Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/9/2025 at 21:24, Kavi arunasalam said:

கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன்.

இருந்தாலும் சீமானுக்கு மட்டும் வரும் கேலிச்சித்திரம் விஜய் என்றவுடன் ஒரு கேலிச்சித்திரமும் வராதது ஏனோ தானோ என அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஈழத் தமிழர்கள் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. 👍 ஆனால் இந்த தனிநபர் மீதான மோகங்கள் பரவ நாங்களும், நாங்கள் காவிச் செல்லும் செய்திகளும் உடைந்தை ஆகின்றன அல்லவா.

நேற்று ஒரு ஈழத்து பெரியவர் கரூர் அநியாய உயிர் பலி பற்றி பேசிய போது சொன்னார் அங்கே எல்லா தலைவர்களும் சரியான கள்ளர்கள். அவசியம் அங்கே ஒரு புரச்சி வர வேண்டும் என்றார். அதற்க்கு அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு நல்ல தலைவன் அங்கே இல்லை என்றார் 🙄

இலங்கையில் உள்ள சிங்கலவர்கள் கூட இவர் மாதிரி அநுரகுமார திசாநாயக்கவிடம் இவ்வளவு திருப்தியாக இருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் அண்ணா! அஞ்சலிக்கான சந்திப்பு , அனுதாப சந்திப்பிற்கு இன்னுமா script தயாராகவில்லை? ☹️

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில்/உலகத்தில் எங்கெல்லாம் அதிகமாக விஜய் ரசிகர்மன்றம்,ரசிகர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் கல்வியை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இது ரஜனி மன்றவர்களுக்கும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடங்க மறு அத்து மீறு திமிறி அடி என்ற சீட்டாஸ் பார்முலாவை காவல்துறைக்கு எதிராக பாவிக்குமாறு அணிலின் கட்சி பிரமுகர்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆளுங்கட்சி காவல்துறையை தமது ஏவல் துறையாக பாவிக்கிறது என்று அறிக்கை விட்டார்கள். இன்று வெளியாகியுள்ள இந்த FIR காப்பிக்கு அணில்களின் பதில் என்ன

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1FbGnQj4xg/?mibextid=wwXIfrகரூர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெரிசல் படுகொலைகள் வெளிப்படுத்திய தமிழக அரசு மருத்துவத் துறையின் அவலட்சணம்

தமிழ்நாடு மருத்துவத் துறையின் அவலட்சணத்தை மனம் நொந்து எழுதியிருக்கும் இலங்கை மருத்துவர்.

*****

கரூர் கூட்டநெரிசல் இறப்பும் மருத்துவராகச் சில ஏமாற்றங்களும்

இலங்கை மருத்துவர் என்னும் வகையில் காணொளிக் காட்சிகள் வாயிலாக நடந்த சம்பவங்களைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு அரச மருத்துவமனைகளின் தராதரம் குறித்து ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

1) அம்புலன்ஸ்களின் உள்ளே காணொளிகள் எடுப்பது நோயாளியின் உரிமை மீறலாகும். இலங்கையில் இதுவரை காலமும் அம்புலன்ஸ்சுக்குள் இருந்து அம்புலன்ஸ் ஊழியர்களே காணொளி எடுத்து வெளியிட்ட வரலாறு இல்லை. அப்படி நடந்தால், உடனடியாக அந்த உரிமமே இரத்துசெய்யும் பொறிமுறை இலங்கையில் உண்டு. ஆனால்,நோயாளிகளின் உரிமை குறித்து நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பொறிமுறையில் உள்ளவர்களுக்கே எந்தவிதமான அடிப்ப்டைப் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது.

2) இலங்கையில் அம்புலன்ஸ்களில் எந்தவிதமாக கட்சிக்கொடிகளோ, கட்சி பனர்களோ, கட்சி போஸ்டர்களோ ஒட்ட முடியாது. எந்தவிதமாக விளம்பரமும் செய்யமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் அம்புலன்ஸ்கள் கட்சிக்கொடிகளுடனும் போஸ்டர்களுடனும் பனர்களுடனும் காவற்றுறைக்கு முன்னாலே நிற்க முடிகின்றது. மருத்துவப்பணியில் உலகமகா கேடு இதுவாகவேயிருக்கும்.

