Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 Jun, 2025 | 05:11 PM

image

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர்.

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk

விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?

விக்கியர் அவரின் தீவிர பக்தர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு 😂 தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர்.

பாவமன்னிப்பு 😂 கொடுக்கப்படும்போது பாராபட்சம் காட்டக்கூடாது 😅

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுமந்திரன் கொசுறு, எல்லோரையும் கட்சியை விட்டு விரட்டியது, தானே எல்லா அதிகாரத்தையும் சுவீகரித்துக்கொள்வதற்காகவே. பாராளுமன்றத்தேர்தலில் கூட எல்லோரையும் கொலைகாரர், கள்ளர் என்று என்னென்னவோ எல்லாம் விமர்ச்சித்தவர். ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்றவர் டக்கிலஸின் காலடியில் கட்சியை விழவைத்தார், அங்கே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு வழியின்றி பாதை மாறி விக்கியர் வீட்டு கதவை தட்டியுள்ளார். இது அவரின் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கே மக்களுக்காகவல்ல. மக்கள் கவனமாக செயற்படவேண்டும். மக்களாலேயே இந்த மாற்றம் ஏற்படுத்த முடிந்தது. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த வாக்குகளை, கிடைத்த செல்வாக்கை சுமந்திரன் தனதாக்கி அறிக்கை விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

Visitharan Praisoody

·

505071868_10088707964507963_660809673750

505196918_10088707714507988_220147737320

505295666_10088707754507984_579997112299

நல்லூர் பிரதேச சபையில் தமிழரசுக்கு 7 ஆசனங்களும், மணிவண்ணன் தரப்பிற்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்த நிலையில், முதல் இருவருடங்களை தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்களை தமிழரசுக்கும் என்று ஆட்சி அதிகார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. நல்ல முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் சபையில் மானின் ஆட்சி!

71099889.jpeg

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசசபையில் இன்று தமிழ் மக்கள் கூட்டணி (மான்) ஆட்சியமைக்கும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபுவின் தலைமையில் நல்லூர் பிரதேசசபையின் சபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் பிரதேசபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து ஆட்சி மைப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முதலிரு ஆண்டுகளில் தமிழ் மக்கள் கூட்டணியும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியும் ஆட்சியமைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே, நல்லூர் பிர தேசசபையில் தமிழ் மக்கள் கூட்டணி இன்று ஆட்சியமைக்கும் என்று உறுதியாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேச சபையின் கடந்த ஆட்சிக்காலத்தில் தவிசாளராகச் செயற்பட்ட ப.மயூரன் இம்முறையும் தமிழ் மக்கள் கூட்டணிகள் விரைவில் விடுவிக்கப்படும். மாவட்டச் செயலர் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் அந்தக் காணிகள் பாரப்படுத்தப்படும் - என்றார்.

https://newuthayan.com/article/நல்லூர்_சபையில்_மானின்_ஆட்சி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி கூட்டு ஆட்சி – சந்தர்ப்பவாத தமிழ்த்தேசிய விரோதம்!

Sumanthiran-cv-1.jpg

சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ்தேசியவிரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவ்வாறு முன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்

ச.ஸ்ரார்லின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது,

தமிழ்தேசிய பரப்பில் இவருக்காக மீன்சின்னத்தை வழங்கி பாராளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் யாரின் பதவிமோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர்போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.தமிழ்தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது.

தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத்துரோகிகளாக அடையபளப்படுத்தப்பட்ட ஈபிடீபி யினருடன் தமிழ்தேசியநலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்தேசியம் ஒற்றுமைபடுவதை சிதைக்கும் எண்ணகருவுடன் ஒப்பந்தம் செய்த  சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன்முலம் முன்னர் வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈபிடீபியுடன் இனைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகதானோ தமிழ்தேசியகொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும்நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவுகாட்டினர் நாமும் அவ்நம்பிக்கையுடனே தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம் எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன்.

சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்தேசியப்பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம்தேசியத்திற்காக ஒன்றிணைவோம்.- என்றுள்ளது.

https://akkinikkunchu.com/?p=329609

  • கருத்துக்கள உறவுகள்

509356993_1139022234929414_8312674557562

சிவஞானமும், சுத்துமாத்து சுமந்திரனும்தான்... அந்த கறுப்பாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2025 at 14:44, பிழம்பு said:

11 Jun, 2025 | 05:11 PM

image

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர்.

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk

சிங்கள சம்பந்திகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? என்பதை... பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை. இதில்... சுத்துமாத்துத்தனம் செய்வதற்காக அதை இரகசியமாக வைத்துள்ளார்களோ.

விக்கியரின்... மாகாணசபைத்தலைவர் பதவிவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன், இதிலும் விக்கியரின் காலை வருவார் என எதிர்பார்க்கலாம்.. சிலருக்கு... பட்டும், புத்தி வரமாட்டுது என்றால்.. ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அவமதித்தவர்களுடனோ அல்லது நாம் அவமதித்தவர்களுடனோ கூட்டுசேர்வது நம்மை நாமே அடிமாடாக்கும் செயல். சுமந்திரனுக்கு எங்கும் எதிலும் பதவி வேண்டும், அதற்காக எந்தளவுக்கு கீழிறங்க முடியுமோ அந்தளவுக்கு இறங்குவார். இந்த கூட்டு எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்குமென்று எதிர்வு கூறமுடியாது. மணிவண்ணனுக்கு சைக்கிளோடு சேர்ந்து போக முடியாது, ஆகவே இந்த அரசியல் கோமாளியோடு சேர்ந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் எதிரி நணடபன் என்று யாருமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

அரசியலில் எதிரி நணடபன் என்று யாருமே இல்லை.

பதவிகாக்காவே அரசியல். அதற்காக அடிபடுவார்கள், அதற்காகவே ஒன்றும் சேர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2025 at 18:02, நிழலி said:

விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?

உங்களுக்கு நித்தி மற்றும் பிரேமா என்றால் உடனே மோப்பம் பிடித்து விடுகிறீர்கள் 🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

அரசியலில் எதிரி நணடபன் என்று யாருமே இல்லை.

IMG-8514.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.