Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி?

லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?

அண்ணை, வழக்குப் போட்டவர் சு.சாமி எல்லோ? அதை முன்னெடுத்தது தி.மு.க என்று நினைக்கிறேன். வாய்தாவால் கர்நாடகத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன்

  • ஏராளன்
    ஏராளன்

    🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?

  • நிழலி
    நிழலி

    லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை, வழக்குப் போட்டவர் சு.சாமி எல்லோ? அதை முன்னெடுத்தது தி.மு.க என்று நினைக்கிறேன். வாய்தாவால் கர்நாடகத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

புகார் கொடுத்தவர் சு.சா.

திமுக ஆட்சியில் இருக்கும் போது வழக்கு போடப்பட்டு, பின் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசியல்தலையீட்டை தவிர்க்க, திமுக போட்ட மனுவின் அடிப்படையில் பங்களூருக்கு மாற்றப்பட்டது வழக்கின் நீதி விசாரணை (trial).

ஆனால் நான் சொல்ல வந்தது அது அல்ல.

நீதி விசாரணை ஜெ வை குற்றம் தீத்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெவை விடுதலை செய்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பை, தண்டனையை உறுதி செய்தது.

நான் சொல்வது, எப்படி நாக்பூர் ஆசியினால் சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் போய் தப்பிக்க முடிந்ததோ, அப்படி ஜெயாலும் முடிந்திருக்கும், நாக்பூரின் மிரட்டலுக்கு அடி பணிந்திருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண தமிழ் வேர் என்பது அவரது பெருமை அல்ல. அவரது திறமையே அவருக்கு பெருமை. யாழ்பாணத்தில் இருந்திருந்தால் ஜாதீய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இன்று போற்றப்படுகிறார். வாழ்த்துகள் வேடன்.

வேடனை விடுதலை செய்யுங்கள்

*

"நான் பாணன் அல்ல

பறையன் அல்ல

புலையன் அல்ல

நீ தம்புரானுமல்ல.

ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!"

வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.

வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.

அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான்.

யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான்.

அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள்.

ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான்.

மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது.

கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார்.

2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன.

கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள்.ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார்.

ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது.

இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது.

May be a black-and-white image of 1 person

All reactions:

Thank you:Ravindran Pa

https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/


  • கருத்துக்கள உறவுகள்

Kerala Rapper Vedan: யார் இவர்? என்ன செய்தார்? Kerala BJP, Hindu அமைப்புகள் இவரை குறிவைப்பது ஏன்?

கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக வேடன் என்ற பெயர் பேசப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக அவர் உருவெடுத்திருக்கிறார்.

வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. யார் இந்த வேடன்? இவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென பாஜக தரப்பில் கூறப்படுவது ஏன்?

#Vedan #KeralaRapper #RapperVedan

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

யாழ்பாண தமிழ் வேர் என்பது அவரது பெருமை அல்ல. அவரது திறமையே அவருக்கு பெருமை. யாழ்பாணத்தில் இருந்திருந்தால் ஜாதீய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இன்று போற்றப்படுகிறார். வாழ்த்துகள் வேடன்.

நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣

இருந்தாலும் வேடனுக்கு இருக்கும் தைரியம் ஏனைய கலைஞர்களுக்கு இல்லை.இலங்கையிலும் இப்படியொரு கலைஞன் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இருந்தாலும் வேடனுக்கு இருக்கும் தைரியம் ஏனைய கலைஞர்களுக்கு இல்லை.இலங்கையிலும் இப்படியொரு கலைஞன் வேண்டும்.

நிச்சயமாக.

இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன.

திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்….

அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம்.

அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார்.

தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன்.

ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.

4 hours ago, goshan_che said:

நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣

லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.

வேடன் மலையாளத்தில் ஏற்கனவே பிரபல்யம். 4 கிராம் கஞ்சா தான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தேடி பார்த்ததில் ஏற்கனவே ஈழம் சம்பந்தமாகவும் சாதி அடிமை சம்பந்தமாகவும் பல பாடல்களை பாடியுள்ளார் என தெரிய வருகின்றது.

யார் கம்பு சுத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வரணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, நிழலி said:

லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

அந்த வட்டங்களை இனியும் காவிக்கொண்டு திரியக்கூடாது. அப்படியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Michael Jackson நிற வெறிக்காக போராடி வெற்றி பெற்றவர் என்பதை மறக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

கோஷான் சொல்றான்; மீம் பாய்ஸ் செய்றான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழுதி பாடிய 3 நிமிட பாடல் ஒன்று நண்பர் அனுப்பி கேட்டேன் திராவிட மொழி மலையாளத்தில் தான் உள்ளது. இன்று ,செத்தாலும், காடு சில சொற்களை தவிர பாடல் விளங்கவில்லை. ஆங்கில வசன வரி விளக்கமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

501049352_1889878211815397_8205590130058

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2025 at 00:27, Maruthankerny said:

இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார்

அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்

புள்ளிராஜா மைன்ட் வொய்ஸ்: "வசமாக பெண் புரசு சல்லாபங்களில் மாட்டிக் கொண்டு விட்டோம். இனி தமிழ், ஈழம், புலி, பிரபாகரன் என்று கலர் கலராகப் போர்வையைப் போர்த்திக் கொண்டால் தான் தப்பி நிலைக்கலாம்!😎"

  • கருத்துக்கள உறவுகள்

வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்குமுறைக்கெதிரான எந்த ஆயுதத்தையாகினும் கையில் ஏந்தியபடி நிற்பவர் எவராக இருந்தாலும் போற்றுதற்குரியோரே. பலம் சேர்ப்பதே. இணைவுப்பாலமே.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அடுக்குமுறைக்கெதிரான எந்த ஆயுதத்தையாகினும் கையில் ஏந்தியபடி நிற்பவர் எவராக இருந்தாலும் போற்றுதற்குரியோரே. பலம் சேர்ப்பதே. இணைவுப்பாலமே.....

