Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்செல்வன் அண்ணாவின் இழப்புக்கு சர்வதேசம் தரும் பதில் என்ன?

Featured Replies

அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.

Edited by சோழநேயன்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் குழுத் தலைவர் ஜோசப் பைடனின் ஈ-மெயில் தொடர்பு இது. அமெரிக்காவிலுள்ளோர் அனுப்பினால் கூடிய துலங்கல் எதிர்பார்க்கலாம்.

http://biden.senate.gov/contact/emailjoe.cfm

புலம்பெயர்ந்தவர்கள் அறிவதற்கு நிறைய இந்தத் தளத்தில் இருக்கு. இதில் உள்ள தகவல்களை வைத்து பல கருத்தரங்குகளே நம்மவர்களிற்கு வைக்கலாம்.

http://www.fcnl.org/

http://www.fcnl.org/action/toolkit.htm

சர்வதேசம் தரப்போகும் எந்தப் பதிலை நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றீர்கள். எந்தத் தீர்விலிருந்தும் தப்பித்தோடும் ஸ்ரீலங்காவின் முன் சர்வதேசம் தரும் பதில் எதைத்தரப்போகின்றது. இந்தக் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் யார். வன்னியிலுள்ள சர்வதேசத் தரப்புக்களுக்கு இக் கூட்டம் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்ததா? என்ற விடயங்கள் விசாரித்தறியப்பட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருந்திருப்பின் அவை நிவர்தி செய்யப்பட வேண்டும்.

சர்வதேசம் தரப்போகும் எந்தப் பதிலை நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றீர்கள். எந்தத் தீர்விலிருந்தும் தப்பித்தோடும் ஸ்ரீலங்காவின் முன் சர்வதேசம் தரும் பதில் எதைத்தரப்போகின்றது. இந்தக் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் யார். வன்னியிலுள்ள சர்வதேசத் தரப்புக்களுக்கு இக் கூட்டம் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்ததா? என்ற விடயங்கள் விசாரித்தறியப்பட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருந்திருப்பின் அவை நிவர்தி செய்யப்பட வேண்டும்.

ஆமாம். அனுராதபுர தாக்குதலுடன் மாறியிருந்த சமன்பாடுகளை சமப்படுத்தும் ஒரு முயற்சியாகவே தமிழ்ச்செல்வன் அண்ணா இலக்கு வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்க தூதுவர் அனுராதபுர தாக்குதலை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எமது மக்களும் சரி, போராளிகளும் சரி இவ்வாறானவர்களின் கண்களில் மண்தூவிவிட்டு வேலை செய்ய வேண்டியது அவசியம்.

விடியற்காலை நான்கு மணிக்கு யார் கூட்டம் நடத்துவார்கள்? அப்படியே கூட்டம் நடத்தினாலும், இவ்வாறானதொரு திறந்தவெளியிலா நடத்துவார்கள்? சர்வதேசத்தின் கண்டனங்களுக்குப் பயந்தே 'தமிழ்ச்செல்வன் அண்ணா மீதான தாக்குதல் இலக்கு அல்ல தற்செயலானது' என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை விட்டுள்ளது. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்ஸ, 'இது விடுதலைப்புலிகளுக்கான எச்சரிக்கை' என அறிக்கை விட்டிருக்கிறார். சிறிலங்கா அரசாங்கம் எப்போதுதான் முரண்பாடுகளில்லாத அறிக்கைகளை விட்டிருக்கிறது? இந்தத் தருணத்திலாவது புலம்பெயர் மக்கள், தங்களால் முடிந்தளவு பங்களிப்பினைச் செய்ய வேண்டும். இப்பங்களிப்புத்தான் தாயகத்திற்கு நாம் செய்யும் கடைசிப் பங்களிப்பாக இருக்கும். ஒவ்வொரு தமிழனும் கிளர்ந்தெழுந்து சர்வதேசத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான அழுத்தங்களைக் கொடுப்பது நல்ல பயனைத் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேஷத்தின் பதில் எங்களுக்கு முக்கியமில்லை, எங்களிடம் இருந்து சிங்களவனுக்கு கிடைக்கும் பதில் என்றுமே நினைத்துப்பார்க்க முடியாத பதிலாகத்தான் இருக்கும்.

