Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-146.jpg?resize=750%2C375&ssl

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை.

எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.

கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார்.

அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1446727

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 

31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் உயிரிழந்தார். 

சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfep0fxd00cuo29npaxdayu9

  • கருத்துக்கள உறவுகள்

சார்லி கக்: டிரம்பின் கூட்டாளி சுட்டுக் கொலை - 3000 பேர் முன்னிலையில் நடந்த சம்பவம்

சார்லி கிர்க்

Reuters கொல்லப்படுவதற்கு முன், யூட்டா பல்கலைகழகத்தில் சார்லி கக் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ஜூட் ஷீரின், ஆனா ஃபகே

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசி வந்தார்.

பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தேடும் பணி வீடு வீடாக நடைபெறுவதாக போலீஸார் கூறுகின்றனர்.

சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டது.

அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் கூறியது என்ன?

சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார்.

யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான சார்லி கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர்.

2012 ஆம் ஆண்டில், 18 வயதில், அவர் தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ (TPUSA) ஐ நிறுவினார்.

அவரது சமூக ஊடக பதிவுகள் மற்றும் தினசரி போட்காஸ்ட் பெரும்பாலும் திருநங்கை அடையாளம், காலநிலை மாற்றம், குடும்பம் போன்றவை குறித்ததாக இருந்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வீடியோ பதிவில், "சார்லி கக்கின் கொடூரமான படுகொலை குறித்து வருத்தமும் கோபமும் கொண்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்

சார்லி கக் - தனது 18 வயதில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற பழமைவாத குழுவை நிறுவினார், அவர் ஒரு தேசபக்தர், அவரது மரணம் "அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தருணம்" என்று டிரம்ப் கூறினார்.

சார்லி கிர்க்

யூட்டா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சார்லி கக் பங்கேற்று பேசி வந்தார்.

யூட்டா பல்கலைகழக காவல் தலைமை அதிகாரி ஜெஃப் லாங், இந்நிகழ்வு திறந்த வெளியில் நடைபெற்றதாகவும், 3 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் ஆறு அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் கட்டடங்களால் சூழப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சார்லி கக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததாக ஒக்லஹாமா மாகாண பிரதிநி மார்க்வேனே முல்லின்ஸ் கூறினார்.

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பல்கலைகழக வளாகத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து ஒருவர் கிர்கை சுட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பிபிசி ஆராய்ந்த போது, அந்த கட்டிடம் சார்லி கக் சுடப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. எனினும் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர் துப்பாக்கிச் சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, சுடப்பட்டதாக கூறுகின்றனர். சுடப்பட்டவுடன், மேடையில் அவர் கீழே விழுந்தார். கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர்.

சார்லி கக் சுடப்பட்ட பிறகு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

சார்லி கக் சுடப்பட்ட உடனே ஒரு நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகளில் சுட்டவர் பதிவாகியுள்ளார். அவர் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு மேற்கூரையிலிருந்து சுட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், சார்லி கக்கின் மரணத்தை "அரசியல் கொலை" என்று அவர் குறிப்பிட்டார்.

தலைவர்கள், முன்னாள் அதிபர்கள் அஞ்சலி

சார்லி கக்கின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமெரிக்க முன்னாள் அதிபர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர், "நாம் திறந்த மனதுடன் விவாதிக்கவும், பயம் இல்லாமல் பேசவும் முடிய வேண்டும். அரசியல் வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜிராஜியா மெலோனி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய் ஆகியோரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ளனர்.

சார்லி கக் யார்?

சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார்.

யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர்.

சிகாகோவின் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸில் வளர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரின் மகன் கக். அரசியல் செயல்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு சிகாகோவுக்கு அருகிலுள்ள ஒரு சமூகக் கல்லூரியில் பயின்று, பாதியில் நின்று விட்டார். உயர்மட்ட அமெரிக்க ராணுவ அகாடமியான வெஸ்ட் பாயிண்டிற்கு தேர்வாக முயன்று தோல்வியுற்றார்.

