Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஒரு ஆண்டுக்கு எத்த‌னையோ ல‌ச்ச‌ம் கோடிய‌ நாட்டின் பாதுகாப்புக்கு செல‌விடின‌ம் மான‌ம் கெட்ட‌ ம‌த்திய‌ அர‌சு ,

இவ‌ள‌வு ப‌ண‌ம் செல‌விட்டும்

இவ‌ர்க‌ள் என்ன‌த்தை சாதிச்ச‌வை....................

எத்த‌னையோ ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருக்க‌ வீடுக‌ள் இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் சாலை ஓர‌ங்க‌ளில் வாழுதுக‌ள்

ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு க‌ழிவ‌றை வ‌ச‌திக‌ள் இல்லாம‌ ந‌ர‌க‌ வாழ்க்கை வாழுதுக‌ள்

த‌மிழ் நாடு தொட்டு ப‌ல‌ மானில‌ங்க‌ளில் மின்சார‌ம் போய் சேராத‌ ப‌ல‌ ஊர்க‌ள் இருக்கு.................இதை எல்லாம் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌ம் வைச்சா உட‌ன‌ ச‌ரி செய்ய‌லாம்..........................இந்திய‌ ம‌க்க‌ள் உண்மையில் விப‌ர‌ம் தெரியாத‌ பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள்....................................

தமிழ்நாடு முன்னேறி விட்டதாகத்தான் பலர் கூறுகின்றார்கள். நீங்களோ தமிழ்நாட்டை அவதூறாக எழுதுகின்றீர்கள்.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

இந்தியாவின் பத்து அல்லது இருபது விமானங்களை பாகிஸ்தான் சுட்டு. விழுத்தினாலும்கூட. இந்த போரில் இந்தியா வெல்லும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகும் பொறுத்து இருந்து பார்ப்போம் இது எனது விருப்பம் இல்லை இந்த விடயத்தில் எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை யார் வென்றாலும். அல்லது தோற்றாலும். ஒன்று தான்

பாக்கிஸ்தான் Balochistan போராளிக‌ள் த‌னி நாடு கேட்டு போராடி ச‌ர்வ‌தேச‌ம் அந்த‌ நாட்டை அங்கிக‌ரித்தால்

30வ‌ருட‌மாய் த‌னி நாடு கேட்டு போராடின‌ எங்க‌ட‌ த‌மிழீழ‌த்தையும் த‌னி நாடாக‌ அறிவிக்க‌னும்........................

பாக்கிஸ்தானை துண்டாட‌ இந்தியா ம‌றைமுக‌மாய் செய‌ல் ப‌ட்டால் இதே நில‌மை இந்தியாவுக்கும் வ‌ரும்.............................இந்தியாவின் மானில‌மான‌ ப‌ஞ்சாப்பில் தான் முத‌ல் பூக‌ம்ப‌ம் வெடிக்கும்...................ப‌ஞ்சாப்பை த‌னிடாக்க‌னும் என்று அங்கு இருக்கும் போராட்ட‌ குழு செய‌ல் ப‌டுது...................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாடு முன்னேறி விட்டதாகத்தான் பலர் கூறுகின்றார்கள். நீங்களோ தமிழ்நாட்டை அவதூறாக எழுதுகின்றீர்கள்.

ஹா ஹா

திராவிட‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் யாழில் அப்ப‌டி தான் எழுதுவின‌ம்

இப்ப‌வும் ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு ம‌ர‌த்த‌டியில் தூங்கும் ம‌க்க‌ளை என் க‌ண்ணால் பார்த்தேன்.......................சென்னை ஒட்டிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் சாலை ஓர‌ம் ப‌ல‌ர் தூங்கின‌ம்.......................

அக‌ன்ட‌ வெளி தாத்தா அந்த‌ வெளிக்கை ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள்

ஊரில் சொல்லுவின‌ம் பூவ‌ர‌ச‌ம் த‌டி என்று அப்ப‌டி ப‌ட்ட‌ த‌டிய‌ 4லு ப‌க்க‌மும் புதைச்சு போட்டு , பெண்க‌ள் க‌ட்டும் சீலைய‌ அதுக்கு மேல‌ போட்டு அதுக்கையே வாழுகின‌ம்.................ஏதோ ஒரு நிறுவ‌ன‌ம் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ஒரு நாளுக்கு இர‌ண்டு முறை சாப்பாடு கொண்டு வ‌ந்து கொடுப்பின‌மாம் சில‌ ச‌மைய‌ம் ஒரு நாளுக்கு ஒரு முறை தான் சாப்பாடு வ‌ருமாம்

அந்த‌ இட‌த்தில் நீங்க‌ள் இருந்தால் கூட‌ உங்க‌ட‌ பார்கேட்டில் இருக்கும் ஜ‌ந்து ப‌த்தை அள்ளி கொடுபிங்க‌ள் அந்த‌ பிஞ்சு குழ‌ந்தைக‌ளின் முக‌த்துக்காக‌.................................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

30வ‌ருட‌மாய் த‌னி நாடு கேட்டு போராடின‌ எங்க‌ட‌ த‌மிழீழ‌த்தையும் த‌னி நாடாக‌ அறிவிக்க‌னும்........................

