Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

நான் குறிப்பிட்டது தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கான நோக்கமாக ஆர்டிக்கல் 370 நீக்கம் ஒரு காரணியாக இருக்கும் என.

இருக்கலாம் ..அந்த சட்டம் அமுல்படுத்தாமல் இருந்திருந்தாலும் தாக்குதல் நடத்தியே இருப்பார்கள் ..ஆணிவேர் மதம் சார்ந்தது...பாகிஸ்தான் இந்தியா மீது செய்யும் தாக்குதல் யாவும் மதம் சார்ந்தவை ... மத கலவரத்தை தூண்டும் தாக்குதல் ....இந்த தடவை தாக்குதல் செய்யும்பொழுது இந்துவா? முஸ்லீமா என கேட்டு தாக்கியுள்ளனர்

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் கஸ்மீரிகளிடம் முடிவு வாக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டும் என ஐநா தீர்மானம் நிறைவேறியது.

ஆம் ஆனால் வெளியார் வெளியேறியபின்பே தேர்தல் என இந்தியா பின்னடித்தது. இன்னும் அடிக்கிறது.


ஆர்ட்டிகல் 370

இது கஸ்மீர் இந்தியாவுடன் சேரும் போது ஒரு “தற்காலிக” சரத்தாகவே உருவானது.

கஸ்மீரின் மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்த பின் அது இந்திய குடியுரிமை சட்டத்தின் எந்த பிரிவுகள் கஸ்மீருக்கும் அமலாக கூடியன என்பதை தீர்மானிக்கும். அதன் பின் மாநில கருவாக்க அசெம்பிளியே 370 வதை நீட்டிப்பதா இல்லையா என தீர்மானிக்கும். அதேபோல் இதை நீக்கும் அதிகாரம் மத்திய நாடாளுமன்றுக்கும் உள்ளது என சொன்னது இந்த ஆர்டிக்கில்.

மாநில கருவாக்க அசெம்பிளி அமைந்து, அது இந்திய அரசியல் சட்டத்தில் சில தமக்கு சேராது என தீர்மானித்தது. இதைத்தான் கஸ்மீர் சிறப்புரிமை என்பார்கள். இதன் உத்தியோக பூர்வ பெயர் 1954 ஆம் ஆண்டின் ஜனாதிபதி உத்தரவு. இதன் அடிப்படையில்தான் நீங்கள் மேலே சொன்ன காணி விடயங்கள் இருந்தன.

மாநில கருவாக்க அசெம்பிளி 370 ஐ நீக்காமலே கலைந்து விட்டது. இந்திய பாராளுமன்றமும் அதை நீக்கவில்லை. 70+ வருடமாக அது ஒரு நிரந்தர சரத்து என்றே கருதப்பட்டது.

ஆனால் அதன் இயல்பை பின்னாளில் வந்த பல ஜனாதிபதி உத்தரவுகள் குறைத்தன.

2019 இல் பிஜேபி இந்த சிறப்பு அந்தஸ்து முழுவதையும் நீக்கி, ஏனைய இந்திய மாநிலங்கள் போல் ஜம்மு கஸ்மீருக்கும் அரசியலமைப்பின் அத்தனை சரத்துகளும் பொருந்தும் என மாற்றினர்.

அத்தோடு, ஒரு காலத்தில் நாடாக இருந்த மாநிலத்தை, யூனியன் பிரதேசமாக தரம் இறக்கி, அதில் இருந்து லடாக் பகுதியை பிரித்து அநியாயம் செய்தனர்.

29 minutes ago, vasee said:

தகவலுக்கு நன்றி, அப்படியே இந்த ஆர்டிக்கல் 370 பற்றியும் அறியத்தாருங்கள் அது பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஒர் தூண் என்பார்கள் ஆனால் போர் என வந்துவிட்டா ஜனநாயக அரசுகள் எல்லாம் அந்த தூணை துப்பாக்கியினால் மறைத்துவிடுவார்கள் ...

"கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல்" என்று தலைப்பு வைத்து தமிழ்நாட்டில் யுரியுப் போட்டார்களே யார் அண்ணா அவர்களை அப்படி பொய் சொல்லும்படி துப்பாக்கியினால் பயமுறுத்தியது மக்களை பேய்காட்டி பெரும் தொகை மக்களை பார்வையிட வைத்து பணம் பண்ணுவது தான் நோக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

இது புளட்டினை வைத்து மாலைதீவை பிடித்தமாதிரியாகவும் இருக்கலாம் அல்லவா?

ஓம் ஆனால் இங்கே கலககுழுவின் பின்னால் இருந்தது பாக்கிஸ்தான். இந்தியா அல்ல.

ஆனால் 80% முஸ்லிம்களின் இடமான கஸ்மீரை இந்தியா உரிமை கோருவதும் நியாயமான விடயம் இல்லை.

இதே போல் தெலுங்கானாவில் இப்போ இருக்கும் ஹதரபாத் நிஜாம் பாக்கிஸ்தானிடம் சேர. விரும்பியபோது இந்தியா இராணுவத்தை அனுப்பி அடக்கியது.

அதே சமன்பாட்டை பாவித்தால் கஸ்மீரை பாகிஸ்தானிடம்தான் கொடுத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

4 நாட்களில் போரை நிறுத்திய நாடுகளால் ஏன் இஸ்ரேலிய பாலஸ்தீன,உக்கிரைன் ரஸயா தமிழீழம் சிறிலங்கா போரை நிறுத்த முடியவில்லை?

அவற்றில் தமிழீழம் - சிறிலங்கா போரை நிரந்தரமாகவே அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, putthan said:

ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ...

தவறான புரிதல். கஸ்மீரிகள்தான் கஸ்மீரின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.

திம்பு கோட்பாடுகள் ஈழ தமிழருக்கு மட்டும் அல்ல, கஸ்மீரிகளுக்கும் பொருந்தும்.

கஸ்மீரில் சர்வஜன வேல்கெடுப்பை தடுப்பது இந்தியா.

வடகிழக்கு இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பை தடுப்பது சிங்களம் (கோத்தா எக்ஸ்செரா).

👆இதுதான் சரியான ஒப்பீடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

"கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல்" என்று தலைப்பு வைத்து தமிழ்நாட்டில் யுரியுப் போட்டார்களே யார் அண்ணா அவர்களை அப்படி பொய் சொல்லும்படி துப்பாக்கியினால் பயமுறுத்தியது மக்களை பேய்காட்டி பெரும் தொகை மக்களை பார்வையிட வைத்து பணம் பண்ணுவது தான் நோக்கம்

உந்த யூடியுப் காரர்,சமுகவலை கருத்தாளர்களை விடுங்கோ ...உவங்களின்ட தலைப்பை பார்த்து இரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் எங்களுக்கு....,அவங்களுக்கு நல்ல காசு வந்து உலகம் சுற்றுறாங்கள் ...நாங்கள் இரண்டுவருசத்திற்கு ஒருக்கா சிறிலங்கா போறது என்றால் நாலுதடவை வங்கி கணக்கை பார்க்க வேண்டியிருக்கு ...

நான் அரசாங்கங்கள் சொல்லுவினம் ஜனநாயக்த்தின் தூண் எண்டு...பிறகு பார்த்த அவையளே பேனா போய் துப்பாக்கி நீட்டிகொண்டு நிற்கும்

1 minute ago, விளங்க நினைப்பவன் said:

"கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல்"

அதை போட்டவர்களின் மன‌தின் உள்ளே ..."ஹ","சஹா","மொ""இஸ்"🤣 போன்ற பூனைக்குட்டி மறைந்திருக்கிமோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தவறான புரிதல். கஸ்மீரிகள்தான் கஸ்மீரின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.

