Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இப்படி நீலன் செய்ததற்கான ஆதாரம் தருவீர்களா?

அல்லது ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க பங்களிப்பதே புலிகள் அமைப்பை அவமானப்படுத்துவதற்கு சமன் என்கிறீர்களா?

நீலன். புலிகள் சார்பாக அல்லது தமிழ் மக்கள் சார்பாக பேசவில்லை இவர் சந்திரிக்காவை எதிர்த்து தமிழ் மக்களின் சார்பாக ஒருபோதும் வாதடவில்லை இவர் தமிழர் ஆனால் சத்திரிக்காவின். ஆள். சந்திரிக்காவின. ஆள் அவவுடன். என்ன பேச முடியும் இவர் செல்வ,பண்டா. ஒபபந்த்தை அமுல் செய். என்று செல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை ??

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

புலிகள் ரணில் உடன் விரும்பி ஒப்பந்தம் செய்யவில்லை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தான் செய்தார்கள் .....

இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை?

நேரடியாக அன்றி நீலன் போன்றோர் மூலம் ஏற்படுத்த முனைந்த ஏற்பாட்டை புலிகள் நீலனை போட்டு தள்ளி சிதறடித்ததால் - மேற்கு நாடுகள் தாமே நேரடியாக இறங்கி, புலிகளை மிரட்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.

நீலனை போட்டிருக்காவிட்டால் - இப்படியான இக்கட்டு புலிகளுக்கு வராமலே போயிருக்கலாம் அல்லவா?

3 hours ago, Kandiah57 said:

இவர்கள் உயிர் உடன் இருந்து இருந்தால் புலிகளை அழித்து இருக்க மாட்டார்களா ???

யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பார்கள்.

அதைபோலத்தான் இந்த லிஸ்டில் இருப்போரும் - இவர்கள் இருந்தால் நசல், ஆனால் போட்டுத்தள்ளினால் அதைவிட பெரிய நசல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை?

நேரடியாக அன்றி நீலன் போன்றோர் மூலம் ஏற்படுத்த முனைந்த ஏற்பாட்டை புலிகள் நீலனை போட்டு தள்ளி சிதறடித்ததால் - மேற்கு நாடுகள் தாமே நேரடியாக இறங்கி, புலிகளை மிரட்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.

நீலனை போட்டிருக்காவிட்டால் - இப்படியான இக்கட்டு புலிகளுக்கு வராமலே போயிருக்கலாம் அல்லவா?

இல்லை ஒரு தீர்வை யாரும் பேசி இலங்கையிடமிருந்து பெற முடியாது எனபதை நான் உறுதியாக நம்புகிறேன் யார் இலங்கையை ஆண்டாலுமகூட

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஆனால் புலிகளை அழிக்க நினைப்பவர்கள் கொல்லப்படுவது உண்டு காட்டி கொடுத்த எத்தனையோ பேரை சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். நான் சிலதுகளை நேரில் பார்த்து உள்ளேன் கம்பங்களில். உடல் கட்டி இருக்கும் கீழே ஒரு. துண்டில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதி இருப்பார்கள் மேல் சொல்லப்படுபவர்கள் தான் கொன்றது பிழையா???

தமது இராணுவ தகவல்களை எதிரிக்கு வழங்கும் ஒற்றர்களுக்கு, துணை, ஒட்டு படைகளுக்கு மரண தண்டனை வழங்குவதும்….

ஒரு குறித்த பிரச்சனைக்கு தம்மை விட வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும், ஆயுதம் தரிக்காத, நன்குஅறியப்பட்ட அரசியல் தலைவர்களை கொல்லுவதும் ஒன்றல்ல.

தமிழ் ஈழம் வேண்டும் என்பது எப்படி ஒரு நிலைப்பாடோ…அதே போல் தமிழ் ஈழத்துக்கு மாற்றாக பிரியாத இலங்கையுள் ஒரு தீர்வை பெற நாம் தயார் என்பதும் இன்னொரு நிலைப்பாடே.

இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது.

3 hours ago, Kandiah57 said:

இது தெரிந்தும்  விடுதலை போருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும் ????

ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்?

23 minutes ago, Kandiah57 said:

நீலன். புலிகள் சார்பாக அல்லது தமிழ் மக்கள் சார்பாக பேசவில்லை இவர் சந்திரிக்காவை எதிர்த்து தமிழ் மக்களின் சார்பாக ஒருபோதும் வாதடவில்லை இவர் தமிழர் ஆனால் சத்திரிக்காவின். ஆள். சந்திரிக்காவின. ஆள் அவவுடன். என்ன பேச முடியும் இவர் செல்வ,பண்டா. ஒபபந்த்தை அமுல் செய். என்று செல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை ??

இதற்கான பதில் மேலே சொல்லப்பட்டுள்து.

எதிரியோடு அடிபட சிலர் வேண்டும்.

எதிரியோடு நட்பாக இருந்து (முஸ்லிம் அமைச்சர்கள் போல்) காரியம் சாதிக்க சிலர் வேண்டும்.

