Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!

19 May 2025, 7:24 PM

Supreme Court

உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட சுபாஷ்கரை, விரைவாக இலங்கைக்கு நாடு கடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது.

இன்றைய விசாரணையின் போது சுபாஷ்கரன் தரப்பில், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது; ஆகையால் சுபாஷ்கரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர், உலக நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குடியேறுவதற்கு இந்தியா தர்ம சத்திரம் (Dharamshala) கிடையாது; 140 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா ஏற்கனவே திணறிக் கொண்டு இருக்கிறது; இந்தியாவில் குடியேறுவதற்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாடுகளை அணுகலாம் என்றும் தெரிவித்து சுபாஷ்கரனின் மனுவை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

https://minnambalam.com/india-is-not-a-dharamshala-to-grant-asylum-to-all-supreme-court-in-eelam-refugee-case/#google_vignette

  • Replies 64
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kandiah57
    Kandiah57

    அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அரு

  • goshan_che
    goshan_che

    சரி 5000 கூட என்றால் 2500£. இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள். அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு £25 000 000. இதை உலகளாவிய தமிழ் அம

  • நியாயம்
    நியாயம்

    மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி மனதைப் பிசைந்தது. இந்தியாவும் அகதிகளாக எம்மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாதுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகள் இலங்கைத் தமிழர்கள் பலரை அகதிகளாக ஏற்காமல் திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். சிறையில் வைத்து இருந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியா இப்படி செய்யும் போது, உறவே கைவிட்டது போல இருக்கின்றது.

எங்கே போகும் இந்தச் சனங்கள்....................😔.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அழித்து அவர்களை ஏதிலிகளாக்கும்போது இந்தியா இதை உணர்ந்திருக்க வேண்டும். அடைக்கலம் கொடுக்க முடியாதவர்கள் ஏன் அவர்களை அழிக்க தூண்டினர், உதவி செய்தனர்? எங்களது இன்றைய கையறுநிலைக்கு, இந்தியா, பிரிட்டன், ஐ.நா, இன்னும் சர்வதேச நாடுகளே பொறுப்புக்கூறவேண்டும், பொறுப்பெடுக்க வேண்டும். இந்த லட்ஷணத்தில காசா மக்களை லிபியாவில் குடியேற்ற போகிறாராம் ஒருவர். அப்போ நினைத்தேன், தமிழரை இந்தியாவில் குடியேறுங்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்று. அதற்குள் இந்தப்பதில் கிடைத்துள்ளது. அவர்களை தங்கள் நாட்டில் அமைதியாக வாழ விட்டிருந்தால், அவர்கள் ஏன் பிறநாடுகளில் தஞ்சமடைய வேண்டும். தமது நாட்டில் இருபத்தாறு பேர் கொலைசெய்யப்பட்டபோது, போர் முரசு கொட்டியவர்கள், லட்ஷம் பேரை காலத்திற்கு காலம் கொன்றபோது தம்மைப்பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை கூடி அழித்தது எந்த வகையில் நிஞாயம்? அதற்கும் இந்த நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும்!    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்தச் செய்தி மனதைப் பிசைந்தது. இந்தியாவும் அகதிகளாக எம்மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாதுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகள் இலங்கைத் தமிழர்கள் பலரை அகதிகளாக ஏற்காமல் திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். சிறையில் வைத்து இருந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியா இப்படி செய்யும் போது, உறவே கைவிட்டது போல இருக்கின்றது.

எங்கே போகும் இந்தச் சனங்கள்....................😔.

நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகின்றது, அண்ணா................ இங்கு களத்தில் எழுதப்படும் பல கருத்துகளை அவரவர் சொந்த விருப்பங்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் எப்போதோ வந்துவிட்டது. அவை நடைமுறை உலகில் இல்லாதவை, எத்தனை தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும்.