திம்பு கோட்பாடுகள் ஈழ தமிழருக்கு மட்டும் அல்ல, கஸ்மீரிகளுக்கும் பொருந்தும்.

கஸ்மீரில் சர்வஜன வேல்கெடுப்பை தடுப்பது இந்தியா.

வடகிழக்கு இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பை தடுப்பது சிங்களம் (கோத்தா எக்ஸ்செரா).

👆இதுதான் சரியான ஒப்பீடு.

நீங்கள் கூறுவது சரி ஆனால் நடமுறை அதுவல்ல ...எல்லாம் சும்மா சட்ட வல்லுனர்களின் எழுத்து மட்டுமே ...நடைமுறைக்கு பய்ன்படுத்த மாட்டார்கள் ..அதை நடைமுறைபடுத்த சகல் அதிகாரம் கொண்ட ஒர் உலக அமைப்பு இன்று வரை இல்லை ...இனி வரும் காலங்கலிலும் சாதியப்பட போவதுமில்லை..

இன்றைய உலக சூழலில்/அரசியல் நடைமுறையில் வாக்கு எடுப்பு நடத்தி தேசிய இனங்களின் நிலங்களை/ உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை... இறையாண்மை உள்ள தேசிய நாடு என்ற சொற்பதம் வன்முறை ஆட்சியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றது...,

.. இங்கு தாக்குதலை செய்தது கஸ்மீரிகள் அல்ல ...ஒர் இறையான்மை உடைய பாகிஸ்தான் என்ற நாட்டின் உதவியுடன் இன்னுமொரு இறையாண்மை கொண்ட‌ இந்தியாவின் கஸ்மீர் மக்களின் மீது ...

சிறிலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க இன அழிப்பு செய்த நாடுகள் உள்ள உலகம் இது...எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் தேசிய நாடுகளின் இறையாண்மையை தான் பாதுகாப்பார்கள்.

தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவதில் ஐ.நா.சபை முதல்,இடது ,வலது ஆட்சியாளர்கள் முன் நிற்பார்கள் ,நிற்கின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...

நான் பஸ் டிரைவர் சார்.. பைலட் இல்ல 😁

May be an image of 2 people, cablecar, train and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

நீங்கள் கூறுவது சரி ஆனால் நடமுறை அதுவல்ல ...எல்லாம் சும்மா சட்ட வல்லுனர்களின் எழுத்து மட்டுமே ...நடைமுறைக்கு பய்ன்படுத்த மாட்டார்கள் ..அதை நடைமுறைபடுத்த சகல் அதிகாரம் கொண்ட ஒர் உலக அமைப்பு இன்று வரை இல்லை ...இனி வரும் காலங்கலிலும் சாதியப்பட போவதுமில்லை..

இன்றைய உலக சூழலில்/அரசியல் நடைமுறையில் வாக்கு எடுப்பு நடத்தி தேசிய இனங்களின் நிலங்களை/ உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை... இறையாண்மை உள்ள தேசிய நாடு என்ற சொற்பதம் வன்முறை ஆட்சியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றது...,

.. இங்கு தாக்குதலை செய்தது கஸ்மீரிகள் அல்ல ...ஒர் இறையான்மை உடைய பாகிஸ்தான் என்ற நாட்டின் உதவியுடன் இன்னுமொரு இறையாண்மை கொண்ட‌ இந்தியாவின் கஸ்மீர் மக்களின் மீது ...

சிறிலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க இன அழிப்பு செய்த நாடுகள் உள்ள உலகம் இது...எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் தேசிய நாடுகளின் இறையாண்மையை தான் பாதுகாப்பார்கள்.

தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவதில் ஐ.நா.சபை முதல்,இடது ,வலது ஆட்சியாளர்கள் முன் நிற்பார்கள் ,நிற்கின்றனர்..

