Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை - லக்ஷ்மன் நிபுணாராச்சி

Published By: DIGITAL DESK 2

09 MAY, 2025 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார்.

கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால்  வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது,

பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார். 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள்.

குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார்.

அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும்.

மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே  எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார்.

இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில்,

இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர்.

அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/214299

முழு பூசணிக்காயை சோர்றுக்குள் மறைக்கப்பார்கிறார்.

  • Replies 50
  • Views 2.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறு

  • நிழலி
    நிழலி

    இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர். குற்

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஊரில் கட்சி மற்றும் அதிகார செல்வாக்குகளால் தான் பல அஜாரகங்கள் நடக்கின்றன. இதை நாம் எல்லோரும் கண்கூடாகவே பார்த்திருப்போம். அதாவது ஊர்களில் பாவிக்கப்படும் வசனம்... "நான் ஆரெண்டு தெரியும் தானே" எண்டால்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தபட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்பட்டுள்ளார் என்ற செய்தி ஏ.ஆர்.வி லோசனின் செய்தி தொகுப்பில் பகிரபட்டுள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முழு பூசணிக்காயை சோர்றுக்குள் மறைக்கப்பார்கிறார்.

அழுக்கை மூடி மறைத்தால் அது சுத்தம் இது தான் ஜேவிபியின் கிளீன் ஸ்ரீலங்கை கொள்கை.

1 hour ago, யாயினி said:

சம்பந்தபட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்பட்டுள்ளார் என்ற செய்தி ஏ.ஆர்.வி லோசனின் செய்தி தொகுப்பில் பகிரபட்டுள்ளது..

இடமாற்றம் செய்பட்ட அந்த ஆசிரியர் தங்களுக்கும் வேண்டாம் என்று மாணவர்கள் பெற்றோர்கள் ஆர்பாட்டம் செய்தார்களாம். உண்மையாக பயம் வரும் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/5/2025 at 07:25, தமிழ் சிறி said:

குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்னர். உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர்.

ஆசிரியர்கள் மாணவிகள் மீது இப்படியான பாலியல் துஷ்பிரயோக நடத்தைகள் காலம் காலமாகவே நடந்து வருகின்றது. இதை இத்துடன் முடிவுக்கு கொண்டுவர அரசு அதற்குரிய கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

கொஞ்சம் அமெரிக்காவை எட்டிப்பாருங்கள். இப்படியான சேட்டைகளுக்கு.... தண்டனைக்குரியவர் வாழ்நாளில் வெளியுலக வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இடமாற்றமா? இந்த கழிசறையையும் அதன் நண்பரையும் பிணையில் வரமுடியாத படி உள்ளே போட வேண்டும்.

ஆனால் ஜேவிபி இவர்கள் வீட்டுக்கு பொலிஸ் காவல் கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2025 at 08:08, விளங்க நினைப்பவன் said:

அவர் ஜேவிபி தற்போதைய தேசிய மக்கள் சக்தி யின் ஆளாம்

தேர்தலுக்கு முன் நான் ரவுடி இல்லை..தேர்தலுக்கு பின் ...நானும் ரவுடி தான் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இடமாற்றமா? இந்த கழிசறையையும் அதன் நண்பரையும் பிணையில் வரமுடியாத படி உள்ளே போட வேண்டும்.

ஆனால் ஜேவிபி இவர்கள் வீட்டுக்கு பொலிஸ் காவல் கொடுக்கிறது.

53 minutes ago, putthan said:

தேர்தலுக்கு முன் நான் ரவுடி இல்லை..தேர்தலுக்கு பின் ...நானும் ரவுடி தான் ....

ஊரில் கட்சி மற்றும் அதிகார செல்வாக்குகளால் தான் பல அஜாரகங்கள் நடக்கின்றன. இதை நாம் எல்லோரும் கண்கூடாகவே பார்த்திருப்போம்.

அதாவது ஊர்களில் பாவிக்கப்படும் வசனம்...

"நான் ஆரெண்டு தெரியும் தானே" எண்டால்

அதுக்கு பிறகு எத்தினை சலாம் விழும் எண்டு தெரியுமெல்லோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது, இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் 'பி' அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmagves3w008zqpbs7xc8ca1i

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-2.jpeg?resize=750%2C375&ssl=1

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே தான் அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431484

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

MediaFile-2.jpeg?resize=750%2C375&ssl=1

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே தான் அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431484

இந்த ஊத்தைதான் சிறுமியை டியூசன் வகுப்பில் வைத்து அவமானப்படுத்தியதாம். இந்த ஊத்தைதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி வேட்பாளர்.

இன்னும் இந்த ஊத்தை மீது ஒரு வழக்கும் இல்லை.

சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட, அல்லது விசாரிக்கவாவது, சகல முகாந்திரமும் உள்ளது. ஆனால் இந்த ஊத்தையை ஜேவியும் குறிப்பாக சரோஜா அக்கா பாதுகாக்கிறனர். ஊத்தை தானாக சி ஐ டி க்கு போய், மானநஸ்டம் என புகார் கொடுக்கிறது.

இவரின் நண்பர்தான் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இந்த ஊத்தைதான் சிறுமியை டியூசன் வகுப்பில் வைத்து அவமானப்படுத்தியதாம். இந்த ஊத்தைதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி வேட்பாளர்.

இன்னும் இந்த ஊத்தை மீது ஒரு வழக்கும் இல்லை.

சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட, அல்லது விசாரிக்கவாவது, சகல முகாந்திரமும் உள்ளது. ஆனால் இந்த ஊத்தையை ஜேவியும் குறிப்பாக சரோஜா அக்கா பாதுகாக்கிறனர். ஊத்தை தானாக சி ஐ டி க்கு போய், மானநஸ்டம் என புகார் கொடுக்கிறது.

இவரின் நண்பர்தான் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.

//தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.//

இலங்கையில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலே.... என்ன அயோக்கியத்தனத்தையும் செய்து விட்டு, போலீசில் முறைப்பாடும் கொடுக்கலாம் என்று இருக்கும் போது.... பாதிக்கப்பட்டு, கல்வியை இழந்து... இடத்தை மாற்றி கல்வியை தொடர முற்பட் ட போதும், அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் உயிரை இழந்தவர்களை நினைக்க பெரும் ஆத்திரமும், வேதனையும்தான் ஏற்படுகின்றது.

இந்தப் பெண்ணை... ஆண் உறுப்பை காட்டி பாலியல் வக்கிரம் புரிந்த சங்கரன் என்ற உடுவில் வாத்தியாருக்கு, புத்தளத்திற்கு இடம் மாற்றி தண்டனை கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுமை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

//தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.//

இலங்கையில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலே.... என்ன அயோக்கியத்தனத்தையும் செய்து விட்டு, போலீசில் முறைப்பாடும் கொடுக்கலாம் என்று இருக்கும் போது.... பாதிக்கப்பட்டு, கல்வியை இழந்து... இடத்தை மாற்றி கல்வியை தொடர முற்பட் ட போதும், அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் உயிரை இழந்தவர்களை நினைக்க பெரும் ஆத்திரமும், வேதனையும்தான் ஏற்படுகின்றது.

இந்தப் பெண்ணை... ஆண் உறுப்பை காட்டி பாலியல் வக்கிரம் புரிந்த சங்கரன் என்ற உடுவில் வாத்தியாருக்கு, புத்தளத்திற்கு இடம் மாற்றி தண்டனை கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுமை.

ஆட்சி மாறினாலும்…

பழைய கள், புதிய மொந்தையில் என்ற நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-42-1.jpg?resize=600%2C300&ss

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

சம்பவத்தை அடுத்து மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன.

இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

https://athavannews.com/2025/1431527

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che பம்பலப்பிட்டியிலும் அந்தச் சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்று மேலுள்ள செய்தியில் உள்ளது.

நீங்கள் கூறிய ஊத்தைதான் இந்த வேலையையும் செய்திருக்கு போலுள்ளது.

இந்த விறுத்தத்தில்... தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள் என்று, சி.ஐ.டி பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8328.jpeg.53167788e243db488bf6

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1939446400145910 👈

மாணவி மன நோயாளி.

மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜின் பொறுப்பற்ற பேச்சு.

ஒரு கதைக்கு அப்படி வைத்துக் கொண்டாலும்.. ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு பெண் என்பதையும், தனக்கும் பிள்ளைகள் உண்டு என்பதையும் மறந்து பிள்ளையை இழந்த பெற்றோரின் மனநிலை ஏற்க மறுத்தும், அவர்களில் தவறு என்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார். இவருக்கும் அந்த சூழ்நிலை வந்தால் புரியும். இவரின் இந்த கருத்துக்கு இவர் ஆதாரம் கொடுக்க வேண்டும். பிள்ளைக்கு சிகிச்சை அளித்தவர், எப்போ எதற்காக சிகிச்சை அளித்தார் என்பதை விளக்க வேண்டும். ஆசிரியரின் அத்துமீறிய செயலால் மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆற்றுப்படுத்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அது மனநோய் அல்ல என்பதை பொறுப்புள்ள அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : கடந்தகால விசாரணைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விளக்கம் 

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு பிரதேசங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது,

 உயிரிழந்த மாணவி கடந்த ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் போது அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மே 19 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மாணவி மன விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில்,  தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் இந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு கடந்த 06 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : கடந்தகால விசாரணைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விளக்கம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che பம்பலப்பிட்டியிலும் அந்தச் சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்று மேலுள்ள செய்தியில் உள்ளது.

