Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.

செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள்

அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

25-685bb2df483f9.jpg

https://tamilwin.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் தலைப்பை மாற்றி தமிழரசுக் கட்சியும் என்று வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் தானே?

இனி மக்களே போராடி எல்லாவற்றையும் செய்து கொள்ளக் கூடிய ஒரு நிலை வந்திருக்கிறது. காணாமல் போனவர்களின் உறவுகளின் வருடக் கணக்காகத் தொடரும் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய , அமெரிக்க கொடிகளைக் கண்டிருக்கிறேன். இப்படி நேரடியாக மக்களே எல்லாவற்றையும் நிறவேற்ற வேண்டும். அரசியல் பிரதிநிதிகள் பின் சீற்றில் அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கட்டும்.

பி.கு: பிற்காலத்தில், "மக்கள் போராட்டம் நடத்தினர், ஒரு தமிழ் அரசியல்வாதி கூட எட்டிப் பார்க்கவில்லை" என்று மூக்கால் அழுது முகநூல் காவியம் எழுதும் ஆட்களுக்கும் இது வாய்ப்பாக அமையும்😎!

  • கருத்துக்கள உறவுகள்

திலகநாதன் கிந்துஜன்

56m  ·

சற்றுமுன் - செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

512707403_700307452890259_82834362840640

512632481_700307506223587_93689651685798

511799172_700307649556906_17559917413696

  • கருத்துக்கள உறவுகள்

4f163f32-9ebd-470c-8179-7c3669a60796.jpg

‘அணையா தீபம்‘ போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்!

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி  முதல் 3 நாட்கள்   ”அணையா தீபம்’  எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தின்   இறுதி நாளான இன்று  பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  போராட்டக் களத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்ளை வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437082

  • கருத்துக்கள உறவுகள்

உச்சிக் கம்பத்தில் நின்று... குறளி வித்தை காட்டினாலும்,

காசு வாங்க.. கீழை இறங்கித்தான் வர வேண்டும். animiertes-gefuehl-smilies-bild-0090.gif animiertes-gefuehl-smilies-bild-0438.gif

506770680_747506834410790_23056258201131

அற்ப ஆசன ஆசைகளுக்காக தமிழ் விரோத & துரோகக் குழுக்களோடு கூட்டுவச்சிட்டு, வெள்ளை வேட்டியோட மக்கள் மத்தியில் வந்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் என்ன நடக்கும் என்பது இன்று தெளிவாகியிருக்கும்.
கே. சிவஞானம் & சாணக்கியன்🪕🤥
மற்றவையும் கவனம்🧘🏿‍♂️

Rj Prasath Santhulaki

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் சந்திரசேகரத்தின் சப்பாத்தை கூட போடவிடாமல் அவரை துரத்தியடித்து அந்த சப்பாத்துகளை போட்டோ எடுத்து முகநூலில் அதை கொண்டாடி மகிழ்ந்த வீரம் போதும் இனி செம்மணி படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டாலும் இனி பரவாயில்லை.

2004 இறுதியில் அல்லது 2005 ஆரம்பத்தில் மகிந்த பிரதமராக பதவியேற்று யாழ்பாணம் சென்ற போதும் இப்படி தான் ஒரு சிலரால் துரத்தி துரத்தி விரட்டப்பட்டார். புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

511963024_730995136085326_53229978382298

செம்மணியில் செருப்பை விட்டு விட்டு ஓடிய.... NPP பாராளுமன்ற உறுப்பினர்கள்.

Inuvaijur Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

513286203_747691147725692_58584651607764

செம்மணிப் படுகொலையின் சூத்திரதாரிகள்.

“அம்மணியும், அல்லக்கையும்."

Rj Prasath Santhulaki

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி ஒரு பொய் என்று இவர் பேசியதன் விளைவாக இது இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, island said:

அமைச்சர் சந்திரசேகரத்தின் சப்பாத்தை கூட போடவிடாமல் அவரை துரத்தியடித்து அந்த சப்பாத்துகளை போட்டோ எடுத்து முகநூலில் அதை கொண்டாடி மகிழ்ந்த வீரம் போதும் இனி செம்மணி படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டாலும் இனி பரவாயில்லை.