பின்நவீனத்துவம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விவாதங்களில் ஈடுபடும்போது கக் கல்லூரி பட்டம் கூட பெறாதவர் என்று குறிப்பிடப்பட்டார்.

Charlie Kirk

Reuters 2024-ம் ஆண்டு அரிசோனாவில் சார்லி கக் ஒரு மாநாட்டில் பேசினார்.

2012 -ல் அதிபர் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் TPUSA -ல் அவரது பங்களிப்பு தொடங்கியது.

லாப நோக்கற்ற அந்த அமைப்பின் நோக்கம் "நிதிப் பொறுப்பு, சுதந்திர சந்தைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மேம்படுத்த" மாணவர்களை ஒழுங்கமைப்பதாகும். TPUSA இப்போது 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

கக் குடியரசுக் கட்சி நிகழ்வுகளில் பேசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அதிதீவிர பழமைவாதிகளிடையே பிரபலமாக இருந்தார். அவரது தினசரி பழமைவாத பேச்சு வானொலி நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

53c2e7d0-8e9c-11f0-a883-5905d9e9a939.png

Getty Images டொனால்ட் டிரம்ப் ஜூனியர், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே டி வான்ஸ் ஆகியோருடன் ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சார்லி கக் பங்கேற்றார்.

ஒரு ஆர்வமுள்ள மேடை பேச்சாளரான, சார்லி கக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றினார். ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் எனும் பிரசாரத்தைக் குறிக்கும் வகையில், அவர் எழுதிய தி மாகா கோட்பாடு 2020 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையான நூலாக இருந்தது.

கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் TPUSA முக்கிய பங்கு வகித்தது. பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை பதிவு செய்ய உதவியதற்கும், ட்ரம்புக்கு ஆதரவாக அரிசோனா மாகாணத்தில் நிலைமைகளை மாற்றியதற்கும் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார்.

சார்லி கக் ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். டிரம்ப் ஆட்சிக் காலங்களில் வெள்ளை மாளிகைக்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம்.

புதன்கிழமை, கக்கின் மரணத்தை அறிவித்த டிரம்ப் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்: "தி கிரேட், மற்றும் லெஜண்டரி, சார்லி கக் இறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

5d8eacd0-8e98-11f0-8f5c-3754cd47c044.png

Reuters 2018-ம் ஆண்டு சார்லி கிர்குடன் அதிபர் டிரம்ப்.

அதிபரும் அவரது உதவியாளர்களும் டிரம்பின் பிரசாரத்துக்கு சார்லி கக்கின் பங்கை அங்கீகரித்தனர். அவர் குடியரசுக் கட்சி மாநாடுகளில் பேசினார். கக்கின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் கக் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் டொனால்ட் டிரம்ப் உடன் கிரீன்லாந்திற்கு பயணம் செய்தார். டிரம்ப் அப்போது ஆர்க்டிக் பிராந்தியத்தை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

சார்லி கக்கின் சுவிசேஷ கிறிஸ்தவ மதம் மற்றும் குடும்பம் அவரது அரசியலில் முக்கிய பங்காற்றியது என்று கூறலாம். அவர் ஒரு முன்னாள் மிஸ் அரிசோனாவை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழமைவாத செயல்பாடுகளின் எதிர்காலமாகவும், தீவிர பிரிவினைவாத நபராகவும் பார்க்கப்பட்டார்.

குடியரசுக் கட்சி அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்குக்கு மிகப்பெரிய பாராட்டு டிரம்பிடமிருந்தே வந்தது என்று கூறலாம். டிரம்பின் இந்த வார்த்தைகள் சார்லி கக்கின் பாட்காஸ்டின் தொடக்கத்தில் ஒலிபரப்பட்டது.

அதில் டிரம்ப், "நான் சார்லிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் ஒரு நம்பமுடியாத இளைஞர், அவரது உணர்வு, இந்த நாட்டின் மீதான அவரது அன்பு, இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குவதில் அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்." என்று கூறியுள்ளார்.

