Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

481909862_2843898069126000_5563773670202

🎶 🎵சிம்பொனி என்றால் என்ன? 🎵 🎶

🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான்.

🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை: 1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.

🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.

🎶 மீண்டும் சிம்பொனிக்கு வருவோம். 🎵 ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?

🎵 ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.

🎵 இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.

🎶 ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்?

🎵 இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?

🎵 இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

🎵 1. The Fast Movement: 🎶

🎵 காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

🎵 2. The Slow Movement: 🎶

🎵 இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும். 🎵 3. The Dance Number: 🎶

🎵 திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

🎵 4. An Impressive Fast Movement: 🎶

🎵 இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.

🎵 இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

🎵 மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்.

- சிங்காரவேலன் 🎵 🎶

வெங்கடேஷ் ஆறுமுகம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் ஒரு பிரபலமான மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி, போதியளவு ஆட்களை கொண்டு, விதிப்படி ஒரு சிம்பொனி நிகழ்வை எவரும் நிகழ்த்தலாமாம்.

கீழே தொடக்கம் முதல் சிம்பொனி இசைத்தவர்கள் லிஸ்ட் உள்ளது.

அதில் சுபசிங்க எனும் ஒரு சிங்களவரும் அடக்கம்.

https://en.m.wikipedia.org/wiki/List_of_symphony_composers

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிம்பொனி ஒரு பக்கம் இருக்கட்டும் dj போடுகிரம் என்று நம்மவர்களின் விழாக்களில் செய்யும் அநியாயத்தை என்னவென்று சொல்வது பலவருடங்களுக்கு பிறகு கண்ட நண்பருடன் கதைப்பம் என்றால் அந்த நேரம் பார்த்து ஸ்பீக்கர்ஸ் அலற விடுவார்கள் விழா தொடங்கி முடியும் மட்டும் அதிகபட்ச ஒலியில் வைத்து விட்டு இருப்பார்கள் ஒருத்தனை பிடித்து dj என்றால் என்ன என்று ? சிம்பிளா dj தான் என்று விட்டு போகிறான் உண்மையில் dj என்றால் disc jockeyஉலக புகழ் பெற்ற disc jockeyகள் இருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரியாது அந்த தமிழ் djஇருக்கிறான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நான் அறிந்தவரையில் ஒரு பிரபலமான மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி, போதியளவு ஆட்களை கொண்டு, விதிப்படி ஒரு சிம்பொனி நிகழ்வை எவரும் நிகழ்த்தலாமாம்.

கீழே தொடக்கம் முதல் சிம்பொனி இசைத்தவர்கள் லிஸ்ட் உள்ளது.

அதில் சுபசிங்க எனும் ஒரு சிங்களவரும் அடக்கம்.

https://en.m.wikipedia.org/wiki/List_of_symphony_composers

இதுவரை.... மிகச் சிலரே சிம்பொனி இசை அமைத்து இருந்தார்கள் என நினைத்து இருந்தேன். நீங்கள் பதிந்த பட்டியலைப் பார்க்க... மிகப் பெரிதாக உள்ளது. இந்தப் பட்டியலை இந்திய தமிழ் ஊடகங்கள் இதுவரை பார்த்ததே இல்லைப் போலுள்ளது.

பார்த்திருந்தால்... இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுவரை.... மிகச் சிலரே சிம்பொனி இசை அமைத்து இருந்தார்கள் என நினைத்து இருந்தேன். நீங்கள் பதிந்த பட்டியலைப் பார்க்க... மிகப் பெரிதாக உள்ளது. இந்தப் பட்டியலை இந்திய தமிழ் ஊடகங்கள் இதுவரை பார்த்ததே இல்லைப் போலுள்ளது.

பார்த்திருந்தால்... இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 😂

எதுக்கும் கொஞ்சம் மெதுவா கதையுங்கோ, இளையராஜா மீது இவர்களுக்கு அழுக்காறு என கிளம்பி வரபோகிறார்கள்.

இளையராஜா இசையில் ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சிம்பொனி இசைப்பது அப்படி ஒன்றும் அதீத சாதனை அல்ல.

இதை செய்ய எந்த அமைப்பின் அனுமதியோ, அழைப்போ தேவையில்லை என்கிறார்கள்.

ஆனாலும் இது ஒரு சாதனைதான்.

இவ்வளவு பில்டப் ஓவர்.