நான் ஒரு இந்து. எனக்கு முஸ்லிம்களை பிடியாது எனவே:

எப்படியாவது இந்து இந்தியாவுக்கு முஸ்லிம் பாகிஸ்தானை எதிர்த்து முண்டு கொடுப்பேன்.

இதுவே உங்கள் எழுத்தின் ஊக்கியாக எனக்கு படுகிறது.

அதை அப்படி சொல்லி விட்டு போனால் உங்கள் நம்பகதன்மையாவது மிஞ்சும்.

விளங்க (சில சமயம் வில்லங்கமாக) நினைபவருக்கும் இந்த முஸ்லிம் வெறுப்புத்தான் சிந்தனையின் ஊக்கி.


சுயநிர்ணயம் என்பது தேசிய இனங்களின் உரிமை.

கஸ்மீரிகள் தனி நாடாக இருந்தவர்கள்.

அவர்கள் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை இந்தியாவே ஐநாவில் ஏற்று கொண்டுள்ளது.

ஆகவே எம்மை விட சுயநிர்ணயத்துக்கு / வாக்கெடுபுக்கு உரிதானவர்கள் அவர்கள்.

அவர்கள் உலக யதார்த்தத்தை எதிர்த்து போராட கூடாது என்றால், நாமும் சிங்களவன் கொடுத்த வெளுவையை வாங்கி கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும்.


இந்த சண்டையின் அடிப்படை ஒன்றேதான்.

நீர்…

இண்டஸ், ஜீலம், செனாப், நீலம், றவி என பல நீர்வாழ்வாதார நதிகள் காச்மீரினூடு பாய்கிறன.

அதனால்தான் இரு நாடுகளும் கஸ்மீரை குறிவைக்கிறன.

உலகம் வல்லாதிக்கத்தின், அதாவது உங்கள் பாசையில் இறைமையில் கைவைக்காது என்பது நடைமுறையாக இருக்கலாம்…ஆனால் இங்கே சாமானியகள் நாம் நடைமுறை பற்றி கதைக்கவில்லை.

யார் பக்கம் நியாயம் என்பதையே கதைக்கிறோம்.

நியாயம் இந்தியாவிடமோ பாகிஸ்தானிடமோ இல்லை.

நியாயம் எம்மை போல ஒடுக்கப்படும் சக தேசிய இனமான காஸ்மீரிகளிடமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்வெறியில் தமிழ் செய்திச் சானல்கள் - பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-46-1.jpg?resize=600%2C300&ss

இந்தியா – பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Athavan News
No image preview

இந்தியா - பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அம...

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த...
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQnxb9nx_Pv3Jgfi-YlGte

இந்த வருடத்துக்கான... "சமாதான நோபல் பரிசு" டிரம்புக்குத்தான். 😎

  • கருத்துக்கள உறவுகள்

495080143_1107686018063036_6507299307875

495367175_1107869371378034_3286682623523

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த வருடத்துக்கான... "சமாதான நோபல் பரிசு" டிரம்புக்குத்தான். 😎

அவையள் குடுக்காட்டிலும் சிங்கன் கேட்டு வாங்கக்கூடிய ஆள்....cool

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-50-1.jpg?resize=600%2C300&ss

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா . ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயறரில் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தது.

இந்நிலையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம் எனவும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் இந்திய இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஒபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் குறித்து சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Athavan News
No image preview

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை...

இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ள...
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/search/top/?q=china%20Fort&locale=de_DE 👈

இந்தியா அனுப்பின ட்ரோனை அடித்து விழுத்தி, தோளில் சுமந்து செல்லும் பாகிஸ்தானியர்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாக்குத‌லை தொட‌ங்க‌ போகுது இந்தியா என்று த‌க‌வ‌ல் வ‌ருது..................பாப்போம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2025 at 14:22, goshan_che said:

இப்ப அமெரிக்கன், நேட்டோக்கு எல்லாம் வயித்த லேசா கலக்கி இருக்கும்.