சார்லி கக் தனது நிகழ்வுகள் மற்றும் அவரது பாட்காஸ்ட்களில் பல அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை விவாதித்துள்ளார் - துப்பாக்கி கட்டுப்பாடு அவற்றில் ஒன்றாகும்.

சில மாதங்களுக்கு முன்பு, "துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சில துப்பாக்கி இறப்புகள் நிகழ்ந்தாலும், இரண்டாவது சட்டத் திருத்தத்தை (துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது) தக்க வைத்துக் கொள்ள அந்த விலையை கொடுக்க வேண்டியுள்ளது" என்று அவர் பேசியிருந்தார்.

அவரது சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. அவர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து சந்தேகத்தையும் பரப்பினார், திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார் என்று பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் தவறான கூற்றையும் அவர் வழிமொழிந்தார்.

சிபிஎஸ் செய்தியின் படி, வெள்ளை மக்களின் இடத்தை சிறுபான்மையினர் பிடித்துக் கொள்வார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கிரேட் ரிப்ளேஸ்மென்ட் சதி கோட்பாட்டையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.

சார்லி கக் சுடப்பட்டது குறித்து பேசும் போது, அவர் வெவ்வேறு கருத்துகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார் என்று சிலர் வலியுறுத்தினர்.

"அவரது செயல்பாடுகள் பிளவைக் கடந்து மக்களை அணுகுவது, பிரச்னைகளை தீர்க்க வன்முறைக்கு பதில் பேச்சைப் பயன்படுத்து என்ற நோக்கில் இருந்தது. " என பாப்டிஸ்ட் தலைமைத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் வொல்ஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3rvw7434v9o

  • கருத்துக்கள உறவுகள்

"சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை:

பெண்கள்

"பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்"

"குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்"

அமெரிக்காவின் பல்லினத்தன்மை

The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை.

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்

சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை"

நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பரப்பிய பொய்த்தகவல்கள்

"அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன"

தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும்.

கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார்.

2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார்.

எப்படி உருவானார் கேர்க்?

2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார்.

இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம்.

அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம்.

இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள்.

இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை.

இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க்.

தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்!

அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!

Edited by Justin
ஆண்டுப் பிழை திருத்தம்

கொலை செய்யப்பட்டவர் யாராயினும் கண்டிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சில ட்றம்ப் ஆதரவு அரசியல்வாதிகள் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் அரசியல் வன்முறைப் பேச்சும் ஒருவித அராஜகம்தான். அதனை ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதிக்கக் குடாது என்கிறார்கள். பார்க்கலாம்.

1 hour ago, Justin said:

இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க்.

எமது வலதுசாரித் தமிழர்கள் ஆதரிக்கக் கூடிய எல்லாத் தகுதியும் இவருக்கு உள்ளது போலுள்ளதே 😁

  • கருத்துக்கள உறவுகள்

இருந்திருந்தால் ரம் இளைப்பாறிய பின் அவரது இடத்தைப் பிடித்திருப்பார்.

ரம் 8 அடி பாய்ந்தால்

இவர் 16 அடி பாயந்திருப்பார்.

ஒரு காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கு ஏறுவதும் வாயாலே! பல்லுடைபடுவதும் வாயாலே! அவருடைய இனவாதப் பேச்சுக்கள் சகிக்க முடியாத ஒருவரே அவரைச் சுட்டிருக்கிறார். அமெரிக்க காவல்துறையால் சுட்டவரைப் இன்னும் பிடிக்க முடிவில்லை என்பது யாரும் அவரைக்காட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

பல்லக்கு ஏறுவதும் வாயாலே! பல்லுடைபடுவதும் வாயாலே! அவருடைய இனவாதப் பேச்சுக்கள் சகிக்க முடியாத ஒருவரே அவரைச் சுட்டிருக்கிறார். அமெரிக்க காவல்துறையால் சுட்டவரைப் இன்னும் பிடிக்க முடிவில்லை என்பது யாரும் அவரைக்காட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.

