Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் அப்படி ஒரு சாட்டுக்காக புட்டின் சொல்லி கொண்டாலும் உக்ரைனிய மக்களின் சுதந்திரத்தை தொடர்ந்து மறுத்து வரும் தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறியை நேற்று நடந்த ரஷ்ய கூட்டம் ஒன்றில் உக்ரைன் முழுவதும் எங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி உறுதிபடுத்தினார். ஒரு ரஷ்ய இராணுவம் எங்கு கால் வைத்தாலும் அது எங்களுக்குச் சொந்தமானது" என்றும் அந்த ஆக்கிரமிப்பாளன் தெரிவித்தார்.

அங்கு இரஸ்சியாவினை எதிர்க்க ஆயுதம் கொடுத்தவர்கள், தற்போது மறுவளமாக இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுப்பதுடன் போரிலும் குதிக்க போகிறார்கள் என கூறுகிறார்கள்.

On 21/6/2025 at 07:52, nochchi said:

வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஒரு முரண்பாடானது, தற்போது உள்ள நிலையில் இரஸ்சியா போல ஒரு நீண்ட சாதாரண போரினை ஈரானுடன் நடத்துவதற்கு அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ பொருளாதார வளமும் அதற்கான போரிடும் ஆற்றலும் இல்லை ஆனால் ஒரு பேரழிவினை உண்டாக்கி (முறையற்ற போரின் மூலம்) போரினை முடிக்கும் திறன் மட்டுமே உண்டு என கருதுகிறேன்.

ஈரான் சமாதானமாக போவதே சிறப்பு, தேவையற்ற உயிரிழப்புக்களை தவிர்க்கலாம், சா மன்னரின் வாரிசு மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தினை (பொருண்மிய நலன் அடிப்படையில்) அமெரிக்கா விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அதற்கு முன்னராக பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடும்.

செலன்ஸ்கி போல் வளங்களை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Trump Stops AID in Ukraine, Sends Missiles and Troops to Israel to Attack Iran

  • கருத்துக்கள உறவுகள்

Trump announces strikes on nuclear sites in Iran.

US strikes Iran: The US “successfully” hit three nuclear sites in Iran, including Fordow, Natanz and Isfahan, President Donald Trump announced on Saturday evening, as the conflict between Israel and Iran entered its second week. American B-2 bombers were used in the weekend operation, a source told CNN.

• Trump to address nation: The president announced he will deliver an address to the US at 10 p.m. ET from the White House.

• Hostilities escalate: Trump had been weighing the strikes for days. Earlier on Saturday, Israel claimed the killing of two commanders in Iran’s elite Quds Forceand said it struck a range of Iranian military targets. In Israel, two Iranian drones made a rare breach of the country’s air defenses.

  • கருத்துக்கள உறவுகள்+

அச்சோ...

பெரிய மன்னர் பரம்பரை, மண்ணாங்கட்டி பரம்பரை என்டெல்லாம் ஈரான் கதைச்சுது... கடைசில அமெரிக்கன் மாவுக்கட்டு பரம்பரை ஆக்கிட்டான்... 🤣🤣

ஒரே ஒரு அடிதான்... மொத்த ஈரானும் சோலி முடிஞ்சுது!

vadivelu-sarath-kumar.gif

https://www.nytimes.com/live/2025/06/21/world/iran-israel-trump

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் இருந்து ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருப்பதாக முல்லாக்களின் தமிழ் செய்தி பிரிவு தகவல்கள் வழங்கி கொண்டிருந்ததே 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் மூன்று அணுவாயுத நிலைகள் மீதும் அமெரிக்கா பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆறு ராட்சத பி 2 ரக விமானங்களைப் பயன்படுத்தி ஒவ்வொன்றும் 30,000 இறாத்தல்கள் நிறைகொண்ட 12 பங்கர் பஸ்ட்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk

BBC News
No image preview

US bombs Iranian nuclear sites as Trump says Tehran must...

Trump says three locations, including Fordo, were struck as Washington joins Israel's attack on Tehran's nuclear programme.

https://www.reuters.com/world/israel-iran-live-trump-address-nation-after-us-bombs-nuclear-sites-iran-2025-06-22/

https://www.cbc.ca/news/world/israel-iran-1.7567750

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பெரிய‌ த‌வ‌றை இழைத்து விட்ட‌து

பார்ப்போம் இனி வ‌ரும் நாட்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என‌......................