3) ஒரு மனித உடல் எந்தவித மூச்சும் பேச்சும் அசைவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவர் அந்த உடலைப் பரிசோதனை செய்து, அந்த உடலில் உயிர் இல்லை என்பதனை உறுதிசெய்யும் வரை, அந்த மனித உடல் இறந்த உடலாகக் கொள்ளப்படமுடியாது. அங்ஙனம் கொள்ளப்படுவதும் சட்டவிரோதம். எனவே, அப்படிப்பட்ட உடலை, உயிருள்ள உடலாகவே கொள்ளப்படும். எனவே, அதனை UNRESPONSIVE STATE என்பர். உடலுக்கு முதலுதவிகள் செய்யவேண்டியது துறைசார் ஊழியர்களின் கடமையாகும். இங்கு துறைசார் ஊழியர்கள் என்போர் காவலர்,இராணுவத்தார்,தீயணைப்புப் படையினர் என்று அரச பாதுகாப்புத் துறையினரும் மருத்துவ சிற்றூழியர் முதலாயின ஊழியர் அனைவரும் அடக்கம். அதுவும், அம்புலன்ஸ்சில் வரும் உதவியாளருக்கு இப்பயிற்சி இருத்தல் அவசியம்.குறைந்தபட்சம் ஒரு FACEMASK மூலம் ஒக்சிஜன் கொடுப்பதேனும் அவசியம்.

4) அம்புலன்ஸ் என்பது வெறுமனே நோயாளியைக் காவிக்கொண்டோடும் ஊர்தியல்ல! அதில் குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் ஏனும் இருத்தல் வேண்டும்.ஆனால், இந்தச் சம்பவத்தில், ஒரு குழந்தை அம்புலன்ஸ்சுக்குள் அம்புலன்ஸ் கட்டிலில் கிடத்திவிடப்பட்டுள்ளது. முன்னுக்கு ஓட்டுநருக்கு அருகில் ஒரு காவற்றுறை அதிகாரி உள்ளார். ஒரு அம்புலன்ஸ்சு ஊழியர் குழந்தையின் அருகில் இருந்து ''குழந்தை குழந்தை'' என்று கத்திக்கொண்டு இருக்கின்றார். யாரோவொருவர் காணொளி எடுக்கின்றார். யாரும் அந்தக் குழந்தைக்கு CPR/ சிபிஆர் (CARDIOPULMONARY RESUSCITATION) எனப்படும் நெஞ்சினை அழுத்தும் செயல்முறையினையோ, அல்லது குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜனையோ கொடுக்கவில்லை. இதயமே செயலிழந்திருந்தாலும், நெஞ்சு அழுத்தும் செயன்முறையையும் ஒக்சிஜனையும் கொடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர்களால் அக்குழந்தையைக் காப்பாற்றக் கூடியதாகவிருக்கும். ஆனால், இங்கு அம்புலன்ஸ் உதவியாளருக்கே இதுபற்றிய அறிவு இல்லை. காவற்றுறை அதிகாரிக்கு இல்லை. இலங்கையில் காவற்றுறை அதிகாரிகள் இராணுவத்தார் தீயணைப்புப் படையினர் என்று பாதுபாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவை பற்றிய பயிற்சிகளை இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் கொடுத்துக் கொண்டிருப்பதுடன், பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் செயற்றிட்டத்தையும் இப்போது இலங்கை அரசாங்கம் சுகாதாரத் திணைக்களத்தினூடாக முன்னெடுத்து வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கரூர் அனர்த்தத்தில் வெளிப்படையாகத் தெரிவது, தமிழ்நாட்டு அரச மருத்துவத்துறை இலங்கை அரசாங்க மருத்துவத்துறையோடு ஒப்பிட்டால் ''வெறும் கோது'' என்பதேயாகும்!