அதுவே. எங்களிடமிருந்து கிடைக்கப்போகும் பதிலென்ன? சர்வதேசம் எங்களை முட்டாள்களாக்கும் வேலைகளில்தான் ஈடுபடும். கோத்தபாயவின் அறிக்கையில் உண்மையென்பது சந்தேகத்திற்குரியதுதான். இருந்தாலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது தேவையானது. வெளிவிவகார அமைச்சின் அறிக்கை பயத்தினால் வெளியிடப்பட்ட ஒன்றல்ல. அதையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இநத அறிக்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ்ப் போராளிகள் அவதானமாயிருந்து அநியாய இழப்புக்களைத் தவிர்த்தல் வேண்டும்.

தமிழர் தரப்பில் இருந்து கொடுக்கின்ற பதில் மிக மிக மறக்கமுடியாததாக இருக்கவேண்டும்

எப்பொழுதும் பதிலுக்கு பதில் தான் தீர்வு தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நோர்வே அரசாங்கம் அல்லது தூதுவர்கள் ,அமைச்சர்கள் எதாவது அறிக்கை விட்டார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா சர்வதேசத்துக்கு மடல் அணுப்பி டைம வேஸ்ட் பன்னிரிங்க...முதல் தலைவன் கரத்த பலப்படுத்த நாங்கள் என்ன செய்யலாம் என்டத பாருங்க...

எரிக்சொல்கைம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் சிறீலங்காவின் சமாதான பேச்சு வார்த்தையில் அனுசரணையாளராகவும் பணியாற்றிய எரிக் சொல்கைம் இச்சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் வெள்ளிக்கிழமை என்.ரி.பி செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய அவர் தமிழ்செல்வனின் இழப்பு பாரிய இழப்பு எனவும் அவரே சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய தொடர்பு மையமாக செயற்பட்டவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விதார் கல்கிசன் முன்னாள் நோர்வேயின் அரசுச் செயலரும் முன்னர் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் பொறுப்புவகித்தவருமான அவர்கள் அச்செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் சமாதான பேச்சு வார்த்தையில் தமிழ்செல்வன் அவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக முக்கி பங்கி வகித்திருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

www.pathivu.com

தலைவரின் கரங்கள் பலமாகத்தான் இருக்கிறது என்பதை அநுராதபுரத் தாக்குதல் எல்லோருக்கும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதிலடியை தலைவர் அவர்கள் தீர்மானிப்பார்கள். புலம்பெயர்ந்து வாழும் எங்களால் அதற்குரிய பணப்பங்களிப்பைத் தவிர வேறொன்றும் இங்கிருந்து செய்யமுடியாது.

தமிழீழத்தனியரசை அமைக்கப்போவதாக கடந்த மாவீரர் நாள் உரையில் தலைவர் அவர்கள் அறிவித்திருந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு, தமிழீழப் பிரகடன அறிவிப்பு மிகவிரைவில் வரலாம். அப்படி வரும்போது, அனைத்துலக நாடுகளின் ஆதரவு எமக்குத் தேவை. இதுவரை காலமும், நாம் சம்பவங்கள் நடந்தபின்பே, எமது செயற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறோம். ஆனால், இனிமேலும் அப்படி இருக்காமல், எமது செயற்பாடுகளை விரைந்து செயற்படுத்துவது மேலதிக இழப்புக்களை குறைப்பதோடு தமிழீழப் பிரகடனத்தையும் விரைவுபடுத்தும். தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் இழப்பு எம்மை உத்வேகப்படுத்தவேண்டுமே தவிர, சோர்வடைய விடக்கூடாது. புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ்மக்களும் விரைந்து செயற்படவேண்டிய காலமிது. நாம் ஒவ்வொருவரும் கொடுக்கும் அழுத்தத்தின் மூலம் தமிழீழத் தனியரசை உலகம் அங்கீகரிக்க வைக்கமுடியும்.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்கள் ஓர் இராணுவத்தளபதியல்ல. அவர் அரசியல்துறையைச் சார்ந்தவர். அதுமட்டுமன்றி, அவர் பல நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் பிரமுகர்களைச் சந்தித்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நாம் கொடுக்கும் அழுத்தங்கள் வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தரமுடியாத ஒரு பயனைத் தரும் என நினைக்கிறேன்.

