Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.

ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர், தனது மகனின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் சிறையிலிருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகிறார். ஆனால், அவர் வெளியே வரும் சமயத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மகன் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

HinduTamil8thAprilHinduTamil8thApril

குடும்பத்தோடு மீண்டும் சேரும் கனவோடு வரும் ஏகேவிடம், இந்த பிரச்சினைகளை மீண்டும் சரிசெய்யுமாறு அவரது மனைவி சொல்கிறார். தன் மகனை சிக்க வைத்தது யார் என்று கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை.

சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது.

ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை ‘கூஸ்பம்ப்ஸ்’ ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்.

சரி, எழுதிய திரைக்கதையை குறைந்தபட்சம் கோர்வையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், காட்சிகள் இஷ்டத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஹீரோ நினைத்தால் ஜெயிலில் மகனுடன் வீடியோ கால் பேசுகிறார். நினைத்தபோது மூன்று மாதத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறார். இந்தக் காட்சிக்கு நியாயம் செய்கிறேன் பேர்வழி என போலீஸ்காரரான சாயாஜி ஷிண்டேவுக்கும் அஜித்துக்கும் 17 வருட பழக்கம் என்று ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஒரு வசனம் வேறு. எந்தக் காட்சியிலும் மருந்துக்கும் ‘டீடெட்டெயிலிங்’ என்ற ஒன்று இல்லவே இல்லை.

இது ஒரு ஸ்பூஃப் படமா? அல்லது முந்தைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களுக்கான கோர்வையா என்ற குழப்பம் கடைசி வரைக்குமே நீடிக்கிறது. படத்தில் நினைவில் இருக்கும் காட்சிகள் என்று சொன்னால் ‘இளமை இதோ இதோ’ பாடல் பின்னணியில் ஒலிக்க நடக்கும் பார் சண்டை. இடைவேளை காட்சி (அதிலும் ஒரு படத்தின் ரெஃபரன்ஸ்) என ஒரு சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் படம் போரடிக்காமல் காட்சிகள் சென்றாலும், படம் முடிந்த பிறகு யோசித்தால் அஜித்தின் பழைய படங்களின் குறியீடுகள் மட்டுமே நினைவில் தேங்கியிருக்கின்றன.

படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. நெகட்டிவ் தன்மை பொருந்திய ஹீரோ கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரித்து மேய்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிகரெட், குடி என்று வந்தாலும், அஜித் எந்த காட்சியிலும் மது, சிகரெட் பயன்படுத்துவது போல நடிக்காதது பாராட்டத்தக்கது.

அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷின் பணி பாராட்டுக்குரியது. பாடல்களின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் மட்டுமே ஓகே ரகம். மற்றவை நினைவில் இல்லை. அபிநந்தன் ராமானுஜத்தின் ரெட்ரோ ஸ்டைல் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல இருப்பது உறுத்தல்.

என்னதான் படத்தின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் ரெஃபரன்ஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ் என இருந்தாலும் அடிப்படையாக ஒரு வலுவான கதை, திரைக்கதை அவசியம். ஆனால் அவை இப்படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங். இப்படத்தில் வரும் ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘வரலாறு’, ‘பில்லா’ போன்ற படங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் குறியீடுகளாக வைப்பதற்கு அவற்றில் இருந்த நல்ல திரைக்கதையே காரணம். ஆனால் வெறுமே ‘ஃபேன் சர்வீஸ்’ என்ற பெயரில் எடுக்கப்படும் இது போன்ற படங்களை எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம்.

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்! | Good Bad Ugly Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

491470885_1115630293913161_7475523520979

அண்மையில் வெளிவந்த "குட் பேட் அக்லி" என்னும் அஜித் படத்தில்... இளையராஜாவின் பாடல்களை, அவரின் அனுமதி இல்லாமல் பயன் படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நட்டஈடு கேட்டு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்.

இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாறேன், என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்படுள்ளமைக்கு நஷ்ட ஈடு கோரிக்கை!