இலங்கையும் இந்தியாவும் சண்டை நடந்தால் தமிழ் ஈழம் கிடைக்கும்,..இலங்கை இந்தியாவுடன் அடிபடுமா ??? இல்லை இலங்கை இந்தியாவுக்கு பணிந்து போகும் சரியா?? உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமா?? இலங்கையும் இந்தியாவையும். போர் புரிய வையுங்கள்

பாகிஸ்தான் இந்தியா உடன் போர் புரிகிறது ...பாகிஸ்தானில் தனிநாடு கேட்டும். போராட்டம் நடக்கிறது ....அந்த போராட்டம் இந்தியா ஆதரிப்பது இயல்பு எந்தவொரு நாடும் இதைத்தான் செய்யும் இந்தியாவில் குறை சொல்ல முடியாது எதிரியை பலமிழக்க அனைத்து வழிகளையும். கையாளும். நாங்கள் இந்தியாவை திட்டிக்கொண்டிருந்தாள்

தமிழ் ஈழம் ஒருபோதும் கிடையாது இந்தியா பற்றி உங்களுக்கு தெரிந்த அனைத்தும் எனக்கும் தெரியும் .....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

Balochistan மானில‌ம் ஒரு போதும் த‌னி நாடாக‌ போவ‌தில்லை

அந்த‌ மானில‌ம் தான் பாக்கிஸ்தானின் பெரிய‌ நில‌ப்ப‌ர‌ப்பை கொண்ட‌ மானில‌ம்

பாக்கிஸ்தானும் த‌ங்க‌ட‌ நாட்டை பாதுகாப்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருக்கின‌ம் அன்னிய‌ ச‌க்திக‌ளுக்கு இட‌ம் கொடுக்காம‌......................எல்லா மானில‌ ம‌க்க‌ளுக்கும் பாக்கிஸ்தானில் முழு சுத‌ந்திர‌ம் இருக்கும் போது பாக்கிஸ்தானுக்கையே த‌னி நாடு கேட்ப‌து ச‌ரியா........................இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் நாடு.......................

எங்க‌ட‌ அழிவுக்கும் எம‌க்கு நாடு கிடைக்காம‌ போன‌துக்கு முழு கார‌ண‌ம் முதுகெலும்பு இல்லாத‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளால்................கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌ ஊழ‌ல்க‌ள் அப்ப‌டி

ம‌த்திய‌ அர‌சை இவ‌ர்க‌ளால் விர‌ல் நீட்டி கேள்வி கேட்க்க‌ முடியாது .....................திராவுட‌ ம‌டால் அர‌சு கும்ப‌ல‌ அம‌லாக்க‌துறை போட்டு வாட்டி எடுக்கின‌ம் கேள்வி ப‌ட‌ வில்லையா.....................அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு என்று சொன்ன‌ கூட்ட‌ம்

சென்னையில் பாக்கிஸ்தான் இந்தியா பிர‌ச்ச‌னையின் போது ஹிந்திய‌ தேசிய‌ கொடியோட‌ புர‌ப்ப‌ட்ட‌வ‌ர் துண்ட‌றிக்கை பார்த்தும் ஒழுங்காய் வாசிக்க‌த் தெரியாத‌ ந‌ம்ம‌ட‌ முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யா ஸ்டாலின்...........................

வைக்கோ சொன்ன‌து போல் 100வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது என்று சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அவ‌ரின் தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னாள் சொன்னார் , கால‌ நேர‌ம் கூடி வ‌ரும் போது அது ந‌ட‌க்கும்.............................

நான் எங்கேயும் சொன்னேனா உங்க‌ளுக்கு இந்தியா , பாக்கிஸ்தான் , த‌மிழீழ‌ வ‌ர‌லாறு தெரியாது என்று...................