ஆகவே கோஷானால் முடியாதுதானே என யாரும் கேட்க கூடாது🤣

இந்த லிஸ்டில் பீத்தோவன் போன்ற பல மேதைகளும் உள்ளார்கள்.

1992/3 வாக்கில் நான் ஷார்ட்ஸ் போட்ட காலத்தில் இதே போல் இளையராஜா தான் இலண்டன் போய் சிம்பொனி இசைத்ததாக பெரிய அறிவிப்புகள் விட்டவர்.

அப்ப வீரகேசரியில் வாசிப்பதை விட வேறு வழி இல்லை என்பதால் அப்படியே நம்பி விட்டேன்.

இப்போ பார்த்தால் 2025 இல் செய்ததை debut கன்னி முயற்சி என்கிறனர்.

அப்போ 90களில் விட்டது கஞ்சா கப்ஸா கதையா?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இளையராஜா இசையில் சாதனைகள் படைத்த திறமைசாலி. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால்... இந்திய ஊடகங்கள் செய்யும் அலப்பறை... தாங்க முடியாது.

கிரிக்கெட் என்றாலும், ஒலிம்பிக்கில் ஒற்றை பதக்கம் வாங்கினாலும், ரஜனி இமயமலைக்குப் போனாலும்... வாசிப்பவர்களை அலுப்புத் தட்டும் அளவிற்கு டமாரம் அடித்துக் கொண்டு திரிவதை பார்க்கதான் சகிக்க முடியவில்லை.

இந்திய பத்திரிகைகளே... கப்ஸா கதைகளை விடுவது வழமைதானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பத்திரிகைகள் மட்டுமல்ல…

ராஜாவும் சரியான அற்பன்.

அவரை தமிழ் கூறு நல்லுலகம் இனம் கண்டு பாராட்டுகிறது.

ஆனால் ஏனைய மொழிகளில் அவ்வளவு ரீச் இல்லை.

ஆனால் ரஹ்மானின் இசையை உலகமே கொண்டாடுகிறது.

ஏனையவர்கள் ரசிக்கவில்லை என்பதால் அவரின் இசை அற்புதமானது அல்ல என யாரும் சொல்லமுடியாது.

ஆனால் அவருக்கு அந்த validation தேவைபடுகிறது.

சாதி விடயத்தில் கூட அப்படித்தான்.

ஆம் நான் டேனியல்தான். மிகவும் பிற்படுத்தபட்ட சாதியில் பிறந்தவந்தான் ஆனாலும் என் இசைக்கு நீங்கள் எல்லோரும் ரசிகர்கள் என இறுமாப்பாய் இருக்கலாம்.

ஆனால் பொய்க்கு பிராமண வேஷம் போட்டு, அவங்கள் கோவிலுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தும் படி நடப்பார்.

# எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணம் இருக்கு

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பாவம் இளையராஜா அவருக்கு மட்டும் ஒரே சோதனையாக இருக்கிறது, எப்பவுமே அவரை சுற்றியே விமர்சனங்கள் இருக்கிறது.

ஒரு முறை இசகு பிசகாக ஒரு பிரச்சினையில் மாட்டி பொறியில சிக்கிய எலி மாதிரி முழிச்சுக்கொண்டிருந்த போது எனது தாயார் கூறினார், அதென்னவோ தெரியவில்லை பிரச்சினைகள் எல்லாம் உன்னையேதான் தேடி வருகிறது என, கடந்த காலத்தில் நான் சிக்கி தவித்த பிரச்சினைகளை பட்டியலிட்டார், சிந்தித்து பார்த்த போது அது உண்மையாக இருப்பது போல தோன்றியது (பிரச்சினை வருகிறது என ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை வந்து முன்னால நிற்கும்), சிலருக்கு சும்மா இருந்தாலும் சிக்கல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

ஒரு தமிழன் சிம்பொனி இசை செய்வது இது தான் முதல் தடவை. பெருமை கொள்வதில் தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

பாவம் இளையராஜா அவருக்கு மட்டும் ஒரே சோதனையாக இருக்கிறது, எப்பவுமே அவரை சுற்றியே விமர்சனங்கள் இருக்கிறது.

