Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரால்..... அஞ்சலிகள்!

நீங்கள் எங்கே மறைந்தீர்கள்...... எம்முடன் எப்போது வாழ்வீர்கள்.

உமது நினைவின்றி தமிழிழம் நினைவிலே யே நிற்காது.

இழப்புகள் எமக்கு புதியவையல்ல.................... உங்களின் சக போராளிகளின்

வார்த்தை கேட்கிறது. இதற்கான பதிலடிக்கு அவர்கள் விழிகளும் துடிக்கிறது............

  • Replies 152
  • Views 33.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைக்கு வித்தாகிப்போன தமிழ்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் பலியான அஞ்சு போராளிகளுக்கும் வணக்கம்.

தமிழ் செல்வன் அண்ணா அடிக்கடி உங்கள் பெயரை கூப்பிட்டு பார்கிறேன்

வருவிங்களா? ஜயோ கொடுமை

பழிக்கு பழி வாங்கியே திரனும்

எனது கண்ணீர் அஞ்சலி அண்ணா

சு.ப தமிழ்செல்வன் அண்ணாவின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. :icon_idea::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கு எமது வீரவணக்கங்கள்

post-2334-1194042350_thumb.jpg

02-11-2007 அதிகாலை 6.00 மணியளவில்இ சிறீலங்கா வான் படையினரின் குண்டு வீச்சினால் வீரச் சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைச் செயலர் சு.ப.தமிழ்செல்வனிற்கும் அவரோடு உயிர்நீத்த ஏனைய 5 போராளிகளிற்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் வீரவணக்கம்.

விடுதலைப்புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் புதிய செய்தி சொல்லப்பட்டிருப்பதாக, மகிந்தவின் தம்பியும், சிறீலங்கா படைத்துறைச் செயலருமாகிய பேரினவாதி கோத்தபாய ராஐபக்ச ரைட்ரருக்கு கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க : http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

இழப்புக்களை வெற்றியாக்குவதே புலிகளின் வரலாறு. அது நிகழத்தான் போகிறது. அது சிங்களமும் இந்த உலகமும் எதிர்பாராத வழியாகத்தானிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கம் போல் தமிழகம் வாய் மூடி மெளனமாக இருக்கிறது!தமிழக அரசியல் தலைவர்களில் வைகோ மற்றும் சில தமிழ் இன உணவாளர்கள் மட்டும் தான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.தமி?கத்தில் தமிழர்கள் இருக்கிறார்களா,இல்லையா?

:icon_idea::icon_idea::icon_idea:

Edited by Sivakasi Babu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் கொலை தொடர்பாக நோர்வே அரசு சார்பாக நோர்வேயின் சமாதானத்துதுவர் எரிக் சொல்கைம் தனது கடும் கண்டனைத்தை இன்னும் சிலவனாடிகளில் வெளியிடுவார். - நோர்வே வெளிநாட்டு அமைச்சு தகவல். ஜ வெள்ளிக்கிழமைஇ 2 நவம்பர் 2007 ஸ ஜ நசார் ஸ மேலதிக தகவகள் மிகவிரைவில் சார்வதேச ஊடகங்கள் ஊடாக வெளிவரும் என்று தெரியவரகிறது.மேலதிக தகவல் விரைவில். http://www.nitharsanam.com/?art=24824

எங்கே அறிக்கை?.

நிதர்சனம் இப்படி ஒரு செய்தியை போடும்போதெ நான் நினைத்தேன் இது ஒரு குட்டைய கிளறும் வேலை என்று. எனது ஊகம் சரியானால் இலங்கையின் வெளிவிவகார அதிகாரிகளை சும்மாஇருக்காமல் வைத்திருப்பதற்காகத்தான் செய்திருக்கிரார்கள்.

நீண்ட நாள் கழித்து களத்துக்கு வருபவன் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

தமிழ்செல்வன் வீரச்சாவு - தலைவர் கலைஞர் இரங்கல்!

tamilselvan.jpg

எப்போதும் சிரித்திடும் முகம் -

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ

இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்

பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென

உதவியஉத்தம வாலிபன் - உயிர் அணையான்

உடன் பிறப்பணையான்

தமிழர்வாழும் நிலமெலாம்

அவர்தம் மனையெலாம்

தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

Edited by லக்கிலுக்

தமிழ்ச்செல்வன் என்றவுடன் மனதில் தெரிவது சிரிப்பு தான் !

அந்த சிரிப்பை எப்பதான் பாபப்பம் இனி ???