இப்ப‌டி எழுதி உங்க‌ளை நீங்க‌ளே விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்துறீங்க‌ள் லொள்😁👍............................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

இலங்கையும் இந்தியாவும் சண்டை நடந்தால் தமிழ் ஈழம் கிடைக்கும்,..இலங்கை இந்தியாவுடன் அடிபடுமா ??? இல்லை இலங்கை இந்தியாவுக்கு பணிந்து போகும் சரியா?? உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமா?? இலங்கையும் இந்தியாவையும். போர் புரிய வையுங்கள்

பாகிஸ்தான் இந்தியா உடன் போர் புரிகிறது ...பாகிஸ்தானில் தனிநாடு கேட்டும். போராட்டம் நடக்கிறது ....அந்த போராட்டம் இந்தியா ஆதரிப்பது இயல்பு எந்தவொரு நாடும் இதைத்தான் செய்யும் இந்தியாவில் குறை சொல்ல முடியாது எதிரியை பலமிழக்க அனைத்து வழிகளையும். கையாளும். நாங்கள் இந்தியாவை திட்டிக்கொண்டிருந்தாள்

தமிழ் ஈழம் ஒருபோதும் கிடையாது இந்தியா பற்றி உங்களுக்கு தெரிந்த அனைத்தும் எனக்கும் தெரியும் .....

பாக்கிஸ்தான் உடைவ‌தை சீனா விரும்பாது

அப்ப‌டி ஒரு நிலை வ‌ருமாய் இருந்தால் இஸ்ல‌மாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளும் சீன‌னும் சேர்ந்து போராட்ட‌ குழுவை அழிக்க‌ முய‌ல்வின‌ம்.....................Balochistan போராட்ட‌ குழு சிறு குழு...................பாக்கிஸ்தான் உள‌வுத்துறை இந்திய‌ உள‌வுத்துறைய‌ விட‌ சிற‌ந்த‌வ‌ர்க‌ள்...................2009ம் ஆண்டு Lahore பாக்கிஸ்தான் இல‌ங்கை விளையாடின‌ போது ந‌ட‌ந்த‌ தாக்குத‌லில் விளையாட்டு வீர‌ர்க‌ள் காயப்ப‌ட்ட‌வை.................இப்ப‌டி ஒரு தாக்குத‌ல் ந‌ட‌க்க‌ போது என்று முன் கூட்டி அறியாம‌ இருந்த‌து பாக்கிஸ்தானின் உள‌வுத்துறையின் மிக‌ பெரிய‌ த‌வ‌று.................இத‌னால் தான் 10வ‌ருட‌ம் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌க்க‌ வில்லை...............ப‌ல‌ விளையாட்டை டுபாயில் ந‌ட‌த்தின‌வை................................

அதோ போல் 2008 மும்பையில் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் இந்திய‌ உள‌வுத்துறைக்கு முன் கூட்டி தெரியாம‌ போச்சு....................

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌டி எழுதி உங்க‌ளை நீங்க‌ளே விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்துறீங்க‌ள் லொள்😁

என்ன செய்ய உங்களை முந்துவம். என்று தான் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது.

இன்னொரு அவுரங்கசீப் சீண்டல் - நேற்றைய பத்திரிகை சந்திப்பில்:

நான் நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்….

PAF 6, IAF 0 😂😂😂😂

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரபேல், ஒரு மிக் ஒரு SU 300 உட்பட ஆறு விமானங்கள் இழப்பு. டிரோன்கள் எண்ணிக்கை தெரியவில்லை.

நீங்கள் சொன்ன அளவில் படை வீரர் இழப்பு.

இவைதான் உறுதிபடுத்த கூடியன.

பெண் விமானிகளை பிடிக்கவில்லை என பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேற்றே சொல்லி உள்ளார். இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் போகவில்லை.

ஆகவே எஜெக்ட் பண்ணி வீழ்ந்த விமானிகள் எல்லாம் இந்தியாவுக்குள்தான் வீழ்ந்துள்ளனர். விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பியுள்ளனர் என இந்திய வான்படை தளபதி நேற்று கூறினார்.

ஆனால் யுத்தம் இந்தியாவுக்கு முற்று முழுதான தோல்வி என்பது வெள்ளிடைமலை.

11 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே.

இதுதான் நடந்திருக்கும்.

2 கிழமையா அடிக்கப்போறோம், அடிக்கப்போறோம் என இந்தியா கூவிய பின், நன்கு அறியப்பட்ட முகாம்களில் இருக்க தீவிரவாதிகள் என்ன அடி முட்டாள்களா?

அத்தோடு - ஏதாவது பெரிய தலை அவுட் ஆகி இருப்பின் - சாவு ஊர்வலம் பெரிதாக நடந்திருக்கும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தலைவரே சிரித்துக் கொண்டு வாசித்த படங்களும் அப்போது வந்திருந்தது.