தமிழ் பௌத்தரான அருண் சித்தார்த்தும் இதற்குள் அடங்குவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தமிழ் பௌத்தரான அருண் சித்தார்த்தும் இதற்குள் அடங்குவாரா?

எனக்கு மதம் சாதி சார்ந்த உங்கள் பார்வை கிடையாது. அநியாயத்திற்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும் அவர்கள் எனது உறவே. என் வலியை மறுக்காதிருந்தால் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2025 at 07:03, நிழலி said:

லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

எனது நண்பர் (அவரரது ஊர் தெரியாது) ஒருவர் வெளிநாடு வந்த போது அதே இளம் வயதொத்த ஒருவர் "கொப்பர் என்ன கமமோ" என கேட்டார், அவரை (கேட்டவரை) பின்னர் கமம் என அழைப்பதுண்டு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

எனது நண்பர் (அவரரது ஊர் தெரியாது) ஒருவர் வெளிநாடு வந்த போது அதே இளம் வயதொத்த ஒருவர் "கொப்பர் என்ன கமமோ" என கேட்டார், அவரை (கேட்டவரை) பின்னர் கமம் என அழைப்பதுண்டு🤣.

இதன் அர்த்தம்

  1. உங்கள் அப்பா விவசாயியா? என்பதா அல்லது

  2. உங்கள் அப்பாவின் ஊர் என்ன என்பதா?

பிகு

பல யாழ்பாணத்தவர் வெளி நாடு ஒன்றில் இன்னொரு ஈழத்தமிழரை கண்டு பேசி முதல் ஐந்து கேள்விக்குள் நிச்சயம் - “யாழ்பாணத்தில் நீங்கள் எவடம்” எண்ட கேள்வி இருக்கும்🤣.

ஏன் இலங்கையில் யாழ்பாணம் மட்டுமா தமிழ் ஊர் நான் மட்டகளப்பு/வன்னி/ மன்னார் என சொல்லிப்பாருங்கள்….

வழியும் அரை லோடு அசடை காண கண்கோடி வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

மாறாக ஊரை சொன்னீர்களாயின்…வடக்கோ தெற்கோ, எத்தனையாம் குறிச்சி, கோவிலுக்கு எந்த பக்கம் என கேள்விகள் தொடரும்.

நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும், ஏனக்கு கல்யாணம் பேச போறியளோ எண்டு கேட்டால் இன்னொரு லோடு அசடு வழியும்.

ஆனாலும் விடமாட்டார்கள்🤣.

இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.

6 minutes ago, goshan_che said:

  1. உங்கள் அப்பாவின் ஊர் என்ன எயாழ்பாணத்தில் நீங்கள் எவடம்” எண்ட கேள்வி இருக்கும்🤣.

இந்தக் கேள்வியை என் மகனிடம் முந்த நாள் ஒரு யாழைச் சேர்ந்தவர் இங்கு கேட்டு இருக்கின்றார்.

அவர் genuine னாக கேட்டும் இருக்கலாம், அல்லது நீ என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிய கேட்டும் இருக்கலாம் என அவனிடம் தெளிவுபடுத்தினேன்.

ஏற்கனவே சாதி பற்றி கதைத்துள்ளதால் விளக்க முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதன் அர்த்தம்

  1. உங்கள் அப்பா விவசாயியா? என்பதா அல்லது

  2. உங்கள் அப்பாவின் ஊர் என்ன என்பதா?

பிகு

பல யாழ்பாணத்தவர் வெளி நாடு ஒன்றில் இன்னொரு ஈழத்தமிழரை கண்டு பேசி முதல் ஐந்து கேள்விக்குள் நிச்சயம் - “யாழ்பாணத்தில் நீங்கள் எவடம்” எண்ட கேள்வி இருக்கும்🤣.

ஏன் இலங்கையில் யாழ்பாணம் மட்டுமா தமிழ் ஊர் நான் மட்டகளப்பு/வன்னி/ மன்னார் என சொல்லிப்பாருங்கள்….

வழியும் அரை லோடு அசடை காண கண்கோடி வேண்டும்🤣.

5 minutes ago, goshan_che said:

மாறாக ஊரை சொன்னீர்களாயின்…வடக்கோ தெற்கோ, எத்தனையாம் குறிச்சி, கோவிலுக்கு எந்த பக்கம் என கேள்விகள் தொடரும்.

நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும், ஏனக்கு கல்யாணம் பேச போறியளோ எண்டு கேட்டால் இன்னொரு லோடு அசடு வழியும்.

ஆனாலும் விடமாட்டார்கள்🤣.

இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.

எனது நண்பரின் ஊர் பற்றி ஒருவருக்கும் தெரியாது என நினைக்கிறேன், ஆனால் யாழ்ப்பாணம் இல்லை என்பதால்த்தான் இந்த கேள்வி எழுந்திருக்கும் என கருதுகிறேன்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க.

அவர்களின் பிற இன திராவிட வெறுப்புக்களை இங்கே அடக்கி கொண்டு அவரின் அம்மாவை பிடித்து அவர் யாழ்ப்பாண தமிழன் தான் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது அவர் சாதி எதிர்ப்பு பாடல்கள் பாடியவர் என்பதற்காக இல்லை

11 minutes ago, goshan_che said:

இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.

இது எனக்கு பிடித்திருக்கின்றது சாதி வெறியர்களை தலையை பிய்த்து கொள்ள வைக்கும் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.