Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-372.jpg?resize=750%2C375&ssl

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும் பல மாகாணங்கள் சில வகையான கொடுப்பனவுகளை முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளன.

2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சீனாவில் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை குடியிருப்பாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது.

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது, உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு – இந்தியாவிற்குப் பின்னர்- வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது.

சீனாவில் திருமண விகிதங்களும் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன.

குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு மற்றும் தொழில் கவலைகள் காரணமாக இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கையை ஒழித்த பின்னரும், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441086

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை: குழந்தை பெற்றால் பணம் கொடுப்பதாகக் கூறும் அரசு

சீனா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' ஒழித்த பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கட்டுரை தகவல்

  • ஆஸ்மண்ட் சியா

  • வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள் பிரிவு

  • 29 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, பல மாகாணங்கள் முன்னோட்டமாக சில மானியங்களை வழங்கி வருகின்றன.

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும்.

இந்தக் கொள்கை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமல்படுத்தப்படும் என சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறையும் பிறப்பு விகிதம் - குழந்தை பெற்றால் ஆண்டுக்கு ரூ.43,000 அறிவித்த சீனா

பட மூலாதாரம், XIQING WANG/BBC

மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்கத் தொடங்கியது.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது.

கடந்த வாரம், உள்ளூர் அரசாங்கங்களை இலவச மழலையர் கல்வி திட்டங்களை உருவாக்குமாறு சீனா வலியுறுத்தியது.

சீனாவைத் தளமாகக் கொண்ட யுவா மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று.

சீனாவில், ஒரு குழந்தையை 17 வயது வரை வளர்ப்பதற்கு சராசரியாக 75,700 டாலர் வரை செலவாகும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவின் மக்கள்தொகை மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகம்தான், ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிறது.

அதேபோல், சீனாவின் 140 கோடி மக்கள் தொகையும் வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள்தொகை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39dlg3l4leo

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை எப்டிப் பிறந்தாலும் சீனநாட்டில் சிறீ லங்காவைப் போன்று குழந்தையை வயல் வெளியில் போடமாட்டார்கள் என்று நம்பலாம்.🥰

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQgvvFBOXne9bwQ7rs75uV

இந்த 1500 டொலர், "பம்பர்ஸ்" வாங்கவே போதாதே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQgvvFBOXne9bwQ7rs75uV

இந்த 1500 டொலர், "பம்பர்ஸ்" வாங்கவே போதாதே. 😂

5 hours ago, ஏராளன் said:

சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.

1500 இல்லையாம் அண்ணை 500 டொலர் தானாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

1500 இல்லையாம் அண்ணை 500 டொலர் தானாம்!

babykleidung-guenstig-und-nachhaltig-120

அப்ப அந்த 500 க்கு கொஞ்ச உடுப்புகள் மட்டும்தான் வாங்கலாம்.

அதற்குப் பிறகு வாற செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால்...

மேற்கொண்டு குழந்தை பெறுவதைப் பற்றி சீனர்கள் அக்கறை செலுத்துவார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஊரில் குழந்தைகளுக்கு பம்பஸ் வாங்கிக் கட்டுவது குறைவு, எல்லாம் அங்குள்ள சூட்டுக்கு அவிஞ்சு சிவந்து போய்விடும், துண்டுதான் அதிகமாக கட்டுவார்கள். பழைய வேட்டி, சாரத்தை கிழித்துக் கட்டி அலம்பி அலம்பி காயவைத்துக் கட்டுவார்கள். செலவும் இருக்காது. பணம்படைத்தவர்கள் பகட்டுக்கு வாங்கிக் கட்டிவிட சூட்டில் எல்லாம் சிவந்து குழந்தை கத்திக் கதறும்.🫨

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQgvvFBOXne9bwQ7rs75uV

இந்த 1500 டொலர், "பம்பர்ஸ்" வாங்கவே போதாதே. 😂

இதை சேமிப்பு வங்கியில் போட்டு

அதில்வரும் வட்டியில் பம்பஸ் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாட்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் எண்ணிக்கை மிக க்குறைவு. பிறப்பு வீதமும் குறைவு. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறும் சீரிய நிலை. புலம்பெயர்ந்த புண்ணியவான்கள் நலம் புரிந்தால் குலம் வாழும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

எமது நாட்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் எண்ணிக்கை மிக க்குறைவு. பிறப்பு வீதமும் குறைவு. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறும் சீரிய நிலை. புலம்பெயர்ந்த புண்ணியவான்கள் நலம் புரிந்தால் குலம் வாழும்.

தமிழர் பிரதேசம் மட்டுமல்ல, இலங்கையின் பிறப்பு வீதமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், தமிழர் பிரதேசத்தில் மக்கள் சற்று அதிகமாகப் புலம் பெயர்வதால் சனத்தொகையும் வீழ்ச்சியடைகிறது. ஆனால், பிறப்பு வீதத்தை அதிகரிக்க புலம்பெயர் புண்ணியவான்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை. "வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புகிறோம், இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று விளம்பரம் செய்து ஊக்குவிப்பது உழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முறையாகத் தெரியவில்லை.