@நன்னிச் சோழன் இடம் சிலவேளை அந்தப் படம் இருக்கலாம்.

அது நக்கீரன் அட்டைப்படம்.

ஆனால் அதுவும் கோபால் மோர்பிங் செய்து போட்ட போலிப்படமே.

உண்மையை தெரிய வைப்பதற்காக தான் பொய்யை கையில் எடுத்ததாக பின்னாளில் கோபால் கூறி இருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த போரில் இந்தியா வெல்லும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகும் பொறுத்து இருந்து பார்ப்போம்

அண்ணை போர் முடிஞ்சிட்டு. உள்ளூர் விமான நிலையங்களும் பழைய நிலைக்கு வந்து விட்டன.

இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒட்டு மொத்த போர் நிகழ வாய்ப்பில்லை.

இப்படி சின்ன சின்ன சண்டைகள்தான் நடக்கும்.

கார்கில் போரில் இந்தியா அறுதியும் உறுதியுமாக வென்றது. அது நிலப்போர். குறித்த ஒரு இடத்தில் மட்டும் நிகழ்ந்தது.

பதான்கோட் தாக்குதலில் இந்தியா தாக்கி, பாகிஸ்தான் ஒரு விமானியை சுட்டு போர் கிட்டதட்ட சமநிலையில் முடிந்தது.

இப்போ இந்த ஆகாய போரில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா திட்டவட்டமாக, அறுதியும் உறுதியுமாக பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது.

இனியும் போர்கள் வரும். ஆனால் பாகிஸ்தான் முழுமையாக தோற்காது. அப்படி தோற்கும் நிலை வரின் அணு ஆயுதத்தை பாவித்து, இந்தியாவின் 2/3 பங்கை தம்மோடு கூட்டிப்போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் இரு நாடுகள் ஆகும் —- உண்மையில் பாகிஸ்தானை 4 நாடுகள் ஆக்குவதுதான் ஆர் எஸ் எஸ் சின் திட்டம்.

பலூசிஸ்தான், மேற்கு பஞ்சாப், பஹ்தோனிஸ்ட்டான், சிந்து.

இதை சுப்ரமணியம் சுவாமி போன்ற ஆர் எஸ் எஸ் தளகர்த்தாக்கள் மிக வெளிப்படையாகவே பேசி வருகிறனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இதுவல்ல இந்தியாவின் கொள்கை.

எப்போதும் நாடுகளின் கொள்கை முடிவுகள் அதன் தலைமையில் உள்ள அல்லது தலைமையை கட்டுப்படுத்தும் அரசியல் சக்திகளேலேயே முடிவு செய்யப்படும்.

ஆர் எஸ் எஸ் கொள்கை படி கஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிஜேபி அரசு, இப்போ மெல்ல மெல்ல, பாகிஸ்தானை நாலாக உடைக்கும் வேலையை ஆரம்பித்து நடத்துகிறது.

அண்மையை போரின் ஆரம்பம் கஸ்மீரின் பெஹல்கம் தாக்குதல் என நாம் பலர் தவறாக எண்ணுகிறோம்…

இல்லை…

இது ஆரம்பித்தது ஓரிரு மாதங்கள் முதல் பலூசிஸ்தானினில் ஒரு தொலைதூர ரயிலை பிரிவினைவாதிகள் கடத்தி, பாக் ஆமி மற்றும் பொதுமக்களை கொன்று குவித்தத்தில்.

இதை இயக்கியது முழுக்க முழுக்க றோ.

அதற்கான பதிலடிதான் பெஹல்கம்.

ஆனால் பாகிஸ்தானை இந்தியா உடைக்க சீனா விடாது.

நேற்று தொலைக்காட்டியில் முன்னாள் போர் விமானி ஒருவர் பேட்டியளித்திருந்தார். தாக்குதல் விமானத்தால் எதிரியின் இடத்தை அருகில் சென்று தாக்க வேண்டுமாயின் இரு வழிகள் உள்ளன. முதலாவது ரடார்களில் படாதவாறு மிகத் தாழ்வாக தரையோரமாகப் பறந்து சென்று தாக்குவது. இதனை இந்திய இராணுவம் ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் அது பாகிஸ்தான் எல்லைக்குள் இராணுவம் நுளைவதற்குச் சமனானது.