ஒரு முறை இசகு பிசகாக ஒரு பிரச்சினையில் மாட்டி பொறியில சிக்கிய எலி மாதிரி முழிச்சுக்கொண்டிருந்த போது எனது தாயார் கூறினார், அதென்னவோ தெரியவில்லை பிரச்சினைகள் எல்லாம் உன்னையேதான் தேடி வருகிறது என, கடந்த காலத்தில் நான் சிக்கி தவித்த பிரச்சினைகளை பட்டியலிட்டார், சிந்தித்து பார்த்த போது அது உண்மையாக இருப்பது போல தோன்றியது (பிரச்சினை வருகிறது என ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை வந்து முன்னால நிற்கும்), சிலருக்கு சும்மா இருந்தாலும் சிக்கல்தான்.

இளசுக்கு தாழ்வுசிக்கல், அதை மறைக்க வெளிப்படுத்தும் உயர்வுச்சிக்கல் நடவடிக்கைகள், அவரின் வாய் இவற்றால்தான் பிரச்சினை வருபதாக நான் எண்ணுகிறேன்.

வித்யாகர்வம் தனக்கு இருப்பதாக காட்டி கொள்ள வேண்டும் என்றே நடப்பதாகவும் நான் நினைப்பதுண்டு.

உங்களிடம் பழகியதில் இவை இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

பத்திரிகைகள் மட்டுமல்ல…

ராஜாவும் சரியான அற்பன்.

அவரை தமிழ் கூறு நல்லுலகம் இனம் கண்டு பாராட்டுகிறது.

ஆனால் ஏனைய மொழிகளில் அவ்வளவு ரீச் இல்லை.

ஆனால் ரஹ்மானின் இசையை உலகமே கொண்டாடுகிறது.

ஏனையவர்கள் ரசிக்கவில்லை என்பதால் அவரின் இசை அற்புதமானது அல்ல என யாரும் சொல்லமுடியாது.

ஆனால் அவருக்கு அந்த validation தேவைபடுகிறது.

சாதி விடயத்தில் கூட அப்படித்தான்.

ஆம் நான் டேனியல்தான். மிகவும் பிற்படுத்தபட்ட சாதியில் பிறந்தவந்தான் ஆனாலும் என் இசைக்கு நீங்கள் எல்லோரும் ரசிகர்கள் என இறுமாப்பாய் இருக்கலாம்.

ஆனால் பொய்க்கு பிராமண வேஷம் போட்டு, அவங்கள் கோவிலுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தும் படி நடப்பார்.

# எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணம் இருக்கு

குறை சொல்ல வெளிக்கிட்டால் உலகில் உள்ள எல்லா மனிதரையும் குறை சொல்ல முடியும்.இசை அமைப்பது இளையராஜாவின் தொழில். அதை அவர் செவ்வனே செய்கின்றார்.அத்துடன் இளையராஜாவையும் ரகுமானையும் ஒரே பார்வையில் பார்க்க நினைப்பது தவறு.

22 hours ago, பெருமாள் said:

முதலில் சிம்பொனி ஒரு பக்கம் இருக்கட்டும் dj போடுகிரம் என்று நம்மவர்களின் விழாக்களில் செய்யும் அநியாயத்தை என்னவென்று சொல்வது பலவருடங்களுக்கு பிறகு கண்ட நண்பருடன் கதைப்பம் என்றால் அந்த நேரம் பார்த்து ஸ்பீக்கர்ஸ் அலற விடுவார்கள் விழா தொடங்கி முடியும் மட்டும் அதிகபட்ச ஒலியில் வைத்து விட்டு இருப்பார்கள் ஒருத்தனை பிடித்து dj என்றால் என்ன என்று ? சிம்பிளா dj தான் என்று விட்டு போகிறான் உண்மையில் dj என்றால் disc jockeyஉலக புகழ் பெற்ற disc jockeyகள் இருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரியாது அந்த தமிழ் djஇருக்கிறான் .

உங்களைப்போல ஆக்களுக்கு அனிருத் தான் சரியான ஆள்....அரிசி மில்லுக்க நிண்ட பீலிங் வரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நதிமூலம் ரிசி மூலம் பார்க்க எம்மரை தட்டி தான். இப்படி ஒவ்வொருவராக கிழற வெளிகிட்டால் நாறும். வந்தமா இசையை ரசிச்சமா என்று போய் கொண்டு இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

குறை சொல்ல வெளிக்கிட்டால் உலகில் உள்ள எல்லா மனிதரையும் குறை சொல்ல முடியும்.இசை அமைப்பது இளையராஜாவின் தொழில். அதை அவர் செவ்வனே செய்கின்றார்.அத்துடன் இளையராஜாவையும் ரகுமானையும் ஒரே பார்வையில் பார்க்க நினைப்பது தவறு.