நேற்று தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை. ஒரு இடத்தில் இலங்கை தமிழர்களின் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து விட்டது என்று செய்தியில் காட்டினார்கள். அங்கு குடியிருப்பவர்கள் அந்த ஊரில் இருக்கும் அங்கன்வாடியில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.

அவர்களில் ஒரு பெண் செய்தியாளர்களிடம் கதைத்தார். அவருடைய தமிழில் ஈழ அடையாளம் எதுவுமே இல்லை. அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை போல. இது தான் நிஜ உலகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது-திருமாவளவன்

20 May, 2025 | 10:48 AM

image

புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு எல்லாம் இடம் கொடுப்பதற்கு இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.

புலம் பெயர்வது அனைத்து நாடுகளிலும் நிகழக் கூடியது. புலம் பெயர்வை சட்டத்தின் மூலமோ, எல்லைகளின் மூலமோ தடுத்துவிட முடியாது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அரசின் தலையாய கடமை” என்று அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? - இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது.

உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/215195

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ அகதிகளை வேறு நாடு செல்லுங்கள் என்று கூறும் உச்ச நீதிமன்றம், தீபெத் அகதிகளிடமும் இவ்வாறு கூறுமா?

இந்தியா என்ன சத்திரமா என்று பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளிடம் உச்சநீதிமன்றம் கேட்குமா?

தமிழருக்கு ஒரு நீதி. மற்றவருக்கு இன்னொரு நீதி. இதுதான் உச்சநீதிமன்ற நீதியா?

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ..

அப்படி தான் இருக்ககும்.

8 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா???

பாகிஸ்தான் ஏற்று கொண்டால் கூட இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போக விருமபு மாட்டார்கள் இலங்கையிலேயே மகிழ்ச்சியாக இருந்துவிடுவார்கள் வெளிநாட்டு ஈழ தமிழர்கள் மேற்குலகநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கொமடி விடுவது அவர்களுக்கு தெரியாதா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும் மனவலியும் அளிக்கிறது - சீமான்

20 MAY, 2025 | 04:42 PM

image

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும் மனவலியும் அளிக்கிறதுஎன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும்இ மனவலியும் அளிக்கிறது!

இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 'இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது? 'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்! என்ற உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மிகுந்த மனவலியைத் தருகிறது.

ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளாம் 10 கோடி தமிழர்கள் நாங்கள், நிலைத்து வாழ்கின்ற பெருத்த நிலப்பரப்பாம் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது என்பதைவிடவும் என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்?

இந்திய மாநிலங்களிலேயே அதிக வரி செலுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும்இ ஒன்றிய அரசின் வருமானத்திலும், பெருமளவு பங்களிப்பு செய்யும் தமிழர்கள் நாங்கள் இந்த மண்ணில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்?

தமிழர்கள் நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம், என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா?

சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கு இங்கு வாழும் உரிமை உண்டு. இந்திய நாடு அவர்களுக்கு எண்ணற்ற வசதிகளைச் செய்து வாழ்விக்கும்போது, அவர்களை நோக்கி எழுப்பப்படாத இது என்ன சத்திரமா? என்ற கேள்விஇ எம் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் குடியுரிமை கேட்கும்போது எழுவது ஏன்? இதே கேள்வியை பாகிஸ்தானிடமிருந்து வருகின்ற இந்துக்களிடமோ சீனாவின் திபெத்தியர்களிடமோ கேட்டுவிடத்தான் முடியுமா?

அடிமைப்படுத்தி ஆண்ட பல ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் வந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவின் சீக்கியர்கள் உள்ளிட்ட  இலட்சக்கணக்கான ஆதரவற்ற உலக மக்களை அள்ளி அரவணைத்து குடியுரிமை முதல் விளையாட்டு அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் பங்கேற்க அனுமதியும் வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய அதிக பொறுப்பும் - கடமையும் வரி செலுத்தி வாக்கு செலுத்தி நான் நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?