எமது கருத்துக்களை, வீரவணக்கங்களை இங்கு பதிவு செய்வதோடு நின்றுவிடாது, எங்கள் நாடுகளிலுள்ள அமைப்புகளோடு இணைந்து செயற்படவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் எமது வேற்றுமைகளை மறந்து எமது மக்களின் விடிவிற்காக, மாவீரர்களின் கனவுகளிற்காக நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும். இதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் உண்மையான வீரவணக்கங்களாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தளவில் சர்வதேசம் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே செய்யாது.தமிழ் மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.அனுராதபுர தாக்குதல் நடவடிக்கையை (அமெரிக்காவின் அறிக்கை தவிர)உலகம் ஒன்றும் சொல்லாதவிடத்து இதனை ஒரு சமிக்ஞையாக எடுத்து விடுதலை புலிகள் சிங்கள அரசை செயலிழக்க செய்ய வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் புலிகளின் கையை பலப்படுத்த வேண்டும்.

சர்வகளப் போராளி தமிழ்ச்செல்வன் - இதயச்சந்திரன்

சர்வகளப் போராளி தமிழ்ச்செல்வன் - இதயச்சந்திரன்

02-11-2007 அதிகாலை 6.00 மணியளவில், சிறீலங்கா வான் படையினரின் குண்டு வீச்சினால் வீரச் சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைச் செயலர் சு.ப.தமிழ்செல்வனிற்கும் அவரோடு உயிர்நீத்த ஏனைய 5 போராளிகளிற்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் வீரவணக்கம்,

விடுதலைப்புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் புதிய செய்தி சொல்லப்பட்டிருப்பதாக, மகிந்தவின் தம்பியும், சிறீலங்கா படைத்துறைச் செயலருமாகிய பேரினவாதி கோத்தபாய ராஐபக்ச ரைட்ரருக்கு கூறியுள்ளார்.

புலித்தலைவர்கள் இருப்பிடங்கள் தமக்கு தெரியும் எனவும் ஒவ்வொருவராக அழிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சிங்கள பேரினவாதத்தின் வக்கிர நிலை உச்சகட்டத்தை எட்டிவிட்டதென்கிற செய்தியே கோத்தபாயவின் வாய்மொழியூடாக வெளிவருகிறது.

மனித விழிமியங்களும், பண்பாட்டு தளங்களும் சிதைவடைந்து, சிங்களத்தின் குரூரமுகம் ஒற்றை பரிமாணமாக நிலைநிறுத்தப்படுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக கலந்து கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளரை மறுதரப்பு அழித்து விட்டது.

பேசித் தீர்க்கச் சொல்லும் சர்வதேசம், இப்படுகொலைக்கு என்ன பதில் கூறபோகிறது.? பதினான்கு நாட்கள் அவகாசம் வழங்காமலே எல்லரவற்றையும் செய்கிறது அரசு. இவ்வாறான சோகமான நிகழ்வுகளை, மௌனமாகப் பார்வையிடலாம் சர்வதேசம்.

ஆனாலும் தாயக, புலம்பெயர் மக்கள், சர்வதேசம் போல் மௌனித்திருக்க முடியாது.ஆகவே இழப்புகளைச் சாதனையாகக்கும் வித்தை தெரிந்த தலைவரின் கரங்களைப் பலப்படுத்து இளங்கோ சொன்ன இறுதிச் செய்தியை , மறுபடியும் மீட்பும் பார்க்க வேண்டிய காலத்தின் தேவையை மக்கள் உணர வேண்டும்.

விடுதலையின் அவசியத்தை அடிக்கடி உணர்த்துகிறான் எதிரி. சமாதானத்திற்கு வழங்கிய பேரிழப்புகளை இத்தோடு நிறுத்த வேண்டுமாயின் சகல மக்களும் ஓரணியில் திரள வேண்டும். மாவீரராகிய சு.ப தமிழ்செல்வன், போராட்ட விரிதளத்தின் சகல திசையெங்கும் கால்பதித்து மூழ்கி எழுந்த மறவன். தலைவனின் அரசியல் தளபதி, போராட்ட களத்தில் விழுப்புண் அடைந்து, ஒற்றைக் காலில் அரசியல் தவம் புரிந்த பிரம்ம ஞானி.

இந்த யுத்த காலத்தில், சமாதானக்காவி அணிந்த பேரினவாதிகளால் கேணல்.சங்கர், கௌசல்யன் போன்ற பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்செல்வனின் இழப்போடு, சமாதானத்திற்கு தமிழ்மக்கள் கொடுத்த விலை மிகமிக அதிகம்.