இதில் நீலன் இரெண்டாம் வகை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது

ஆமாம் உண்மை தான் ஆனால் இவர்கள் புலிகளை அழிக்க உதவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்கியவர்கள் அமிர். புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மற்றும் எழுதுவது எல்லாம் தீர்வு இல்லை அது எந்த நிபந்தனையுமின்றி அமுல்படுத்தபபடவேண்டும அப்போ தான் அது தீர்வாகும் அமுல் செய்யவில்லை என்பதால் நீலன் எழுதியது தீர்வேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒரு தீர்வை யாரும் பேசி இலங்கையிடமிருந்து பெற முடியாது எனபதை நான் உறுதியாக நம்புகிறேன் யார் இலங்கையை ஆண்டாலுமகூட

இப்போ ஒன்றுக்கும் வாய்ப்பில்லை.

ஆனால் நீலன் மூலம் ஒரு திட்ட வரைபை இலங்கையை செய்ய வைத்து - அந்த வரைபை விட மேலதிகமாக எமக்கு வேண்டும் என்றோ அல்லது நீலன் சொன்ன முதல் வரைபுதான் எமக்கு வேண்டும் என்றோ கேட்டிருக்கலாம்.

அப்போ எம்மீது யாரும் பேச்சுவார்த்தையை குழப்பும், வன்முறையை நாடும், அரசியல்வாதிகளை கொல்லும் பயங்கரவாதிகள் என சொன்னால் அது எடுபடுவது குறைவாக இருந்திருக்கும்.

4 minutes ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை தான் ஆனால் இவர்கள் புலிகளை அழிக்க உதவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தகவல்களை வழங்கியவர்கள் அமிர். புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மற்றும் எழுதுவது எல்லாம் தீர்வு இல்லை அது எந்த நிபந்தனையுமின்றி அமுல்படுத்தபபடவேண்டும அப்போ தான் அது தீர்வாகும் அமுல் செய்யவில்லை என்பதால் நீலன் எழுதியது தீர்வேயில்லை

அப்ப ஒரு தீர்வே இல்லாத ஒரு வெறும் எழுத்துக்குத்தான் அமெரிக்காவின் உயர் பீடத்தில் நண்பர்களை கொண்ட ஒருவரை போட்டுத்தள்ளி - வாங்கி கட்டி கொண்டோமா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்?

4 minutes ago, goshan_che said:

இப்போ ஒன்றுக்கும் வாய்ப்பில்லை.

ஆனால் நீலன் மூலம் ஒரு திட்ட வரைபை இலங்கையை செய்ய வைத்து - அந்த வரைபை விட மேலதிகமாக எமக்கு வேண்டும் என்றோ அல்லது நீலன் சொன்ன முதல் வரைபுதான் எமக்கு வேண்டும் என்றோ கேட்டிருக்கலாம்.

அப்போ எம்மீது யாரும் பேச்சுவார்த்தையை குழப்பும், வன்முறையை நாடும், அரசியல்வாதிகளை கொல்லும் பயங்கரவாதிகள் என சொன்னால் அது எடுபடுவது குறைவாக இருந்திருக்கும்.

கேட்கலாம் தான் ஆனால் பாராளுமன்றம் மற்றும் புத்த பிக்குகள் அஙகீகரிக்கமாடடார்கள்

எனவே இலங்கையில் ஒரு தீர்வு எவராலும் எழுதி விட முடியும் யாழ் களம் கூட எழுதும் ஆனால் நிறைவேற்ற முடியாது ஏனெனில் பாராளுமன்றம் புத்த மதம் அங்கீகாரம்…………………… வழங்காது ...எனவே எழுதி எழுதி கிளித்து எறிந்து விடலாம் இதை புலிகள் நன்றாகவே அறிவார்கள் நீலன் அமிர். .......போனறோர். கவலைப்பட போவதில்லை அவர்கள் உயிர் கொடுத்து போராட்டங்களை செய்யவில்லை ........புலிகள் பல மடங்குகள் கவலைப்பட வாய்ப்புகள் உண்டு” நீலன் எழுதிய தீர்வு பாராளுமன்றம் புத்த பிக்குகள். அங்கீகாரம் வழங்கியவர்களா?? அல்லது வழங்குவார்களா??. எப்படி நிறைவேற்றப்படும் ??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கேட்கலாம் தான் ஆனால் பாராளுமன்றம் மற்றும் புத்த பிக்குகள் அஙகீகரிக்கமாடடார்கள்

ஆனால் அதை மீள மீள நாம் உலகிற்கு நியாபக படுத்தி, நடை முறையில் உதாரணங்கள் மூலம் காட்டி கொண்டும் இருக்க வேண்டும்.

அப்போதுதான் - இவர்களுக்கும் வேறு வழியில்லை என அரசுகள் இல்லாவிடினும், ஏனைய நாடுகளில் உள்ள பொது நோக்கர்களாவது சிந்திப்பார்கள்.

இல்லாமல் தீர்வை எழுத உதவினார் என்பதால் நாம் ஒரு தமிழரையே போட்டோம்- பழி முழுக்க எம்மீது. எல்லோரும் பிக்குகளை மறந்தே போனார்கள்.

3 hours ago, Kandiah57 said:

நீலன் அமிர். .......போனறோர். கவலைப்பட போவதில்லை அவர்கள் உயிர் கொடுத்து போராட்டங்களை செய்யவில்லை ........புலிகள் பல மடங்குகள் கவலைப்பட வாய்ப்புகள் உண்டு”

இது மிகவும் உண்மை.