'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் சத்திரமா? என்று கேள்வி எழுப்பினால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேச பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படி செய்வது முறைதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? 

இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா?

ஈழத்தமிழருக்கும் இந்திய நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை அழித்தொழிக்க இந்தியப் பெருநாடு அமைதிப்படையை அனுப்பியதுதான் ஏன்? என்ற கேள்விக்கு இந்த நாட்டில் எந்த நியாயவான்களிடம் பதிலுண்டு?

பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பீர்களானால், அவர்களிடம் குடிகொண்டுள்ள

தனித்திறமைக்கு என்ன மதிப்பு உள்ளது? என்ன அங்கீகாரம் உள்ளது? அதனைத் தடுப்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது இல்லையா? அகதி என்பதற்காக தனித்திறனை விடாமுயற்சியை கடும் உழைப்பைஇ வாழ்க்கை இலட்சியத்தை அழிப்பது மனிதத்திற்கு எதிரானது இல்லையா?

அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்தது குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா? அகதியாக்கப்ப்பட்ட காரணத்திற்காகஇ இந்த நாட்டில் பிறந்த அவர்களின் பிள்ளைகளுக்கும் கூட மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்படாதது எவ்வகையில் நியாயமாகும்? இதுதான் இந்த நாடு கட்டிகாக்கும் தர்மமா?

இந்திய குடியுரிமை இல்லாத ஒற்றைக்காரணத்திற்காகஇ திருச்சியில் வாழ்ந்து வரும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜா உள்ளிட்ட எத்தனை எத்தனை ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் என்பதை எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் தன்னகத்தே கொண்டு உலகிற்கு அன்பையும்இ அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த நாடானதுஇ நம்மைப்போல இரத்தமும்இ சதையும் உயிரும்இ உணர்வும் கொண்ட சக மனிர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? 

அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்த கூடுதல் சலுகையும் இந்த நாடுதர வேண்டாம். குறைந்தபட்சம் மனிதர்கள் என்பதற்காகவது மனிதநேயத்தோடு நடத்தலாமே?

எனவே இந்தியப் பெருநாடு ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும் கல்வி விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்குள்ள தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில்

இரட்டை குடியுரிமை தற்காலிக குடியுரிமை சிறப்பு குடியுரிமை என்ற பெயரிலாவது அவர்கள் தங்களுடைய தனித்திறனை அடையாளப்படுத்தவும் உலக அரங்கில் அங்கீகாரம் பெறவும் அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே கோடிக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாய் திகழும் இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு முற்று முழுதாக குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பினை மறுசீராய்வு செய்து குறைந்தபட்சம் தற்காலிக சிறப்பு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்டு தமிழர்களின் மனவலியைப் போக்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://www.virakesari.lk/article/215250

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஈழ அகதிகளை வேறு நாடு செல்லுங்கள் என்று கூறும் உச்ச நீதிமன்றம், தீபெத் அகதிகளிடமும் இவ்வாறு கூறுமா?

இந்தியா என்ன சத்திரமா என்று பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளிடம் உச்சநீதிமன்றம் கேட்குமா?

தமிழருக்கு ஒரு நீதி. மற்றவருக்கு இன்னொரு நீதி. இதுதான் உச்சநீதிமன்ற நீதியா?

தோழர் பாலன்

பாகிஸ்தான் வெல்ல வேண்டும் எனவும் ....இந்தியா தோற்க. வேண்டும் என்றும் விரும்பும் ஒரு இனம் இந்தியாவில் இருக்க முடியாது ....தீர்ப்பு சரியாக தான் இருக்கிறது தமிழ் சிறி ஐயா,.🤣 இப்படி ஒரு தீர்ப்பு வர. இலங்கை தமிழர்கள்,.இந்தியாவை எதிர்த்த இலங்கை தமிழர்கள் தான் காரணம். மேலும் பாகிஸ்தானில். அகதி அந்தஸ்து. கோரினால் என்ன தீர்ப்பு கிடைத்திருக்கும். ??