5) மருத்துவமனையில் வைத்து ஒரு காவற்றுறை அதிகாரி(பெண்மணி) பிள்ளையொன்றுக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுப்பதும் கைகளைப் பிடித்துத் தேய்ப்பதுமாகவே இருந்தார். இதனைப் பலரும் பகிர்ந்து பாராட்டினர். ஆனால், ஒரு மருத்துவராக இக்காட்சியைக் கண்டதும் கவலையே ஏற்பட்டது.தமிழ்நாட்டுச் சினிமாத்துறை போதித்த அவசர சிகிச்சை இதுவேயாகும். தமிழ்நாட்டு அரசும் தமிழ்சினிமாத்துறையைக் கொண்டாடுவதும் அச்சினிமாக்களில் காட்டுவதே முதலுதவிப் பயிற்சி என்றும் பேக்காட்டும் அரசாகும். நெஞ்சினை அழுத்தும் சிபிஆர்/CPR செயன்முறை இல்லாது வெறுமனே நுரையீலுரக்குக் (Lungs) காற்றுக்கொடுப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதோடு, பிரயோசனமேயில்லாத இச்செயன்முறையால் குறித்த காவற்றுறை அதிகாரிக்கே தேவையில்லாத வாய்மூலம் பரவும் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான செயல் மருத்துவ விரோதமாகும்.முறையான ஒக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தும் வரை நெஞ்சினை அழுத்தும் சிபிஆர் செயன்முறையைச் செய்துகொண்டிருந்தாலே போதும் என்பதுதான் மருத்துவ சட்டவிதி. மருத்துவ விஞ்ஞானரீதியான் ஆய்வுகளாலும் ஏற்படுத்தப்பட்ட முடிவும் அதுவேயாகும். எனவே, குறித்த அனர்த்தத்தில் UNRESPONSIVE STATE (பேச்சு மூச்சு இல்லாத நிலைக்கு)ப் போனவர்களில் பலர் ஒழுங்கான அனர்த்த முகாமைத்துவ மருத்துவப் பயிற்சி அரச மருத்துவத்துறையில் இல்லாமையினால் இறந்திருக்கக்கூடிய வாய்ப்பும் காணொளிகளால் உறுதியாகின்றது. அரச மருத்துவத்துறையின் தராதரமும் இறப்புவீதத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை காணொளிகளின் ஊடாகவே ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் அரச இயந்திரம் உருப்படியான அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகளைக் காவற்றுறை அதிகாரிகளுக்கும் அம்புலன்ஸ் உதவியாளர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் கொடுக்கவில்லை என்பது காணொளிகள் தெளிவாகவே தெரிகின்றது.

6) காணொளிகளின்படி, அம்புலன்ஸ்சில் இருந்து கொண்டுவரும் உடல்களை அப்படியே கொண்டுவந்து மருத்துவமனைக் கட்டில்களில் கிடத்துகின்றனர். எந்தவொரு கட்டிலிலும் மொனிட்டர்கள்(MONITORS) இல்லை. உடலில் உள்ள ஒக்கிஜனின் அளவு ( Oxygen saturation), இதயத்துடிப்பு (Heart rate and rhythm ) ,நாடித்துடிப்பு (Pulse rate) என்பவற்றை ஒருசில வயர்களை உடலில் வெறுமனே இணைப்பதனாலேயே ஒருசில கணப்பொழுதில் அறியக்கூடிய டிவி போன்ற கருவியாகும். பொதுவாக அவசரசிகிச்சைப் பிரிவில் 10 கட்டில்களே இருந்தால் 10 மொனிட்டர்கள் இருக்கும். திடிரென ஏற்படும் பெரும் அனர்த்தங்களின்போது, மருத்துவமனையிலுள்ள ஏனைய விடுதிகளில்(wardக்களில்) பயன்பாட்டில் இல்லாத அல்லது அத்தியாவசியத்தேவையில்லாத மொனிட்டர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றஞ் செய்துகொள்வர். இதுவெல்லாம் அனர்த்த முகாமைத்துவ (DISASTER MANAGEMENT) பயிற்சிகளினூடாகவும் மருத்துவமனைகளுக்குரிய உள்ளக சுற்றறிக்கைகள் (GUIDELINES) ஊடாகவும் ஊழியர் யாவருக்கும் காலத்திற்குக் காலம் மருத்துவ நிர்வாகம் புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கும். ஆனால், அரச மருத்துவமனைகளில் கொண்டுவந்து கையளிக்கும்போது கட்டில்களில் வெறுமனே கிடத்துகின்றார்களேயொழிய, மருத்துவர் உடனடியாக வந்து பரிசோதனை செய்வதாகவோ- மொனிட்டர்கள் இருப்பதாகவோ- CPR/ சிபிஆர் (cardiorespiratory resuscitation) என்னும் நெஞ்சழுத்தும் செயன்முறையை தாதியரும் மருத்துவர்களும் செய்வதாகவோ காணமுடியவில்லை.