அமிருக்கும் நீலனுக்கும் இது அவர்களின் பதவி, அதிகாரம் சம்பந்தபட்ட விடயம். ஆனால் புலிகளுக்கு இது ஒரு இறுதி இலக்கு சம்பந்தபட்ட விடயம்.

புலிகள் இந்த இனத்தின் நீடித்த சுதந்திர வாழ்வின் மீது சொந்த பிள்ளைகள் மீது பெற்றார் கொள்வது போல கரிசனை கொண்டிருந்தார்கள்.

அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை.

ஆனால்….

  1. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும்

  2. கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை.

ஆனால்….

  1. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும்

  2. கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்

அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார். இந்த வரலாறு தெரியாத கந்தையர் "நீலன் பா.உவாக வரத் துடித்த ஒரு அரசியல்வாதி" என்ற அர்த்தத்தில் மேலே ஒரு கருத்து எழுதியிருக்கிறார். நீங்களும் இதை மறுக்காமல் நீலனைத் தேர்தல், பதவி அரசியல் செய்த ஒருவராக சித்திரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீலன், புலிகளின் தலைமைக்கு ஈடாக அல்லது அதை விட மேலாக மானசீகமாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முயன்ற ஒருவர் என்பதே என் புரிதல். இதற்கான சில சான்றுகளை ஐலண்ட் முன்னைய திரியில் பகிர்ந்திருக்கிறார் என நம்புகிறேன்.

நீலன் கொலை விடயத்தில் நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நன்னி குறிப்பிட்ட முன்னைய திரியிலேயே எழுதி முடித்தாகி விட்டது. அந்த திரியிலேயே எழுதிய நன்னி, விசுகர் உட்பட்டவர்களின் கருத்தின் படி நீலன் கொலைக்கு ஒரேயொரு காரணம் தான்: "புலிகள் கொன்றார்கள், எனவே அவர் கொல்லப் பட வேண்டியவர் தான். இதைக் கண்டிப்பது, கேள்வி கேட்பது புலிவாந்தி" அம்புட்டு தான்😂.

அதை விட, அந்த முன்னைய திரியை அடித்து நூக்க ஒரு பெரிய பொய்யையும் தூக்கிப் போட்டிருந்தார்கள், "நீலன் கொலைக்கு புலிகள் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள்" என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதை யாரும் அங்கே சுட்டிக் காட்டவில்லை.

மொத்தத்தில், நீலன் கொலையை நியாயம் செய்யும் குத்தி முறிதல் என்பது நாம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட ஒரு உரோமத்தையும் எங்கள் இனப் பிரச்சினையில் பிடுங்கிப் போடப் போவதில்லை எனச் சுட்டும் ஒரு நோய்க்குணங்குறியாகவே (symptom) எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இது உங்கள் கருத்துகள் ஆனால் நீலன் ஏன தீர்வு எழுத வேண்டும் நீலன் குழந்தை இல்லை எனவே நீலனுக்கு தெரியும்

பிக்கள். அனுமதிக்க மாடடார்கள்.

பாராளுமன்றம் அனுமதிக்காது

இந்தியா விரும்பாது ஏனென்றால் இந்தியா மாநிலங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுததப்பட்டவை

நீலனுக்கு 100%. தெரியும் தான் எழுதும் வரைபு அமுலுக்கு வரவே வரது

நீலன் நன்கு கற்று அறிந்த அறிஞர்

அமுல் படுத்த முடியாத வரைபை ஏன் எழுதினார்???

நான் நீலனின் கொலையை ஆதரிக்கவில்லை ஆனால் அமுலில் வராது” என்று 100% தெரிந்தும் வரைபு எழுதியது பிழை ஆகும் பதில்கள் தாருங்கள்” தொடர்ந்து விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

கந்தையர், தொடர்ந்து உங்களுடன் விவாதிக்க நீங்கள் முதலில் அர்த்தமுள்ள வகையில் பேச வேண்டும். பூனைக்கு சிகையலங்காரம் செய்வது மாதிரியான திரிகளில் எனக்கு ஆர்வமில்லை.

உங்கள் லொஜிக்கின் படி புலிகளின் 2002 முயற்சி, ஒஸ்லோ பிரகடனம் (அப்படியொன்று இல்லை என்போரும் உள்ளனர்), 2005 இல் மகிந்த தேர்தலில் வெல்ல மறைமுகமாக உதவியது -இவையெல்லாமே "தண்டனைக்குரிய பிழைகள்". அந்தப் பிழைகளுக்காகத் தான் புலிகள் அமைப்பு தாமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நீங்கள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார். இந்த வரலாறு தெரியாத கந்தையர் "நீலன் பா.உவாக வரத் துடித்த ஒரு அரசியல்வாதி" என்ற அர்த்தத்தில் மேலே ஒரு கருத்து எழுதியிருக்கிறார். நீங்களும் இதை மறுக்காமல் நீலனைத் தேர்தல், பதவி அரசியல் செய்த ஒருவராக சித்திரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீலன், புலிகளின் தலைமைக்கு ஈடாக அல்லது அதை விட மேலாக மானசீகமாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முயன்ற ஒருவர் என்பதே என் புரிதல். இதற்கான சில சான்றுகளை ஐலண்ட் முன்னைய திரியில் பகிர்ந்திருக்கிறார் என நம்புகிறேன்.

