளது நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்

க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர்களுக்கோ விஷ செடிக்கோ காசு அனுப்பாமல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கி கணக்கு இலக்கத்தை பெற்று நேர‌டியா அவர்களுக்கு காசு அனுப்ப‌லாம் அல்ல‌து தெரிந்த‌வர்கள் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்

3 hours ago, alvayan said:

TAMIL ADIYAN">யூ டியூப்பரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்🔥உள்ளே

தமிழ் அடியானிடம் நல்லாக விழுந்துவிட்டீர்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வீர பையன் தொவித்த கருத்து பயன் உள்ளது நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்

க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர்களுக்கோ விஷ செடிக்கோ காசு அனுப்பாமல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கி கணக்கு இலக்கத்தை பெற்று நேர‌டியா அவர்களுக்கு காசு அனுப்ப‌லாம் அல்ல‌து தெரிந்த‌வர்கள் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்

தமிழ் அடியானிடம் நல்லாக விழுந்துவிட்டீர்கள் 😄

என‌க்கு ஏழை ம‌க்க‌ளை காட்டி வ‌யிறு வ‌ள‌க்கும் க‌ள்ள‌ கூட்ட‌த்தை பிடிக்காது..................வ‌ய‌தான‌ எம் தாத்தா பாட்டி மாருக்கு யூடுப் என்றால் என்ன‌ என்று தெரியாது.....................ச‌ம்முக‌ சேவ்வை செய்ய‌ என்று இப்ப‌ ப‌ல‌ யூடுப்ப‌ர் தொட‌ங்கிட்டின‌ம் ..................ஒரு சில‌ர் ஒழுங்காய் செய்யின‌ம்...............கூடுத‌லான‌ ஆட்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்யின‌ம்.................................அந்த‌ நாட்டில் அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் மோச‌டி கும்ப‌ல்க‌ள் என்று பார்க்க‌ , புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ள் கொடுக்கும் காசை வேண்டி கொடுக்கிற‌தில் ப‌ல‌ திமிர் க‌தை ஓவ‌ர் வ‌ந்தா , ம‌ரியாதை இல்லாம‌ ந‌ட‌ந்து கொள்வ‌து , ஏதோ த‌ங்க‌ட‌ சொந்த‌ ப‌ண‌த்தை கொடுப்ப‌து போல் நினைப்பு , புல‌ம்பெய‌ர் நாட்டில் எங்க‌ட‌ உற‌வுக‌ள் க‌டும் குளிருக்கை போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு வேலை செய்து காசு அனுப்ப‌ , ஈழ‌த்து யூடுப்ப‌ர் மார்க‌ளில் தொல்லை பெரிய‌ தொல்லை

எங்க‌ட‌ உற‌வுக‌ள் நேர்மையா ஒழுக்க‌மாய் எதை செய்தாலும் பாராட்டுங்க‌ள்..................கிருஷ்னாவை ஆர‌ம்ப‌த்தில் ஊக்க‌ம் கொடுத்து வ‌ள‌த்து விட்ட‌வ‌ர்க‌ள் தான் ப‌ல‌ குற்ற‌ச் சாட்டுக்க‌ளை வைக்கின‌ம்.....................அந்த‌ பொண்ணு வீட்டை போய் த‌ன‌க்கு தமிழ் வாசிக்க‌த் தெரியாதாம் அந்த‌ அம்மாவை வாசிக்க‌ட்டாம் , அந்த‌ அம்மா சொல்லுறா த‌ன‌க்கு க‌ண் பார்வை குறைவு ச‌ரியா வாசிக்க‌ தெரியாது என்று , தாய் ம‌க‌ளை கூப்பிடுது அதை வாசிக்க‌ சொல்லி ம‌க‌ள் வெளிய‌ வ‌ர‌ மாட்டேன் என்று சொல்லுறா , கிருஷ்னா அந்த‌ அம்மாக்கு சொன்ன‌து ப‌ச்சை பொய் த‌ன‌க்கு த‌மிழ் வாசிக்க‌ வ‌ராது என்று ,

