Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 Mar, 2025 | 04:52 PM

image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை.

யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம். அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம்.

தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம்.

ஆட்சியில் உள்ளவர்கள் எம்மை பார்த்து பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் கூறாத விடயத்தை கூறியதாக கூறி எனது உரைகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்கள். 

அதேபோன்று எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் கோரிய போதிலும் எனக்கான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். எனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை.

8 hours ago, பிழம்பு said:

யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம். அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம்

ஒரு சபையின்வேட்பு மனு தவிர மிகுதி பத்தும் யாழ் மாநகர சபை உட்பட நிராகரிப்பு

அதேபோல இன்னும் பல கட்சிகளும் குழுக்களும் இந்த நிலை தான்

அதிக கவனமின்மை தான் காரணம் என நினைக்கிறேன்

தேர்தல் முறையில் மாற்றங்கள் வந்தபோதே இவர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும்

சில கட்சிகளும் குழுக்களும் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்கவில்லை

இந்த நிலையில் தமிழ் தேசிய முன்னணியை ஆதரிக்கும் நிலை சிறப்பானது

  • கருத்துக்கள உறவுகள்

சங்குக்கு திரும்பவும் சங்கூதிட்டானுகள் போல கிடக்கு!

😂

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் நிராகரிக்கப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

யார் யார் நிராகரிக்கப்பட்டார்கள்.

யாழ் மாநகரசபையில் பலம் கொண்ட சங்கு கூட்டணி, மான் மணிவண்ணன், மற்றும் சுயேட்சைக்குழு அர்ச்சுனா ஊசி மற்றும் சில நிராகரிப்பு (அதைவிட வேறு வேறு சபைகளுக்கான பல வேட்பு மனுக்கள் உட்பட)

இவர்களின் நிராகரிப்பு தமிழரசு கட்சிக்கு ஒரு சிறிய உந்துகோலாக அமைந்து அவர்களின் வாக்குக்கள் அதிகரிக்கும் என சுமந்திரனும்

அதேபோல NPP யும் தங்கள் பக்கம் ஒரு காற்று வீசும் எனவும் நினைக்கின்றனர்

ஆகவே அர்ச்சுனா தனது ஆதரவாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளிக்கும்படி கூறியது தகமிழ் மக்களிடையே

அதிக கவனத்தை ஈர்த்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

யாழ் மாநகரசபையில் பலம் கொண்ட சங்கு கூட்டணி, மான் மணிவண்ணன், மற்றும் சுயேட்சைக்குழு அர்ச்சுனா ஊசி மற்றும் சில நிராகரிப்பு (அதைவிட வேறு வேறு சபைகளுக்கான பல வேட்பு மனுக்கள் உட்பட)

இவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தும் படிவங்களை சரியாக நிரப்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தும் படிவங்களை சரியாக நிரப்ப முடியவில்லை.

இந்த முறை சந்திரசேகரை யாழ்ப்பாணம் அடித்து துரத்தும் அது தான் போட்டியை தவிரக்க. வேட்பு மனுக்கள் நிராகரித்து விடுகிறார்கள் அதுவும் அரச்சுனாக்கு புழுத்த பயம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தும் படிவங்களை சரியாக நிரப்ப முடியவில்லை.

கௌசல்யாவும் சட்டத்தரணி என்றார்கள்.

தமது கட்சி விண்ணப்பத்தை நிரப்புவதிலேயே கோட்டை விட்டு விட்டார்கள்.

கிளிநொச்சியில் ஒரு சுயேச்சை குழுவைத்தவிர…. பாரம்பரிய கட்சிகள் (தமிழரசு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி) எதுவுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என்று @ஏராளன் இணைத்திருந்த செய்தி ஒன்றில் பார்த்தேன். அவ்வளவிற்கு போட்டியிட எவரும் ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டுள்ளது.

இதற்குள் தமிழரசு கட்சி…. கொழும்பு, கண்டியில் போட்டி என்று உசுப்பேத்தல் விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த முறை சந்திரசேகரை யாழ்ப்பாணம் அடித்து துரத்தும் அது தான் போட்டியை தவிரக்க. வேட்பு மனுக்கள் நிராகரித்து விடுகிறார்கள் அதுவும் அரச்சுனாக்கு புழுத்த பயம் 🤣

அர்ஜுனா யார் எண்டு கேட்ட சின்ன பிள்ளையும் சொல்லும்..சும்மா அதிருதில்ல... 🤣

1 hour ago, தமிழ் சிறி said:

கௌசல்யாவும் சட்டத்தரணி என்றார்கள்.