Vaanam.lk

1 hour ago, தமிழ் சிறி said:

தம் படம் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக, இளையராஜா வின் இசையை பயன்படுத்தி நன்றாக காசு சம்பாதித்து விட்டு, அதற்கான பங்கை கொடுக்காமல் விடுவது தான் திருட்டு. இவர்கள் கண்டிப்பாக உரிய முறையில் பணம் கொடுத்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

Music rights படி இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளில் இசையமைப்பாளருக்கே பாடலின் உரிமை சொந்தம். அத்துடன் ராயல்டி மூலம் பெறப்படும் பணம் பாடலை எழுதியவருக்கு, அதை வெளியிட்ட இசை நிறுவனத்துக்கு பகிரப்படும். IPRS நிறுவனம் இந்தியாவில் இதற்காகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

இளையராஜா தனது இசை விடயத்தில்… மிகவும் கறாராக இருப்பவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருக்க… அவரின் அனுமதி இல்லாமல் அவரின் பாடலை இவர்கள் என்ன அசட்டு துணிச்சலில் பயன் படுத்தினார்கள் என்று தெரியவில்லை.

சில வேளை… அந்தப் படத் தயாரிப்பாளர், இளையராஜா வக்கீல் நோட்டீஸ் கொடுப்பார் என்று தெரிந்ததால், மக்களிடம் படம் விரைவாக சென்றடையும் என்ற ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை நேற்று தியேட்டரில் பார்த்தேன்.. அருகில் நான்கு இந்தியன் தமிழ் ஆன்ரிமார் ஒரே கூச்சல்!

படத்தில் கதை என்று ஒன்றுமில்லை.. ஒரு விசர்ப்படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்று சைக்கோலொஜி புரியாமல் இருப்பதே நல்லது!

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kavi arunasalam said:

உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.

18 வயசுப் பெண்கள் குழந்தைப் பிள்ளைகள் மாதிரித் தெரிகின்றார்கள் என்பது உண்மைதான் 😏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.

எத்தினை வயதிலிருந்து அங்கிள் வயது ஆரம்பமாகும்? ஏனென்றால் என்னை பத்து வயதிலிருந்தே சிலர் மாமா என்று கூப்பிடத் தொடங்கீட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 05:06, கிருபன் said:

இந்தப் படத்தை நேற்று தியேட்டரில் பார்த்தேன்.. அருகில் நான்கு இந்தியன் தமிழ் ஆன்ரிமார் ஒரே கூச்சல்!

படத்தில் கதை என்று ஒன்றுமில்லை.. ஒரு விசர்ப்படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்று சைக்கோலொஜி புரியாமல் இருப்பதே நல்லது!

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

சோபாவிலிருந்தா😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

சோபாவிலிருந்தா😂

ஆம். காலைக் கூட நீட்டிக்கொண்டு ஹாயாகப் பார்க்கலாம்😜

ஆனால் வீட்டில் உள்ள சோபாவில் இருந்து பார்க்கவில்லை😆

0_Screenshot-2024-02-07-at-43312-PM.png

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2025 at 17:06, கிருபன் said:

இந்தப் படத்தை நேற்று தியேட்டரில் பார்த்தேன்.. அருகில் நான்கு இந்தியன் தமிழ் ஆன்ரிமார் ஒரே கூச்சல்!

படத்தில் கதை என்று ஒன்றுமில்லை.. ஒரு விசர்ப்படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்று சைக்கோலொஜி புரியாமல் இருப்பதே நல்லது!

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

நாங்க புதிய முதலமைச்சரை வெளிக்கிடுத்தி

நீங்க புள்ளிகள் போடுமட்டும் காவலிருக்க

திரையரங்கில் படுத்துக் கிடந்து அன்ரிமாரை ரசித்துக் கொண்டிருக்கிறார்.

இனிமேல் உடனுக்குடன் புள்ளிகளைப் போட்டுவிட்டு யாரையாவது ரசியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/4/2025 at 23:06, கிருபன் said:

இந்தப் படத்தை நேற்று தியேட்டரில் பார்த்தேன்.. அருகில் நான்கு இந்தியன் தமிழ் ஆன்ரிமார் ஒரே கூச்சல்!

படத்தில் கதை என்று ஒன்றுமில்லை.. ஒரு விசர்ப்படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்று சைக்கோலொஜி புரியாமல் இருப்பதே நல்லது!