இரண்டாவது, மிக உயரமாகப் பறந்து குறித்த தாக்குதல் எல்லையை அடைந்ததும் மிக வேகமாகக் கீழிறங்கித் தாக்கிவிட்டு விலகிச் செல்வது. ஆனால் இவ்வாறான தாக்குதலுக்கு முன்னர் இலக்கிற்கு அருகிலுள்ள விமான எதிர்ப்பு மற்றும் ரடார் நிலைகளைத் தாக்க வேண்டும். இந்தியா இவ்வாறான முன் தாக்குதல்களுக்கு ஒப்புக் கொள்ளாது. ஏனென்றால் அது பாகிஸ்தானுடனான நேரடிப் போர் நடவடிக்கையாக அமையும். இருந்தாலும் முந்தாக்குதல் செய்யாமலே இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. இது இந்திய இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.

20 வருட சேவையில் ரபேல் விமானங்கள் இதைவிட ஆபத்தான போர்முனைகளில் பயன்படுத்தப்பட்போதிலும் இதுவே முதல் முறையாகப் போரில் தாக்கியழிக்கப்படதாகும் என்று தெரிவித்தார்.

On 9/5/2025 at 07:13, கிருபன் said:

பாகிஸ்தான் விமானி கைது: ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இத் தகவல் உண்மையானால் பாகிஸ்தான் விமானங்கள் 100 கிமீ இந்தியாவுக்கு உள்ளே வந்துள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் பாகிஸ்தானை இந்தியா உடைக்க சீனா விடாது.

இதனால்தான் முன்னரை விட மிக உயர் ரக இராணுவ தளபாட, தகவல், தொழில் நுட்ப உதவியை இப்போ சீனா பாகிஸ்தானுக்கு வழங்குகிறது.

இப்படி நடக்கும் என்பதைதான் ராகுல் காந்தி 2019 கஸ்மீர் அந்தஸ்து நீக்க விவாதத்தில் பாராளுமன்றத்தில் கூறினார்.

2014 வரைக்கும் இருந்த இந்தியாவின் கஸ்மீரி கொள்கையை, பாகிஸ்தான் கொள்கையை மோடி/அமித்ஷா மாற்றியதன் விளைவுதான் சீனாவின் பாகிஸ்தான் மீதான அதீத ஆர்வமும், கிட்டதட்ட இரு நாடுகளும் ஒரு கூட்டணி என்ற நிலமை உருவாகியுள்ளதும்.

பாகிஸ்தான் நாலு துண்டாகினால் - அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்து பாரிய கேந்திர இழப்பு சீனாவுக்கே ஏற்படும்.

எனவே இப்போ சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானை காப்பாற்றுவது, சீனாவை காப்பாற்றுவதே.

மோடி/அமித் ஷா/ ஆர் எஸ் எஸ் இந்தியாவின் இரு எதிரிகளை ஒருங்கிணைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அது நக்கீரன் அட்டைப்படம்.

ஆனால் அதுவும் கோபால் மோர்பிங் செய்து போட்ட போலிப்படமே.

உண்மையை தெரிய வைப்பதற்காக தான் பொய்யை கையில் எடுத்ததாக பின்னாளில் கோபால் கூறி இருந்தார்.

தகவலுக்கு நன்றி. நான் உண்மைப் படம் என நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இதனால்தான் முன்னரை விட மிக உயர் ரக இராணுவ தளபாட, தகவல், தொழில் நுட்ப உதவியை இப்போ சீனா பாகிஸ்தானுக்கு வழங்குகிறது.

இப்படி நடக்கும் என்பதைதான் ராகுல் காந்தி 2019 கஸ்மீர் அந்தஸ்து நீக்க விவாதத்தில் பாராளுமன்றத்தில் கூறினார்.

2014 வரைக்கும் இருந்த இந்தியாவின் கஸ்மீரி கொள்கையை, பாகிஸ்தான் கொள்கையை மோடி/அமித்ஷா மாற்றியதன் விளைவுதான் சீனாவின் பாகிஸ்தான் மீதான அதீத ஆர்வமும், கிட்டதட்ட இரு நாடுகளும் ஒரு கூட்டணி என்ற நிலமை உருவாகியுள்ளதும்.

பாகிஸ்தான் நாலு துண்டாகினால் - அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்து பாரிய கேந்திர இழப்பு சீனாவுக்கே ஏற்படும்.

எனவே இப்போ சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானை காப்பாற்றுவது, சீனாவை காப்பாற்றுவதே.

மோடி/அமித் ஷா/ ஆர் எஸ் எஸ் இந்தியாவின் இரு எதிரிகளை ஒருங்கிணைத்துள்ளார்கள்.