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

10 கோடி தமிழர்கள் நாங்கள்

கடந்த வருடம் 7. கோடி இந்த வருடம் எப்படி 10. கோடி ஆனாது ??

1 hour ago, ஏராளன் said:

ஆகவே கோடிக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாய் திகழும் இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு முற்று முழுதாக குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பினை மறுசீராய்வு செய்து குறைந்தபட்சம் தற்காலிக சிறப்பு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்டு தமிழர்களின் மனவலியைப் போக்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https

அறிக்கை விட்டு என்ன பலன் ?? உடனும். மேல்முறையீடு செய்யுங்கள்,....

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

இந்தச் செய்தி மனதைப் பிசைந்தது. இந்தியாவும் அகதிகளாக எம்மக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாதுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகள் இலங்கைத் தமிழர்கள் பலரை அகதிகளாக ஏற்காமல் திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள். சிறையில் வைத்து இருந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியா இப்படி செய்யும் போது, உறவே கைவிட்டது போல இருக்கின்றது.

எங்கே போகும் இந்தச் சனங்கள்....................😔.

மேற்கத்தைய நாடுகள் எவையும் ஒட்டு மொத்தமாக ஈழதமிழரை திருப்பி அனுப்பவில்லை.

1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தின் படி பல்லாயிரகணக்காணோருக்கு அகதி அந்தஸ்தும், ஐரோப்பிய மனித உரிமை சாசன அடிப்படையில் இன்னும் பல்லாயிரம் பேருக்கும் வதிவிட உரிமை கொடுத்துள்ளன.

ஆனால் இந்தியா அப்படி அல்ல - அது அகதிகள் சாசனத்தின் ஒப்பந்ததாரி இல்லை. எந்த இலங்கை அகதிக்கும் அங்கே நிரந்தர உரிமை இல்லை.

உதவி கூட தமிழ்நாடு அரசுகள் மனமிரங்கி கொடுப்பதுதான். அதற்கு நாம் எப்போதும் நன்றியாக இருக்க வேண்டும்.

தமிழருக்குத்தான் இந்த நிலை. ஒரு இந்து, அல்லது சீக்கிய, அல்லது ஜைன வங்காளியோ, பஞ்சாபியோ, சிந்தியோ பாக்கிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், பங்களாதேசில் இருந்து வந்து கேட்டால் CAA குடியுரிமையே கொடுக்கும்.

இதுதான் ஒன்றிய இந்தியாவின் குணம்.

16 minutes ago, Kandiah57 said:

அறிக்கை விட்டு என்ன பலன் ?? உடனும். மேல்முறையீடு செய்யுங்கள்,....

யாரிடம் கடவுளிடமா? 😂

மேன்முறையீடு செய்ய முடியாது, ஆனால் உச்சநீதிமன்றையே மீள் பரிசீலனை (மறு சீராய்வு) செய்ய சொல்லி கேட்கலாம். அதற்கும் அனுமதி கிடைப்பது குதிரைகொம்பு. கிடைத்தாலும், தீர்ப்பு மாறாது.

இந்த வழக்கை போட்டதே பிழை.

நீதிமன்றம் இருக்கும் சட்டத்தைதான் வியாக்கியானம் செய்யும்.

இந்த விடயம் இந்திய சட்டத்தில் மாறுதலை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே சாதிக்கபட கூடியது.

30 minutes ago, Kandiah57 said:

பாகிஸ்தான் வெல்ல வேண்டும் எனவும் ....இந்தியா தோற்க. வேண்டும் என்றும் விரும்பும் ஒரு இனம் இந்தியாவில் இருக்க முடியாது ....

தர்க்கம் நியாயமானதே.