  • கருத்துக்கள உறவுகள்

உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப்புக்கு நேர‌ கால‌ம் ச‌ரி இல்லை , அழிவுக‌ளை த‌விற‌ வேறு ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து கிடையாது😡.............................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

ஈரானின் மூன்று அணுவாயுத நிலைகள் மீதும் அமெரிக்கா பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆறு ராட்சத பி 2 ரக விமானங்களைப் பயன்படுத்தி ஒவ்வொன்றும் 30,000 இறாத்தல்கள் நிறைகொண்ட 12 பங்கர் பஸ்ட்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk

BBC News
No image preview

US bombs Iranian nuclear sites as Trump says Tehran must...

Trump says three locations, including Fordo, were struck as Washington joins Israel's attack on Tehran's nuclear programme.

https://www.reuters.com/world/israel-iran-live-trump-address-nation-after-us-bombs-nuclear-sites-iran-2025-06-22/

https://www.cbc.ca/news/world/israel-iran-1.7567750

இது ஆனுவ‌த்தின் உச்ச‌ம்.................இருத‌ர‌ப்பும் பேர் அழிவை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ச‌ந்திக்கும்........................அப்பாவி பொது ம‌க்க‌ள் இந்த‌ போருக்கை சிக்கு ப‌ட்டு ம‌டிய‌ப் போகின‌ம்.......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

22 JUN, 2025 | 07:26 AM

image

அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக  ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன ஃபோர்டோ அணு உலையில் வடக்கு ஈரானின் மலைகளில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளது மேலும் யுரேனியத்தை அதிக தூய்மை தரங்களுக்கு செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மையவிலக்குகள் உள்ளன. அதன் ஆழம் காரணமாக அமெரிக்காவின் "பதுங்கு குழி" bunker busters குண்டுகள் மட்டுமே இந்த அணு உலையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது

மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் வசதிகளும் தாக்கப்பட்டதை இஸ்ஃபஹானின் துணை பாதுகாப்பு ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ஊடுருவல்களை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார் "எதிரி இலக்குகளை எதிர்கொள்ள" வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது ஆனால் "பல வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

ஈரானிய ஊடகங்களின்படி அந்த நிலையங்கள் முன்பே அகற்றப்பட்டுவிட்டன 

https://www.virakesari.lk/article/218098

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் அல்லது கப்பல்பாதைகளில் தாக்குதலை மேற்கொள்ளலாம்- ஸ்கை நியுஸ்

22 JUN, 2025 | 07:13 AM

image

ஈரான் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை அல்லது கப்பல்களை இலககுவைக்கலாம் என ஸ்கை நியுசின் மத்தியகிழக்கிற்கான செய்தியாளர் அலைஸ்டர் பங்கெல் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஈரான் அமெரிக்காவின் தாக்குதலிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் தாக்குதலை மேற்கொண்டேயாகவேண்டிய நிலையில் உள்ளதுஆனால் அதன் தாக்குதல் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது தெரியவில்லை.

பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்

அவர்கள்  அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்றால் இது மிக விரைவாக மிகவும் குழப்பமாகிவிடும்.   ஈரான் குறிப்பிட்ட அளவிலான தாக்குதலை மேற்கொண்டால் பதிலடி கொடுத்துவிட்டதாக அவர்கள் திருப்தியடையலாம்

டிரம்ப் அதைத் தொடர விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் மேலும்போதும் நீங்கள் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டீர்கள். நான் இப்போது இதைச் செய்துவிட்டேன். இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது'.என டிரம்ப் இஸ்ரேலியர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன்

ஈரானுடனான மோதலில் இஸ்ரேலிய மக்கள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக "மிகவும் ஒற்றுமையாக" உள்ளனர் ஆனால் யாரும் நீடித்த போரை விரும்பவில்லை.

"அமெரிக்கர்கள் வெற்றி பெற்று இப்போது எல்லாம் முடிந்துவிட்டால் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் அது ஒரு வேலை முடிந்தது என்ற உண்மையான உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அது மிகப்பெரியது https://www.virakesari.lk/article/218097

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை

22 Jun, 2025 | 10:36 AM

image

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக  ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218111

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஈரான் ந‌ட‌த்த‌ போகும் அழிவுக‌ளை மெரிக்காவும் இஸ்ரேலும் பார்க்க‌ தான் போகின‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ட‌ கொரியா சொல்லி இருக்கு

ஈரானுக்கு அணு குண்டு கொடுக்க‌ தாங்க‌ள் த‌யார் என‌

அமெரிக்கா உன‌க்கு இந்த‌ அவ‌மான‌ம் தேவையா😁.............................