கவலை வேண்டாம். கொலையாளி விரைவில் உயிருடனோ அல்லது உயிர் இல்லாமலோ கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்த வரைக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களும் ஒரு வித இனவாதிதான். அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

அதிலும் அந்த இனவாதிகளுக்கும் அமோக ஆதரவு உண்டு. ஏன் எதற்கு என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய விடயம்.

57 minutes ago, குமாரசாமி said:

என்னைப்பொறுத்த வரைக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களும் ஒரு வித இனவாதிதான். அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

அதிலும் அந்த இனவாதிகளுக்கும் அமோக ஆதரவு உண்டு. ஏன் எதற்கு என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய விடயம்.

ஆம் இன வாதம் நியாயமானதுதான்.

கறுப்பினத்தவர் மீதுள்ள வெள்ளையின இனவாதம் நியாயமானது.

பலதீனர்மேல் இஸ்ரேலியர்களின் இனவாதம் இயல்பானது.

உலக நாடுகளின் அமோக ஆதரவுள்ள சிங்களவரின் இனவாதம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

உலக அரசியல் வரலாறு தெரியாதவர்களால் இதனை உணர முடியாது.

அரை நூறாண்டுகளாக மிகப் பெரும் விலை கொடுத்துப் போராடி எல்லாவற்றையும் இழந்து இன்று எங்கு வந்து நிற்கிறோம் பார்த்தீர்களா ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கணவனான சார்லி கிர்க் கொலை : மனைவி எரிக்காவின் நெகிழ்ச்சியான செய்தி!

Published By: Digital Desk 1

23 Sep, 2025 | 11:49 AM

image

அமெரிக்காவின் பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கின் படுகொலைக்குப் பிறகு, அவரது மனைவி எரிக்கா கிர்க், நெகிழ்ச்சியுடன் தனது கணவரைக் கொன்றவரை மன்னிப்பதாகத் தெரிவித்த செய்தி, அமெரிக்க அரசியலிலும் பொது வாழ்விலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனாவின் கிளெண்டேல் நகரில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற அவரது அஞ்சலி நிகழ்வில், இந்த வார்த்தைகள் கண்ணீருடன் உச்சரிக்கப்பட்டன.

சார்லி கிர்க்கின் அஞ்சலி நிகழ்வு ஒரு குடியரசுக் கட்சியின் அரசு இறுதிச் சடங்கு போல பிரமாண்டமாக நடந்தது. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள், சிவப்பு, வெள்ளை, மற்றும் நீல நிற உடைகளை அணிந்து வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இது சார்லி கிர்க்கின் அரசியல் செல்வாக்கின் வலிமையை வெளிப்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட, அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசினர். கிர்க்கின் படுகொலைக்குப் பிறகு அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர்கள் உரையாற்றினர். இது வெறுமனே ஒரு அஞ்சலி நிகழ்வாக இல்லாமல், ஒரு முக்கிய அரசியல் மாநாடாகவும் அமைந்தது.

எரிக்கா தனது கணவரின் கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கியதோடு, "வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல" என்ற மிக முக்கியமான செய்தியை அமெரிக்க மக்களுக்குத் தெரிவித்தார். இது, அமெரிக்க சமூகம் தற்போது எதிர்கொண்டுள்ள பிளவுபட்ட அரசியல் சூழலில் மிகவும் அவசியமான ஒரு செய்தியாகக் கருதப்படுகிறது.

அவரது இந்த வார்த்தைகள், பலத்த கைதட்டலைப் பெற்றன. ஒரு கொடூரமான குற்றத்திற்குப் பின்னும் மன்னிப்பைத் தேர்ந்தெடுக்கும் அவரது மனிதாபிமான அணுகுமுறை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சார்லி கிர்க், இளம் வாக்காளர்கள் மற்றும் கிறிஸ்தவ தேசியவாதிகள் மத்தியில் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவைப் பெருக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அவரது மறைவுக்குப் பின், அந்த ஆதரவுத் தளத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு, டிரம்பின் ஆதரவுத் தளத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/225828

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.