நீலன் கொலை விடயத்தில் நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நன்னி குறிப்பிட்ட முன்னைய திரியிலேயே எழுதி முடித்தாகி விட்டது. அந்த திரியிலேயே எழுதிய நன்னி, விசுகர் உட்பட்டவர்களின் கருத்தின் படி நீலன் கொலைக்கு ஒரேயொரு காரணம் தான்: "புலிகள் கொன்றார்கள், எனவே அவர் கொல்லப் பட வேண்டியவர் தான். இதைக் கண்டிப்பது, கேள்வி கேட்பது புலிவாந்தி" அம்புட்டு தான்😂.

அதை விட, அந்த முன்னைய திரியை அடித்து நூக்க ஒரு பெரிய பொய்யையும் தூக்கிப் போட்டிருந்தார்கள், "நீலன் கொலைக்கு புலிகள் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள்" என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதை யாரும் அங்கே சுட்டிக் காட்டவில்லை.

மொத்தத்தில், நீலன் கொலையை நியாயம் செய்யும் குத்தி முறிதல் என்பது நாம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட ஒரு உரோமத்தையும் எங்கள் இனப் பிரச்சினையில் பிடுங்கிப் போடப் போவதில்லை எனச் சுட்டும் ஒரு நோய்க்குணங்குறியாகவே (symptom) எனக்குப் படுகிறது.

அமிருக்கும் நீலனுக்கும் இடையான உங்கள் வித்தியாசப்படுத்தலை நான் ஏற்கிறேன்.

அமிர் போல் பொய் வாக்குறுதிகளை தந்து, உசுப்பேத்தி, இளைஞர்களை போருக்கு அனுப்பி விட்டு பின் அவர்களையே எதிர்த்து நீலன் அரசியல் செய்யவில்லை.

அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு.

ஆகவே நீலன் ஒரு பதவி மோகம் கொண்ட அரசியல்வாதி என நான் ஆமோதித்தது பிழைதான்.

ஆனால் அவர் 1996-99 தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் பலதை கண்டிக்காமல் - அதை செய்தவர்களோடு தனிப்பட்டும், அரசியலிலும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, கிரிசாந்தி, செம்மணி படுகொலைகள், என அப்போ அரங்கேறிய பலதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நான் கருதுகிறேன்.

புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா? என்றால் உண்மையில் என் பதில் எனக்கு தெரியாது என்பதே.

இந்த விடயத்தில் நான் ஆம் என அறுதியிட்டு கூற கூடியது புலிகளை மட்டுமே.

நீலன் ஒரு அமைதியான backroom operator போலவே எனக்கு அப்போ தென்பட்டார். கொல்லும் போது அவரின் திட்டங்கள் கூட நமுத்து போய் அதை சீண்டுவாரில்லாத நிலை வந்து விட்டது. அப்படி இருக்க ஏன் கொன்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை.

இதற்கான ஒரு பதில் இருந்தாலும் - அதை இங்கே கொலையை நியாயப்படுத்தி எழுதும் எவரும் தெரிந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

கந்தையர், தொடர்ந்து உங்களுடன் விவாதிக்க நீங்கள் முதலில் அர்த்தமுள்ள வகையில் பேச வேண்டும். பூனைக்கு சிகையலங்காரம் செய்வது மாதிரியான திரிகளில் எனக்கு ஆர்வமில்லை.

உங்கள் லொஜிக்கின் படி புலிகளின் 2002 முயற்சி, ஒஸ்லோ பிரகடனம் (அப்படியொன்று இல்லை என்போரும் உள்ளனர்), 2005 இல் மகிந்த தேர்தலில் வெல்ல மறைமுகமாக உதவியது -இவையெல்லாமே "தண்டனைக்குரிய பிழைகள்". அந்தப் பிழைகளுக்காகத் தான் புலிகள் அமைப்பு தாமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நீங்கள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

இல்லை ஒருபோதும் இல்லை இந்தியா இல்லை என்றால் தமிழ் ஈழம் ஐரோப்பாவில் இருந்திருந்தால் புலிகள் வெற்றி பெற்றுருப்பார்கள். உங்களுக்கு ஒரு எண்ணம் உண்டு” நான் படித்தவன் என்பது அதை நானும் எற்கிறேன். ஆனால் நீலன். வரைபு எழுதியது 100 %. பிழையாகும். சேர்.

புக்குகள். இருக்கும் போது

பாராளுமன்றம் இருக்கும் போது

உப்பு சப்பற்ற அதிகாரம் கொண் இந்தியா மாநிலங்கள் இருக்கும் போது.

இலங்கையில் யார் வரைவு எழுதினாலும் நடைமுறையில் வாராது

வரும் என்று நிறுவுங்கள. முடியுமா?? இல்லை முடியாது சேர.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு.