மோடியால் ப‌க்கிஸ்தானை உடைக்க‌ முடியாது...................அப்ப‌டி ஒரு நில‌மை வ‌ந்தால் இந்தியாவையும் பாதிக்கும்

ப‌ஞ்சாப் மானில‌த்தில் த‌னி நாடு கேட்டு போராட்ட‌ குழு செய‌ல் ப‌டுது..................பாக்கிஸ்தான் ஒரு க‌தைக்கு உடைஞ்சால் பாக்கிஸ்தான் வைச்சு இருக்கும் அணு குண்டு யார் கைக்கு போகும்..................இந்தியா தான் த‌ங்க‌ட‌ ஒற்றுமையை சீர்குலைத்தார்கள் என்று பாக்கிஸ்தானை நூற்றுக்கு நூறு வித‌ம் நேசித்த‌வ‌ர்க‌ள் கோவ‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ளா..........................

பாக்கிஸ்தானை உடைக்க‌ வெளிக்கிட்டு க‌ட‌சியில் இந்தியா த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்ட‌ க‌தையா போய் முடிய‌க் கூடும்......................

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் தான் பாக்கிஸ்தான் உடைய‌ போகுது என்று அதிக‌ம் கொக்க‌ரிக்கின‌ம்

பெரும்பாலான‌ பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் ஒற்றுமையாக‌ தான் இருக்கின‌ம் ம‌த‌ ரீதியாய் ம‌ற்றும் விளையாட்டுக்க‌ளில்.............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

அது போல சீன ஆயுத, தொழ்ல்நுட்ப, சிறப்பு தேர்ச்சி வழங்குதல் / விற்பனை, இந்தியாவின் அரசியலில் தங்கவில்லை .

ரபேலின் வீழ்ச்சியுடன் அமெரிக்காவும் கொஞ்சம் தாய்வானில் சண்டை தொடங்கினால் எப்படி முடியும் என்று பின்னடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்கள் நம்பணும்!!!

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்குகினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன்.

'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார்.

நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள்.

9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார்.

'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார்.

பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார்.

'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர்.

பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார்.

பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம்.

இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார்.

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது.

சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

ஜெய்ஹிந்த்

  • கருத்துக்கள உறவுகள்

497498130_9897265716986744_2603589133776

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் கொடிய‌ இந்திய‌ர்க‌ள் போன‌ கிழ‌மை காலால் போட்டு மிதிச்சின‌ம்

இவ‌ர்க‌ளின் கொடிக்கு மூத்தா பெய்வ‌தில் த‌ப்பு இல்லை

இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து............................

😌............

இல்லை பையன் சார், பொதுவெளியில் உரையாடுவதற்கும், கருத்துகளை பகிர்வதற்கும் என்று சில வரையறைகள் உண்டு. எங்களின் தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக, நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்றவற்றை அவமதித்தல் சரியல்ல என்றே எனக்குத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

😌............

இல்லை பையன் சார், பொதுவெளியில் உரையாடுவதற்கும், கருத்துகளை பகிர்வதற்கும் என்று சில வரையறைகள் உண்டு. எங்களின் தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக, நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்றவற்றை அவமதித்தல் சரியல்ல என்றே எனக்குத் தெரிகின்றது.

அடுத்த‌ முறை இப்ப‌டிய‌ செய‌லை த‌விர்க்கிறேன் குரு👍..................

இது 2014ம் ஆண்டு என‌து முக‌ நூலில் நான் இட்ட‌ ப‌திவு...................இந்திய‌ர்க‌ள் போன‌ கிழ‌மை பாக்கிஸ்தான் கொடிய‌ கீழ‌ போட்டு அத‌ன் மேல் ந‌ட‌ந்து அந்த‌ நாட்டு கொடிய‌ அவ‌ம‌திச்ச‌வை..............................

1 hour ago, புலவர் said:

இதை நாங்கள் நம்பணும்!!!

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்குகினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன்.

'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார்.

நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள்.

9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார்.

'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார்.

பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார்.

'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர்.

பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார்.

பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம்.

இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார்.

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது.

சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

ஜெய்ஹிந்த்

அப்ப‌டியே ஈழ‌ ம‌ண்ணில் ராஜிவ் ப‌டை எத்த‌னை ஆயிர‌ம் பெண்க‌ளை வித‌வை ஆக்கினார்க‌ள் என்று மீண்டும் இந்த‌ உல‌கிற்க்கு சொல்லி காட்ட‌ க‌ட‌மை ப‌ட்டு உள்ளோம்............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரபேலின் வீழ்ச்சியுடன் அமெரிக்காவும் கொஞ்சம் தாய்வானில் சண்டை தொடங்கினால் எப்படி முடியும் என்று பின்னடிக்கலாம்.