உங்களைப்போல ஆக்களுக்கு அனிருத் தான் சரியான ஆள்....அரிசி மில்லுக்க நிண்ட பீலிங் வரும். 🤣

இளையராஜா என்ற இசையமைப்பாளரை நான் குறை ஏதும் கூறவில்லை.

ஆனால் இளையராஜா என்ற தனிமனிதன் வேறு, இளையராஜா என்ற இசையமைப்பாளர் வேறு, இளையராஜா என்ற பிரபலம் (celebrity) வேறு.

செலிபிரிட்டி என்றால் சமூகம் செலிபிரேட்பண்ணும் அதாவது கொண்டாடும் மனிதன்.

அப்படி சமூகம் கொண்டாடும் மனிதருக்கு அவர் அலப்பறை பண்ணினால், சமூகத்தில் இருந்து விமர்சனங்கள் வருவது தவிர்க்கவியலாதது.

அவரின் மிக உன்னதமான இசையை ரசிக்கிறோம் ஆனால் நாம் ரசித்ததுதான் அவரின் இன்றைய சுக வாழ்வுக்கு காரணம்.

ஆகவே அவர் ஒரு service provider நாம் ஒரு customer.

கஸ்ட்மர் முகம் சுளிக்கும் படி நடந்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும், இளையராஜா ஆயினும், இலோன் மஸ்க் ஆயினும்.

அவரின் இசையை ரசிப்பதால் அவரின் அலப்பறைகளை சகித்துகொள்ள வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரஹ்மான், ராஜாவை நான் ஒப்பிடவில்லை.

ஆனால் ராஜா நிச்சயம் விருதுகளுக்கு பின்னால் ஓடும், அதற்காக அரசியல் சாயம் கூட பூசி கொள்ளும் ஒருவர்.

எல்லோரும் ஆஸ்கார் நாயகன், ஆஸ்கார் அது, இது என அலப்பறை பண்ணி கொண்டிருக்க சத்தமில்லாமல் 2 ஆஸ்காரை ரஹ்மான் எடுத்து வந்தார்.

என்னை பொறுத்தவரை ரஹ்மான் ஆஸ்கார் எடுத்தது ராஜாவின் கர்வத்தின் மீது விழுந்த மரண அடி என்றே நினைக்கிறேன்.

தன்னோடு கோவித்து கொண்டு, மணிரத்னமும், பாலச்சந்தரும் சேர்ந்து, அறிமுகபடுத்திய தனக்கு வேலை பார்த்த பையன். ஆஸ்காரை தனக்கு முன் எடுத்துவிட்டான் என்பதை அவர் இன்று வரை ஏற்றுகொள்ள முடியாமல் அவதிபடுகிறார்.

இனி ஆஸ்கார் எடுத்தும் பயனில்லை (ரஹ்மானுக்கு பிறகு எனவே வரலாறு பதியும்).

ஆகவே நானும் ரெளடிதான் என பத்மவிபூசண், சிம்பொனி என எதை எதையோ எல்லாம் முயல்கிறார்.

இது எதுவுமே தேவையில்லை - அவருக்கான இடம் அபப்டியேதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பொடியனுகள் எல்லாம் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ள இரண்டு மூண்டு சிம்பொனி எண்டு எப்பவோ வாசிச்சு தள்ளீட்டானுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாலி said:

சின்னப் பொடியனுகள் எல்லாம் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ள இரண்டு மூண்டு சிம்பொனி எண்டு எப்பவோ வாசிச்சு தள்ளீட்டானுகள்!😂

பீத்தோவன் என நினைக்கிறேன் பதின்மவயதுக்கு வர முன் குழந்தையாக சிம்பொனி அமைத்தாராம்.

யாரோ ஒரு பையன் எனக்கும் சிம்பொனி அமைக்க ஆசை என சொல்ல - நீ செய்வது சினிமா பாட்டு போல இருக்கிறது என பொதுவெளியில் அவமானபடுத்தி உள்ளாராம் ராஜா.

புளுசட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:
2 hours ago, goshan_che said:

பீத்தோவன் என நினைக்கிறேன் பதின்மவயதுக்கு வர முன் குழந்தையாக சிம்பொனி அமைத்தாராம்.