7) இலங்கையில் கொழும்பில் தேவாலய தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, தேசிய மருத்துவமனைக்கு எந்தவொரு அரச மருத்துவரும் வந்து அவசர சிகிச்சைக்கு உதவலாம் என்று குறுஞ்செய்தி மருத்துவச் சங்கங்களினூடாகக் கொழும்பு வலயத்தினுள் உடனடியாகப் பரப்பப்பட்டது. உடனே, வெறும் அரை மணித்தியாலத்தில் தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் அவசர சிகிச்சைப் பிரிவும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் மிதம்மிஞ்சி மருத்துவர் கூடி நிற்கும் இடமாக மாறியது. வரும் நோயாளிகளை (Triage method) தரம்பிரிக்கும் வேலையையே மருத்துவர்களில் ஒருகுழு நின்று செய்து கொண்டிருந்தது. உடல்கள் ஒக்சிஜனோடும் சிபிஆர் செய்தவாறுமே கொண்டுவந்து கையளித்தனர்.குறைந்தபட்சம் ஒக்சிஜனோடேனும் கொண்டுவருவதனை உறுதிசெய்திருந்தனர். இராணுவமும் காவற்றுறையும் இதில் தங்கள் அனர்த்த முகாமைத்துவப் புலமையை நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். மொனிட்டர் தட்டுப்பாடு, மருத்துவர் தட்டுப்பாடு, தாதியர் தட்டுப்பாடு என்று எதுவும் தென்படவில்லை.இலங்கை அவசர அனர்த்த முகாமைத்துவத்தில் ஆளணிப் பயிற்சியில் வெற்றிபெற்றிருந்தது.பொருளாதாரத்தில் நலிந்த நாடாயினும் இனவாதங்களால் சீரழிந்த நாடாயினும் இலங்கையில் அரச கல்வித்துறையும் அரச மருத்துவத்துறையும் தமிழ்நாட்டைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது என்பதனை இரண்டையும் அனுபவித்தவர்களுக்கு நன்றே விளங்கும். தமிழ்நாட்டில் ஏழைகளுக்குரியதாகவே அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது. இலங்கையில் பணக்காரர்களும் நாடும் இடமாகவே இலங்கை அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது.இலங்கையின் மருத்துவத்துறையில் குறைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால், அடிப்படை மருத்துவ சேவை பல்லாயிரம் மடங்கு பாராட்டுக்குரியதாகவுள்ளது. திராவிட ஆட்சி என்றும் திராவிட மாடல் என்றும் தமிழ்நாட்டாரினைக் கிணற்றுத்தவளைபோல் ஆக்கி,கேவலமான இழிநிலையில் இருக்கும் அரச மருத்துவத்துறையையே அங்குள்ள ஏழைகள் ‘’இதுவேனும் கிடைந்துள்ளது'' என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பான்மைக்குள் தள்ளி, ஏமாற்றுவைத்திருப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றித் தமிழரின் கைகளில் கொடுத்தால் மட்டுமே, தமிழ்நாடு கொஞ்சமாயினும் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடாமல், பக்கத்தில் உள்ள இலங்கையோடு ஒப்பிட்டால், திராவிட மாடல் ஆட்சியின் கேடு விளங்கும்!

இங்ஙனம்,

இலங்கை அரச மருத்துவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

எந்த தள்ளுமுள்ளும் வரமுன்பே 4 பெரிய அம்புலன்சை அந்த வழியே அனுப்பி உள்ளனர்.