இவை தென்சீன கடல், தாய்வானில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

முன்பு சொன்னது போல சீனாவின் அணுகுமுறை 2 வழிகளில் - ஒன்று மேற்கிட்ம் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒத்தது, மற்றது எதிரானது , 2 ஐயும் விருத்தி செய்கிறது.

அத்துடன் , அது எண்ணிக்கை / தரம் என்ற சமன்பாட்டையும் முழு துறைகளுக்கும் பிரயோகிக்கறது.

(இதை பல அமெரிக்கா தளபதிகளே உத்தியோக பற்றற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்)

அனால், எல்லாவற்றையும் விட, மேற்கு முன்பு தொழில்நுட்பத்தை எதிராக பாவித்த தரப்புகள் சமச்சீர் இல்லை - ஒன்று தொழில் நுட்பத்தில் குன்றியவை, அதை அடைவதில் விருப்பம் இருந்தாலும், பண, வள வசதி இல்லாதவை.

இப்பொது தான் மேற்கு அரசுக்கள் - அவற்றை தொழில்நுட்பத்தில் விஞ்ச வேண்டும் என்ற அவாவும் , அதுக்கு வேண்டிய மதி, மன, பணம், மற்றும் வளங்கள் கொண்ட அல்லது பெறக்கூடிய பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட அரசை வரலாற்றில் காண்கிறது.

அதன் இயற்கையான ஆரம்ப தாக்கங்களே இவை.

(முன் சொல்லிய தென்சனா கடலில் நடந்தது - அமெரிக்கா அணி முடக்கப்பட்டது , Nancy Pelosi தைவான் வந்ததை சீனா தடுக்க முடியாமல் போனதன் விளைவாக, சீன தொழில்நுட்பம சார்ந்த தடுக்கும் முறைகளை ஆராய்ந்ததில் வந்த ஒரு வவிளைவு) .

  • கருத்துக்கள உறவுகள்

hats-off ட்றம்ப் சாப்!😂

செத்தகிளி இனியாவது வாய் திறக்குமா?😂

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2025 at 09:29, வீரப் பையன்26 said:

இப்ப‌டி இந்தியா உள் நாட்டுக்கை ப‌ல‌ குறைக‌ள் இருக்கு (குரு )👍...................

👍...............

2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் இந்திய அரசியல்வாதிகளும், அவர்களை நம்பிய இந்திய மக்களும் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே என்னுடைய சில இந்திய நண்பர்கள் 3020ம் ஆண்டில் கூட தாங்கள் ஒரு வல்லரசாக வர முடியாது என்ற உண்மையை தெளிவாக காரணங்களுடன் சொல்லுவார்கள். சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள்.

வட இந்தியா, தென் இந்தியா என்று உள்நாட்டில் இருக்கும் அபிவிருத்தி இடைவெளி ஒரு காரணம் என்றால், அபிவிருத்தி அடைந்ததாக சொல்லிக்கொள்ளும் தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் சமூகநீதியின் சீர்கேடான நிலைமை அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களின் முன் மோட்டார் சைக்கிள் ஓடினார் என்பதற்காக பட்டிலியன இளைஞர் ஒருவரின் கைகள் அதே ஊரைச் சேர்ந்த வேறு சிலரால் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே தினமும் இப்படியான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றைய மாநிலங்களின் நிலை இதைவிடக் கொடுமை. இந்தியாவில் ஒரு சமச்சீரான முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டது.

நேபாளத்தையும், இலங்கையையும், மாலதீவையும், பூட்டானையும் சுற்றிவர வைத்துக் கொண்டு இந்தியா அதன் வலிமை இது என்று நினைக்கின்றது. ஒன்றுமேயில்லாதா பாகிஸ்தானுடன் கூட ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை இந்தியாவால் நடத்த முடியாது. இந்த யுத்தத்தாலும், உடனேயே வந்த யுத்த நிறுத்தத்தாலும் இந்தியாவிற்கு கிடைத்ததோ அல்லது இந்தியா சாதித்ததோ ஒன்றுமேயில்லை. மாறாக, இன்னும் சில காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவிற்குள் புகுந்து இன்னொரு தாக்குதலை நடத்துவதைக் கூட இந்தச் சம்பவங்கள் எந்த வகையிலும் தடுக்கப் போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து பாகிஸ்தான் இந்திய விமானங்களை அழித்தது, எவர் கை ஓங்கி இருக்கிறது என்பது வெளிப்படை.