அது பிரச்சனையில்லை ஆனால் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் வரையும் தீர்வை இலங்கையில் அமுலுக்கு கொண்டு வர முடியும் என்பது பிழையான. வாதம் இதை நான் உறுதி யாக கூறுகிறேன்

தீர்வை வரைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

பிக்குமார் அனுமதி தேவை

பாராளுமன்றம் அனுமதிக்க வேண்டும் இந்தியா விரும்ப வேண்டும்

எனவே எந்தவொரு நல்ல தீர்வும். இந்த மூன்றையும். கடந்து வந்தால் மட்டுமே அமுபடுத்தப்படும். இது பல. படித்த மேதாவிகளுக்கு புரியவில்லை என்பது சோகம்

தான் எனக்கு

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

எமது இராணுவ பலம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் ஆயுட்கால உழைப்பு. ஆனால் அவர் இல்லாமல் போனதும் அந்த பலத்துக்கு என்ன நடந்திருக்கும் என்பதை 2009 பின்னான நிக்ழவுகள் காட்டுகிறன

மிக காத்திரமான புள்ளியை சுருக்கமாக சுட்டிக்காட்டியுளீர்கள். நன்றி.

இந்த விடயம் தமிழர் தரப்பில் சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒரு புள்ளி என்று நினைக்கிறேன். ஒரு விடுதலை இயக்கத்திற்கு தனியே இராணுவபலம் என்பது நிலையற்றது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஒரு குறுகிய காலத்திலேயே அடித்து துவம்சம் செய்யக்கூடியது இராணுவபலம். அதை செய்து காட்டினார்கள்.

ஆனால் தனது இலக்குகளை நோக்கி முன்னேற விரும்பும் ஒரு விடுதலை இயக்கத்திற்கு “அரசியல், ராஜதந்திர, அனைத்துலக நல்லுறவு”, என்ற பலம் மிக மிக முக்கியமானது. உலக அரசியல் சமன்பாட்டின் மாற்றங்களினால் ஒரு வேளை அந்தப் பலத்தில் சில தளம்பல்கள் வந்தாலும் மீண்டும் சீர்செய்து(redictable) கொள்ளக்கூடியது. சிக்கல்களை உண்டாக்கினாலும் ஒரு போதும் பேரழிவை உண்டாக்காது.

துரதிஷரவசமாக விடுதலைப்புலிகள் இந்த பலத்தை உருவாக்குவதில் கவனம் எடுக்கவேயில்லை. எமது போராட்டத்தில் தார்மீக நியாயம் உள்ளது. எனவே, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எமது நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்து சொன்னால் போதும் அவர்கள் எமது கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டமே அவர்களின் அரசியல் சித்தாந்தமாக இருந்தது. ( இந்த விடயத்தில் திரு அன்ரன் பாலசிங்கம் உள்ளக ரீதியில் போராடித் தோற்றுப்போயிருகலாம் என்று நினைக்கிறேன்)

மாறாக விடுதலைப் போராட்டதை வெறும் இராணுவ சட்டத்துக்குள் அடைத்தனர். உலகின் பார்வையில், இது பன்முகப்படுத்தப்படாத ஒற்றை தலைமை இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் போராட்டம் என்று நினைக்க வைப்பதான பல செயல்கள் புலிகளின் வெளிநாட்டு கிளைகளால் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு உதவி செய்யும் பல செயல்கள் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசிற்கும் ஒரு நாட்டை உருவாக்க அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொள்ளாத செயல்கள் எமக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. உதாரணமாக ஐரோப்பிய யூனியன் புலிகளை தடை செய்த உடனே ஐரோப்பிய யூனியனை சேர்ந்த யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற புலிகளின் உத்தரவு அனைத்துலக மட்டத்தில் எதிமறை விளைவுகளையே ஏற்படுத்தியது. பின்பு அதே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை வேண்டி புலிகளின் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். அதை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என.

சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும்.

ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.

இப்பொழுது செலன்ஸ்கி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.தனது நாட்டு வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து விட்டார் என்றாலும் அமெரிக்கா போரில் நேரடியாக பங்களிப்பு செய்யுமா? புட்டின் போரை நிறுத்தி விட்டு பின்வாங்குவாரா?

இதனால் உக்கிரைன் பெற்ற நன்மை என்ன என்பது எப்போது தெரியவரும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மிக காத்திரமான புள்ளியை சுருக்கமாக சுட்டிக்காட்டியுளீர்கள். நன்றி.

இந்த விடயம் தமிழர் தரப்பில் சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒரு புள்ளி என்று நினைக்கிறேன். ஒரு விடுதலை இயக்கத்திற்கு தனியே இராணுவபலம் என்பது நிலையற்றது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஒரு குறுகிய காலத்திலேயே அடித்து துவம்சம் செய்யக்கூடியது இராணுவபலம். அதை செய்து காட்டினார்கள்.

ஆனால் தனது இலக்குகளை நோக்கி முன்னேற விரும்பும் ஒரு விடுதலை இயக்கத்திற்கு “அரசியல், ராஜதந்திர, அனைத்துலக நல்லுறவு”, என்ற பலம் மிக மிக முக்கியமானது. உலக அரசியல் சமன்பாட்டின் மாற்றங்களினால் ஒரு வேளை அந்தப் பலத்தில் சில தளம்பல்கள் வந்தாலும் மீண்டும் சீர்செய்து(redictable) கொள்ளக்கூடியது. சிக்கல்களை உண்டாக்கினாலும் ஒரு போதும் பேரழிவை உண்டாக்காது.