அந்த‌ பிள்ளை வீடியோவுக்கு வ‌ர‌ வில்லை என்று சொல்ல‌ நீ என்ன‌ யாரையாவ‌து காத‌லிக்கிறியா , நீ என்ன‌ அஸ்வ‌ர்யாவா....................இத‌னால் தான் கிருஷ்னாவை ப‌ல‌ர் வெறுக்கின‌ம்..........................ஒரு பொருள் வேனும் என்றால் உழைச்சு வாங்க‌னும்....................அந்த‌ப் ப‌ழ‌க்க‌ம் கிருஷ்னாவிட‌ம் இல்லை , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஓட்டுக்கு மேல‌ ஏறி நின்று கொண்டு போட்ட‌ காணொளிக‌ளை பாருங்கோ அவ‌ரின் உள் நோக்க‌ம் எப்ப‌டி என்று தெரியும்...................உந்த‌ கொரோனா வ‌ந்த‌ போதே எங்க‌ட‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ளை தாங்க‌ள் ஏதோ ஒரு வ‌கையில் கொண்டு ந‌ட‌த்தின‌வை தானே , 2009ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு ம‌ட்டும் எப்ப‌டி வாழ்ந்த‌வை................சரி எங்க‌ட‌ ம‌க்க‌ள் க‌ஸ்ர‌ப் ப‌டுகின‌ம் , கொடுக்கிர‌ 50ஆயிர‌ம் ஒரு ல‌ச்ச‌ம் சில‌ மாத‌ங்க‌ளில் முடிந்து விடும் அத‌ற்க்கு பிற‌க்கு என்ன‌ செய்வின‌ம் , எங்க‌ட‌ ம‌க்க‌ளுக்கு செய்ய‌ வேண்டிய‌து ஒன்றே ஒன்று தான் , கோழி வ‌ள‌க்க‌ அல்ல‌து விவ‌சாய‌ம் , ஆடு மாடு வ‌ள‌த்து அதில் வ‌ரும் வ‌ருமான‌த்தை கொண்டு அடுத்த‌ நிலைக்கு முன்னேற்ற‌னும்....................அதை விடுத்து சிறு ப‌ண‌த்தை கொடுத்தால் அது முடிந்த‌தும் ம‌று ப‌டியும் கை ஏந்த‌னுமா ,

இந்த‌க் கிழ‌மை ஒரு அக்காவின் காணொளி ஒன்று பார்த்தேன் அவான்ட‌ புருஷ‌ன் அவாவை விட்டுட்டு போட்டார் , அவான்ட‌ கானிக்கை விவ‌சாய‌ம் செய்து அதோட‌ கூலி வேலைக்கும் போய் த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் பார்க்கிறா

அந்த‌ அக்கா இருப்ப‌து ஓட்டை வீடு த‌ன‌து வீட்டை திருத்தி த‌ர‌ச் சொல்லி ப‌ருத்திதுறை யூடுப்ப‌ர‌ கேட்டு இருக்கிறா , சுவிஸ் நாட்டில் வ‌சிக்கும் அக்கா நேரில் அந்த‌ யூடுப்ப‌ருட‌ன் போய் காசு கொடுத்து உத‌வினா வீட்டு திட்ட‌த்துக்கு , இப்ப‌டி உத‌வி செய்வ‌து உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து🙏🥰.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் அடியானிடம் நல்லாக விழுந்துவிட்டீர்கள் 😄

இங்கையே முன்னுக்கே சொல்லிவிட்டேன் சார்...

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

பையன் சாரே...