எடப்பாடியின் கூட்டங்களிலும் இப்படி சம்பந்தமில்லாமல் அம்புலன்ஸகளை ஆளும் கட்சியினர் அனுப்பியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் சம்பவம்: சமூக வலைதளங்களில் வதந்தி- பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உட்பட 4 பேர் கைது

30 Sep 2025, 8:25 AM

Karur Arrest

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

G2D26CmaMAADy4e.png

கூட்ட நெரிசல் வழக்கு

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அத்துடன் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://minnambalam.com/karur-tragedy-bjp-and-tvk-members-arrested-for-spreading-rumors-on-social-media-investigation-underway/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/813512611061830

May be an image of 4 people and people smiling~ படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டிங்களா ?

* என்ன கேட்டிங்களா ?

~ நீங்க அழாதீங்க, மாட்டிப்போம்னு சொன்னேன் கேட்டிங்களா

May be a black-and-white image of 3 people and crowd

சோசியல் மீடியா PEAK ல இருக்க இந்த காலத்திலயே இவனுங்க இந்த அளவுக்கு அட்டூழியம் பண்றானுங்க!

அந்த காலத்துல எம்.ஜி.ஆர், என்னவெல்லாம் பண்ணிருப்பானுங்க !

அப்போ திமுகவை சரிக்கு சமமா களத்துல எதிர்த்து அவங்களை‌‌ முடக்கி போட்ட துணிச்சலான ஒரே கட்சி அதிமுக தான்!

May be an image of 4 people and text that says "சார் நான் திமுக நல்லாட்சி தருதுனு போஸ்ட் போடலாம்னு வந்தேன் சார்.. ~அதுவும் வதந்திதான் நடடா... mt"

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நின்ற பத்திரிகையாளரின் நேரடி வாக்குமூலம் மாட்டினான்டா மானஸ்தன். இனிமே சரி ஜீ நீம்பள் சொன்னா நம்பள் பண்ணும் ஜீ.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி செந்தில்பாலாஜி சரியான நேரத்துக்கு வந்தாரு...

அதெப்படி விஜயபாஸ்கர் அங்க வந்தாரு,

அதெப்படி முதலமைச்சர் இதுக்கு மட்டும் உடனே நேரடியா கிளம்பிட்டாரு,

அதெப்படி அன்பில் மகேஷ், MLA ங்க எல்லாம் அங்க வந்தாங்க,

இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க சரி... அவங்க வந்து தான் ஆகணும் அதுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சி இருக்கு, அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் அங்க இருந்து தான் ஆகணும் அது அவங்க கடமை, அது தெரியாம background sound போட்டு எடிட்டிங் கட் போட்டு, பேசுற நீ களத்துக்கு வந்தியா...

முதலமைச்சர் ஆகணும்ன்னு திரியுற விஜய்கிட்ட போய் சொல்லுங்க அண்ணா இப்படி ஒரு அசம்பாவிதம் ஆகி போச்சு நம்ம கூட்டத்துக்கு வந்து தான் இது எதிர்க்கட்சி சதியா கூட இருக்கலாம் நீங்க இங்கேயே இருங்க திருச்சில தங்குங்க, மக்களை போய் நம்ம நிர்வாகிகளை பாக்க்க் சொல்லுங்க, மாவட்ட செயலாளர்கள் கிட்ட போய் கலநிலவரம் என்னென்ன்னு தெறிஞ்சி கிட்டு நேரடியா போக வேண்டாம் atleast video call மூலமாவது ஆறுதல் சொல்லுங்க, நான் அங்க வந்தா இன்னும் பெரிய நெருக்கடி ஆகும் ஆனா உங்க கூட தான் நான் இருக்கேன், பயப்படாதீங்க எல்லாரும் சேர்த்து இந்த துயரத்தில இருந்து வெளியே வந்துரலாம்ன்னு பேச சொல்லி சொல்லி இருக்கலாம்ல.....

Atleast புறமுதுகு காட்டி ஓடி போகும் போதாச்சும் செய்தியாளர்களை பார்த்து ஒரு வருத்தத துயரத்த சொல்ல கூட தயாரா இல்லாத ஒரு தலைவன் 🤦‍♀️🤦‍♀️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

எடப்பாடியின் கூட்டங்களிலும் இப்படி சம்பந்தமில்லாமல் அம்புலன்ஸகளை ஆளும் கட்சியினர் அனுப்பியிருக்கிறார்கள்.