யாரோ ஒரு பையன் எனக்கும் சிம்பொனி அமைக்க ஆசை என சொல்ல - நீ செய்வது சினிமா பாட்டு போல இருக்கிறது என பொதுவெளியில் அவமானபடுத்தி உள்ளாராம் ராஜா.

புளுசட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.

பீதோவன் 13 வயதில் அதனை செய்த்ததாக நினைவுள்ளது, ஆனால் கூகிகிளில் தேடிய போது 29 வயதில் என உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகார மறுப்பால் அகிலத்தை வென்ற இளையராஜா!

-சாவித்திரி கண்ணன்

ilaiyaraaja.jpg

உள்நாட்டில் மறுக்கப்பட்ட  தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா  இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்;

இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது.

images-1.jpg

தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா

தன்ராஜ் மாஸ்டரிடம்  மேற்கத்திய இசையை பயின்ற போதே மொசார்ட்டும், பீத்தோவனும் அவரது இதய சிம்மாசனத்தில் வந்தமர்ந்தனர். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் தன்ராஜ் மாஸ்டர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார்.

ஏனென்றால் ஒரு கலகக்காரனாலேயே இவர்களை கண்டடைய முடியும்.  மொழிகளின் ஆதிக்கத்தைக் கடந்த இசையின் மீதான அவரது ஆரம்பகால ஈர்ப்பாக வெளியானதே ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற மொழிகளற்ற இசை ஆல்பங்கள்!

GlniFcQbwAA-OxS.jpeg

உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களைக் கொண்ட  ராயல் பிலார்மோனிக் இசைக் குழு லண்டன் மா நகரில் அவரது இசையை இசைக்கிறது. இன்னும் உலகின் 13 நாடுகளில் உலகப் பெரும் இசைக் கலைஞர்கள் அவரது இசை நோட்சை பார்த்து இசைக்க உள்ளனர்.

உலகத்தில் மதம் சார்ந்தும், மன்னர்களின் அதிகாரம் சார்ந்தும் உருவான இசைகள் காலப் போக்கில் காணாமல் போயின. ஆனால், தமிழகத்தில் மட்டும் மதம் சாதி ஆகியவற்றின் அதிகார பீடமாக அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசையை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் பிராமணர்கள் தங்கள் சாதிக்கான இசையாகவே வளர்த்து நிலை நிறுத்தி வருகின்றனர். இதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மாற்று சாதியினருக்கு  பெரிய அங்கீகாரத்தை தரமாட்டார்கள்!

அந்த வகையில் இங்கு தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தான் இளையராஜா உலக அரங்கில் பெற்றுள்ளார்.

xyz17371976401.jpg

மக்கள் உணர்வுகளில் இருந்து அவருக்கு எல்லா இசையுமே அத்துப்படி.

சிம்பொனி ஒரு இனம் தன்னை தேசியமாக உணர ஆரம்பித்த பிறகான மாற்றங்களின் விளைவாய் கட்டற்று சுதந்திரமாக உணர்கிறது!  அவ்வித உணர்வுகளின் வளர்ச்சி போக்கே  சிம்பொனி இசையாய் உருக்கொண்டது.!

ஒரு வகையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட  பிரெஞ்சுப் புரட்சியோடு தொடர்புடையது சிம்பொனி இசை!

பிரெஞ்சுப் புரட்சியில், கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் கிறிஸ்துவ மதக் குறீயீடான ’லத்தீன்’ மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான கூறுகள் வெளிப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்ததையும் எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது.

தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கு எதிராக உருவானதே பல இசைக் கருவிகளை பயன்படுத்தி உருவான சான்சன் (Chanson) இசை வடிவமாகும்! இதை உருவாக்கியவர், குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) என்ற பிரான்சின் இசை அறிஞராவார்! இதை இந்த மண்ணுக்கான மதச் சார்பற்ற இசை என அவர் பிரகடனப்படுத்தினார்!

இதே போல இத்தாலி இசைக் கலைஞன் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) என்ற கண் பார்வையற்ற அறிஞர் தன் தாய் மொழியில், அதன் நாட்டுப் புற இசை அம்சமான மாத்ரிகல் (madrigal) என்ற இசை வடிவதை அறிமுகப்படுத்தி, அதை மதச் சார்பற்ற இசை எனப் பிரகடனப்படுத்தினார். இப்படியாக பிரான்சும், இத்தாலியும் சேர்ந்து சிம்பொனி என்ற புதிய இசை தோற்றத்திற்கான மூலக் கூறுகளை வழங்கின…என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்!