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஓட்டுக்கு மேல‌ ஏறி நின்று கொண்டு போட்ட‌ காணொளிக‌ளை பாருங்கோ அவ‌ரின் உள் நோக்க‌ம் எப்ப‌டி என்று தெரியும்

3வது காணொளீ... பனங் காணிக்கை சின்ன காடை பொரித்து சாப்பிட்டது....நானு அவர் பான் தானுங்கோ...பின்னர் தகப்பன்,மருமக்கள் , சகோதரிகள்...மச்சான்மாருடன் சேர்ந்து செய்த உருட்டல்கள்..பணப்பறிப்புக்கள் .. வீடு காணி ஒரே ஏமாற்றல்...இப்படி தொடர்கதை

  • கருத்துக்கள உறவுகள்

ம், கிழக்கில் இருந்து ஒரு பெண் இவரிடம் உதவிகேட்டு ஒரு மேலதிக தேவையுடைய பிள்ளையுடன் வந்திருந்தார். அவரை இவர் சி. ஐ. டி. மாதிரி விசாரணை செய்கிறார். அவர் உண்மை சொன்னாரா பொய் சொன்னாரா என்று ஆராய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கக்கூடியதாக இருந்தது. அதனையும் பலர் பாராட்டியிருந்தனர். இவரே ஒரு ஏமாத்து, அதில விசாரிக்கிறாராம். ஏமாற்றுகிறவனுக்கு தான் தெரியும் அதன் நுணுக்கங்கள். தான் ஏமாற்றுகிறாராம் மற்றவர்கள் ஏமாற்றக்கூடாதாம், கற்றுக்கொடுப்பவரே இவர்தான். இன்னும் விட்டிருந்தால் அரசியல் ரவுடியாக வளர்ந்திருப்பார். எத்தனைபேரை அவமானப்படுத்தியிருப்பார், தலைகுனிய வைத்திருப்பார், பகட்டாக சுற்றியிருப்பார், செலவழித்திருப்பார், புலம்பெயர்ந்தோரை இழிச்ச வாய்களாக நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களின் காசில் இவருக்கு எகத்தாளம். எதை பாவித்து அதை செய்தாரோ, அதனாலேயே தாக்கப்படுகிறார். வேஷம் கலைந்தது.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

சுவிஸ் நாட்டில் வ‌சிக்கும் அக்கா நேரில் அந்த‌ யூடுப்ப‌ருட‌ன் போய் காசு கொடுத்து உத‌வினா வீட்டு திட்ட‌த்துக்கு , இப்ப‌டி உத‌வி செய்வ‌து உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து🙏🥰.......................

உண்மை தான் உறவே இப்படி நேரடியாகவோ அல்லது வங்கிக்கு அவர்களுக்கு பணம் அனுப்பினால் மேசடிகாரர்கள் ஏமாற்ற முடியாது.இதுவும் ஒரு வகையில் கட்டணம் மட்டுமே செலுத்தி எடுக்கும் விசாவுக்கு முகவருக்கு இலட்சங்கள் பணத்தை அள்ளி கொடுப்பது போன்றது தான்.

24 minutes ago, alvayan said:

இங்கையே முன்னுக்கே சொல்லிவிட்டேன் சார்...

ஓம்

SK Krishna என்று ஒரு யுரியுப்பர் இருந்ததே இப்போது தான் எனக்கு தெரியும்

தமிழ் அடியான் தவகரன் சங்கவி இவர்களை தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நபரின் ஆரம்ப யூரியூப் காலங்களிலையே ஒரு முகநூலில் இவரின் சுத்துமாத்துகள் விமர்சிக்கப்பட்டது.இவர் சகோதரி,குடும்பம் என கண்ணீர் விட்ட போலி சம்பவங்களும் விமர்சிக்கப்பட்டது.

எனினும் ஒரு சில காரணுங்களுக்காக அந்த முகநூல் முகவரி முடக்கப்பட்டு விட்டது.

அந்த நபரை போல் இன்னும் பல முகநூல்/யூரியூப் கொள்ளையர்கள் இருக்கின்றார்கள்.

கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் SK கிருஷ்ணா என்று பல யூடியூபர்கள் அறிமுகமாகின்றார்களாம்😄

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பொதுமக்கள்தான் பிடித்தார்கள், போலீசார் ஒன்றும் பிடிக்கவில்லை. இப்படி பொதுமக்கள் பிடித்து கொடுத்தவர்களிடம் வாங்கிக்கொண்டு மறுபக்கத்தால் ஓட விட்டவர்களும் உண்டு. இனி இவர் சிலரை காட்டிக்கொடுப்பர், அவர் வேறொரு பெயரை வெளியிடுவார், மொத்தத்தில் யூ ரியூபர்களின் அலட்டல் குறையும்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் SK கிருஷ்ணா என்று பல யூடியூபர்கள் அறிமுகமாகின்றார்களாம்😄

மடக்கிப்பிடிக்கப்பட்டவரும், சர்ச்சைக்குரிய காணொளியில் இருப்பவரும் ஒரே ஆள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

பையன் சாரே...