தமது கட்சி விண்ணப்பத்தை நிரப்புவதிலேயே கோட்டை விட்டு விட்டார்கள்.

யாழ்ப்பாண சட்டம் வேறு கொழும்பு சட்டம் வேறு....அது தான் தங்கம் பிழை விட்டிட்டா...🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

அர்ஜுனா யார் எண்டு கேட்ட சின்ன பிள்ளையும் சொல்லும்..சும்மா அதிருதில்ல... 🤣

யாழ்ப்பாண சட்டம் வேறு கொழும்பு சட்டம் வேறு....அது தான் தங்கம் பிழை விட்டிட்டா...🤣

ஸ்ரீலங்காவுக்கும், தமிழ் ஈழத்துக்கும் வெவ்வேறு சட்டம் வழமையானதுதானே. 😂

தங்கத்தின்... யாழ்ப்பாண மேயர் கனவும் எல்லோ இதாலை, நழுவி போய் விட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவுக்கும், தமிழ் ஈழத்துக்கும் வெவ்வேறு சட்டம் வழமையானதுதானே. 😂

தங்கத்தின்... யாழ்ப்பாண மேயர் கனவும் எல்லோ இதாலை, நழுவி போய் விட்டது. 🤣

தங்கம் சின்ன பிள்ளை. காலம் இருக்கிறது கவலைப்பட வேண்டாம் எப்படி தங்கம் நல்ல மேயரா??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கௌசல்யாவும் சட்டத்தரணி என்றார்கள்.

மணிவண்ணன் கட்சியும் நிராகரிப்பு என்றால்

எவ்வளவு அனுபவம் உள்ளவர் சட்டத்தரணி

கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி.

இப்போதும் நம்ப முடியாமல் இருக்கிறது.

இவர்களை எல்லாம் நம்பி பணத்தைக் கொட்டி தமது தரப்பு சட்டத்தரணியாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே?

6 hours ago, putthan said:

யாழ்ப்பாண சட்டம் வேறு கொழும்பு சட்டம் வேறு....அது தான் தங்கம் பிழை விட்டிட்டா

5 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவுக்கும், தமிழ் ஈழத்துக்கும் வெவ்வேறு சட்டம் வழமையானதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரை மோடயா என்று பெருமை கொள்பவர்கள் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

தங்கம் சின்ன பிள்ளை. காலம் இருக்கிறது கவலைப்பட வேண்டாம் எப்படி தங்கம் நல்ல மேயரா??

உண்மையை சொல்லுறன் கோவிக்காதேங்கோ கந்தையா அண்ணை.

தங்கத்துக்கு... மேயருக்கு உரிய முகவெட்டு, அறவே இல்லை.

ஏணி வைத்தாலும் எட்டாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

மணிவண்ணன் கட்சியும் நிராகரிப்பு என்றால்

எவ்வளவு அனுபவம் உள்ளவர் சட்டத்தரணி

கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி.

இப்போதும் நம்ப முடியாமல் இருக்கிறது.

இவர்களை எல்லாம் நம்பி பணத்தைக் கொட்டி தமது தரப்பு சட்டத்தரணியாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே?

எல்லாரும் வக்கீல் தொழில் செய்யாமல் விட்டு....

சட்ட திட்டங்களை மறந்து போனார்கள் போலுள்ளது.

ஜனாதிபதி வக்கீல் என்ற பட்டம் எடுத்த, சுமந்திரனின் தமிழரசு கட்சியும்

கிளிநொச்சியில், "புட்டுக் கொண்டு" போட்டுது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனின் விளக்கவுரையும் கேள்விக் கணைகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

உண்மையை சொல்லுறன் கோவிக்காதேங்கோ கந்தையா அண்ணை.

தங்கத்துக்கு... மேயருக்கு உரிய முகவெட்டு, அறவே இல்லை.

ஏணி வைத்தாலும் எட்டாது.

இலங்கையில் பதவியில் இருந்த மேயர்மாரை விட. தங்கம் எவ்வளவோ திறம். அவாவின் சிரிப்புக்கு கேட்காமல் இலங்கை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் தேவைக்கு அதிகமாகவும். செய்யும் அவா. சிரித்து காரியங்களை சாதித்து விடுவார் யாழ்ப்பாணம் ஒரு விலைமதிப்புயற்ற முதல்வரை தேர்தலுக்கு முதலே இழந்து விட்டது…… கவலையளிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

485161209_23877296695237853_690691254580

அர்ச்சுனாவின் மேலுள்ள பதிவை பார்க்க,

தங்கத்தை... வெளியேற்றி விட்டார் போலுள்ளது.

