Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார். 

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார். 

அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம். 

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது. 

இவற்றுக்கு மேலாக 2010 - 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 - 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். 

விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது. 

அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை. 

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே. 

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது. 

இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்" என்றார்.

https://adaderanatamil.lk/news/cmdiptf1001n2qp4k3i340ksv

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பார் சிறி விசிறிகள்!🙈

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன் - சஜித் பிரேமதாச

25 JUL, 2025 | 05:43 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார்.

அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்ததொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார்.

எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாசாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/220940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்குப் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் இருந்தார் - பிமல் ரத்நாயக்க

25 JUL, 2025 | 05:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார்.

அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார்.

இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம்.

அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/220936

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரமளவில் ஒரு முகநூல் பதிவர் "பூதக் கண்ணாடியோடு" நினைவு தினம் தேடி அலைந்தார் என்று எழுதியிருந்தாரே? அவர் இன்னும் இருக்காரா சார்? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தின் சிறந்த ஆளுமை : அரசியல்வாதிகளுக்கு உதாரணம் காலஞ்சென்ற இரா. சம்பந்தன் - அரசியல் கட்சி தலைவர்கள்

Published By: VISHNU 25 JUL, 2025 | 10:30 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில்  உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும். சம்பந்தனின் அரசியல் என்பது வெவ்வேறு யுகங்களாக ஆராயப்பட வேண்டியது. சரிதம் எழுதப்படும் போது ஒவ்வொரு யுகங்களில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது.  தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படி செயல்பட்டது என்பது பற்றி நிறைய பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வகிபாகத்தை அவர் வகித்தார். அதற்கு இந்த சபையில் பலரும் சான்று பகிர்வார்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரிஷாத் பதியூதின் கூறுகையில்,

இரா.சம்பந்தன் இந்த நாட்டில் எல்லோருக்கும் முன்னுதாரமாக திகழ்ந்தவர். நல்ல பண்பான அரசியல் தலைவர். திருகோணமலை மாவட்ட மக்களால் நன்கு நேசிக்கப்பட்டவர். அவர் சகல பிரச்சினைகளின் போதும் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்கு வகித்தார். நடுநிலையான போக்கையும், சிறந்த அரசியல் அறிவையும் கொண்ட சம்பந்தன் ஐயாவை இழந்துள்ளோம். இவரை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராக இருந்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும். இருந்தார். இவர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராவார் என்றார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறுகையில்,

தேசிய அரசியலில் சிறந்தவொரு நபராக சம்பந்தன் இருந்தார். எப்போதும் அரசியல் தீர்வுக்காக முன்னின்றார். பலரும் பயங்கரவாத தீர்வை தேடிப் போன போது, அந்த விடயத்தில் அரசியல் தீர்வு காண செயற்பட்டார். அவர் ஜனநாயக முறைமையில் பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

இலங்கை தொழிலாலளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கூறுகையில்,

சம்பந்தன் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அவரின் அனுபவங்கள் அவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். என்னால் கூறக் கூடிய முன்னுதாரணத்திற்கு அவரையே குறிப்பிடுவேன். மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவருக்கு எமது மறியாதை எப்போதும் இருக்கும் அவரின் மறைவு தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/220966

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂

சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி.

தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி.

மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் அரசியல் ஞான சூனியங்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣

முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂

சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி.

தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி.

மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும்,

பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் ஆட்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣

முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂

காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??

ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால்

அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால்

அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.

சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣

அவருக்கு சாணக்கியம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣

நாமம் போட்டும் திருந்துற பாடாய் தெரியேல்லையே......இப்பவும் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சுக்கொண்டுதானே திரியுறார்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

அவருக்கு சாணக்கியம் இல்லை.

அதுதான் அந்த சாணக்கியத்தை பத்து வருசமாய் கண்டு களிச்சமே 😁

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

நாமம் போட்டும் திருந்துற பாடாய் தெரியேல்லையே......இப்பவும் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சுக்கொண்டுதானே திரியுறார்.

legday-dog.gif

நாய் வாலை, நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள்.

சிலதுக்கு... கல்லெறி பட்டும் புத்தி வராது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால்

அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.

என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தில் அவர் ஒரு வெற்றிடத்தை மிகவும் சுயநலமாக ஆனால் மிகவும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்தி கொண்டார். அதுவே அவரது சாணக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தில் அவர் ஒரு வெற்றிடத்தை மிகவும் சுயநலமாக ஆனால் மிகவும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்தி கொண்டார். அதுவே அவரது சாணக்கியம்.

அதே.👍
வேறு எந்த சிதம்பர ரகசியமும் இல்லை. சம்பந்தனிடம் சாணக்கியமாவது சாணகமாவது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அவருக்கு சாணக்கியம் இல்லை.

அது மட்டும் இல்லை அதுக்கு மூளையே கிடையாது ஒன்றில் தூதுவர்களை தனியாகத்தான் சந்திப்பார் காரணம் பிட்டுகேடுகள் வெளியாலை தெரியகூடாது .

இந்த முஞ்சுஉறு லண்டனில் தான் கறுப்பு கண்ணாடி காருக்குள் ஒளித்து திரியுதாம் வெளியில் வந்தால் தமிழ் சனம் கலைத்து கலைத்து கோவணத்தையும் உருவி அடி போடும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2025 at 10:12, குமாரசாமி said:

காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣

சரியாகச் சொன்னீர்கள். 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.