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஓட்டுக்கு மேல‌ ஏறி நின்று கொண்டு போட்ட‌ காணொளிக‌ளை பாருங்கோ அவ‌ரின் உள் நோக்க‌ம் எப்ப‌டி என்று தெரியும்

3வது காணொளீ... பனங் காணிக்கை சின்ன காடை பொரித்து சாப்பிட்டது....நானு அவர் பான் தானுங்கோ...பின்னர் தகப்பன்,மருமக்கள் , சகோதரிகள்...மச்சான்மாருடன் சேர்ந்து செய்த உருட்டல்கள்..பணப்பறிப்புக்கள் .. வீடு காணி ஒரே ஏமாற்றல்...இப்படி தொடர்கதை

இதே காலப் பகுதியில் கண் தெரியாத ஒருவருக்கு இருக்க விட்ட காணிக்குள் வீடு அமைத்துக் குடுத்தவரும் இவரே தான்..அது மட்டுமல்ல அந்த கண் தெரியாதவரால் அவரது மனைவி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதும் அறிந்திருக்கிறேன்.அதிலும் இந்த யூருப்பரது தலையீடு மிகவும் மோசமாகவே இருந்தது..இன்று மாலை சில யூருப்பர்களின் செய்தியில் பார்த்தேன்..இனிவரும் 14 நாட்களுக்கு தடுப்பில் இருப்பார்.அந்தக் காலப் பகுதிக்குள் அவர்களது அனைத்து விபரங்களும் விசாரிக்கபட்டு தான் முடிவு சொல்லப்படுமாம்.இதற்குள் இவரது வங்கிக்கு பணம் அனுப்பிய புலம்பெயர் உறவுகளின் தரவுகளும் உள்ளடக்கம்.சிலர் லட்சக்கணக்கில் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் அனுப்பி விட்டு இப்போ கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.யாரு எல்லாம் கஸ்ரப்பட்டு உழைச்சு அனுப்பி விட்டு இப்போ அம்பிடப் போகினமோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இந்த நபரின் ஆரம்ப யூரியூப் காலங்களிலையே ஒரு முகநூலில் இவரின் சுத்துமாத்துகள் விமர்சிக்கப்பட்டது.இவர் சகோதரி,குடும்பம் என கண்ணீர் விட்ட போலி சம்பவங்களும் விமர்சிக்கப்பட்டது.

எனினும் ஒரு சில காரணுங்களுக்காக அந்த முகநூல் முகவரி முடக்கப்பட்டு விட்டது.

அந்த நபரை போல் இன்னும் பல முகநூல்/யூரியூப் கொள்ளையர்கள் இருக்கின்றார்கள்.

கவனமாக இருங்கள்.

வாருங்கள் சகோதரன் சாமியர்...எல்லாம் வல்ல இறைவன் அருள் நீண்ட காலத்திற்கு கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

மடக்கிப்பிடிக்கப்பட்டவரும், சர்ச்சைக்குரிய காணொளியில் இருப்பவரும் ஒரே ஆள். 