ஓம்…

5 hours ago, கிருபன் said:

கரூர் சம்பவம்: சமூக வலைதளங்களில் வதந்தி- பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உட்பட 4 பேர் கைது

30 Sep 2025, 8:25 AM

Karur Arrest

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

G2D26CmaMAADy4e.png

கூட்ட நெரிசல் வழக்கு

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அத்துடன் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://minnambalam.com/karur-tragedy-bjp-and-tvk-members-arrested-for-spreading-rumors-on-social-media-investigation-underway/#google_vignette

பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன்.

முதல் முறை சவுக்குடன் கைதானார்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1GxMJAgg8r/?mibextid=wwXIfr• #தமிழ்நாட்டின் இளைய தலைமுறை சினிமா நடிகர்கள் மீதான மோகத்தில், எப்படி தலைகீழாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பற்கான உதாரணம்தான் கரூர் நிகழ்விற்கு பின்னரான நிகழ்வுகள்.

சரி. திமுக சதி வேலைகள் செய்தது.

சரி. உயிரிழப்புகளை திமுகதான் திட்டமிட்டு நடத்தியது.

சரி. பெரும் அநீதி சதி திட்டத்தின் ஊடாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. (இது தவெக அதனது பெரும் தவறை மறைப்பதற்காக உருவாக்கும் narrative என்பது எனது பார்வை)

• #அப்படியானால் என்ன செய்யவேண்டும்?

தவெகவின் தலைவர் தெருவிற்கு இறங்கி நீதி கேட்டிருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் தவெக ஆதரவாளர்கள் சொல்லும் சகல காரணங்களையும் விஜய் அவரது சொந்த வாயால் சொல்லிருக்கவேண்டும்.

சம்பவம் நடந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த புள்ளியில் இவர் எப்படி கூமுட்டை ஆனார் என்பதை தனியாக விவரிக்கிறேன்.

மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. பெரும் அசம்பாவிதம் நடந்த பிறகு தாழ்ப்பாளை போட்டு உள்ளுக்குள் ஒருவர் இருக்கிறார்.

இதற்கு ரைட் அப்புகள்.

“தலைவர் சோகத்தில் 3 நாட்களாக தண்ணீர் மட்டுமே குடித்தார்.”

“தலைவா எழுந்து வா! “

• #டேய்! தலைவன் என்பவன் தலைமை தாங்குபவன். அவன் களத்தில் இருக்க வேண்டும். தலைவன் என்பவன் முடிவுகளை தொலைநோக்கு பார்வையில் துரிதமாக எடுப்பவன். மன உறுதியில் மற்றவரை விட கல்லாய் இருப்பவன்.

தமிழ்நாட்டில் உட்டாலக்கடியாய் நடக்கிறது. எட்டு கோடி மக்களை ஆள கெஞ்சி வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறார்கள். இதை சொல்வது யார்? படிக்காத பாமரனோ, கிராமத்தானோ அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை எடுக்கும் திறனுள்ள இளைய தலைமுறை. அந்தளவிற்கு நடிகர்கள் மீதான போதை தலைகீழாய் சிந்திக்கும் திறனை தந்திருக்கிறது.

அநீதி தானே. அதை நீதானே தட்டிக்கேட்க வேண்டும்.

இன்னும் சில நாள் கழித்து அழும் முகத்துடன் பாவமாக உரையாற்றுவார். நெஞ்சை பிழிய வைக்கும் கதையுடன் வீட்டில் தாழ்ப்பாளை போட்டு இருந்ததற்கான காரணத்தை சொல்வார். அப்போதும் இந்த தலைமுறை “தலைவா! உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரலாமா” என இரண்டு ரைட்அப் எழுதும்.

இதுவரை சொன்னது திமுக சதி வேலை செய்திருந்தால்.

• #இனிமேல் சொல்வது“விஜய்தான் இதில் பெரும் குற்றவாளி” என்ற எனது பார்வையில்.

இந்த சனிக்கிழமை கூட்டம் என்பது விஜய் அவரது செல்வாக்கை காட்டுவதற்காக, அணு அணுவாக வடிவமைக்கப்பட்டது.

இதில் Health and Safety Regulations என்பதை முற்றிலும் இரண்டாம் பட்சமாகவே அணுகியிருக்கிறார்கள். சில நாடுகளில் Public Order and Safety Protocols என அழைப்பார்கள்.

இவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காட்ட பயன்படுத்திய உத்திகளை நான் விவரிக்க கூட தேவையில்லை.

“எப்படி அதிகமாக கூட்டத்தை சேர்ப்பது, எப்படி அதனை அதிக நேரம் தக்கவைத்திருப்பது” என்பதுதான் அவர்களது “பிரதான நோக்கமாக” ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது.

சகல வழிகளிலும் அவர்களது பிரதான நோக்கத்தை அடைய பாடுபட்டிருக்கிறார்கள். கள தகவல்களை எடுத்து பார்த்தாலே தெரியும். திமுக சதி வேலை செய்தது என சொல்பவர்கூட இதனை மறுக்கமுடியாது.

விஜய் இந்த “பிரதான நோக்கத்தை” அடைய எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

திமுக சதி செய்திருந்தாலும் கூட, தவெக முறையான Public Order and Safety Protocols பின்பற்றியிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள bottom line.

உண்மையில் மேற்குலகில் ஒருவர் இதே உத்திகளை பயன்படுத்தி, 40 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்திருந்தால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும்.

அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பிறந்ததால், விஜய் தப்பித்திருக்கிறார்.

விஜய் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனால் கூட, திமுக சட்டத்தை பாய்ச்சாது. அது திமுகவிற்கு எதிராக திரும்பிவிடும் என்பதை அது அறியும். முழு அனுதாபத்தையும் விஜய் அறுவடை செய்துவிடுவார்.

க.ஜெயகாந்த்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன்.

முதல் முறை சவுக்குடன் கைதானார்.

நூறு பேர் புகுந்து வெட்டினார்கள் ஆயிரம் பேர் புகுந்து வெட்டினார்கள் என்று ஏகத்திற்கு அடித்துவிட்டால் வெட்டுப்பட்டவர்கள் எங்கே என்று கேட்கமாட்டார்களா. தங்கள் தவறை மறைக்க ஏகப்பட்ட conspiracy theory க்களை உருவாக்கி எந்த கூச்சமும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது அணில் கூட்டம்.

ஒரு காணொளியில் சவுக்கு 40 பேரும் இறந்தது நன்மைக்கே என்று பேசிவைத்திருக்கிறான். மிக விரைவில் இவனுக்கும் மாமியார் வீடுதான்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன்.

முதல் முறை சவுக்குடன் கைதானார்.

தமிழ்நாடு காவல்துறை டெல்லிவரை போய் கைது செய்தது என்று நினைக்கிறேன்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நூறு பேர் புகுந்து வெட்டினார்கள் ஆயிரம் பேர் புகுந்து வெட்டினார்கள் என்று ஏகத்திற்கு அடித்துவிட்டால் வெட்டுப்பட்டவர்கள் எங்கே என்று கேட்கமாட்டார்களா. தங்கள் தவறை மறைக்க ஏகப்பட்ட conspiracy theory க்களை உருவாக்கி எந்த கூச்சமும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது அணில் கூட்டம்.

ஒரு காணொளியில் சவுக்கு 40 பேரும் இறந்தது நன்மைக்கே என்று பேசிவைத்திருக்கிறான். மிக விரைவில் இவனுக்கும் மாமியார் வீடுதான்

போனதடவை இருவரும் கைதான போதும், சவுக்கு கைது நியாயமானது ஆனால் பீலிக்ஸை தேவையில்லாமல் கைது செய்கிறார்களோ என தோன்றியது.

இந்த முறை இவர்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை.

போனமுறை சவுக்கு, பீலிக்ஸ் இருவரையும் கோர்ட் வெளியே விட்டது.

இந்த முறையும் வெளிவிடும் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் வெளியே வரும் போது அவர்கள் கூறியது வதந்தி அல்ல என்ற தோற்றப்பாடு இயல்பாகவே எழும்.

இதை திமுக தவறாகவே கையாள்கிறது. அன்பில் ரமேஸ் அழுகையில் ஆரம்பித்து, செய்தியாளர் கைதுவரை, திமுக நாடகம் ஆடுகிறது, எதையோ மறைக்கிறது என்பதே மக்கள் மனதில் பதியல்கூடும்.