வீடியோ இல் இருப்பது உண்மை என்றால் பாக்கிஸ்தான், தொடர்பாடலையும் ஊடறுத்து இருக்கிறது போல இருக்கிறது. அது பெரிய தோல்வி இந்தியாவுக்கு. ஏனெனில் இப்போதைய தொடர்பாடல் எல்லாம் encrypted. இதனால் தான் பாகிஸ்தான் அத்தனை இந்திய விமானங்களை அழிக்க முடிந்ததாக இருக்கலாம்.

(ஏனெனில் , தொடர்பாடலை ஊடறுத்தால் பொறிவைக்கலாம். அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடிய விமானங்களில், இருட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத நிலையில். தொடர்பாடல் ஒரு கண்.)

(இந்தியவின் பாக்கித்தான் மீதான தாக்குதல் நிலையான இலக்குகள் மீது, பாகிஸ்தான் ஏவுகணைகளை தடுத்தது ஆகவும். பாகிஸ்தானும் இந்திய ஏவுகணைகளை தடுத்தது ஆகவும்)

அனால், மனித வினைத்திறனை இயக்கப்படும் விமானம் இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து அழிக்கப்பட்டது என்பது, வான் மேலாண்மையை இந்தியா அந்த சந்தர்ப்பத்தில் இழந்துவிட்டது. அதுவும் 1 க்கு மேற்பட்ட (dropping like flies என்று துறை சார் பேச்சு மொழியில் அழைப்பது)

இது காட்டுவது, இந்தியா விமான படை அமைப்பில் பிரச்சனைகள் இருக்கிறது என்பது.

முதல் சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல, மனித திறன், பயிற்சி, தொழில்நுட்பம், உளவு, tactics, திட்டங்கள் போன்றவை எல்லாம் ஒருங்கமையும் போது ஏற்படுவது விமான வான் தாக்குதல் அழிவுகள் எதிரிக்கு. (இதனாலேயே, மேற்கு (ஆய்வாளர்) இதுவரை சீனாவின் போர்விமான வான் பலத்தை எள்ளி நகையாடுவது , எந்த தொழில் நுடம் என்றாலும் சீனாவுக்கு யுத்தக கள யதார்த்த அனுபவம் இல்லை என்று).

(இந்தியா நிரந்தரமாகவும் மேலாண்மையை இழந்து இருக்கிறதோ தெரியாது, அதுக்கு முதல் அமெரிக்கா புகுந்து நிறுத்திவிட்டது, அமெரிக்கா இந்திய விமான அழிவை எதிர்பார்க்கவில்லை என்பதும்)

தொடங்கும் பொது இந்திய-பாகிஸ்தான் என்று தொடங்கி முடியும் போது அமெரிக்கா / மேற்கு - சீனா என்று முடிந்து இருக்கிறது.

பாகிஸ்தானின் விமானம் ஏதாவதை இந்தியா வானில் தாக்கி அழித்து இருக்கிறதா?

(அப்படி என்று சில செய்திகள் முதலில் வந்தது.)

மறு வளமாக, இந்திய பாக்கிஸ்தான் தொடர்பாடலை ஊடறுத்து உள்ளது என்பதற்கு ஏதவாது வெளியிட்டு இருக்கிறதா?

இந்த‌ நாட்டில் போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் முத‌ல் ஆமி ப‌யிற்ச்சி முடித்து இருக்க‌னுன் அத‌ற்க்கு பிற‌க்கு போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் 100 கேள்விக்கு 100 ச‌ரி எடுக்க‌னும் அதில் பாஸ் ஆன‌ பிற‌க்கு தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு விடுவின‌ம்

நான் இருக்கும் இட‌த்தின் போர் விமான‌ ப‌யிற்ச்சி நிலைய‌ம் இருக்கு..................சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் உள்ளை போய் பார்க்கும் வ‌ச‌தி என‌க்கு கிடைச்ச‌து உட‌ல் நிலை ச‌ரி இல்லை அப்ப‌டியே வீட்டை நின்று விட்டேன்.....................

இந்த‌ நூற்றாண்டில் புது கைபேசி போன்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் வெளி வ‌ருவ‌தை போல் புதுவ‌கை போர் விமான‌ங்க‌ள் புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம்........................ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுற‌துக்கு முத‌ல் எங்க‌ட‌ ஆயுல் முடிந்து விடும்😁.....................

எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ விமான‌ம் சிங்க‌ள‌வ‌னின் ராட‌ரில் ப‌டாம‌ல் ப‌ல‌ முறை குண்டு போட்ட‌வை.....................அப்ப‌டியான‌ விமான‌ம் அதிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌க்காது அத‌னால் ராட‌ரில் ப‌ட‌ வில்லை👍.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.