துரதிஷரவசமாக விடுதலைப்புலிகள் இந்த பலத்தை உருவாக்குவதில் கவனம் எடுக்கவேயில்லை. எமது போராட்டத்தில் தார்மீக நியாயம் உள்ளது. எனவே, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எமது நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்து சொன்னால் போதும் அவர்கள் எமது கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டமே அவர்களின் அரசியல் சித்தாந்தமாக இருந்தது. ( இந்த விடயத்தில் திரு அன்ரன் பாலசிங்கம் உள்ளக ரீதியில் போராடித் தோற்றுப்போயிருகலாம் என்று நினைக்கிறேன்)

மாறாக விடுதலைப் போராட்டதை வெறும் இராணுவ சட்டத்துக்குள் அடைத்தனர். உலகின் பார்வையில், இது பன்முகப்படுத்தப்படாத ஒற்றை தலைமை இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் போராட்டம் என்று நினைக்க வைப்பதான பல செயல்கள் புலிகளின் வெளிநாட்டு கிளைகளால் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு உதவி செய்யும் பல செயல்கள் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசிற்கும் ஒரு நாட்டை உருவாக்க அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொள்ளாத செயல்கள் எமக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. உதாரணமாக ஐரோப்பிய யூனியன் புலிகளை தடை செய்த உடனே ஐரோப்பிய யூனியனை சேர்ந்த யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற புலிகளின் உத்தரவு அனைத்துலக மட்டத்தில் எதிமறை விளைவுகளையே ஏற்படுத்தியது. பின்பு அதே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை வேண்டி புலிகளின் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். அதை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

காலில் விழுந்தாலும் சாவு நிச்சயம் என்பதால் நிமிர்ந்து நின்று செத்தேன். இதை புரிந்து கொள்ளும் வரை ....?????

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

காலில் விழுந்தாலும் சாவு நிச்சயம் என்பதால் நிமிர்ந்து நின்று செத்தேன். இதை புரிந்து கொள்ளும் வரை ....?????

நிமிர்ந்து நின்றவர்கள் மட்டும் தனியே சாகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்!

"போதும்" என்று சமாதானம் பக்கம் போக முயன்ற மக்களும் செத்தார்கள். "சமாதானம் செய்து பார்க்கலாம், முயன்று பார்க்கலாம்" என்று முன் வந்த நீலன் போன்றோரும் செத்தார்கள்.

இப்போது பெருமையுணர்வு மட்டும் தான் உங்களிடம் எஞ்சி நிற்கிறது. ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு மிகக் குறுகிய அடைவு நிலை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் உங்களுக்கு ஏற்ற வரலாற்றை உரோமம் அளவுக்கு ஆக்குகிறீர்கள். அது உங்கள் தனி உடமை. ஆனால் சத்தியாக்கிரகம் செய்தவர்களும் கொல்லப்பட்டார்கள் நீதிமன்றத்தை நம்பி சிறை சென்றோரும் கொல்லப்பட்டார்கள் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்..... ..... ..... என்ற வரலாறு தான் நிமிர்ந்து நின்று சாவோமானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அது பிரச்சனையில்லை ஆனால் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் வரையும் தீர்வை இலங்கையில் அமுலுக்கு கொண்டு வர முடியும் என்பது பிழையான. வாதம் இதை நான் உறுதி யாக கூறுகிறேன்

தீர்வை வரைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

பிக்குமார் அனுமதி தேவை

பாராளுமன்றம் அனுமதிக்க வேண்டும் இந்தியா விரும்ப வேண்டும்

எனவே எந்தவொரு நல்ல தீர்வும். இந்த மூன்றையும். கடந்து வந்தால் மட்டுமே அமுபடுத்தப்படும். இது பல. படித்த மேதாவிகளுக்கு புரியவில்லை என்பது சோகம்

தான் எனக்கு

அண்ணை. உண்மையில் இந்த “அமல் படுத்துடா தீர்வை” கோரிக்கைக்கு நான் மேலே இரு தரம் பதில் எழுதிவிட்டேன்.

மூன்றாவது தடவையாக:

  1. பிக்குகளும், பாராளுமன்றமும், இந்தியாவின் குறை அதிகாரப்பகிர்வும், இந்திய மத்திய அரசின் எதிர்ப்பும் இருக்கும் வரை - இலங்கையில் சிங்களவர் எமக்கு நியாயமான தீர்வை தரமாட்டார்கள். இது கனம் கந்தையா அண்ணை மட்டும் கண்டு பிடித்த விடயம் அல்ல. 99% சதவீதமான இலங்கை தமிழர் ஏற்று கொள்ளும் கள யதார்த்தம். நானே அண்மையில் என் பி பி வெற்றியில் பல யாழ் உறவுகள் குதூகலித்த போதும், இதற்கு முன் பல தடவையும் இதை எழுதியுள்ளேன்.