யாழில் பிடிக்கப்பட்ட யூடியூபர் SK கிருஷ்ணா என்று தலைப்பு எழுதி பல யூடியூபர்கள் அறிமுகமாகின்றார்களாம் என்று வந்திருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட யூருப்பரேர்டு பயணிக்கும் மற்றைய உதவியாளர்களும் விளக்கமறியலில் வைக்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது..இந்த யூருப்பரை விட மற்றய உதவியாளர்களுக்கு தான ;கூடிய தண்டனை குடுக்கப்பட வேண்டும்..நமக்கு இவர்களை பற்றி பேசுவதால் எந்தப் பிரியோசனமும் இல்லை.இருப்பினும், அனேகமான மற்றைய யூருப்பர்ஸ் இந்த யூருப்பர் பற்றி பேசினால் அவர்களது குடும்பத்திக்கு கொலை மிரட்டல் விடுவார்களாம்..நேற்றைய தினம் இளைய யூருப்பர் ஒருவர் மிகவும் கவலைப்பட்டு ஒரு லிங் ஒன்று போட்டு இருந்தார்..இது ஒரு மிகப் பெரிய வன்மக் குழுவாக பெருகி விட்டதென்றும் குறிப்பிட்டுருந்தார்.உதவி என்ற பெயரில் அடாவடித் தனம்.யாழ்ப்பாண மக்கள் பாவங்கள்.☹️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

முதலீடு இல்லாத குடிசைக் கைத்தொழிலாக ஆரம்பித்து இப்போது றௌடிகளை உருவாக்கி விடும் பெருந்தொழில் பேட்டையாக மாறி நிற்கிறது.

ஏன் இந்த லூசுகளின் அலட்டல் வீடியோக்களைப் பார்த்து வளர்த்து விடுகிறார்கள் மக்கள்? நுகர்வோர் இல்லா விட்டால் உற்பத்தியும் குறைந்து விடும், எனவே நுகர்வைக் குறையுங்கள், சந்தா தாரராக இருந்தால் நீங்கி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

குறிப்பிட்ட யூருப்பரேர்டு பயணிக்கும் மற்றைய உதவியாளர்களும் விளக்கமறியலில் வைக்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது..இந்த யூருப்பரை விட மற்றய உதவியாளர்களுக்கு தான ;கூடிய தண்டனை குடுக்கப்பட வேண்டும்..நமக்கு இவர்களை பற்றி பேசுவதால் எந்தப் பிரியோசனமும் இல்லை.இருப்பினும், அனேகமான மற்றைய யூருப்பர்ஸ் இந்த யூருப்பர் பற்றி பேசினால் அவர்களது குடும்பத்திக்கு கொலை மிரட்டல் விடுவார்களாம்..நேற்றைய தினம் இளைய யூருப்பர் ஒருவர் மிகவும் கவலைப்பட்டு ஒரு லிங் ஒன்று போட்டு இருந்தார்..இது ஒரு மிகப் பெரிய வன்மக் குழுவாக பெருகி விட்டதென்றும் குறிப்பிட்டுருந்தார்.உதவி என்ற பெயரில் அடாவடித் தனம்.யாழ்ப்பாண மக்கள் பாவங்கள்.☹️

நீங்க‌ள் சொல்வ‌து நூற்றுக்கு நூறு உண்மை இவ‌ர் இன்னொரு யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்ட‌வ‌ர்

அது தான் நான் நேற்று விப‌ர‌மாய் எழுதினான் கிருஷ்னா ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் மாபியா காங் போல் செய‌ல் ப‌டுகிறார்...................மூன்று பேருட‌ன் போய் உத‌வி வீடியோ போடும் போது தெரிய‌ வில்லையா இந்த‌ துடை ந‌டுங்கி ஆட்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் விட்டு த‌ன‌து பாதுகாப்புக்காக‌ கூட்டி செல்லுகிறார்...................இவ‌ர் உத‌வி விடியோ போட‌ தொட‌ங்கின‌து 2022க‌ட‌சியில் , 2 வ‌ருட‌மும் 5 மாத‌மும் இருக்கும் ,

இவ‌ரின் குள‌று ப‌டிக‌ளை பொது வெளியில் சொன்னால் சொன்ன‌ ஆட்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் விட‌ப் ப‌டும் , கிளிநொச்சியில் கூட‌ ஒரு அண்ணாவுக்கு மிர‌ட்ட‌ல் விட்ட‌து இப்ப‌ தெரிய‌ வ‌ந்து இருக்கு