2222.jpg

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், புறக்கணிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் தங்களுக்கான இசையை தாங்களே உருவாக்கிக் கொள்வர்! அப்படி ஒரு ஆதிக்க மொழிக்கும், மத ஆதிக்கத்திற்கும் எதிராக உருவானதே சிம்பொனியின் தோற்றத்திற்கான அடித்தளமாகும்.

தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்!

ஆனால், இதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகள் நடந்த  நிகழ்வுகள் இதற்கு முன்னோட்டமாயின. அது கத்தோலிக்க மதத்தில் இருந்து உருவான புரோடஸ்டண்ட் மதத்தின் தோற்றம், ஜெர்மனியில் நடந்த மதப்போர்கள், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (Civil war) ஐரோப்பிய நாடுகளில் உருவான பொருளாதார விடுதலைக்கான குரல்கள் அகியவை மேற்கத்திய இசையில் தாக்கத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டன. அது ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் சிம்பொனியை படைக்க காரணமாயிற்று!

di-beethoven-meet-mozart-.jpg

இசை மேதைகள் பித்தோவன், மொசார்ட்

சிம்பொனியை அதற்கடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் புரட்சிகரமான சிந்தனையை கொண்டிருந்த பீத்தோவன் என்ற மாபெரும் இசைமேதையாகும். இந்த காலகட்டத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த நிலையில், இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சி அனைவருக்குமானதானது.  மொசார்ட், பீத்தோவன் ஆகிய இந்த இருவரும் தான் நம் இளையராஜாவின் இதய ராஜ்ஜியத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சுபவர்கள்! சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நம் இளையராஜா இவர்களின் சமாதிகளை தேடிக் கண்டடைந்து கண்ணீர் உகுத்து அழுது வந்ததை எழுதி உள்ளார்.

மொழிகளின் ஆதிக்கத்தை கடந்த மனித சுதந்திரத்தின் முழு வெளிப்பாடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இசை வடிவம் இளையராஜாவை வசீகரித்தது. இதன் விளைவாக நம் இளையராஜா 1993 ஆம் ஆண்டே சிம்பொனியை படைத்தார்! ஆயினும் அந்த இசைக்கு பரிச்சியமல்லாத இந்திய இசைக் கருவிகளையும் அதில் இளையராஜா இணைத்து ஏற்படுத்தியதால் அது மேற்கத்திய இசை உலகின் முழு ஏற்பையும் பெற முடியாமல் போயிற்று!

ஆனால், தற்போது முற்றிலும் மேற்கத்திய இசைக் கருவிகளுக்கு மட்டுமே இளையராஜா நோட்ஸ் எழுதி சிம்பொனியை அரங்கேற்றிவிட்டார்! மேஸ்ட்ரோ, ராகதேவன், இசை ஞானி..என பலவாறாக மக்களால் அழைக்கப்பட்டாலும் கர்நாடக இசை விற்பன்னர்கள் இளையராஜாவை  கர்நாடக இசை கச்சேரி செய்ய சபா தருவார்களா? ஒரே ஒரு முறை வலிந்து அந்த வாய்ப்பை பெற்ற இளையராஜா வரவேற்பில்லாததால் நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குள் அந்த ஆசை நிறைவேராத ஆசையாக தொடர்கிறது.

இளையராஜா சாதிகளைக் கடந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டார். எனினும், இங்கே தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீத வித்வான்கள் நம் இளையராஜாவை ஏற்பார்களா? அவரது நிறைவேறாத நீண்ட நாள் கனவான பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைப்பார்களா?  திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும்  தியாகய்யர் ஆராதனைக்கு அழைப்பார்களா..? இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் நான்காவதாக சேர்க்க வேண்டும் என்ற அவரின் கனவை நினைவாக்குவார்களா?

இவை எதுவும் நடக்காவிட்டாலும், இளையராஜா வேறு எவரையும் விட  கோடானு கோடி மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு கொலுவிருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்த தொடர் மறுப்பே அவரை இன்னும், இன்னும் உயரப் பறந்து  மறுத்தவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கும்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/20989/ilaiyaraja-symphony/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பீத்தோவன் என நினைக்கிறேன் பதின்மவயதுக்கு வர முன் குழந்தையாக சிம்பொனி அமைத்தாராம்.