2004 இறுதியில் அல்லது 2005 ஆரம்பத்தில் மகிந்த பிரதமராக பதவியேற்று யாழ்பாணம் சென்ற போதும் இப்படி தான் ஒரு சிலரால் துரத்தி துரத்தி விரட்டப்பட்டார். புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தன.

மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்!

சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் தலைப்பை மாற்றி தமிழரசுக் கட்சியும் என்று வந்தால் நல்லது.

யாழ் விதிகள் அனுமதிக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

513750614_1171092371700286_6804233060666

512868395_1171092388366951_4906004335795

512738604_1171092478366942_8620661926305

512976325_1171092448366945_8233357421150

511187342_1171092428366947_7235349302657

பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்டக்களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

யாழ் விதிகள் அனுமதிக்காது .

மாற்றிப் பாருங்கள்.

முன்னர் நான் மாற்றிய ஞாபகம்.

15 minutes ago, தமிழ் சிறி said:

பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்!

இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை?

முன்னமே தெரிந்துவிட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை?

முன்னமே தெரிந்துவிட்டதோ?

சுமந்திரன்... நரியன். எங்கை தனக்கு அடி விழும் என்று முன்பே தெரியும். 😂

ஏற்கெனவே சுமந்திரனுக்கு... அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சர்வதேச லெவலில் வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டு. 🤣

செம்மணிக்கு தான் போனால்... கோட்டு, சூட்டு எல்லாம் கழட்டி துவைத்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும். அதுதான்... தான், பதுங்கிக் கொண்டு, சிவஞானத்தை நோட்டம் பார்க்க அனுப்பியவர். அதுகும் வந்து, வளமாய் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்குது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

25 JUN, 2025 | 05:31 PM

image

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ''அணையா விளக்கு'' போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன என்று  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் புதன்கிழமை (25) ஊடக சந்திப்பு ஏற்படுத்தி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றிருந்தேன். செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும்.

இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

செம்மணியில் இன்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர். 

அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர்.

ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும்.  

அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர். 

இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும்.

செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன. 

எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். 

இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது.

ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம்.

சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர்.

செம்மணியில் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்  என்றார்.

https://www.virakesari.lk/article/218458

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை?

அதானே? ஏன் போகவில்லை சுமந்திரன்?

ஒரு கனதியான விவகாரம் பற்றி நடக்கும் போராட்டத்திற்குச் சென்று சில "விசிலடிச்சான் குஞ்சுகளுடன்" ஓடிப் பிடித்து விளையாடாமல் தவிர்த்த சுமந்திரனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அதானே? ஏன் போகவில்லை சுமந்திரன்?

ஒரு கனதியான விவகாரம் பற்றி நடக்கும் போராட்டத்திற்குச் சென்று சில "விசிலடிச்சான் குஞ்சுகளுடன்" ஓடிப் பிடித்து விளையாடாமல் தவிர்த்த சுமந்திரனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

உண்மையாவா?இதை எதிர்பார்க்கவே இல்லை.

உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=615000964377174 👈

ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்!

நைசாக... நழுவிய, சாணக்கியன்!

செம்மணி போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு.

Samugam 24×7

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂

கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂

கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்

தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂?

அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

செம்மணி ஒரு பொய் என்று இவர் பேசியதன் விளைவாக இது இருக்கலாம்...

புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

செம்மணி ஒரு பொய் என்று இவர் பேசியதன் விளைவாக இது இருக்கலாம்...

தெரிந்து கொள்ள கேட்கிறேன்... செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் பொய்யானவை என்று இவரோ இவர் சார்ந்த கட்சியோ கூறிய கருத்தை எங்கே தேடலாம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.