வொஸ் ஒப் அனுஷ‌ன் ந‌ல்ல‌ மாதிரி நேர்மையா செய்து கொண்டு வ‌ந்த‌ பெடிய‌னையும் ப‌ழுதாக்கின‌து இந்த‌ கிருஷ்னா தான்.................கிருஷ்னா அடிக்க‌ வேண்டிய‌தை அடிச்சு விட்டான்

புல‌ம்பெய‌ர் வாழ் எம் ஈழ‌த்து உற‌வுக‌ளிட‌ம் இருந்து வாய் விட்டு கேட்டு ப‌ல‌தை பெற்று விட்டான் , சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கும் ந‌ல்ல‌வ‌ன் போல் வேச‌ம் போடுவான் பொய் என்றால் பாருங்கோ அக்கா

எங்க‌ட‌ ம‌க்க‌ள் அனுப்பும் காசை கொண்டு போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ உற‌வுக‌ளுட்டை கொடுக்க‌ இவ‌ர் போடும் சீன் அருவ‌ருக்க‌ த‌க்க‌து😞...................

இந்த‌ நூற்றாண்டில் யாரையும் ந‌ம்ப‌ முடியாது அக்கா......................க‌டும் குளிருக்கை போய் நின்று வேலை செய்து இந்த‌ பிராட்டுக்கு காசு அனுப்பும் உற‌வுக‌ள் இதோட‌ திருந்த‌னும்......................................

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 18:17, பாலபத்ர ஓணாண்டி said:

SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள்.

ஆதலால், இங்கு மனப்பிறழ்வு ஒருவருக்கல்ல! நம்முடைய பாதிச் சமூகம் இப்படித்தானிருக்கிறது.

இவருடைய அத்தனை வீடியோக்களின் கென்டன்ட், வறியவர்களுக்கு உதவி செய்தல். இப்படி உதவி செய்வதன் மூலம் இலகுவாக பரபல்யம் அடைதல். அந்த பிரபல்யத்தால் தலைக்குள் ஏறும் கனத்தில் இப்படி அயோக்கிய அதிகாரம் பண்ணுதல். இதுதான் இவர்களுடைய பிழைப்பு.

இந்த உதவிகளுக்குரிய மொத்த பணத்தையும் லட்சக் கணக்கில் வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களே தாரைவார்க்கிறார்கள். அப்படி அனுப்பும் பெருந்தகைகள் கணக்குக் கேட்பதுமில்லை, அது எப்படி வறியவர்களின் தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் அழித்தொழிக்கிறது என்பது மட்டில் அக்கறைகொள்வதுமில்லை.

ஆக இந்த அயோக்கிய யூடியூப்பர் போன்றவர்களின் பிரபல்யம் என்பதும், அதனால் வெளிப்படும் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் என்பதும் ஆயிரக்கணக்கான தமிழர்களால் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூகப் பொறுப்பற்ற, accountability to affected victims என்கிற ஒன்று கிஞ்சித்தும் இல்லாத புலம்பெயர் தமிழ் தனவந்தர்களால் கொடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு அறிவு மயிர் வரும்வரை, இந்த நச்சுப் புழுக்களை இங்கிருந்து ஒருபோதும் நசுக்கித்தள்ள முடியாது.

நன்றி - https://www.facebook.com/share/p/1ZifUXekXu/?mibextid=wwXIfr

டிப்பர்ல பாவம் அப்பாவிகள் எவன் எவனோல்லாம் அடிபட்டு சாகிறான்... இவனும் அதே ரோட்ல தான் போய் வாறான்... ஒரு கேடு வருதில்லையே..👇

https://www.facebook.com/share/v/168fX8nFdu/?mibextid=wwXIfr

இந்த யூடீயூப்பர் மேல் ஓணாண்டிக்கு அழுக்காறு ….

தான் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைத்து இப்போ ஊரில் வாழும் வாழ்வை, சின்ன பெடியன் எங்கேயும் போகாமல் வீடியோ போட்டு சுளுவாக சம்பாதிச்சு வாழ்கிறான் என்ற காழ்புணர்ச்சி…

கவலை வேண்டாம்…நீங்கள் இப்படி அல்ல என்பது தெரியும்.

