Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

Vignesh SelvarajUpdated: Thursday, July 10, 2025, 18:28 [IST]

NTK Chief Seeman Holds Conference Near Madurai Amid Thousands of Cows and Goats

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது.

மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான்.

ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது.

https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-holds-conference-near-madurai-amid-thousands-of-cows-and-goats-719413.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா🤣

  • Replies 58
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புலவர்
    புலவர்

    இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரி

  • Justin
    Justin

    ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂! PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • யாயினி
    யாயினி

    இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

Vignesh SelvarajUpdated: Thursday, July 10, 2025, 18:28 [IST]

NTK Chief Seeman Holds Conference Near Madurai Amid Thousands of Cows and Goats

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது.

மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான்.

ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது.

https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-holds-conference-near-madurai-amid-thousands-of-cows-and-goats-719413.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா🤣

ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உணர்ச்சி பேச்சை கேட்டு ஆடு மாடுகள் பொங்கி எழுந்தால்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உணர்ச்சி பேச்சை கேட்டு ஆடு மாடுகள் பொங்கி எழுந்தால்….🤣

அப்படியாவது ஒரு முடிவு வரட்டுமே?😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாட்டைத் தொடர்ந்து பூச்சி புழுக்களுக்கான மாநாடொன்றினையும் செந்தமிழன் சீமான் அண்ணா நடாத்தவேண்டும்!😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா

மாடு என்றால் செல்வம் என்று தமிழில் ஒரு பொருள் இருக்கிறது.இந்த மனிதர்கள் எதைச் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லையே?பால் பொருடகளையே சாப்பிடாத ஆட்கள் எத்தனை பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். நடக்க முடியாதை நடத்திக்காட்டுபவன்தான் உண்மையான மாற்றத்திற்கு வழிகாட்டும் தலைவனாகிறான்.நக்கல் நையாண்டி மட்டும் செய்பவர்கள் செயலில் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

உழுதுண்டு வாழ்வானே வாழ்வான்

மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. சீமான் அலர்ஜியாளர்களின் கத்தலை பெருட்படுத்தாது கடந்து போவதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்தில் ஏறி கள்ளு இறக்கி காட்டி கள்ளு இறக்கி காட்டி களளு குடிப்பதை ஊக்குவிக்கின்றார். இப்போது ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்துகின்றார் தமிழ்நாட்டை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை

இந்த ஆடு மாடு மகாநாட்டுக்கு அவரது ஆங்கில மீடியத்தில் படிக்கின்ற மகன்களை கொண்டுவர மாட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த ஆடு மாடு மகாநாட்டுக்கு அவரது ஆங்கில மீடியத்தில் படிக்கின்ற மகன்களை கொண்டுவர மாட்டார்

Holy cow!🤣

39 minutes ago, புலவர் said:

பால் பொருடகளையே சாப்பிடாத ஆட்கள் எத்தனை பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

சாப்பிடுவோரில் Vegan முழுக்க இப்படி பட்டவர்கள்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொடக்கு பண்ண வைப்பதற்கு (click bait க்கு) தலைப்பை மாற்றி எழுதி, பொழுது போக்கில் காசு பார்க்க எத்தனிக்கும் ஊடகங்கள், ஏனெனில் பொழுதுபோக்கில் உள்ள போட்டி நெருப்பு அவர்களை கருக்கி விட்டது.

உரைக்கு எடுக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் யதார்தமானவை.

இப்படியான தலைப்பு ஆடு மாடுகளை கொண்டுவந்தவர்களும் ஆடு, மாடுகள் போன்றவர்கள் என்று எண்ணவைக்கும் என்பதை சிந்தியாமல் எழுதப்பட்ட செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா

குரல்தர வல்ல அதிகாரிகள் தம் கருத்தை தெரிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரங்கள் வேறுபடும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு தடையும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்று விட்டது.இதையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள்.

பால் பொருட்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதியாகின்றது. கால் நடைகளுக்கான தீனிகளும் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகின்றது. இதையெல்லாம் வளம் மிக்க தமிழ்நாட்டில் ஏன் எதற்காக என்றெல்லாம் விவாதிக்க மாட்டார்கள்.

இது மாநாடு அல்ல. ஒருவகை போராட்டம் மட்டுமே.

மூலைக்கு மூலை மதுபானசாலைகள் இருக்கும் போது கள் உற்பத்தி செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நேற்றிலிருந்து றாலைப் போட்டுவிட்டு தம்பி ஒருவர் காவல் இருக்கிறார்.

இப்போ நீங்க தான் தூண்டிலில் மாட்டியிருக்கிறீர்கள்.

பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதில் இருக்கும் சில தகவல்கள் தவறானவை, அனேகமாக நா.த.க அணியின் சமூகவலை ஊடகங்களினால் பரப்பப் படுபவை, அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே இதை எழுதுகிறேன்:

1. தமிழ் நாடு அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை, அப்படி விற்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை. ஆனால், தனியார்/அரச கூட்டுத்தாபனங்கள் சில தொழில் முயற்சிகளைச் செய்யும் போது அந்த நிலம் குத்தகையாக வழங்கப் படும். மேய்ச்சல் நிலம் இப்படியாக அண்மையில் பறி போன ஒரு சந்தர்ப்பம் ஒரு சூரிய மின்படலப் பண்ணை (Solar farm) அமைக்கப் பட்ட சந்தர்ப்பமாக இருக்கிறது. ஆடு மாடுகள் வெளியிடும் மீதேன் வாயுவினால் சூழல் மாசடையும். சூரியப் படலங்களை அமைத்தால் அந்த மாசடைதலால் வரும் விளைவை பசுமைத் தொழில் நுட்பம் மூலம் கொஞ்சம் நிவர்த்திக்கலாம். இது சரியான சமன் செய்யும் முயற்சி தான்.