  2. ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதால் -வட்டுகோட்டை தீர்மானத்தை தலைக்கு வைத்து படுக்கவில்லை. திம்பு கோரிக்கையை போர்த்தி படுக்கவில்லை. 87 உடன்படிக்கையை ஏற்றுகொள்கிறோம் என அறிவிக்காமல் விடவில்லை. மங்கள முனசிங்க தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிக்காமல் விடவில்லை: பிரேமதாச, சந்திரிக்கா, ரணில் உடன் தனியே யுத்த தவிர்ப்பு மட்டும் அல்ல, சமாதான பேச்சுவார்த்தையும் கூட பேசாமல் விடவில்லை. ஓஸ்லோ பிரகடனத்தை ஏற்று கொள்ளாமல் விடவில்லை.

    இலங்கையில் பிக்குகள் தீர்வை தரமாட்டார்கள் என்பதால் இவற்றை எதையும் முயலாமல் விடவில்லை. அதே போல் இன்னொரு முயற்சிதான் நீலன் பங்களித்த தீர்வு திட்டமும்.

  3. புலிகளை தவிர ஏனைய அனைத்து ஈழத்தமிழர் அமைப்புகளும் தனி நாட்டு கோரிக்கையை கைவிட தயாராகவே இருந்தார்கள். அல்லது கைவிட்டார்கள். புலிகள் கூட 87 இலும், 2002-2007 வரையான காலத்திலும் கைவிட்டார்கள், அல்லது கைவிட்டதாக போக்கு காட்டினார்கள். பாலா அண்ணை இதை கைவிட வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை தலைவருக்கு சொன்னார் எனவும், அதனாலேயே அவர் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் படி பணிக்கப்பட்டார் என்றும் யாழில் சில கட்டுரைகளை வாசித்தும் உள்ளோம்.

  4. ஆகவே நீலன் எழுத உதவிய தீர்வு திட்டம், ஒன்றும் தமிழர் தரப்பு இதுவரை ஏற்க மறுத்த விடயம் அல்ல. அப்படி ஒரு திட்டத்தை எழுத உதவியதால் தமிழர் போராட்டத்தின் கற்பு ஒன்றும் களங்கப்படவும் இல்லை.

    ஒரே விடயத்தை நீலன் முன்வைத்தால் அது விடுதலை போராட்டத்துக்கு செய்யும் துரோகம். அதையே புலிகள் ஒஸ்லோவில் உடன்பட்டால் அது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்தல் என நீங்கள் வியாக்கியானப்படுத்த விழைவது, தர்க்க கேடானது.

பிகு

கொஞ்சம் தலைப்பில் இருந்து விலகி.

தமிழர் அரசியல் அபிலாசைகளை வட்டு கோட்டை பிரகடனத்தின் முன், வட்டு கோட்டை பிரகடனத்தின் பின் என பிரியுங்கள்.

வ.கோ.பி.மு நாம் கோரி நின்றது - எம்மை சம இலங்கையராக நடந்துங்கள், இன ஒதுக்கலை கைவிடுங்கள், இன வன்முறையை தவிருங்கள், மொழிக்கு சம அந்தஸ்து கொடுங்கள் - இவைதான்.

50:50 காலம், பின் தனி சிங்கள காலம் அனைத்திலும் இவைதான் எமது கோரிக்க்கைகள்.

அப்போதைய எமது கோரிக்கைகள், இந்திய மாநிலங்களை ஒத்த அதிகாரபகிர்வு என்பது கூட இல்லை, இணைந்த வடகிழக்கு மாகாண சபை கூட இல்லை. பின்னாளில் ஜே ஆர் தர முனைந்த மாவட்ட சபைக்கு நிகரான. ஒற்றையாட்சி இலங்கைக்குள் சம பிரசைகளாக நடத்துங்கள், பிராந்திய சபைகளை தாருங்கள் என்பதே பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படை.

வ.கோ.பி.பி தான் தனிநாடு என்ற கோரிக்கை, சுயநிர்ணயம், பாரம்பரிய வாழிடம், காணி அதிகாரம், குடியேற்றத்தை தடுத்தல், பொலீஸ் அதிகாரம் என எமது அபிலாசைகள் அடுத்த கட்டதுக்கு போனது. அதன் வழி வந்ததுதான் திம்பு கோட்பாடுகள்.

ஏன் நாம் முதல் கட்ட அபிலாசைகளில் இருந்து இரெண்டாம் கட்ட அபிலாசைக்கு போனோம்? முதல் கட்ட அபிலாசைகளை கூட இலங்கை எமக்கு தராது என்பதால்.

ஆனால் நீலன் காலத்தில் அரச கருமமொழி பிரச்சனை ஒழிந்து விட்டது. சிறி இல்லை. எமது பழைய கோரிக்கைகளையும், திம்பு கோரிக்கையாக உருவெடுத்து நிற்கும் எமது புதிய அபிலாசைகளையும் பலன்ஸ் பண்ணி, மண்டேலாவை விட அதிக சதவீத வாக்கில் வென்ற சந்திரிக்காவுக்கு சிங்களவர் மத்தியில் இருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி, சிங்கள மக்களும் ஏற்கும் ஒரு தீர்வை பெறலாம் என்று நீலன் முயன்றிருக்கலாம்.