இளைய வயதினர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லாமல் அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி செய்யும் திட்டங்களுக்கு புலம்பெயர் சமூகம் உதவலாம். "பிள்ளை பெற்றால் சன்மானம்" என்பது அவசியமில்லாத தானம் போல படுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இளைய வயதினர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லாமல் அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி செய்யும் திட்டங்களுக்கு

இப்படியான நடைமுறை திட்டங்கள் தமிழ்தேசிய கோட்பாட்டிற்கு எதிரானவை அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2025 at 11:43, Justin said:

வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புகிறோம், இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று விளம்பரம் செய்து ஊக்குவிப்பது உழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முறையாகத் தெரியவில்லை.

நீங்கள் சொல்வதும் உண்மைதான், இருந்தும் என்ன செய்வது “ சல்லி ஒன்றே சர்வ ரோக நிவாரணி” என்ற மனநிலையிலிருந்து இன்னும் விடுபட முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/7/2025 at 07:02, தமிழ் சிறி said:

பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மாதிரி சட்டங்கள் ஜேர்மனியிலும் நிறைய உண்டு.

ஆனால் ஜேர்மன்காரர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. கூடுதலாக அவர்கள் பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என வாழ தலைப்பட்டு விட்டனர். காரணம் வாழ்க்கை செலவு அதிகரிப்பு.

ஆனால் புலம் பெயர்ந்து வந்த நம்ம அரபு வசந்தகாரர்களுக்கு நோ ப்ரொப்பளம். ஒரே அபிவிருத்திதான் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஆனால் புலம் பெயர்ந்து வந்த நம்ம அரபு வசந்தகாரர்களுக்கு நோ ப்ரொப்பளம். ஒரே அபிவிருத்திதான் 😂

lA2Kyp.gif

ஆஸ்பத்திரி பிள்ளைப் பெறு பகுதியில் பார்த்தால்... துருக்கி, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று முஸ்லீம் பெண்களால் நிரம்பி வழியும். அங்கு ஜேர்மன்காரிகளை காண்பது அரிது.

இந்த முஸ்லீம் ஆண்களுக்கு... ஆணுறை என்று ஒன்று, கடையில் விற்பது தெரியாது போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியர் ஒருவருக்குத் தமிழ் வாசிக்க தெரிந்து அவருக்கு யாழ்களத்திலும் உறவு இருந்தால்…தம்பி தமிழ் சிறி இனித் துருக்கிக்கு ஊர்உலா செல்லவோ, அங்கு தலைகாட்டவோ முடியாது.😭

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் முன்னர் குழந்தை ஒன்றிற்கு $4000 கொடுத்தார்கள் வேலையிலும் அதே அளவு கொடுத்தார்கள், 3 மாதம் சம்பளத்துடன் வேலை ஓய்வு, பின்னர் வேலைக்கு போகும் போது $4000 கொடுத்தார்கள்.

தங்கி வாழ்வோரின் தொகை (15 வயதிற்கு குறைந்தவர்களும் ஓய்வூதிய வயதெல்லை கொண்ட இந்த தங்கி வாழ்வோர் தொகை) விகிதம் அதிகரிக்கும் போது அந்த நாடு வளர்ச்சி பாதையிலிருந்து விலகி செல்ல ஆரம்பிக்கும், உள்நாட்டு குழந்தை பிறப்பு அதிகரிப்பினை ஊக்கிவிப்பது இதனாலேயே, ஆனால் குடியேற்றவாசிகள் உடனடி தீர்வு.

சீனா மிகப்பெரிய இரண்டு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது இந்த தங்கி வாழ்வோர் விகித அதிகரிப்பு மற்றும் சீன வழங்கல் பாதையில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் சீன பொருளாதாரத்திற்கு மிக பெரிய இரண்டு சவால்களாக உள்ளது.

மிக பெரிய உற்பத்தி துறை கொண்ட சீனாவே உலகில் தற்போது மிக அதிகளவில் எரிசக்தியினை பயன்படுத்தும் நாடாக உள்ளது, இதனது வழங்கல் பாதையில் அமெரிக்காவினால் திட்டமிட்டு நெருக்கடியினை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரல் செயற்பாட்டில் உள்ளது, இதற்கு மாற்றீடு சீனாவினால் தற்போது செய்ய முடியாது என்பதே யதார்த்தம், எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய உறுதியின்மை நிலவுகிறதோ அதனை போல சீன பொருளாதாரமும் நெருக்கடியில் உள்ளது.

அதற்காகவே சீனா அதிகளவில் மீழ் உருவாக்கும் எரிசக்தியில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.