2. அதை விட தமிழ் நாடு உயர் நீதிமன்றம் (தமிழ் நாடு அரசு அல்ல!) சில வனப் பாதுகாப்புப் பிரதேசங்களில் கால்நடை மேய்க்கத் தடை விதித்திருக்கிறது. புலி வேட்டை போன்ற சட்ட விரோத நடவடிக்கைளைத் தடுக்கும் இந்த நடவடிக்கையும் புரிந்து கொள்ளக் கூடியதே.

3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை.

இந்த தரவுகளையெல்லாம் சீமான் அணியினர் நம்பவும் மாட்டார்கள், தங்கள் ஆதரவாளர்களை தேடிப் பார்க்குமாறு ஊக்குவிக்கவும் மாட்டார்கள்.

எனவே பொய்யில் கட்டியமைக்கப் பட்ட ஒரு வாக்கு வேட்டை முயற்சி இந்த மாடுகளுக்கான மாநாடு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நேற்றிலிருந்து றாலைப் போட்டுவிட்டு தம்பி ஒருவர் காவல் இருக்கிறார்.

இப்போ நீங்க தான் தூண்டிலில் மாட்டியிருக்கிறீர்கள்.

பார்ப்போம்.

அமெரிக்கன் எப்பவும் புத்திசாலிதான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆடுமாடுகள் எல்லாம் கள்ளுக் குடிச்சுப்போட்டு கவுண்டு கிடப்பதாகக் கேள்வி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமெரிக்கன் எப்பவும் புத்திசாலிதான் 🤣

அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

சாப்பிடுவோரில் Vegan முழுக்க இப்படி பட்டவர்கள்தானே?

அவர்கள் ஒரு மிகச் சிறிய தொகையினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசே டாஸ் மார்க்கில் சரக்கு விற்கிக்றது.காலம் காலமாக தமிழ்மக்களால் அருந்தப்பட்டு வந்த கள்ளுக்குத் தடை விதிக்கின்றது.காரணம் சாராய ஆலை வியாபாரிகள் எல்லோரும் முக்கிய அரசியல்வாதிகள். அவர்களின் சாராயததை விட கள்ளில் அற்ககோல் வீதம் மிகக் குறைவு.கள்ளுக் குடிப்பதால் ஒருவருக்குஏற்படும் பாதகத்தை விட இவர்களின் சாராயத்தைக் குடிப்பதால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோரூக்கும் தெரிந்த விடயம் சீமானை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது வெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. இந்தியாவின் முன்னேறிய மாநிலமான கேரளாவில் கள்ளுக்குத்தடை இல்லை. பாண்டிச்சேரியில் கள்ளுக்குத் தடை இல்லை. அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலஊழல்வாதிகள் அல்ல.பெரியாரின் மண்ணில்தான் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.கள் ஒரு மது.பெரியாரின் சீடர்கள் விற்பது அமிர்தம். இவையெல்லாம் சீமான் எதிர்ப்பாளர்களின் கண்களுக்குத் தெரியாது. சீமான் எது செய்தாலும் அது தவறு. பெரியாரின் சீடர்கள் எது செய்தாலும் அது தமிழநாட்டு மக்களின் நலனுக்காக என்று நம்புவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும்.

விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம்.

இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே.

நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

மேலே புலவர் பொங்கியிருப்பதைப் பார்த்தீங்கள் தானே? நா.த.கவாவது இல்லாமல் போறதாவது!

இவையள் பாம்பு பூச்சி ஓணாணைக் கூப்பிட்டு சீமான் மாநாடு வைச்சாலும் "இது வரை யாரும் செய்யாததைச் செய்பவன் தான் தலைவன்!" 😎 என்று பின்னால் செல்லும் மூளை பிரஷர் வாஷரால் மினுக்கப் பட்ட ஆட்கள்! இவையள் பெருகிவீனமேயொழிய அருகாயீனம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புலவர் said:

அவர்கள் ஒரு மிகச் சிறிய தொகையினர்.

இந்தியாவில் மட்டும் 9% பேர் வீகன். அதாவது அண்ணளவாக 150 மில்லியன் மக்கள்.

12 hours ago, ரசோதரன் said:

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும்.

விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம்.

இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே.

நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.

அருமை.

இந்த அடிப்படை அரசியல் அறிவு அவருக்கு இல்லாமல் இல்லை.

இதேபோல் தன் சொந்த வாக்காளரில் கணிசமானோரை கொல்டி என திட்டி விட்டு வாக்கு அரசியலில் வெல்லவது கடினம் என்பதும் அவர் அறிந்ததே.

ஆனால் நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல.

அவர் வெறும் தரகர்.

விவசாயி சின்னம் அவருக்கு மிக பொருத்தமானது.

தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.