ஆனால் இந்த காழ்புணர்ச்சி கத்தியை யாரும் சுத்தலாம் என்பது புரிந்திருக்கும்.

இனிமேலாவது அழுக்காறு, வழுக்கையாறு, காழ்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என சக கருத்தாளருக்கு வர்ணம் தீட்டாமல் - கருத்தை கருத்தால் எதிர்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கிருஷ்னான்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ளே போட்டி பொறாமை பிடித்த‌துக‌ள்

கிருஷ்னா செய்யும் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ளை புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ளுக்கு சொல்லுவ‌தே கிருஷ்னாவின் ச‌கோத‌ர‌ங்க‌ள் தான்................இதில் நீங்க‌ள் ஓணாண்டியை குறை சொல்வ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை😁.....................கிருஷ்னான்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ளுக்கு கானி வேண்ட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான் உத‌வினவை , அப்ப‌டி வாய் விட்டு ப‌ல‌ உத‌விய‌ பெற்று இருக்கின‌ம் , பொய் என்றால் த‌னி ம‌ட‌லில் உங்க‌ளுக்கு யூடுப் லிங் அனுப்பிறேன் பாருங்கோ , ஒரு அண்ணா கிருஷ்னா குடும்ப‌த்துக்கு எத்த‌னை ல‌ச்ச‌த்தை அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று , இப்ப‌ கிருஷ்னா அந்த‌ அண்ணாவை சிறு துளிய‌ள‌வு கூட‌ ம‌திப்ப‌தில்லை க‌ண்டும் கொள்வ‌தில்லை எல்லாம் ப‌ண‌ திமிர்😡....................1400 ப‌வுன்ஸ் பெரும‌தியான‌ கைபேசிய‌ இன்னொரு அண்ணாட்ட‌ வாய் விட்டு கேட்டு வாங்கி விட்டு இன்னொரு அண்ணாவிட‌ம் புது ஜ‌போன் வேணும் என‌ சொல்ல‌ ம‌ற்ற‌ அண்ணாவும் ஜ‌போன் வேண்டி கொடுத்தார் , ஏன் இந்த‌ பேர் ஆசை இதெல்லாம் குறுகிய‌ நாட்க‌ளுக்குள் ந‌ட‌ந்து க‌ட‌சியில் கிருஷ்னா பிடி ப‌ட்ட‌வ‌ர்...................... ஒரு பொருல் வேனும் என்றால் த‌ன‌து யூடுப் வ‌ருமான‌த்தில் வேண்ட‌லாமே , ஏன் அடுத்த‌வேட்ட‌ வாய் விட்டு கேப்பான்.....................செய்யிற‌து க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி , ஆனால் பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌ம் ஆட்ட‌ம் பாட்டு கூத்துக‌ள் என்று ச‌கித்து கொள்ள‌ முடியாத‌ கூத்துக‌ள்

புல‌ம்பெய‌ர் நாட்டில் ப‌ல‌ கோடி காசு வைச்சு இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இப்ப‌டி பிற‌ந்த‌ நாள் கூத்தை வ‌ருடா வ‌ருட‌ம் செய்த‌தை நான் பார்த்த‌து இல்லை..................

நேர்மையா உழைச்சு முன்னேறினால் எம‌து உற‌வுக‌ள் வாழ்த்துவின‌ம்.....................

2கிழ‌மை சிறை , 10 வ‌க்கில்ல‌ வைச்சு வாதாடும் அள‌வுக்கு எங்கு இருந்து வ‌ந்த‌து இவள‌வு ப‌ண‌ம் , ர‌வுடி கும்ப‌லை வைத்து அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு கொலை மிர‌ட்ட‌ல் விடுப‌வ‌ன் அதே ர‌வுடி கும்ப‌லாள் தான் அழிவான்...................