எப்படி சீன தயாரிப்பான, புதியவகை ஏ ஐ சேர் இலத்திரனியல் ராடார் கூட்டமைப்பால் ரபேல் வீழ்த்தப்பட்டது என விபரிக்கும் வீடியோ.

சீனானிம் உளவியல் யுத்தமாகவும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நதி நீரை அதிகமாக திறந்து விட்டுள்ளதாம்🤣.


கைபுள்ள, தண்ணிய கொடுக்க மாட்டம் எண்டு சொன்னாயேப்பா?

அது போன மாசம்🤣🤣🤣


  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ஆமாம் உண்மை தான் ஆனால் அப்படியென்றால் இலங்கைக்கு ஏன் சொன்னீர்கள் ..??????? .

அதாவது இலங்கை விதிவிலக்கு. ...இலங்கைக்கு சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, பாக்கிஸ்தான் நிறுத்தியது (அமெரிக்காவால் நிறுத்தவைக்கப்பட்டது), சீன தொழில்நுட்பம் உண்மையில் விஞ்சியது மட்டும் காரணம் இல்லை.

(பாரிய பொருளாதார, போர்விமான / ஏவுகணை தொழில்நுட்பம் பொருளாதாரத்தையம் கடந்து, மறுவளமாக, இந்தியா ஓங்கி இருந்தால், அமெரிக்கா, மேற்கும் பெரிய முயற்சி எடுத்து இருக்காது)

இந்த விடயத்தில், மேற்கு மற்றும் இந்திய ஆய்வாளராது, சளப்பும் கதையான, tactics ஆல் நடத்து இருக்கலாம் என்பது.

சீன பாகிஸ்தானுக்கு tactics இல் மேற்கு அளவு போர்விமான வான் (நாய்ச்)சண்டையில் (dog fighting) அனுபவம், புடம் போடப்பட்டது இல்லை.

இந்தியாவின் போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) பயிற்சி, tactics மேற்கில் இருந்து; இந்தியா மேலும் களத்துக்கு ஏற்ப மாற்றங்கள், அதன் பார்வையில் மெருகூட்டுதல் செய்து இருக்கலாம்.

எனவே, சீனா, பாகிஸ்தானுக்கு பயிற்றுவித்த போர்விமான வான் (நாய்ச்)சண்டை (dog fighting) கோட்பாடுகள், tactics இல் புதுமைத்துவதை சீன செய்து இருக்கிறது, தொழிநுட்ப புதுமைத்துவதுடன்.

இதில், முக்கிய அம்சம், பாகிஸ்தானிடம் இருக்கும் போர்விமானம், ஆகாய-ஆகாய ஏவுகணைகள், tactics சீன அதுக்கு வைத்து இருபதின் மட்டுப்படுத்தப்பட்ட வினைத்திறனும், தொழில்நுட்ப மெருகும். (சரவதே ஆயுத, தொழில்நுட்ப வர்தகத்தில் விற்கும் நாடுகள் சாதாரணமாக செய்வது).

ஆயினும், பாகிஸ்தான், இந்தியா களம் சிறிது.

இது பாரிய சண்டையில், சீன, மற்றும் அது பயிற்றுவிக்கும் அணிகளுக்கு, systemic risk அல்லது advantage ஆக இருக்குமா என்பது தெரியாது.

இதில் அலட்டாமல் இருக்கும் தரப்பு (சீன) எதுவென்று பார்த்தல் புரியும், ஒப்பீட்டளவில் எவரின் மேலாண்மை ஓங்கி இருக்கிறது என்று. பொதுவாக சர்வதேச ராஜதந்திரத்தில் செய்யப்படுவதும், தரப்பின் மேலாண்மை ஓங்கினால் அது அமைதியாக இருக்கும். அதாவது, காரியத்தில் கண்ணாய் இருப்பது.