ஜஙரழவந யெஅநஸ்ரீ'முருடுயுமுயுனுனுயுN' னயவநஸ்ரீ'ழேஎ 2 2007இ 01:04 Pஆ' pழளவஸ்ரீ'356802'ஸ

மிகவும் அதிச்சியான மனம் வலிக்கும் செய்தி. வீரச்சாவடைந்த அரசியல் துறைப்பொறுப்பாளர்இ மற்றும் போராளிகளுக்கு வீரவணக்கங்கள்.

ஜஃஙரழவநஸ

சாவகச்சேரிக்கு இதுவரை ஏற்பட்ட இழப்புக்களில் ஈடுசெய்து விடுதலைப் போராட்டத்தமிற்கு வலுச்சேர்ப்பதில் ஏற்பட்ட பாரிய இடைவெளி.........

1987 ஆம் ஆண்டு ஓரு மார்கழி மாதம் சாவகச்சேரியின் " மட்டுவில் கல்வயல் நுணாவில் " பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மட்டுவில் கல்வத்து சிவன் கோவில் பகுதியில்

எதேச்சையாக வந்து இந்திய இராணுவத்திடம் தமிழ்ச்செல்வன் அண்ணை மாட்டுப்பட இந்திய இராணுவம் கேட்டது " தம்பி தினேசின்ர வீடு எது " என்ற உந்த ஓழுங்கைக்குள்ளாள போக வாற வீடு என்று சொல்லிப்போட்டு இந்திய இராணுவத்திற்கே சுத்தின தளபதி தான் எங்கட தளபதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
tamilselvannl8.jpg

தம்பி தமிழ்ச்செல்வா: பாரதிராஜா கண்ணீர்

----------------------------------------------------

விடுதலைப்புலியின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு டைரக்டர் பாரதிராஜா கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு விடிவெள்ளியை கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்தி ருக்கலாம்.

ஒரு அட்சய பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்த்த இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தை கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்!

அதுதான் அவர்களுக்கு முகவரி.

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல!

அவர்கள் ரணங்கள் சாதாரணம்!!

தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள் அவர்கள்.

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும் போது இங்கே கரிக்கிறது.

அங்கே அவர்கள் காயப்படும் போது இங்கே குருதி கொதிக்கிறது.

வெடி அல்ல, இடி

வான் வழியே விழுந்தது வெடியல்ல!

எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல.

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமையழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்கு காட்டியவனும் நீதான்.

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை, சமாதானப்பாதை நோக்கிய பய ணத்தை உலகெங்கிலுமுள்ள அரசியல் அரங்கங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே!

உமது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலக உருண்டையில் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்தமிழர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அந்தோ.

தங்கத்தை இழந்தோம் அன்று சிங்கத்தை இழந்தோம்

இன்று தங்கத்தை இழந்து விட்டோம்!!

அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்.

"திலீபனை புதைக்க வில்லை. விதைத்திருக்கிறோம்''

தம்பி தமிழ்ச்செல்வா!

"உன்னை எரிக்கவில்லை...

ஏற்றியிருக்கிறோம்''

இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.

------?????------

பொருத்தமற்ற தணிக்கை எழுதப்பட்ட கருத்தின் அர்த்தத்தை அப்படியே தலைகீழாக மாற்றிக் காட்டுவதால் கருத்து முழுவதுமாக நீக்கப்படுகிறது.

............................................நன்றி................

...........................................வெற்றிவேல்......

Edited by vettri-vel
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா என்று தான் திருந்த போகிறாரோ? வீரமரணம் எய்திய ஒரு மாவீரனுக்கு கலைஞர் இரங்கல் தெரிவித்தால் கூட அதை அரசியல் ஆக்குவதை என்ன வென்று சொல்வது! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரித்த முகம்

தெளிவான பேச்சு

பண்பான விருந்தோம்பல்

நினைக்கும் போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது தொடர முடியவில்லை

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த செவ்வியில் அவரது வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன

"எங்கள் எதிரிகளே! நங்கள் விழ விழ எழுவோம் ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்!"