யாரோ ஒரு பையன் எனக்கும் சிம்பொனி அமைக்க ஆசை என சொல்ல - நீ செய்வது சினிமா பாட்டு போல இருக்கிறது என பொதுவெளியில் அவமானபடுத்தி உள்ளாராம் ராஜா.

புளுசட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.

உண்மையில் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? 😅

உண்மையை தேடுகிறோம் கண்டிக்கிறோம் என்று வெளிக்கிட்டு எம் இனத்தின் பெருமைகளை எல்லாம் துகிலுருந்து ஒன்றுமே இல்லாமல் அம்மணமாக நிற்கப் போகிறோமா என்ற சந்தேகம் வலுக்கிறது....😪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

  1. இந்த இனம் மிக நெடியது அண்ணை. எந்த ஒரு தனி மனிதனும் அவர்களின் செயலும் இந்த இனத்தின் பெருமையை கூட்டாது, குறைக்காது.

  2. எங்கே நான் எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன் - எனது பார்வையில் இளையராஜா செய்தது சாதனைதான் ஆனால் இந்தளவு ஓவர் பில்டப் தேவையில்லை.

  3. அடுத்தது அவரின் அகங்காரம் - அது நிச்சயமாக கண்டிக்கபட வேண்டும். தமிழர் நல்லா இசையமைப்பார் என்பதால் அநாகரீகமாக நடக்கும் உரிமையை அவர் பெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

பீதோவன் 13 வயதில் அதனை செய்த்ததாக நினைவுள்ளது, ஆனால் கூகிகிளில் தேடிய போது 29 வயதில் என உள்ளது.

பீத்தோவன் இல்லை, மொசார்ட் தானாம் 8 வயதில் இதை செய்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

அப்படி சமூகம் கொண்டாடும் மனிதருக்கு அவர் அலப்பறை பண்ணினால், சமூகத்தில் இருந்து விமர்சனங்கள் வருவது தவிர்க்கவியலாதது.

அவரின் மிக உன்னதமான இசையை ரசிக்கிறோம் ஆனால் நாம் ரசித்ததுதான் அவரின் இன்றைய சுக வாழ்வுக்கு காரணம்.

ரசிக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இளையராஜா ஒன்றும் எழுந்தமானத்திற்கு இசையமைக்கவில்லை.சிறுவர் முதல் வயோதிபர் வரை தன் இசையால் மயக்கியவர்.மாகதேவன்,விஸ்வநாதன் காலத்தவரும் அவர் இசையை ரசித்தனர். இன்றைய அனிருத் காலத்தவரும் அவர் இசையை ரசிக்கின்றனர்.இளையராஜா வருகைக்கு பின்னர் எத்தனையோ இசையமைப்பாளர்கள் தோன்றினர்.ஆனால் அவர்களால் நிலைத்து நிற்கமுடியவில்லை.இளையராஜா ஏனோ தானோ என இசையமைக்கவில்லை.எல்லோரும் ரசிக்கும் படியாக இசையமைத்தார்.அதனால்தான் நீங்களோ நானோ அவர் இசையமைப்புகளை இசித்தோம்.கேட்டோம். அவர் ஒன்றும் பொதுமக்களை நோக்கி வற்புறுத்தவில்லையே!

இளையராஜாவோ இன்றும் தன் இசையால் கம்பீரமாகத்தான் நிற்கின்றார்.

அவரின் அலப்பறை, நான் என் இசை என்ற அகங்காரம் படைத்தவனுக்கு வருவது இயல்பு. அதை அவர் நேருக்கு நேரே காட்டுகின்றார்.அதில் தவறில்லை.

9 hours ago, goshan_che said:

கஸ்ட்மர் முகம் சுளிக்கும் படி நடந்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும், இளையராஜா ஆயினும், இலோன் மஸ்க் ஆயினும்.

வாடிக்கையாளார் முகம் சுளித்தாலும் நல்ல இசை வேண்டும் என்பவர்கள் இளையராயாவை தேடித்தான் போகின்றார்கள்.இன்றும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.💪

9 hours ago, goshan_che said:

அவரின் இசையை ரசிப்பதால் அவரின் அலப்பறைகளை சகித்துகொள்ள வேண்டியதில்லை.

கேள்வி கேக்கிறவன்(ஊடகவியாளர்கள்) சம்பந்தமில்லாமல் தாறுமாறாய் கேள்விகள் கேட்டால் அலப்பறை மட்டுமல்ல கோபமும் வரத்தான் செய்யும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:
  1. இந்த இனம் மிக நெடியது அண்ணை. எந்த ஒரு தனி மனிதனும் அவர்களின் செயலும் இந்த இனத்தின் பெருமையை கூட்டாது, குறைக்காது.