அல்லது... இது அவரின் ஒரு வகை நடிப்பாகவும் இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Tவேட்புமனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன.

உதவிக்காக போட்டிருந்த மேசைக்கு

கெளரவம் கருதி யாரும் போய் சரி பார்ப்பதில்லை.

நல்ல சுவாரிசியமான கலந்துரையாடல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Tவேட்புமனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன.

உதவிக்காக போட்டிருந்த மேசைக்கு

கெளரவம் கருதி யாரும் போய் சரி பார்ப்பதில்லை.

நல்ல சுவாரிசியமான கலந்துரையாடல்.

தமிழ் கட்சிகள் விட்ட பிழையை சுட்டிக் காட்டிய காணொளி.

ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள். நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு பெரும் பாலும் தனது தவறு தான் காரணம் என்பதை அர்ச்சுனா ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கின்றாராம்.

யாழ்பாணத்து மேயராக வர இருந்தவர் 🙄 கந்தையா அண்ணா சொன்ன கவுசல்யாவை அரசியலில் இருந்து அருச்சுனா விலக்கி வைத்துள்ளாராம்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன்விடும் ஒவ்வொரு பிழையும் அவற்றைத் திருத்திக் கொண்டு அவன் மேலே செல்வதற்கான படிக்கட்டுகள்

இப்போது அசச்சுனா சரியான வழியில் செல்லாவிட்டால் இன்னும் சறுக்குவார்

நரேந்திரனைதனது அரசியலிலிருந்து ஓய்வுக்கு அனுப்பியது அவருடைய எதிர்காலத்திற்கு சிறந்தது

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் கட்சிகள் விட்ட பிழையை சுட்டிக் காட்டிய காணொளி.

ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள். நன்றி ஈழப்பிரியன்.

23 minutes ago, வாத்தியார் said:

மனிதன்விடும் ஒவ்வொரு பிழையும் அவற்றைத் திருத்திக் கொண்டு அவன் மேலே செல்வதற்கான படிக்கட்டுகள்

சட்டத்தில் இருப்பதை விட மேலதிகமாக தேர்தல் ஆணையாளர் தனது இஸ்டத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக மணிவண்ணன் குற்றம் சாட்டுகிறார்.

அதாவது ஒரு வேட்பாளர் தவறு செய்திருந்தால் அந்த வேட்பாளரை மட்டுமே நிராகரிக்க முடியும்.

ஒட்டுமொத்த குழுவையோ கட்சியையோ நிராகரிக்கக் கூடாது என்று சட்டத்தில் உள்ளதாக சொல்கிறார்.

கடந்த தேர்தல்களிலும் பலர் நிராகரிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் அவர்களை மாத்திரமே நிராகரித்தார்கள்.

இப்போது நல்லூரில் கையெழுத்தில்லாமல் தாக்கல் செய்த தமிழரசின் வேட்புமனு எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

தமிழரசுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு பெரும் பாலும் தனது தவறு தான் காரணம் என்பதை அர்ச்சுனா ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கின்றாராம்.

யாழ்பாணத்து மேயராக வர இருந்தவர் 🙄 கந்தையா அண்ணா சொன்ன கவுசல்யாவை அரசியலில் இருந்து அருச்சுனா விலக்கி வைத்துள்ளாராம்

ஏன்?? என்ன காரணம்?? வேட்பாளர்கள் மனுக்களை தாயாரித்தது ...பரீசிலித்தது அவாவா.??? வேட்பாளர்கள் மனுக்கள். நிராகரித்ததுக்கு இவாவின். பிழை தான் காரணமா ??

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து பழைய மாணவர்கள் குறிப்பிடப்பட்டு; இவர்கள் சிலர் தன்னை அரசியலில் ஓரங்கட்டுவதாக கங்கணம் கட்டியுள்ளதாகவும், கெளசல்யா ரரேந்திரனை மிக கேவலமான அளவில் திட்டமிட்ட வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாகவும் இந்த அழுத்தங்களின் வெளிப்பாடே கெளசல்யா ஒதுங்குவதற்கான காரணமாக அமையலாம் எனும்படியான அர்ச்சனா அவர்களின் ஒரு காணொளி பார்த்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.