இது உண்மை அல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் சிலசமயம் உண்மையை விட, perception நிலைத்து விடுவது உண்டு.

உதாரணம் ரஜீவ்காந்தி கொலையும் திமுகவின் 1991 படுதோல்வியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

https://www.vikatan.com/
No image preview

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாட...

https://x.com/im_inba1/status/1972704039591878854?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

இந்தத் திரி நடந்த அவலம் பற்றிய தகவல்களைத் தரும் திரியாக அல்லாமல், அவலத்தை வைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரம் செய்ய முயலும் சோசியல் மீடியா சேற்றில் புரளும் பன்றிக் கூட்டங்களின் "கூச்சல்" திரியாக மாறி வருகிறது. விசாரணைக்கு என்ன நடக்கிறது என அறிவதற்காக அடிக்கடி வந்து வந்து பார்த்தால், யூ ரியூப் அலட்டல்களும், முகனூல் வசவுகளும் தான் புலவர் முழு நேரமாக இணைத்துக் கொண்டிருக்கிறார்😂.

இது ஈழத்தமிழர்களின் வழமையல்ல புலவர்! இந்தக் குப்பைகளைக் கொஞ்சம் குறைத்து ஈழத்தமிழர்களின் கண்ணியமான பரிமாற்றப் பண்பைக் காக்க உதவுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி

Velmurugan PPublished: Tuesday, September 30, 2025, 21:08 [IST]

Felix Gerald youtuber vijay

சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள் . அந்த வகையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Also Read

விஜய் சொன்னா சொன்ன நேரத்துக்கு உங்களால் வர முடியாதா? அறிவு இருக்கா? லொள்ளு சபா ஈஸ்டர் ஆக்ரோஷம்

இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தவெகவினர் குற்றம்சாட்டி தகவல்களை பரப்பி வந்தார்கள்

இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர். அதில் இரண்டு பேர் தவெகச் சேர்ந்தவர்கள் ஆவார். ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended For You

கரூர் சம்பவம்: காயமடைந்த 53 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகின்றனர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைக் காண அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரடைப்பால் பெலிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/youtuber-felix-gerald-suffers-sudden-heart-attack-urgently-admitted-to-government-hospital-739681.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

பிகு

போன கருத்தில் இவரையும், சவுக்கையும் ஊடகவியளாலர் என எழுதினேன்.

யூடியூபர்ஸ் என்பதே சரியான பதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பை பயன் படுத்தி மாறி, மாறி பிரச்சார வீடியோவை இணைக்கும் எவரும், விஜை வெளியிட்ட வீடியோவை இணைக்கவில்லை என நினைக்கிறேன்😂.

விஜையா முக்கியம் நமக்கு, நம்ம பொழப்புத்தான் முக்கியம் என எண்ணுகிறார்களோ என்னமோ😂.


  1. கரூரில் மட்டுமே ஏன் இப்படி நடந்தது?

  2. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்

  3. மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காக

  4. விரைவில் உண்மை வெளிவரும்

  5. சி எம் சார், பழிவாங்குவாயின் என்ன பழிவாங்குங்கள், நிர்வாகிகளை விட்டு விடுங்கள்

  6. அரசியல் பயணம் தொடரும்

  7. ஆதரவாக கதைத்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி

இவை விஜை சொன்னது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும்

  1. நானும் மனுசந்தானே என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை

  2. சம்பவ இடத்துக்கு அருகில் தங்க விரும்பினேன், ஆனால் மேலும் அசம்பாவிதம் வரும் என சொல்லி என்னை அகற்றினர்.

    என்றும் கூறினார்.

31 minutes ago, goshan_che said:

, விஜை வெளியிட்ட வீடியோவை இணைக்கவில்லை என நினைக்கிறேன்😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நன்றி.

பிளம்பரா கொக்கா😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

அருணா கமிசன் விசாரணை, பொலிஸ் குற்றவியல் விசாரணை நடக்கும் போது அமுதா ஐ ஏ எஸ் சுக்கு இப்படி ஒரு கூட்டம் போடும் அவசியம் என்ன?

வழக்கை குழப்பும் முயற்சி என எடப்பாடி ஒரு பிடி பிடித்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.