நீலனின் இந்த முயற்சியை பிக்குகளும், புலிகளும் அனுசரித்து நடந்து - அதை அமல்படுத்த ஒரு வெளியை உருவாக்கி இருந்தால் - இன்று ஜேவிபி உருவாக்கி விட்டதாக சொல்லும் ஒப்பீட்டளவில் இன ஒதுக்கல் அற்ற இலங்கை அன்றே உருவாகி இருக்கவும் கூடும்.

1995 க்கு பின் இழக்கப்பட்ட அத்தனையையும் இழக்காது தவிர்த்திருக்கலாம்.

இது இப்படித்தான் நடந்திருக்கும் என நான் சொல்லவில்லை. பொருளாதார சிதைவுக்கு பின் சிங்கள கூட்டு மனோநிலை மாறியது போல் 1995 இல் நிலமை இருக்கவில்லை.

ஆனால் - மாறும், மாற்றலாம், வெளிநாட்டு அளுத்தத்தை தகுந்த முறையில் பயன்படுத்தலாம் என நினைத்து ஒரு மனிதன் ஒரு திட்டத்தை தயாரிக்க உதவுவது அப்படி ஒண்டும் பாரிய குற்றம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இப்பொழுது செலன்ஸ்கி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.தனது நாட்டு வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து விட்டார் என்றாலும் அமெரிக்கா போரில் நேரடியாக பங்களிப்பு செய்யுமா? புட்டின் போரை நிறுத்தி விட்டு பின்வாங்குவாரா?

இதனால் உக்கிரைன் பெற்ற நன்மை என்ன என்பது எப்போது தெரியவரும்?

மன்னிகவேண்டும் புலவர் என்னிடம் மாயக்கண்ணாடி ஏதும் இல்லை.

செலன்ச்கி இவ்வளவு இறங்கி போன பின்னும் டிரம்ப் அவரை கைம்கழுவலாம்….

ஆனால் செலன்ஸ்கி மிகவும் இறங்கி போய், தன் சுயமரியாதையை விட்டு கொடுத்து, அமெரிக்காவை உக்ரேனுக்கு எதிராக திருப்பும் புட்டினின் வியூகம் வென்று விட கூடாது என முயல்கிறார்.

குறைந்த பட்சம் அடுத்த நாலு வருடம் - அமெரிக்காவும், ரஸ்யாவும் சேர்ந்து உக்ரேனை அடிக்கும் நிலை வரக்கூடாது என்பதில் மிக சிரத்த்தையா செயல்படுகிறார்.

இதற்கு மேலும் அவரால் டிரம்ப்பை தன் பக்கம் வைத்திருக்க முடியாது போகலாம். செலன்ஸ்கி கொடுக்க முடியாத விலைகளை ரஸ்யாவிடம் கொடுக்கும் படி டிரம்ப் வற்புறுத்தி இது முறியலாம்.

ஆனால் செலன்ஸ்கியின் கொள்கை பிடிவாதத்தால் அல்லது நெகிழ்வு போக்கு இன்மையால் - மேற்குலகில் எதிரிகளை சம்பாதித்தார் என யாரும் சொல்ல முடியாது.

இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தலை நிமிர்ந்து சாவோம் என்று பீற்றுகிற தேசியர்கள் பல தாம் மட்டும் தப்பி ஓடு வந்து ஐரோப்பாவில் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தி தமது சந்ததிகளை இங்கே விருத்தி செய்து ஜாலியாக வாழ்ந்து கொண்டு அங்கே உள்ள அப்பாவி மக்கள் தலைநிமிர்ந்து சாகட்டுமாம். 1981 வரை வடகிழக்கின் சனத்தொதை ஏனைய தென் மாகாணங்களுக்கு ஈடாக வளர்சசி அடைந்தது என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/5/2025 at 00:49, goshan_che said:

என்ன அண்ணை மேடை ஏறி பேசும் அரசியல்வாதி போல்..

யுத்தம் முடிந்த பின் என்ன செய்தீர்கள்…

குறை சொல்லும் வாய்கள் நிறை சொல்லுமா..

என இறங்கி விட்டீர்கள்?

கொலைகள் தான் ஈழத்தமிழினத்தின் விதிகளை மாற்றியது என்றால் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் அனைத்தையும் மீள அலச வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2025 at 11:22, goshan_che said:

அப்படியாயின் எந்த சிங்கள அரசியல் தலைவரிடமும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும், யாரும் போயிருக்க கூடாது.

போகவில்லை.நோர்வேயின் ந(டி)டுநிலைமையை நம்பி தான் புலிகள் பேச்சுவாத்தைக்கு போனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2025 at 15:19, goshan_che said:

ஒரு முக்கியமான கேள்வி?

யாரும் பதில் சொல்ல விழையலாம்.

ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள்.

டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள்.

இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள்.

இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது.

இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர்.

இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன.

நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம்.

அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை.

நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகள் இருந்த்தார்கள். சந்திரிக்காவோ அல்லது நீலனோ ஒரு பேச்சும் நடத்தாமல் தீர்வு கண்டு விடுவார்களா?? அல்லது ஒரு திணிப்பை திணிப்போம் என தொடங்கினார்களா? அல்லது உலகத்துக்கு தாங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறோம் என நடிக்க சந்திரிக்கா நீலனை பயன்படுத்தினாரா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.