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-7-2.jpg?resize=600%2C300&ssl

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்!

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதுமே எங்கள் நோக்கமாகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால் எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.

https://athavannews.com/2025/1436549

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ற்று முன் ஈரான் இஸ்ரேல் த‌லைந‌க‌ர‌ம் Tel Aviv மீது எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு சில‌ நொடிக‌ளில் பெரும் தாக்குத‌ல்....................அடுத்த‌ அடி ஆசிய‌ க‌ன்ட‌த்தில் இருக்கும் அமெரிக்கா இராணுவ‌ த‌ள‌ங்க‌ள் மீது தான்........................அல்லா அக்ப‌ட்.....................

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவா ஈரானுக்கு நீ செய்ய‌ விரும்புவ‌தை சீக்கிர‌ம் செய்..................இர‌ண்டு பேய்க‌ள் சேர்ந்து போலி ஜ‌ன‌நாய‌கம் பேசி கொண்டு செய்யும் அட்டூழிய‌ம் பொறுத்துக் கொள்ள‌ முடிய‌ வில்லை த‌லைவா.......................

Screenshot-20250622-075332-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

510366100_23958120203808059_112310378826

ட்ரம்ப் என்ற இந்த யோக்கியர்தான் நேற்று எல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு

தனக்கு குடுக்காதது பற்றி பேசிக்கிட்டு இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

510366100_23958120203808059_112310378826

ட்ரம்ப் என்ற இந்த யோக்கியர்தான் நேற்று எல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு

தனக்கு குடுக்காதது பற்றி பேசிக்கிட்டு இருந்தார்.

இவ‌ன் ப‌க்கா பிராடு

இவ‌ன் போன‌ வ‌ருட‌ம் அந்த‌ சூட்டு தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்டு இருக்க‌ வேண்டும்

இனி எண்ணையின் விலை உச்ச‌த்த‌ தொடும் அதோட‌ ஈரான் அறிவித்து இருக்கு த‌ங்க‌ட‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் இருந்து ம‌ற்ற‌ நாட்டு க‌ப்ப‌ல்க‌ள் போகாது என‌ , உல‌க‌ பொருளாதார‌ம் கேள்விக் குறி.....................

உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ வ‌ருகிறேன் என‌ சொல்லி , நெத்த‌னியாவுக்கு பின்னால் க‌ழுவி விடுவ‌தை பெருமையாக‌ நினைக்கிறான் இந்த‌ அர‌க்க‌ன்😡........................

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம். கொடுத்தாலும் கொடுப்பானுகள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம். கொடுத்தாலும் கொடுப்பானுகள்...

இந்த‌ மூஞ்சுறுவுக்கு நோபால் ப‌ரிசு ஒரு கேடு...................இவ‌னை X த‌ள‌த்தில் உல‌க‌ ம‌க்க‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்தின‌ம் கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையில்..............................அமெரிக்க‌ ம‌க்க‌ளே இவ‌னுக்கு எதிராக‌ எழுதுகின‌ம்.......................................

  • கருத்துக்கள உறவுகள்

இனி வ‌ரும் சில‌ நாட்க‌ளில் ஈரானின் அடிய‌ பார்த்து உல‌க‌மே விய‌க்க‌ போகுது...................ஈரானுக்கு பின்னால் நிக்கும் பெரிய‌ நாடுக‌ள் மிக‌வும் ஆவ‌த்தான‌ நாடுக‌ள்..............................வ‌ட‌கொரியா இனி இழ‌ப்ப‌த‌ற்க்கு எதுவும் இல்லை என‌ அவ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் , வ‌ட‌கொரியாவின் இன்றைய‌ அறிவிப்பு அமெரிக்காவுக்கு பெரும் த‌லையிடிய‌ கொடுக்க‌ போகுது😛...............................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம்

22 JUN, 2025 | 11:23 AM

image

ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டு மாடிக்கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன, சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது.

வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/218117

  • கருத்துக்கள உறவுகள்

large.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்!

இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்  இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின்  முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும்  செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில்  தெரிவிக்கப்பட்டள்ளது.

https://athavannews.com/2025/1436584

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.