ஆனால் இந்த வெறுப்பு நிலையை இந்தியா விரும்பினால் அப்படியே விருப்பு நிலையாக மாற்றலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

என்னை பொறுத்தமட்டில் இந்த மக்கள் இலங்கை திரும்பவேண்டும். அதற்கு புலம்பெயர் அமைபுகள் குடும்பதுக்கு £5000 வரையில் உதவி தொகை வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

seemaan.jpg?resize=750%2C375&ssl=1

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை? உச்ச நீதிமன்றத்தைச் சாடிய சீமான்.

ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.

எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ வேறு நாட்டிற்கு செல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு எனவும்,  இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது எனவும், இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும்,  சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்   இந்திய நாட்டில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டுஇ,அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை அல்லது தற்காலிக குடியுரிமை என்று ஏதாவது ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் இறுதி நம்பிக்கையாய் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும்,இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2025/1432569

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்றால், அது இன்னும் பலர் வந்து குவிவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது போல் ஆகிவிடும்.

வரவே கூடாது, போங்கள் போங்கள் என்று கழுத்து பிடித்து தள்ளினால் அங்கே மனிதாபிமானம் மரணித்தே போய்விடும்.

அகதி என்ற நிலையை ஒருவன் தானே விரும்பி ஏற்படுத்திக் கொள்வது அல்ல. அவன் மீது வலிய வலிய திணிக்கப்படுவது.

அவர்களின் துயரைப் போக்கி நிலையை மாற்றி மீள்குடியேற்றத்திற்கு வழி வகுப்பதே அறிவார்ந்த செயல்.

இதெல்லாம் சட்டத்திற்கும் அப்பால் வரவேண்டிய சிந்தனைகள்.

உச்ச மன்றத்திற்கு அத்தகைய சிந்தனைகள் வராமல் போவது துரதிஷ்டம்.

Ezhumalai Venkatesan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!

- உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த இலங்கைத் தமிழர்

https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர் எனவும் என்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என்றும் இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

#refugees #sc #supremecourt #உச்சநீதிமன்றம் #அகதிகள் #madrashighcourt #SriLanka #SriLankan #Tamils #இலங்கைதமிழர்

May be an image of 1 person and monument


இந்த தளததில் கருத்துக்களை பகிர்ந்திருப்பவர்களில் ஒருவர் கனடாவுக்கு போக சொல்லுங்கள் என்று கருத்திட்டு இருக்கிறார்... https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

தமிழருக்குத்தான் இந்த நிலை. ஒரு இந்து, அல்லது சீக்கிய, அல்லது ஜைன வங்காளியோ, பஞ்சாபியோ, சிந்தியோ பாக்கிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், பங்களாதேசில் இருந்து வந்து கேட்டால் CAA குடியுரிமையே கொடுக்கும்.

இதுதான் ஒன்றிய இந்தியாவின் குணம்.

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகங்களில் இதுவும் ஒன்று. அதற்கு அவர்கள் காரணமாக முன்வைத்த 'இலங்கை எங்களின் நட்பு நாடு...............' என்னும் காரணம் மிகவும் பொய்யான ஒன்று.

44 minutes ago, goshan_che said:

பிகு

என்னை பொறுத்தமட்டில் இந்த மக்கள் இலங்கை திரும்பவேண்டும். அதற்கு புலம்பெயர் அமைபுகள் குடும்பதுக்கு £5000 வரையில் உதவி தொகை வழங்கவேண்டும்.

1993ம் ஆண்டில் சில குடும்பங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்தன. அவர்களை வவுனியாவில் ஒரு மண்டபத்தில் கொண்டு வந்து விட்டிருந்தார்கள். சில பாத்திரங்கள், ஆளுக்கொரு போர்வை, அவர்களின் கைகளில் ஆயிரம் ரூபாவோ என்னவோ. இது மட்டுமே அவர்களிடம் இருந்தது.

