Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3 30 MAR, 2025 | 04:14 PM

image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார்  திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. 

ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. முதலில் கார் எஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது.

இந்த கார் ரஸ்ய ஜனாதிபதி மாளிகையின்  ஜனாதிபதி சொத்து முகாமைத்துவ துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென பாதுகாப்பு  கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கார் வெடித்த சம்பவம் ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஸ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஸ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.virakesari.lk/article/210640

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கார் வெடித்த சம்பவம் ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது

எத்தனை அதிகாரிகளின் தலையைப் புட்டின் கட்டிங் செய்யப் போறாரோ ?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நந்தி said:

எத்தனை அதிகாரிகளின் தலையைப் புட்டின் கட்டிங் செய்யப் போறாரோ ?

பூட்டினே வெடிக்க வைத்தாரோ தெரியாது.

போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்கிறார் இல்லை என்று ரம் வேறு பம்முகிறார்.

Trump criticizes Putin and threatens adversaries with new tariffs as he barrels toward April 2 deadline

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

பூட்டினே வெடிக்க வைத்தாரோ தெரியாது.

இருக்கும், கொலையைக் குலையாகச் செய்யும் கலை தெரிந்த தலைகள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் நாடகம் தான்

புட்டினை கொல்லும் சதியாக கார் குண்டு வெடிப்பு இருந்திருந்தால் பல ரஷ்ய அதிகாரிகள் சிறையில் அடைக்கபட்டும் கொலை செய்யபட்டும் இருப்பார்கள். பெலரஸ் ஆட்சியில் உள்ள புட்டினின் பொம்மை கண்டணம் தெரிவிக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நந்தி said:

இருக்கும், கொலையைக் குலையாகச் செய்யும் கலை தெரிந்த தலைகள் இவர்கள்.

மேற்கத்தையவர் கரங்கள் இரத்தக்கறை படியாத கரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர் கரங்கள் இரத்தக்கறை படியாத கரங்கள்.

கூட்டு சேர்ந்து(அலைட் வொர்ஸ்) கொலை செய்வார்கள் ..ஆனால் கிழக்கைத்தைய‌ர் 😅 தனித்து செய்வார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர் கரங்கள் இரத்தக்கறை படியாத கரங்கள்.

மறுத்து அளிப்பார்கள் என்று பார்த்தால் இவரும் நந்தி உடன் சேர்ந்து ஒத்து. பாடுகிறார்

On 30/3/2025 at 18:44, ஏராளன் said:

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ

பழைய கார். அது தான் எரித்து. விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது!

adminMarch 30, 2025

RUSSIA.jpeg?fit=1170%2C658&ssl=1

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, அருகிலுள்ள உணவகத்தின் ஊழியர்கள் தீப்பற்றிய காரின் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோ காட்சிகளில் காரிலிருந்து அடர்ந்த கரும் புகை கிளம்புவதையும், காரின் பின்புறம் சேதம் அடைந்ததையும் காணமுடிகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காரின் இயந்திரத்தில் தீப் பற்றியதாகவும், அதிலிருந்து புகை வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வௌிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘புடின் விரைவில் இறந்துவிடுவார், இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் விரைவில் முடிவுக்கு வரும்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது’ என்று கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் எரிந்ததை அடுத்து, அவரது மரணம் தொடர்பான தகவல்களை ஜெலென்ஸ்கி கணித்துள்ளதாக பல கதைகள் வெளிவருகின்றன.

அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தியோகபூர் கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2025/213999/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.