இதில் இன்னொன்று இந்தியா தன்னை அணியாக கருதுவது, சொல்வதுக்கும், அதன யதார்த்தத்தை மற்றவர்கள் அங்கீகரிப்பதும்.

தனி அணியானதன் மிக குறைந்த தகுதி, சொந்த இராணுவ தொழில் நுட்பம்.

(இதே போலவே, மேற்கு சொல்கிறது சீனாவுக்கு கடல் சண்டையில் அனுபவம் இல்லை என்று.

அனால், மேற்கின் 80 - 90 வருட அணு சக்தி அல்லாத விமானந்தாங்கி இயக்கும் அனுபவத்தை, சீன 20 வருடங்களில் அடைந்துள்ளது என்பதும்.

ஆயினும் 2024 ஆடியில் வெளியில் தெரிந்தது ( நடந்தது 2023 கடைசி / 2024 தொடக்கம்). தென்சீன கடலில் சீன - அமெரிக்கா கடல் அணிகள் (carrier fleet) ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு, அமெரிக்கா இயலாமல் அதுவாக விலத்த வேண்டி வந்ததும். அதில் நடந்தது, இலத்திரனியல் போர்முறை ஊடக, கொலை வலையில் சிக்குண்டு, ஏறத்தாழ அமெரிக்கா அணி முடக்கப்பட்டது. அமெரிக்கா அணியின் தளபதி உடனடியாக பணி நிறுத்தப்பட்டதும் (https://interestingengineering.com/military/china-ai-radar-defeat-us-growlers)

ஆனால், ஒவ்வொரு அம்சமாக அல்லாமல், சீன முழு (போர் கள) விளையாட்டையும் மாற்றி வைத்து இருப்பதும்.

இவைகள், இப்போதும் சீன கடற்படையை ஆழ்சமுத்திர கடற்படை (Blue Water Navy) தன்மையை உடைய கடற்படையாக உருவாக்கவில்லை என்பதும்.

ஆனால், சீன Brown Water Navy (ஒப்பீட்டளவில் மிக குறைந்த ஆழம் கடலில் இயங்கும் கடற் படை) தன்மையை கடந்து, Blue water navy தன்மையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதும்.

இதில் மிக முக்கியம், சீனாவின் Blue water navy க்கான வளர்த்தி பாதை மேற்கை ஒத்ததாக இருக்க வேண்டியது என்பது கட்டாயம் இல்லை.

இதை சொல்வட்டன் காரணம்,சீனாவின் வளர்த்தி, அதனுடன் கேந்திர, தந்திரோபாய அடிப்படையில் (சீனாவுக்கு allies இல்லை, அப்படி இருக்க கூடாது என்பதே இதுவரையில் கொள்கை) ஒத்தியங்கும் விமான, கடற் படைகளுக்கு தொற்றும், பல விடயங்களில் மேற்கு, மற்றும் அதன் சார்பு, ஒற்றிய விமானப்படைக்கு என்றும் எதிர்பாராத, பயிற்றுவிக்கப்படாத, புதிய நிலைகள் உருவாகும் சந்தர்ப்பங்கள் கூட; சண்டை, யுத்தத்தில் அழிவும் கூடவாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: எத்தனை ரபேல் விமானங்களை நீங்கள் இழந்துள்ளீர்கள் சேர்?

இந்திய விமானப்படை தளபதி: நீங்கள் எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி - பயங்கரவாதிகளின் முகாம்களை திட்டமிட்டமாதிரி அழித்து விட்டீர்களா என்பதே. அதற்கான பதில் ஆம் 😂.

யுத்த நிலை என்பதால் நடவடிக்கை சம்பந்தபட்ட விபரங்களை தரமுடியாது (அதான் போர் நிறுத்தம் ஆகிவிட்டதே).

பிகு

இங்கே தளபதி கொடுத்த பதிலின் சுருக்கம் = சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.