அடுத்த அடுத்த நாட்களில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எந்த அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவவில்லை. அன்றைய வவுனியா இன்று போல இல்லை. அன்று வவுனியா நகரிலிருந்து மகாறம்பைக்குளம் தாண்டிய பின் முற்று முழுதாக காடாக இருந்தது. அவர்களில் சிலர் மகாறம்பைக்குளத்தில் இருந்து சில மைல்கள் உள்ளே இருக்கும் சாந்தசோலையில் குடிசை போட்டுத் தங்கினார்கள். குட்டிக் குட்டி குடிசைகள். மொத்தமுமே எட்டு அடிகள் x எட்டு அடிகள் அளவான ஒரு குடிசை. இது தான் ஒரு குடும்பத்தின் வாழ்விடம்.

வவுனியா நகர் வந்து போக சைக்கிள் வசதி கூட அவர்களிடம் இருக்கவில்லை. தொழில் இல்லை. எதுவுமே இல்லை. எவ்வளவோ முயற்சித்தார்கள் அந்த மனிதர்கள்.

பின்னர் மீண்டும் மன்னார் ஊடாக கடல் கடந்து மண்டபம் போய்ச் சேர்ந்தார்கள்.

தமிழ்நாட்டில் அரசு வழங்கும் சிறு குடியிருப்புகள், சில இலவசங்கள் மற்றும் அங்கங்கே கிடைக்கும் சில வேலைகள், உதாரணம்: நாமக்கல் பகுதிகளில் கோழிப்பண்ணைகளில் கிடைக்கும் வேலைகள், என்று எம் மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்பும் எண்ணத்தில் இல்லை.

அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளுக்கு இலங்கையுடன் எந்த விதமான உணர்வுப் பிணைப்பும் இல்லை. இவர்கள் அந்தச் சூழலில், அதே குடியிருப்புகளில் அமுங்கிப் போகாமால், அந்த நாட்டில், அந்த சமூகத்தில் எப்படி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அவர்கள் முன் இருக்கும் சிக்கல்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிகு

என்னை பொறுத்தமட்டில் இந்த மக்கள் இலங்கை திரும்பவேண்டும். அதற்கு புலம்பெயர் அமைபுகள் குடும்பதுக்கு £5000 வரையில் உதவி தொகை வழங்கவேண்டும்.

பி.கு..நீங்கள் குறிப்பிடுவது போல் இனி வரும் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 5000 கொடுப்பது ஒரு கிழமை சீவியத்திற்கே போதுமோ தெரியாது.கண்டிப்பாக போதாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்ப்பு மலையக தமிழர்களை அன்றைய இலஙகை அரசு இந்தியாவுக்கு திருப்பு அனுப்பிய சமயம் வந்திருந்தால் மிகவும் மகிழ்சசியடைந்திருப்பேன். 7 அல்லது 8 எம்பிகளை பாராளுமன்றம் அனுப்பும் அளவு மலையக தமிழர்கள் 1950 ல் இருந்தார்கள். அவர்களில் 25 வீதத்தை வட கிழக்கில் குடியேற்ற அன்றைய தமிழ் தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலே வட கிழக்கில் நிலங்கள் பறி போயிருக்காது. 1977 கலவரத்தில் வந்தவர்கள் கூட திரும்பி மலையகம் செல்ல வேண்டிய நிலையே வந்தது. தோட்டக்காட்டான் என்று அவர்களை வெறுத்த யாழ்ப்பாண dominant சமூகம் அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

பி.கு..நீங்கள் குறிப்பிடுவது போல் இனி வரும் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 5000 கொடுப்பது ஒரு கிழமை சீவியத்திற்கே போதுமோ தெரியாது.கண்டிப்பாக போதாது.

அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன்

குமாரசாமி தமிழ் சிறி. கவி. அருணாச்சலம. ......நிறைய பேர போவார்கள் 🤪🙏

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெறும் புத்தக பூச்சிகள்.

இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும் இந்தியர்களையும் இந்த கிந்தியா திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா....

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெறும் புத்தக பூச்சிகள்.

இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும் இந்தியர்களையும் இந்த கிந்தியா திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா....

அத்துடன் இந்திய நீதிபதிகளும்... கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைப்பார்கள். இவர்களுக்கு எப்படி, எதற்காக அந்தப் பணம் கொடுக்கப் பட்டது என்பதை ஆளும் வர்க்கம் சொல்லவே மாட்டாது.

டெல்லி நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் 15 கோடி பணம்.. எப்படி வந்தது? நீதிபதி எழுப்பும் சந்தேகம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-15-crore-burnt-at-judges-residence-justice-yashwant-varma-faces-inquiry-explainer-690485.html

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அல்ல.

வள்ளலார், அரவிந்தர், இராம கிருஷ்ணர், மகா யோகிகள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியில் மனிதநேயம் இல்லாத, வெறுப்பை, துவேசத்தை உமிழ்கின்ற நீதியும், நீதிபதிகளும் நவீன இந்தியா எங்கு செல்கின்றது என்பதை கட்டியம் கூறுகின்றது.

உங்களுக்கு உங்கள் சோழியை பார்க்கவே முடியவில்லை என்றால் என்ன ******* அயல் நாடு இலங்கையின் ஒரு பகுதி மக்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் கொடுத்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள்? அமைதியான இலங்கை திருநாட்டை சீர்குலைத்துவிட்டு இப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் எதுவித சம்மந்தமுமே இல்லாமல் தீர்ப்பு சொன்னால் எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை?

கிந்தியாவை மறந்து விட்டு சீனாவுடன் கை கோர்ப்பதே ஈழத்தமிழர்களுக்கு மாற்று வழிகளை கொடுக்கும் என நினைக்கின்றேன்.

நாம் காலம் காலமாக இந்தியா இந்தியா என உருகி விழ....அவர்களோ எம்மை அழிப்பதிலேயே முனைப்பாக நிற்கின்றார்கள்.நாம் பாடசாலைகளில் இலங்கை வரலாற்றை விட இந்திய வரலாறுகளை படித்ததுதான் அதிகம். அந்த நாட்டு தலைவர்களின் சிலை நிறுவி வருடா வருடம் மாலையிட்டு மரியாதை கொடுத்ததுதான் மிச்சம்.

வெள்ளையர்களிடமிருந்து அகிம்சையால் விடுதலையடைந்தோம் என வாய்க்குவாய் கூறிக்கொண்டு,எழுத்துக்கு எழுத்து அகிம்சை என போதித்துக்கொண்டு.... அயல் நாடுகளில் மனித அழிவுகளை செய்யும்/ செய்யத் துடிக்கும் கேடுகெட்ட நாடு.

தமிழ்நாட்டு உறவுகள் மன்னிக்கவும்.எமது பிரச்சனைகளை,உணர்வுகளை புரிந்து கொள்வீர்களாக.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அல்ல.

வள்ளலார், அரவிந்தர், இராம கிருஷ்ணர், மகா யோகிகள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியில் மனிதநேயம் இல்லாத, வெறுப்பை, துவேசத்தை உமிழ்கின்ற நீதியும், நீதிபதிகளும் நவீன இந்தியா எங்கு செல்கின்றது என்பதை கட்டியம் கூறுகின்றது.

உங்களுக்கு உங்கள் சோழியை பார்க்கவே முடியவில்லை என்றால் என்ன ******* அயல் நாடு இலங்கையின் ஒரு பகுதி மக்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் கொடுத்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள்? அமைதியான இலங்கை திருநாட்டை சீர்குலைத்துவிட்டு இப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் எதுவித சம்மந்தமுமே இல்லாமல் தீர்ப்பு சொன்னால் எப்படி?

அருமையா எழுதி இருக்கிறீங்க‌ள்..................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.