நீங்கள் கூறிய ஊத்தைதான் இந்த வேலையையும் செய்திருக்கு போலுள்ளது.

இந்த விறுத்தத்தில்... தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள் என்று, சி.ஐ.டி பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்.

இந்த சிறுமி முன்னர் படித்த பாடசாலை பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

அங்கேதான் சங்கரன் என்ற pedo காமுகனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

பெற்றார் வேறு பள்ளிக்கு மாற்றிய பின், சங்கரனின் நண்பனான நாராயணபிள்ளை சிவானந்தராஜா அவரின் தனியார் வகுப்பில் வைத்து இதை சொல்லி பலநூறு மாணவர் முன் சிறுமியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டினார்.

இந்த சுவாநந்தாராஜாதான் நான் சொன்ன ஜேவிபி ஊத்தை.

நிழலியின் பதிவில் படத்தோடு விபரம் உள்ளது.

இந்த ஊத்தை இராஸ்வரி டீச்சர் வயது போனதும், மகள் அவுஸ்ரேலியாவில் என்பதை வைத்து அந்த கட்டிடம், நிலம், டுயூட்டரி சகலதையும் லபக்கி கொண்டதாம்.

இதுக்குதான் சரோஜா அக்கா சப்போர்ட்.

On 8/5/2025 at 13:46, நிழலி said:

இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர்.

குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பிணையில் வெளியாவனர் பெயர்: சங்கரன்

படம்:

Sankar.png

ராஜேஸ்வரி கல்வி நிலையத்தின் உரிமையாளரும் மாணவியின் தற்கொலைக்கு தூண்டப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாராயணபிள்ளை சிவராஜா

படம்:

Sivanantha.png

பிரபல பாடசாலை என்று குறிப்பிடப்படும் பாடசாலையின் பெயர்:

இராமநாதன் மகளிர் கல்லூரி

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-52-1.jpg?resize=600%2C300&ss

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த உயிரிழந்த மாணவியின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்னவைக்கப்பட்டன.

https://athavannews.com/2025/1431635

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: 10 பேரடங்கிய குழு நியமனம்

image_57954b0d28.jpg

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority  தனி விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் தனியார் வகுப்பிலும் அந்த மாணவிக்கு மன உளைச்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாணவி  உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கடடஞசன-மணவ-வவகரம-10-பரடஙகய-கழ-நயமனம/175-357336

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணை

17 MAY, 2025 | 10:06 AM

image

(நா.தனுஜா)

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் ஆணைக்குழுவுக்கு அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 15 வயதுடைய மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் உயிர்மாய்த்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது. அவ்விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொட்டாஞ்சேனை தொடர்மாடிக்குடியிருப்பிலிருந்து மாணவியொருவர் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதற்கட்ட விசாரணை கடந்த 14 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், பம்பலப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விசாரணைக்காக ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் பாடசாலை அதிபர் மற்றும் கணிதபாட ஆசிரியர் ஆகியோர் காரணத்தை அறியத்தராமல், விசாரணைக்காக உரிய நேரத்துக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதற்குத் தவறியமையினால், ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அவர்களிடம் காரணம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினர். அதேபோன்று வலயக் கல்விப்பணிப்பாளரின் சார்பில் பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அதன்படி இச்சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதி வலயக் கல்விப்பணிப்பாளருக்கும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் விபரம் மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

அத்தோடு தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்ததுடன், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரை மீண்டும் 15 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு அழைப்புவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, எம்மால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை வெகுவிரைவில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று இவ்விடயத்துடன் தொடர்புடைய சகல அரச கட்டமைப்புக்களும் அவற்றின் பணிகளை உரியவாறு ஆற்றியிருக்கின்றனவா என்பது குறித்தும், யாரேனும் அம்மாணவியின் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கிறார்களா அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வோம். அத்தகைய சம்பவங்கள் பதிவாகியிருப்பின், அதுபற்றி உரிய தரப்பினர் பொறுப்புக்கூறவேண்டும்.

அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு கல்வி அமைச்சு உள்ளிட்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/214949

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; விசாரணைக்கு அழைத்தும் வராத அதிபரும் ஆசிரியரும்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; விசாரணைக்கு அழைத்தும் வராத அதிபரும் ஆசிரியரும்

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிர்மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/318077

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரைமாய்த்த பாடசாலை மாணவி கற்ற பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம்

Digital News Team 20 மே, 2025

உயிரைமாய்த்த பாடசாலை மாணவி கற்ற பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம்

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவி விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318163

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.