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கிராமத்துக்கும்(நுணாவில்), அயல் கிராமத்துக்கும்(தமிழ் செல்வனின் கிராமம் மட்டுவில்) போட்டியோ போட்டி கிறிக்கட்,வொலிபோல்,உதைபந்து. அப்போ நாங்கள் தான் ராஜா கிறிக்கட்டுக்கு.ஏனெனில் எங்கட ரீமுக்குள் யாழ் இந்து,சென் ஜோன்ஸ்,சென்றல்,சாவகசேரி இந்து விளையாட்டு வீரர்கள் என பலர் எங்கள் கிராமத்தில் இருப்பதால்.உதைபந்துக்கு இப்போதைய விளையாட்டு துறை பொறுப்பாளர் பாப்பா அவர்கள் தலைமை தாங்குவதுண்டு.பலத்த போட்டி.தமிழ்செல்வன் அண்ணாவும் போட்டிகளுக்கு அனேகமாக வருவதுண்டு.ஒரு முறை நான் விளையாடிய குழு பாப்பா குழுவால் வெற்றி கொள்ளப்பட்டது.அப்போ நான் மிகவும் தோல்வியால் உணர்ச்சி வசப்பட்டவனாக காணப்பட அப்போ தமிழ் செல்வன் அண்ணா என்னை நெருங்கி உங்களுக்கு வெற்றி என்பது சிறிதளவில் நழுவி விட்டது.அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் வெற்றி உண்டு என்று கூறியது என்றும் என்னால் மறக்க முடியவில்லை.

நூணாவிலான் !

இதைப்போல எத்தனை தடவை சாவகச்சேரியில் " தாயகத்து அணி" யிற்கும் சாவகச்சேரி அணயிற்கும் நடைபெற்ற போட்டி ஓன்றில் சாவகச்சேரி அணி வென்றவுடன் மிக்க சந்தோசத்துடன் ஓடிவந்து கை கொடுத்து

பாராட்டிய வர்கள் இந்த இருவரும் குணா அண்ணையும் தான்.

குணா அண்ணை புநகரியில வீரச்சாவடைந்தாப்பிறகு தலைவரோட தோளோடு தோளக நிற்கின்ற

தளபதிகளில்ல எங்கட தமிழ்ச்செல்வன் அண்ணை என்று எவ்வளவு ஆசையாய் பெருமையாய் இருந்தம்.

ச்சீ ..... இப்படியுமா ????

தமிழ் செல்வன் அண்ணா அடிக்கடி உங்கள் பெயரை கூப்பிட்டு பார்கிறேன்

வருவிங்களா? ஜயோ கொடுமை

பழிக்கு பழி வாங்கியே திரனும்

எனது கண்ணீர் அஞ்சலி அண்ணா

கோபக்காரனுக்கு புத்தி மட்டுமம் என்று சொல்வார்கள். கோபத்தில் நாங்கள் போய் ஏதாவது செய்யப்போக அது வேறு விதமாக போய்ச்சென்றால் இன்னும் சேற்றுக்குள் இரண்டு கால்களையும் வைத்தமாதிரி போய்விடும். இன்று பொட்டு அம்மான் மிகவும் விவேகமாக பதில் அள்ளித்துள்ளார். இப்ப ராஐபக்ஸ குடும்பம் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள் தங்களை கொலைசெய்ய சதி செய்கிறார்கள் என்று. நான் நினைக்கிறேன் அதற்கு பதிலாகத்தான் பொட்டு இப்படி ஒரு உரையாற்றியிருந்தார். ஆனால் புலிகள் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் கொலைக்கு தக்கபதில் தக்க நேரத்தில் கொடுப்பார்கள். ஆனல் அவர்களின் கண்முன் நிற்பது ஒரு உயர்த்தியான லட்சியம். அதை விடுத்து எம்படை தடம் மாறிப்போகமாட்டார்கள். மற்றும் ராஐபக்ஸ குடும்பத்துக்கு உள்வீட்டிற்குள்ளும் எதிரிகள் அதிகம். அரசியல் தலைவர்களிற்கோ அல்லது பெரும்புள்ளிகளுக்கோ உள்வீட்டுக்காரரே அப்பு வைத்துவிட்டால் அதை மிக எளிதாக புலிகள் மீது மாலையாக போட்டுவிடலாம். அதனால்த்தான் பொட்டு "செல்வன் அண்ணாவின் உயிரின் விலைக்கு அவர்களின் உயிர் வெறும் தூசு என்றும் ஈழத்தைக் காண்பதே இதற்கு ஈடு" என்று சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்துனை மாவீரர்களை இழந்தாலும் தமிழ் ஈழம் அடைவது உறுதி தான் என்று

மனதுக்கு என்னதான் சமாதானம் கூறிக்கொண்டாலும் ,

தமிழ் ஈழம் அடைந்த பின் தலைவரோடு கூட நிற்க தமிழ் அண்ணா இருக்க மாட்டார் என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தமிழ் ஈழாம் உதயமானபின் நம் தமிழர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி சிரிப்பு மட்டும் தான் தமிழ் அண்ணாவின் சிரிப்புக்கு ஈடாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.