சொல்லுற‌து எல்லாம் ப‌ச்சை பொய் , சிங்க‌ள‌ கொடிய‌ கையில் பிடித்து கொண்டு சிங்க‌ள‌ சுத‌ந்திர‌ நாளை கொண்டாடி விட்டு , புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து சோச‌ல் மீடியாக்க‌ள் மூல‌ம் கிருஷ்னாவுக்கு அடி விழ‌ , தானாக‌ போக‌ வில்லை த‌ன்ட‌ ந‌ண்ப‌ன் அழைத்தான் அத‌னால் போனேன் என்று சொல்லி ச‌மாளித்தார்............................

உங்க‌ட‌ ம‌ன‌ சாட்சிய‌ தொட்டு சொல்லுங்கோ கிருஷ்னா அந்த‌ வீடு புகுந்து ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் ச‌ரியா என்று....................முன்ன‌ பின்ன‌ தெரியாத‌ ஒரு பெண் பிள்ளைய‌ பார்த்து நீ காத‌லிக்கிறீயா , நீ என்ன‌ பெரிய‌ அஸ்வ‌ர்யாவா , இது உத‌வி செய்ய‌ போன‌ இட‌த்தில் கேக்க‌ வேண்டிய‌ கேள்வியா..................அது தான் விவாதிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ முத‌ல் விடைய‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு தான் இவ‌ர் செய்த‌ குள‌று ப‌டிக‌ள்..................இவ‌ர் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் ப‌ல‌ இருக்கு , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பெண் பிள்ளைக்கு இவ‌ன் செய்த‌ துரோக‌த்தால் அழுத‌து ,

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் இர‌ண்டு த‌மிழ் பெடிய‌ங்க‌ள் சேர்ந்து உத‌வி செய்யின‌ம் அவ‌ர்க‌ள் பெண் பிள்ளைக‌ளை ந‌ட‌த்தும் வித‌ம் பாராட்ட‌ த‌க்க‌து ம‌ரியாதை கொடுத்து நாங்க‌ள் உங்க‌ட‌ அண்ணா மாதிரி என்று அன்பால் க‌தைச்சு அதுக‌ளுக்கான‌ உத‌விகளை புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளிட‌ம் இருந்து பெற்றுக் கொடுக்கின‌ம்.......................அவ‌ர்க‌ளின் யூடும் ச‌ண‌ல் ( ஆர் ஜே த‌மிழா )

அந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம் இருந்து கிருஷ்னா ந‌ல்ல‌தை தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு , அவ‌ர்க‌ளும் கிருஷ்னாவின் ந‌ண்ப‌ர்க‌ள் தான் ஆனால் அவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நாக‌ரிக‌மான‌ முறையில் உத‌வியை செய்யின‌ம்👍..............................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

பையா…

நான் கிருஸ்ணாவுக்கு ஆதரவு இல்லை.

நான் எழுதியது நான் எப்போ கருத்து எழுதினாலும் அது யார் மேலாவது எனக்கு உள்ள பொறாமையால் எழுதிய கருத்து என எழுதும் ஓணாண்டிக்கான பதில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதையும் கெடுத்தான் ஆண்டி இந்த கிருஷ்ணா. சாதாரண பாமர மக்களுக்கு கிடைத்த புலம்பெயர் உதவிகளையும் சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார்.

சட்டபிரகாரம் புலம்பெயர் மக்களின் உதவிகள் எல்லா மக்களையும் போய் சேராது என்பது நான் கண்டறிந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

483486783_1054015746761799_5223637673189

மல்லாக நீதிமன்றத்தில் YouTube நடத்துனர் கிருஷ்ணாவை பிணை எடுக்க களமிறங்கிய திருக்குமரன் தலைமையினால் ஆன 10 சட்டத்தரணிகளுடன் தன்னந்தனியாக வாதாடிய தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவனுக்கு எமது வாழ்த்துக்கள்.

வீடியோ ஆதாரங்களைக் காட்டி, சட்டதிட்டங்களையும் வெளிப்படுத்தி வாதாடிய இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ராகவனின் வாதத் திறமையால் கிருஷ்ணா 19/03/2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதியை நிலைநாட்டப் போராடிய பொலிஸ் உத்தியோகத்தர் ராகவனுக்கு எமது சல்யூட்.

யாழ்ப்பாணம்.com

Edited by தமிழ் சிறி

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.