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்..🤣

போற போக்கை பாத்தால் மிச்சக்கதை ஒரே செக்ஸியாய் இருக்கும் போல கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, வாதவூரான் said:

எத்தினை வயதிலிருந்து அங்கிள் வயது ஆரம்பமாகும்? ஏனென்றால் என்னை பத்து வயதிலிருந்தே சிலர் மாமா என்று கூப்பிடத் தொடங்கீட்டினம்

திணறடிக்க வைக்கும் கேள்வி....😂

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 07:06, கிருபன் said:

இந்தப் படத்தை நேற்று தியேட்டரில் பார்த்தேன்.. அருகில் நான்கு இந்தியன் தமிழ் ஆன்ரிமார் ஒரே கூச்சல்!

படத்தில் கதை என்று ஒன்றுமில்லை.. ஒரு விசர்ப்படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகின்றார்கள் என்று சைக்கோலொஜி புரியாமல் இருப்பதே நல்லது!

நான் ஆன்ரிமாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்😂

கமலின் விக்ரம் படம் வந்திருந்த போது தொடரூந்தொன்றில் என மனிவியுடன் பயணம் செய்தேன், அந்த தொடரூந்தில் இருந்த இந்திய தமிழ் பெண்கள் விக்ரம் படம் தாறுமாறாக இருந்தது என கூறிக்கொண்டு வந்தார்கள், நான் அந்த படத்திற்கு போகவில்லை, வழமையாக வேலையால் வந்து (நீண்ட இரவு நேர வேலை) அப்படியே படத்திற்கு போவதால் படம் நன்றாக இல்லாவிட்டால் நித்திரை கொள்வதுண்டு அதனால் தேவையற்ற மனஸ்தாபம் வந்துவிடும் என்பதால் அந்த படத்திற்கு 3 டிக்கெட் எடுத்து எனது மனைவியின் நண்பிகளுடன் போய் பார்க்கும்படி கூறிவிட்டேன்.

படம் பார்த்துவிட்டு வந்து இனிமேல் படமே வேண்டாம் என கூறிவிட்டார்.

On 16/4/2025 at 03:41, நிழலி said:

தம் படம் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக, இளையராஜா வின் இசையை பயன்படுத்தி நன்றாக காசு சம்பாதித்து விட்டு, அதற்கான பங்கை கொடுக்காமல் விடுவது தான் திருட்டு. இவர்கள் கண்டிப்பாக உரிய முறையில் பணம் கொடுத்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

Music rights படி இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளில் இசையமைப்பாளருக்கே பாடலின் உரிமை சொந்தம். அத்துடன் ராயல்டி மூலம் பெறப்படும் பணம் பாடலை எழுதியவருக்கு, அதை வெளியிட்ட இசை நிறுவனத்துக்கு பகிரப்படும். IPRS நிறுவனம் இந்தியாவில் இதற்காகவே உள்ளது.

inside man எனும் கொலிவூட் படம் ஒன்றில் ரகுமானின் பாடலை பயன்படுத்த அனுமதி கோரிய போது ரகுமான் அதனை இலவசமாக கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் மணிரத்தினம் அதனை பயன்படுத்தி 2 கோடி வசூலித்ததாக எங்கோ கேள்விப்பட்ட நினிவுள்ளது.

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்

2 கோடி பணமா அல்லது அதனைவிட அதிகமா என சரியாக தெரியவில்லை, அத்துடன் அந்த கொலிவூட் படமா என்பதும் சரியாக நினைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

2 கோடி பணமா அல்லது அதனைவிட அதிகமா என சரியாக தெரியவில்லை, அத்துடன் அந்த கொலிவூட் படமா என்பதும் சரியாக நினைவில்லை.

Inside Man credits song HD

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்..🤣

போற போக்கை பாத்தால் மிச்சக்கதை ஒரே செக்ஸியாய் இருக்கும் போல கிடக்கு

ஆன்ரிமாரின் ரோதனையால் த்ரிஷாவையும் பிரியா வாரியாரையும் ரசிக்கமுடியாமல் போன கடுப்பில் கதை எல்லாம் வராது!

43647599-variyaar33.webp

ajith-08042025-400.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.