  2. எங்கே நான் எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன் - எனது பார்வையில் இளையராஜா செய்தது சாதனைதான் ஆனால் இந்தளவு ஓவர் பில்டப் தேவையில்லை.

  3. அடுத்தது அவரின் அகங்காரம் - அது நிச்சயமாக கண்டிக்கபட வேண்டும். தமிழர் நல்லா இசையமைப்பார் என்பதால் அநாகரீகமாக நடக்கும் உரிமையை அவர் பெறவில்லை.

1- நாம் நண்டுகள் கூட்டம் சகோ. நமக்கு வெளியே எதிரி இல்லை.

2- அவர் அதை செய்யவில்லை. ரசிகர்கள் தமிழர்கள் செய்கிறார்கள்.

3- திறமைக்கு அகங்காரம் இருக்கும். அதேநேரம் இது பற்றி மேலே நீங்கள் குறிப்பிட்டதற்கு விருப்பு வாக்கு போட்டுள்ளேன்.

நான் ஆரம்பத்தில் விஸ்வநாதன் இசையை வீட்டில் கேட்டு வளர்ந்ததால் இளையராஜாவின் இசையை பெரிதாக இரசித்ததில்லை. இளையராஜாவின் இசையை விட ரி. ராஜேந்தரின் பிடிக்கும் ஒரு காலத்தில். அப்படியே ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்கள் மக்கள் மனதை இசையால் சீராட்டி செல்கிறார்கள் வரலாறு நீளமானது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாடிக்கையாளார் முகம் சுளித்தாலும் நல்ல இசை வேண்டும் என்பவர்கள் இளையராயாவை தேடித்தான் போகின்றார்கள்.இன்றும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.💪

ஓம்…

ஏசி..ஏசி நானும் அவர் பாட்டோடுதான் வாழ்கிறேன்🤣.

தமிழ் திரையிசையை பொறுத்தவரை 75-90 பிறந்தவர்கள் மிக அதிஸ்டசாலிகள்.

எங்கள் தாலாட்டை ராஜாவும், ரொமான்ஸ்சை ரஹ்மானும் பாடி நின்றார்கள்.

இவர்கள் இருவரும், தாயகபாடல்களும்தான் எம் வாழ்க்கைக்கே பிண்ணனி இசை.

அதிலும் நான் “மேயாத மான்” முதல் “தூத்துகுடி கொத்தனாரு” வரை இசையை ரசிப்பவன் (ஹெட்போன் போட்டு கொண்டு கேட்கவும்🤣🔞).

ஆகவே நான் ராஜா வெறுபாளன் அல்ல, சின்னதாயி மகனின் சின்னதனமே எனக்கு பிடிக்காதது.

1 hour ago, விசுகு said:

1- நாம் நண்டுகள் கூட்டம் சகோ. நமக்கு வெளியே எதிரி இல்லை.

2- அவர் அதை செய்யவில்லை. ரசிகர்கள் தமிழர்கள் செய்கிறார்கள்.

3- திறமைக்கு அகங்காரம் இருக்கும். அதேநேரம் இது பற்றி மேலே நீங்கள் குறிப்பிட்டதற்கு விருப்பு வாக்கு போட்டுள்ளேன்.

நான் ஆரம்பத்தில் விஸ்வநாதன் இசையை வீட்டில் கேட்டு வளர்ந்ததால் இளையராஜாவின் இசையை பெரிதாக இரசித்ததில்லை. இளையராஜாவின் இசையை விட ரி. ராஜேந்தரின் பிடிக்கும் ஒரு காலத்தில். அப்படியே ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்கள் மக்கள் மனதை இசையால் சீராட்டி செல்கிறார்கள் வரலாறு நீளமானது. நன்றி.

ரஜேந்தர், சங்கர் கணேஷ், சிற்பி இவர்களின் படைப்புகள் அற்புதம். பலர் இதை ராஜா பாட்டு என்றே நினைப்பார்கள்.

அதே போல் ராஜா, ரஹ்மான் ஏனோ தானோ என போட்ட பாடல்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che இளையராஜாவின் இந்த சிம்பொனி பற்றிய உலக இசை ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளனவா? கூகிள் தேடலில் அகப்படவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.