இழப்புகளை உரமாக்கி, தடைகளை உடைத்தபடி, விடுதலை வானைத் தரிசிக்கப் புறப்படப் போகிறோமாவென்பதை தீர்மானிக்கும் காலம் அண்மித்துவிட்டது. பேச்சு வார்த்தையென்பது போராட்ட சக்தியை நீர்த்தும் போகச் செய்யுமென கற்பனை செய்வதால், தமிழ் மக்களின் இழப்புகள் குறித்து சிலருக்குக் கவலையில்லை.

தமிழர் தரப்பு நியாயத்தை உலகமேடையில் வெளிப்படுத்திய அரசியல் துறைத்தலைவரை, கொன்றதனூடாக இனிப்பேச்சு வார்த்தை கிடையாதென்கிற முக்கிய செய்தியை, பேரின வாதம், தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் கூறியுள்ளதாகவே கருதவேண்டும்.

இந்த உலக சமாதானக் காவலர்கள் இனி எந்த முகத்தோடு எமைநோக்கி வரப்போகிறார்களோ தெரியவில்லை. அதாவது இனிவர முடியாதவாறு சிறீலங்கா ஆட்சியாளர்களே எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றனர்.

தமிழ் தேசிய தலைமைமீது சர்வதேச விரித்த வலைப்பின்னல்கள் யாவற்றையும் மகிந்தரே கிழித்தெறிந்து விட்டார். நாம் சமாதானத்தின் எதிரிகளல்லர் என்பதை சர்வதேசம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு இழுத்து வரவே யுத்தம் புரிவதாகவும், குண்டுகள் வீசுவதாம் கூறும் சிறீலங்காவின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. எழும்புமா? நிச்சயம் எழும்பாது.

ஆகவே போராளியாக, நல்ல மனிதனாக, நேர்மையாளனாக விளங்கிய தமிழ்செல்வனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து, அவரின் இலட்சிய கனவினை நிஐமாக்குவதே எமது பணியாகும்.

இவன் காலத் தடம் பதியாத களங்கள் இல்லை. போர்க்களமாயினும், அரசியல் களமாகிலும் சிறப்புற இயங்கிய, தலைவனின் தளபதி இவன்.

விடுதலை பெறும் எம்தேசம் புன்னகை சிந்தும் போது , தமிழ் செல்வனின் முகம் அதில் தெரியும்.

-இதயச்சந்திரன் -

தமிழீழ மக்களே! சர்வதேசத்தின் பால் நாம் வைத்த நம்பிக்கைகள் வீணாகிவிட்டது. நாம் எம்மால் முடிந்தவரை செய்தோம். ஆயினும் அதற்குப் பதில் பூச்சியமாகவே இருந்தது, இருக்கும். சர்வதேசம் சகல வழிகளிலும் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றிக் கொண்டே வந்துள்ள, வருகின்றது. இதுவும் அவர்களைப் பொருத்தவரை ஒரு சாதாரண மரணம் தான். அல்லது இவர்களின் வேறும் காகித அறிக்கைகளுக்கு பயப்ட வேண்டிய கட்டாயம் பயங்கரவாத சிங்கள அரசுக்கு எந்த விதத்திலும் மில்லை. ஆகவே தலைவர் சொன்னது போல பெரும் இலட்சிய நெருப்பை தமிழ்ச்செல்வன் மூட்டியிருக்கின்றார். அந்த நெருப்பு எம் ஆத்மாவில் எப்போழுதும் எரிந்து கொண்டிருக்கட்டும். இந்த அநியாய சாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வரை எரிந்து கொண்டிருக்கட்டும். எம் இலட்சியம், இறந்த போரளிகளின் இலட்சியம் ஈடேரும் வரை எரிந்து கொண்டிருக்கட்டும். யாரையும் எதனையும் நம்பிப் பலனில்லை. எம் தலைவரை நம்புவோம். எம் போரளிகளை நம்புவோம், எம்மை நம்புவோம். இழந்த அந்த சிரித்த முகத்தை நினைவில் கொண்டு அத்தனை தமிழரும் ஒன்று சேர்ந்து எமது இலட்சியத்தை வென்றெடுக்க முயல்வோம். இதுவே இன்றைய தேவை.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.